Friday, November 23, 2012

உண்மை கண்டுபிடிக்கும் கணிதம்: பேயிஸ் கோட்பாடு[Bayes Inference]-Part 1




வணக்கம் நண்பர்களே,
கணிதம் ,அறிவியல் சார்ந்து பதிவுகள் எழுதி நாளான படியால் இப்பதிவில் ஒரு முக்கிய கணிதக்  கோட்பாடு அறிவோம். இதன் பயன்பாடுகள் மிகவும் அதிகம்.அது என்ன சகோ உண்மையை அறிய ஒரு கணிதமா??. நீங்க சும்மா அடித்து விடுரீங்க  ன் ஆத்திக சகோக்கள் சொல்வதை உண்மையாக்கி விட்டீர்களே என்கிறீர்களா?

உண்மை கண்டுபிடிக்க ஒரு கணித கோட்பாடு இருக்கிறது என நான் சொல்வது உண்மை என நிரூபிக்க வேண்டுமா?

ஒரு செய்தியை பலர் பலவாறு கூறினாலும் நாம் பலமுறை எது சரியாக இருக்கும் வாய்ப்பு என எப்படி அறிகிறோம்??.

அறிவியலில் (ஏற்கப்படும்) உண்மை என்றால் என்ன?

ஒரு நிகழ்வின் மீதான அளவீட்டு சான்றுகள் கொண்டு  விளக்குவதற்கு பல கொள்கையாக்கங்கள் சாத்தியப் படும். இபோது எந்த விளக்கம் அதிகம் பொருந்துகிறது எனபதே அறிவியலின் படி உண்மை என ஏற்கப்படும். எப்படி அது கண்டுபிடிக்கப்படுகிறது?

நாம் அறிவியலில் ஏற்கப்படுகிறது,அது பல்கலைக் கழகங்களில் கற்பிக்கபடுகிறது என பரிணாமத்தை பற்றிக் கூறினாலும் அதெல்லாம் சும்மா என  மறுக்கும் சகோக்களை விட்டு விடுவோம்நம் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் கற்கும்  (உண்மையிலேயே சிந்திக்கும்) சகோக்களுக்கும் எப்படி ஒரு நிகழ்வின் விளக்கத்தில் அதிகம் பொருந்துவது கண்டுபிடிக்கப்படுகிறது என்ற சந்தேகம் வந்தே ஆகவேண்டும்.

எப்போதும் எதையும் கேள்வி கேட்கும் சிந்தனை வருவதே அறிவின் பரிணாமவளர்ச்சி என்கிறோம். தெளிவாக அறிந்த ஒன்றை இன்னொருவருக்கும் விளக்கும் திறன் பெற வேண்டும். குழப்பங்களையும் ,பிரச்சினைகளையும் தலைமுறைரீதியாக கடத்தும் செயல்கள் இயற்கைத் தேர்வில் வெற்றி பெறுவது இல்லை என்பது வரலாறு கூறும் உண்மை.

ஆகவே இப்படி கோட்பாடுகளின் பொருந்தும் தன்மையை சான்றுகள் மீது , நிகழ்த்கவு கொண்டு ஆராயும், முடிவு சொல்லும் கணித முறை உண்டு.

பயேஸியன் யூக முறை[Bayesian inference] என்பது இதன் பெயர்.

இது அறிய கொஞ்சம் நிகழ்தகவு[probability] கணிதம் அறிய வேண்டும்.
ஒரு நாணயம் கீழே கிடக்கும் போது உள்ள இருவாய்ப்புகளில்[தலை,பூ] ஏதோ ஒன்று நிகழலாம்.
உள்ளமொத்தவாய்ப்புகள் =2,
தலை விழும் வாய்ப்பு 1
ஆகவே தலை விழும் வாய்ப்பு =1/2. ஒரு நிகழ்வின் சாத்தியக் கூறை எண் அளவில் [quantitative] கூறுவதே நிகழ்தகவும். இது பூச்சியத்தில் இருந்து 1 வரை உள்ள பின்ன மதிப்பு ஆகும்.
A என்னும் நிகழ்வின் நிகழ்தகவு P(A) என குறிப்போம்.
0≤P(A)≤1
P(A)=
நிகழ்தகவு 0 எனில் அந்த நிகழ்வு நடக்காது. நிகழ்தகவு 1 எனில் நிகழ்தகவு உறுதியாக நடக்கும்.
இதே ஒரு பகடை உருட்டும் போது  எண் '1' விழும் வாய்ப்பு 1/6
எண் 3 விழும் வாய்ய்பு 1/6

வாழ்வின் பல நிகழ்வுகளில் நாம் விரும்பும் வாய்ப்புகள் சில உண்டு. அதில் ஏதெனும் ஒன்றுவந்தால் ஏற்றுக் கொள்வோம். இப்படி இரு அல்லது அதற்கு மேற்பட்ட ஏடோ ஒன்று நிகழும் நிகழ்த்கவை எப்படி கண்டுபிடிப்பது?

இத்னை கணித மொழியில் சேர்ப்பு(union) என்கிறோம். சேர்ப்பு என்றால் கூட்டல்தான்,தனிப்பட்ட நிகழ்த்கவுகளை கூட்டினால் போகிறது என்கிறீர்களா??

இது  பலமுறை உண்மை ஆகாது,

இபோது பகடையில் எண் 1 விழுந்தால் எண் 2 இருக்காது. இரண்டும் ஒன்றை ஒன்று சராத நிகழ்வுகள்.[mutually exclusive].

ஆனல் சில நிகழ்வுகளில் இரு செயல்களும் நிகழும் பொதுவான விடயமும் இருக்கும். இயற்கையில் ஒவ்வொன்றும் தொடர்புடையதே. தொடர்பின் அளவு மாறலாம்.

ஆகவே இரு அல்லது மேம்பட்ட  செயல்களில் ஏதோ ஒன்றாவது நிகழும் நிகழ்தகவு அறிவோம்.
முதலில்A,B  இருசெயல்கள் மட்டும் அறிவோம்.பிறகு பொதுப்படுத்தலாம்.

P(A)=A  நிகழும் வாய்ப்பு
P(A')=அல்லாதது  நிகழும் வாய்ப்பு
Compliment of Set A
P(A)+P(A')=1
ஒரு செயலின் நிகழும் வாய்ப்பும்,நிகழா வாய்ப்பும் ஒன்றுக் கொன்று எதிரானவை.
P(B)=B  நிகழும் வாய்ப்பு
P(B')=B அல்லாதது  நிகழும் வாய்ப்பு

P(AUB)=P(A)+P(B)-P(A∩B).....                                                (1)
P(AUB)= A அல்லது B  நிகழும் வாய்ப்பு.

Union of Set A and Set B diagram
P(A∩B) = A மற்றும்  B  இணைந்து நிகழும் வாய்ப்பு.
Intersection of Set A and Set B




மேலெ காட்டப் பட்ட படத்தை நன்கு உள்வாங்கி கொள்ளுங்கள்.என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள்.இரண்டுக்கு மேற்பட்ட விடயங்களுக்கும் கீழே காட்டிய படி இப்படம் விரிவு படுத்தப் படலாம் என்றாலும் நாம் இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்[இதில் உள் குத்து எதுவும் இல்லை ஹி ஹி] என ஏற்று எளிமையான‌ நோக்கில் கற்போம்.



இப்போது ஒரு எ.கா பார்த்து விட்டு அடுத்த பகுதிக்கு செல்வோம்.
ஒரு பகடை ஒருமுறை உருட்டும் செயலை எடுப்போம்.

மொத்த நிகழ்வுகள் E ={1,2,3,4, 5,6}. மொத்தம் 6 வாய்ப்புகள் n(E)=6.

 A என்பவருக்கு பிடித்த வாய்ப்புகள் ={1,2,3} i.e n(A)=3

 B என்பவருக்கு பிடித்த வாய்ப்புகள் ={2,4,6} i.e n(B)=3

என எடுப்போம்.மேலே கற்ற அனைத்து செயல்களின் நிகழ்தகவை கண்க்கிடுவோம்.

P(A)=n(A)/n(E)=3/6

P(A')=1-3/6=3/6,,,...A'=[4,5,6]

P(B)=n(B)/n(E)=3/6,

P(B')=1-3/6=3/6,,...B'=[1,3,5]

AUB=[1,2,3,4,6] n(AUB)=5
[பொதுவான உறுப்பு '2' ஒருமுறை மட்டும் எழுதினால் போதும்]

P(AUB)=5/6

பொதுவான உறுப்பு

(A∩B) =[2]...n(A∩B)=1

P(A∩B)=1/6


சமன்பாடு (1) ல் பிரதி இட்டு பரிசோதித்தால் இது சரிபார்க்கப்படும்.

P(AUB)=P(A)+P(B)-P(A∩B)

5/6=3/6+3/6-1/6


இது என்ன சகோ கம்ப சூத்திரம் சேர்ப்பில் பொதுவானதை ஒருமுறை மட்டுமே இட்டோம், வெட்டில் பொதுவானதை மட்டும் இட்டோம்.தனித்தனியாக் கூட்டும் போது பொதுவானது இருமுறைவரும்,அதில் வெட்டை கழித்தால் சேர்ப்புதானே வரும்.

அப்போது சரியாகத்தானே வரும். ஆம் சகோ இப்படி நாம் செய்யும் செயலைத்தான் கணிதம் ஆக்குகிறோம். இயற்கை(மனிதன்) செயல்களை விளக்குவதே அறிவியல்.சும்மா கண்ட (மொழி) எழுத்துகள்,சூத்திரம்,குழப்பமான விளக்கம் போட்டு சாமான்ய மக்களை புரியவிடாமல் செய்யும் மேட்டுக்குடியினரின் சதி சகோ!!!

இங்கும் அப்படியா என்றால் அப்படித்தான். ஹி ஹி


சரி இப்போது  நிபந்தனை நிகழ்தகவு[Conditional probability] என ஒன்று அறிவோம்,அதாவது இரு செயல்கள், ஒரு செயல் B நடந்து இருக்கும்போது அடுத்த செயல் A நிகழும் நிகழ்தகவே இது  P(A/B)என குறிக்கப்படுகிறது.இது ஒன்னுமில்லை சகோ, ஒரு செயலில்,[அடுத்த செயலுக்கு] பொதுவான செயல் எவ்வளவு எனப் பார்க்கிறோம்.

Conditional probability

Conditional probability is the probability of some event A, given the occurrence of some other event B. Conditional probability is written \mathrm{P}(A \mid B), and is read "the probability of A, given B". It is defined by[18]
\mathrm{P}(A \mid B) = \frac{\mathrm{P}(A \cap B)}{\mathrm{P}(B)}.\,


P(A/B)=(1/6)/(3/6)=1/3


P(B/A)=(1/6)/(3/6)=1/3


P(AUB)=P(A/B)+P(B/A)+P(A∩B)=1/3+1/3+1/6=5/6!!!!!


இது எப்படி வந்தது??

சிந்திக்க மாட்டீர்களா???

கற்ற அனைத்து விடய‌ங்களும் சுருக்கமாக


Summary of probabilities
EventProbability
AP(A)\in[0,1]\,
not AP(A^c)=1-P(A)\,
A or B\begin{align}
P(A\cup B) & = P(A)+P(B)-P(A\cap B) \\
P(A\cup B) & = P(A)+P(B) \qquad\mbox{if A and B are mutually exclusive} \\
\end{align}
A and B\begin{align}
P(A\cap B) & = P(A|B)P(B) = P(B|A)P(A)\\
P(A\cap B) &  = P(A)P(B) \qquad\mbox{if A and B are independent}\\
\end{align}
A given BP(A \mid B) = \frac{P(A \cap B)}{P(B)}\,



சரி நிபந்தனை நிகழ்தகவில் இருந்தே பயேசியன் யூக முறை கற்க வேண்டும்.
அடுத்த பகுதியில் பார்ப்போம்.கேள்விகளுக்கு விடை அளிக்க காத்திருக்கிறோம்.

நன்றி!!!
Thanks to
http://unconsideredtrifles.blogspot.com/2010/08/operations-on-crisp-sets.html

http://en.wikipedia.org/wiki/Probability

40 comments:

  1. இம்புட்டுத்தானா...?

    இதை கணம் என்போம்....வெட்டு கணம் என்போம்.

    நான் தமிழில் படித்த கணக்கு....இப்ப மறந்து போச்சு.

    ஆனா அங்ககூட வெட்டு இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராவணன்,
      கணிதம் என்பதும்,பயன்பாட்டுடன்,எளிய முறையில் கற்றால் நன்றாக இருக்கும்.அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் எப்படியவது கணிதப்புதிர் தீர்த்து மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே கற்பிக்கப் படுவதால் அதன் மீதே வெறுப்பு ப்லருக்கு வந்து விடுகிறது.

      இந்த குறியீடுகளே இல்லாமல் கணிதம் சொற்களில் மட்டும் சொனால் அனைவருக்கும் புரியும்.இதை ஏற்கென்வே பெர்ட்டினான்ட் ரஸ்ஸல் த்னது புத்த்கத்தில் செய்தார். ஆனால் தமிழில் முயற்சி செய்ய வேண்டும்.

      ஆம் நீங்கள் சொல்வது போல் இந்த விடயங்கள் அனைத்தும் கணங்கள் எனப் படித்து இருப்போம். நிபந்தனை நிகழ்தகவை மட்டும் நன்கு உள்வாங்குங்கள். அதில் இருந்து அடுத்த பதிவில் தொடர்வோம்.

      நன்றி!!!

      Delete
  2. சுவாரஸ்யமான பதிவு,

    படித்த வரை ஏதோ புரிந்தது. இன்னும் கொஞ்சம் ஆழமாக போக வேண்டியுள்ளது.

    ஏற்கனவே சமரசம் உலாவும் இடமே என்று டாஸ்மாக் கடை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு.

    இந்த பதிவின் மூலம் சூதாட்டமும் நடத்தப்படுகிறது என்று வராமல் இருந்தால் நல்லது.

    புரிந்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரேன்,
      சகோ இராவணனுக்கு இட்ட பின்னூட்டம் படித்து இதை தொடருங்கள்.எதையும் எளிமையாக படிப்படியாக கற்று, சிக்க்லான விடயம் அறிவதும் பரிணாமம்தானே.

      நாம் இதில் உறுதியாக நிற்கிறோம்.

      அடுத்தபதிவு பற்றி கொஞ்சம் கோடிட்டு காட்டுகிறேன்.

      அறிவியல் உண்மை என்பது சான்றுகளுக்கு அதிகம் பொருந்தும் விளக்கம்.

      சான்று என்பது ஏற்கென்வே உண்மை என ஐயந்திரிபர நிரூபிகப்பட்ட விடயம்.

      ஆனால் விள்க்கம் என்பது சான்று உண்மையாக் இருக்கும் பட்சத்தில் எவ்வள்வு பொருந்தும் வாய்ப்பு?

      இப்போது நிபந்த்னை நிகழ்த்கவு படியுங்கள். மூளையில் ஒரு பொறி தட்டும்!!
      இதுதான் அதுவா?? எப்பூடீ ????

      இதுவே ந(மது) பா(போ)தையாகும்.

      ஆகவே ந(மது) சரக்கை ப(அ)டித்து அனைவரும் மகிழ்ச்சி அடையவே விரும்புகிறோம்.

      காக்டெயில் போல்,அறிவியல்,கணிதம்,பரிணாமம்,நாத்திகம்,சமூகவியல் என நன்றாக கலக்குகிறோமா இல்லையா!!!

      Delete

    2. ஆமாங்க சரக்கு வேணும்னா இங்க வாங்க, சைடுடிஷ் வேணும்னா கோடாங்கி பக்கம் போயிடுங்க. இசெ நல்ல நான்வெஜ் சைடிஷா பண்ணி போடுவாரு!

      Delete
    3. வாங்க சகோ நந்தவனம்,
      நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்.
      நன்றி!!!

      Delete
  3. சார்வாகன் நீங்க இயற்பியல் ஆசிரியரா ?

    மூணாப்பிலிருந்தே எனக்கு இந்தக் கணக்கு என்ற பிணக்கு எப்போதுமே தீராத தலைவலியாக இருந்தது. இது பத்தாம் வகுப்பில் வருவதாக ஞாபகம். ஓரளவுக்கு புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. சகோ தமிழ்,
      கவலை வேண்டாம்.
      மகாகவி பாரதி போல் நீங்களும்.
      கணக்கு,மணக்கு,ஆமணக்கு!!
      ஹ ஹா ஹா
      நன்றி!!

      Delete
    2. நீங்க என்ன நேரடியா மக்குன்னு சொல்லிருக்கலாம் ஹா ஹா !!

      Delete
  4. தமிழானவன்,

    எனக்குத் தெரியும் அவர் யாரென்று..! உங்க ஈமெயில் கொடுங்க சொல்கிறேன்!

    ReplyDelete
  5. தமிழானவன்,

    இங்கேயே சொல்லிவிடுகிறேன்.

    மனிதன்...! ஹி௧ ஹி!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நம்பள்கி,

      நன்றி!!!

      Delete
    2. நம்பள்கி !!

      ஹா ஹா

      நான் கணக்கில் புலிகளை எப்போதும் மனிதர்களில் உயர்வானவராகக் கருதுவது வழக்கம்தான்.

      //மனிதன்.//

      அதையும் தாண்டிப் புனிதன் இவர்.

      Delete
    3. சகோ தமிழானவன்,

      அறிவு என்பது தொடர் தேடல்,பரிசோதித்தல்,உணர்தல்,அப்படி அறிந்ததை பகிர்தல். இதில் எந்த துறையாயின் என்ன?. தாய்மொழி தமிழில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரம் அளிக்கும் பணியிலேயே பதிவர் அனைவரும் முயல்கிறோம்.அதில் நானும் உங்களைப் போல் ஒருவன்.
      *************
      என்னைப் பற்றி சொல்ல வேண்டும் எனில் பரிணாம வளர்சியில்,ஒரு விபத்தாக உருவான பகுத்தறியும் உணர்வு கொண்ட ஒரு விலங்கு இன‌த்தான் என்றே நினைக்கிறோம்.

      மத இன,சாதி,மொழி,ஒழுக்க‌ மேட்டிமைகளுக்கு இங்கு இடமில்லை. புனித முகமூடிகள் யாருக்கும் இருக்க கூடாது என்வே முயற்சிக்கிறோம்.

      நன்றி

      Delete
  6. தமிழானவன்...[[நான் கணக்கில் புலிகளை எப்போதும் மனிதர்களில் உயர்வானவராகக் கருதுவது வழக்கம்தான்.]]

    அப்ப நானும் உயர்வானவானவன் தான்!

    S. S. L. C - ல் விஞ்ஞானத்தில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும், கணக்கில் அதை விட அதிக மார்க் வாங்கியதால், என்னை P.U.C - ல் அந்த ப்ரின்சி கணக்கு பிரிவுக்கு போக சொன்னார்.

    அப்போ, கணக்கு வராதவன் தான் டாக்டருக்கு படிப்பான்; அப்படி ஒரு முட்டாள் தனமான சிந்தனை நன்கு படித்தவர்களிடமே!

    பிறகு எங்க ப்ரின்சிக்கு நான் புரியவைத்தேன் நான் நல்லா கணக்கும் பண்ணுவேன் என்று...!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நம்பள்கி,
      நம்க்கு துறை வித்தியாசம் மறந்து விட்டது. இயற்கையின் நிகழ்வுகளை விளக்கும் எதுவும் சிறப்பே.இலக்கியம் ஆனாலும் சரி, பேரண்டவியல்,அல்லது பரிணாமம் ஆனாலும் ஒன்றுதான்.

      ****
      உங்க கணக்குதான் பதிவுல‌கம் முழுதும் பிரசித்தி ஆயிற்றே. போடும் எம்.ஆர்.ராதா பாணி புதிரில்[பதிவு] குழம்புகிறார் பல்ர் ஹா ஹா ஹா

      நன்றி

      Delete
  7. அறிவியல் உள்ள ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் அறிவு!

    இது எப்படியிருக்கு?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நம்பள்கி,
      மிகச்சரி .
      //அறிவியல் உள்ள ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் அறிவு!//
      I can prove this!!

      அதாவது நாம் அறிவியல்,ஆன்மீகம் என்பதற்கு என்ன விள்க்கம் கொடுக்கிறோம்.

      அறிவியல்: சான்றுகளின் மீதான பொருந்தும் விள்க்கம்.

      ஆன்மீகம்: சான்றுகள் அற்ற‌ நம்பிக்கை

      இந்த வரையறையில் இத்னை அணுகுவோம்!!!

      அறிவியல் உள்ள ஆன்மீகம்=சான்றுகளின் மீதான விளக்கம் உள்ள சான்றுகள் அற்ற‌ நம்பிக்கை=முடம்,

      காமெடியாக இல்லை!! ஆக்வே அறிவியலும் ஆன்மீகமும் நேர் எதிர்!!!

      ஆன்மீகம் அற்ற அறிவியல்=சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம் உள்ள சான்றுகள் உள்ள நம்பிக்கை.[ மைனஸ்* மைனஸ்=ப்ளஸ் ஹி ஹி]=அறிவு!

      அறிவியல் அற்ற ஆன்மீகம்= சான்றுகளின் மீதான பொருந்தாத‌ விளக்கம் உள்ள சான்றுகளே அற்ற நம்பிக்கை!!! ஹி ஹி worst case

      எப்படிப் பாத்தாலும் சரியா வரலையே!!
      ஹி ஹி

      Thus it is proved!!!!!!!!

      டிஸ்கி: மத புத்த்கம் படிப்பதால் நம்க்கு வார்த்தை விளையாட்டு அத்துப் படி!!

      நன்றி
      .

      Delete
  8. Dear brother good introduction about probapility . Write more mathematics content in tamil , we want to learn more from you . Now days i am reading frome mobile so only didnt feedback

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ குரு,
      இனிமேல் நிறைய கணிதம் கற்போம்.சரியா!!!

      நன்றி

      Delete
  9. //அறிவியல் உள்ள ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் அறிவு!///

    அறிவியல் உள்ள ஆன்மிகம் -சமுதாய ஒழுக்கம் ,கட்டுப்பாடான வாழ்கை .

    ஆன்மிகம் இல்லாத அறிவு -தறி கெட்ட வாழ்க்கை

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ வாங்க,
      ஆமாம் நீங்க நம் கூட கடந்த இரு ஆண்டுகளாக செங்கொடு தளத்தில் இருந்தே விவாதித்து வரும் சகோ இப்ராஹிம்தானே. அவர் சவுதியில் இருப்பதால சில முறை கூறியதால்தான் நீங்கள் சவுதியில் இருப்பதாக நான் கூறினேன்.

      நீங்கள் அவர் இல்லை எனின் நீங்கள் சவுதியில் வசிப்பதாக நான் கூறியது தவறு. மன்னிக்கவும்.
      ********
      இப்பூ நீங்கள் இஸ்லாம் மட்டும் வைத்து நம் கூட விவாதிக்க முடியாது என அனைத்து ஆன்மிகத்திற்கும் ஆதரவு தெரிவிப்பது கண்டு மகிழ்ச்சி.

      நான் அறிவியல் என்பது சான்றுகளைப் பரிசோதித்து அளிக்கப்படும் அதிகம் பொருந்தும் விள்க்கம் என சொல்கிறேன்.

      ஆன்மிகம் என்பது சான்றுகள் அற்ற நம்பிக்கை என்கிறேன். இந்த அடிப்படையில் இது சரி
      ////அறிவியல் உள்ள ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் அறிவு!///

      நீங்கள் சொல்வது இது

      //அறிவியல் உள்ள ஆன்மிகம் -சமுதாய ஒழுக்கம் ,கட்டுப்பாடான வாழ்கை .

      ஆன்மிகம் இல்லாத அறிவு -தறி கெட்ட வாழ்க்கை//

      இப்போது அறிவியல்,ஆன்மீகம் (ஹலால் முறையில்) வரையறுத்து நீங்கள் சொல்வதை நிரூபிக்க வேண்டுகிறேன்.

      டிஸ்கி: இஸ்லாமுக்கு சான்று இருக்கிறது என ஜோக் அடித்தால் நன்றாக இருக்கும். அச்சான்றுகளின் மீது விவாதிப்போம் என்பதையும் முன் அறிவிப்பும் செய்கிறோம்.



      நன்றி

      Delete
  10. My comment on jeyadevdas blog
    http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_24.html

    சகோ தாசு,

    நிரூபிப்பது இப்படியா?

    மனிதன் இப்போது புலால்(சமைத்து) உண்பது பெரும்பான்மையோருக்கு செரிக்கிறது. ஏன் பச்சையாக உண்ண வேண்டும்??.நாகரிகம் முன்பு பச்சையாக்வும் உண்டான் என சில ஆய்வுகள் கூறுகின்றன்.
    http://en.wikipedia.org/wiki/Control_of_fire_by_early_humans
    The control of fire by early humans was a turning point in the cultural aspect of human evolution that allowed humans to cook food and obtain warmth and protection. Making fire also allowed the expansion of human activity into the colder hours of the night, and provided protection from predators and insects.[1]
    Evidence of widespread control of fire dates to approximately 125,000 years ago and later.[2] Evidence for the controlled use of fire by Homo erectus beginning some 400,000 years ago has wide scholarly support, while claims regarding earlier evidence are mostly dismissed as inconclusive or sketchy.[3]
    Claims for the earliest definitive evidence of control of fire by a member of Homo range from 0.2 to 1.7 million years ago (Mya).[4]


    ஆகவே மருத்துவரீதியாக முடிவெடுப்பதே சரி. நீர் விதண்டாவாதம் பேசுவதால் நானும் பேசுகிறேன்.

    *******
    நாம் சொல்வது எந்த விலங்கின்( பசு உட்பட) மூத்திரமும் குடிப்பதற்கு ஏற்றது அல்ல.அது தீமையே தரும்.

    நீங்கள் சொல்வது மாட்டு மூதிரம் குடிப்பது பாகவத்தில் சொல்லி இருப்பதால் சரி ஆனால் நான் குடிக்க மாட்டேன்.

    //மனிதன் உடல் புலால் உணவை உண்ணும் வகையில் வடிவமைக்கப் பட்டது என்பது உமது வாதம், அப்படி இல்லை என்பது எமது வாதம். யார் சொல்வது சரி, உண்மை என்பதற்கு ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாம். இருவரையும் தனித்தனி அறையில் வைத்து ஒரு மாதத்திற்கு எமக்கு எம் நாட்டில் விளையும் வாழை, கொய்யா போன்ற பழங்களையும், தேங்காய் போன்ற nuts களையும் தினமும் வழங்கட்டும். உமக்கு உயிருடன் உள்ள முழு கோழி, ஆடு, மீன் எல்லாம் அப்படியே வழங்கப் படும். இருவரும் சமைக்காம, உப்பு சேர்க்காம, நமது உடலில் உள்ள உறுப்புகளை மட்டுமே பயன்படுத்தி அவற்றை கொண்டு உணவை தயாரித்து உண்ண வேண்டும். ஏனெனில் புலி, பசு, கரடி மட்டுமல்ல மற்ற எல்லா ஜீவன்களும் தங்கள் உணவை அவ்வண்ணமே தயாரித்து உண்கின்றன. மாமிசமும் உமது உணவு என்றால் நீரும் அதே முறையில் உண்டு நிரூபிக்க வேண்டும். பார்த்து விடுவோமா ஒரு மாதத்திற்கு? இதில் நீர் தாக்குப் பிடித்துவிட்டால் மனிதன் தாவரம் + மாமிசம் இரண்டும் உண்ணத் தகுதியானவன், அவன் ஒரு பல்லுணவு உண்ணி ( Omnivore ) என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.
    //
    இப்போது ஜெயதேவு தாசுக்கு இதே வகையில் கேள்வி கேட்கிறோம்.

    நான் ஒரு மாதம் த்ண்ணீர் மட்டும் குடிப்பேன்.நீங்கள் பசு மூத்திரம் மட்டும் குடிக்க வேண்டும்.

    யார் ஆரோக்கியமாக இருக்கிறார்களோ அதுவே சரி.

    ரெடியா????

    நன்றி!!!

    ReplyDelete
  11. ////ஆமாம் நீங்க நம் கூட கடந்த இரு ஆண்டுகளாக செங்கொடு தளத்தில் இருந்தே விவாதித்து வரும் சகோ இப்ராஹிம்தானே. அவர் சவுதியில் இருப்பதால சில முறை கூறியதால்தான் நீங்கள் சவுதியில் இருப்பதாக நான் கூறினேன்.//////

    செங்கொடி தளத்தில் நான் சவுதியில் இருப்பதாக கூறவில்லையே .இந்தியாவில் இருப்பதாகவே கூறியுள்ளேன்

    ///இப்பூ நீங்கள் இஸ்லாம் மட்டும் வைத்து நம் கூட விவாதிக்க முடியாது என அனைத்து ஆன்மிகத்திற்கும் ஆதரவு தெரிவிப்பது கண்டு மகிழ்ச்சி. ///

    ஆன்மிகமா நாத்திகமா என்றால் ஆன்மிக அணியில் இருப்பேன் .
    இஸ்லாமா ?பிற மதங்களா என்றால் இஸ்லாத்தின் பக்கம் நிற்பேன் .

    அறிவியல் உள்ள ஆன்மிகம் முடம் என்ற கருத்தை சரி கண்டுள்ளீர்கள் .அதனை நிருபித்து காட்டுங்கள்

    ///டிஸ்கி: இஸ்லாமுக்கு சான்று இருக்கிறது என ஜோக் அடித்தால் நன்றாக இருக்கும். அச்சான்றுகளின் மீது விவாதிப்போம் என்பதையும் முன் அறிவிப்பும் செய்கிறோம்.///

    450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் தோன்றியது என்று அறிவியல் கண்டுபிடிப்பு எப்படி உண்மை என்று கொள்ள முடியும்?இது அறிவியல் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலே ஏற்று உள்ளீர்கள் .அதன் சான்றுகளை எப்படி நிருபித்து காட்டமுடியும்?450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத பிரபஞ்சம் எப்படி உருவானது?2 லட்ச ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் தோன்றினான் என்று அறிவியல் கண்டுபிடித்ததாக நம்பம்ப்படுகிறது?.நாளை மழை பெய்யும் என்ற வானவியல் அறிக்கை பல சமயங்களில் தவறாகி உள்ளதே .சுனாமி தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னாடி சொல்லமுடியாத அறிவியல்,450 கோடி ஆண்டுகளையும் 2 லட்ச ஆண்டுகளையும் பற்றி சொல்லுவதை ஏற்றுக் கொள்ளுவது அறிவியலின் மீது வைத்துள்ள நம்பிக்கை மட்டும்தானே .
    69 ஆண்டுகள் வரை மட்டுமே பெட்ரோல் சவுதியில் இருக்கிறது என்பது அறிவியல் சொல்லுகிறது.என்று கூறி வருகிறீர்கள் ஆனால் அதற்கு பிறகும் அங்கு பெட்ரோல் ஊற்றெடுக்கும்,அல்லது பெட்ரோலியத்தை விட குறைவான விலையில் எரிபொருள் அங்கு கிடைக்க இறைவன் அருள் புரிவான் என்பதை 70 ஆண்டுகளுக்கு பிறகே நிருபிக்க முடியும் .இது உங்களுக்கு ஜோக்காக தெரிந்தால் 450 கோடி ஆண்டுகள் எனக்கு ஜோக்காக தெரிகிறது

    ReplyDelete
  12. சகோ இப்பூ,

    சவுதி நீங்கள் சென்றதே இல்லையா!!. மன்னிக்கவும் ஏதோ குழப்பம் நிகழ்ந்து விட்டது.
    ***
    //450 கோடி ஆண்டுகளையும் 2 லட்ச ஆண்டுகளையும் பற்றி சொல்லுவதை ஏற்றுக் கொள்ளுவது அறிவியலின் மீது வைத்துள்ள நம்பிக்கை மட்டும்தானே .//

    சான்றுகள் மீதான பரிசோத்னையின் முடிவு.

    உலகின் பழமையான் பாறையின் வயது கார்பன் டாட்டிங் மூலம் காண முடியும்.பிரப்ஞ்சத்தின் வயது காணும் முறை நம்து பதிவில் விள்க்கி இருக்கிறோம்.

    பிரபஞ்சத்தின் வயதை எப்படி கண்க்கிடுவது?
    http://aatralarasau.blogspot.com/2011/12/blog-post_11.html
    ஹோமோ சேஃபியன் படிம்ங்களில் பழமையானது 2 இலட்சம் ஆண்டுகள்.

    //அறிவியல் உள்ள ஆன்மிகம் முடம் என்ற கருத்தை சரி கண்டுள்ளீர்கள் .அதனை நிருபித்து காட்டுங்கள் //
    ஜெயதேவு தாசு. பாகவத்தில் சொல்லி இருப்பதால் மாட்டு மூதிரம் குடிப்பது நல்லது என்கிறார். இதை விட சிறந்த எ.கா அருகில் கிடைகாது!!

    நன்றி!!!

    ReplyDelete
  13. //பெட்ரோலியத்தை விட குறைவான விலையில் எரிபொருள் அங்கு கிடைக்க இறைவன் அருள் புரிவான் என்பதை 70 ஆண்டுகளுக்கு பிறகே நிருபிக்க முடியும் //

    அதே இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சவூதியில் எரிபொருள் இந்த இடத்தில் தோண்டினால் கிடைக்கும் என்று முகம்மதுக்கு வஹி அறிவித்திருக்க வேண்டும்?. எப்படி.... பெட்ரோலியத்தை விட குறைவான விலையில் எரிபொருள் சவூதியில் கிடைக்க இறைவன் அருள் புரிவானா? 70 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவியலார் ஆணிபுடுங்குவதை அல்லா புடுங்கினதாக அர்த்தம் கொள்ள வேண்டுமோ? அறிவியலால் 70 ஆண்டுகளுக்குப் பிறகாவது நிரூபிக்க முடியும் அல்லாவுக்குத் தான் எல்லாம் முன்கூட்டியே தெரியுமே இப்பவே மாற்று (வழி) எரிபொருள் என்னவென்று நிரூபிக்கலாமே!!!! 1400 ஆண்டுகளாக எரிபொருள் அப்படீன்னா என்னவென்றே தெரியாமல் தானே முகம்மது உள்பட கைகட்டி முட்டத்த பார்த்து தொழுது கொண்டிருந்தார்கள்? யா ஹபீபி.. ஆணியே புடுங்க வேண்டாம்...

    ReplyDelete
  14. //பெட்ரோலியத்தை விட குறைவான விலையில் எரிபொருள் அங்கு கிடைக்க இறைவன் அருள் புரிவான் என்பதை 70 ஆண்டுகளுக்கு பிறகே நிருபிக்க முடியும் //

    அதே இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சவூதியில் எரிபொருள் இந்த இடத்தில் தோண்டினால் கிடைக்கும் என்று முகம்மதுக்கு வஹி அறிவித்திருக்க வேண்டும்?. எப்படி.... பெட்ரோலியத்தை விட குறைவான விலையில் எரிபொருள் சவூதியில் கிடைக்க இறைவன் அருள் புரிவானா? 70 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவியலார் ஆணிபுடுங்குவதை அல்லா புடுங்கினதாக அர்த்தம் கொள்ள வேண்டுமோ? அறிவியலால் 70 ஆண்டுகளுக்குப் பிறகாவது நிரூபிக்க முடியும் அல்லாவுக்குத் தான் எல்லாம் முன்கூட்டியே தெரியுமே இப்பவே மாற்று (வழி) எரிபொருள் என்னவென்று நிரூபிக்கலாமே!!!! 1400 ஆண்டுகளாக எரிபொருள் அப்படீன்னா என்னவென்றே தெரியாமல் தானே முகம்மது உள்பட கைகட்டி முட்டத்த பார்த்து தொழுது கொண்டிருந்தார்கள்? யா ஹபீபி.. ஆணியே புடுங்க வேண்டாம்...

    ReplyDelete
  15. சார்வாகன் ////பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனது என்று பலருக்கு தெரியும்.இளைய பூமி கொள்கையாளர்களை தவிர மற்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்////
    இளைய பூமி கொகையாளர்கள் ஏன் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை .இதை அறிவியலை மறுக்கும் அறிவியலாக கொள்ளமுடியாதா?
    ஐன்ஸ்டீனின் சார்பியன் கொள்கைப்படி பிரபஞ்சத்தில் எதுவும் ஒளியை விட வேகமாக் பயணிக்க முடியாது.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    அப்படி எனில் பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என்பது தவறா?
    இதை படியுங்கள்!!!!!!!!!!!!

    ஆமாம் ஒளியை விட நுயுட்ரினோ துகள் 1/60 பில்லியன் வினாடி வேகமாக செல்கிறது. இதன் விளைவுகள் குறித்து இன்னும் அறிவியல் உலகில் ஒரு கருத்தும் தெளிவாக வரவில்லை நம் சிற்றறிவுக்கு தோன்றுவது.////

    உங்கள் பதிவுகளை படித்து அறிவியலின் அனுமானமாகவே 450 கோடி ஆண்டுகளாக கூறமுடியும் திட்டவட்டமாக அவர்களால் கூற முடியாது.
    பெருவெடிப்பு கொள்கை இன்னும் உறுதிபடுத்தவில்லை மேலும் அந்த புள்ளி பிரபஞ்சம் இல்லாமல் எப்படி தோன்றியிருக்க முடியும் ?
    பூமியைவிட்டு விலகி செல்லும் கேலக்ஸிகள் ஒரே வேக விகிதத்தில் தான் கோடிக்கணக்கான ஆண்டுகளாக செல்லுகிறதா?

    ஆக அனைத்தும் அறிவியல் நம்பிக்கை மட்டுமே .சான்றுகளை வைத்து நிருபிக்க முடியாத விசயமே .அதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே சான்றுகளை வைத்து நிருபிக்கப்பட்டதாக நம்பிக் கொள்ளவேண்டும்

    ReplyDelete
  16. இனிஎவன்இனிஎவன் இனிஎவன் ///அல்லாவுக்குத் தான் எல்லாம் முன்கூட்டியே தெரியுமே இப்பவே மாற்று (வழி) எரிபொருள் என்னவென்று நிரூபிக்கலாமே!!!! /////

    எதை எப்போது செய்யவேண்டும் என்பதை அவனுக்கே தெரியும் .தங்களின் ஆலோசனை அவனுக்கு தேவையில்லை .முகம்மது நம்பி[ஸல்] அவர்களுக்கு எதை கற்றுக் கொடுக்க வேண்டும் எது வேண்டியதில்லை என்பதையும் இறைவன் உங்களிடம் கேட்டு செய்ய வேண்டிய அவசியமில்லை.

    எதுவுமே தெரியாத அவர்களை செல்வந்தர்களாக்கிய பெருமை அவனுக்கு உண்டு .எல்லாம் தெரிந்தவர்கள் அவர்களை வேண்டி நிற்க வைத்த பெருமையும் அவனுக்கு உண்டு .
    எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும் .ஆதலின் நீங்கள் பணிக்க வேண்டிய அவசியம் இருக்காது

    ReplyDelete
  17. /////////////அறிவியல் உள்ள ஆன்மிகம் முடம் என்ற கருத்தை சரி கண்டுள்ளீர்கள் .அதனை நிருபித்து காட்டுங்கள் //
    ஜெயதேவு தாசு. பாகவத்தில் சொல்லி இருப்பதால் மாட்டு மூதிரம் குடிப்பது நல்லது என்கிறார். இதை விட சிறந்த எ.கா அருகில் கிடைகாது!!/////////////////

    இது ஜெயதேவுடைய விஷயம் .ஜெயதேவு உங்களிடம் வாதிட்டால் அவரிடம் பேசுங்கள் உடன் ஒட்டகம் மூத்திரம் பற்றி ஹதீதை தூக்கவேண்டாம் ஏனெனில் அது ஆரம்பகால நிலை அதன் பின்னர் அவைதடை செய்யப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      இப்ப பதிவுலக் நடைமுறை தெரியாம பேசுரீங்களே. இப்போ இஸ்லாம் இஸ்கான் பாய் பாய்.

      எப்படி முக்மது(சல்) கொஞ்ச நாளா கிறித்தவர்,யூதர்,சபியன் களையும் பாய் பாய் சொல்லிகிட்டு இருந்தார் அல்லவா!! அது போல்.

      அப்புறம் வழிக்கு வரமாட்டான் என்பதும் கிப்லாவை மாத்தவில்லையா அதுபோல்தான்!!.

      ஒவ்வொரு மதப்பிரிவும் தங்கள் நம்பிக்கைக்கு விரோதமான அறிவியலை எத்ர்கின்றன். ராக்கெட் விட்டாலும் பூசை செய்து விடுரான்.நாள் நட்சத்திரம் பார்க்கிறான்.

      இஸ்லாமில் பெரும்பான்மை நாடுகளில் பிறர் மீதும் ஷரியா பயன்படுத்துகிறார்கள்.

      இஸ்லாமின் இன்றைய காமெடி, இந்திய உளவுத் துறைக்கு ஒரு முஸ்லிம் என கூத்தாடுகின்றார். உள்வாளி என்றால் அடுத்த நாடுகளுக்கு ஆப்பு வைப்பவன்தானே. இதைத்தானே துப்பாக்கி படத்தில் காட்டினார்கள்.

      பாகிஸ்தானிலும் இந்திய ஸ்லீப்பர் செல் உண்டு,அதேபோல்தான் இங்கேயும்.

      உண்டு.இந்திய முஸ்லிம் பாகிஸ்தானில் ஏதேனும் செய்வது போல் காட்டினால் எதிர்க்க முடியுமா????



      59-year-old Ibrahim, a 1977 batch IPS officer from Madhya Pradesh cadre, will take over as officer on special duty on December one, a procedure for smooth transition of power from the incumbent Director to the new one, official sources said.
      The name of Ibrahim was cleared by the ACC and a formal order is expected to be out in a day or two, the sources said. He will be taking over from Nehchal Sandhu who retires on December 31.

      Ibrahim will have a fixed tenure of two years beginning January one, 2013.

      எனினும் ஆசிஃப் இப்ராஹிம் தர்காவாதி,அல்லது ஷியாஅல்லது அஹ்மதியாவாகவும் இருக்கும் வாய்ப்பு உண்டு.அப்படி எனில் முனாஃபிக்கே!!!

      மூமின்களின் பதிவுகளே பதிவுலகின் காமெடி!!!

      நன்றி!!!

      Delete
  18. //உடன் ஒட்டகம் மூத்திரம் பற்றி ஹதீதை தூக்கவேண்டாம் ஏனெனில் அது ஆரம்பகால நிலை அதன் பின்னர் அவைதடை செய்யப்பட்டது.//

    http://islamqa.info/en/ref/83423
    I hope that you can provide me with a scientific answer – if such knowledge is available – about the ""saheeh hadeeth """ about drinking camel’s urine. May Allaah reward you.

    Praise be to Allaah.
    The hadeeth referred to by the questioner is a saheeh hadeeth, in which it says that some people came to Madeenah and fell sick. The Prophet (peace and blessings of Allaah be upon him) told them to drink the milk and urine of camels, and they recovered and grew fat. In the story it also says that they apostatized and killed the camel-herder, then the Muslims caught them and executed them. Narrated by al-Bukhaari (2855) and Muslim (1671).

    With regard to the health benefits of drinking the milk and urine of camels, they are many, and they are well known to the earlier generations of medical science and they have been proven by modern scientific research.

    ReplyDelete
  19. //எதை எப்போது செய்யவேண்டும் என்பதை அவனுக்கே தெரியும் .தங்களின் ஆலோசனை அவனுக்கு தேவையில்லை .முகம்மது நம்பி[ஸல்] அவர்களுக்கு எதை கற்றுக் கொடுக்க வேண்டும் எது வேண்டியதில்லை என்பதையும் இறைவன் உங்களிடம் கேட்டு செய்ய வேண்டிய அவசியமில்லை//

    ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு புண்ணாக்கையும் செய்ய முடியாதவனிடம் அவசியம் என்ன வேண்டி கிடக்கு? கற்பனை இப்புவிக்கு அவசியம் இல்லைதான். அவசியம் இல்லாத உதவாக்கறையை கற்பனையாக நினைத்து வணங்க வேண்டிய அவசியமும் இல்லைதான்.உழைக்கிறோம்,உண்ணுகிறோம்,வசிக்கிறோம் இடையில் எவனுக்கும் மண்டியிட அவசியமும் இல்லைதான்.மூத்திரம் போவதற்குகூட வஹி அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளவனுக்கு உருப்படியான எரிபொருள் இருப்பதை காண்பிக்க மட்டும் முடியவில்லையோ? கற்பனைக்கு ஆலோசனை தேவையில்லை என்பதைவிட அதைப்பற்றிய விவரம் அக்காலக்கட்டத்தில் ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே மிகப் பொருத்தமானது.

    ReplyDelete
  20. ////இப்ப பதிவுலக் நடைமுறை தெரியாம பேசுரீங்களே. இப்போ இஸ்லாம் இஸ்கான் பாய் பாய்.

    எப்படி முக்மது(சல்) கொஞ்ச நாளா கிறித்தவர்,யூதர்,சபியன் களையும் பாய் பாய் சொல்லிகிட்டு இருந்தார் அல்லவா!! அது போல்.////
    அப்புறம் வழிக்கு வரமாட்டான் என்பதும் கிப்லாவை மாத்தவில்லையா அதுபோல்தான்!!.////
    இஸ்லாமுக்கும் இச்கானுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் சொல்லுவது புரியவில்லை .ஆன்மிக ரீதியில் ஒரு சில பதிலை ஆதரிக்கிறார் என்பதற்கும் கிப்லாவை மாற்றியதற்கும் முடிச்சுபோட வேண்டிய அவசியம் சார்வாகணைக்கு ஏன் வந்துள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது ?
    முஹம்மது நபி [சல்]பல நடைமுறைகளை மாற்றியுள்ளார்கள் ,அது போலவே கிப்ல மாற்றமும் .
    ஆனால் ஜெருசலமில் உள்ள பத்துள் முகத்தஸ் இன்றும் முஸ்லிம்களின் முக்கிய சிறப்பு வாய்ந்த மூன்று பள்ளிவாசல்களில் ஒன்றாக உள்ளது.
    ////இஸ்லாமில் பெரும்பான்மை நாடுகளில் பிறர் மீதும் ஷரியா பயன்படுத்துகிறார்கள்.////
    நமது கோர்ட்களிலும் மற்ற அரசு அலுவலகங்களிலும் ஹிந்து கோயில்கள் கட்டப்படவில்லையா? சரஸ்வதி பூஜைகள் அரசு அலுவலகங்களில் நடத்தப்படவில்லையா?
    இந்திய மக்கல்கலான தமிழர்களை ,விரட்டியவருக்கு ,இந்திய மக்களான முஸ்லிம்களை கொன்றவருக்கு ,இந்திய மக்களான பிகாரிகளை இந்தியமாநிலமான மகாராச்ற்றாவிளிருந்து விரட்டியவருக்கு இந்திய கொடிபோர்த்தி நடுரோட்டில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடக்கவில்லையா?
    ////இதை கண்டித்து இரண்டு வார்த்தை எழுதியவரை கைது செய்யவில்லையா?
    மூமின்களின் பதிவுகளே பதிவுலகின் காமெடி!!!///
    இவர்கள் எழுதியதற்கும் நான் இங்கு விவாதிப்பதற்கும் என்னையா தொடர்பு?

    ReplyDelete
  21. Hi Sarvakhan... Two doubts...

    1) Are u a maths teacher ??

    2) Any idea about wormholes ??? Can u explan if u find time.. read lot from net but not able to understand..

    ReplyDelete
  22. இஸ்கான் என்றால் இஸ்லாம் பாய் பாய் என்றால் இஸ்ரோவும் பாய் பாய் தானே .
    எம்ஜியார், திருப்பதி பற்றி சர்ச்சை கிளம்பிய பொழுது,அதில் திரு என்ற தமிழ் சொல் உள்ளது அதனால் அது தமிழகத்தையே சேரும்என்று உங்களைபோன்று வாதம் வைத்தார்.அப்போது கருணாநிதி திருவனந்தபுரம் ,திருச்சூர் ஆகிய ஊர்களிலும் திரு உள்ளதே அவைகளும் தமிழகத்தை சேருமா?என்று கேட்டார்

    ReplyDelete
  23. சார்வாகன்
    மதீனாவுக்கு வந்த சிலருக்கு நோய் ஏற்பட்டதால் அவர்களுக்கு அங்கு மலைவாசிகள் பயன்படுத்தும் மருத்துவமுறையை அவர்களுக்கு மருத்துவ ஆலோசனையாக நபி[ஸல்] அவர்கள் சொல்லுகிறார்கள் .அவர்களும் ஒட்டக பாலையும் சிறுநீரையும் அருந்தி குணமடைவாதாக கூறப்பட்டுள்ளது.இது மார்க்கத்தில் ஒன்றாக சொல்லப்படவில்லை. குணம் அடைந்தே தீரும் என்றும் சொல்லப்படவில்லை .இறைவாக்கு என்றும் கூறப்படவில்லை .சில ஆய்வுகளும் அதற்கு சாதமாக உள்ளன.
    Dr. Rahmah al-‘Ulyaani, who is also from Saudi Arabia, carried out tests on rabbits infected with bacteria in the colon. She treated each group of rabbits with a different kind of medicine, including camel’s urine. There was a noticeable regression in the rabbits that were treated with other medicines, except for camel’s urine, which brought about a clear improvement.

    நீங்கள் ஏதும் மருத்துவ ஆய்வில் ஒட்டக மூத்திரத்தில் எவ்வித மருத்துவகுணம் இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறோம் .பொதுவாக சிறுநீர் அனைத்தும் அசுத்தமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. சிறுநீர் பட்ட இடத்தில் தொளுவதற்கோ அனுமதி இல்லை. ஒட்டக சிறுநீர் உட்பட அனைத்து சிறு நீர்களும் ஆடையி பட்டால் உடன் சுத்தம் செய்யவே ஹதித்கள் வற்புறுத்துகின்றன.

    ReplyDelete
  24. இனியவன்///உழைக்கிறோம்,உண்ணுகிறோம்,வசிக்கிறோம் இடையில் எவனுக்கும் மண்டியிட அவசியமும் இல்லைதான்.மூத்திரம் போவதற்குகூட வஹி அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளவனுக்கு உருப்படியான எரிபொருள் இருப்பதை காண்பிக்க மட்டும் முடியவில்லையோ?///

    உழைக்கிறார்கள் ,ஆனால் சிலரால் உண்ண இயலவில்லை .சிலர் உழைக்காமல் உண்ணுகிறார்கள் உழைக்காத மக்களான அரபுகளுக்கு இறைவன் அள்ளிக் கொடுக்கவில்லையா?அவர்களிடம் பெட்ரோலிய பூமியைக் கொடுத்து அவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு எரிபொருளை கண்டுபிடிக்க மூளையை கொடுத்து செயல்படவைக்கவில்லையா?.சிலை வைக்காத என்று சொன்னவனுக்கு மாற்றமாக் தனது சிலையை நிறுவியதால் ,அவர்களின் வேலையாட்களை வைத்தே அவர்களின் நாட்டை புடுங்கவில்லையா?
    மனிதனை படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை சொல்லித்தருகிறான் அதில் மூத்திரம் போவதும் அடங்கும் .

    ReplyDelete
  25. இபுறாஹிம்,
    //உழைக்கிறார்கள் ,ஆனால் சிலரால் உண்ண இயலவில்லை .சிலர் உழைக்காமல் உண்ணுகிறார்கள் உழைக்காத மக்களான அரபுகளுக்கு இறைவன் அள்ளிக் கொடுக்கவில்லையா?அவர்களிடம் பெட்ரோலிய பூமியைக் கொடுத்து அவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு எரிபொருளை கண்டுபிடிக்க மூளையை கொடுத்து செயல்படவைக்கவில்லையா?.சிலை வைக்காத என்று சொன்னவனுக்கு மாற்றமாக் தனது சிலையை நிறுவியதால் ,அவர்களின் வேலையாட்களை வைத்தே அவர்களின் நாட்டை புடுங்கவில்லையா?
    மனிதனை படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை சொல்லித்தருகிறான் அதில் மூத்திரம் போவதும் அடங்கும்.//

    அது உங்க‌ளின் பார்வை.ம‌னித‌னுக்கு உள்ள‌ திற‌மை,தொலைநோக்கு சிந்தனை,சூழ்ச்சி,பேராசை,குரோத‌ம்,தாழ்வு ம‌ன‌ப்பான‌மை,போட்டி இது போன்ற‌வைக‌ளை ம‌னித‌னே உருவாக்கிக் கொள்கிறான்.இதில் இறைவ‌ன் என்ற‌ இடைச் செறுக‌ள் தேவைய‌ற்ற‌து என்ற‌ சிந்த‌னையில் பார்த்தால் எளிதில் விள‌ங்கிக் கொள்ள‌லாம். என‌வே நாங்க‌ள் க‌ற்ப‌னைக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை.
    உங்கள் கருத்துக்கு ந‌ன்றி!!!!!!!!!!!

    ReplyDelete