வணக்கம் நண்பர்களே,
இயற்கை வளங்களின் மீதான
பங்கீட்டிற்கு உரிமைகோரல்
என்பதற்காக ,மனிதர்களுக்கிடையே போட்டி என்பது தவிர்க்க
இயலாது.இதில் தனிமனிதனின் இருந்து
குடும்பம்,இனக்குழு,சாதி ,மதம்,நாடு
என போட்டி ஒவ்வொன்றிலும் ,ஒவ்வொன்றுக்கு
இடையேயும் இருப்பது கண்கூடு.[எங்க ஊரில்,மதத்தில்,இனக்குழுவில் அப்படி இல்லை என
சொல்லும் உலக அதிசய மனிதர்கள்
இருந்தால் தெரியப்படுத்தவும் ஹி ஹி!!!]
மனிதனுக்கு உடல்& உணர்வு ரீதியான
தேவைகள் உண்டு.இந்த தேவைகளின் தீர்வுகளை இயற்கையில் இருந்தே பெறுகிறான். உடல்
ரீதியான தேவைகள் என உணவு,உடை,உறைவிடம்,பாலுறவு,சுகாதாரம் போன்றவைகளைக் கூறலாம்.
உணர்வுரீதியான தேவைகள் ,காதல்,அன்பு,ஆன்மீகம்,கொள்கை&கோட்பாடு போன்றவற்றை கூறலாம்.
இப்பதிவில் உடல்ரீதியான தேவைகள் சார்ந்து மனிதனின்
போட்டி& போராட்டம் பற்றி மட்டுமே சிந்திப்போம்.[சிந்திக்க மாட்டீர்களா???]
மனிதர்களை பல வகையான சிந்தனைகள்,கொள்கை,கோட்பாடுகள் கொண்டவர்கள்
என்பது பரிணாம விதி. வாழும்
சூழல்,உணவு உள்ளிட்ட இதர
காரணங்களினால் உடல் அமைப்பும் கூட
வித்தியாசப்படுகிறது.
இயற்கை வளங்களின் மீதான
உரிமை கோரலின் போட்டி என்பதன்
மறு பெயர்கள்தான்,போர்,ஆக்கிரமிப்பு,பொருளாதார
அமைப்புகள் எனலாம்.
தற்காலத்தில் கல்வி& வேலைவாய்ப்பு என்பது வாழ்வாதாரம் நிணயிக்கும்
காரணி ஆனபடியால்,ஒவ்வொருவரும் நல்ல கல்வி கற்று
வேலை வாய்ப்பும் பெற முயல்கின்றனர். மனிதர்களின்
வாழும் சூழல் வித்தியாசப் படுவதால்
போட்டி என்பது சிலருக்கு எளிதாகவும்,பலருக்கு கடினமாகவும் இருக்கும்.இதனை மனதில் கொண்டு
சமூகத்தில் வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட பங்கீடு என்னும்
சமூக மேம்பாட்டு முறையை பல சமூக
ஆய்வாளர்கள்,அறிஞர்கள் முன்வைத்தனர்.
இட ஒதுக்கீடு பெரும்பான்மை
மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில்,குறிப்பிட்ட கால அளவுக்கு அமல்படுத்தப் பட்டால்,அதன் பிறகு
மக்கள் தொகை கட்டுக்குள் உள்ள ஒரு
நாட்டில் அது பலன் அளித்து,இடப் பங்கீட்டின் தேவை
இல்லாமல் போகும். போட்டி என்பது
நியாயமாக நடக்கும் என்பதே அவர்களின் கணிப்பு.
அந்த வகையில் தமிழகத்தில்
இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில்
சுமார் 100 வருடத்திற்கு மேலாக வழங்கப் பட்டு
வருகிறது.
பங்கீட்டு சதவீதங்கள் பல மாற்றங்கள் கண்டு
வந்துள்ளது. தற்போது இந்தியாவின் பெரும்பான்மை
மாநிலங்களில் கீழ்க்கண்டவாறு இடப்பங்கீடு
வழங்கப்படுகிறது.
அட்டவனைப் சாதிப்பிரிவு வகுப்பினர்
|
15%
|
அட்டவனை மலை சாதிப்பிரிவு வகுப்பினர்
|
7.5%
|
இதர பின்தங்கிய வகுப்பினர்
[பின் தங்கிய சாதிப் பிரிவினருக்கு, பொருளாதர அளவு
கோள் உண்டு]
|
27%
|
Total constitutional reservation
percentage49.5%
|
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தவிர
அட்டவனைப் பிரிவு+பின் தங்கியோர்
இடப் பங்கீடு 50%க்கு குறைவாகவே இருக்கும்.
பொதுவாக அட்டவனை பிரிவு
18%,இதர பின்தங்கியோர் 31% என்பதுதான் இந்திய நடைமுறை.அதிலும்
கிரீமி லேயர் எனப்படும் பொருளாதர
வலிமை உடைய பின்தங்கிய சாதிப்
பிரிவினர் ,பொதுப் பிரிவில்(50%) மட்டுமே
போட்டியிட முடியும்.
இடப் பங்கீடு 50% மேல்
செல்லக் கூடாது என உச்ச
நீதிமன்ற தீர்ப்பும் உண்டு.
By J. Venkatesan
NEW DELHI NOV. 5. A
five-judge Constitution Bench of the Supreme Court has held that the total
reservation for admission to MBBS and postgraduate medical courses in the
country should not exceed 50 per cent. For super specialty courses, there
shall be no reservation and admission shall be based purely on merit.
|
The below details are provided as per Gazette
of Government
of Tamil Nadu Web link http://www.tn.gov.in/acts-rules/law/act_10to12_131_07jun06.pdf
Backward Class (BC) - General
|
26.5%
|
30%
|
|||
Backward Class (BC) - Muslims
|
3.5%
|
||||
20%
|
|||||
15%
|
18%
|
||||
only for Arunthathiyar (Sakkiliar)
|
3%
|
||||
1
|
|||||
Total Reservation Percentage
|
69%
|
பாருங்கள் தமிழ்நாடு உச்ச நீதி மன்றத்தின்
தீர்ப்பை மீறிவிட்டது. மேலும் பிந்தங்கிய சாதிப்
பிரிவினருக்கு கிரீமி லேயர் கட்டுபாடும்
கிடையாது.ஆகவே தமிழகத்தில் முற்பட்ட
சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள்,இரண்டாம் தரக் குடிமக்கள் போல்
நடத்தப்படுகிறார்கள். ஆகவே அவர்களில் பெரும்பான்மையோர்
புலம் பெயர்வதால் நாட்டில் அறிவு+திறமைக் குறைவுபடுகிறது.
இதுதான் இந்தியாவின்(தமிழகத்தின்) சிக்கல்களுக்கு காரணம் என்னும் பிரச்சாரம்
இணையத்தில் கட்டவிழ்க்கப் படுகிறது.சகோ புரட்சி மணி
சிங்களர்கள் ஈழத் தமிழர்களை ஒடுக்குவது
போல், திராவிடர்கள், முற்பட்ட சாதியினரை ஒடுக்கிறார் என்னும் வாதத்தினையும் வைத்தார்.
இதற்கு அடிப்படை உண்டா
என்பதை தமிழகம் எப்படி உச்சநீதி
மன்றத் தீர்ப்பினை மீறாமல் குறுக்கு வழி
ஒன்றை கையாள்கிறது என்பதை அறிந்தால்,உண்மையில்
தமிழகத்தில் முற்பட்ட சாதியினருக்கும் மறைவு இடப் பங்கீடு
உள்ளது என்பதை அறிய முடியும்.
படியுங்கள் தமிழக இட ஒதுக்கீடு
பற்றிய விக்கி பிடியா!!!
Present practice[edit]
At
present, reservation works out to somewhat less than 69%, depending on how many
non-reserved category students are admitted in the super-numerary seats. If 100
seats are available, first, two merit lists are drawn up without considering
community (reserved or unreserved), one for 31 seats and a second for 50 seats,
corresponding to 69% reservation and 50% reservation respectively. Any
non-reserved category students placing in the 50 seat list and not in the 31
seat list are admitted under super-numerary quota (i.e.) seats are added to the
100 for these students. The 31 seat list is used as the non-reserved open
admission list and 69 seats are filled up using the 69% reservation formula (30
seats obc, 20 seats mbc, 18 seats sc and 1 seat st). The effective reservation
percentage depends on how many non-reserved category students figure in the 50
list and not in the 31 list. At one extreme, all 19 (added from 31 to make the
50 list) may be non-reserved category students, in which case the total
reservation works out to about (69+19)/119 or 74% with 16%(19 in 119)
considered as a 'reservation' for non-reserved category students! At the other
extreme, none of the 19 added to the 31 list may be from the non-reserved
category, in which case no super-numerary seats are created and reservation
works out to be 69% as mandated by the state law.
தமிழாக்கம்: இந்த அதி முக்கிய விக்கிபிடியாவின் தமிழ்
வடிவம் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.ஆகவே நாம் தமிழாக்கம் செய்கிறோம்.
தற்போது இடப்பங்கீடு 69%க்கு குறைவாக
இருக்கும் சாத்தியம்,மேல் அதீத ஒதுக்கீடான
19% ல் முற்பட்ட சாதியினர் எவ்வளவு இடம் பெறுகிறார்கள்
என்பதனைப் பொறுத்து உள்ளது. தமிழகத்தில் இருவகையான
இடபங்கீட்டு தகவல் அறிக்கைகள் தயார்
படுத்தப் படுகின்றன்.
1.)முதல் அறிக்கையில் மொத்த இடங்கள் 100 என்றால்,முதல் 31 இடங்கள்
பொதுப் பிரிவிலும்.,மீதி 69 இடங்கள் இடப்பங்கீடு
சார்ந்தும் பங்கிடப்படுகிற்து.
[இது சரியாக அமல்
படுத்தினால் பொதுப் பிரிவில் இடம்
பிடித்த இறுதி
மாணவனின் மதிப்பெண்,இட ஒதுக்கீட்டில் இடம்
பெற்ற முதல் மாணவனின் மதிப்பெண்ணை
விட அதிகமாக இருக்க வேண்டும்.]
2.) இரண்டாம் அறிக்கையில் மொத்த இடங்கள் 100 என்றால்,முதல் 50 இடங்கள்
பொதுப் பிரிவிலும்.,மீதி 50 இடங்கள் இடப்பங்கீடு
சார்ந்தும் பங்கிடப்படுகிறது.
இப்போது 50% இட பங்கீட்டில் எவ்வளவு
முற்பட்ட சாதி மாணவர்கள் இடம்
பெறுகிறார் என்ற பட்டியல் விவரம் 31% இடப் பங்கீட்டில்
உள்ள முற்பட்ட மாணவர்களின் அளவோடு
ஒப்பிடப் படுகிறது.
எ.கா 31 % ஒதுக்கீட்டில் பொதுப்
பிரிவில் முற்பட்ட சாதி மாணவர் 15 பேரும்,
50 % ஒதுக்கீட்டில் 25 பேரும் வருகிறார்கள் என
வைப்போம்.இப்போது 31% பொதுப்பிரிவில் இடம் கிட்டாமல்,50% பொதுப்
பிரிவில் இடம் பெற்ற 10 முற்பட்ட
சாதி மாணவர்களுக்கு ,மேல் அதீத இடங்கள்[super-numerary seats] என்னும் பிரிவில் இடம் கிடைக்கும்.
இந்த மேலதிக ஒதுக்கீடு[super-numerary
seats] அதிக பட்சம் 19% வரை
இருக்கலாம். இதில் முற்பட்ட சாதியினர்
மட்டுமே வரமுடியும். ஆகவே 50% இட ஒதுக்கீட்டினால் இந்தியாவின்
பிற பகுதிகளில் கிடைக்கும் வாய்ப்பு தமிழகத்திலும் கிட்டுகிறது.
இந்த முறையில் அரசு
விரும்பினால் முற்பட்ட சாதியினருக்கு குறைந்த பட்சம் 19% இடப்
பங்கீடு கிடைக்கும் படி செய்ய முடியும்
என்பது எளிதில் புரியும்.இந்த அரசு
செய்யும் எனவே கணிக்கலாம்.
ஆகவே தமிழகத்தில் முற்பட்டவர்
ஒதுக்கப்படுகிறார் என்னும் வாதம் பொய்யானது.
முற்பட்டவர் ஒதுக்கப்படுகிறார் என்றால் ,கடந்த 5 வருடங்களில்,மருத்துவம்,
அரசு பொறியியல் கல்லூரிகளில் முற்பட்ட சாதியினர் எவ்வளவு சதவீதம் இடம்
பெற்றனர் என்னும் புள்ளி விவரம்
அறிந்தால் போதுமானது.
முற்பட்ட வகுப்பினர் தமிழகத்தில் அதிக பட்சம் 10_15 % என
சொல்லாம்.இந்த 5 வருடங்களில் மருத்துவம்,
அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 10%க்கும் குறைவாக முற்பட்ட
சாதியினர் இடம் பெற்றனர் என்பது
புள்ளிவிவரம் அடிப்படையில் அறிய முடிந்தால் முற்பட்ட
சாதியினருக்கும் 5_10% இட ஒதுக்கீடு கொடுப்பதில்
தவறில்லை எனவே கூறுகிறோம்.
நிச்சயமாக பொதுப் பிரிவில் ,இட
ஒதுக்கீட்டுப் பிரிவினரின் பங்கு அதிகரிக்கிறது.ஆனாலும்
முற்பட்டோர் பாதிக்கப் படாத வகையில் இந்த
அரசு மேல் அதீத இடப்பங்கீடு கொடுத்து சரி
செய்கிறது.
இது சரி ,தவறு
என வாதம் செய்ய விரும்ப
வில்லை[அது சாதி அரசியல்
செய்வோரின் வேலை!!],ஆனாலும் தமிழகத்தில் முற்பட்டோர் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுகிறார்
என்பது தவறான வாதமே.
சாதிகள் ஒழிய அதுபற்றிய
புரிதல் வேண்டும்.இட ஒதுக்கீடு சர்வ
ரோக நிவாரணி அல்ல.அது
ஒரு தொடக்கம் மட்டுமே.
முற்பட்ட சாதியில் பிறந்தாலும் அம்பேத்காரிய சிந்தனையில் அருமையாக வாதங்களை எடுத்து வைக்கும் சகோதரர்
S.ஆனந்த் அவர்களின் இக்காணொளி காணுங்கள்.
நன்றி!!!
சார்வாகன்: இடுகை தெளிவாக இல்லை. மறுபடியும் proof-read செய்து விவாதங்கள் கோர்வையாக வரும் படி வெளியிடுனகுள். இது...ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த பின்னூட்டத்தின் சாரத்தை புரிந்து கொண்டு என் பின்னூட்டத்தை நீக்கி விடலாம்...if you want to..
ReplyDeleteநண்பர் நம்பள்கி,
Deleteஉங்களுக்கு தெளிவில்லாத விடயங்களைக் கேள்வியாக கேட்டால் விளக்கி விடுவேன்.பதிவில் என்ன திருத்துவது என புரியமுடியவில்லை.
பதிவில் சொல்லி இருப்பதை மீண்டும் விளக்குகிறேன்.பொதுப் பிரிவு இட ஒதுக் கீடு பற்றி மட்டுமே ஆய்வு செய்வோம்
1. இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில்+மத்திய அரசு நிறுவனங்களில் பொதுப் பிரிவு 50%,ஆனால் தமிழகத்தில் 31 % மட்டுமே.இதனால் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் முற்பட்ட சாதியினர் பாதிக்கப் படுவதாக பலர் இணையத்தில் கூக்குரல் இடுகிறார்.
2.அது உண்மை அல்ல என்பதை ,தமிழக அரசின் தற்போதைய இட ஒதுக்கீடு காட்டுகிறது.மேல் அதீத இடப் பங்கீடு மூலம் ,முதல் 50% இடம் பெறும் முற்பட்ட சாதியினர் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்பதே எதார்த்த உண்மை.
3.தமிழக இட ஒதுகீட்டில் இரு பட்டியல்கள்(லிஸ்ட்) தயாரிக்கிறார்கள்.
அ) 31% பொதுப் பிரிவு.
ஆ) 50% பொதுப் பிரிவு.
இந்த 50% பொதுப்பிரிவில் இடம் பெற்று,31% பொதுப்பிரிவு பங்கீட்டில் இடம் கிடைக்காத முற்பட்ட சாதியினருக்கு,ஸ்பெசல் ஒதுக்கீட்டு மூலம் இடம் கிடைக்கும்.
இந்த பட்டியல் முறையில் பல குளறுபடிகள் செய்யும் வாய்ப்பு உள்ளதால்,ஸ்பெசல் ஒதுக்கீட்டில் முற்பட்ட சாதியினருக்கு கடந்த சில வருடங்களில் குறைந்த பட்சம் 19%)50-31!) கிடைத்து இருக்கும் வாய்ப்பே அதிகம்.
ஆகவே தமிழகத்தில் முற்பட்ட சாதிக்கு மறைமுக இட ஒதுக்கீடு இருக்கிறது.
ஆகவேதான் பிற மாநிலங்கள் போல் இட ஒதுக் கீட்டை வெளிப்படையாக எதிர்ப்பது இல்லை.
நன்றி!!
//Reservation should not exceed 50 per cent in medicine: Supreme Court
ReplyDeleteBy J. Venkatesan
NEW DELHI NOV. 5. A five-judge Constitution Bench of the Supreme Court has held that the total reservation for admission to MBBS and postgraduate medical courses in the country should not exceed 50 per cent. For super specialty courses, there shall be no reservation and admission shall be based purely on merit.///
மறுபடியும்...அதே quote..
For super specialty courses, there shall be no reservation and admission shall be based purely on merit என்று சொல்லும் புண்ணாக்குகள் AIIMS- ல் படித்த MBBS மாணவர்களுக்கு மட்டும் 25 விழுக்காடு (reservation) தனி ஒதிக்கீடு கொடுப்பதை எப்படி அனுமதிக்கிறார்கள்? இது என்ன நியாயாம்; அவர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்து இருக்கு...
அவர்கள் எல்லோருக்கும், AIIMS- ல் படித்த MBBS மாணவர்களுக்கு, எல்லா பிரிவுகளிலும் இடம் கிடக்கும்...தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மதிப்பெண்களை விட எவ்வளவு....எவ்வளவு...கம்மியா வாங்கினாலும.
நம்ம ஊரில் கோர்ட்டுக்கு போவதை விட...
நண்பர் நம்பள்கி,
Deleteஇதனை[ஏ.ஐ.எம்.எஸ்] உங்கள் பதிவிலும் சொல்லி இருந்தீர்கள். அதுவே இப்பதிவின் அடிப்படை.
உண்மையில் முற்பட்ட சாதியினர் தமிழக இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக மிக குறைவு என்பதை எளிதில் புரியலாம்.
முற்பட்ட சாதியினர் முதல் 50% இடங்களுக்குள் வரவே முடியவில்லை என கடந்த சில வருடங்கள் ரீதியாக சான்றுகள் அடிப்படையில் அவர்கள் நிரூபித்தால் மட்டுமே, அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுப்பது பற்றி சிந்திக்க்லாம்.
ஏ.ஐ.எம்.எஸ்,அகி இந்திய அள்வு இட ஒதுக்கீடு என விவாதிப்பது அவசியம் என்றாலும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டினால் முற்பட்டோர் பாதிப்பு மிக மிக குறைவே ,குறைவே, குறைவே என்பதை பற்றிய புரிதல் ஏற்படுத்துவது இன்றியமையாதது.
நன்றி!!!
என் கேள்வி...
ReplyDeleteAIIMS- ல் MBBS படித்த மாணவர்களுக்கு மட்டும் AIIMS- ல் MD MS - க்கு 25% reservation - தனி ஒதுக்கீடு கொடுப்பது மாதிரி...தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்களுக்கு AIIMS - மாதிரி MD MS - க்கு 25% reservation - தனி ஒதுக்கீடு கொடுங்கள்...அது தான் நியாயாம்...
பெரியார் வீரமணி...தி க இதற்க்கு நீதி கேட்க வேண்டும்...அவர் செய்வாரா?
நண்பர் நம்பள்கி,
Deleteமிகச் சரியான வாதம்.வழிமொழிகிறேன்.
நன்றி!!!
வீரமணி பெயரெல்லாம் இருப்பதால் காமெடி பின்னூட்டமா என சந்தேகம் வருகிறது, இருந்தாலும்...
Delete1. எனக்கு தெரிந்த வரை AIIMS internal quota சட்ட விரோதமானது என 2006-ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பழய AIIMS prospectus-ல் இந்த கோட்டா பற்றி உள்ளது. ஆனால் இந்த வருடத்தின் prospectus-ல் இல்லை.
2. தமிழக கல்லூரிகளில் மருத்துவ முதுகலை படிப்புக்கு தமிழக அரசுக்கு 50% இட ஒதுக்கீடு உண்டு. இதில் தமிழக மாணவர் மட்டும் சேர்க்கபடுவர் என நினைக்கிறேன்.
தகவல்கள் தவறு எனில் திருத்தவும் நன்றி!
\\பாருங்கள் தமிழ்நாடு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிவிட்டது.\\முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற விஷயங்களில் சம்பந்தப் பட்ட மாநிலங்கள் கோர்ட் உத்தரவை ஏற்று நடந்தனவா? #டவுட்டு.......
ReplyDeleteவாங்க மாப்ளே தாசு,
Deleteநலமா!!
அதுதான் இந்தியா!!
நன்றி!!
சகோ சார்வாகன்,
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டுள்ள இரட்டை அட்டவனை முறை தமிழக அரசினால் முறையாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒன்றல்ல. அரசியல் சட்டத்துக்கு மாறாக 50% மேலாக இட ஒதுக்கீடு செல்வதை குறிப்பிட்டு தொடுக்கப்படும் வழக்குகளில் உச்சநீதி மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்புக்களை ஒட்டி வழங்கப்படுவது. இதை அரசுகள் முறைபடுத்தாமல் காலத்தை ஓட்டி வருகின்றான. இந்த ஆண்டும் ஒரு மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார் http://www.thehindu.com/news/national/tamil-nadu/supreme-court-notice-to-tn-govt-on-medical-seats/article4941997.ece
இப்படி இடைக்கால தீர்ப்பு பெறாவிட்டால் வழக்கமான இட ஒதுக்கீடு மட்டும் பயன்படுத்தப்படும். ஆகவே அரசு இதை முறைபடுத்தும் வரை இப்படியான குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்யும்
என்னைப் பொருத்தவரை ஆதிக்க சாதிகளுக்கு பிசி என்ற பெயரில் இட ஒதுக்கீடு தருவதையும் மத அடிப்படையில் தருவதையும் விடுத்து கலப்பு திருமணம் செய்பவர்க்கு இட ஒதுக்கீடு தந்தால் ஜாதி ஒழிய ஏதுவாக இருக்கும். அதைவிடுத்து பார்ப்பனர்க்கு ஒரு படி மேலாக கொடுமை செய்யும் பிசி சாதிகளுக்கு இட ஒதுக்கீடு தருவது அம்பேத்கர்க்கு செய்யும் அவமரியாதைதான்.
ஆனால் நம்மாளுக எவ்வளவு Hypocrisy உள்ளவனுக என்பதை பாருங்கள், (7.40 க்கு அப்புறம்). http://www.ndtv.com/video/player/truth-vs-hype/truth-vs-hype-ilavarasan-when-prejudice-turns-fatal/283826
முற்பட்ட சாதிகளுக்கு எதிராக இட ஒதுக்கீடு பெறும் இவர்களே இப்படி பேசினால் முற்பட்டோர் கேட்பதில் என்ன தவறு?
அரசு ஓசி டீவிக்களை தருவதற்கும் அம்மா உணவகமும் ஆரம்பிப்பதற்கு பதில் இன்னமும் அதிக மருத்துவ பொறியியல் கல்லூரிகளை திறந்து இட ஒதுக்கீடே தேவை இல்லாமல் செய்யலாம், ஆனால் திமுகவும் சரி அதிமுகவும் சரி இக்கல்லூரிகளில் இருந்து பணம் பண்ணத்தான் முயற்சிக்குமே ஒழிய உருப்படியாக ஒண்ணும் செய்ய மாட்டார்கள்.
சகோ நந்தவனம் வாங்க வணக்கம்,
Delete1./ இரட்டை அட்டவனை முறை தமிழக அரசினால் முறையாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒன்றல்ல. அரசியல் சட்டத்துக்கு மாறாக 50% மேலாக இட ஒதுக்கீடு செல்வதை குறிப்பிட்டு தொடுக்கப்படும் வழக்குகளில் உச்சநீதி மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்புக்களை ஒட்டி வழங்கப்படுவது. இதை அரசுகள் முறைபடுத்தாமல் காலத்தை ஓட்டி வருகின்றான. இந்த ஆண்டும் ஒரு மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார்/
நீங்கள் குறிப்பிட்ட 23 ஜூலை இந்து நாளிதழின் செய்திக்கு(மாணவி ஹரிணியின் வழக்கு) இன்று ஜூலை 30ல் தீர்ப்பு உடனே வந்து விட்டது.
இதன் படி இரட்டை அட்டவனை அமலுக்கு வந்துவிடும்.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/sc-to-the-rescue-of-meritorious-students-affected-by-69-quota/article4967460.ece
SC to the rescue of meritorious students affected by 69% quota
J. VENKATESAN
Supreme Court directive to State government
The Supreme Court on Monday, while deciding to examine the constitutional validity of the Tamil Nadu law providing for 69 per cent quota in employment and educational institutions, directed the State government to create additional seats in the first year MBBS for meritorious students affected by the quota law. A Bench of Justices K.S. Radhakrishnan and A.K. Sikri gave this direction on a petition filed by R. Harshini, who could not secure admission in MBBS despite securing 911 rank
இது சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது.
இப்பதிவில் நாம் சொல்வது ஒரே ஒரு விடயம் மட்டுமே.
தரப் பட்டியலில் முதல் 50% இடம் பெறும் அனைத்து முற்பட்ட சாதியினருக்கும் இடம் கிட்டும். ஆகவே 69% இட ஒதுக்கீட்டினால் ,தமிழகத்தில் மட்டும் அதிகம் பாதிக்கப்படுவதாக, இணயத்தில் பலர் செய்யும் பிரச்சாரம் தவறு.
கடந்த சில வருடங்களில் முற்பட்டோர் பெற்ற மருத்துவம்,அரசு பொறியியல் கல்லூரிகளில் சதவீத பங்கு என புள்ளிவிவரம் கிட்டுமா எனத் தேடினால் ,சரியான விவரம் கிட்டவில்லை.
என் கணிப்பின் படி [உச்ச நீது மன்ற ஆனையின் படி] இந்த மேல் அதீத பங்கீடு கிட்டும் ஒவ்வொரு முறையும்,முற்பட்ட சாதியினர் 19% க்கும் அதிகமாக பங்கீடு பெறுதல் உறுதி.
இப்படி பெற இயலாத சூழல்களில் ,கடந்த சில வருட புள்ளி விவர சான்றுகளின் அடிப்படையில் முற்பட்ட சாதியினருக்கும் 5_10% பங்கீடு கொடுக்க்லாமா எனவும் ஆலோசிக்கலாம்.
சகோ நந்தவனம்,
Delete2/என்னைப் பொருத்தவரை ஆதிக்க சாதிகளுக்கு பிசி என்ற பெயரில் இட ஒதுக்கீடு தருவதையும் மத அடிப்படையில் தருவதையும் விடுத்து கலப்பு திருமணம் செய்பவர்க்கு இட ஒதுக்கீடு தந்தால் ஜாதி ஒழிய ஏதுவாக இருக்கும். அதைவிடுத்து பார்ப்பனர்க்கு ஒரு படி மேலாக கொடுமை செய்யும் பிசி சாதிகளுக்கு இட ஒதுக்கீடு தருவது அம்பேத்கர்க்கு செய்யும் அவமரியாதைதான். //
நம் போன்றவர்கள் பதிவு எழுதலாம்,பின்னூட்ட விவாதம் செய்யலாம்.அவ்வளவுதான். ஜனநாயகம் என்ற பெயரிலும் சாதி,மதம் மூலம் மனிதர்களை பிரித்து ஓட்டு அரசியல் நடப்பதே எதார்த்தம். ஆகவே நீங்கள் சொல்வதை கொள்கைரீதியாக நான் ஏற்றாலும், அது நடைமுறைக்கு இப்போது வராது.
3.//முற்பட்ட சாதிகளுக்கு எதிராக இட ஒதுக்கீடு பெறும் இவர்களே இப்படி பேசினால் முற்பட்டோர் கேட்பதில் என்ன தவறு?/
தவறு இல்லை.புள்ளி விவர சான்றுகள் அடிப்படையில் எவ்வளவு முடிவெடுக்கலாம்.
4./அரசு ஓசி டீவிக்களை தருவதற்கும் அம்மா உணவகமும் ஆரம்பிப்பதற்கு பதில் இன்னமும் அதிக மருத்துவ பொறியியல் கல்லூரிகளை திறந்து இட ஒதுக்கீடே தேவை இல்லாமல் செய்யலாம், ஆனால் திமுகவும் சரி அதிமுகவும் சரி இக்கல்லூரிகளில் இருந்து பணம் பண்ணத்தான் முயற்சிக்குமே ஒழிய உருப்படியாக ஒண்ணும் செய்ய மாட்டார்கள்.//
100% உடன்படுகிறேன். இப்போது பொறியியல் அனைவருக்கும் கிடைப்பதால் மவுசு குறைந்து ,மருத்துவத்திற்கு டிமாண்ட் வந்து விட்டது.
மருத்துவ இடங்களை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம்.எதை படித்தாலும் பிழைக்க ஏதுவாக ஒரு வேலை கிட்டும் என்ற சூழல் வந்தால்,இவ்வளவு போட்டி இருக்காது.
இலவச தரமான கல்வி,சுகாதாரம் கொடுத்தால் அனைவரும் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்.
ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் வருமானத்தில் கல்வி+சுகாதாரம் ஆகியவற்றுக்கு பெரும்பகுதி செலவு ஆகிறது.
இதையெல்லாம் ஆளும் வர்க்கத்தினர் சிந்திக்க மாட்டார்களா???
நன்றி நன்றி,நன்றி!!!
AIIMS - ல் 33% கூடாது; UNCONSTITUTIONAL என்றது. மொத்தமாக ஒழி என்று சொல்லவில்லை; AIIMS - அதை 25% ஆக்கி விட்டது. அதை எதிர்த்து எவனாவது கேசு போடணும்! போட்டாமட்டும் என்ன வாழுது? Madras I.I.T - எந்த guidelines புண்ணாக்கையும் மதிக்கவில்லை. இது நடக்குது ஒரு 17 வருடமா? வேலையில் சேர்ந்தவனை தயராத முடியாது...கோர்ட்டும் இவனுங்கள தண்டிக்காது...எல்லாம் ஒன்னுன்க்குள் ஒன்னு...
ReplyDeleteநம்ம ஊர்ல கேசு போடறதுக்கு பதிலா...!
By way of institutional preference the institutional candidates i.e. those who have graduated from All India Institute of Medical Sciences shall be preferred for admission against 50% of total MBBS seats of AIIMS of the open general seats without any discipline wise preference, in accordance with the above mentioned judgment of the Hon'ble Supreme Court and subsequent judgment dated 07-05-2004 of the Supreme Court in Saurabh Chaudhary Vs. Union of India W.P.(C) No. 29 of 2003 and connected matters. ii) Any seat left vacant out of the AIIMS preferential seats or any other reserved seats shall be available to other open general category candidate in order of merit.
ReplyDeleteமேற்கண்ட வரிகளை இந்த வருட AIIMS பிராஸ்பெக்டஸில் தவற விட்டுவிட்டேன். ஆக நம்பள்கி சொன்னது சரிதான். இதை சுப்ரீம் கோர்ட் அனுமதித்து விட்டதால் இனி எங்கு போய் கேசு போடுவது? ஆனால் இதில் சாதி, மதம், மாநில வாரியான பாதிப்பு ஒன்றுமில்லையே. தமிழன் அங்கு எம்பிபிஎஸ் படித்தால் அவனுக்கும் கோட்டா உண்டல்லவா?
ஐஐடி பிரச்சனை பலநாளாக ஓடுது. கலைஞர் என்ன பண்ணுறார்? இவர்கள் கட்சி 15 வருடமாக மத்திய அரசில் இருக்கிறார்களே? காங்கிரஸ் மனிதவள அமைச்சரிடம் சொல்லி சரி செய்யலாமே? குடும்பத்துக்கு மந்திரி பதவி வாங்க டில்லிக்கு ஓடினாரே? அடுத்தவனை குறை சொல்லி கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.
சகோ நந்தவனம் ஐ.ஐ.டி'ல் இன்னொரு பிரச்சினை உண்டு.கடந்த 5 வருட பணி நியமனம் குறித்து சி.பி.ஐ விசாரணை.
Deleteஇதன் காரணம் கணித ஆசிரியர் திருமதி வசந்த கந்தசாமிஅவர்களுக்கு,பேராசியர் பதவி உயர்வு கொடுக்கப்படவில்லை என தொடர்ந்த வழக்கே!!!
படியுங்கள்!!!
http://www.ndtv.com/article/south/iit-madras-faculty-appointments-to-be-investigated-by-cbi-397061
IIT Madras' faculty appointments to be investigated by CBI
Chennai: The Madras High Court has ordered a CBI probe into all appointments made at the Indian Institute of Technology, Madras from 1995 to 2000. The premier investigating agency will investigate the correctness and legality of appointments made during this period.
Disposing a petition filed in 1996 by Dr Vasantha Kandasamy, an Associate Professor, the court has ordered her elevation as Professor in the Math Department.
Ms Kandasami was an Assistant Professor in 1995. Though she was qualified, Ms Kandasami was denied appointment as Associate Professor. She was also ignored for the position of Professor in 1996. Two ineligible faculty members were appointed overlooking her candidature.
The court has quashed those two selection proceedings but has not altered the positions of the other two faculty members.
---At the time of selection, one of them Dr Kamath had a postgraduate degree only in Physics while the job required postgraduate degree in Maths.---
---The other member, Dr Rangan, had not secured a first class and has already retired. ---------
mmmmmmmmmmmmmmmmmm
Thank you
2007- ல் நடந்த ஊழல்...sorry..கண்டுபிடிக்கபட்ட ஊழல்...!
ReplyDeleteAIIMS கோட்டாவில் MD/MS மேல்படிப்புக்கு 14% and 18% வாங்கிய முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு. ஆனல், 50 or 60% மார்க் வாங்கிய ST -க்கு ST கோட்டாவில் சீட் இல்லை கேட்டால் ST கோட்டா நிறைந்து விட்டது. இது என்ன மொள்ளமாரித்தனம்.
அப்படி கொடுத்தாலும்...குப்பைக்கு உதவாத பிரிவுகளில் தான் கிடைக்கும். இன்றைய நிலமை: AIIMS - ல் MBBS படித்தால் நுழைவுத் தேர்வில் பெயில் மார்க் வாங்கனாலும் கட்டாயம் மேல்[படிப்பு சீட்.
எல்லோரும் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் கொஞ்சம் சலுகை கொடுப்பது உண்டு...அனால், இவர்கள் மட்டும் என்ன மொள்ளமாரிதனம் செய்தாலும் மெரிட்டில் புளுத்தினேன் என்று புளுகுவது----இது கூட பரவாயில்லை. ஆனால், மற்றவர்கள் கோட்டாவில் சீட் வாங்கினார்கள் என்று கூசாமல் திட்டுவது...இதில் எல்லா ஊடங்கங்களும் அடக்கம்.
//ஐஐடி பிரச்சனை பலநாளாக ஓடுது. கலைஞர் என்ன பண்ணுறார்? இவர்கள் கட்சி 15 வருடமாக மத்திய அரசில் இருக்கிறார்களே? காங்கிரஸ் மனிதவள அமைச்சரிடம் சொல்லி சரி செய்யலாமே? குடும்பத்துக்கு மந்திரி பதவி வாங்க டில்லிக்கு ஓடினாரே? அடுத்தவனை குறை சொல்லி கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.//
ReplyDeleteThis is to side track the crux of the argument....yet I would reply..!
கருணாநிதி என்ன அவங்க பாட்டன் பெரியார் வந்தாலும் ஒன்னும் பன்னமுடியது. எல்லாம் பெருச்சாளிகள். அம்பேத்கார் அல்லது பெரியார் பிரதம மந்திரியாக இருந்தாலும்...ஒன்னும் கிழிக்க முடியாது.
ஏன் இந்தியாவிலே முகவிற்கு மட்டும் தான் சமூக சிந்தனை இருக்கணும? அப்ப தமிழ் நாட்டு பாஜக, காங்கிரஸ், அதிமுக ஏன் சண்டை போடவில்லை? கேள்வி கேட்கவில்லை? அப்ப இவர்கள் எல்லாம் பிராமணர்கள் மட்டும் வருவதை விரும்புகிரார்கலா.
இந்த ஊழல் கண்டு பிடிக்கப் பட்டதெ...2004 என்று நினைக்கிறேன்...I.I.T kahrakpur and .I.I.T kanpur. ஊழளின் ஊற்றே அங்கே தான். I.I.T ஆரமபித்த நாளில் இருந்துன் அங்கு ஊளை.
அங்கேயும் முக தான் போய் சரி செய்யனுமா?
உங்களுக்கு வேண்டியது முக ராஜீனாமா செய்யணும் அ ங்கே அதிமுக குந்தனும்...அதானே!
உங்களுக்கு...
ReplyDeleteவீரமணி பெயரெல்லாம் இருப்பதால் காமெடி பின்னூட்டமா என சந்தேகம் வருகிறது, இருந்தாலும்...இதில் தவறேதும் இல்லை; freedom of speech and expression. I respect that.
அதே சமயம்...
இங்கு, எனக்கு மற்றும் என் நண்பர்கள் குழாமுக்கு...
சோ..வகையறாக்கள் பெயரெல்லாம் வந்தால் காமெடி பின்னூட்டமா என சந்தேகமே வராது; அத்தைனையும் முழு நீள காமெடி இல்லை எல்லாமே முழு நீள பேத்தல் தான்!
இந்த பேத்தல்களை உண்மை என்று நினைக்கும் என் சூத்திர சகொதர்களுக்கு என் அனுதாபங்கள்.!
பின்குறிப்பு:
வீரமணியும் ஒரு பெரிய ஜோக்கர் தான்; ஆனால், அவர் ஜம்பம் சோ வகையறாக்களிடம் செல்லாது..!
கி. வீரமணி எனற ஜோக்கர் சோ முன்னால் கால் தூசி!
_________________________
நந்தவனத்தான்July 30, 2013 at 2:35 AM
வீரமணி பெயரெல்லாம் இருப்பதால் காமெடி பின்னூட்டமா என சந்தேகம் வருகிறது, இருந்தாலும்...
1. எனக்கு தெரிந்த வரை AIIMS internal quota சட்ட விரோதமானது என 2006-ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பழய AIIMS prospectus-ல் இந்த கோட்டா பற்றி உள்ளது. ஆனால் இந்த வருடத்தின் prospectus-ல் இல்லை.
2. தமிழக கல்லூரிகளில் மருத்துவ முதுகலை படிப்புக்கு தமிழக அரசுக்கு 50% இட ஒதுக்கீடு உண்டு. இதில் தமிழக மாணவர் மட்டும் சேர்க்கபடுவர் என நினைக்கிறேன்.
தகவல்கள் தவறு எனில் திருத்தவும் நன்றி!
நண்பர் நம்பள்கி
ReplyDeleteநீங்களும் ஐ.ஐ.டி. ஆசிரியர் வசந்தா கந்தசாமியின் நியாயமான போராட்டம்&வழக்கு பற்றி அறிந்து கொள்ளுங்கள்
படியுங்கள்!!!
http://www.ndtv.com/article/south/iit-madras-faculty-appointments-to-be-investigated-by-cbi-397061
The Madras High Court has ordered a CBI probe into all appointments made at the Indian Institute of Technology, Madras from 1995 to 2000. The premier investigating agency will investigate the correctness and legality of appointments made during this period.
Disposing a petition filed in 1996 by Dr Vasantha Kandasamy, an Associate Professor, the court has ordered her elevation as Professor in the Math Department.
Ms Kandasami was an Assistant Professor in 1995. Though she was qualified, Ms Kandasami was denied appointment as Associate Professor. She was also ignored for the position of Professor in 1996. Two ineligible faculty members were appointed overlooking her candidature.
The court has quashed those two selection proceedings but has not altered the positions of the other two faculty members.
At the time of selection, one of them Dr Kamath had a postgraduate degree only in Physics while the job required postgraduate degree in Maths. The other member, Dr Rangan, had not secured a first class and has already retired.
Ms Kandasami has so far published 650 research papers and authored 81 books.
நன்றி!!!
படித்தேன். விவரமாக...இதுல Dr Vasantha Kandasamy கோட்டாவில் வந்தவர் என்று கிண்டல்; அதை நம் சூத்திர சொந்தங்கள் நம்பும்.!
DeleteTwo ineligible faculty members were appointed overlooking her candidature; அனால், வெளியில் பீத்துவது ஏதோ இவர்கள் அறிவாளிகள் மாதிரி!
CBI முடிவு தெரியாதா? தப்பு செய்தவர்கள் administrative error கிளார்க் தப்பு பண்ணிட்டார்; நாங்க பார்க்கவில்லை. கையெழுத்து போடும் போது மூக்குக் கன்னைடி உடைந்து போச்சு. கண்ணு தெரியலே...இப்படி..
இந்த கேசை எப்படி "ஊறுகா" போட வேண்டும் என்று I.I.T ஆளுங்களுக்கு நல்லா தெரியும்.
//கருணாநிதி என்ன அவங்க பாட்டன் பெரியார் வந்தாலும் ஒன்னும் பன்னமுடியது. எல்லாம் பெருச்சாளிகள். அம்பேத்கார் அல்லது பெரியார் பிரதம மந்திரியாக இருந்தாலும்...ஒன்னும் கிழிக்க முடியாது.
ReplyDeleteஏன் இந்தியாவிலே முகவிற்கு மட்டும் தான் சமூக சிந்தனை இருக்கணும? அப்ப தமிழ் நாட்டு பாஜக, காங்கிரஸ், அதிமுக ஏன் சண்டை போடவில்லை? கேள்வி கேட்கவில்லை? அப்ப இவர்கள் எல்லாம் பிராமணர்கள் மட்டும் வருவதை விரும்புகிரார்கலா.//
யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பதெல்லாம் சும்மா! சகோ சார்வாகன் அளித்த செய்தியினை பார்த்தீர்களா? எப்படி சிபிஐ விசாரனை வைக்கிறார்கள்? மனமிருந்தால் மார்க்கமுண்டு
பாஜகா, காங்கிரஸ் என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவிடம் சென்னை ஐஐடி பிரச்சனை பற்றி பேசக்கூடாதா? அப்புறம் எதுக்கு சமூகநீதிக்காக போராடுவதாக வேடம்? ஏதோ பாஜக, காங்கிரஸ், அதிமுக இவர்களுடன் திமுகவும் ஒரே குட்டையில் ஊறின மட்டை என ஒத்துக்கொண்ட வரையில் சந்தோசம்!
//இந்த ஊழல் கண்டு பிடிக்கப் பட்டதெ...2004 என்று நினைக்கிறேன்...I.I.T kahrakpur and .I.I.T kanpur. ஊழளின் ஊற்றே அங்கே தான். I.I.T ஆரமபித்த நாளில் இருந்துன் அங்கு ஊளை. அங்கேயும் முக தான் போய் சரி செய்யனுமா? //
ஏன் நிறுத்திவிட்டீர்கள்? ஹார்வேடில் அட்மிசன் பிரச்சனை, அதையும் முக தான் தீர்க்கனுமா என கேட்டிருக்கலாம். நான் துண்டை காணோம், துணியை காணோம் என ஓடியிருப்பேனே!
//உங்களுக்கு வேண்டியது முக ராஜீனாமா செய்யணும் அ ங்கே அதிமுக குந்தனும்...அதானே!
ReplyDeleteகி. வீரமணி எனற ஜோக்கர் சோ முன்னால் கால் தூசி!//
திமுகவை எதிர்ப்பவன் அதிமுககாரன், வீரமணியை கிண்டலடிப்பவன் சோ ஆதரவாளன்... உங்களின் அக்மார்க் பகுத்தறிவுக்கு வந்தனங்கள்.
நீங்கள் பெரியார் திக ராமகிருஷ்ணனை சொல்லியிருந்தால் சீரிஸாக எடுத்திருப்பேன். முன்னர் போயஸ் தோட்டத்து பூசாரி எனப்பட்ட வீரமணியை... நான் சொல்ல வேணாம், பேப்பர் படிக்கும் எல்லோருக்கும் தெரியும்!
நண்பர் சார்வாகன் நல்லப் பதிவு,
ReplyDeleteமண்டல் கமிஷன் பரிந்துரையை வைத்து இடஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50% மேல் செல்லக்கூடாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் தமிழ்நாட்டில் மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஓதுக்கீடு மாற்றாமல் இருப்பதால் அது 69% வருகிறது. இதை கொண்டுவந்த ஜெயலலிதா அம்மையாரை, ”சமூக நீதி காத்த வீராங்கனை”, என ஒப்பற்ற பகுத்தறிவாளர் வீரமணி பட்டமளித்து மகிழ்ந்தார். இந்த 69% (+19%) எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலவையிலுள்ளது, அதில் இடைக்கால உத்தரவு படி, 50% இடஒத்துக்கீடு இருந்தால் அதில் இடம் கிடைப்பவர்கள் 69% ல் இடம் கிடைக்கவில்லையென்றால், அவர்களுக்கு கூடுதல் இடங்களை ஏற்படுத்தி நிறுப்பவேண்டும். இந்த 69% இடஓதுக்கீட்டினால் பொது வகுப்பினருக்கு பாதிப்பில்லை.
இடஓதுக்கீட்டினால், முற்படுத்தப்பட்ட வகுப்பிருக்கு அநீதி, திறமை இல்லாமலாகும், நிர்வாகம் சீர்கெடும் என்னும் வாதங்கள் ஏற்கதக்கதல்ல. இடஓதுக்கீடு அவசியம் தேவைதான்.
நன்றி.
சகோ நரேன்,
Deleteபதிவின் சாரத்தை முழுமையாக உள் வாங்கியமைக்கு மிக்க நன்றி!!!
உண்மை,எதார்த்தம் போன்றவை மிக எளிதான விடயங்கள். யாரும் மறைக்க முடியாது.
பாருங்கள் தமிழகத்தில் முற்பட்ட பிரிவினருக்கும் மறைமுக இடப் பங்கீடு உள்ளது என்பதை மறைத்து ,அய்யகோ தமிழகத்தில் முற்பட்டவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற இணையப் பிரச்சாரம் தவறு.
ஒரு எ.கா மூலம் விளக்குவோம்.
தமிழக்த்தில் உள்ள 100 இடங்களுக்கு 500 மாணவர்கள் போட்டியிடுகிறார்கள் என எடுப்போம்.
இதில் முதல் 31 இடம் பொதுப் பிரிவு என்பதால்,தரப் பட்டியலில் முதல் 31 இடம் பெற்றோருக்கு இடம் கிட்டும். இதில் சாதி வித்தியாசம் இல்லை.
தமிழக்த்தில் உள்ள 100 இடங்களுக்கு 500 மாணவர்கள் போட்டியிடுகிறார்கள் என எடுப்போம்.
இதில் முதல் 31 இடம் பொதுப் பிரிவு என்பதால்,தரப் பட்டியலில் முதல் 31 இடம் பெற்றோருக்கு இடம் கிட்டும். இதில் சாதி வித்தியாசம் இல்லை.
1). 32 ல் இருந்து 31+30=61 வது இடம் வரை பெறும் பின் தங்கிய வகுப்பு மாணவருக்கு பின் தங்கிய பங்கீட்டில்[30%] இடம் கிட்டும்.
2.) 32 ல் இருந்து 31+20=51 வது இடம் வரை பெறும் மிகவும் பின் தங்கிய வகுப்பு மாணவருக்கு மிகவும்பின் தங்கிய பங்கீட்டில்[20%] இடம் கிட்டும்.
3.) 32 ல் இருந்து 31+18=49 வது இடம் வரை பெறும் அட்டவனை வகுப்பு மாணவருக்கு அட்டவனை வகுப்பு பங்கீட்டில்[18%] இடம் கிட்டும்.
இதே போல்
4) 32 ல் இருந்து 31+19=50 வது இடம் வரை பெறும் முற்பட்ட வகுப்பு மாணவருக்கும் மேல் அதீத பங்கீட்டில்[19%] இடம் கிட்டும்.
ஆகவே முற்பட்ட பிரிவினருக்கும் தமிழகத்தில் மறைமுக இட ஒதுக்கீடு உண்டு.
தமிழகத்தில் முற்பட்டோர் ஒதுக்கப் படுகிறார் என்னும் வாதம் பச்சைப் பொய்யே!!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
பகுத்தறிவும் கிடையாது! புடலங்காயும் கிடையாது! எந்த விவாதம் என்றாலும்...அதை திசை மாற்ற முகவை கொண்டுவருவது உங்கள் குழுவின் வேலை. அதற்குத் தான் அந்த பதில். கோர்ட்டை மதிக்காமல் செய்கிறவர்களை என்ன செய்யமுடியும்? பெரியாரே பிரதம மந்திரியாக இருந்தாலும்...ஒன்னும் புடுங்க முடியாது என்றால் முக என்ன ஒரு சுண்டைக்காய்!
ReplyDeleteI.I.T kahakpur மற்றும் kanpur ஊழலுக்கு ஏன் பாஜக கேள்வி கேட்கவில்லை?
சென்னை I.I.T - ல் நீதிமன்ற ஆணையையே மதிப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கேசு போட்டு ஜெயித்துக்கொள்ட்டும் என்ற திமிர் ஆணவம். அனால், நீதி மன்றம் இவர்களை தண்டிக்காது....அப்புறம் எதுக்கு நீதி மன்ற ஆணை?
இதுல முக சொன்னா அப்படியே கேட்டுவாங்க.
வீரமணியை சொன்னதற்கு காரணாம் ஏன் இதற்க்கு போராடவில்லை என்று குற்றம் சாட்ட. வீரமணியை நீங்கள் நக்கல் அடித்தது விவாதத்தை திசை மாற்ற. வீரமணி ஜால்ராவுக்கு சோ ஜால்ரா எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை...எனக்கு ரெண்டு பெரும் வேண்டியவர் இல்லை; உங்களுக்கு ?
//எந்த விவாதம் என்றாலும்...அதை திசை மாற்ற முகவை கொண்டுவருவது உங்கள் குழுவின் வேலை. அதற்குத் தான் அந்த பதில்.//
ReplyDeleteஎன்ன குழுவோ என்ன எழவோ தெரியல. முன்பு எப்போது திசை மாற்றினேன்? ஆரம்ப பின்னூட்டங்களை பார்க்கவும். இட ஒதுக்கீடு பற்றிதான் பேசினேன். தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு பதிவில் சம்மந்தமில்லாம் எய்ம்ஸ் பற்றியெல்லாம் பேசி திசை திருப்பியவர் யார் என புரியும்!
//சென்னை I.I.T - ல் நீதிமன்ற ஆணையையே மதிப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கேசு போட்டு ஜெயித்துக்கொள்ட்டும் என்ற திமிர் ஆணவம். அனால், நீதி மன்றம் இவர்களை தண்டிக்காது....அப்புறம் எதுக்கு நீதி மன்ற ஆணை? //
நீதிமன்ற ஆணையை மதிக்காமல் விட்டால் அப்புறம் களிதான்! மாநில அரசு, சட்டமன்றம் போன்ற அமைப்புகள் வேடிக்கை காட்டலாம். ஆனால் ஐஐடி போன்றவையும் மதிப்பதில்லை என்பது ஏற்க முடியாத வாதமாகும். மேலும் ஐஐடி என்ன அரசியல் சட்டம் பாதுகாக்கும் அமைப்பா? மத்திய அரசின் மனிதவளத் துறை நினைத்தால் எந்த ஒரு சட்டத்தையும் கொண்டு வந்து ஐஐடியை வழிக்கு கொணரலாம். இதுக்குதான் கருணாநிதி செயல்படவில்லை என்றேன். கருணாநிதி சொன்னால் கேட்பார்களா என சொன்னால்தானே தெரியும்? அவர்களுக்கு பார்ப்பானை எதிர்ப்பது போல சீன் போடவும், அப்புறம் சீனிவாசன் போன்ற பணக்கார பார்ப்பானுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கவும் தெரியும்.
//வீரமணியை நீங்கள் நக்கல் அடித்தது விவாதத்தை திசை மாற்ற. வீரமணி ஜால்ராவுக்கு சோ ஜால்ரா எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை...எனக்கு ரெண்டு பெரும் வேண்டியவர் இல்லை; உங்களுக்கு ?//
சோ ஒரு வீரமணிக்கு போட்டியாக போயஸ் தோட்டத்து ஜால்ரா ஆகிவிட்டவர்தான். ஆனால் இந்த முறை சமூகநீதி காத்த வீராங்கனை வீரமணியை கிட்ட விடாத காரணத்தில் தனது கடமை சரிவர ஆற்ற முடியவில்லை.வீரமணி சமூகநீதியை நிலைநாட்ட விரும்பும் அமைப்பின் தலைவர். ஆனால் சோ தனிப்பட்ட நபர், காமெடி நடிகர், பத்திரிக்கையாளர், தன்னை பிஜேபி, அதிமுக ஆதரவாளராயும் பழமைவாதியாகவும் வெளிப்படையாக அறிவித்தவர். இருவரையும் ஒப்பிடுவதே தவறு. வீரமணிக்கு பொறுப்பு அதிகம்.
நிற்க, வீரமணியை ஒரு வார்த்தை கிண்டலடித்தால் ஏன் விவாதம் திசைமாறுது? நீங்கள் விவாதம் வீரமணியை விட முக்கியம் என கருத்தை செலுத்தும் பட்சத்தில்!
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/parasakthi/desam-gnanam.php#.Uffj5I3VB-c
DeleteSong: தேசம் ஞானம் கல்வி - Desam gnanam kalvi
Movie: Aandavan kattalai - திரைப்படம்: பராசக்தி
Dialogues: kalaignar M. Karunanidhi, வசனம்: கலைஞர் கருணாநிதி[ hi hi]
Direction: R. Krishnan, S. Panju, இயக்குனர்: ஆர். கிருஷ்ணன், எஸ். பஞ்சு
Actors: Sivaji ganesan, S.S. Rajendaran, Sahasranamam, Pandaribai, Sarojini
நடிகர்கள்: சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், சஹஸ்ரநாமம், பண்டரிபாய், சரோஜினி
Singers: J.P. chandrababu, பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கண்ணதாசன்
Music: R Sudarsanam இசை: ஆர். சுதர்சனம்
Year: 1952
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி
நல்லவரானாலும் ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
கருணாநிதி என்ற நபரை ஏதாவது சொன்னால் நம்பள்கி அவர்களுக்கு ஏன் கோவம் வருகின்றது.அதுவும் அதீத கோவம். யாராவது சொல்லுங்கப்பா...
ReplyDeleteகருணாநிதி போன்ற சுயநலம் பிடித்த நபர்கள் பதவிக்காக அலைவார்களே தவிர இதுபோன்ற சமூக நலன் காக்க ஒன்றும் செய்யமாட்டார்கள்.
சகோ இராவணன்
Deleteநல்ல கருத்து. ஆனால் கருணாநிதி மட்டும் அல்ல பெரும்பான்மை அரசியல்வாதிகள் அப்படித்தான்.
இப்படித் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நாமே குற்றவாளிகள்.
நன்றி!!!
தவறு ராவணன்! மற்றவர்கள் முகவை உபயோகப்படுத்தி தப்பை மறைக்கிறார்கள். அதை ஊடகங்கள் செய்கின்றன. அதை நம்மவர்கள் நம்புகிறார்கள்.
ReplyDeleteஉச்ச நீதிமன்ற தீர்ப்பையே மிதிக்கவில்லை. I.I.T ஆரம்பித்த காலத்தில் இருந்து நடக்கிறது. எவனும் களி தின்னவில்லை. அவன் செய்யறத செய்வான்...ஆனால், நாம் கோர்டுக்கு போகணும். இதுலே முக போய் சொன்ன போடா வெண்ணை என்று I.I.T peon -ஏ துரத்தி விட்டுடுவான்.
முக இல்லை ஏன் நீங்க பொய் சொல்லிப்பபாருங்கள். பாமக சொல்லட்டும். அனால், பாஜாக கம்முன்னு வாயில குழக்கட்டை வைத்துக் கொண்டு இருக்கும். அதை எவனாவது கேட்டானா?
நண்பர்கள் நம்பள்கி,நந்தவனம்
ReplyDeleteபதிவில் மேல் அதீத இட ஒதுக்கீட்டின் மூலம் முற்பட்டோருக்கும் 19% வரை பங்கீடு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. நரேனுக்கு இட்ட மறுமொழியில் இதை இன்னும் விளக்கி இருக்கிறேன்.
மேலும் ஐ.ஐ.டி,ஏ.ஐ.எம்.எஸ் போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப் படவில்லை என்பதும்,முற்பட்டோருக்கு சாதகமாக பல விடயங்கள் முன்னெடுக்கப்படுவதும் உண்டு என்றாலும் ,பதிவில் இத்னைப் பற்றி சொல்லவில்லை.
இது பற்றி தரவுகள் அடிப்படையில் மீண்டும் ஒருமுறை விவாதிப்போம்.
இப்பதிவில் நாம் வலியுறுத்துவது தமிழக்த்தில் முற்பட்டொருக்கும் மறைமுக இடப் பங்கீடு இருக்கிறது என்பதுதான்.
இல்லை கடந்த சில வருடங்களீல் மருத்துவம், அரசு பொறியியல் கல்லூரிகளில் முற்பட்டோரின் சதவீதம் 10% க்கும் குறைவு என எவரேனும் சான்றுகள்,புள்ளி விவரம் அடிப்படையில் விளக்கினால், முற்பட்டோருக்கும் இடப் பங்கீடு பற்றி ஆலோசிக்கவே வேண்டும்.
இதுதான் எதார்த்த சூழல், இதில் அரசியல்வாதிகள் நிலைப்பாட்டினைக் கொண்டு வருவது சரியல்ல. அரசியல் இலாபத்திற்காக எதையும் செய்யும் வியாபாரிகள் அவர்கள்.
நாம் உண்மையைத் தவிர யாருக்கும் ஆதரவாளர் அல்ல!!!.
நன்றி!!!
நண்பர் நம்பள்கி,
ReplyDeleteபா.ஜ.க, இந்துத்துவ பார்ப்பன கட்சி, ஜெயலலிதா பாப்பாத்தி, அதனால் அவர்கள் வாய்மூடி இருப்பார்கள். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், ஏன் என்று கேட்கமுடியாது.
ஆனால், இடஒதுக்கீட்டை தமது உயர் மூச்சாக கொண்டுள்ள திராவிட கொள்கையின் அரசியல் வெளிப்பாடாக இருக்கின்றது தி.மு.க. தி.மு.க வை மத்தியில் நடக்கும் இடஒதுக்கீடு குளறுபடிகளை 1996 ஆம் ஆண்டு முன் என்ன செய்தார்கள் என கேட்க முடியாது. ஆனால் அதன் பிறகு மத்திய அரசாங்கத்தில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக தி.மு.க விளங்கியதால், என்னச் செய்தார்கள் என கேள்வி நிற்கின்றது. சரி செய்ய முடியாவிட்டாலும், மூர்க்கத்தனமாக முட்டி மோதி பார்க்க வேண்டாமா. இருக்கும் அநியாயத்தை கேட்க யாராவது ஒருத்தர் இருக்க வேண்டும் அந்த நிலையில் தி.மு.க இருக்கும் போது செய்திருக்க வேண்டாமா.
உரிமைகள், spoon feeding ஆக வராது, அதை போராடிதான் பெற முடியும். ஐ.ஐ.டியில் அப்படியிருக்கிறது என்றால் போராடித்தான் வெற்றிப்பெற முடியும், அத அப்படித்தான் என்று விட்டு விட முடியாது.
பிற்படுத்தப்பட்ட பிறவினருக்காக இடஒதுக்கீடு 1990 வருடத்திலிருந்து மத்தியில் இருந்தது என எடுத்துக்கொண்டால், இடஓதுக்கீடு இல்லாமல் 1947 முதல் 1990 வரை நடந்த அனைத்து தேர்வினால, திறமைசாலிகள் வந்து இந்தியா ஒரு வல்லரசாக ஆகியிருக்க வேண்டுமே. ஐ.ஐ.டியில் படித்தவர்களால் இந்தியா ஒரு வல்லரசாக இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டுமே.
மக்கள் வரிப்பணத்தில், ஒரு ”சிலரை” ”மெக்காலே” புத்திரர்களாக, வெள்ளைக்காரனுக்கு அடிமை தொழில் செய்யும் கூடாராகாகியுள்ளது ஐ.ஐ.டி.
நான் ஆட்சிக்கு வந்தால் மறு நிமிடமே ஐ.ஐ.டிகளை ஒழித்துக்கட்டுவேன். இந்தியாவுக்கும் அதன மக்களுக்கும் பிரியோஜனப்படாத ஒரு அமைப்பு.
@சகோ சார்வாகன்
ReplyDeleteஐஐடி போன்றவற்றில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவது இல்லை எனில் இது குறித்து அரசியல்வியாதிகள் அதிலும் குறிப்பாக சமூகநீதியை வைத்து ஆட்சி வரும் கருணாநிதியை குறை சொல்லாமல் யாரை நோவது? பாஜக வின் மண்டல் கமிசனை எதிர்த்தவர்கள். அவர்களுக்கா தமிழ்நாட்டில் ஓட்டுப்போட்டோம்? கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் ஓட்டு போடுகிறோம். அதிலும் கருணாநிதிதான் மூச்சுக்கு முன்னூறு தடவை சூத்திரன் என குரலு கொடுக்கிறார்,மத்திய அரசிலிருக்கிறார். பிரச்சனை என்றதும் டெமக்ரெட் கட்சியை கேட்டாயா, ரிப்பளிகன் பார்டியை கேட்டாயா, திமுகவை ஏன் கேட்கிறாய் என்றால் நியாமா?
//நாம் உண்மையைத் தவிர யாருக்கும் ஆதரவாளர் அல்ல!!!.//
முழுவதும் உடன்படுகிறேன். நல்லது செய்வது பார்ப்பானே சூத்திரனோ, வீரமணியோ கருணாவோ சோவோ யார் செய்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம். அல்லவை செய்தால் திட்டுவோம். அதை விடுத்து பார்ப்பான் என்ன செய்தாலும் திட்டுவோம், சூத்திரர்கள் என்றால் கண்ணை மூடி ஆதரிப்போம் என்க நாம் தயாரில்லை!
குஜராத்தில் மோடி மலம் அள்ளும் தலித்துகளுக்கு வேதம் கற்பித்து கோவில் குருக்களாக ஆக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார், இதை வரவேற்போம் (கருணாநிதியின் இதே போன்ற திட்டம் என்னவானது என்பதை உமது முடிவுக்கே விட்டுவிடுகிறேன்). ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செய்தால் எதிர்ப்போம். ஆனால் சமூகநீதியை சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு ஒன்றும் புடுங்காவிடில் இன்னமும் அதிகமாக எதிர்ப்போம் அவ்வளவுதான்.
-------------
பாட்டு சும்மா சொல்லக்கூடாது... அனுபவிச்சு எழுதியிருக்கிறார்! இதயத்திலிருந்து வரும் பாட்டு என்பது இதுதான்.
@நம்பிள்கி
ReplyDeleteஉங்களை பர்ஸனலாக தாக்குவதற்காக வீரமணியை கிண்டலடிக்கவில்லை. அவர் செய்வதில் பலவற்றில் ஒப்பதல் இல்லை.
சூத்திரர்கள் என்பதினால் யாரையும் குருட்டாம் போக்கில் ஆதரிக்க நான் மட்டுமல்ல, சகோ.சார்வாகன், வவ்வால், நரேன் போன்ற அடுத்த தலைமுறையினர் யாரும் தயாராகவில்லை. இதை நல்ல மாற்றம் என நினைக்கிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteவீரமணியை கிண்டலடிப்பது எப்படி என்னை பர்ஸனலாக தாக்குவதாகும். தாரளமாக செய்யுங்கள்...
ReplyDeleteபதிவுலகில், ஊடகங்களில், மற்றும் பொது இடங்களில் மக்கள் சரியாக விவாதம் செய்ய முடியாதபோது...முகவை இழுப்பது...வீரமணியை இழுப்பது...இந்த வேலையைத்தான் செய்கிறர்கள். இல்லை...போய் பிள்ளை குட்டிங்களே படிக்கவை என்று சொல்லி விவாதத்தில் இருந்து கழட்டிக் கொளவது...
இந்து மதத்தில் உள்ள குற்றங்களை சொன்னால் கேள்விகளுக்கு பதில் வராது...அங்கே என்ன வாழுது? அந்த மதத்தையும் திட்டேன்...இப்படித்தான்..இது தமிழர்களின் வாதத்திரமை.
மீதி மதத்தை திட்டற வேலையை நீ செய்; நான் இந்து மதத்தில் உள்ள குறைகளைப் பற்றி கேட்டதற்கு உன் பதில் என்ன? அதற்க்கு என்றும் பதில் கிடையாது.
I.I.T - ல் கோர்ட்டு சொல்லியும் கேட்காமல் ஊழல்...பாதிக்கப்பட்டவர்கள் தான் ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு போகணும்; இது எல்லோர்ரலேயும் முடியுமா?
அவர்கள் அதையே அந்த ஊழலையே செய்கிறார்கள் என்றால் முக என்ன கிழிச்சாரு...என்று திசை திருப்பதறு...கெட்ட கேள்விக்கு முதலில் பதில்...அப்புறம் முக..நா.க பற்றி பேசுவோம்.
எந்த பிரதம மந்திரியாலும் எந்த கோர்ட்டாலும் தடுக்க முடியாத ஊழலைப் பற்றி பேசினால்...முக...முக என்ற சுண்டைக்காய் பற்றி பேச்சு எதற்கு? இது தான் தமிழர்கள் விவாதம் செய்யும் முறை...இதை துகளக் சோ நல்லாவே செய்வார்; அதை எவன் புரிஞ்சுக்கயறான். அவருக்கு அறிவு ஜீவி என்ற பட்டம்!
நம்பள்கி....திரும்பத் திரும்பத் திருப்பிப்போட்டால் தோசை கருகிவிடும். கருணாநிதி என்ற நபர் கருகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ReplyDeleteஅதிகமாக வசூல் இருக்கும் அமைச்சுகளை மிரட்டி வாங்கினார். ஜெயலலிதாவை மிரட்ட சில அமைச்சுகளை கேட்டு வாங்கினார். ஆனால் மக்கள் நலன் காக்கும்...சமூக நீதி காக்கும் எந்தத் துறையையும் அந்த கருணாநிதி என்ற நபர் விரும்பிக் கேட்கவில்லை.
15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பங்காற்றிய கருணாநிதியின் கட்சி கிழித்தது என்ன?
பத்தோடு பதினொன்னு...அப்புறம் இந்த ஆளுக்கு மரியாதை என்ன வேண்டியுள்ளது?
கருணாநிதியும் சாக்கடைதானே.......சாக்கடையில் நல்ல சாக்கடை என்ன?
கருணாநிதியும் ஒரு அரசியல் வியாபாரி....குடும்பத்திற்காக அரசியல் செய்யும் ஒரு கேடுகெட்ட ஒருவர்.
//பதிவுலகில், ஊடகங்களில், மற்றும் பொது இடங்களில் மக்கள் சரியாக விவாதம் செய்ய முடியாதபோது...முகவை இழுப்பது...வீரமணியை இழுப்பது...இந்த வேலையைத்தான் செய்கிறர்கள். இல்லை...போய் பிள்ளை குட்டிங்களே படிக்கவை என்று சொல்லி விவாதத்தில் இருந்து கழட்டிக் கொளவது...////
ReplyDeleteகவலையே படாதீங்க, சகோ.சார்வாள் பின்னுட்டபெட்டியை மூடும் வரை விவாதிக்க தயார்! வீரமணியை முதலில் இழுத்தது நானா நீரா? இதை வீரமணியின் டவுசரை உருவும் வினவு http://www.vinavu.com/2013/07/31/archagar-caste-bar-dk-non-role/ இந்த ஆளை பெயரை போட்டு எழுதினால் காமெடியாக கருதாமல் சீரியஸாகவா எடுத்துக்கு வாங்க?
//இந்து மதத்தில் உள்ள குற்றங்களை சொன்னால் கேள்விகளுக்கு பதில் வராது...அங்கே என்ன வாழுது? அந்த மதத்தையும் திட்டேன்...இப்படித்தான்..இது தமிழர்களின் வாதத்திரமை.
மீதி மதத்தை திட்டற வேலையை நீ செய்; நான் இந்து மதத்தில் உள்ள குறைகளைப் பற்றி கேட்டதற்கு உன் பதில் என்ன? அதற்க்கு என்றும் பதில் கிடையாது.//
இந்து மதம் குறைகளற்ற மதமென்று நான் சொன்னதே இல்லை. அப்படி குறைகளற்று இருந்திருந்தால் இந்த பதிவே எழுத வேண்டியிருந்திருக்காது. ஆனால் குறைகள் பற்றி பதில் சொல்ல நான் என்ன சாமியார் மடமா நடத்துகிறேன்?
ஒருவேளை கருணாவை கேட்டுப்பாருங்கள், அவருக்கு பதில் தெரிந்திருக்கலாம். பதில் தெரிந்துகொள்ளத்தான் பீடோஃபைல் சாமியாரான சாய்பாபாவை வீட்டுக்கு வரவைத்து மனைவியை விட்டு காலில் விழவைத்து கெஞ்சியிருப்பார் என நினைக்கிறேன். அதுமட்டுமல்லாது முகவுக்கு குடும்ப சகிதம் இந்துமதம் பற்றி அறிவு உண்டு. http://www.tamilleader.in/Content.aspx?ArticleId=3004&CategoryId=0
ஆதலால் என்னை மாதிரியான ஞானசூன்யத்திடமிருந்தொல்லாம் பதிலை எதிர்பார்க்காதீர்கள்!
//I.I.T - ல் கோர்ட்டு சொல்லியும் கேட்காமல் ஊழல்...பாதிக்கப்பட்டவர்கள் தான் ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு போகணும்; இது எல்லோர்ரலேயும் முடியுமா?//
முடியாது, அதனால்தான் போலி சமூகநீதி வேடம் போடாமல் கருணாநிதியை இதற்காவும் டில்லியில் போராட சொல்கிறோம்!
//அவர்கள் அதையே அந்த ஊழலையே செய்கிறார்கள் என்றால் முக என்ன கிழிச்சாரு...என்று திசை திருப்பதறு...கெட்ட கேள்விக்கு முதலில் பதில்...அப்புறம் முக..நா.க பற்றி பேசுவோம்.//
அடேயப்பா, நீங்கெல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் பண்ண வேண்டிய ஆட்கள் சார்! நான் மஞ்சதுண்டு ஒண்ணுமே கிழிக்கலைன்னு கேட்டதுக்கு இருண்ட ஆப்பிரிக்காவில் ஊழல், அண்டார்டிக்காவில் ஊழல் இதெல்லாம் கருணாநிதியா சரி பண்ணவேண்டும் என கேட்டு திசை திருப்பியது நீங்கள் தான்!. சென்னையில் நடக்கும் அநியாத்துக்கு தமிழ்நாட்டு குடிமகன் என்கிற முறையில் கருணாவைத்தான் கேட்போம் என்பதுதான் எமது நிலை.
//எந்த பிரதம மந்திரியாலும் எந்த கோர்ட்டாலும் தடுக்க முடியாத ஊழலைப் பற்றி பேசினால்..//
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கருணாநிதி போன்ற ஆட்சியாளர்கள் ஊழலை தடுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஐஐடியை விடுங்கள். கருணாநிதியின் போன ஆட்சி காலத்தில் மதுரை பல்கலையில் ஆசிரியபணிக்கு அமெரிக்காவிலிருக்கும் எனது நண்பரை ஸ்கைபில் இன்டர்வியூ செய்தார்கள்... செய்தது மதுரை இளவரசரின் அடியாட்கள். பணியின் விலை 22 லட்சமாம்! இதில் இட ஒதுக்கீடா கடைபிடித்திருப்பார்கள்? சும்மா ஏன் சார் ஐல்லி அடிக்கறீங்க!
நந்தவனம்,
Deleteஇத சொன்னா நீர் என்ன எக்ஸ்பெர்ட்டானு பாயுவார்,ஆனால் இதில கொஞ்சம் தகவல் தெரியும் என்பதால் என்பதால் சொல்கிறேன்,
///I.I.T - ல் கோர்ட்டு சொல்லியும் கேட்காமல் ஊழல்...பாதிக்கப்பட்டவர்கள் தான் ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு போகணும்; இது எல்லோர்ரலேயும் முடியுமா?//
முடியாது, அதனால்தான் போலி சமூகநீதி வேடம் போடாமல் கருணாநிதியை இதற்காவும் டில்லியில் போராட சொல்கிறோம்!//
மத்திய மனிதவள மேம்பாட்டு துறையை கேட்டு வாங்கினாலே ஐ.ஐ.டி நிர்வாகத்தை எல்லாம் அல்லாக்க தூக்கி மல்லாக்க போடலாம்.
ஆனால் அப்படிலாம் செய்யாமல் பேரனுக்கு வருமானம் பார்க்க என தகவல் ஒளிப்பரப்பு துறை தான் வேண்டும்னு அடம்பிடிச்சு நின்னார் மஞ்சத்துண்டு என்பதை நாடறியும் :-))
இதை விட எப்படி சல்லீசா வருமானம் பார்க்கலாம் என கணக்குப்போட்டே ஒவ்வொரு துறையும் மஞ்சத்துண்டு கேட்டு வாங்கினார்.
# சமீபத்தில் ஒரு பிரச்சினையில் ஐ.ஐ.டி ஐ அம்மையார் மடக்கியதை பலரும் கவனிக்கவேயில்லை, கேம்பஸில் நடந்த ஒரு தற்கொலை வழக்கை தமிழக காவல் துறை விசாரிக்க முடியாது என ஐ.ஐடி சேர்மன் தெனாவெட்டுக்காட்ட, ஐ.ஐடி அமைக்க இலவச நிலம் தமிழக அரசு கொடுத்துள்ளது,மாநிய விலையில் மின்சாரம் வழங்குகிறது ,அதெல்லாம் கட் செய்யப்படும்னு போட்டு தாக்கி , உள்ளே தமிழ்நாடு காவல் துறை விசாரணை செய்ய வச்சிட்டாங்க.
மடக்க வேண்டிய இடத்தில் இருந்துக்கொண்டு மடக்கினால் ,ஐ.ஐடியாவது ஆட்டுக்குட்டியாவது :-))
சகோ.சார்வாகன்,
ReplyDelete//பாருங்கள் தமிழ்நாடு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிவிட்டது. மேலும் பிந்தங்கிய சாதிப் பிரிவினருக்கு கிரீமி லேயர் கட்டுபாடும் கிடையாது.ஆகவே தமிழகத்தில் முற்பட்ட சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள்,இரண்டாம் தரக் குடிமக்கள் போல் நடத்தப்படுகிறார்கள். ஆகவே அவர்களில் பெரும்பான்மையோர் புலம் பெயர்வதால் நாட்டில் அறிவு+திறமைக் குறைவுபடுகிறது. இதுதான் இந்தியாவின்(தமிழகத்தின்) சிக்கல்களுக்கு காரணம் என்னும் பிரச்சாரம் இணையத்தில் கட்டவிழ்க்கப் படுகிறது.சகோ புரட்சி மணி சிங்களர்கள் ஈழத் தமிழர்களை ஒடுக்குவது போல், திராவிடர்கள், முற்பட்ட சாதியினரை ஒடுக்கிறார் என்னும் வாதத்தினையும் வைத்தார்.
இதற்கு அடிப்படை உண்டா என்பதை தமிழகம் எப்படி உச்சநீதி மன்றத் தீர்ப்பினை மீறாமல் குறுக்கு வழி ஒன்றை கையாள்கிறது என்பதை அறிந்தால்,உண்மையில் தமிழகத்தில் முற்பட்ட சாதியினருக்கும் மறைவு இடப் பங்கீடு உள்ளது என்பதை அறிய முடியும்.
படியுங்கள் தமிழக இட ஒதுக்கீடு பற்றிய விக்கி பிடியா!!!//
கூடுதல் இடங்கள் ஏற்ப்படுத்தப்பட்டு , முற்ப்பட்டோருக்கு பாதிப்பில்லாமல் வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே, நானே முன்னர் நீண்ட விவாதம் புரிந்து பதில் சொல்லி இருக்கிறேன்.
இப்பொழுதும் அப்படி யாரேனும் பேசினால், செலக்டிவ் அம்னீசியாவ்வாகத்தான் இருக்க வேண்டும் :-))
# //இந்த பட்டியல் முறையில் பல குளறுபடிகள் செய்யும் வாய்ப்பு உள்ளதால்,ஸ்பெசல் ஒதுக்கீட்டில் முற்பட்ட சாதியினருக்கு கடந்த சில வருடங்களில் குறைந்த பட்சம் 19%)50-31!) கிடைத்து இருக்கும் வாய்ப்பே அதிகம்.
ஆகவே தமிழகத்தில் முற்பட்ட சாதிக்கு மறைமுக இட ஒதுக்கீடு இருக்கிறது.
ஆகவேதான் பிற மாநிலங்கள் போல் இட ஒதுக் கீட்டை வெளிப்படையாக எதிர்ப்பது இல்லை.//
கண்டிப்பாக சிறப்பு கூடுதல் இடங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து இடங்களையும் முற்பட்டப்பிரிவினர் தான் அனுபவிக்கிறார்கள், அதில் குழப்படியே வருவதில்லை, எப்படி எனில்,
பட்டியல் இனத்தினர் ஓப்பன் கேட்டகிரியில் தேர்வாகும் அளவுக்கு மதிப்பெண் எடுத்திருந்தாலும், பொதுப்பிரிவு என தேர்வு செய்து கல்லூரியில் சேர்வதில்லை, காரணம் பெரும்பாலோர் ஏழைகள் என்பதால், பொதுப்பிரிவு என தேர்வு செய்துவிட்டால் கல்லூரிப்படிப்பிற்கு "ஸ்காலர்ஷிப்" கிடைக்காது, மேலும் சிறப்பு கட்டண சலுகையும் கிடைக்காது, எனவே ஏழ்மை நிலையில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்தாலும் , பொதுப்பிரிவு இடத்தில் பட்டியல் இனத்தினர் சேர்வதில்லை என்பதே நடை முறை உண்மை.
கொஞ்சம் வசதியான பட்டியல் இன மக்களும் பிற்காலத்தில் வேலை வாய்ப்பில் பிரச்சினை வரலாம், அல்லது ஏன் அரசு கொடுக்கும் உதவித்தொகையை இழக்கணும் என "பட்டியல் பிரிவில் தான் சேர்க்கிறார்கள், எனவே தான் அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டியல் பிரிவு கட் ஆஃப் அதிகமாகவே இருக்கிறது.
உண்மையில் அதிக மதிப்பெண் எடுத்த பட்டியல் பிரிவு மாணவன் பொதுப்பிரிவில் சேர்ந்தால் ,அதற்கு அடுத்து மதிப்பெண் பெற்ற பட்டியல் இன மாணவனுக்கு இடம் கிடைக்கும், இதன் மூலம் கூடுதல் இடங்கள் பட்டியல் பிரிவினருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது,ஆனால் அப்படி நடப்பதில்லை என்பதே யதார்த்தமாகும்.
கல்லூரி அட்மிஷனின் போது பணியாற்றியுள்ளேன் என்பதால் நேராக பார்த்துள்ளேன். அத்திப்பூத்தார் போல சில மாணவர்கள் பொதுப்பிரிவில் கேட்டால், பிராஞ்ச் செலக்ட் செய்வதில் பிரச்சினை வரும், ஃபீஸ் கன்செஷன் கிடைக்காது,ஸ்காலர்ஷிப் கிடைக்காது என சொல்லிவிடுவார்கள், உடனே பட்டியல்ப்பிரிவில் அட்மிஷன் போட சொல்லிவிடுவார்கள்.
உ.ம்.
இம்முறை அண்ணாப்பல்கலையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷனுக்கு செம கிராக்கி, பட்டியல் பிரிவு மாணவர்கள் சிலர் ஒரு மார்க் குறைவாக இருந்தாலும் பொதுப்பிரிவில் அப்பிராஞ்சுகள் எடுக்க முடியாது,வேறு பிராஞ்ச் தான் கிடைக்கும்,எனவே பட்டியல்ப்பிரிவில் தான் சேர்ந்தார்கள்.
இடஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் என்பது பணியில் நுழையும் (Entry Level) நிலையில் மட்டுமே. பதவி உயர்வில் வேறு விதமான நியாயமற்ற மறைமுக இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. இது பற்றி அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. காரணம் இதில் ஆதிக்கம் செலுத்துவது அதிக அளவு செல்வாக்கு உடைய வருவாய் துறையினரே. ஊழல் மலிந்து காணப்படுவதற்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். உதாரணமாக ஒரு மாவட்ட ஆட்சியரின் உதவியாளரில் பொது உதவியாளர் 10 ஆண்டுகள் பணியாற்றினால் போதும் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்று விடுவார். ஆனால் பிற உதவியாளர்கள் பணிக்காலம் முழுவதும் செலவிட்டாலும் ஐஏஎஸ் ஆக முடியாது. இவ்வளவுக்கும் பொது உதவியாளர் வெறும் பட்டதாரி மட்டுமே ஆனால் மற்ற உதவியாளர் தொழில் நுட்ப வல்லுனராகவும் பட்டதாரியாகவும் இருப்பது உண்டு. இந்த நிலை ஒரு மறைமுக இடஒதுக்கீடு பதவி உயர்வில் நியாயமற்ற முறையில் வருவாய்த் துறையினரில் ஊழல் ஒத்துழைப்புக்கு கொடுக்கப்படும் வெகுமதியாக காலகாலமாக வழங்கப்பட்டுவருகிறது. அதை எதிரத்து நிலைமைய மாற்ற சிறுபான்மையினராக உள்ள பிற துறையினரால் இயலாமல் உள்ளது என்பது கசப்பான உண்மை. அரசு இயந்திரத்திலேயே உள்ள இந்த சட்டத்திற்க்கு புறம்பான செயலை அரசுகளோ அரசு ஊழியர் சங்கங்கலோ கூட கண்டுக் கொள்வதில்லை என்பது இதை எதிர்க்க அல்லது மாற்ற இயலாதவாறு வலுவான சக்தியாக வருவாய் துறை அமைப்பை சேர்ந்தவர்கள் செயல்படுவதும் அதை அனுசரித்து போக வேண்டிய நிலையில் அரசியல் சக்திகளுக்கும் உள்ளது என்பதும் மறைந்துள்ள உண்மைகள். என்று விடியுமோ! இது குறித்து வழிப்புணர்வு என்று ஏற்படப்போகுதோ!
ReplyDeleteஎன் பல நண்பர்கள் முற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆனால் மகன்(ள்)கள் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட எனச் சான்றிதழ் பெற்றிட, பெறாதவர்கள் போடுவதே வழக்கு.
ReplyDeleteஒருவருக்கு கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ ஒருமுறை மட்டும் எனக் கட்டுப்பாடு வருதலே சரியாகும். ஆன்ட் கருத்துக்களும் சரியானபடி விவாதத்திற்கு உட்படுத்தல் வேண்டும்.
தேவப்ரியாவின் இந்த கட்டுரை பார்த்தீர்களா- நியாயப் பிரமாணங்கள் - மோசே எழுதவில்லை
http://chennaipluz.in/pivotx/?e=2
நன்றி சகோ சுலைமான்,
Deleteநல்ல கட்டுரை
My comment on
ReplyDeletehttp://viyaasan.blogspot.com/2013/08/blog-post_13.html
சகோ வியாசன்,
உங்களுக்கு தமிழக அரசியல்,இஸ்லாம் பற்றி சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை.சீக்கிரம் பிடிபடும்.
இலங்கை மூமின்களின் இச்செயல் நான் எதிர்பார்த்ததுதான். மிக மிக..... இயல்பான விடயம்.
முதலில் இப்போதைய இலங்கையின் சூழலைப் புரிவோம்.
1. இராஜபக்சே சீன+... உதவியுடன் புலிகளிடம் இருந்து தமிழ் பிரதேசங்களைப் கைப்பற்றி இருக்கிறார்.இதற்கு முஸ்லீம் தலைகள் ஒத்துழைத்தன.
2. தமிழர் காணிகளை சிங்களருடன் , சேர்ந்து மூமின்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் ,இராசபக்சே ஆதரவோடு கூட்டணி அரசு அமைக்கிறார்கள்.
இச்சூழலில் மூமின் தலைகள் அதிகம் பொருளாதாரம்,அரசியல் பயன் அடைய முயற்சிக்கிறன. இதனை இராசபக்சே எதிர்ப்பு உள்நாட்டு,வெளிநாட்டு சக்திகள் பயன்படுத்த முடிவு செய்கின்றன.
சிங்களரிடம் இனவாத அரசியல் எளிதில் எடுபடும் என்பதால், மூமின்களுக்கு எரிச்சல் வரும் வகையில் ஹலால் முத்திரை எதிர்ப்பு, பல தாககுதல்கள் வரிசையில் கிராண்ட பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் வரை தொடர்கிறது.
இராசபக்சேவால் சிங்கள முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை எதுவும் செய்ய முடியாது.அதே சமயம் முஸ்லீம்களையும் பகைக்க முடியாது. சிங்களர் மேல் நடவடிக்கை எடுக்காமல் மூமின்களை பொறுத்து செல்ல மட்டுமே சொல்வார்.இராசபக்சேவைப் பகைத்தால் நிலைமை இன்னும் மோசம் மட்டுமே ஆகும் என மூமின்களுக்கு தெரியும்!!!
வஹாபிய இஸ்லாமிய இணைய பிரச்சாரம் என்பது ,உலக முழுதும் மையப்படுத்தப் பட்ட ஒன்று என்பதால் எதை எதிர்க்க வேண்டும்,எதை கண்டு கொள்ளக் கூடாது என அவர்களுக்கு தெரியும்.
இலங்கையில் எதற்கும் அடக்கி வாசிக்கனும்,இந்தியாவில் எதற்கும் சவுண்டு விடனும் என்பதே இப்போதைய நிலைப்பாடு.
***
வரும் காலங்களில் இலங்கையில் முஸ்லீம் எதிர்ப்பு சிங்கள இனவாதம் வலுப்பெறும்.
எல்லாவற்றுக்கும்[அடக்கி வாசிப்பதற்கும்] ஒரு எல்லை [ப்ரேக்கிங் பாயிண்ட்!!!] உண்டு.
***
ஒருவேளை இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தால், சிங்கள இந்துத்வா கூட்டணி ஏற்பட்டு அது மூமின்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பும் உண்டு.
[இது இந்துத்வாவினரின் நீண்ட நாள் விருப்பம்]
எது நடந்தாலும் தமிழர்களும்,இலங்கை மூமின்களும் ஒற்றுமையாக இருத்தல் என்பது நடக்காது. மூமின்களை நம்புவதற்கு சிங்களர்களை நம்பலாம்.
நன்றி!!!
.
//எது நடந்தாலும் தமிழர்களும் இலங்கை மூமின்களும் ஒற்றுமையாக இருத்தல் என்பது நடக்காது. மூமின்களை நம்புவதற்கு சிங்களர்களை நம்பலாம்.//
Deleteதெளிவான உண்மை. ஆனா சேர கூடியவங்களோடு சேர மாட்டார்கள். சும்மா வீம்புக்கு ஒன்றாக சேர்ந்து வாழக் கூடிவங்களை எதிர்த்து பிரச்சனைகளை மேலும் கேட்டு கேட்டு வாங்கி சேர்த்து வைத்து இன்னும் கீழே கீழே போவாங்க. ஆனா தமிழர்களோடு சேரவே மாட்டோம் என்கிற மூமின்களோடு சேர்ந்து வாழ ஏங்குவாங்களாம். இலங்கை இஸ்லாமிய நாடாகும் என்பது மூமின்கள் நம்பிக்கை.அப்போ சகோ வியாசன் விருப்பபடி மூமின்களோடு சேர்ந்து ஒன்றுக்குள் ஒன்றாக வாழலாம். பின்பு மண் பிரச்சனை மண் ஆசை கிடையாது. இலங்கை மண்ணும் அரபு மண் தான்.பனை மரத்திற்கு பதிலா பேரீச்ச மரம் நடலாம்.இன்ஷா அல்லாஹ்
ஆனா கனடாவில் இருந் கொண்டு சகோ வியாசன் எப்படி சேர்ந்து வாழ போகிறார்?
சகோவுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்.
ReplyDeleteசகோதரர் வியாசன் ,தமிழகஅரசியல் ,இஸ்லாம் குறித்து அறிந்திருப்பீர்களோ ,இல்லியோ முதலில் சார்வாகன் அரசியல் நீங்கள் அறியவில்லை..இவருடைய கனவெல்லாம் சவூதி அரேபியாவில் பெட்ரோல் வற்றவேண்டும் .மோடி பிரதமராக வரவேண்டும் ,இலங்கை பாக்கிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் ,பர்மா ,தாய்லாந்து முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என்பதே .குர்ஆனில் அவர் கூறியுள்ள வசனத்தின் விளக்கம் இதுவே .முஸ்லிம்களை எப்போதும் சந்தேகக் கண்ணிலும் குற்றப் படுத்திக் காட்டவேண்டும் என்பதே இவரது இலக்கு 3;28 இந்த வசனம் அருளபட்டதற்கு காரணம் சொல்லப் படுவதாவது முஸ்லிம்களில் ஹாத்திப் பின் அபீபலத்ஆ ரலி என்றொருவர் இருந்தார்.அவர் நபிசல் அவர்கள் மக்கா வெற்றிப் போருக்காக ஆயத்தாமாகிக் கொண்டிருந்த நவேளையில் அதப் பற்றிய ரகசியத்தை மக்காவில் இருந்த இறை மறுப்பாளருக்கு தெரிவித்து கடிதம் எழுதுகிறார் .தகவல் அறிந்த நபிசல் அவர்கள் அலி ரலி தலைமையில் ஒரு குழுவை அனுப்பி அக்கடிதத்தை கைப்பற்றி வர செய்தார்கள் .உமர் ரலி அவர்கள் ஹாத்திபை தண்டிக்க விரும்பிய பொழுது அதை நபிசல் அவர்கள் தடுத்துவிட்டார்கள் மக்காவிலுள்ள தனது உறவினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுப்பதற்கு ஒரு கைமாறாகவே இதை செய்ததாக ஹாத்திப் தன்னிலை விளக்கம் கூறினார்.
ReplyDeleteஆகநம்பிக்கையாளர்கள் , இறை மறுப்பாளர்களுடன் ரகசியங்களை பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு நட்புறவு வைத்துக் கொள்ளக் கூடாது .அது சமுதாயத்திற்கு மட்டுமின்றி தேசத்திற்கும் ஆபத்தாக மாறிவிடும் என்பதையே இவ்வசனம் உணர்த்துகிறது.மற்றபடி முஸ்லிம் அல்லாதோருடன் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் இதர நடவடிக்கைகளுக்கு இந்த வசனம் தடை விதிக்கவில்லை..கொடுக்கல் வாங்கல் ,நட்போடு பழகுதல்,மனிதாபிமான உதவிகள் செய்தல்,சமய நல்லிணக்கம் பேணல் உள்ளிட்ட நட்புறவுகள் அனுமதிக்கபப்ட்டவையே என்பது குறிப்பிட தக்கதாகும் த்ப்சிர் அல்மன்னார் தப்சீர் இப்னுகதிர் தமிழாக்கம் பாகம் 2 பக்கம் 59,60
இலங்கையில் முஸ்லிம்களின் நிலைக்கும் தமிழர்களின் நிலைக்கும் உள்ள வேறுபாடுகளே அறிந்து எழுதியிருக்க வேண்டும் .
முஸ்லிம்களுக்கு தமிழ் ஈழம் காண வேண்டும் என்ற லட்சியம் இல்லை .அவர்கள் தங்கள் வாழும் நாட்டில் ஏனைய மக்களோடு ஐக்கியமாக இருந்து தங்களது வணிகத்தை கவனித்து வாழவேண்டும் என்பதே .ஆக தமிழ் ஈழம் வேண்டும் என்பவர்களுடன் முஸ்லிம்கள் போராட அவசியமில்லாமற் போயிற்று
இப்போது நெடுங்கால இலங்கை பிரச்னையை தீர்த்து வைத்த ராஜ பக்சே மீது இலங்கை மக்களுக்கு நன்மைதிப்பு உள்ளது இது அடுத்து வரும் தேர்தல்களில் அவருடைய வெற்றியை எவராலும் தடுக்கமுடியாத நிலை. இதை மாற்ற முஸ்லிம்கள் எந்த உரிமைக்காகவும் போறாத நிலையில் அவர்களை வம்புக்கு இழுத்து ,அதன் மூலம் போலிஸ் ராணுவம் நடவடிக்கைசிங்களர்கள் மீது ராஜபக்சே அரசு எடுத்தால் ,மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தலாம் என்பதே அங்கே உள்ள எதிர்கட்சிகளின் நோக்கம் .இது சிங்கள அரசியல் .ஓன்று .தமிழக முஸ்லிம்களின் நிலை பற்றி பீஜே நல்ல விளக்கம் அளித்துள்ளார் அவர் நாசுக்காக நியாபடுத்தவில்லை .உங்களால் மறுக்கமுடியாத அளவில் நியாயத்தை சொல்லியுள்ளார்.
89. பிற மதத்தவர்களுடன் நல்லுறவு முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கட்டளையிடுகிறது. இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணலாம். இவ்வாறு எண்ணுவது தவறாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்குத் தகவல்கள் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. திருக்குர்ஆனிலேயே இது பற்றி விளக்கமும் உள்ளது. இஸ்லாத்தைக் கேலிப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (திருக்குர்ஆன் 5:57) உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும், கைகளாலும் நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (திருக்குர்ஆன் 60:2) உங்கள் பகைவர்களாகவும் இருந்து கொண்டு, உங்களையும், நபிகள் நாயகத்தையும் ஊரை விட்டே விரட்டியடித்தவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (திருக்குர்ஆன் 60:1) மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும், உங்களையும் நபிகள் நாயகத்தையும் விரட்டியடித்தவர்களையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவ்வாறு நடக்காத முஸ்லிமல்லாதவர்களுடன் நட்புப் பாராட்டுவது மட்டுமின்றி அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 60:8-9) வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டி, உள்ளுக்குள் உங்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 3:118) அன்றைய கிறித்தவ சமுதாயத்தினர் முஸ்லிம்களிடம் நெருக்கமான அன்பு கொண்டவர்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 5:82) ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 5:2, 5:8) உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 9:4) முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது. பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இவ்வசனங்களையும் சேர்த்துக் கவனித்தால் போர்ப் பிரகடனம் செய்யாத முஸ்லிமல்லாத மக்களுடன் நன்றாகப் பழகவே இஸ்லாம் கட்டளையிடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர். நபிகள் நாயகத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர்களில் ஒருவராக வைத்திருந்தார்கள். (நூல்: புகாரி 1356) நபிகள் நாயகம் (ஸல்) தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர். (நூல்: புகாரி 2916, 2068) யூதப் பெண்ணின் விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுள்ளனர். (நூல்: புகாரி 2617) யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். (நூல்: புகாரி 2412, 2417) இவர்களெல்லாம் போர்ப் பிரகடனம் செய்யாது முஸ்லிம்களுடன் பழகியவர்கள். இன்னும் சொல்லப் போனால் நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது. போர்ச் சூழ்நிலையில் எந்த ஒரு நாடும் எடுக்கக் கூடிய அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இடப்பட்ட கட்டளை தான் இந்த வசனங்களில் (3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23) கூறப்பட்டுள்ளன.
DeleteArticle Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/89-pira-mathaththavarkaludan-nalluravu/
Copyright © www.onlinepj.com
சகோ இப்பு ,
Deleteஅண்ணன் விளக்கத்தில் இந்த ஹதித் இல்லை.ஏன்? அப்படி எனில் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
***
இதில் முதல் 31 இடம் பொதுப் பிரிவு என்பதால்,தரப் பட்டியலில் முதல் 31 இடம் பெற்றோருக்கு இடம் கிட்டும். இதில் சாதி வித்தியாசம் இல்லை.///
ReplyDeleteஆனால் பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அதை 3.5%இடஒதுக்கீட்டில் சேர்த்துவிடுகிறார்கள்
அதனைத்தான் பதிவில் விளக்கி இறுக்கிறேன் சகோ
Deleteஇது ஒரு ஏமாற்று வேலை
இப்ராகிம் சயிக்மொஹமெட்,
ReplyDeleteநீங்க அப்பப்ப வந்து ஒரு அட்டாக் செஞ்சிட்டு போவிங்க.
//முஸ்லிம்களுக்கு தமிழ் ஈழம் காண வேண்டும் என்ற லட்சியம் இல்லை//
உண்மை.ஆனா இந்துக்களுக்கு மட்டும் தமிழ் ஈழம் காண வேண்டும் என்று என்ன லட்சியமோ?
அல்லது சீமான் அல்லது தமிழக மாணவர் ஏதாவது அப்படி தமிழ் ஈழம் காண வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிச்சிருக்காங்களா?
இவ்வளவு பேரழிவுக்கு பின்பும் ஈழம் என்ற அர்தமில்லாததை பற்றி அறிவுரை வழங்காம முஸ்லிம்களுக்கு தமிழ் ஈழம் காண வேண்டும் என்ற லட்சியம் இல்லை என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுவிட்டு நழுவலாமா நீங்க? அவங்களும் உங்க தமிழ் பேசுறவங்க தானே. நான் இலங்கையில் நின்றபோ சொன்னாங்க இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து எப்படியெல்லாம் முன்னேறுறாங்க என்று. நான் பொறாமைபடல்ல ஆச்சரியபட்டேன். சில தமிழங்க போக்கையிட்டு விரக்தி அடைந்தேன்.
வெளிநாடுகளில் வாழும் வசதியானவங்களை நம் அக்கறை பண்ண தேவையில்லை. ஈழ கோரிக்கையில் கிறிஸ்தவத்தின் பங்கு உண்டு.
தடம் மாறி மாறி சென்று கொண்டேயிருந்தாலும் பல வெளிச்சங்கள் பின்னூட்டங்கள் மூலம் கிடைத்தது. நன்றி.
ReplyDeleteஎளிய தமிழில் எடுத்துக்காட்டுடன் "நாவி சந்திப்பிழை திருத்தி" பற்றி ஒரு இடுகை போட்டால் நன்று!
ReplyDeleteஏற்கனவே இருந்தால்...சுட்டி கொடுக்கவும்.
Thanks!
இஸ்லாமிய பெண்கள் கலந்து கொள்ளும் அழகு ராணி போட்டி ஒன்று இஸ்லாமிய நாடான இந்தோநிஸ்யாவில் நடந்துள்ளது.
ReplyDeletehttp://www.bbc.co.uk/news/world-asia-24148779
அழகு ராணி போட்டி நடத்த தமிழக இஸ்லாமில் அனுமதி உண்டா? இப்ராகிம் சயிக்மொஹமெட் என்ன சொல்கிறார்?