Monday, November 19, 2012

இஸ்க்கான் மர்மங்கள் விளக்கும் ஆன்மீகவாதி யார்?

Radhanatha Swami is a GURU Fraud
வணக்கம் நண்பர்களே,
நாம் மதங்களை விமர்சிப்பதில் பாரபட்சம் காட்டுவது கிடையாது.அதிலும் வாழும் மனிதர்களை மனிதப்புனிதன் என்று இவரை கண்டு ,வழி காட்டுதலின் படி நட‌ந்தால் பிறவிப்பயனையே அடைவாய் என்னும் பிரச்சாரம் பல மனிதர்களை ஆபத்தில் கொண்டு செல்கிறது.

இஸ்க்கான் அல்லது கிருஷ்ன பக்தி இயக்கம் என்பதன் ஆதரவாளர் தனது கருத்துக்களை முன் வைக்கும் போது அதற்கு மறுப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். சரி என்ன சொல்கிறார்?

http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_11.html

1. ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் என்னும் அமரிக்கர் பல மதங்களை ஆய்வு செய்து இறுதியில் கிருஷ்ன பக்தி இயக்கத்தில் துறவி ஆனார்.
பல நாடுகளுக்கும் சென்று இருக்கிறார்.

2. பல பிரபல‌ங்களுடன் புகைப்படம் எடுத்து உள்ளார்.

3. ஒரு மாணவனின் விவரமில்லாத கேள்விக்கு அதே அளவில் பதில் சொல்லி இருக்கிறார்.

எல்லாரும் ஒரே வேலையை செய்ய முடியாது என்ற விடயத்தை கண்டுபிடித்ததுதான்  விடயமாம். சரி ஆன்மிகவாதிகளுக்கு இப்படி பேசித்தானே பலரையும் குழப்பி கவிழ்க்கிறார்.

பல மதங்களையும் ஆய்வு செய்து கிருஷ்ன பக்தி இயக்கத்திற்கு மாறினார் என்றால் ,பிற மதங்களை விட கிருஷ்ன பக்தி இயக்கம் எப்படி சிறந்தது என்பது  பற்றி எதுவும் புத்தங்களில் எழுதியது உண்டா? நாம் பார்த்தவரை தெரியவில்லை.இவரைப் பற்றியே பல எதிர் விமர்சனங்களும் இணையத்தில் வலம் வருகின்றன். 

http://www.harekrsna.org/gbc/black/radanath.htm இதில் ஜெயதேவ் தாஸ் இவரை ஆதரித்து எழுதுவதால் இஸ்க்கான் மீது நம்பிக்கை கொண்டவ்ராக இருக்க்லாம். எனினும் மதவாதிகளின் எதையும் வெளிப்படாமல் பேசும் தன்மைக்கு அவரும் விதிவிலக்கா??

தான் என்ன கொள்கை என்று சொல்லாமல் அனைத்து கடவுள் நம்பிக்கையாளர்களை திரட்டுகிறேன் என பதிவு போடுகிறார்.

செய்ய வாழ்த்துக்கள். ராதாநாத் சுவாமிகள் என்னும் நிச்சர்ட் ஸ்டீவன்ஸ் நல்லவர்,வல்லவர் என நிரூபிக்கும் பொறுப்பு ஜெயதேவ் தாசுக்கு மட்டுமா இல்லை ஆத்திகர் அனைவருக்குமா என சிந்திக்க வேண்டுகிறேன்.பதிவின் தொடக்கத்தில் சொன்ன முகப் புத்தகம் link ஒரு எ.கா. ஏன் இவர் மீது எதிர் விமர்சனங்கள்,செய்பவர்கள் யார் என்பதை அறிய கொஞ்சம் காலம் பின்சென்று இந்த இயக்கத்தின் வரலாறு அறிய வேண்டும்.

***********
கிருஷ்ன பக்தி இயக்கம் என்பது ஒரு வைணவ பக்தி இயக்கமாக திரு பிரபுபாத என்பவரால் 1965 ல் அமெரிக்க நுயு யார்க நகரில் தொடங்கப்பட்டது.ஸ்ரீமத் பாகவதம்,பகவத் கீதை இரு நூல்களின் மீதான ஆன்மீக விளக்கமே இதன் தத்துவ பின்புலம் ஆகும்.இது கவுடிய வைணவம் என்னும் 16ஆம் நூற்றாண்டு நம்பிக்கையின் தொடர்ச்சி எனலாம். இது விஷ்ணு என்னும் கடவுளின் அடிப்படையான் கிருஷ்னரை ஓரிறையாக ஏற்கும் இயக்கம் ஆகும்.Chaitanya Mahaprabhu((1486–1534)
http://en.wikipedia.org/wiki/Chaitanya_Mahaprabhu
 His line of followers, known as Gaudiya Vaishnavas, revere him as an Avatar of Krishna in the mood of Radharani who was prophesied to appear in the later verses of the Bhagavata Purana.


15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைதன்ய மகாபிரபு எனவரி கிருஷ்னரின் அவதாரமாக் ஏற்கின்றார்கள் இஸ்க்கான்.இவரைப் பற்றி பாகவத புராணத்தில் முன் அறிவிப்பு இருப்பதாகவும் கூறுகின்றார்கள். சரி அவதாரம் என்றால் அப்படித்தான் சொல்ல வேண்டும்.
[இப்போது ஏன் நண்பர் ஜெயதேவு தாசு இஸ்லாமைக் கூட சில சமயம் ஆதரிப்பது போல் கருத்திடுகிறார் எனப்புரியும்.]  


Bhaktivedanta Swami considered MosesJesus, and Mohamed to be empowered representatives of God, describing them within his writings as pioneers of the same essential message of dedication to God with love and devotion.[62]
"Actually, it doesn't matter – Krishna or Christ – the name is the same. The main point is to follow the injunctions of the Vedic scriptures that recommend chanting the name ofGod in this age." [63]இப்போது உலக முழுதும் 400 மையங்கள், மில்லியன் கண்க்கில் உறுப்பினர்கள், 50 பள்ளிகள்,90 உணவகங்கள் என செழித்து வளர்ந்து இருப்பது கண்கூடு.சரி என்ன சொல்ல வருகிறோம்?. கிருஷ்ன பக்தி இயக்கத்தின் நிறுவனரான பிரபுபாத மறைவுக்குப் பின் இயக்கம் 11 வெள்ளையர்கள் கொண்ட குழுவால் வழிநடத்தப்பட்டது. இது  ஜிபிசி என அழைக்கப்ப்ட்டது .பல சர்சைகளிலும் கொலை,பாலியல் குற்றசாட்டுகள் என பல் பிரச்சினைகளுக்கு உள்ளாகி அமெரிக்க நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடைபெற்றன.

இச்சூழலில் பெங்களூரு இஸ்கான் மையத்திற்கும்,ஜிபிசி குழுவிற்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இந்திய நீதிமன்றத்திலும் எதிரொலித்தது. அது பற்றிய தொலைக்காட்சி காணொளி பாருங்கள்!!!


இரு குழுக்களும் ஒன்றின் மீது ஒன்று சரமாரி குற்றசாட்டுகள் சொல்வதைப் பாருங்கள். ராதானந்த ஸ்வாமி எனப்படும் ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் GBC குழுவில் ஒருவர்.


ஆகவே இப்படி சர்சைக்குறிய ஸ்வாமிகளைப் போற்றிப் பதிவெழுதுவது தவறே. அப்படி எழுதுவது என்றால் அந்த குற்றசாட்டுகளுக்கும் பதில் அளிக்க முடிபவரே எழுத வேண்டும்.Radhanath Swami helped murder Sulochana dasa


http://www.harekrsna.org/gbc/black/radanath.htm

ஆன்மீகம் என்பது ஒருவரின் தனிப்பட்ட தேடலாக இருப்பதற்கும்,இப்படி சர்ச்சைக்குறிய அமைப்புகளில் சேர்ந்து பிரச்சினைகளுக்கு உள்ளா
வதும் வெவ்வேறு.


இந்த குற்றசாட்டுகளின் மீது ஜெயதேவ் தாஸ் ஒரு பதிவு எழுத வேண்டுகிறோம். பிறகு நாம் அலசுவோம். ஏன் இப்போதே எழுதவில்லை என்றால் ,நான் அவர் சொன்ன நல்ல கருத்தை மட்டும் சொன்னேன் என சம்மர்சால்ட் அடிப்பார் என நாம் அவதானிப்பதால் மட்டுமே.

தாஸ் இக்க்கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.

சுலோச்சனா தாஸ் கொலை ஏன் நிகழ்ந்தது?

கிர்த்த்னாந்தா இதில் தொடர்பு உடையவரா?

ராதாநாத் இது விடயமாக நீதுமன்ற விசாரனைக்கு உள்ளானாரா?

தாஸ் பதில் அளிக்கும் பட்சத்தில் இன்னும் தொடர்வோம்.

வேதம்,யோகம்,தவம் என பிதற்றும் சாமியார்களின் செயல்கள் அறிந்த பின்னும் அருகில் செல்வது எவருக்கும் ஆபத்தான விடயம் என்ற நோக்கிலேயே எழுதுகிறோம்.

தாஸ் தனது தனிப்பட்ட ஆன்மீக தேடலை பகிர்ந்தால் அதனையும் கருத்துரீதியாக் எதிர்கொள்வோம்.

ஆனால் ஒரு சர்ர்சைக்குறிய சாமியாரை,அமைப்பை நல்லவிதமாக சித்த‌ரிப்பதால் எதிர்வாதம் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.

ஆகவே  பொறுமையாக உங்களின் ஆன்மீக கருத்துகளையும் வெளிப்படையாக விவாதிப்பதும்,பரிசோதிப்பதும் தவறில்லை.

மறைத்து  வெளிப்படையாக விவாதிக்காமல் எதையோ நோக்கி கொண்டு செல்லும் எந்த செயலும் கண்டிக்கத் தக்கது!!!விடை தெரியா கேள்விக்கு வித்தகனே காரணம் என்னும் வாதத்தை சான்றுகள் அடைப்படையில் நிராகரிக்கிறோம். அதே போல் இந்த சாமியார்களையும் அவர்களின் நடவடிக்கைகளின் மீதான சான்றுகளால் நிராகரிக்கிறோம்.

சான்றுகளின் அடிப்படையற்ற நம்பிக்கை ஆபத்தானது!!!

ஒருவன் நாத்திகன் ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டு வாழ்ந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. மறுமை வாழ்வு என்பதை ஏற்பது இல்லை என்பதால் 

1. அபிரஹாமிய கோட்பாட்டின் படி நித்திய நரகம்

2. இந்து,பவுத்த,சமண கோட்பாடுகளின் படி  கர்மபல்னுக்கேற்ற மறு பிறப்பு

அவ்வளவுதான். இபோது பாருங்கள் ஜெயதேவு தாசுக்கும் அவரின் நம்பிக்கைப்படி மறுபிறவிதான், நாத்திகருக்கும் அதேதான்.

ஆகவே தாசுக்கு ஆபிரஹாமிய கோட்பாட்டின் படி தோலை மாற்றி,மாற்றி கருக்கும் நரகமே கிடைக்கும்.நாம் நம்புவது இல்லையே!! ஹி ஹி

எனினும் இந்த கர்மபலன் என்னும் கோட்பாடு தவறு என சார்வாகம் அழுத்தம் திருத்த்மான் வாதங்கள் வைக்கிறது. அது பற்றியும் எழுதுவோம்.சாமியார்கள் ஜாக்கிரதை!!!!!!!!!


நன்றி


41 comments:

 1. நண்பர்களே,
  இப்பதிவு எழுத ஆரம்ம்பித்ததும் சில கேள்விகளுக்கு பதிலும்,அப்பதிலின் மீது பல கேள்விகளுமே எழுந்தன.முதலில் விடை அறிந்த ஒரு கேள்வியைப் பார்ப்போம்.
  நண்பர் ஜெ.தே.தாஸ் ஏன் இஸ்லாமை ஆதரிக்கிறார்?

  நான் முதலில் இவரை இஸ்லாமியர் என்வே நினைத்தேன். அண்ணன் பி.ஜேவின் வாதங்களை மேற்கோள் காட்டி நண்பர் கோவி கண்ணன் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டார். இன்னும் கூட நம் பதிவுகளில் இஸ்லாமிய சகோக்களுடன் விவாதித்தில் கண்ணை மூடிக் கொண்டு அவர்களை ஆதரித்து நம்மை(நாத்திகர்களை) விமர்சிப்பார். அது ஏன் என இப்பதிவு எழுதுகையில் புரிந்தது. விளக்குவோம்.

  கிருஷ்ன பக்தி இயக்கம் தொடங்கிய திரு பிரபுபாதா தன்னை கிருஷ்னரின் தூதராக அறிவிக்கிறார்.15 ஆம் நூற்றாண்டு சைதன்யரை கிருஷ்னரின் அவதரா மாக ஏற்கும் கவுடிய வைணவத்தை முதற்கொள்கையாக இயக்கத்திற்கு அளிக்கிறார்.

  பாகவதம்,பகவத் கீதை வேத நூல்களாக இயக்கத்திற்கு ஏற்கப் படுகிறது. பல தெய்வ மதமான இந்து மதத்தின் பிரிவான கவுடிய வைணவம் கிருஷ்னரை ம ட்டுமே ஓரிறையாக பிற தெய்வங்களின் பெயர்கள் அவனின் மாறுபட்ட வடிவங்களாக வரையறுக்கிறது.
  இதுவே பல தெய்வ வழிபாட்டில் இருந்து ஓரிறை மதம் உருவாக்கும் வழி ஆகும்.

  எனினும் இயக்கம் அமெரிக்காவில் வேரூன்ற முயன்றதால் ஆபிரஹாமிய மதத்தினரையும் ஈர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பிரபு பாத மோசஸ்(யூதம்), இயேசு(கிறித்த்வம்),முகம்மது(சல்)[இஸ்லாம்) ஆகியோருக்கு இறைத் தொடர்பு உண்டு என ஏற்கிறார்.
  கிறிஸ்து,கிருஷ்னர் இருவரும் ஒன்று என்பது போல் குழப்புவார்கள்.
  ஒரு புது மதம் நிறுவுபவர் ஏற்கென்வே உள்ள அவதாரம்,தூதர்களை ஏற்று தன்னையும் அவர்கள் வழித் தோன்றலாக காட்டுவார்.பாருங்கள் இயக்கத்தின் பெயரே இஸ்க்கான் என இஸ்லாமின் பெயரில் பாதி வருவதுபோல் சூட்டினார்.
  இத்னை சிலர் ஏற்று புது மதத்தில் சேரலாம். கூட்டம் சேர்ந்த பின் தனி மதமாக இன்றியமையாத விடயங்களை வைத்துக் கொண்டு, மற்றதை கழட்டி விட்டு விடுவார்கள்.
  அந்த வகையில் தாசு , ஆபிரஹாமிய மத தூதர்களை ஏற்பதால்,அவர்களை ஆதரிக்கிறார். ஆபிரஹாமியத்தினர் பிரபுபாதாவையோ, கிருஷ்னரையோ ஏற்காமல் போனாலும் சேர்ந்து நாத்திகத்தை எதிர்ப்பது இப்போது அவருக்கு போதும்.

  ஏன் எனில் நாத்திகம் அனைத்து மதங்களின் கதைகளின் சான்றற்ற தன்மையை ஆவணப்படுத்துகிறது.
  **************
  நாத்திகம் மீதான எதிர்ப்பை வரவேற்கிறோம்.மதங்களுக்கு சான்றில்லை என்பததால் ,தத்துவரீதியாகவும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
  இப்பதிவுக்கு எப்படி பதில் அளிக்கிறாரோ அது சார்ந்து தொடர் பதிவுகள் இட விரும்புகிறோம்.
  நாம் வெளிப்படையாக கருத்து கூறுகிறோம்.கேட்கப்படும் கேள்விகளுக்கு சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே பதில் அளிக்கிறோம்.
  மதவாதிகள் போல் பதுங்கி பதுங்கி அல்ல!!!!
  நன்றி!!!!

  ReplyDelete
 2. அருமையான பதிவு சகோ. மேற்கில் இந்து மதம் வளர்ந்தால் கூட மூளை வளராது என்பது இஸ்கான் சான்று .. அரே கிருஷணா என்ற இந்த இயக்கும் இந்து + ஹிப்பி + போதை வஸ்துக்கள் = ஒரு மதம் என் ஆரம்பிக்கப்பட்டது ... ! இவை இந்து மதத்தில் சேர்த்தியா தனி மதமா என்பதே சர்ச்சையான ஒன்று, கிட்டத்தட்ட கிரித்தவத்தின் பெந்தோகொஸ்தவின் இந்து வடிவம் இது எனலாம் ... ! இஸ்கான் உலகம் முழுவதும் ஆற்றிய நற்தொண்டு ( கொளை, கொல்லை, கற்பழிப்புக்கள் ) யாவை விளக்கி எழுத ஒரு வலைப்பதிவு போதாது .. ஐயகோ. மதங்களால் தான் எத்தனை எத்தனை இன்பங்கள் ( மதம் நடத்துவோருக்கு மட்டும் ) ...

  ReplyDelete
  Replies
  1. சகோ இக்பால் செல்வன்,
   நீங்கள் சொலவ்து சரியே என்றாலும். நாம் ஏற்படுத்த விரும்பும் பார்வை. எப்படி ஒரு புதிய ஓரிறை மதம்,பிறமதங்களில் இருந்து கருத்தாக்கம் செய்து உருவாக்கப்படுகிறது. நிறுவனரின் மறைவுக்குப் பின் எழும் அதிகாரப் போட்டியில் எப்படி அனைத்து ஏமாற்றுவேலைகளும் வெளிவருகிறது என்பதே .

   பிரபுபாத விஷம் வைத்து கொல்லப்பட்டதாக் ஒரு குழு சொல்கிறது.[வேறு விடயம் நினைக்கு வந்தால் நாம் பொறுப்பு அல்ல}

   படிக்க ஆரம்பித்தத்தும் எதை எழுதுவது என்றே தெரியவில்லை.அவ்வளவும் சர்சைக்குறிய விடயங்கள்.மர்மக் கதை போல் இருக்கிறது!!

   ஜெயதேவ் தாஸ் இதற்கு எப்படி பதில் இடுகிறார் என்பதன் அடிப்படையி தொடர்வேன். ஆனால் அவர் தன்னை இஸ்க்கான் என ஒத்துக் கொள்ளக் கூட பதுங்குகிறார்.

   நன்றி!!

   Delete
 3. இஸ்கான் மும்பைக்கும் இஸ்கான் பெங்களூருக்கும் நடைபெறும் பிரச்சினை இன்னும் நீதிமன்றத்தில் தொடர்கிறது. வேதங்களை வைத்து பேதங்களை சரி செய்ய முடியாது என்பதற்கு இதுவே நிரூபணம்.

  Update on the ongoing legal dispute between ISKCON Mumbai and Bangalore
  http://www.iskcontimes.com/court-case-update-may92012

  ReplyDelete
 4. இவர்களிடம் பேசுவதே நேர விரயம்; நாமே ஒன்னு கேட்ட இவர்கள் வேற ஏதாவது சொல்லுவாங்க. நம்ம பா.ம.க. இலவச கொத்தனார் மாதிரி இவர் ஆத்திகர்களுக்கு ஒரு இலவச கொத்தனார்; இருவரும், எதைப் பூசுகிறோம் ஓட்டையை அடைக்க என்று தெரியாமல் வேற ஏதாவது சொல்வார்கள். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப் பாக்கு விலை எட்டு ரூவான்னானாம் சில மாக்கான்கள் சொல்வார்கள்; அங்கே கொட்டப்படும் கருத்துகள் அப்பிடி...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பர் நம்பள்கி வாங்க,
   நாம் பதிவுலகில் போலி அறிவியல், மத விளம்பரம் சார்ந்த கருத்துகளுக்கு மறுப்பு சொல்கிறோம். இனவெறி, சாதி மேட்டிமை போன்ற்வற்றையும் விமர்சிக்கிறோம். அந்தவகையில் இஸ்கான் குழப்ப தத்துவமும் விமர்சித்து மறுக்கப்பட வேண்டும் என்வே நினைக்கிறென்.
   நான் எதுவும் புதிதாக் செய்ய வேண்டியது இல்லை பார்ப்பன வேதங்களை அன்றே எதிர்த்து பவுத்த ,சமண,சார்வாக,லோகாயத தத்துவ விள்க்கங்கள் அளிக்கப் பட்டு விட்டன.ஆனால் என்ன்வோ வேதங்கள் மட்டுமே இந்திய தத்துவ மரபு என பொய்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
   உபநிஷத்துகள் கூட வேதங்கள்க்கு மாற்றாக் வந்தவையே .ஆனால் அதையும் முழுங்கி விட்டார்கள்.புத்தர், மகா அக்பரையே விஷ்னு அவதாரம் என்றவ்ர்கள் ஆயிற்றே!!!!!!!!!!

   மேலே சொன்ன இறைமறுப்பு,பொருள்முதல் வாத தத்துவங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் இருப்பதால்,இவற்ரையும் சேர்த்து த்ங்களுடையது போல் காட்டுகிறது இந்துத்வ அமைப்புகள். இவற்றைப் பிரித்து தமிழ் நாத்திகத்தை தத்துவரீதியாக் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.இத்னையும் பரிணம் சிந்த்னையில் எழுத முயல்கிறேன்.

   எல்லாம் செய தேவு தாசு செயல்.

   அவர் வைக்கும் வாதம் சார்ந்தே மறுப்பு எழுதினால் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும். அடிப்படையில் இருந்து தொடங்கினால் தத்துவ பாடம் போர் அடிக்கும்.

   ஆகவே வினைகளே எதிர்வினைகளை உருவாக்குகின்றன.

   நன்றி

   Delete
 5. இத்தனை விஷயம் இருக்குதா? ஒண்ணுமே தெரியாம இத்தனை நாளை வீணாக்கிப் போட்டேனே?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா, வாங்க,
   தேடலுக்கு பல் விடயம் உண்டு!!!
   ஆத்திகம்,நாத்திகம் இரண்டுமே தத்துவ விள்க்கமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதே நம் கருத்து. இரண்டிலும் அறிய வேண்டிய விடயங்கள் உண்டு என்றாலும்,இயற்கைக்கு மேம்பட்ட சக்திகளை அடைவேன்,அறிவேன்,வசப்படுத்துவேன் என்பதை தவிர்த்தால் இரண்டும் ஒன்றே!!

   நன்றி

   Delete
 6. சகோ அருமையான பதிவு,

  நேரமின்மையால் விரிவான பதில் எழுத முடியவில்லை. நான் கூட நண்பர் ஜெயதேவ் தாஸை பெயர்தாங்கி இந்து என்றுதான் நினைத்தேன்.

  இதில் முன்னிறுத்த வேண்டிய விஷயம், இஸ்கான் இயக்கத்தில் நடைப்பெற்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத்தான். ஏனோ இஸ்கான் சாமியார்களை பார்த்தால் குழந்தைகளை பத்திரப்படுத்த தோன்றுகிறது.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நரேன், ஆன்மீக்ம என்பது த்னைப்பட்ட விதத்தில் ஏதோ புத்த்கம் படித்தேன், கோயிலுக்கு போனேன், தொழுதேன் என்ற அளவில் மட்டும் இருந்தால் பிரச்சினை இல்லை. சில ஆன்மீக குருக்களை வழிகாட்டி என்னும் போது ஆபத்தில் பெரும்பாலும் முடியலாம்.

   பாருங்கள் தாசு இறைவன் பேரை சொன்னால் நல்லவராக இருப்பார் என்னும் கருட்தை வை. இஸ்கான் பிரிவுகளுக்கிடையே உள்ள வழக்கில் பக்வத் கீதை மீது உறுதி மொழி எடுட்து இருபார்களே அப்படி இருந்தும் யார் உண்மை பேசுகிறார் எனத் தெரியவில்லையே.

   இப்போது கூட மறுப்பு சொல்ல மறுத்து விட்டார். நம்க்கு சாமியார்களை நம்பி மோசம் போகக் கூடாது.
   யாராக் இருப்பினும் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதே ஆபத்தெ. இப்போது புரிகிறது மதம் வைத்து எந்த அள்வு ஏமாற்ற கொள்ளை அடிக்க முடியும் என??

   என்க்கு இந்த கால்த்திலும் இப்படி ஒருவர் கருத்து கொள்ள முடியும் என்பது மிக வியப்பாக் இருக்கிறது.

   பாருங்கள் நம் சகோக்கள் ஹதித்தில் முக்மது(சல்) ஒட்ட்க மூத்திரம் மருந்தாக பயன்படுத்தினார் என்றால் நைசாக அது தேவையில்லை என ஒதுங்குகிறார்'

   கடிஞ்சீர்கம் மரணம் தவிர்த்து அத்த்னைக்கும் மருந்து என்றால் (வழக்கம் போல்) யூதன் இட்டுக் கட்டியது என மறுப்பார்.

   ஆனால் நம் தாசு மாட்டு மூதிரம் பாகவதத்தில் சொல்வதால் அதுவும் மருந்தே என்கிறார்.
   http://myspiritualmaster.com/spiritual-realisations-of-radhanath-swami/radhanath-swami-on-the-greatest-misfortune/

   Radhanath Swami quotes from the epic book of the East, Srimad Bhagavatam, and says, ” Cow urine is salty and it is administered to people who suffer from liver problems. Cow milk is never administered to people with liver problems. They may have never drunk cow milk, but they should understand that although cow milk was never drunk by them, there exists a thing like that. Similarly, we have experience of only salty oceans, but there are oceans of milk as well
   இப்படி ஆட்கள் இருக்கும் போது நித்யானந்தாக்கள் உருவாவது எளிதே!!!

   கொடுமை!!!!!!!!

   நன்றி!!!

   Delete
 7. சார்வாகன்,

  அருமையான கருத்தாக்கம்,

  ஹி...ஹி ஜெயதேவ தாசை ஓட வைக்க சாண்டோக்யா உபநிஷத் ஒன்றே போதும் :-))

  சில்லி சிக்கன் சாப்பிடலாம என்று கேட்டால் போதும் முமீன்களையும் சேர்த்து திட்டுவார் :-))

  ஆனால் ஆத்திகர்களே வாருங்கள் என்பார் ,சில்லிசிக்கன் சாப்பிடும் ஆத்திகர்களை வரக்கூடாது என்பார் :-))

  புத்தர் உயிர்களை கொல்லக்கூடாது என்றாலும் மாமிசம் உண்பார், அதன் பொருள் தேவை இல்லாமல் உயிர்களை துன்புறுத்த கூடாது என்பது ஆகும்.

  புத்தரின் மரணத்துக்கு காரணம் ஒருவர் விருந்தில் கெட்டுப்போன, அல்லது விஷம் வைத்த பன்றிக்கறியை கொடுத்தார், சாப்பிட்டதும் அதனை புரிந்துக்கொண்டு மறுக்காமல் சாப்பிட்டுவிட்டு, அப்பன்றி கறியை மற்றவர்கள் சாப்பிட வேண்டாம் என சொல்லி மண்ணில் புதைக்க சொன்னார், அதாவது அப்பன்றி கறி விஷம் என அறிந்திருந்தார்,ஆனாலும் அதனை தெரிந்தே உண்டார்.(7 ஆம் அறிவு படத்திலும் இப்படி ஒரு காட்சி வரும்)

  எனவே புத்த மதம் கூட மாமிச உணவு உண்பதை தவிர்க்க சொல்லவில்லை. புத்த மதம் பின்ப்பற்றும் நாடுகளானான ஜப்பான்,சீனாவில் அனைத்து மாமிச உணவுகளும் உண்ணப்படுகின்றது.

  ஜப்பான்காரனை விட ஜெயதேவ தாசுக்கு மூளை வளர்ச்சி அதிகமா என தெரியவில்லை :-))

  ReplyDelete
  Replies

  1. சகோ வவ்வால்,

   நான் முதலில் ஏதோ நம் சகோக்கள் மாதிரி விவரமான் ஆளுன்னு நினைத்தால் எழுதுவது, ஆலோசனைகள் எல்லாமே மிகவும் ஆபத்தான விடய்மாக இருக்கிறது.

   மருத்துவத்தால் ஏற்கப்ப்டாத சில மருத்துவர்களின் வைத்தியத்திற்கு பரிந்துரை செய்கிறார்.
   அவன் தளத்தில் சென்றல் அவ்னே டிஸ்கிளெமைர் போடுகிறான்.விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பு இல்லை என்று!!

   http://anatomictherapy.org/tdisclaimer.html

   ஒவ்வொரு விடய்மும் பலரால்,பல்முறை, ஒன்றை ஒன்று சாராமல் பரிசோதிக்கப் பட்டே ஏற்கப்பட வேண்டும் என்பதுதான் சரி!!.

   சரி யாரும் அவரை பெரிதாக எடுக்க மாட்டார்கள் என்வே எதிர்பார்ப்போம்.
   நம் மக்கள் விவரமானவர்கள்

   நாம் முடிந்தவரை ஊதும் சங்கை ஊதுவோம்!!!

   இந்த பதிவையே படிக்க மாட்டாராம் !!!

   ஒரு சைவன் விஷ்னு பெயரே காதில் விழாமல் இருக்க காதில் மணி தொங்க விட்டுக் கொண்டான் எனப் படித்து இருக்கிறேன்.அது போல் ஹி ஹி !!!!
   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   இப்படியும் சிலர்.

   நன்றி!!!

   Delete
  2. சகோ.சார்வாகன்,

   பேரைப்பார்த்தாலே தெரியலை அவரு ஒரு பூசாரி கோஷ்டி ஆளுனு, சப்லாக்கட்டையை அடிக்கிறது தவிர வேற என்ன தெரிய போவுது, போலி சாமியார்களின் வளர்ச்சிக்கு காரணமே இது போல இருக்கிற சில மூடர்கள் தான், பேர கேட்டாலே வைப்ரேஷன் இருக்குன்னு பின்னாடியே போய் ஆப்பு வாங்கிக்கிட்டு வருவாங்க, ஆனாலும் வெளிப்படையா ஒத்துக்கவே மாட்டாங்க.

   ஹி...ஹி படிச்சு ஒரு வேளை மனசு மாறிட்டா என்ன செய்யுறதுன்னு தான் படிக்க மாட்டேன்னு சொல்லுறார் :-))

   Delete
  3. @வவ்வால்
   புத்தர் மாமிசம் சாப்பிடுவது போக நவீனயுக இந்துமத துறவியான விவேகானந்தரே மாமிசம் சாப்பிடுவார், மாட்டுகறி உட்பட.

   அவர் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த போது அவரது வேத உபநிடதங்கள் பற்றி அறிவை பார்த்து வியந்த நம்பூதரிகள் அவர் மாமிசம் சாப்பிடுவதை பார்த்து கோவிலுக்குள் விடமறுத்தனராம்.

   மேலும் அவர் அமெரிக்கா சென்ற போது மாட்டுகறி சாப்பிடுவதை அறிந்த சென்னை ஐயங்கார் சீடர் ஒருவர் அதை கண்டித்து விவேகானந்தருக்கு கடிதம் எழுத அதற்கு பதில் எழுதிய விவேகானந்தர், தான் எந்த மதத்திற்கோ அல்லது நாட்டு பழக்கவழக்கத்திற்கோ அடிமை இல்லை என காட்டமாக பதில் எழுதினார்.

   பெங்காலி மற்றும் ஒரிசா பிராமணர்கள் மாமிசம் சாப்பிடுபவர்கள். இதனால் இந்த மாநிலங்களில் சாதி வேறுபாடு குறைவாக உள்ளது என ஒரியா மாநிலத்து நண்பி ஒருவர் சொன்னார். உணவு மக்களை பெரிதாக பிளவு படுத்துகிறது என்பது அவரது கருத்து.

   இஸ்கான் ஒரிஜினல் ஓனர் Srila Prabhupada விவேகானந்தர் பெங்காலிகளுக்கு மாமிசம் சாப்பிட கற்றுக்கொடுத்து கெடுத்துவிட்டார் என குற்றம் சாட்டுவதை கேளுங்கள்.
   http://www.youtube.com/watch?v=eE2navu4zMA

   இஸ்கானுக்கு புள்ளை பிடிக்க போகும் போது பெங்காலிகள் சேருவதில்லை என புலம்பலுக்கு அவர் அளித்த பதில்தான் இது. மேலும் ஆன்மாவின் அளவு பற்ற பேசும் காமெடியும் உண்டு!

   Delete
 8. My comment on Jeyadev das blog
  நண்பர் ஜெயதேவு தாசு,
  //எந்த விலங்கு உங்களை மாதிரி பேன்ட் சர்ட்டு போட்டுக்கிட்டு திரியுது? எந்த உராங்குட்டான் குரங்காவது கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு பின்னூட்டம் போட்டதைப் பார்த்திருக்கீங்களா? ஆனா நீங்க போடுறீங்க. நாய் ரோட்டில் போகும்போதே இன்னொரு பெட்டை நாயை பார்த்துவிட்டால், அங்கேயே எல்லாம் பண்ணும், நீங்க எப்படி? மனிதன் என்பவன் வெறும் மிருகம் இல்லை, Civilized Animal. Civilization போயிடுச்சுன்னா அவன் மிருகம்தான்.//
  நாங்கள் மனிதன் ஒரு விலங்கு என்கிறோம். உங்கள் சாமியார்களின் செயல்கள் இப்படித்தான் இருக்கிறது.தங்களின் தத்த்வங்கள் பலன் அளிக்கமல்தானே பணம் சேர்க்க, பாலியல் லீலைகளில் ஈடுபட பிரச்சினை ஆகி நீதிமன்றங்களில் நிற்கிறார்கள்.
  ஒரு நித்யானந்தா மாட்டிக் கொண்டாலும்.இஸ்க்க்கானின் லீலைகள் உலகறிந்தது.
  இஸ்கான் சாமியார்களை விட விலங்குகள் எவ்வளவோ மேல்.

  //அவரு பேரே ஒழுங்கா தெரியலை, இந்த லட்சணத்துல அவரைப் பத்தி பதிவு வேற போட்டுட்டீங்களா? ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க, ஒருமுறை பகவான் பேரைச் சொல்லிட்டாலே அவரை நாங்க பக்தரா ஏத்துக்குவோம்,//
  நான் ஜெயதேவ் தாஸ் என மட்டும் சொல்லுங்கள் இங்கு பின்னூட்டம் போட்ட எத்னை பேர் ராதானந்த் என்ற ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் ஐ நம்புகிறார்கள் எனத் தெரியவில்லை.

  ஸ்லோச்சனா தாஸ் கொலை வழக்கில் கிர்த்தானந்தா ஸ்வாமிக்கு ராதானந்த் உதவினாரா?
  //அவர் என் வயசலவுக்கு பக்தியில ஈடுபட்டு தினமும் இறைவன் நாமங்களைப் பாடி வந்தவர். அப்படிப் பட்டவரை ஒருத்தர் திட்டினால் அதைக் கேட்பதை விட ஏதாவது ஒரு குளத்தில் விழுந்து சாவது மேல். ஆகையால் உங்க பதிவை நான் படிக்கப் போவதில்லை, அது மாபெரும் தவறு, எனவே மன்னிக்கவும்//

  படித்து மன்ம் மாறிவிடும் என பயமா? எதையும் மாற்றுக் கருத்துகளோடு அறிவதே அறிவு. இப்படி சொன்னா எப்படி ஆன்மீகம் வளர்ப்பது?. பதிவுலக ஆன்மீக வாதிகளின் தலைவராக முயலும்போது இது கூட செய்யவில்லை எனில் எப்படி?எனினும் இந்த இணைப்பில் ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் பற்றி படிக்கவும்.
  http://www.harekrsna.org/gbc/black/radanath.htm
  http://www.facebook.com/pages/Radhanatha-Swami-is-a-GURU-Fraud/236708009701264
  இறைவன் நாமத்தை பாடினால் உத்தமன் என்பது நம்பிக்கை. செயல்களின் ஆவணங்களே சான்றுகள்.
  //மற்றபடி வேறு யாராவது படித்து அவரைப் பற்றி மேலும் தேடி அவர் எழுதியதைப் படித்தால் நிச்சயம் பக்தராகிவிடுவார்கள். நன்றி.//
  இப்படிப் படிக வேண்டிய புத்த்கம் சொல்லுங்கள் அதையும் விமர்சிக்கிறோம்
  அப்படி பக்தர்கள் ஆன எவராவது நமக்கு தகவல் சொல்லவும் அன்புடன் வேண்டுகிறேன்.
  இப்படி சாமியார்கள் பின்னால் சென்று மோசடியில் சிக்காதீர்கள், அருகில் சென்று ஆலோசனை கேட்டால் வரும் விளைவுக்கு யார் பொறுப்பு???
  நீங்க இஸ்கான் (ஜிபிச்) பக்தரா ?? ஆம்/இல்லை சொல்லுங்கள்!!!
  நன்றி!!!!

  ReplyDelete
 9. பதிலடி இருக்கும்ன்னு தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை ..
  நேரம் இன்மையால் விவாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை .
  ஆன்மீக வாதிகள் கடிவாளம் மாட்ட பட்ட குதிரைகள் . அவர்களை பொறுத்தவரை பக்கவாட்டில் எதுவுமே இல்லை .
  நீங்கள் இல்லை பக்கவாட்டில் காட்சி இருக்கிறது என்று சொன்னால் . ஆதாரத்தோடு அதை நாம் நிரூபிக்க வேண்டும் என்பார்கள் . சரி கழுதை நிருபிக்காலாம் என்று பார்த்தல் கடிவாளத்தை கழட்ட மாட்டார்கள் ...
  ஒரே குஷ்டமப்பா ................சே கஷ்டமப்பா ...........

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் அஞ்சா சிங்கம்,
   ஜெயதேவு தாசு உள்ளிட்ட பதிவுலக ஆன்மீக விளம்பரதாரிகள் அனைவருக்கும் அவர்கள் முன் வைக்கும் கருத்துகளின் நம்பகத் தன்மை பற்றி தெரியும். எனினும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே செய்கிறார்கள் என்வே சொல்லலாம்.

   அவர் மறுப்பு சொல்ல மாட்டார் என் அறிந்ததே. எனினும் எவரும் சாமியார்கள் பின்சென்று பிரச்சினையில் சிக்க வேண்டாம் எனவே கூறுகிறோம்.

   சரி சாமி,புத்தகம் என மட்டும் ஏதோ சொன்னால் கூட பரவாயில்லை, மருத்துவத்திலும் சில பரிசோதித்து ஏற்கப்படாத விடயங்களை விளம்பரம் செய்கிறார்.

   இயற்கை உணவு என்பது மருந்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

   ஆயினும் நோயின் காரணம் அறிந்தே தீர்வு காண வேண்டும்.
   ஆனல் நோய்க்கிருமிகள், தடுப்பூசி போன்ற்வற்றை மறுக்கும் சில சிக்கிச்சை முறைகளையும் பரிந்துரைக்கிறார்.

   எல்லாம் வாலிப வயோதிக அன்பர்களே வகை சார்ந்தது.
   நம் காலத்தில் எதற்கு எளிதில் சிறிது த்கவல் அறிய விக்கிபிபிடியா உள்ளது. நோய் பற்றி குறிப்பிடுவதைப் படியுங்கள்!!!
   http://en.wikipedia.org/wiki/Disease
   A disease is an abnormal condition affecting the body of an organism. It is often construed to be a medical condition associated with specific symptoms and signs.[1] It may be caused by external factors, such as infectious disease, or it may be caused by internal dysfunctions, such as autoimmune diseases. In humans, "disease" is often used more broadly to refer to any condition that causes pain, dysfunction, distress, social problems, or death to the person afflicted, or similar problems for those in contact with the person. In this broader sense, it sometimes includes injuries, disabilities, disorders, syndromes, infections, isolated symptoms, deviant behaviors, and atypical variations of structure and function, while in other contexts and for other purposes these may be considered distinguishable categories. Diseases usually affect people not only physically, but also emotionally, as contracting and living with many diseases can alter one's perspective on life, and their personality.
   Death due to disease is called death by natural causes. There are four main types of disease: pathogenic disease, deficiency disease, hereditary disease, and physiological disease.
   Diseases can also be classified as communicable and non-communicable disease.
   ....
   Only some diseases such as influenza are contagious and commonly believed to be infectious. The micro-organisms that cause these diseases are known as pathogens and include varieties of bacteria, viruses, protozoa and fungi. Infectious diseases can be transmitted, e.g. by hand-to-mouth contact with infectious material on surfaces, by bites of insects or other carriers of the disease, and from contaminated water or food (often via faecal contamination), etc.[14] In addition, there are sexually transmitted diseases. In some cases, micro-organisms that are not readily spread from person to person play a role, while other diseases can be prevented or ameliorated with appropriate nutrition or other lifestyle changes.

   நம் சகோக்கள் அளவு கூட சரியாக விளம்பரம் செய்ய தெரியவில்லை. மாடு மூத்திரம் ஒன்றே அவரை நகைச்சுவை நாயகன் ஆக்கிவிடும். பிறருக்கு பரிந்திரை செய்பவர்,தான் பயன்படுட்துவது இல்லை என்கிறார்.

   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   இவரையும் நம்பும் ஆட்கள் உண்டா? என்பதே நம் கேள்வி!!!

   நன்றி!!!!

   Delete
 10. சார்வாகன்:
  உங்களை மாதி நிறய பேசி வாதம் செய்து ஓய்ந்து போய் தான் நான் என் ஆட்டத்தை மாற்றிக் கொண்டேன். உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  அவர்கள் பதில் எப்போழுதும் இப்படிதான் இருக்கும்: எப்படி? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப் பாக்கு விலை எட்டு ரூவா மாதிரித்தான். இந்த விடயத்தில் பெரியார் வழியில் பொறுமையாக பதில் சொல்லி ஜெயிக்கமுடியவில்லை...

  எனவே, எனக்கு தெரிந்த வழியில் தனி ஆட்டம் ஆடுகிறேன்...எனது குரு M. R. ராதா அவர்கள். அவர் ஒரு அறிவாளி, புத்திசாலி! அவர் வழியைத்தான் நான் பின்பற்றுகிறேன்.

  நான் ரத்தக் கண்ணீர் படம் பார்த்தது 1983 - ல் தான். இருந்தாலும், கல்லூரியில் படிக்கும் போதே எனது பெயர். Dr. Cholesterol- கொழுப்பு பிடித்தவன். நக்கல், நையாண்டி என் கூடவே பிறந்தது; அவை எனக்கு Second nature - மாதிரி! அதனால், நான் என் வழியில் கிழிக்கிறேன். எனது பாலிசி: ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்.

  உங்கள் அறிவார்ந்த உழைப்பிற்கு ஈடு இல்லை. அமெரிக்கனுக்கு உங்க விவாத முறை சரி!

  தமிழனுக்கு என் வழி தான் சரி!
  ஆம், என் வழி தனி வழி!
  என்ன இருந்தாலும் ரசினி என் தெய்வத்தின் தெய்வமல்லவா? அவரை எப்படி விடமுடியும்?

  ReplyDelete
 11. வவ்வால் சொலவது தவறு! சாமியார் என்று சொன்னாலே போதும்:போலி சாமியார் என்று சொல்வது தேவையில்ல!

  இது, எங்க ஊர்க்காரர்கள் சொல்லும் "நடு சென்டர்" மாதிரி இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நம்பள்கி,
   ஆன்மீகப் புரட்டுகள் எழுதுவது இஸ்கான் சுவாமிகளைப் போற்றி என்றவுடனேயே இந்த பதிவு மட்டும் போதும். எனினும் அறிந்த சில லோகாயத கருத்துககளை எழுதுவேன். தாசு விவாதம் செய்ய மாட்டார் என்பது அறிந்ததே.

   அதுதானே முந்திக் கொண்டு ஆத்திகர் எல்லாம் ஓடியாங்க எனக் கூப்பாடு போடுகிறார்.

   பார்ப்பான் அடிவாங்கினால் இந்துக்களை அடிக்கிறான் என்பார்கள், மீனவன்,தலித் மக்கள் அடிவாங்கினால் தமிழ் மீனவர்(இந்தியர் கூட இல்லையாம்), தலித் என்பார்கள் என்பது அறிந்த விடயம்தானே.

   *********
   மருத்துவம் சார்ந்தும் பல போலிகளை அறிமுகம் செய்கிறார். விக்கிபிடியாவில் பார்த்தாலே குட்டு அவிழ்ந்து விடும் என்றாலும்,பலர் ஏமாறாமல் தடுக்க முடிந்தால் மருத்துவரான நீங்கள் தமிழில் சரியான் மருத்துவ முறைகள் பற்றி எழுத வேண்டுகோள் விடுக்கிறேன்.

   நன்றி

   Delete
  2. நம்பள்கி,

   சாமியார் ,போலி சாமியார்னு ரென்டு விதமும் இருக்கு.

   சாமியார்னு சொன்னா , மூட நம்பிக்கையை மூலதனமாக வச்சு ,காசு சம்பாதிச்சுட்டு சொகுசாக வாழ்ந்துவிட்டு போயிடுவாங்க.

   போலிச்சாமியார் என்றால் மூட நம்பிக்கையை வச்சு காசு புடுங்குவதும் இல்லாமல் அழகான பொண்ணுங்களை கில்மாவும் செய்துடுவாங்க, கேட்டால் நான் தான் அவதாரம் ,ஆன்மீக ஆராய்ச்சி செய்தேன் என சொல்வார்கள்.

   சாமியாருக்கு காமெ வெறி முத்தினால் போலிச்சாமியார் :-))

   இஸ்கான் கோஷ்டி, நித்தி, காஞ்சிபுரம் காமகேடி சுப்பிரமணி, காஞ்சி தேவநாதன் எல்லாம் கில்மா செய்யும் போலிச்சாமியார்கள்.

   சாமியார்களை விட ஆபத்தானவர்கள் போலிச்சாமியர்கள் அல்லவா.

   Delete
  3. சோத்துக்காக சாமியார் வேஷம் போடுறவனை கூட மன்னிக்கலாம், ஆனால் சொகத்துக்காக சாமியார் வேஷம் கட்டுறவனை மட்டும் மன்னிக்கவே கூடாது.

   கோயில் வேண்டாம் என கூறவில்லை அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்கிறேன்.

   சாமியார்கள் வேண்டாம் என சொல்லவில்லை அவர்கள் சல்லாபம் செய்யும் சனியன்களாக ஆகிவிடக்கூடாது என்கிறேன்.

   மதம் வேண்டாம் என சொல்லவில்லை ஆனால் மதவெறியாகி விடக்கூடாது என்கிறேன்.

   ஆன்மீகம் வேண்டாம் என சொல்லவில்லை ,ஆனால் அது அடுத்தவர்களை அழித்துவிடக்கூடாது என்கிறேன்.

   கடவுள் வேண்டாம் என சொல்லவில்லை ஆனால் கண்ணுக்கு தெரியாத கடவுள் பேரை சொல்லி கண்ணுக்கு தெரிந்த மனிதனை இழிவுப்படுத்த வேண்டாம் என்கிறேன்.

   அஹம் பிரம்மாஸ்மி!!!!

   Delete
  4. வவ்வாஜி, உங்க கருத்து அப்படியே எனது கருத்தினை பிரதிபலிக்கிறது. நன்றி

   Delete
 12. ///நம்பள்கிNovember 19, 2012 4:35 AM

  இவர்களிடம் பேசுவதே நேர விரயம்; நாமே ஒன்னு கேட்ட இவர்கள் வேற ஏதாவது சொல்லுவாங்க. நம்ம பா.ம.க. இலவச கொத்தனார் மாதிரி இவர் ஆத்திகர்களுக்கு ஒரு இலவச கொத்தனார்; இருவரும், எதைப் பூசுகிறோம் ஓட்டையை அடைக்க என்று தெரியாமல் வேற ஏதாவது சொல்வார்கள். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப் பாக்கு விலை எட்டு ரூவான்னானாம் சில மாக்கான்கள் சொல்வார்கள்; அங்கே கொட்டப்படும் கருத்துகள் அப்பிடி...////

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். எனக்கு பட்டுக்கோட்டையும் வேணாம்...கொட்டப் பாக்கும் வேணாம்..

  இந்த பா.ம.க. இலவச கொத்தனாரு யாரு?

  சாமி அருள் வந்து ஆடாமல் சும்ம சொன்னாலே எனக்குப் புரியும்.

  ReplyDelete
 13. பிரபுபாதாவின் பகவத் கீதையின் விளக்க உரை புத்தகத்தைப் படித்ததுண்டா?

  இல்லை பாத்ததுண்டா?

  ஒரு தலையணை சைசில் திண்டு மாதிரி ரொம்பவே பெருசா இருக்கும்.

  பகவத்கீதையை எழுதியவரே படித்தால் கூட அசந்துவிடுவார். அம்புட்டு கட்டுக் கதைகள்...

  ReplyDelete
  Replies
  1. சகோ இராவணன்,
   அவரின் உரை படித்தது இல்லை. வேறு ஆங்கில மொழியாகம் படித்து இருக்கிறேன். பிரபுபாத படிக்க வேண்டும்.
   கருத்துக்கு நன்றி

   அருள் மழையில் நனையுங்கள்
   இருள் நீங்கி ஒளி பரவட்டும்

   நன்றி

   Delete
 14. @சார்வாள்,

  இப்பதிவுக்கு நன்றி.

  அமெரிக்க நகரத்து பிளாட்பாரங்களில் இஸ்கான் குருப் ஆட்கள் நின்று பாட்டுப்பாடியபடி பிரச்சாரம் செய்வதை கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் பற்றி எவ்வித ஆர்வமும் இருந்ததில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் இவர்கள் தந்த இலவச உணவினை சாப்பிட்டவர் என்பதினால்,ஸ்டீவ் ஜாப்ஸை பிடிக்காது என்ற போதும், சமூக சேவை செய்பவர்கள் என இஸ்கான் மீது ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் உங்க கட்டுரை படித்து பின் விக்கிபீடியாவிற்கு போனதும் வெறுப்புதான் மிஞ்சுகிறது.இவர்கள் மேற்குலகில் இருந்து ஒரிறை கொள்கையை மட்டும் களவாடவில்ல போலும்.கிருத்தவ பள்ளிகளின் பிள்ளைகளின் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு இவர்கள் மீதும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியுற்றேன்.

  தாசு படிக்கட்டும் படிக்காமல் போகட்டும். என்னைப் போன்ற பலருக்கு இது ஐ ஒப்பனர் கட்டுரை. இனி பலர் இஸ்கானை விட்டு விலகி இருப்பர். அதற்கு உமக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்தவனம்,
   வாங்க. நம்க்கு யார் மேலாவது குற்றம் சாட்ட ஆசையா என்ன?. ஆன்மிகவாதிகளில் பலவகை உண்டு என நாம் வகைப்படுத்துகிறோம்.

   1. இவர்கள் இயற்கையே(அல்லது நானும்) கடவுள் என்பவர்கள். தன் அனுப்வத்தின் மீது சார்ந்து தேடுபவர்கள்.பிறருக்கு நீயே தேடிப்பார் என்னைப் பின்பற்றாதே என சொல்லி எளிய வாழ்வு வாழ்ந்து சென்றவர்கள். இவர்கள் வாழ்வின் சிக்கல்களுக்கு இங்கேயே விடை காண முயற்சிப்பவர்கள்.

   புத்தர்,மகாவீரர்..இன்னும் விவேகானந்தர் வரை சொல்லலாம்.விவேகானந்தர் என்ன சொன்னார் என்பதை சரியாக அறிய முடியாத படி செய்த்து விட்டார்கள்.மாமிச உணவு உண்பார் என்பதை பகிர்ந்தமைக்கு நன்றி. அவர் மீது நமக்கு கொஞ்சம் மதிப்பு உண்டு. அது கூடுகிறது.வேடம் போடாமல் ஒருவர் தான் பேசுவதை பரிசோதித்துபார் என்றால் மட்டுமே சரி.


   2. மத புத்த்கம் சார் விளம்பரதாரிகள். இவர்களின் நோக்கம் பணம்,புகழ் சம்பாதிப்பது என்றாலும் ஏதாவது புதுப் புது விளக்கம் கொடுத்து பீதியை கிளப்புவர். கொஞ்சம் தள்ளி நிற்பதே சரி.

   3.இதில் நானே கடவுள் அவதாரம் என சொல்பவர்கள் பிறரை தங்கள் அடிமைகளாகவே ஆக்கி விடுவர். மூளைசலவை செய்வதில் கை தேர்ந்தவர்கள்.

   ஒருவனுக்கு எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்தே நாத்திகம் ஆக வேண்டுமெனில் முடியாது.

   அப்படி விடை தெரியா கேள்விகளை வைத்தே வளைப்பார்கள்.அப்படி அவர்கள் சொல்லும் பதில் சரி பார்க்க இயலாமல் இருக்கும்.

   இதில் நிகழ்கால் வாழ்வின் சிக்கல்களில் பொருளாதார போட்டிகளில் மனக் குழப்பம் தீர விட்டில் பூச்சி போல் தீர்வு தேடி சாமியார்கள் வலையில் விழுகிறார்.

   நித்தியின் வலையில் வீழ்ந்த இன்னொரு பெண் வெளிநாட்டில், குடும்பமாக,மகிழ்வாக வேலை பார்த்து வாழ்ந்த பெண். நித்தி கொடுத்த குழப்ப விளக்கங்களில் அடிமையாகி தன்னை இழந்தார்.

   இதுவும் ஒரு போதையே. ஆகவே இஸ்கான் என்றில்லை வாழும் மனிதர் எவரையும் கண்ணை மூடிக் கொண்டு வழி காட்டி என்பதும்,பின்பற்றுவதும் அழிவையே தரும்..

   இதில் மதம் வித்தியாசம் கிடையாது.இது நாத்திகம் பேசும் அரசியல் தலைகளுக்கும் பொருந்தும்.

   அய்யன் திருவள்ளுவர் கூறுகிறார்.

   எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்பது அறிவு

   திருக்குறளை விட சிறந்த புத்தகம் நான் கண்டது இல்லை.

   (படித்து) சிந்திக்க மாட்டீர்களா!!

   ஊதும் சங்கை ஊதுவோம்

   நன்றி!!!!

   Delete
 15. நீங்கள் ஒரு முறை சகோ வவ்வாலின் பதிவில் விவேகானந்தர் ஒரு பிராமணரா என கேட்டிருந்தீர்கள். அப்பதிவினை மிகவும் தாமதமாக பார்த்ததால் அங்கு விடையளிக்க இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறேன். அவர் காயஸ்தா சாதிக்காரர். அந்த சாதியினர் சிலர் பிராமணர் என தாமே சொல்லிக் கொண்டாலும் அது சத்தரிய சாதியே. இதனால் விவேகானந்தர் மாமிச உண்ணியாக உள்ளார். அவர் பிராமணர்கள் வேதங்களின் அறிவினை காப்பாற்றிய காரணத்தினால் அவர்களை உயர்வாக சில இடங்களில் கூறியுள்ள போதும் அவர்கள் பிற சாதியினருக்கு அறிவினை பகிர மறுத்ததை கண்டித்தே பல இடங்களில் பேசியுள்ளார். உதாரணமாக விவேகானந்தரை கறி சாப்பிடும் கீழ்சாதி சத்திரியர், அவர் ஒரு போதும் இந்து சந்யாசி ஆக இயலாது என சொன்ன பிராமணர்களுக்கு அவரின் பதில்...

  “You speak of the meat-eating Kshatriya. Meat or no meat, it is they who are the fathers of all that is noble and beautiful in Hinduism. Who wrote the Upanishads? Who was Râma? Who was Krishna? Who was Buddha? Who were the Tirthankaras of the Jains? Whenever the Kshatriyas have preached religion, they have given it to everybody; and whenever the Brahmins wrote anything, they would deny all right to others. Read the Gitâ and the Sutras of Vyâsa, or get someone to read them to you. In the Gita the way is laid open to all men and women, to all caste and colour, but Vyasa tries to put meanings upon the Vedas to cheat the poor Shudras. Is God a nervous fool like you that the flow of His river of mercy would be dammed up by a piece of meat? If such be He, His value is not a pie!” (Complete works, Vol-4, p-359).

  நன்றி.

  இவரைப் போலத்தான் பாரதியையும். பலரை நாத்திக அல்லது குறைந்தபட்சம் Agnosticism நோக்கி நகர விவேகானந்தர் மற்றும் பாரதி போன்றோரின் எழுத்துக்கள் வழிகாட்டுவதாக கருதலாம்(இட்லிவடையில் வந்த ஞானியின் பேட்டி 2ம் பாகம் கேட்கவும்). இவர்கள் பழமையிலிருந்து புதுமைக்கு நம்மை நகர்த்துபவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்தவனம்,
   ஆம் நீங்கள் சொல்வது சரி. வரலாற்றில் பலர் வேதங்களுக்கு எதிராக் மாற்றுக் கருத்து வைக்க தொடர்ந்து முய‌ற்சி செய்த்து உள்ள‌னர். உபநிஷத்துகள் கூட அப்படித்தான்.ஆனால் அதையும் பவுத்தம் போல் ஏற்று முழுங்கி விட்டது வைதீக மதம். எனினும் சில மாற்ரங்கள் வந்த்ன. அந்த வகையில் விவேகானந்தர்,பாரதி என வைக்க்லாம்.

   ஒரு உண்மையான ஆன்மீக வாதி மதத்தின் கருத்துகளை இப்போதைய சூழலுக்கு பொருந்தும் படி விளக்கி, இயற்கைக்கு மேம்பட்ட செயல்களை செய்வது இயலாது என்பதை வலியுறுத்தினால் நாத்திகத்திற்கு வேலை இல்லாமல் போய் விடும்.

   மதம் என்பது வாழ்வியல் நடைமுறைக் கருத்துகள் மட்டுமே, இது இன பேதமற்றது ,அரசியல் தொடர்பற்ற‌து என்றால் அதனை யார் விமர்சிப்பார்?

   இன்னும் பலர் யாகம் செய்து எது வேண்டுமானாலும் செய்வேன் என காசு பறிக்கிறான்.அரசியல் பெரும் தலைகளே நம்புகிறார்.

   இயற்கைக்கு மேம்பட்ட செய்லை எதன் மூலமும் செய்ய இயலாது என்பதை புரிய வைப்பதே நாத்திகம் என நான் நினைக்கிறேன்.

   கீழே நண்பர் இராஜாவின் பின்ன்னூட்டம் பாருங்கள்.இன்னும் இப்படி நம்பிக்கை கொண்ட மனிதர்கள்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   நன்றி!!!!

   Delete
  2. நன்றாக சொன்னீர்கள் சகோ,

   நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதையே புரிந்து கொள்ளாமல், உங்களுக்கு குல்லா போட்டுவிட ஒரு கூட்டமும், நாமமும் பட்டையும் போட்டுவிட இன்னொரு கூட்டமும் அலைகிறது. என்னவோ போங்கள்.

   நன்றி.

   Delete
  3. சகோ அதை ஏன் கேட்கிறீங்க!!!.
   தன்னிலை விள்க்கம் கொடுத்தே ஓய்ந்து விட்டேன்.

   எல்லாம் செயதேவு தாசின் செயல்.அவர் பாட்டுக்கு இருந்தால் நாம் உண்டு , நம் சகோக்கள் உண்டுனு இருப்போம்,சுவன‌ அண்ணன் பதிவு போட ,நாம் இலாவணி பாட,எதிர் பதிவு போட என ஜாலியா இருந்தோம். நம்ம தாசும் இடையில் புகுந்து ஃபித்னா(குழப்பம்) ஆகி விட்டது!!!

   நன்றி

   Delete
 16. சார்வாகன்
  தங்கள் கூட்டம் விவேகானந்தரை முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. தாங்கள் கடவுள் உண்டா? பார்த்தவர்கள் இருக்கிறார்களா? என்று தேடி அலைந்ததுண்டா? அப்படி அலைந்து யாராலும் கடவுளைக் காட்ட முடியாதபோது ராமகிருஷ்ணர் அவருக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று அவருக்கு வழிகாட்டியதனால் அவரை உலகம் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளார். சார்வாகனை இன்டர்நெட்டில் எத்தனை லட்சம் மக்கள் அறிவார்களோ தெரியாது. அவருடைய ஆற்றலைப் பாருங்கள். துப்பாக்கியையே தொட்டுப்பார்க்காதவர் தண்ணீரில் ஓடும் முட்டை ஓடுகளை மிகச் சரியாக சுடுகிறார். தன்னைச் சுற்றி துப்பாக்கி குண்டுகள் வந்தாலும் தியானத்தில் அசையாமல் இருக்கிறார். ஒரு என்சைக்ளோபீடியா புத்தகத்தை சில நிமிடங்களில் படித்துவிடுகிறார். இன்றும் இமயமலையில் ஏராளமான சன்யாசிகள் உடலில் ஆடையின்றி தவம்புரிகின்றனர். ஆண்டிபட்டி சாமி என்பவர் தேனி அருகில் நாழிமலையை சுற்றி கிரிவலம் செல்ல சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடை கோவணம் மட்டுமே. உங்கள் கூட்டத்தாரில் எவருக்கேனும் தீராத வியாதி இருந்தால் அவரிடம் போய் தீர்த்துக்கொள்ளலாம். சதுரகிரி மலையில் ஒரு சன்யாசி வருகின்றவர்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார். திருவண்ணாமலையிலும் சடைசாமி என்பவர் அன்னதானம் செய்கிறார். அவர்களைப் போன்றவர்கள் செய்வதில் உங்களால் ஒரு நூற்றில் ஒரு பங்கு செய்ய முடியாது. இதுபோல் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நமக்குத் தெரியவில்லை. ஹரித்வாரில் சிவானந்தா ஆசிரமத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் 3 நாட்கள் உணவுடன் தங்கிக்கொள்ளலாம். தவறு செய்பவர்களின் தவறுகளைத் திருத்த நாம் கட்டுரைகள் வெளியிடலாம். ஆனால் நாத்திகம் வெத்துவேட்டு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராஜா
   //தங்கள் கூட்டம் விவேகானந்தரை முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. தாங்கள் கடவுள் உண்டா? பார்த்தவர்கள் இருக்கிறார்களா? என்று தேடி அலைந்ததுண்டா? அப்படி அலைந்து யாராலும் கடவுளைக் காட்ட முடியாதபோது ராமகிருஷ்ணர் அவருக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று அவருக்கு வழிகாட்டியதனால் அவரை உலகம் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.//

   இப்பதிவு இஸ்கான் என்னும் மோசடி மத குருக்கள் பற்றியது. விவாகானந்தர் பற்றிய விவாதம் தேவை இல்லாதது. விவேகானந்தர் மட்டுமல்ல் உலகில் பிறந்த யாரும் இயற்கைக்கு மெம்பட்ட சக்தியை உண்ர்ந்து இருக்கிறேன் என்றால் அது பொய். நாம் திரும்பி திரும்பி சொல்கிறோம்
   சான்றுகள் அற்ற விடயத்தை உண்மை என ஏற்பது இல்லை.

   விவேகான்ந்தருக்கு இராம்கிருஷ்னர் எப்படி கடவுளைக் காட்டினார்?.இது பொய் பரப்புரையே ஆகும்.

   நான் இறப்புக்கு பின் மறுமை வாழ்வு,ஆன்மா போன்ற்வற்றை ஏற்பது இல்லை. இந்த கதைகள் பார்ப்பனர்கள் ஏமாற்றி வாழ கட்டிவிட்டவை

   *************
   //அவருடைய ஆற்றலைப் பாருங்கள். துப்பாக்கியையே தொட்டுப்பார்க்காதவர் தண்ணீரில் ஓடும் முட்டை ஓடுகளை மிகச் சரியாக சுடுகிறார். தன்னைச் சுற்றி துப்பாக்கி குண்டுகள் வந்தாலும் தியானத்தில் அசையாமல் இருக்கிறார். ஒரு என்சைக்ளோபீடியா புத்தகத்தை சில நிமிடங்களில் படித்துவிடுகிறார். இன்றும் இமயமலையில் ஏராளமான சன்யாசிகள் உடலில் ஆடையின்றி தவம்புரிகின்றனர். ஆண்டிபட்டி சாமி என்பவர் தேனி அருகில் நாழிமலையை சுற்றி கிரிவலம் செல்ல சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடை கோவணம் மட்டுமே. உங்கள் கூட்டத்தாரில் எவருக்கேனும் தீராத வியாதி இருந்தால் அவரிடம் போய் தீர்த்துக்கொள்ளலாம். சதுரகிரி மலையில் ஒரு சன்யாசி வருகின்றவர்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார். திருவண்ணாமலையிலும் சடைசாமி என்பவர் அன்னதானம் செய்கிறார். அவர்களைப் போன்றவர்கள் செய்வதில் உங்களால் ஒரு நூற்றில் ஒரு பங்கு செய்ய முடியாது. இதுபோல் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நமக்குத் தெரியவில்லை. ஹரித்வாரில் சிவானந்தா ஆசிரமத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் 3 நாட்கள் உணவுடன் தங்கிக்கொள்ளலாம். தவறு செய்பவர்களின் தவறுகளைத் திருத்த நாம் கட்டுரைகள் வெளியிடலாம். ஆனால் நாத்திகம் வெத்துவேட்டு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.//
   இதற்கு இணயத்தில் சான்று கொடுங்களேன் சுவாரஸ்யமாக இருக்கிறது!!

   நான் இவர்களைப்போல் ஏன் செய்ய வேண்டும்?. வேதங்கள் என்பவை உழைப்போரை ஏமாற்ற எழுதப்பட்ட கட்டுக் கதைகள் என்பதே என் வாதம்.
   ஏதாவது மத புத்த்கத்தின் மீதோ அல்லது, நீங்கள் குறிப்பிட்டசம்பவங்களின் சான்றுகள் மீது மட்டும் வாதம் வைக்கவும்.

   நாத்திகம் என்பது சான்றுகளை மட்டும் ஏற்பது. அது வெத்து வேட்டு என்றால்
   பிராமணன் உயர்ந்த சாதி பிரமன் தலையில் இருந்து வந்தான் என்னும் உண்மையை நம்புபவரா?

   நான் மத புராணக் குப்பைகளை விட சான்றுகள்(வெத்து வேட்டுகளையே ) நம்புகிறேன்.

   சமஸ்கிருதத்தின் வரலாறு அறிந்தாலே வேதம் என்பது புரட்டு என்பது தெரிந்து விடும்!!

   சமஸ்கிருதம் எப்போது ,எங்கே தோன்றியது? சிந்திக்க மாட்டீர்க்ளா!!


   மிக்க நன்றி!!!!

   Delete
 17. சகோ ராஜா, நீங்கள் மிகவும் விவேகானந்தரை படித்துவிட்டதாக கருதுகிறீர்களா?

  “He is an atheist who does not believe in himself. The old religions said that he was an atheist who did not believe in God. The new religion says that he is an atheist who does not believe in himself.” இப்படி சொன்னவரும் விவேகானந்தர்தான்.

  சகோ சார்வாகன் தன்னை நம்புகிறார், ஆதலால் நாத்திகம் பயிலுகிறார், இதிலென்ன தவறு.

  எனக்கு தெரிந்தவரை நீங்கள் சொல்லும் வித்தைகளை செய்யும் சாமியார்களை விவேகானந்தர் கண்டித்து உள்ளார். அவருக்கு எதிர்காலம் உரைத்த கும்பகோணத்தை சேர்ந்த ஒருவரை உம்மிடம் உள்ள சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துமாறு அறிவுரை சொன்னாதாக படித்திருக்கிறேன் (பின்பு அவர் துறவியாகிவிட்டராம்). நீங்களோ அந்த குட்டையில் போய் விழ சார்வாகனிடம் சொல்கிறீர்கள்.

  விவேகனாந்தர் மேலும் சொல்லுகிறார்...

  We reject none, neither theist, nor pantheist, monist, polytheist, agnostic, nor atheist; the only condition of being a disciple is modelling a character at once the broadest and the most intense. Nor do we insist upon particular codes of morality as to conduct, or character, or eating and drinking, except so far as it injures others.

  மேலும் அஹம் பிரம்மாஸ்மி என்றுதானே உமது வேதங்கள் முழங்குகின்றன? அப்புறம் யாரை வணங்குவது தன்னைத் தானேயா?

  ReplyDelete
 18. /////ஆண்டிபட்டி சாமி என்பவர் தேனி அருகில் நாழிமலையை சுற்றி கிரிவலம் செல்ல சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடை கோவணம் மட்டுமே. உங்கள் கூட்டத்தாரில் எவருக்கேனும் தீராத வியாதி இருந்தால் அவரிடம் போய் தீர்த்துக்கொள்ளலாம்.////

  தீராத வியாதிகளை தீர்த்து வைக்கும் இந்த சாமியை மக்களிடம் கொஞ்சம் விளம்பர படுத்தினால் என்ன?ராஜா, எத்தனை எளிய மக்கள் பணம் பிடுங்கி தனியார் மருத்துமனைகளில் படாதபாடுபடுகிறார்கள் .ஏன் இது மக்களுக்கு தெரியாமல் இல்லை.மீனாட்சி மிசன் மருத்துமனை கூட்டம் அப்படியே அங்கெ திரும்பியிருக்குமே !அது ஏன் இன்றும் நடக்கவில்லை?

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   கலக்குறீங்க இருந்தாலும் நபி(சல்) சொல்வதை பின்பற்ற‌ மறுப்பதே நமது வருத்தம்
   1. எய்ட்சுக்கு மருந்து
   5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.
   இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:
   'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.
   Volume :6 Book :76

   2. மதினாவின் சிறப்பு

   பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7133 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
   மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழைய மாட்டான்.
   என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

   மதினாவில் மருத்துவரே தேவையில்லை!!!
   இறைவன் மிக பெரியவன்!!!!!!!!!
   நன்றி!!!!

   Delete
 19. வணக்கம் சகோ.

  ஆன்மீகத்தை பற்றிய நல்ல‌ அலசல் பதிவிட்டுள்ளீர்கள் இதைப்பார்த்தாவது சாமியார்களின் உள் நோக்கங்களை பக்தர்கள் உணர்ந்து கொண்டால் சரியே!நான் தான் கடவுள்,தூதர், அவதாரம்,செவி வழிச் செய்தி,மாயாஜால வித்தைகள் போன்ற மோசடி வழிகளில் சிக்க வைத்து, மனிதர்களை மயக்க நிலையிலேயே மரணம் வரை தொடரும் இந்த அவலம் யாவும் கட்டுக் கதைகள் என்பதை இந்த சமுதாயம் உணரவேண்டும். அதற்கான உந்துதல் தங்களைப் போன்ற பொதுப் பார்வைப் பதிவர்களினால் தான் சாத்தியப்படும்.அதற்காக என் நன்றிகள்..

  //யாராலும் கடவுளைக் காட்ட முடியாதபோது ராமகிருஷ்ணர் அவருக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று அவருக்கு வழிகாட்டியதனால் அவரை உலகம் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளார.//

  ராஜா நல்ல நகைச்சுவய் ஒன்றை உதிர்த்துள்ளார் பாருங்கள். எந்தக் கடவுள் என்று சொல்லாமல் பொதுவாக சொல்லி தப்பித்துக் கொண்டார்.இஸ்லாமில் கடவுளை யாராலும் பார்க்க முடியாது.இயேசு வேறு உயிரோடிருக்கிறாராம்.யார் கடவுள்???

  ReplyDelete
 20. //2. மதினாவின் சிறப்பு

  பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7133 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
  மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழைய மாட்டான்.
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

  மதினாவில் மருத்துவரே தேவையில்லை!!!
  இறைவன் மிக பெரியவன்!!!!!!!!! ந‌ன்றி ச‌கோ....

  ம‌தினா மூமின்க‌ள் யாரும் இனி த‌டுப்பூசி போட்டுக் கொள்ளாம‌ல் வான‌வ‌ர்க‌ளை ந‌ம்பி இருப்பார்க‌ளாக‌ ஆமீன்!!!!!!!!!

  ReplyDelete
 21. முஹம்மது நபி[ஸல்] அவர்கள் , காலத்தில் இருந்த அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளதாக கூறியுள்ளார்கள் .இனி வரும் காலத்தில் உள்ள நோய்களுக்கும் மருந்து இதுதான் என்று சொல்லவில்லை .அவர்கள் காலத்தில் எய்ட்ஸ் இல்லை .அதனால் அதற்கு மருந்து தேவையும் இல்லை. மேலும் அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது என்பதை இங்கு ஆலோசனையாகத்தான் சொல்லுகிறார்கள் .அதுவே தீர்வு என்று சொல்லவில்லை .இன்னும் எய்ட்ஸ் நோய் அவன் விபச்சாரம் செய்ததற்கு ஒரு சாட்சியாகும் .அதனால் எய்ட்ஸ் க்கு மருந்து தேவை இல்லை அவனது விபச்சார குற்றத்திற்கு மரண தணடனைவுள்ளதால் வைத்தியம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

  மதினாவில் கொள்ளை நோய் என்று சொல்லப்படுவது காலரா .அந்த நோய் அங்கு அப்போதைய கட்டத்தில் வராது என்று மட்டுமே ஹதித் சொல்லியிருக்கிறது .அதனால் அவற்றினை திரித்து புளகாங்கிதம் அடையவேண்டாம்

  ReplyDelete
 22. //மதினாவில் கொள்ளை நோய் என்று சொல்லப்படுவது காலரா .அந்த நோய் அங்கு அப்போதைய கட்டத்தில் வராது என்று மட்டுமே ஹதித் சொல்லியிருக்கிறது .அதனால் அவற்றினை திரித்து புளகாங்கிதம் அடையவேண்டாம்//

  ம‌தினாவில் வான‌வ‌ர்க‌ள் காவ‌ல் இருந்தத‌னால் நோய் வ‌ராதா? அல்ல‌து வ‌ராத‌ நோய்க்காக‌ வான‌வ‌ர்க‌ள் காவ‌ல் இருந்தார்க‌ளா?இப்ப‌ ம‌தினாவில் நோய் தடுப்புக்காக காவலில் இருப்ப‌து யார்? இல்ல‌ அப்போதைய‌ க‌ட்டத்தில் தான் பாச்சா ப‌லிக்குமா? நாங்க‌ கேட்கும் கேள்விக‌ள் எல்லாம் ஹ‌ஜ் ப‌ய‌ண‌த்தில் த‌டுப்பூசி எத‌ற்கு? வான‌வ‌ர்க‌ள் எல்லாம் அழையா விடுப்பில் போய்விட்டார்க‌ளா?


  ReplyDelete