Monday, July 29, 2013

தமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.



வணக்கம் நண்பர்களே,


இயற்கை வளங்களின் மீதான பங்கீட்டிற்கு  உரிமைகோரல் என்பதற்காக ,மனிதர்களுக்கிடையே போட்டி என்பது தவிர்க்க இயலாது.இதில் தனிமனிதனின் இருந்து குடும்பம்,இனக்குழு,சாதி ,மதம்,நாடு என போட்டி ஒவ்வொன்றிலும் ,ஒவ்வொன்றுக்கு இடையேயும் இருப்பது கண்கூடு.[எங்க ஊரில்,மதத்தில்,இனக்குழுவில் அப்படி இல்லை என சொல்லும் உலக அதிசய மனிதர்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் ஹி ஹி!!!]

மனிதனுக்கு உடல்& உணர்வு  ரீதியான தேவைகள் உண்டு.இந்த தேவைகளின் தீர்வுகளை இயற்கையில் இருந்தே பெறுகிறான். உடல் ரீதியான தேவைகள் என உணவு,உடை,உறைவிடம்,பாலுறவு,சுகாதாரம் போன்றவைகளைக் கூறலாம்.

உணர்வுரீதியான தேவைகள் ,காதல்,அன்பு,ஆன்மீகம்,கொள்கை&கோட்பாடு போன்றவற்றை கூறலாம்.

இப்பதிவில் உடல்ரீதியான தேவைகள் சார்ந்து மனிதனின் போட்டி& போராட்டம் பற்றி மட்டுமே சிந்திப்போம்.[சிந்திக்க மாட்டீர்களா???]

மனிதர்களை பல வகையான சிந்தனைகள்,கொள்கை,கோட்பாடுகள் கொண்டவர்கள் என்பது பரிணாம விதி. வாழும் சூழல்,உணவு உள்ளிட்ட இதர காரணங்களினால் உடல் அமைப்பும் கூட வித்தியாசப்படுகிறது.

இயற்கை வளங்களின் மீதான உரிமை கோரலின் போட்டி என்பதன் மறு பெயர்கள்தான்,போர்,ஆக்கிரமிப்பு,பொருளாதார அமைப்புகள் எனலாம்.

தற்காலத்தில் கல்வி& வேலைவாய்ப்பு என்பது வாழ்வாதாரம் நிணயிக்கும் காரணி ஆனபடியால்,ஒவ்வொருவரும் நல்ல கல்வி கற்று வேலை வாய்ப்பும் பெற முயல்கின்றனர். மனிதர்களின் வாழும் சூழல் வித்தியாசப் படுவதால் போட்டி என்பது சிலருக்கு எளிதாகவும்,பலருக்கு கடினமாகவும் இருக்கும்.இதனை மனதில் கொண்டு சமூகத்தில் வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட பங்கீடு என்னும் சமூக மேம்பாட்டு முறையை பல சமூக ஆய்வாளர்கள்,அறிஞர்கள் முன்வைத்தனர்.

இட ஒதுக்கீடு பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில்,குறிப்பிட்ட கால அளவுக்கு  அமல்படுத்தப் பட்டால்,அதன் பிறகு மக்கள் தொகை கட்டுக்குள் உள்ள‌ ஒரு நாட்டில் அது பலன் அளித்து,இடப் பங்கீட்டின் தேவை இல்லாமல் போகும். போட்டி என்பது நியாயமாக நடக்கும் என்பதே அவர்களின் கணிப்பு.


அந்த வகையில் தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் சுமார் 100 வருடத்திற்கு மேலாக வழங்கப் பட்டு வருகிறது.

பங்கீட்டு சதவீதங்கள் பல மாற்றங்கள் கண்டு வந்துள்ளது. தற்போது இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் கீழ்க்கண்டவாறு இடப்பங்கீடு வழங்கப்படுகிறது.
Present caste-based reservation system of Union Government[edit]
Category as per Government of India
Reservation Percentage for each Category as per Government of India
அட்டவனைப் சாதிப்பிரிவு வகுப்பினர்
15%
அட்டவனை மலை சாதிப்பிரிவு வகுப்பினர்
7.5%
இதர பின்தங்கிய வகுப்பினர்
[பின் தங்கிய சாதிப் பிரிவினருக்கு, பொருளாதர அளவு கோள் உண்டு]
27%
Total constitutional reservation percentage49.5%

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தவிர அட்டவனைப் பிரிவு+பின் தங்கியோர் இடப் பங்கீடு 50%க்கு குறைவாகவே இருக்கும்.

பொதுவாக அட்டவனை பிரிவு 18%,இதரபின்தங்கியோர் 31% என்பதுதான் இந்திய நடைமுறை.அதிலும் கிரீமி லேயர் எனப்படும் பொருளாதர வலிமை உடைய பின்தங்கிய சாதிப் பிரிவினர் ,பொதுப் பிரிவில்(50%) மட்டுமே போட்டியிட முடியும்.

இடப் பங்கீடு 50% மேல் செல்லக் கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பும் உண்டு.

Printer Friendly Page Send this Article to a Friend

Reservation should not exceed 50 per cent in medicine: Supreme Court
By J. Venkatesan
NEW DELHI NOV. 5. A five-judge Constitution Bench of the Supreme Court has held that the total reservation for admission to MBBS and postgraduate medical courses in the country should not exceed 50 per cent. For super specialty courses, there shall be no reservation and admission shall be based purely on merit.


 சரி தமிழ்நாட்டில் இடப் பங்கீடு எப்படி?
The below details are provided as per Gazette of Government of Tamil Nadu Web link http://www.tn.gov.in/acts-rules/law/act_10to12_131_07jun06.pdf
Main Category as per Government of Tamil Nadu
Sub Category as per Government of Tamil Nadu
Reservation Percentage for each Sub Category as perGovernment of Tamil Nadu
Reservation Percentage for each Main Category as perGovernment of Tamil Nadu
Category as perGovernment of India
26.5%
30%
3.5%
20%
15%
18%
only for Arunthathiyar (Sakkiliar)
3%
1
Total Reservation Percentage
69%

பாருங்கள் தமிழ்நாடு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிவிட்டது. மேலும் பிந்தங்கிய சாதிப் பிரிவினருக்கு கிரீமி லேயர் கட்டுபாடும் கிடையாது.ஆகவே தமிழகத்தில் முற்பட்ட சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள்,இரண்டாம் தரக் குடிமக்கள் போல் நடத்தப்படுகிறார்கள். ஆகவே அவர்களில் பெரும்பான்மையோர் புலம் பெயர்வதால் நாட்டில் அறிவு+திறமைக் குறைவுபடுகிறது. இதுதான் இந்தியாவின்(தமிழகத்தின்) சிக்கல்களுக்கு காரணம் என்னும் பிரச்சாரம் இணையத்தில் கட்டவிழ்க்கப் படுகிறது.சகோ புரட்சி மணி சிங்களர்கள் ஈழத் தமிழர்களை ஒடுக்குவது போல், திராவிடர்கள், முற்பட்ட சாதியினரை ஒடுக்கிறார் என்னும் வாதத்தினையும் வைத்தார்.

இதற்கு அடிப்படை உண்டா என்பதை தமிழகம் எப்படி உச்சநீதி மன்றத் தீர்ப்பினை மீறாமல் குறுக்கு வழி ஒன்றை கையாள்கிறது என்பதை அறிந்தால்,உண்மையில் தமிழகத்தில் முற்பட்ட சாதியினருக்கும் மறைவு இடப் பங்கீடு உள்ளது என்பதை அறிய முடியும்.

படியுங்கள் தமிழக இட ஒதுக்கீடு பற்றிய விக்கி பிடியா!!!

Present practice[edit]

At present, reservation works out to somewhat less than 69%, depending on how many non-reserved category students are admitted in the super-numerary seats. If 100 seats are available, first, two merit lists are drawn up without considering community (reserved or unreserved), one for 31 seats and a second for 50 seats, corresponding to 69% reservation and 50% reservation respectively. Any non-reserved category students placing in the 50 seat list and not in the 31 seat list are admitted under super-numerary quota (i.e.) seats are added to the 100 for these students. The 31 seat list is used as the non-reserved open admission list and 69 seats are filled up using the 69% reservation formula (30 seats obc, 20 seats mbc, 18 seats sc and 1 seat st). The effective reservation percentage depends on how many non-reserved category students figure in the 50 list and not in the 31 list. At one extreme, all 19 (added from 31 to make the 50 list) may be non-reserved category students, in which case the total reservation works out to about (69+19)/119 or 74% with 16%(19 in 119) considered as a 'reservation' for non-reserved category students! At the other extreme, none of the 19 added to the 31 list may be from the non-reserved category, in which case no super-numerary seats are created and reservation works out to be 69% as mandated by the state law.
தமிழாக்கம்: இந்த அதி முக்கிய விக்கிபிடியாவின் தமிழ் வடிவம் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.ஆகவே நாம் தமிழாக்கம் செய்கிறோம்.

தற்போது இடப்பங்கீடு 69%க்கு குறைவாக இருக்கும் சாத்தியம்,மேல் அதீத ஒதுக்கீடான 19% ல் முற்பட்ட சாதியினர் எவ்வளவு இடம் பெறுகிறார்கள் என்பதனைப் பொறுத்து உள்ளது. தமிழகத்தில் இருவகையான இடபங்கீட்டு தகவல் அறிக்கைகள் தயார் படுத்தப் படுகின்றன்

1.)முதல்  அறிக்கையில்  மொத்த இடங்கள் 100 என்றால்,முதல் 31 இடங்கள் பொதுப் பிரிவிலும்.,மீதி 69 இடங்கள் இடப்பங்கீடு சார்ந்தும் பங்கிடப்படுகிற்து.

[இது சரியாக அமல் படுத்தினால் பொதுப் பிரிவில் இடம் பிடித்த  இறுதி மாணவனின் மதிப்பெண்,இட ஒதுக்கீட்டில் இடம் பெற்ற முதல் மாணவனின் மதிப்பெண்ணை விட அதிகமாக இருக்க வேண்டும்.]

2.) இரண்டாம் அறிக்கையில்  மொத்த இடங்கள் 100 என்றால்,முதல் 50 இடங்கள் பொதுப் பிரிவிலும்.,மீதி 50 இடங்கள் இடப்பங்கீடு சார்ந்தும் பங்கிடப்படுகிறது.


இப்போது 50% இட பங்கீட்டில் எவ்வளவு முற்பட்ட சாதி மாணவர்கள் இடம் பெறுகிறார் என்ற பட்டியல் விவரம் 31% இடப் பங்கீட்டில் உள்ள முற்பட்ட மாணவர்களின்  அளவோடு ஒப்பிடப் படுகிறது.

.கா 31 % ஒதுக்கீட்டில்  பொதுப் பிரிவில் முற்பட்ட சாதி மாணவர் 15 பேரும், 50 % ஒதுக்கீட்டில் 25 பேரும் வருகிறார்கள் என வைப்போம்.இப்போது 31% பொதுப்பிரிவில் இடம் கிட்டாமல்,50% பொதுப் பிரிவில் இடம் பெற்ற 10 முற்பட்ட சாதி மாணவர்களுக்கு ,மேல் அதீத இடங்கள்[super-numerary seats] என்னும் பிரிவில் இடம் கிடைக்கும்.

இந்த மேலதிக ஒதுக்கீடு[super-numerary seats] அதிக பட்சம் 19% வரை இருக்கலாம். இதில் முற்பட்ட சாதியினர் மட்டுமே வரமுடியும். ஆகவே 50% இட ஒதுக்கீட்டினால் இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கும் வாய்ப்பு தமிழகத்திலும் கிட்டுகிறது.

இந்த முறையில் அரசு விரும்பினால் முற்பட்ட சாதியினருக்கு குறைந்த பட்சம் 19% இடப் பங்கீடு கிடைக்கும் படி செய்ய முடியும் என்பது எளிதில் புரியும்.இந்த  அரசு செய்யும் எனவே கணிக்கலாம்.

ஆகவே தமிழகத்தில் முற்பட்டவர் ஒதுக்கப்படுகிறார் என்னும் வாதம் பொய்யானது.

முற்பட்டவர் ஒதுக்கப்படுகிறார் என்றால் ,கடந்த 5 வருடங்களில்,மருத்துவம், அரசு பொறியியல் கல்லூரிகளில் முற்பட்ட சாதியினர் எவ்வளவு சதவீதம் இடம் பெற்றனர் என்னும் புள்ளி விவரம் அறிந்தால் போதுமானது.

முற்பட்ட வகுப்பினர் தமிழகத்தில் அதிக பட்சம் 10_15 % என சொல்லாம்.இந்த 5 வருடங்களில் மருத்துவம், அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 10%க்கும் குறைவாக முற்பட்ட சாதியினர் இடம் பெற்றனர் என்பது புள்ளிவிவரம் அடிப்படையில் அறிய முடிந்தால் முற்பட்ட சாதியினருக்கும் 5_10% இட ஒதுக்கீடு கொடுப்பதில் தவறில்லை எனவே கூறுகிறோம்.

நிச்சயமாக பொதுப் பிரிவில் ,இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் பங்கு அதிகரிக்கிறது.ஆனாலும் முற்பட்டோர் பாதிக்கப் படாத வகையில் இந்த அரசு மேல் அதீத இடப்பங்கீடு கொடுத்து சரி செய்கிறது.

இது சரி ,தவறு என வாதம் செய்ய விரும்ப வில்லை[அது சாதி அரசியல் செய்வோரின் வேலை!!],ஆனாலும்  தமிழகத்தில் முற்பட்டோர் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுகிறார் என்பது தவறான வாதமே.

சாதிகள் ஒழிய அதுபற்றிய புரிதல் வேண்டும்.இட ஒதுக்கீடு சர்வ ரோக நிவாரணி அல்ல.அது ஒரு தொடக்கம் மட்டுமே.

முற்பட்ட சாதியில் பிறந்தாலும் அம்பேத்காரிய சிந்தனையில் அருமையாக வாதங்களை எடுத்து வைக்கும் சகோதரர் S.ஆனந்த் அவர்களின் இக்காணொளி காணுங்கள்.

No Enlightenment With Caste



நன்றி!!!