வணக்கம் நண்பர்களே,
அல்ஜசிரா தொலைக் காட்சியில் பார்த்த ஒரு செய்தி,காணொளியை இப்பதிவில் பதிவிடுகிறேன்.
Pesticide Free Farming
ஆந்திராவில் 20இலட்சம் விவசாயிகள் ,இயற்கை விவசாயத்திற்கு மாறி பூச்சி மருந்து இல்லாமல், இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தி,அம்முயற்சியில் வெற்றியும் பெற்றதை இக்காணொளி காட்டுகிறது.
பூச்சி மருந்துக்கு பதிலாக வேப்பிலை,மிளகாய்,மாட்டுக் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி பலன் கண்டதும்,இம்முறை ,வேதிப் பூச்சி மருத்துகளை விட 70% விலை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கவை.
இம்முறை 2004 ல் தொடங்கி இன்றுவரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. மேலும் இது மண்ணை வளப்படுத்தியதாகவும் குறைந்த செலவில் ,அதிக விளைச்சல் தந்தாகவும் கூறுகின்றனர்.
ஒரு ஐரோப்பிய ஆய்வாளர்,நம்மவர்களுடன் சேர்ந்து அவர்களிடம் கேட்டு விடயங்களைக் கற்பது நமக்கு மகிழ்ச்சியும்,அதே சமயம் படித்தவர்கள் என சொல்லிக் கொள்ளு(ல்லு)ம் நம் மத்திய தர வர்க்கத்தினர் இப்படி செய்வது இல்லையே என்னும் வருத்தமே ஏற்படுகிறது.
நம் தமிழ் விவசாய சொந்தங்களும்,நமது ஆந்திர சகோதரர்களின் இம்முறைகளை பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறோம்
விவசாய நிலங்களைப் பாதுகாப்போம்,இயற்கை விவசாயமே ,நாட்டின் பொருளாதார சிக்கல் தீர்க்கும்,நோய்கள் தவிர்க்கும் அருமருந்து.
மேலதிக தகவல்களுக்கு
இங்கே இயற்கையான பூச்சிக் கொல்லிகள் பற்றிய செய்முறை விளக்கம் உண்டு.
நன்றி!!!
நான் நம்மாழ்வார் இயற்கை விவாசயத்தைப் பற்றி கூறியுள்ளதை படிக்திருக்கேன். நீங்கள் கொடுத்த சுட்டியில்...இரண்டு முறையிலும் விளைவித்தாலும் அதே விளைச்சல் என்றால் இயற்கை விவாசயத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது தான். லாபமும் அதிகம் வரிகிறது என்கிறார்கள்.
ReplyDeleteவிவாசயக் கூலி தாறுமாறா ஏறி இருக்கும் போது சிறிய அளவில் விவசாயம் செய்தால் லாபம் வருமா?
இங்கு லாபம் வருவதற்கு காரணம்....1000 ஏக்கர் நிலம் ஒரு குழுவிடம் இருக்கும்; உழுவதில் இருந்து வைக்கோல் கட்டுவது உள்பட மெசின்கள். பாச்சி மருந்து, உரம் எல்லாம் வானத்தில் இருந்து ஒரே ஆள்...ஒரு குட்டி விமானத்தில் தெளித்து விடுகிறான்.
நம் நாட்டில்...சிறு சிறு நிலங்கள்; விவாசாயிகள்; எப்படி லாபம் எடுக்கிறார்கள் என்று சொல்ல முடியுயுமா?
வணக்கம் நண்பர் நம்பள்கி,
Deleteஇப்பதிவில் இயற்கையான பூச்சி மருந்துக் கொல்லி ,வேப்பிலை+மிளகாய்+மாட்டுச் சாணம் ஒரு குறிப்ப்ட்ட விதம்+பக்குவத்தில் தயாரித்து அதற்கு பலன் விளைச்சலில் கிடைத்தது பற்றிய குறிப்பிட்டு இருக்கிறேன்.
/விவாசயக் கூலி தாறுமாறா ஏறி இருக்கும் போது சிறிய அளவில் விவசாயம் செய்தால் லாபம் வருமா?/
இதனை சிறு/பெரு விவசாயி என எவரும் தயாரிக்க முடியும் எனவே எண்ணுகிறேன்.
வேதி பூச்சி மருந்தினை விட இம்முறை செலவு குறைவு,விளைச்சல் அதிகம் என்கிறார்கள்.ஆகவே இலாபம் கிடைக்கும் சாத்தியம் அதிகம்.
ஆனாலும் எதுவும் பரிசோதித்து பார்க்கப்பட வேண்டும் என்பதே நம் கருத்து.
முயற்சிக்க விரும்பும் தமிழக விவசாய சகோதரர்கள்,ஆந்திரா சென்று அம்முறையை கற்று பரிசோதிக்கலாம்.
/நம் நாட்டில்...சிறு சிறு நிலங்கள்; விவாசாயிகள்; எப்படி லாபம் எடுக்கிறார்கள் என்று சொல்ல முடியுயுமா?/
இது நண்பர் வவ்வாலுக்கான கேள்வி. நாம் விவசாயம் கற்கும் மாணவர் மட்டுமே!!
நன்றி!!!
மதங்கள் குறித்து எழுதி அது பலருக்கும் சேர்வதை விட இது போன்ற ஆக்கப்பூர்வமான செய்திகள் நிச்சயம் பலருக்கும் பலன் தரும்.
ReplyDeleteசகோ ஜோதிஜி வாங்க,
Deleteமனிதனுக்கு உடல்,உணர்வு ரீதியாக தேவைகள் இருவகைப்படும்.
1.உடல்ரீதியான தேவைகள் உணவு,உடை,இருப்பிடம்,சுகாதாரம்,பாலியல் உறவு போன்றவவைக்கு தீர்வாக எளிய பொருளாதார அமைப்பினை வடிவமைக்க வேண்டும்.அது இயற்கையை பாழ்படுத்தாத,சார்ந்த முறையாக இருக்க வேண்டும்.
2.ஆனால உணர்வு ரீதியான தேவைகள், உலக முழுதும் என் மதம்,இனம் ஆள வேண்டும் என்னும் கருத்தாக்கங்கள் எந்த விதத்திலும் பலன் தராது
பொருளாதர தீர்வு வரவிடாமல் தடுப்பது மத,இன முரண்களே,தீர்வு வந்தாலும் கூட அமைதி வராது.
ஆகவே மத, இன பெருமித பிரச்சாரங்களைத் தடுப்பதும், பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண்பதும் நேர்மையான ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய ஒன்றே.
நன்றி!!!
//பூச்சி மருந்துக்கு பதிலாக வேப்பிலை,மிளகாய்,மாட்டுக் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி பலன் கண்டதும்,இம்முறை ,வேதிப் பூச்சி மருத்துகளை விட 70% விலை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கவை.//
ReplyDeleteஅருமையான தகவல்.
இதை நமது விவசாய சொந்தங்களிடம் கொண்டு செல்ல அரசாங்கமும் முயற்ச்சி எடுத்தால் நல்லது.
நன்றி சகோ பார்த்தி!!!
Delete