Monday, November 12, 2012

மதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்!!!!!!வணக்கம் நண்பர்களே,
இணையத்தில் பாடங்களை காணொளி மூலமாக எளிதில் விளக்கும் பலர் இருக்கின்றனர். அப்படி ஒருவரை பாராட்டி சகோ பீர் முகம்மது ஒரு பதிவு இட்டு இருக்கிறார்.


அவர் மதம் சாராமல் பதிவு எழுதி திரு சல்மான் கான் என்பவரின் கல்விப்பணியை பாராட்டியதற்கு வாழ்த்துக்கள். சல்மான்கான் முஸ்லிம் என்பதாலேயே சகோ  பீர் முகம்மது பாராட்ட்டினார் என்ற எண்ணம் வருவது இயல்பு என்றாலும் பாராட்டுக்கு தகுதியானவரை யார் வேண்டுமானாலும் பாராட்டலாம் என்பதே நம் கருத்து.

வங்க‌ தேசத்தில் இருந்து அமெரிக்கா புலம் பெயர்ந்து அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்ப்பட்டு நல்ல குடிமகனாக சமூகத்திற்கும் கல்விப்பணி ஆற்றுதல் நன்றே!!.

அவருடைய குழுவில் பல இன மொழி ,மதம் சார்ந்தவர்களும் இருப்பதையும் அறிய முடிகிறது.சில இந்தியர்களும் இணைந்து சேவை செய்கிறார். அவர்களையும் சேர்த்து பாராட்டுவோம்.

*********
இதில் நம்க்கு ஒரு விடயம் இருக்கிறது. பரிணாம கொள்கை என்பது உயிர் அறிவியலில் ஒருமித்த கருத்தாக  ஏற்கப்பட்ட கொள்கை என்பதும் உலகின் பெரும்பான்மை பல்கலைக் கழகங்களில்  கற்பிக்கப்படுகிறது.

எதிர்ப்பது ஒரு சில மதவாதிகள் மட்டுமே அதுவும் தங்களின் மத புத்த்க விளக்க்த்திற்கு பரிணாம் சான்றுகள்,விளக்கங்கள் எதிராக இருப்பதாக் நினைப்பதால் மட்டுமே.

ஆயினும் பல மதப்பிரிவுகள் பரிணாமத்தை எதிர்க்காமல் வழி அது இறையால் வழி நடத்தப்பட்டது  என சொல்வார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றன்.

நம் தமிழ் பதிவுலகில் பல இஸ்லாமிய பதிவர்கள் பரிணாமம் கொள்கை சரி என்றால் இஸ்லாம் பொய்யாகி விடும் என கருத்துக் கொண்டு பதிவிட்டு வருகிறார்கள்.

நாம் கூடுமானவரை அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லி விளக்கி வருகிறோம்.

இப்போது அவர்கள் அனைவரும் போற்றும் திரு சல்மான் கானின் கல்வி பரிணாமத்தை கற்பிக்கிறதா இல்லையா என அறிவது நம் கடமை ஆகும்.

உயிர் அறிவியல் சார்ந்த கல்வி எதுவும் பரிணாமத்தை அடிப்படையாக கொண்டே கற்பிக்கப்படுவதால் கான் அகாடமியும் பரிணாமத்தை போதிக்கிறது.அந்த காணொளிகளை இணைப்பாக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.பரிணாமம் விளக்குவதில் இன்னும் சிறந்த காணொளிகள் உண்டு என்றாலும் ஒரு முறையாக அறிவியல் கற்றவர் பரிணாமத்தை தவறு என்று கூறுவதில்லை என்பதை விளக்கவே இந்த காணொளிகளை இடுகிறேன்.

கல்வியில் மதம் சார் கருத்துகளை வெளியிடாமல் இருக்கும் கான் அகாடமியை பாராட்டுகிறோம்!!

இப்படி [பரிணாம] கல்வியை ,இன,மத சாராமல் குழு அமைத்து  ஒரு மத ஆட்சி நாட்டில் இருந்து கான் அகாடமி செய்ய இயலுமா என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம்.ஆகவே  கல்வி பெருக மத ஆட்சிகள் ஒழிய வேண்டும்!!!!!!!!!!!

கான் அகாடமி காஃபிர் அகாடமியா என்பதையும் மார்க்க பாதுகாவலர்கள் விளக்க வேண்டுகிறேன்!!!


இந்த காணொளிகளில் உள்ள விடயங்கள் நாம் ஏற்கெனெவே அறிந்த விடயம் என்பதாலும், ஏதெனும் விளக்கம் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் சரி செய்வோம்.

நன்றி


212 comments:

 1. நல்ல பதிவு.
  //பல மதப்பிரிவுகள் பரிணாமத்தை எதிர்க்காமல் வழி அது இறையால் வழி நடத்தப்பட்டது என சொல்வார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றன்//
  அப்படி தான் பெரும்பாலான நாடுகளில் தீவிர மத பற்றாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.ஆனால் தூரதிஷ்டவசமாக சில இஸ்லாமியநாடுகளிலும்,
  //நம் தமிழ் பதிவுலகில் பல இஸ்லாமிய பதிவர்கள் பரிணாம‌ம் கொள்கை சரி என்றால் இஸ்லாம் பொய்யாகி விடும் என கருத்துக் கொண்டு பதிவிட்டு வருகிறார்கள்//
  //ஆகவே கல்வி பெருக மத ஆட்சிகள் ஒழிய வேண்டும்//
  இஸ்லாமிய மத ஆட்சிகள் ஒழிய வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். எனெனில் ரொபினும்,டானியலும் தமிழ் பதிவுலகில் எதிர்பது போல் இல்லாம கிறிஸ்தவ நாடுகளில் பரிணாம கல்வி சிறப்பாக நடைபெறுகிறது.

  ReplyDelete
  Replies
  1. சகோ வேகநரி,
   மத ஆட்சி நடப்பது எந்த மதத்தில் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

   அவர்கள் எது செய்தாலும் கொஞ்சம் உத்துப் பார்த்தா அவர்களுக்கே வினையாகுது.எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் இந்த சல்மான்கான் காஃபிரா இல்லையா?
   ஏன் எனில்
   1. இஸ்லாமை பொய்ய்பிக்கும் பரிணாமத்தை ஏற்று கற்பிக்கிறார்

   2. மலக்குகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும் நாய் வளர்க்கிறார்.அதையும் கான் அகாடமியில் உறுப்பினராக் காட்டுகிறார்.

   சல்மான் காஃபிர் இல்லை எனில் இவ்வள்வு நாள் பரிணாமத்தை எதிர்த்தவர்கள் காஃபிரே!!

   அப்படி சல்மான் காஃபிர் எனில் இவரை ஆதரித்து பதிவிட்டவர்களும் ஆதரித்து தமிழ்மண ஓட்டு அளித்தவர்களும் காஃபிரா? சுவனம் கிட்டுமா?
   விள்க்கம் சொல்லுங்க!!!!!!!!

   நன்றி!!!!!!!

   Delete
 2. இந்த கான் அகாடமி குறித்து நானும் கேள்வியுற்றேன், ஆனால் இவ்வளவு பரிணாமம் சார்ந்த விடயங்கள் இருக்கா என்பது மலைக்க வைக்கின்றது.. காலப் போக்கில் மதங்கள் பரிணாமத்தை ஏற்றுக் கொண்டு விடும் என்றே தோன்றுகின்றது, அப்போது பரிணாமத்துக்கு பளான் போட்டவர் கடவுள், ப்ளானை நிறைவேற்றியவர்கள் ஏஞ்செல்கள், தேவதைகள் என்று சொல்லப் படும் .... !!! நோய்கள் எல்லாம் சாத்தானின் வேலை, mutation எல்லாம் தேவதூதர்களின் பணி என்று கூட சொல்வார்கள் என்றே தோன்றுகின்றது .. !

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இக்பால்,
   நம் சகோக்களுக்கு ஏதேனும் முஸ்லிம் பெயர் கொண்ட ஆள் பிரப்லமாக இருந்து விட்டால் போதும்,போற்றி பதிவிடுவார்கள். அப்புறம் அவர் பற்றி ஏதேனும் விடயம் வந்தால் சத்தம் காட்டாமல் அமைதியாக் இருந்து விடுவார்கள்.

   அறிவியல் பாடம் போதிபவர் பரிணாமத்தை மறுக்க மாட்டார்.மறுப்பவர்கள் மதவாதிகள் மட்டுமே என்பதை அவர்களே ஒத்துக் கொண்டார்கள்.

   எதுக்கு பரிணாம்த்தை எதிர்த்து எளிதில் மதம் தவறு எனமீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
   அகமதியாக்கள்,குரான் மட்டும் மூமின்கள் வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்ற கொள்கை உடையவர்கள்.
   http://en.wikipedia.org/wiki/Ahmadiyya_views_on_evolution

   The Ahmadiyya Movement is a denomination of Islam that universally accept in principle the process of evolution, albeit divinely guided, and actively promotes it.[1] Over the course of several decades the movement has issued various publications in support of the scientific concepts behind the process of evolution, and frequently engages in promoting how religious scripture supports the concept.

   வஹாபிகளே முழு மூச்சாய் எதிர்ப்பது மிக சரியாக ஆவணப் படுத்தப்பட்டதால்,இனிமேல் வழி நடட்தப்பட்ட பரிணாமம் என்றால் வஹாபிகள் காமெடியன்களே என்பதும் நிரூபிகப்படும்.
   நன்றி!!!!!!!!!!!!

   Delete
 3. சார்வாகன்:
  இதுக்கு முடிவே கிடையாது. என்னுடைய ஒரே கருத்து இது தான்:

  டாகடர் பிழைக்க வைத்தால் கடவுள் டாக்டர் ரூபத்தில் வந்தார் என்பார்கள்; தப்பா மருந்து குடுத்து டாக்டர் கொன்னா என்னான்னு கேளுங்க, விதி முடிச்சு போச்சு அப்பிடின்னு சொல்வாங்க; அதே நோயாளியை சாகர தருவாயில் பெரிய மருத்துவர் வந்து காப்பாத்தினா, அப்ப கடவுள் பக்தனை சோதனை செய்தார் அப்பிடின்னு சொல்வாங்க...அளக்கிரதுக்கு இவனுங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்...

  அப்படி சொன்னாத்தான் இப்படி செய்வீங்க; இப்படி சொன்னாத்தான் அப்படி செய்வீங்க ====>> இது தான் ஆன்மீகவியாதிகளின் தாரக மந்திரம்!

  ReplyDelete
 4. ஆன்மீகவியாதிகளின்; typo, ஆன்மீகவாதிகள் என்றும் படிக்கலாம்...!

  ReplyDelete
 5. வாங்க நண்பர் நம்பள்கி,
  அப்படி இப்படின்னு சொல்ல விடுவோமா? இந்த பரிணாமம் என்பது அவர்களுக்கு முழுங்கவும் முடியாமல்,துப்பவும் முடியாமல் சிக்கிக்கொண்ட ஒரு விடயம் ஆகி விட்டது....

  எப்போது பரிணாம் எதிர்ப்பு பதிவு வரும் என காத்து இருக்கிறோம்

  நன்றி

  ReplyDelete
 6. வணக்கம் சகோ.

  நல்ல பதிவு. சகோ.பீர் முகம்மதுக்கு பாராட்டுக்கள்.இனி எதிர் காலத்தில் பரிணாமம் என்பதே அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட விதியாகும். ஆம் அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாதது அனைத்தும் அவன் செயலாகும்,எனவே இதுவும் அவன் செயலே என்றாகும். ஏற்கனவே பரிணாமத்தைபற்றி திருமறையில் அல்லாஹ் கூறியிருந்தும் அதைப்பற்றிய அறிவை நமக்கு சரியாக வழங்கவில்லை என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.விதியைப்பற்றிய அறிவு எப்படி நமக்கு சரியாக‌ வழங்கவில்லையோ அதுபோல பரிணாமம் பற்றிய அறிவையும் நமக்கு வழங்கவில்லை.எ.காட்டாக மூளை என்று அறியாத காலத்தில் மூளையை இதயம் என்று சொல்லி மக்கள் குரானை நிராகரிக்காமல் பாதுகாத்தது போல்,பரிணாமத்தை பரிணாமம் என்று சொல்லாமல் குரான் நிராகரிப்பிலிருந்து பாதுகாத்த இறைவனே அனைத்தும் அறிந்தவனல்லவா??இப்படித்தான் அல்லாவின் நாட்டம் என்றால் நம்மால் எப்படி அதை மாற்ற முடியும்??ஆகவே பரிணாமத்தைப் பற்றிய தகவலை தவறாக புரிந்தமைக்கு அல்லாஹ் நம்மை மன்னித்தருள்வான் மன்னிப்பவர்களில் எல்லாம் சிறந்த மன்னிப்பாளன். இப்படி அண்ணன் பி.ஜே.வை விட்டு எழுதச் சொல்லிவிடுவோம்ல...

  ReplyDelete
 7. வணக்கம் சகோ.

  நல்ல பதிவு. சகோ.பீர் முகம்மதுக்கு பாராட்டுக்கள்.இனி எதிர் காலத்தில் பரிணாமம் என்பதே அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட விதியாகும். ஆம் அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாதது அனைத்தும் அவன் செயலாகும்,எனவே இதுவும் அவன் செயலே என்றாகும். ஏற்கனவே பரிணாமத்தைபற்றி திருமறையில் அல்லாஹ் கூறியிருந்தும் அதைப்பற்றிய அறிவை நமக்கு சரியாக வழங்கவில்லை என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.விதியைப்பற்றிய அறிவு எப்படி நமக்கு சரியாக‌ வழங்கவில்லையோ அதுபோல பரிணாமம் பற்றிய அறிவையும் நமக்கு வழங்கவில்லை.எ.காட்டாக மூளை என்று அறியாத காலத்தில் மூளையை இதயம் என்று சொல்லி மக்கள் குரானை நிராகரிக்காமல் பாதுகாத்தது போல்,பரிணாமத்தை பரிணாமம் என்று சொல்லாமல் குரான் நிராகரிப்பிலிருந்து பாதுகாத்த இறைவனே அனைத்தும் அறிந்தவனல்லவா??இப்படித்தான் அல்லாவின் நாட்டம் என்றால் நம்மால் எப்படி அதை மாற்ற முடியும்??ஆகவே பரிணாமத்தைப் பற்றிய தகவலை தவறாக புரிந்தமைக்கு அல்லாஹ் நம்மை மன்னித்தருள்வான் மன்னிப்பவர்களில் எல்லாம் சிறந்த மன்னிப்பாளன். இப்படி அண்ணன் பி.ஜே.வை விட்டு எழுதச் சொல்லிவிடுவோம்ல...

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் இனியவன்,
   கான் அகாடமி என்பவர் உண்மையான கல்வியாளர் என்பதால் பரிணம்த்தை ஏற்கிறார். மத நம்பிக்கையையும்,அறிவியலையும் குழப்புவதை தவிர்க்கிறார்.

   பரிணாமம் தவறு என்றால் மட்டுமே எனது நம்பிக்கை உண்மை என்றவுடனேயே அந்த நம்பிக்கை பொய் ஆகி விடுகிறது.தானாக மதத்திற்கு குழி வெட்ட பரிணாமம் எதிர்க்க்லாம்.

   நன்றி!!!!!!!!!

   Delete
 8. என்னத்தை எழுதினா மார்க்கு வாங்க முடியும் என்பது வேறு, உண்மை என்ன என்பது வேறு. கான் அகேடமிக்காரன் செய்திருப்பது முதலாவதாகும். பரிணாமத்தை அந்தக் கல்லூரியில் போட்டான் இந்தக் கல்லூரியில் போட்டான் என்பதெல்லாம் வேண்டாம், அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டதா? அறிவியல் பூர்வமாக ஏற்கப் படாத வெறும் கொள்கைக்கு இத்தனை பில்டப்பா..............

  ReplyDelete
 9. வாங்க நண்பர் ஜெயதேவ்தாஸ்,
  பரிணாமம் என்பது அறிவியல் உலகில் முற்று முழுதாக் ஏற்கப்பட்ட கொள்கை. பரிணாம அறிவியலின் படி கடந்த கால் நிகழ்வுகளை அதன் சான்றுகள் மூலம் அறிகிறோம்.அச்சான்றுகளின் மீதான விள்க்கத்தின் மூலம் சில கணிப்புகள் செய்து சரி பார்க்கிறோம். இந்த விள்க்கங்களின் படி
  1. ஒவ்வொரு உயிரியின் ஜீனோமும் மாறுகிறது,அனைத்து உயிரிகளின் அடிப்படை வேதிப் பொருள்கள் ஒன்றே.
  2. ஜினோம் மாற்றத்தினால்,ஒரு உயிரி பல் சிற்றினங்கள் ஆதல்,உரு மாற்றம் அடைகிறது.

  இந்த வகையில் பூமியில் உள்ல அனைத்து உயிரிகளும் ஒரு செல் உயிரிகளில் இருந்து கிளைத்து தழைத்த்வையே.
  ஆகவே சில மதவாதிகளைத் தவிர கல்வியாளர்கள்,ஆய்வாளர்கள் ஆகியோர் ஏற்கிறோம்.

  ஆகவே பரிணாமம் நிரூபிக்கப்பட்ட விடய்மே.

  கிருஷ்ன பக்தி இயக்கத்தின் மனிதன் தோற்ற‌ விள்க்கம் பற்றி அறிவீரா?

  அடுத்தபதிவில் உங்கள் கிருஷ்ன பக்தி இயக்க்தின் வரலாற்றையும் ,எழுதி பிரபுபாதாவுக்கு விஷம் கி பி சி குழுவினர் கொடுத்து கொன்ற கதையை எழுதலாம் என இருக்கிறேன்.


  நன்றி

  ReplyDelete
 10. சகோ ஜெயதேவு தாசு,
  //என்னத்தை எழுதினா மார்க்கு வாங்க முடியும் என்பது வேறு, உண்மை என்ன என்பது வேறு. கான் அகேடமிக்காரன் செய்திருப்பது முதலாவதாகும்.//

  உலக முழுதும் பல்க்லைக் கழக பாடத்திட்டத்தில் ஒரு விடயத்தை கொண்டு வருவது சுலபம் அல்ல.பாடத்திட்டத்தில் இருப்பதால் மட்டுமே கான் அகாடமி கற்பிக்கிறான்.

  நீங்கள் உலகில் உள்ள அனைத்து கிருஷ்ன பக்தி இயக்கத்தினரும் சேர்ந்து மாட்டு மூதிரத்தின் மூலம் எய்ட்ஸ் குணமாகிறது என பாடத்தில் சேர்க்கமுடியுமா என முயற்சி செய்து பாருங்களேன்.  http://www.elitefitness.com/forum/anabolic-steroids-hiv/new-cure-aids-found-if-cow-urine-your-idea-cure-157160.html

  Police Arrest Two for Cow Urine AIDS 'Cure'
  Fri Jul 12, 9:17 AM ET

  CALCUTTA, India (Reuters) - Indian police said on Friday they had arrested two men in Calcutta accused of selling bottles of cow urine mixed with cow dung and claiming they were cures for AIDS cancer and tuberculosis.


  Sivaji Ghosh, deputy commissioner of Calcutta police, told Reuters the men were arrested after a complaint to police by drug control authorities.

  "They were selling these bottles for everything under the sun," Ghosh said. "It was a bit surprising to see this happening in a big city. In villages, quacks sell a lot of things as medicines or having medicinal value."

  Police said they had filed a First Information Report, paving the way for an investigation, after seizing dozens of bottles from a shop.

  Ghosh said people were paying around 600-700 rupees ($12-$14) for each bottle.

  India's majority Hindu potion regards the cow as sacred.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி! ஏன் முடியாது அடுத்த இந்திய பிரதமர் லிஸ்டில் இருக்கும் நர.மோடி வந்தால் அனைத்தும் சுலபம். வி. விடுதி செல்லும் அனைத்து இந்தியருக்கும் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்ற பாசக தேர்தல் அறிக்கை ரெடியாவதாக வதந்தியாக கேள்விப்பட்டேன். நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் உண்மைதான் போலிருக்கே:))

   Delete
  2. பாடப் புத்தகத்தில் வைப்பது என்பது வேறு, அறிவியல் முறைப் படி ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பது வேறு. அறிவியல் முறைப் படி ஏற்கப் படவில்லை.

   மட்டு மூத்திரம் குடிப்பது அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு, அதில் மூன்றாம் மனிதர்கள் தலையிட முடியாது.

   சம்பந்தமில்லாமல் இன்னொரு மாநில முதலமைச்சரை இங்கே இழுத்திருக்கீங்க. அப்படி அந்தாளு உங்களுக்கு என்ன தீங்கு பண்ணினார் என்று தெரியவில்லை. அவரோட மாநிலத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து மீதம் காண்பித்திருக்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாட்டிற்குள நுழையாமல் பார்த்துக் கொள்கிறார். சாதாரண குடிமக்கள் அவர்கள் எந்த மதமானாலும் நலமாக வாழ்வதை உறுதி செய்கிறார். தீவிரவாதியை பாரபட்சமில்லாமல் நசுக்குகிறார். அப்படியே திரும்பி உங்க சொந்த மாநிலத்தைப் பாருங்க. பேச்சில் மட்டும் தான் மதச் சார்பின்மை. நாட்டிர்க்குச் சேர வேண்டிய Rs. 1.75 லட்சம் கோடி அம்போ ஆயிடுச்சு. ஈழத்தில் கொத்துக் கொத்தாய் மக்கள் செத்தாலும் ஒன்னத்தையும் புடுங்க வில்ல. இந்த மாதிரி நாத்தீகனை விட மாட்டு மூத்திரம் குடிக்கச் சொன்ன ஆத்தீகன் எவ்வளவோ பெட்டர்

   Delete
  3. சார்வாகன், பதிவுக்குச் சம்பந்தமில்லாத மாட்டு மூத்திரத்தை இங்கே இழுக்காதீங்க. வேணுமின்னா அதைப் பத்தி தனிப் பதிவு போடுங்க அங்க பின்னூட்டம் போட்டா அதுக்கு பதிலா இதைச் சொல்லுங்க. இங்க பரிணாமம் அறிவியலால் ஏற்கப் பட்டதா இல்லையா என்பதே கேள்வி. சில விஞ்ஞானிங்க ஏத்துகிட்டாங்க பாடப் புத்தகத்தில வச்சிட்டாங்க என்பது கேள்வி அல்ல. அறிவியலால் ஏற்றுக் கொள்ளப் படாத கொள்கைக்கு பல்லக்கு தூக்குவதர்க்கும் அதை உண்மை என்று பரப்புவதற்கும் நீங்கள் வெட்கப் பட வேண்டும்

   Delete
  4. வாங்க ஜெயதேவ் தாஸ்,
   அறிவியல் முறைப்படி ஏற்காமல் பாடப் புத்த்கத்தில் சேர்க்க முடியுமா?? உங்களின் அறிவு அபாரம்!!!!!!!!!!!.

   இது உங்களின் கருத்து மட்டுமே!!.

   1.அறிவியல் முறைப்படி ஏற்பது என்றால் என்ன?.பரிணாமம். எப்படி அறிவியல் முறையாக் நிரூபிக்கப்பட வேண்டும்?

   2. பரிணாமம் நிகழவே இல்லை. என்னும் கருத்து அறிவியலில் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட ஒன்று.இந்த கருத்து கொண்ட பல்கலிக் கழக் பாடத்திட்டம் சில சொல்லுங்கள் பார்க்க்லாம்.
   *****
   பரிணாமம் நிரூபிக்கப் படவில்லை என்கிறீர்கள். எப்படி எனக்கேட்கிறோம்.
   நிரூபிப்பது எப்படி என எளிதில் விள்க்கவே உங்களின் விருப்ப மாட்டு மூத்திரம்.

   மாட்டு மூத்திரம் பற்றி சொல்வது நிரூபித்தல் குறித்து.இத்னை நிரூபித்தல் மிக சுலபம். நீங்களோ அல்லது எய்ட்ஸ் நோயாளிகள் 100 பேரை தேர்ந்தெடுத்து அவ்ர்களின் உடலில் எந்த அள்வு வெள்ளை அணுக்கள் இருக்கின்றன் என் தேதி வாரியாக் குறிக்க வேண்டும்.

   எவ்வள்வு நாள் என்ன அள்வு எப்படிக் குடிக்க வேண்டும் என ஏதேனும் சாமியாரிடம் கேட் அதன் படி குடிக்க வைத்து வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை பெருகுகிறதா எனப் பர்க்க வேண்டும்.

   இந்த முடிவுகளை ஒரு மருத்துவ ஆய்வு சஞ்சிகைக்கு அனுப்பி பதிவிட வேண்டும்.

   இப்படி ஆயிரக் கண்க்கில் கட்டுரைகள்,ஆய்வுகள் நிகழ்ந்தால் மாட்டு மூத்திர‌ர படிப்பு,பல்கலைக் கழகத்தில் கூட வந்து விடலாம்.

   நீங்கள் அந்த மாட்டு மூத்திர துறைத் தலைவர் ஆகி விடலாம்.ஸ்வாமிஜிகள் பல்க்லைக் கழக் துணை வேந்தர்!!!!!!

   மாட்டு மூத்திரம் பகவான் பாகவதத்திலேயே சொல்லி இருக்கும் போது, இஸ்க்கான் ஸ்வாமிஜிகள் குடிக்கும் போது எப்படி தவறாகும்??

   ஆகவே நிரூபியுங்கள்!!!!!!
   http://news.iskcon.com/node/1714

   ndia to Launch Cow Urine as Soft Drink

   By Jeremy Page for The Times Online (UK) on 14 Feb 2009

   Does your Pepsi lack pep? Is your Coke not the real thing? India's Hindu nationalist movement apparently has the answer: a new soft drink made from cow urine.
   The bovine brew is in the final stages of development by the Cow Protection Department of the Rashtriya Swayamsevak Sangh (RSS), India's biggest and oldest Hindu nationalist group, according to the man who makes it.
   Om Prakash, the head of the department, said the drink – called "gau jal", or "cow water" – in Sanskrit was undergoing laboratory tests and would be launched "very soon, maybe by the end of this year".
   "Don't worry, it won't smell like urine and will be tasty too," he told The Times from his headquarters in Hardwar, one of four holy cities on the River Ganges. "Its USP will be that it's going to be very healthy. It won't be like carbonated drinks and would be devoid of any toxins."
   The drink is the latest attempt by the RSS – which was founded in 1925 and now claims eight million members – to cleanse India of foreign influence and promote its ideology of Hindutva, or Hindu-ness.
   Hindus revere cows and slaughtering them is illegal in most of India. Cow dung is traditionally used as a fuel and disinfectant in villages, while cow urine and dung are often consumed in rituals to "purify" those on the bottom rungs of the Hindu caste system.
   In 2001, the RSS and its offshoots – which include the opposition Bharatiya Janata Party – began promoting cow urine as a cure for ailments ranging from liver disease to obesity and even cancer.


   Read more: http://news.iskcon.com/node/1714#ixzz2C0yqIy6b
   நன்றி

   Delete
  5. @தாஸ், இந்த உமது கேள்விக்கு நான் விடையளிக்கலாம் என நினைக்கிறேன். பல புகழ் பெற்ற உயிரியல்/மருத்துவ விஞ்ஞானிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியவன் என்ற முறையில் சொல்லுகிறேன். 100% எல்லா விஞ்ஞானிகளும் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். கிருத்துவ மதத்தினை கடைபிடித்து ஏசுவை தொழும் விஞ்ஞானிகளும்தான். சிலருடன் அரட்டை அடிக்கும் போது பரிணாமத்தை ஏற்கிறீர்களா என நேரடியாவே கேட்டுள்ளேன். சிரித்தபடி ஆம் என்பார்கள், ஆனால் கிருத்துவ மதத்தினை எதிர்த்து கருத்து சொல்ல விரும்பாமல் அதற்கு மேல் பேசாமல் தவிர்த்துவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் பரிணாமத்தை ஏற்காவிடில் அவர்களின் பல ஆராய்ச்சி முடிவுகளும் கேள்விக்குறியாக மாறும். அவர்கள் கடவுளின் அனுகிரகத்தில் பரிணாமம் நடந்தது என நம்புபவர்கள் ஆவர். ஆக பரிணாமம் நடந்தது உண்மை, அது கடவுள்தான் நிகழ்த்தினாரா அல்லது இயற்கையில் நிகழ்ந்ததா என்பது அவரவர் நம்பிக்கை பொறுத்தது.

   நான் ஏற்கனவே எழுதியபடி நவீன மூலக்கூறுவியலில் புதிய புரதம் அல்லது மரபணுவினை கண்டுபிடித்தவுடன் விஞ்ஞானிகள் செய்வது, அது மற்ற உயிரினங்களில் உள்ளதா என டேட்டா பேஸ்களில் தேடி ஒரு பரிணாம மரத்தை (phylogenetic tree) வரைவதுதான். ஆக மற்ற துறைகளிலும் அதாவது ஜெனடிக் என்ஜினியரிங், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் பரிணாமம் பயன்படுத்தபடுகிறது. இப்போது அமெரிக்காவில் பரிணாமத்துறையில் ஆராய்ச்சிக்கு பணவுதவி பெறுவது என்பது கடினமாக இருக்கிறது, ஏனெனில் அதனை நிரூபிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுவதே காரணம்!

   பெருமைக்குரிய விடயம், இந்தியாவில் தோன்றிய மதங்கள் ஆபிரகாமிய மதங்கள் போல் அல்லாமல் ரொம்பவும் நெகிழ்வுதன்மை உடையன. அவை அறிவியல் கருத்துக்களை உள்வாங்கி தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை. அமெரிக்காவில் PEW கருத்துகணிப்பின் படி அதிக பட்ச புத்தர்களும் இந்துக்களும்தான் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்கள். 81% புத்தர்களும் 80% இந்துக்களும், 58% கிருத்துவரும், 45% முஸ்லிம்களும் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள். இயற்பியல் குறித்து எழுதும் தாங்கள் பரிணாமத்தை குறித்து தவறான புரிதலுடன் இருப்பது வருத்தமளிக்கிறது.

   http://news.newamericamedia.org/news/view_article.html?article_id=5dbb57b1707ee3b07cb20c2abc5994e4

   Delete
  6. @சார்
   இந்தியாவில் பலர் பசு மூத்திர ஆராய்ச்சியினை சீரியஸாக மேற்கொண்டு
   வருகிறார்கள். இந்திய அறிவியல் பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரை

   http://www.indianjournals.com/ijor.Aspx?target=ijor:ijcs&volume=1&issue=2&article=001

   இன்னமும் பெட்டர் சிலர் அமெரிக்க காப்புரிமையே வாங்கியுள்ளார்கள்!

   http://www.google.com/patents?hl=en&lr=&vid=USPAT6410059&id=WYYKAAAAEBAJ&oi=fnd&dq=cow+urine+cancer&printsec=abstract#v=onepage&q&f=false

   யார் கண்டது, நீங்கள் எழுதியதெல்லாம் ஒரு நாளைக்கு நடந்தாலும் நடக்கும்!:)

   Delete
  7. \\அமெரிக்காவில் PEW கருத்துகணிப்பின் படி அதிக பட்ச புத்தர்களும் இந்துக்களும்தான் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்கள். 81% புத்தர்களும் 80% இந்துக்களும், 58% கிருத்துவரும், 45% முஸ்லிம்களும் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள்.\\ இதென்னது கருத்து கணிப்பு எடுத்துகிட்டு இருக்கீங்க? ஒரு அறிவியல் கொள்கையை ஏற்கவும் நிராகரிக்கவும் இந்த சோனாங்கி எல்லாம் யாரு? ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கவும், athanpadi ஏற்கவும்/நிராகரிக்கவும் இதென்னது அமரிக்க பிரசிடென்ட் எல ஷனா என்ன? இது அறிவியல். நியூட்டன் விதியை ஏத்துகிட்டீன்களா இல்லியான்னு எந்த மடையனாவது கருத்து கணிப்பு நடத்துவானா? ரிலேட்டிவிடி தியரியை உண்மைன்னு நம்பரீங்கலான்னு பைத்தியக்காரன் கேட்பானா, அதுவும் தெருவில் போறவன் வர்ரவன்கிட்ட எல்லாம்? அவனுங்க என்ன சொல்றானுங்க என்பதை வைத்தா உங்க தியரி நிற்கும்? ஆனா டார்வின் கொள்கைக்கு இது நடக்குது இதிலிருந்தே தெரியலையா இது அறிவியலால் ஏற்கப் படாத புருடான்னு?

   Delete
  8. சார்வாகன், இந்த மாட்டு மூத்திரத்திலேயே உருண்டு புரண்டுகிட்டு இருக்கீங்களே, வெளியில வாங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறீங்களே!! ஹோமியோபதி கூட இன்னமும் நிரூபிக்கப்படாத வைத்திய முறை ஆனாலும் அது பல நோயை, அதுவும் மற்ற வைத்திய முறைகளால் தீர்க்கப் படாத நோய்களைத் தீர்க்குது. எதை மருந்தா சாப்பிடறான் என்பது முக்கியமில்லை அதனால் பலன் இருக்கா முக்கியம்.மற்றபடி இல்லாததை சொல்லி விற்றால் அதை சட்டம் பார்த்துக் கொள்ளும். மாட்டு மூத்திரத்தில் ஸ்நானம் செய்வதை முதலில் விட்டுட்டு இந்த பதிவில் சொன்னதை பத்தி மட்டும் பேசுங்க. ஊர்ல இருக்கிறவன் ஏத்துக்குவது, தேர்ல போறவன் ஏத்துக்குவது, ஒட்டு போட்டு ஏற்றுக் கொள்வது, சாதி வாரிய கணக்கெடுத்து ஏற்றுக் கொள்வது இதெல்லாம் அறிவியல் இல்லை. அறிவியல் முறைப் படி ஏற்ப்பதே அறிவியல். உயிர் இல்லாததில் இருந்து உயிர் வந்ததாக நீங்கள் எங்கு பார்த்தீர்கள்? குரங்கு மனுஷனா மாறி நீங்கள் எங்கு பார்த்தீர்கள்? இப்போ மாத்தி காட்டுங்க, உங்க முன்னோர்கள் குரங்குங்கன்னு நான் ஒத்துக்கறேன்.

   Delete
  9. சக் ஜெ.தாஸ் மாட்டு மூத்திரம் விட்டுவிடுவோம்.உங்க்ளுக்கு பிடிக்குது பயன்படுத்துகிறீர்கள்.
   //இதெல்லாம் அறிவியல் இல்லை. அறிவியல் முறைப் படி ஏற்ப்பதே அறிவியல்//

   அறிவியல் முறைப்படி என்பதை ஏற்கெனெவே விள்க்கி இருக்கிறேன். உங்களது விள்க்கப் படி அறிவியல் முறை என்றால் என்ன?
   **********

   // உயிர் இல்லாததில் இருந்து உயிர் வந்ததாக நீங்கள் எங்கு பார்த்தீர்கள்?//
   இதன் பெயர் அபியோஜெனிசிஸ்.பரிணாமம் என்பது ஒரு உயிரி பல உயிரிகளாக நெடுங்காலத்தில் மாறுவதைப் பற்றி விளக்குகிறது.
   நீங்கள் கூறிய வண்ணம் முதல் உயிர் செல் வேண்டும் என்றாலும் அது 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதாக அறிவியலில் ஏற்கப்படுகிறது. செயற்கை செல் த்யாரிப்பும் முன்னெடுக்கப்படும் அறிவியலே!!!

   முதல் செல்லில் இருந்து இப்போது வரை வருவதை விட இபோது இருந்து கடந்தகாலம் நோக்கி செல்வதே நன்று. சான்றுகள் சரியாக வரிசைப் படுத்த‌ முடியும்.
   செயற்கை செல் உருவாக்கினால் பரிணாமம் ஏற்புடையது ஆகிவிடுமா?
   முதல் செல் உருவாந்தில் ஒரு கணிப்பு வேதிப்பொருள்கள் இணைவு என்பது.வேறு கிரகத்தில் இருந்து வந்து இருக்க்லாம் என்பதும் இன்னொரு கணிப்பு,
   நன்கு அறிந்த விடயங்களைக்[படிம வரலாறு,ஜீனூம் ஆய்வுகள்] கொண்டு அறியா விடயங்களைக்[முதல் செல்] கணிப்பது சரியா?
   அறியா விடயங்களைக் கொண்டு அறிந்த விடயங்களைக் குழப்புவது சரியா?
   ***********
   //குரங்கு மனுஷனா மாறி நீங்கள் எங்கு பார்த்தீர்கள்? இப்போ மாத்தி காட்டுங்க, உங்க முன்னோர்கள் குரங்குங்கன்னு நான் ஒத்துக்கறேன்.//

   பரிணாமம் என்பதன் வரையறையே தெரியவில்லை என்பதையே இக்கூற்று காடுகிறது.

   மனிதனுக்கும் வாலில்லாக் குரங்கு சிம்பன்சிக்கும் ஒரே முன்னோரில் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்த்னர். மனித இன‌ங்களில் சுமார் 20+ வித்தியாசமான் வகை இனங்கள் உருவாகி,நாம் ஹோமோ சேஃபியன் மட்டுமே
   இன்றுவரை வாழ்கிறோம்.

   ஹோமோ சேஃபியனும் பல் வித்தியாச இனங்களாக பிரியலாம்.அதில் பல் அழியலாம்!!
   இதுவே பரிணாமம் ஆகும்.

   படிம வர்லாற்றின் படி உரு அமைப்பு மாறி வந்ததும், இபோதைய ஜீனோமில் ஏற்படும் மாறுதல்கள் உருவில் சிறிய மாற்றங்களை தோற்றுவிப்பதும் ஐயந்திரிபர ஆய்வு சாலைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

   இது நெடுங்கால்த்தில் அதிக மாற்றங்கள் நிகழ வைக்கும் என்பதாலேயே பரிணாம்க் கொள்கை அறிவியலில் முற்று முழுதாக் ஏற்கப்பட்டு உள்ளது.

   எதிர்ப்பவர்கள் கிரியேசன் ரிசர்ச் என்னும் கிறித்தவ் அடிப்படைவாத குழுவினர் மட்டுமே. அவர்களின் கட்டுரைகளையே பல் மதவாதிகள் பயன்படுத்துகின்றனர்.
   ******

   நான் உயிர் என்பது உடலில் ஒரு அம்சம் என மட்டுமே ஏற்கிறேன். ஏன் எனில் உயிர் இல்லம்ல் உடல் இயங்க முடியாதது போல்,உடல் இல்லமல் உயிரும் இல்ல என்பதே அறிவியல் ஏற்கும் உண்மை.

   நீங்கள் நம்பும் ஆத்மா என்று ஒன்று இருப்பதை இப்படி ஏதேனும் பரிசோதனை சிறிய அள்வில் ஆவது செய்ய முடியுமா?

   நன்றி

   Delete
  10. கருத்துக்கணிப்பு நடத்திய காரணத்தால் பரிணாமம் உண்மையில்லை என ஆகிவிடுமா? தியரி ஆஃப் ரிலோடிவிட்டி பலருக்கு புரியாது, அதைப் பற்றி என்னாத்தை பொதுமக்களிடம் கேட்பது? உண்மையில் பரிணாமும் பலருக்கு புரிவதில்லை. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதர் இவ்வளவுதான் பெரும்பாலோருக்கு தெரிந்த பரிணாமக் கொள்கை! அதனால்தான் குரங்குளை மனுசனா மாத்தி காட்டுன்னு கேள்வி கேட்குறீங்க.

   ஆனால் பரிணாமத்தை பற்றி மக்களிடம் கேட்பதற்கு காரணம் அது அவர்களின் மத நம்பிக்கைகளுடன் குறுக்கிடுவதே.16-ம் நூற்றாண்டில் இவ்வளவு தொழில்நுட்பம் இருந்திருந்தால் சூரியம் மையம் என கலிலியோ சொன்னது உண்மையா என மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தியிருப்பார்கள், அதுக்காக சூரியன் மையம் என்பது பொய்யாகிவிடுமா? அந்த கருத்துக்கணிப்பை இப்போது நடத்தினார்கள் (பார்க்க கீழே) உமது வாதப்படி சூரிய மைய கொள்கைக்கு கருத்துக்கணிப்பு நடத்தியதால் இனிமே பூமிதான் மையம் என நம்ப ஆரம்பிக்க வேண்டுமா? :)

   அறிவியல் துறையில் பணியாற்றும் நான் சொல்கிறேன் பரிணாமத்தை அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்கிறார்கள் என. அதற்கு பரிணாமத்தை பொய் என்று சொல்லும் ஒரு விஞ்ஞானியில் பெயரையும் சுட்டாமல் நீர் தரும் பதில் 'அறிவியலால் ஏற்கப் படாத புருடா'!

   இந்த விவாதம் குறித்து சகாவான அறிவியலர் ஒருவரிடம் கூறினேன். அவர் சிரித்தபடி இந்த சுட்டியினை பார்வோர்ட் செய்தார். http://www.newyorker.com/online/blogs/frontal-cortex/2012/06/brain-experiments-why-we-dont-believe-science.html

   ஆனால் சகோ சார்வாகன் போல பரிணாமத்தை விளக்கி அனைவரையும் ஏற்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கை என்னிடமில்லை. பூமிதான் இன்னும் மையத்தில் இருக்கிறது1, பூமி தட்டையானது2 எனவெல்லாம் இப்போதும் சிலர் நம்பியபடிதான் இருக்கிறார்கள்.அதன் தொடர்ச்சி பரிணாம எதிர்ப்பு. முட்டாள்தனமான கொள்கைகள் நம்புவது அவரவர் சுதந்திரம் அதில் ஒரளவுக்கு மேல் தலையிடுவது இல்லை! நன்றி, வணக்கம்.

   1)http://www.nutritionresearchcenter.org/healthnews/twenty-percent-of-americans-think-sun-revolves-around-earth/
   2)en.wikipedia.org/wiki/Flat_Earth_Society

   Delete
  11. வாங்க சகோ நந்தவன்,
   அருமையான கருத்துகளுக்கு நன்றி

   Delete
  12. பரிணாமவியல் பொய் என்பவர்கள், மண்ணுக்குள் தலையை புதைத்து விட்டு உலகம் இருள் என சொல்வதைப் போன்றவர்கள்.

   Delete

 11. //கல்வியில் மதம் சார் கருத்துகளை வெளியிடாமல் இருக்கும் கான் அகாடமியை பாராட்டுகிறோம்!!//

  நானும் ...

  //இப்படி [பரிணாம] கல்வியை ,இன,மத சாராமல் குழு அமைத்து ஒரு மத ஆட்சி நாட்டில் இருந்து கான் அகாடமி செய்ய இயலுமா என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம்.//

  நல்ல கேள்வி ...

  //ஆகவே கல்வி பெருக மத ஆட்சிகள் ஒழிய வேண்டும்!!!!!!!!!!!//

  பத்த வச்சிட்டியே, பரட்டை ...!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அய்ய வணக்கம் நலமா?

   நம் சகோக்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்,விள்க்கமும் அவர்களே முரண்படுவார்கள்.

   பரிணாமம் உண்மை என்றால் குரானை அல்லாஹ் முகமது(சல்)வுக்கு வழங்கவில்லை என் கற்பனை செய்து கொண்டால் நாமா பொறுப்பு?

   ஆப்பசைத்த குரங்கின் கதை!!!

   பரிணாமம் வேறு மத வேறு என்று சொல்லி விட்டு கான் மாதிரி செல்ல வேண்டியதுதானே!!
   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
   சகொக்களினால் நம்க்கு ந்ல்லா பொழுது போகுது

   நன்றி!!!!!!!

   Delete
  2. சகோ ஜெயதேவ் தாஸ்,
   எதிர்க்குரல் தளத்தில் ஆசிக் என்பவர் எழுதுவது அனைத்தும் கிரியேசன் ரிசர்ச் என்னும் கிறித்த்வ அடிப்படைவாதிகளின் தளத்தில் இருந்தே சுடப்படுபவை.
   அத்தளங்களில் இருந்தெ எழுதி மூமின்கள்க்கு போட்டியாக் ஒரு காஃபிரின் பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் வர வாழ்த்துகிறேன்.ஆனால் நீங்கள் எழுதும் எந்த பரிணாம் எதிர்ப்பு பதிவுக்கும் மறுப்பு சொல்வது முடியும்.

   http://www.evolutionnews.org/

   http://www.uncommondescent.com/
   ஆஸிக்கின் பதிவுகள் இத்தளங்களில் இருந்து எடுத்து விட்டு இத்னை குறிப்பிடாமல் பதிவிடுவார். மூமின்களின் குரானே கிறித்த்வ யூத புத்டக்ங்களை காப்பி அடித்து எழுதப்பட்டதால் ,அது போல் கிறித்த்வ தளங்களின் பரிணம் எதிர்ப்பை மூமின்களும் காப்பி அடிப்பதில் வியப்பில்லை.
   அவசியம் பாருங்கள்!!!
   நன்றி

   Delete
 12. ’நாவி’யை பதிவுகளில் இணைப்பது எப்படி?

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள அய்யா,
   வணக்கம் ஒரு படத்தை அதன் இணைய இனைப்புடன் இணைதல்தான். விள்க்குகிறேன் பாருங்கள்.
   1. நாவி இணைய தளம் சென்று அந்த ப்டம் ரைர் கிளிக் செய்த்து சேமிக்கவும். இணைப்புச்சுட்டியையும் காப்பி செய்யவும்.

   http://tamilpoint.blogspot.ca/p/naavi.html


   2. உங்கள் தளத்தில் லாகின் செய்து,
   login-design-layput add a gadet- add a image
   while adding the image kindly add the link.
   Thank you

   Delete
 13. பரிணாமம் பற்றி அவர் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க முனைகிறார்.அவருடைய மாணவர்கள் அதில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக கற்றுக் கொடுகிறார் .பைபிளை படிக்கிறேன் என்பதால் நான் கிரித்தவனாக ஆகிவிட்டேன் என்று சொல் முடியாது.பரிணாம கொள்கையை மதத்துக்கு எதிராக அவர் ஏற்றுக் கொள்கிறாரா?பரிணாம கல்வியை படிப்பவர்கள் அனைவரும் பரிணாமத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல

  ReplyDelete
  Replies
  1. சார்வாகன்///கான் அகாடமி காஃபிர் அகாடமியா என்பதையும் மார்க்க பாதுகாவலர்கள் விளக்க வேண்டுகிறேன்!!!/// இதற்குத்தான் பதில் அளித்துள்ளேன்
   பரிணாமத்தை கற்றுகொடுத்ததினால் அவர் அதை ஏற்றுக் கொண்டதாக கூறமுடியாது

   Delete
  2. சகோ இப்பூ,

   //பைபிளை படிக்கிறேன் என்பதால் நான் கிரித்தவனாக ஆகிவிட்டேன் என்று சொல் முடியாது.//
   நானும்தான் குரானைப் படித்து இருக்கிறேன் என்பதால் மூமின் ஆகிவிடுவேனா!!.

   வஹாபி அல்லாத மூமின்களும் காஃபிர்தானே!!

   நல்ல மூமின் யார் என்று கண்டு பிடிக்கத்தனே சிரியா,பக்ரைன்,இராக்,சூடான் என அனைத்து மூமின் நாடுகளிலும் பாடுபடுகிறார்கள்

   இதெல்லாம் தெரியா சகோ இப்பு!!!!!!!!!!
   நிங்க போட்டுத்தாக்குங்க!!
   நன்றி

   Delete
  3. வஹ்ஹாபி என்றால் யார்? வஹ்ஹாபி அல்லாத முஹ்மின்கள் யார் என்பது தெரியவில்லை.

   ////நல்ல மூமின் யார் என்று கண்டு பிடிக்கத்தனே சிரியா,பக்ரைன்,இராக்,சூடான் என அனைத்து மூமின் நாடுகளிலும் பாடுபடுகிறார்கள்///

   அதற்கு மட்டுமல்ல சாரவாக் அந்த நாடுகிளில் ஜனநாயகம் இல்லாமல் அவர்கள் படும் பாட்டை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.எப்படியாவது அந்த நாட்டில் உள்ள இவர்களது கூளிபடைகளுக்கு ஆயுதங்கள் வழங்கி நாட்டை கைப்பற்றி இவர்களது ஏவலாளிகளை ஜனநாயக பிரதிநிதிகளாக்கி அதன் மூலம் அங்குள்ள எண்ணை யை கபளீகரம் செய்யவேண்டும் ,லிபியாவை அமெரிக்க என்னை கம்பெனிகள் கூறு போட்டாயிற்று .இனி மற்ற நாடுகளிலும் கூறு போட வேண்டும் அதாவது ஜனநாயகத்தை கொண்டுவரவேண்டும்

   Delete
  4. சகோ இப்பூ,

   வஹாபி என்றால் ஆட்டோமான் பேரரசு ஒரு வலிமையான‌ அரசாக இருந்ததை வீழ்த்த சவுதி அரபுக்கள் ,மேலை நாட்டவ்ரோடு சேர்ந்து உருவாக்கியத்தான்.
   முதல் உலக்ப்போரில் ஆட்டோமான் பேரசு தோற்கடிக்கப்பட்டு,அது மேலை நாட்டரிடையே பங்கு போடப்பட்டது. தங்கள்க்கு விசுவாசமான் இபின் சவுத் குடும்பத்திற்கு சவுதி. மெக்க செரீஃப் குடுமபத்திற்கு ஜோர்டான்,இராக் ...

   இப்படி அளித்தனர்.தங்களின் ஏமாற்று வெலையை மறைக்க மத பிரச்சாரம் மிகுந்த பொருள் செலவில் செய்தன,செய்கின்றன‌ மேலை நாட்டு அரபுக் கூடாளிகள்.அதில் இப்புவும் (தெரியாமலேயே) பங்காற்றுகிறார்
   http://surrenderingislam.com/surrendering-islam/end-caliphate

   http://en.wikipedia.org/wiki/Wahhabi

   இதுதான் நட்ந்தது!!!

   Delete
  5. //வஹாபி என்றால் ஆட்டோமான் பேரரசு ஒரு வலிமையான‌ அரசாக இருந்ததை வீழ்த்த சவுதி அரபுக்கள் ,மேலை நாட்டவ்ரோடு சேர்ந்து உருவாக்கியத்தான்.//

   சவூதி அரபுகள் செய்த நல்ல செயல். அதனால் ஆட்டோமான் மதவாதத்தை விட்டு கல்வி உட்பட எல்லா விடயங்களிலும் படிப்படியாக நாகரிகமடைந்து வருகிறது.சாமி கும்பிட மட்டும் தான் அல்லா. மற்றுபடி அல்லா எங்க உடை, உணவு எங்க தனிபட்ட விடயங்களில் தலையிட முடியாது என்ற நிலைபாட்டை நோக்கி நகருகிறார்கள்.அரபு பெயர்களை தவிர்த்து ஆட்டோமானின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்க தொடங்கியுள்ளார்கள்.பரிணாம கல்விக்கு ஆட்டோமானில் மதவெறியர்களால் எதிர்பு வந்த போது பல்கலைகழக (இஸ்லாம் மத) பேராசிரியர் தெரிவித்தார் மரபியல்,biology பரிணாமம் இல்லாம படிபிக்க முடியாது. பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று படிப்பிக்க முடியாது.

   Delete
  6. உதுமானிய பேரரசை ஆங்கிலேயன் ottaman என்று எழுதி வைத்திருக்கிறான் திருநெல்வேலியை டின்னவெளி ஆக்கியது போல

   Delete
 14. சகோ இப்ராகிம் ,
  பரிணாம் கொள்கை என்பது இஸ்லாமுக்கு எதிரானது என்பது சில மதவாதிகளின் தவறான் புரிதல் மட்டுமே. பரிணாமம் என்பது அறிவியல்,அது கடவுள் குறித்தோ,மதம் குறித்தோ எதுவும் சொல்வது .இல்லை.ஆகவே திருக் கான் மதம்,கல்வி இரண்டையும் குழப்புவது இல்லை.த்னது தனிப்பட்ட மத நம்பிக்கை பற்றிக் கல்வித் தளத்தில் எதுவும் கூறவில்லை.
  ******
  பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கையாக ஒருமித்து ஏற்கப்ப்ட்டதால் மட்டுமே உலகின் அனைத்து பல்க்லைக் கழகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. அப்படி இருப்பதால் கல்வித்தளம் நtaத்தும் கான்,கந்த சாமி,கிறிஸ்து தாசன்,கவுதமன் யாராக இருந்தாலும் கற்பிப்பார்கள்.

  நன்றி

  ReplyDelete
 15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
 16. நல்வாழ்த்துக்கள் சகோ
  நன்றி

  ReplyDelete
 17. //நந்தவனத்தான்-
  பெருமைக்குரிய விடயம், இந்தியாவில் தோன்றிய மதங்கள் ஆபிரகாமிய மதங்கள் போல் அல்லாமல் ரொம்பவும் நெகிழ்வுதன்மை உடையன. அவை அறிவியல் கருத்துக்களை உள்வாங்கி தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை//
  அவ்வளவும் உண்மைகள் சகோ நந்தவனத்தான்.

  ReplyDelete
 18. சகோ.சார்வாகன்

  நீங்கள் பரிணாமம் பற்றிய தகவல்களை முடிந்தவரை உறுதி செய்ய விழைகிறீர்கள்...வாழ்த்துக்கள் ..ஆயினும் பரிணாம சகோதரர்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி பல உள்ளனவே...

  கேள்வி : 2

  அடுத்த ப்ரீ ப்ளானை கவனியுங்கள் ...

  இயல்பான வளிமண்டல சூழ்நிலையில் காற்றில் 78.09 சதம் நைட்ரஜன், 20.95 சதம் ஆக்சிஜன், 8.03 சதம் கார்பன்டை ஆக்சைடு, 0.93 சதம் ஆர்கான் காணப் படுகின்றன.

  இங்கு மறந்து போய் கூட காற்றின் விகிதங்களின் அளவு மாறினால் என்ன ஆகும்..???

  * 78 சதவிகிதம் ஆக்சிஜன் இருந்தால் உலகமே தீப்பற்றி கொள்ளும்..விளைவு உலகமே இருக்காது..

  * 78 சதவிகிதம் கார்பன்டை ஆக்சைடு இருந்தால் உயிரினங்களால் சுவாசிக்க தேவையான வாயுவை பெற முடியாது...விளைவு உலகில் உயிரினங்களே இருக்காது..தாவரங்களை தவிர !!!

  காற்றின் அளவு இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தது யார்...???

  உங்களின் பரிணாம விதிப்படி சூழ்நிலைக்கு ஒவ்வாத செயல்கள் நீக்கப்படுவதற்கு கால அவகாசம் இங்கு இல்லை..காரணம் முதல் தோல்வியே ஒன்னுமில்லாமல் ஆகிவிடும்...அடுத்த முயற்சிக்கு ஆளே இருக்காது...

  காற்றின் கலவையின் விகிதம் எப்படி சாத்தியம் ??? உங்களில் யார் புத்திசாலி...

  நன்றி !!!

  ReplyDelete
  Replies

  1. சகோ மீரான்,
   பூமி பரிணமித்த போதே இந்த வாயுக்கள் இதே விகிதத்தில் உருவானதா? இல்லையே!!. வளிமண்டலமும் மாற்றம அடைந்தது. இப்போதைய சூழல் வளி மண்டல விகிதத்தை மாறி விடலாம்.இதன் முதல் காரணி அரபு நாடுகளின் எண்ணெய் சார் பொருளாதர முறையே!!!

   *********

   நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பள்ளிப் பாட நூல்களிலெயே விடை உண்டு.பரிணாமம் என்பது உயிரிக் குழுக்களின் மாற்றம்,ஒரு உயிரிக்குழு உரு அள்விலும்,இனவிருத்தி செய்ய இயலாத சிற்றினங்களாக் பிரிவதுமே அனைத்து உயிரிகளும் பரிணமிக்க காரணம்.
   பரிணாம நிரூபிக்க‌
   ஜீனோம் மாற்றங்கள்
   1) உருமாற்றம் 2) சிற்றினங்கள் தோன்றுதல்
   உருவாக்குகின்றன என ஆய்வுசாலைகளில் பரிசோதிக்கப் பட்டு விட்டன.

   ஆகவேதான் அறிவியலில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

   http://www.youtube.com/watch?v=OaiAh-V0C2c

   ********
   பாருங்கள் குரானில் அல்லாஹ் சொன்னபடி நெருங்கிய உறவில் திருமணம் செய்யும் மூமின்களின் தலைமுறையினர் மூளை சரியாக வளர்ச்சியுறாது என்பதும் பரிசோதிக்கப்பட்ட உண்மை.
   பாருங்கள் பாகிஸ்தானில் இப்படிக் குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன.

   http://news.bbc.co.uk/2/hi/south_asia/122670.stm

   orld: South Asia

   The rat children of Pakistan

   Richard Galpin reports from Pakistan where, according to human rights groups, hundreds of young children are being exploited because of an ancient fertility tradition that leaves many children deformed and sold into begging.


   இதுவும் பரிணாமத்தின் நிரூபணமே

   Delete
  2. சகோ.சார்வாகன்

   //நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பள்ளிப் பாட நூல்களிலெயே விடை உண்டு.//

   கடைசி வரை பதில் சொல்லவில்லையே சகோ..செப்டிக் டேன்க் சுத்தம் செய்ய போய் இறந்த சம்பவங்கள் உண்டு..ஏன் அங்கு அதிகப்படியான மீத்தேன் வாயு உருவாக்கி சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை மிகைத்ததே !!!

   இங்கு பரிணாம மாற்றம் எல்லாம் உயிரினங்களுக்கு உதவாது சகோ.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பது போல்தான்...அதிகம் ஆனாலும் ஆபத்து ...குறைவு ஆனாலும் ஆபத்து....கத்திமேல் நடப்பது போன்றே ..!!!

   எல்லாமே பிளான் ...உயிரினங்கள் வாழ வேண்டும் என்ற ப்ளான்..

   தன படைப்பை பற்றி அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்....

   " 67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

   67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?

   67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். "

   நன்றி !!!

   Delete
  3. @ நாகூர் மீரான்

   nanpare, yenakku paiyaalaji paththi yethuvum theriyaathu, saarvaagan purudaa viduraar yenpathu mattum theriyum. thayavu seithu டார்வின் வாதிகளின் வாதங்களில் உள்ள ஓட்டைகளைப் பற்றி எங்கு படித்தால் தெரிந்து கொள்ளலாம் எனச்சொல்ல முடியுமா?

   Delete
  4. சகோ மீரான் தோன்றிய உயிரிஅங்களில் 95% சூழலுக்கு பொருந்தாமல் மறைந்து விட்டன.சூழல் மாறுகிறது,அதற்கேற்ப மாறும் உயிரிகள் வாழ்கின்றன்.மாறாதவை அழிகின்றன.

   ********
   குரானும் இதற்கு முந்தைய புத்த்கங்களின் கருத்துகளின் பரிணாம் வளர்ச்சி மட்டுமே.
   அரபுக்களின்அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட மதமே இஸ்லாம்.

   ஆகவே குரான் வசனம் சொல்லி ஒன்ரும் செய்ய முடியாது. வேண்டுமான்ல் சிரியாவில் போரிடும் மூமின் பிரிவுகளிடம் வசனம் சொல்லி சண்டையை நிறுத்த முடியுமா?
   குரானை வைத்து மத்வாதிகள் பிழைப்பு நடக்கும் அவ்வளவுதான்.

   குரானும் ஒரு புத்த்கம்,இஸ்லாமும் ஒரு மதம்

   நன்றி!!!

   Delete
  5. சகோ.ஜெயதேவ் தாஸ்

   நான் எங்கும் இதற்காக படிக்கவில்லை சகோ.நம் சிந்தனையில் தோன்றுவதையே சொல்கிறேன்...பரிணாமம் குறித்த தகவல்களை பெற எதிர்குரல் ஆசிக் அஹமத்,கார்பன் கூட்டாளி ,இவர்களின் பதிவுகளை பாருங்கள் சகோ..ஒரு ஐடியா கிடைக்கும்... இப்ப அடுத்து சார்வாகன் அவர் வாயினாலேயே மாட்டுகிறார் பாருங்கள் ...

   நன்றி !!!

   Delete
  6. சகோ.சார்வாகன்

   //சகோ மீரான் தோன்றிய உயிரிஅங்களில் 95% சூழலுக்கு பொருந்தாமல் மறைந்து விட்டன.சூழல் மாறுகிறது,அதற்கேற்ப மாறும் உயிரிகள் வாழ்கின்றன்.மாறாதவை அழிகின்றன.//

   சூழலுக்கு பொருந்தா உயிர்கள் என்பது சூழலுக்கு தகுந்தவாறு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இயலாதவையே ...அழிந்து விடக்கூடியவையே !!! அல்லவா...??

   * உலகில் பல உயிர்கள் பசியால் மடிகின்றன.. அப்படியென்றால் உங்களது பரிணாமம் முதலில் பசியை அல்லவே மாற்றி இருக்க வேண்டும்..பசி இல்லாத உயிர்கள் உலகில் உண்டா..??ஏன் பசியை உங்கள் பரிணாமம் மாற்றவில்லை ???

   வயிற்றுக்காக தானே உலகில் பல தீமைகள் ...உங்கள் பரிணாமம் சதி செய்து விட்டதே சகோ.!!!

   நன்றி !!!

   Delete
  7. சகோ மீரான் ,
   மாற்றங்கள் சூழல் பொறுத்தவை ,அப்படி மாறக்கூடிய்வை வாழ்கின்றன. ஒரு உயிர் என்பது இனவிருத்தி செய்யக்கூடிய, ஆற்றலை உட்கொண்டு வாழ்வதும் ஆகும்..
   பரிணாமம் என்பது த்லைமுறைரீதியான மாற்றம்.ஒரு த்லைமுறையில் சில
   மாற்றங்கள் மட்டுமே கண்ணால் பார்க்க இயலும்.

   உணவு,காற்று,நீர் இல்லாமலெந்த உயிரும் வாழ முடியாது. உணவு இல்லாமல் அழியும் எவ்வளவோ உயிரின‌ங்கள் உண்டு.பசி இல்லாத,என்றும் வாழும் உயிரின‌ங்கள் தோன்ற இயலாது.

   இப்படி உணவு உண்ணாத ,எப்போதும் வாழும் அல்லாஹ் இருக்க முடியாது!!

   ஆகவே பசி இல்லாத உயிரிஅங்கள் தோன்றி இருக்க வேண்டும் என்பது தவறு. கிடைக்கும் உணவை சீரணிக்க இயலும் உயிரிகள் வாழும். இல்லையேல் அழியும்.
   பரிணாமம் என்பது எப்படி நடந்தது என்பதன் விள்க்கம்,ஏன் நடந்த்து என்னும் மத புத்த்க விள்க்கம் அல்ல!!
   http://en.wikipedia.org/wiki/Adaptation
   மனிதர்களால் இயற்கைசூழல் அழிக்கப்பட்டு மறைந்த உயிரிஅங்களும் பல்ப்பல.
   தான் படைத்த எவ்வள்வோ உயிரின‌ங்கள் அழிவதை இருந்தல் அல்லாஹ் தடுக்க வேண்டுமா இல்லையா?

   95% உயிரினங்கள் அழிந்தது உண்மை.ஆகவே அல்லாஹ் என்பது முக்மது(சல்) அவர்களின் கற்பனை!!!


   நன்றி

   Delete
  8. சகோ.சார்வாகன்

   இன்னும் பல தலைப்புகளில் முன்கூட்டிய திட்டமிடல் பற்றிய ப்ரீ பிளான் விவாதங்கள் தொடரும்..இன்ஷா அல்லாஹ்..!!! நம் விவாதங்களை பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் சகோ. பரினாமமா ?படைப்பு வாதமா என்று ? !!!

   //மனிதர்களால் இயற்கைசூழல் அழிக்கப்பட்டு மறைந்த உயிரிஅங்களும் பல்ப்பல.
   தான் படைத்த எவ்வள்வோ உயிரின‌ங்கள் அழிவதை இருந்தல் அல்லாஹ் தடுக்க வேண்டுமா இல்லையா?//

   மனிதன் கை பட்டால்தான் நாசமே தவிர மனித தொடர்பு அற்ற எந்த உயிர்கள் பசியால் இறந்ததை கண்டீர்..காலையில் வெறும் வயிறுடன் செல்லும் பறவைகள் மாலையில் வயிறு நிரம்பி வருவதை நீங்கள் காண வில்லையா !!! ஜியாக்ரபிக் சேனலில் பல உயிர்களை பார்க்கிறோம்..எல்லாமே எப்படி கொளுத்து உள்ளது..எப்படி உணவு கிடைத்தது..ஏனெனில் அங்கு மனித குறுக்கீடுகள் இல்லை..

   அப்ப மனிதர்கள் செய்யும் தவறினால் உயிர்கள் மடிகின்றனவே..???அல்லாஹ்வின் இயலாமையா.???

   "(நபியே) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப்பற்றி அல்லாஹ் பாராமுகமாய் இருக்கின்றான் என நீர் எண்ணவே வேண்டாம். (அவர்களை வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம் திறந்த கண் திறந்தவாறே இருந்துவிடக் கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான். (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது. (தறி கெட்டுப் பல கோணங்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது. அதனையே நோக்கிக் கொண்டிருக்கும் இவர்களுடைய இருதயம் திக்பிரமை கொண்டுவிடும். (அல்குர்ஆன் 14:42-43) "

   எல்லாமே ஒரு கணக்கு தான்..

   நன்றி !!!

   Delete
  9. சகோ மீரான்,
   1//இன்னும் பல தலைப்புகளில் முன்கூட்டிய திட்டமிடல் பற்றிய ப்ரீ பிளான் விவாதங்கள் தொடரும்..இன்ஷா அல்லாஹ்..!!! நம் விவாதங்களை பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் சகோ. பரினாமமா ?படைப்பு வாதமா என்று ? !!//
   ஏறக்குறைய குரானில் அல்லாஹ் வைக்கும் வாதங்களும்,ஹதிதில் முகமது(சல்) தான் இறைத் தூதர் என நிரூபிக்க வைக்கும் வாதங்களில் இருந்து நம்ம மீரான் வரைக்கும் ஒரே மாதிரி இருக்கிறது என்பதை படிக்கும் காஃபிர் நண்பர்கள் அறிவார்கள். ஆகவே மீரானை வைத்துதான் பல் மூமின் விளக்கங்கள் அறிய வேண்டி உள்ளது.

   அல்லாஹ்வுக்கு ப்ரீ ப்ளான் பண்ணத் தெரியாது!. 23வருடங்களில் முக்மது(சல்)க்கு வரும் விருப்பம்,சிக்கலுக்கு ஏற்ப வஹி வரும்.
   கல்யாணம் கட்டணுமா, கொள்ளை அடிக்கனுமா, யாரையவது போட்ட்டுத் தள்ளனனுமா உடனெ வசனம் வரும்.இப்போது மீரான் பரிணாம்த்தை எதிர்க்கிறேன் என்று தோன்றுவதை எல்லாம் கேட்கிறார் அல்லவா அப்படித்தான்.
   ******
   //மனிதன் கை பட்டால்தான் நாசமே தவிர மனித தொடர்பு அற்ற எந்த உயிர்கள் பசியால் இறந்ததை கண்டீர்..காலையில் வெறும் வயிறுடன் செல்லும் பறவைகள் மாலையில் வயிறு நிரம்பி வருவதை நீங்கள் காண வில்லையா !!! ஜியாக்ரபிக் சேனலில் பல உயிர்களை பார்க்கிறோம்..எல்லாமே எப்படி கொளுத்து உள்ளது..எப்படி உணவு கிடைத்தது..ஏனெனில் அங்கு மனித குறுக்கீடுகள் இல்லை..//
   நாம் உலகில் பரிணமித்த 95% உயிர்கள் மறைந்தனை என்னும் அறிவியல் சான்று பற்றி கூறுகிறோம். இவர் ஜியோகிராஃபிக் சேன்னலில்கொளுத்து இருக்கும் பறவை பற்றிக் கூறுகிறார்.

   மனிதன் நாகரிக மடைந்த பின்[20,000 ஆண்டுகள் முன்] இயற்கை சூழலை மாற்றுகிறன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதன் முன்பும் பல் உயிர்கள் சூழல் மாற்றத்தால் அழிந்து இருக்கின்றன.அப்படி நடந்த முக்கிய உயிரின மறை வுநிகழ்வுகள் விக்கி பிடியா சுட்டியாக

   உயிரின மறைவு 95% இல்லை.உலகில் அப்படி நடந்து இருந்தால் அல்லாஹ்வின் ப்ரீ ப்ளன் என்பது பொய் ஆகி விடும்.ஆகவே மூமின் விஜ்ஜானி ஆஸிக் அகமதிடம் சொல்லி இவ்விடயத்தை பதிவிட சொல்லுங்கள்.
   http://en.wikipedia.org/wiki/Extinction
   Through evolution, new species arise through the process of speciation—where new varieties of organisms arise and thrive when they are able to find and exploit an ecological niche—and species become extinct when they are no longer able to survive in changing conditions or against superior competition. The relationship between animals and their ecological niches has been firmly established.[2] A typical species becomes extinct within 10 million years of its first appearance,[3] although some species, called living fossils, survive virtually unchanged for hundreds of millions of years. Most extinctions have occurred naturally, prior to Homo sapiens walking on Earth: it is estimated that 99.9% of all species that have ever existed are now extinct.[3][4]

   உடனே மிகத் தெளிவாக மறுக்கிறோம்.
   நான் நெடு நாட்களாக அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி.

   உயிரிகளில் தோற்றம் வளர்ச்சி பற்றி இஸ்லாமில் கருத்து என்ன?

   ப்ரீ ப்ளான் மட்டும் என்றால் உலகில் ஓவொரு உயிரியும் தோன்றிய கால கட்டமாக் அறிவியல் வரையறுப்பினை ஏற்கிறீர்களா?

   ஒவ்வொன்றும் மூமின் பதிவு,காஃபிர் பதில் என ஆவணப் படுத்தவே விழைகிறோம்.

   மறுமை நாளில் மட்டுமே நியாயம் கிடைக்கும் என்பதை ம