Friday, May 10, 2013

சாதி சீக்கிரம் அழிந்து விடும்!! எப்பூடீ?!



வணக்கம் நண்பர்களே,
மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கும் சாதி ரீதியான முரண்கள்,கலவரங்கள் மனித நேயம் கொண்ட பலருக்கு கவலை தருகிறது.சாதி என்பது இந்தியாவைப் பொறுத்தவரை அகமண முறை கொண்ட இனக் குழு எனலாம்.பல சாதிகள்,அதற்குள் உட்பிரிவு என கொஞ்சம் குழப்பும் அமைப்புதான்.

சாதி என்பதைப் பற்றி வரலாறு,அறிவியல் ரீதியாக அலசுவதை விட சாதி என்பது சீக்கிரம் அழியும் என்பதையும் அதன் முக்கிய காரணிகள் இரண்டு  என்பதை மட்டுமே இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்தக் காரணிகள் செயல்பட ஏதுவான சூழல் வேண்டும் அல்லவா? ஆகவே முதலில் சூழலைப் புரிவோம்

இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்தது என அறிவோம்.சரி அதற்கு முன் பிரிட்டிஷாரால் ஆளப்பட்டோம் என அறிவோம். சுதந்திரம் என்றால் என்ன? அடிமைத்தனம் என்றால் என்ன? என் யோசித்து பார்த்து இருப்போமா?

என்ன சகோ அப்போ வெள்ளைக்காரன் ஆட்சி செய்தான்,இப்போ இந்திய குடிமகன்களிடம்  ஆட்சி, அதிகாரம் இருக்கிறது இது கூடவா எங்களுக்கு தெரியாது! என்கிறீர்களா?
ஆள்பவனின் தோல் நிறம் மாறுவதுதான் சுதந்திரமா? இல்லை!!!.இந்தியாவின்[ஆளப்படும் நாடு] இயற்கை வளங்கள் பிரிட்டனின்[ஆளும் நாடு] நலம் சார்ந்து சுரண்டப்பட்டது என்பதே அடிமைத் தனம். இரண்டு உலகப் போரிலும் பிரிட்டிஷ் படைகளில் இந்தியர் பலர் போரிட்டார்,உயிரும் இழந்தார். போர் வீரர்களுக்கான உணவு அனுப்ப,இங்கு பஞ்சம் ஏற்பட்டது.இரண்டாம் உலகப் போரின் போது  வங்க மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் பல இலட்சம் பேர் பட்டினியால் இறந்தார்.
The Bengal famine of 1943 (Bengali: পঞ্চাশের মন্বন্তর) struck the Bengal province of pre-partition British India during World War II following the Japanese occupation of Burma. Estimates are that between 1.5 and 4 million people died of starvation, malnutrition and disease, out of Bengal's 60.3 million population, half of them dying from disease after food became available in December 1943.
உலகில் இதுவரை நடந்த பெரும்பான்மை[அனைத்து?!] போர்கள் அனைத்துமே இயற்கை வளங்களின் மீதான உரிமை கோரி நடந்தவையே.

இயற்கை வளங்களை சுரண்டவே பல நாடுகளை ஆக்கிரமித்தனர்.
போரில் வெற்றி பெரும் நாடு,தோற்றவர்களின் இயற்கை வளங்கள் ஆக்கிரமிப்பு, மக்களில் பலரை அடிமைகளாக்கி நாடு விட்டு நாடு கொண்டு செல்லுதல் போன்றவையும் நடந்தது.இதற்கும் அனுமதி கொடுக்கும் காமெடி+ வில்லக் கடவுள்களும்(?!) உண்டு.
ஒரு நாட்டில் உள்ள பலஇன,மத ,மொழி மக்கள் குறைந்த பட்ச வாழ்வாதாரத்துடன்,சுயமரியாதையோடு,தங்களின் அடையாளம் பேணி வாழும் வகை  இதுவரை கண்டறியப்படவில்லை. அனைத்து மனிதர்களும் சமம் என்னும் கருத்தே சென்ற நூற்றாண்டில் ஒருமித்து கருத்தாகி, கொஞ்சம் கொஞ்சமாக அமலுக்கு வந்தது. அடிமை முறை 1960 வரை பல நாடுகளில் அமலில் இருந்தது.
அனைத்து மனிதர்களும் சமம் என்னும் கருத்தாக்கம்,இரண்டாம் உலகப்போரின் தாக்கம் போன்றவைதான் பல நாடுகளுக்கு சுதந்திரம் கிடைக்க காரணம் ஆனது.

சுதந்திரம் முன் பெரும்பானமை மக்கள் கல்வி இன்றி பரம்பரைத் தொழில்களையே செய்து வந்தனர்.விவசாயம்,நெசவு,தங்க/வெள்ளி ஆபரணம் செய்தல் போன்ற எளிய அடிப்படை வேலைகள் மட்டுமே செய்ய முடிந்த சூழல் அது.அப்போது கல்வி, அரசு வேலைவாய்ப்பில் பெரும்பானமையினராக‌ சில சாதிகளை சேர்ந்தவர்களே இருந்த்னர்.

இந்த நிலை மாற சமூகத்தில் அனைவரும் கல்வி,வேலைவாய்ப்பில் முன்னேற இட ஒதுக்கீடு என்னும்  அதிகாரப் பகிர்வு அமலுக்கு வந்தது. உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிலேயே ,கல்வி, வேலைவாய்ப்பு, தேர்தல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு இருந்தது.அது  1931 ஆம் மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் விகிதாச்சாரம் அமல் படுத்தினர்.
10. 1921-Madras Presidency introduces Communal G O in which reservation of 44 per cent for non-Brahmins, 16 per cent for Brahmins, 16 per cent for Muslims, 16 per cent for Anglo-Indians/ Christians and eight per cent for Scheduled Castes.!!!!
சுதந்திரம் பின் இட ஒதுக்கீடு இன்னும் சில மாறுதல்களுடன் அமலுக்கு அவந்தது.
சில சாதியினரை அட்டவனைப் பிரிவு என்றும், இன்னும் சிலரை பிற்படுத்தப் பட்டவர் எனவும்  அப்போதைய சூழல் சார்ந்து வகைப் படுத்தினர்.
இது  கல்வி,அரசு வேலை வாய்ப்பு,அரசியல் பிரதிநிதித்துவம் என அனைத்து சாதியிலும் சிலர் முன்னேற வழி செய்தது.

இட ஒதுக்கீட்டின் பிறகு ஒவ்வொரு சாதியிலும் கல்வி கற்றவர், அரசு வேலை வாய்ப்பில் உள்ளவர்கள் இருப்பது இயல்பாகிப் போனது.

ஆனால் இட ஒதுக்கீடும் சர்வ ரோஹ நிவாரணி அல்ல என்பதால், உலகமயமாக்கலின் விளைவாக தொழில்துறைகள் தனியார்மயம் ஆகத் தொடங்கியதால்,கல்வி வியாபாரம் ஆனது,அரசு வேலை குதிரைக் கொம்பு ஆனது.

கல்வியில்/வேலை வாய்ப்பில் அரசு நிறுவனங்களில் உள்ள ஆயிரம் இடங்களுக்கு இலட்சக் கணக்கில் போட்டி என்னும் போது ,பெரும்பான்மையினருக்கு வாழ்வாதாரம் கொடுத்தல் என்பது கனவாகிப் போகிறது.

பெரும்பான்மை தனியார் துறைகளில் அதிக வேலை,பணி நிரந்தரமின்மை, விவசாயம் நட்டத் தொழில் ஆவது போன்றமை கல்வி கற்றதின் பயனை
இல்லாமல் செய்கிறது.

இதுதான் இப்போதைய சூழல்
முதல் காரணி: பொருளாதார மேலாதிக்கம்


 இட ஒதுக்கீடு என்பதை தனியார் துறைக்கு விரிவு படுத்தல் என்பது சாத்தியம் அற்ற விடயம்.அரசு தொழிலை நடத்த விரும்பாமல்(இயலாமல்) தனியார் வசம் கொடுக்கிறது.தனியார் நிறுவனங்கள் இலாபம் மட்டுமே சார்ந்து இயங்குவதால்,நிரந்தரமாக ஒரு தொழிலை நடத்துவதைக் கூட விரும்பமாட்டார்கள். உலக மயமாக்கலின் தாரக மந்திரம் எங்கு மூலப் பொருள்கள் குறைவாக கிடைக்குமோ அங்கு வாங்கி எங்கு கூலிக்கு ஆள்  குறைவாக கிடைக்குமோ அங்கு உற்பத்தி செய்து, எங்கு அதிக விலை கிடைக்குமோ அங்கு விற்பதே  ஆகும். சவுதியில் தனியார் துறையில் 10% சவுதி குடிமகன்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்னும் சட்டம்,வெளிநாட்டவர் பலரின் தொழிலை முடக்கி  விட்டது.[எல்லாம் அவன் செயல் ஹி ஹி!!]

ஒரு நாட்டின் ஆளும் வர்க்கத்தை தேர்ந்தெடுத்து,திரை மறைவில் இயக்குவதும் பெரும் தனியார் நிறுவனங்களே ஆகும்.அரசு நிலையாக இருந்தால் ,பங்கு வர்த்தகம் குறீயீடு உயரும் என்பதை அறிவோம். ஆனால் பங்கு வர்த்த குறியீடுகளை உயர்த்த [தனியார் ஆதரவு] அரசை நிலையாக ஆக்குகிறார்கள் என்பதே உண்மை.

சரி நல்ல வேலைவாய்ப்பு அரிதாகிறது.அவ்வளவுதானே இது எப்படி சாதியை ஒழிக்கும் என்கிறீர்களா!! கவனியுங்கள்.

தண்ணீர் விற்பனைக்கு வந்து விட்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகையால் உணவு பொருள்களுக்கு அதிக தேவை,விலை வரும் சூழல் வரும்.

அப்போது பெரும் தனியார் நிறுவனங்கள் விவசாயம் செய்ய முயற்சித்து ,பெரும் அளவில் நிலங்களை வாங்கும். கிராமங்களில் இன்னும் வாழ்வாதாரம் என்பது விவசாயம் சார்ந்ததே.

விவசாய நிலங்களை வைத்து இருக்கும் , பணக்காரர்களை எளிதில் வளைக்கும் தந்திரம்,இந்நிறுவனங்களுக்கு அத்துப் படி.பாலஸ்தீனர்களின் நிலங்களை முதலில் அதிக விலை கொடுத்தே யூதர்கள் வாங்கு உள்ளே நுழைந்தனர் என்பது வரலாறு. அப்படி யூதர்களிடம் நிலம் விற்ற பணக்கார பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமையுடன் மேலைநாடுகளுக்கு புலம் பெயர வழி செய்தனர்.

நகரமயமாக்கல் அதி விரைவாக்கப்பட்டு, கிராமங்களில் இருந்து பலர் நகருக்கு குடிபெயர்வர். சாதியின் தாக்கம், கிராமங்களில் இருப்பது போல்,நகரங்களில் இருக்காது, அங்கு ஏற்கெனவே பெரும் திரளில் பல மொழி,மத மக்கள் வாழ்வதால் குடி பெயர்வோர், ஒரே இடத்தில் வாழ முடியாது. கிடைக்கும் இடத்தில் ஒன்ட வேண்டியதுதான்.

சேரியில் பாருங்கள் ,அனைத்து சாதியினரும் இருப்பார்.இப்படி சேரிகள் அதிகரிக்கும்.
நகரத்தில் பொருளாதாரமே ஒருவரின் மதிப்பைத் தீர்மானிக்கும் காரணி ஆகும்.
கிராமங்களில் பெரும் நிறுவனங்கள் விவசாயம் செய்ய ஆட்கள் தேவைப்படும்
அல்லவா அதற்கு வேறு இடத்தில் இருந்து குறைந்த கூலிக்கு ஆள் பிடிப்பார்.[பரதேசி படம் ஞாபகம் வரலாம்].

இப்போது கிராமங்களில் சாதிப் பெருமை,சண்டை போடும் எவரின் அடுத்த தலைமுறையும்  அங்கே வாழும் சாத்தியம் குறைவு.

இது ஏறக் குறைய சுதந்திரத்திற்கு முந்தைய நிலை போல் ஆக்கி விடும்.
நகரத்தில் வந்து விட்டால்,அந்த நரக மயசூழலில், சில தலைமுறைகளில் சாதி
பெருமை அற்றுப் போய்விடும்.அப்புறம் சாதி ...................

ஆகவே பொருளாதார ஏற்றத் தாழ்வு ,சாதி ஏற்றத் தாழ்வை இல்லாமல் செய்துவிடும்.
இரண்டாம் காரணி: மரபியல் நோய்கள் எதிர்ப்பு சக்தி

பரிணாமம் என்பது இயற்கையின் இயக்க விள்க்கம் என்பதால்,இதன் படி நெருங்கிய உறவில் மண முடிப்பவர்கள், மரபியல் நோய்களுக்கு ஆளாகும் சூழல் அதிகம். இயற்கை சூழல் பாழகி வரும் சூழலில், நோய் எதிர்ப்பு மருத்துகளை விட சக்தி வாய்ந்த நோய்க் கிருமிகள் உருவாகி வருகின்றன.

ஒரே சாதிக்குள் அகமண முறை என்றாலும் இந்தியாவில்,நெருங்கிய சொந்தங்களில் மண முடிப்பதே வழக்கம். சொந்தங்களில் மணம் முடித்தல் ஆரோக்கியம் அற்றது என்னும் சூழலில் ,நகரத்தில்  சொந்த சாதியில்,தூரத்து சொந்தம் கண்டு பிடித்தல் என்பது மிக மிக சிக்கல் ஆகும். அதுவும் கிராமப்புற சாதி அடுக்கு வாழ்வு அழிந்து விடும், என்பதால் இப்படி கண்டுபிடித்தல் மிக கடினமானசிக்கல் ஆகும்.

ஆயிரம் பொய் சொல்லி திருமணம் என்பதால் போல்,அறியாத ஒருவரை சாதியை உறுதிப் படுத்தி  திருமணம் செய்வது கடினம்தான்.

அறியாத ஒருவரை விட, பொருளாதார ரீதியாக சம நிலையில் உள்ள, மாற்று சாதி நண்பர் குடும்பத்தில் திருமண உறவு ஏற்படுத்தல் சாதகமாக தோன்றும்.
சாதிவிட்டு சாதி செய்வது ,மரபியல் நொய்களைத் தவிர்க்கும் மாமருந்து என்பது அனுபவரீதியாக சில தலைமுறைகளில் உணர்வார். இதுவும் சாதியை ஒழித்து விடும்.
**
சாதி என்பது பொருளாதர சுரண்டலுக்கு முரண் ஆவதாலும், பரிணாம விதிக்கு எதிராக இருப்பதாலும் அழிந்துவிடும்.

மத புத்தகங்களில் ,பெரும்பான்மை அவதார புருஷர்களின் முடிவு பரிதாபமாக இருக்கும்.ஆனால் பெரும்பாலும் அத்னைத் தவிர்த்தே,திரித்தே மத பிரச்சாரம் நடக்கும்., இங்கும், சாதீய அவதாரம் இயற்கையின் பரிணாம விதியாலும் ,செயற்கையான பொருளாதார சுரண்டலினாலும் அழியும் என்பதே நம் கணிப்பு!!!

பாருங்கள், பிரம்மாவின் தலையில் இருந்து ஒரு சாதி, கையில் இருந்து அடுத்த சாதி, தொடையில் இருந்து அடுத்த சாதி, பாதத்தில் இருந்து அடுத்த சாதி என் மத புத்த்கம் சொல்வதாக அறிகிறோம்.
மத வியாதிகள் எப்போதும் மேலிருந்து கீழ்,ஆதியின் இருந்து என்வே கதை விடுவார்.நாமோ கீழ் இருந்து மேல் நிலை கணிக்கிறோம். இன்றில் இருந்து சான்றுகள் மூலம்,ஆதிகாலம் கணிக்கிறோம்

நாம் பரிணாம மரத்தின் படி மாற்று விளக்கம் கொடுக்கிறோம். பிரம்மா என்பவர் ஒரு மரம் என்போம். வேரில் இருந்து கிளைத்து தழைத்தன சாதிகள் என பார்த்தால் சரியாக விள்ங்கும்.

ஹோமோ சேஃபியனின் முதல் தோன்றல்கள் ஆப்பிரிக்க இனத்தவனரான  கருப்பின மக்களே[புஷ்மேன்], அவர்களில் இருந்து வெள்ளை, பழுப்பு இன மக்கள் தோன்றினர்.
Mitochondrial DNA studies also showed evidence that the San carry high frequencies of the earliest haplogroup branches in the human mitochondrial DNA tree. The most divergent (oldest) mitochondrial haplogroup, L0d, has been identified at its highest frequencies in the southern African San groups.

ஒருவேளை இப்படி முன்பு மத புத்தகத்தில் எழுதியதை திரித்து இருக்கும் வாய்ப்பு அதிகம்!!
ஆகவே அறிவியல்,வரலாறுக்கு முரண் ஆன,சடுதியில் அழியப் போகும் சாதிக்காக சக மனிதர்களை வெறுப்பதை,பகைப்பதை தவிர்ப்போம்!!!
ஒன்றே குலம், இயற்கையே நம் அன்னை!!
நன்றி!!!

 ***
 பணி காரணமாக இணையத்தில் நேரம் செலவிடல் அரிதாகிறது.முடியும்வரை எழுதுவோம்!!!








15 comments:

  1. இட ஒதுக்கீடு = இடப் பங்கீடு

    சிந்திக்க மாட்டீர்களா??!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா,சிந்திப்போம்

      Delete
  2. சாதியை ஒழிக்க எதாச்சும் அறிவியல் சமன்பாடு ரெடி பண்ணு மாமு.........!! அதைப் போட்டதும் சாதி எல்லாம் பணால்.......... எப்பூடி.....!!

    ReplyDelete
    Replies
    1. அப்படி மட்டும் இருந்தால் விட்டுவிடுவோமா மாப்ளே, எல்லோருக்கும் திடீர் என சாதி மதம் மட்டும் மறக்கும் அம்னீசியா வந்தால் என்ன ஆகும்? ஹி ஹி

      நன்றி!!

      Delete

  3. சகோ நலமா,
    நல்ல பதிவு

    //சாதிவிட்டு சாதி செய்வது ,மரபியல் நொய்களைத் தவிர்க்கும் மாமருந்து//

    இது ஏற்ப்புடையதல்ல ....எப்படித்தான் மாத்தி மாத்தி திருமணம் செய்தாலும் அதுவும் ஒருவகையான மரபணு தொடர்ச்சியை ஏற்ப்படுத்தும் என்பதே எனது புரிதல்.....எனவே நோய் என்பது சாதி பொருத்தது அல்ல மரபணுவை பொறுத்ததே ..

    //பணி காரணமாக இணையத்தில் நேரம் செலவிடல் அரிதாகிறது.முடியும்வரை எழுதுவோம்!!!//

    எனக்கும் இதே பிரச்சனை ....

    அப்புறம் ஒரு விளம்பரம்
    http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/10/blog-post.html

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மணி,
      //நோய் என்பது சாதி பொருத்தது அல்ல மரபணுவை பொறுத்ததே ..//

      90% அகமண முறைத் திருமணம் நெருங்கிய சொந்தத்தில்தான் செய்கிறார் . ஒரேவித குறைபாடான மரபணு கொண்டவர் திருமணம் செய்வது கெடுதலே என்பதால் நான் சொல்வது சரியாகும்.
      நன்றி!!!

      Delete
  4. //சாதி என்பது பொருளாதர சுரண்டலுக்கு முரண் ஆவதாலும், பரிணாம விதிக்கு எதிராக இருப்பதாலும் அழிந்துவிடும்.//

    நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்புக்கள் இருப்பது உண்மைதான், ஆனால் இது ஆரோக்கியமானதல்ல...
    ஏனெனில் இங்கு ஒழியப் போவது சாதியே தவிர சுரண்டலோ அடக்குமுறையோ அல்ல.

    நாம் கூறுவது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமென்பதே, அதற்காகத்தான் சாதி ஒழிக்கப்பட வேண்டுமேயொழிய, அடக்குமுறையின் வடிவம் மாறுவதால் ஏற்படும் சாதி ஒழிப்பால் எந்தப் பயனுமில்லை..

    மக்கள் அனைவரும் சிந்திக்க ஆரம்பித்தால் மட்டுமே, ஒரு சிறந்த சமுதாய அமைப்பை கட்டியெழுப்ப முடியும். இல்லாவிடின் அடக்குமுறையாளர்களும் அதன் வடிவங்களும் மட்டுமே மாறிக்கொண்டிருக்கும், அடக்குமுறை என்றும் தொடர்ந்து கொண்டிருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. சகோ இரசிகன்,
      நீங்கள் சொலவது சரிதான். உலகில் நடப்பது எல்லாம் நன்மையில் முடியும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது.கெடுதல் நடக்கும் வாய்ப்பு ,நல்லது நடக்கும் வாய்ப்பை விட அதிகம்.

      உணவு விவசாயத்திற்கு மதிப்பு வந்தால், விளைநிலங்களை முதலாளிகள் கைப்பற்றுவார்,அப்போது கிராமப்புற வாழ்வு அழியும், கூட சாதியின் தாக்கமும் அழியும்!!!
      எனினும் நான் சொல்வது கணிப்பு மட்டுமே!!
      நன்றி!!

      Delete
  5. வணக்கம் சகோ.

    நல்ல பதிவு
    முக்கியமாக மக்கள் சிந்தித்தால் தவிர மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.இவர்களை தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தால் தான் சிந்தனையே பிறக்கும் போல....

    ReplyDelete
  6. சார்வாகன் ,தனது மனம் நிறைந்த ஆசையை கற்பனியாக வடித்து பார்க்கிறார்.ஆனால் நிகழவுகள் அதற்கு மாறாகவே இருக்கும் .பொருளாதாரம் ,காதல் போன்றவைகள் ஒரு பக்கம் சாதியை மறுத்து வந்தாலும் மறுபக்கம் அதே வேகத்தில் சாதீயம் வளர்ந்து கொண்டே இருக்கும் .
    ///ஆகவே பொருளாதார ஏற்றத் தாழ்வு ,சாதி ஏற்றத் தாழ்வை இல்லாமல் செய்துவிடும்.///
    பணக்கார முதலியார் ,ஏழை முதலியார் ,பணக்கார செட்டியார் ,ஏழை செட்டியார் என்று தான் சாதிகள் தொடருமே தவிர பொருளாதார ஏற்றத்தாழ்வு சாதியை ஒருநாளும் ஒழிக்காது

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இப்பூ,
      எப்படி இப்படி?
      கிராமப்புறத்தில் இருக்கும் அளவு நகரில் சாதியின் தாக்கம் கிடையாது.இன்னும் நிலை மேம்படும் என்வே எதிர்பார்க்க்லாம்

      ஏக இறைவன் பக்தர்கள் போல் ஷியா,சுன்னி,அகமதியா என அந்த அளவுக்கு அடித்துக் கொள்ளாமல் இருப்பதும் நன்மைதான்.

      நன்றி!!!

      Delete
  7. சார்வாகன்,

    HEALER பாஸ்கரை பற்றி உங்கள் கருத்து என்ன? அவர் சொல்வது எனக்கு கொஞ்சம் சரியாக படவில்லை. முடிந்தால் ஒரு பதிவு போடுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் சகோ நன்றி!!!

      Delete
  8. வணக்கம் சார்வாகன்,

    உங்களின் இந்தப் பதிவு பிழையான தகவல்களைக் கொண்டிருப்பதாக கருதுகிறேன். உங்கள் பதிவின் சாராம்சம் சுரண்டலின் உச்சத்தில் சாதி ஒழிந்துவிடும் என்பதாக இருக்கிறது. ஆனால் சாதி என்பது ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் இறுதியில் சுரண்டலை தக்கவைப்பதற்காக தோன்றிய, ஆதிக்க வழிமுறைப்பட்ட ஒரு வடிவம். சுரண்டல் நீடிக்கும் வரை இது நீடிக்கும். ஆனால் அதன் வெளியுருக்கள் மாறுதல் அடையலாம், அடைந்திருக்கிறது. எல்லா நாடுகளிலும் சாதி உண்டு. இந்திய பகுதிகளில் அது பொருளாதார சுரண்டல் வீச்சையும் தாண்டி சமூகத்தில் ஆதிக்க வெறியுடன் நீடிக்கிறது. முதலாளித்துவம் வளர்ந்த நாடுகளில் சாதியத்தின் வீச்சு குறைந்திருக்கும் தோற்றம் காண்பிக்கும் என்றாலும் இந்திய வடிவத்தில் அங்கு சாதியம் இருப்பதில்லை என்பதால் அது சாதியாக உணரப்படுவதில்லை. பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஏகாதிபத்தியம் தேசிய முதலாளித்துவத்தை வளரவிடாமல் நிலப்பிரபுத்துவத்தை ஆதரிப்பதால் ஏனைய நாடுகளை விட இங்கு குறிப்பாக இந்தியாவில் அதன் வீச்சு அதிகம். இதற்கு எதிராக சுரண்டலை ஒழிக்காமல் வாழ்வில்லை எனும் வர்க்க உணர்வோடு மக்கள் திரண்டு சுரண்டல் அமைப்பை தூக்கி வீசாமல் சாதியத்தை ஒழிப்பதற்கான முதல் படியில் எட்டு வைக்க முடியாது.

    ReplyDelete