Thursday, August 22, 2013

புதிய நாத்திகம்[New Atheism] என்றால் என்ன?


வணக்கம் நண்பர்களே,
நாம் ஒரு இறைமறுப்பாளர் என்பதை வெளிப்படையாக சொல்கிறோம். ஆத்திகம் ,நாத்திகம் குறித்த விவாதங்களில் ஈடுபாடு காட்டுகிறோம். நாத்திகம் என்பது ,(கடந்த+நிகழ் கால) சான்றுகளின் அடிப்ப‌டையில் கருதுகோள்களை பரிசோதித்து ஏற்றல் என்பதும், கிடைக்கும் எதிர்கால சான்றுகளுக்கேற்பவும் அவசியம் எனில் முடிவுகளை மாற்றுவது என்ப‌தே வரையறுப்பாக ஏற்கிறோம்.

ஆத்திகம் என்பது இயற்கைக்கு மேம்பட்ட சக்தி(கள்) பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நிகழ்வையும் கட்டுப்படுத்துவதாகவும்,அதனை சில குறிப்பிட்ட வகைகளில் பணிந்து வணங்கினால்,சில செயல்களை செய்யும் மனிதர்களுக்கு நல்ல வாழ்வு இம்மை+மறுமையில் கிட்டும் என பொதுவாக கூறலாம்,என்றாலும் நாத்திகம்,ஆத்திகம் இரண்டிலும் பல கிளைகள் உண்டு.இதில் நமது நாத்திகம் மேலே சொன்ன நிலைப்பாடு ஆகும்.

நாம் நாத்திகர் என்பது மட்டும் அல்லாமல் இயற்கையை பாழ்படுத்தாத எளிய வாழ்வு, அனைவருக்கும் குறைந்த பட்ச‌ வாழ்வாதாரம், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு. பொது சமூக சட்டம்,அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதர உத்திரவாதம் போன்ற நடைமுறைகளையும் வலியுறுத்துகிறோம்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் நாத்திகம் என்பது சர்வ ரோஹ நிவாரணி அல்ல. ஒருவர் நாத்திகர் ஆகி விட்டால் அவர் அக்மார்க் உத்தமர், எந்தப் பிரச்சினையையும் ஊதித் தள்ளி விடுவார் என்பது எல்லாம் பொய். ஒரு நாத்திகருக்கும்,பிறருக்கு உள்ள சமூக,சட்டம் சார்ந்த வாழ்வியல் சிக்கல்கள் இருந்தே தீரும்.

அரசியல் இயக்கம் சாராத நாத்திகருக்கு யாரையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமோ, அன்றே அவர் கூறினார்  போன்ற விடயங்களில் இருந்து விலகலாம் என்பதுதான் ஒரே இலாபம்.கோயிலில் காணிக்கை ,மதகுரு தொந்தரவு போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

நாத்திக அரசியல் சமூக இயக்கங்களில் கூட, அதன் தலைவர்களை யாரேனும் வசை பாடும் போது இழிவு செய்து விட்டார்கள் என கோபம் கொள்வார்கள்.

அது அவசியம் இல்லை என்பதே நம் கருத்து.

விமர்சித்தால் மறுப்பு,ஆக்க/ஆதார‌ பூர்வமாக கொடுங்கள்.கருத்தினை கருத்தால் எதிர் கொள்வதே சால சிறந்தது. தமிழகத்தை பொறுத்த வரை நாத்திகர் என்றால் திராவிட இயக்கத்தவர் என்று அனைவரும் எண்ணுவது புதிய நாத்திகர்களாக அறிவித்துக் கொள்ளும் நமக்கு வியப்பையே தருகிறது.

திராவிட இயக்கத்தை பொறுத்த வரை தந்தை பெரியாருக்கு பிறகு சரியான பாதையில் பரிணமிக்கவில்லை எனவே கூறுகிறோம். தந்தை பெரியார் அவர் கூட வாழ்ந்த காலத்தின் சமூக சிக்கல் சார்ந்து, அவர் அறிந்த வரை எடுத்த சில முடிவுகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதை நாம் ஏற்பது இல்லை.ஒரு வரலாற்று நிகழ்வு பார்ப்போம்.
தந்தை பெரியாருக்கும்,அண்ணல் அம்பேத்காருக்கும் திரு முகமது அலி ஜின்னா கொடுத்த அல்வாக் கதை பற்றி நாம் அறிவோம். அது இருவருக்குமே ஒரு வரலாற்று சறுக்கல்தான். அதன் பிறகு அண்ணல் முஸ்லீம் அரசியல் என்பது உலகளாவிய கிலாஃபா சார்ந்தது என்பதை உணர்ந்து ,காங்கிரஸ் +இந்துத்வ இயக்கங்களுடன் ஒரு தீர்வு நோக்கி பயணித்து ,இரட்டை வாக்குரிமை கோரிக்கை கைவிட்டு, அரசியல்,கல்வி, ,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பதில் மட்டுமே திருப்தி அடைந்தார். இதுதான் அப்போது சாத்தியமான ஒரே அமைதித் தீர்வு என்பதை அண்ணல் உணர்ந்ததால் மட்டுமே ஏற்றார்.திரு.ஜின்னா போல் நேரடி செயல் நாள் [Direct Action Day)என அழைப்பு விடுத்து பல்லாயிரக் கண்க்காரின் சமாதி மேல் நின்று நினைத்ததை சாதிக்கும் விருப்பம் அண்ணலிடம் இல்லை. நேரடி செயல் நாள் பற்றி இங்கே படியுங்கள்.

அம்பேத்கார் கண்ட தீர்வுகள் தலித் மக்களுக்கு  முழுமையாக பலன் அளிக்கவில்லை என்றாலும் தாழ்த்தப் பட்டவர்களின் நிலை கடந்த 50+ ஆண்டுகளில் முன்னேற்றப் பாதை நோக்கியே செல்கிறது. 
பெரியார் கூட அதில் பட்ட சூட்டில் கொஞ்சம் வெளிப்படையாக இஸ்லாமை ஆதரிக்கும் போக்கை கைவிட்டார். ஆனால் இதனை பெரியாரின் சீடர்களாக சொல்பவர்கள் மறந்து விட்டார்கள்.  
ஜின்னாவின் அல்வாக் கதை அறிய விரும்புபவர்கள் இங்கே படிக்கலாம்.

த‌ந்தை பெரியாரின் சில வரலாற்று சறுக்கல்களை விமர்சிக்கிறோம் என்பதற்காக அவரை முழுமையாக எதிர்க்கிறோம் என்பது அல்ல, அவரின் சாதி மறுப்பு,பெண் விடுதலை,இறை மறுப்பு போன்றவற்றை நிச்சயம் ஏற்கிறோம். அவற்றை இக்காலத்துக்கு ஏற்றபடி விளக்குவதையும் செய்கிறோம்.

எவரையும் அவரின் செயல்கள்(சான்றின் அடிப்படையில்) மட்டுமே விமர்சிக்கிறோம்,ஏற்கிறோம்,இக்கால சூழலுகு எவ்வள்வு பொருந்துமோ அதை மட்டுமே ஏற்கிறோம். யார் மீதும் அதீத பற்றோ,வெறுப்போ கொள்ள அவசியம் இல்லை என்பதே நாம் கூறுகிறோம்.

நாம் பார்ப்பனர் மட்டும் அல்ல ஆதிக்க சாதி, வஹாபி/கிறித்தவ  பிரச்சாரகர்களையும் அதே வீரியத்துடன் எதிர்க்கிறோம். பெரியார் காலத்தில் ஆதிக்க சாதியினரின் சாதிக் கட்சிகளின் எழுச்சி, உலகளாவிய கிலாஃபா அமைக்க போராடும்  கொள்கை பிரச்சாரம் இருந்தாலும் அது குறித்த பெரியாரின் கருத்துகளை அறிய முடியவில்லை..ஆங்கிலேயரிடம் ஆட்டோமான் அரசின் படுதோல்வியை எதிர்த்த கிலாஃபத் இயக்கம்  நடந்த போது(1921)  பெரியார் காங்கிரசில் இருக்கிறார். ஒருவேளை அப்போது நாத்திகராக  இருந்து இருந்தால் எதிர்ப்பு காட்டி இருப்பாரா என ஆருடம் சொல்ல நாம் விரும்புவது இல்லை.

யாரையும் எக்காலத்துகும் பொருந்தும் கருத்துகளை அன்றே கூறினார் என ஏற்பது இல்லை. ஒருவர் கூறியது இப்போதைய சான்றுகளின் படி சரி அல்லது தவறு என மட்டுமே முடிவெடுப்போம் எனவே கூறுகிறேன். சக(கோ) நாத்திகர் என்பதற்காகவும் எதையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அவசியம்  புதிய நாத்திகர்களுக்கு இல்லை.

புதிய நாத்திகம் என்றால் என்ன? 

New Atheism is the name given to the ideas promoted by a collection of modern atheist writers who have advocated the view that "religion should not simply be tolerated but should be countered, criticized, and exposed by rational argument wherever its influence arises."[1]

மதம் எங்கெல்லாம் மூக்கை நுழைக்கிறது அங்கெல்லாம் மதத்தை சகிப்பது அல்ல,அதனை மறுத்து ,விமர்சித்து,அதன் சான்றற்ற தன்மையை அறிவு சார்ந்து வெளிப்படுத்துவதே புதிய நாத்திகம்!!!.
கடவுள் இல்லை என் நிரூபிக்க முடியுமா என்றால் ,மத புத்த்கம் சொல்லும் குணங்கள் கொண்ட கடவுள் இருக்க முடியாது என ஆக்க பூர்வமாக எடுத்து உரைக்கும் புத்தகம் அவசியம் படியுங்கள்!!!


மத புத்கம் வந்த கதைகளுக்கோ, அவற்றில் சொன்ன நிகழ்வுகளுக்கோ மொழியியல்,அகழ்வாய்வு சான்றுகள் இல்லை என்றே சொல்கிறோம்

பிரஞ்சம் தோன்றியது 1370 கோடி ஆண்டு முன்பு,

பூமி தோன்றியது 500 கோடி ஆண்டுகள் முன்பு,[நன்றி மாப்ளே ஜெயதேவ் தாஸ்]

ஒரு செல் உயிரி தோன்றியது 350 கோடி ஆண்டு முன்பு,

ஆப்பிரிக்காவில் மனிதன்[ஹோமோ சேஃபியன்] தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகள் முன்,

அங்கிருந்து உலகம் முழுதும் பரவினான்,

விவசாயம் செய்து ஒரிடத்தில் வசித்தது 20,000 ஆண்டுகள் முன்,
நாகரிகம் உருவானது  10,000 ஆண்டுகள் முன்,

மதங்கள் தோன்றியது இதன் பின்னர் மட்டுமே,

மதபுத்தகம் அனைத்துமே  உருவானது   கடந்த 7000 வருடம்,

உலகின் பழமையான எழுத்துமுறை சுமேரியன் க்யூனிஃபார்ம் பொ.ஆ.மு 3200.
இந்தியாவின் எழுத்தில் பழமையானது பிராமி எழுத்து முறை.மொழி ரீதியாக முதல் எழுத்து சான்றுகளை இந்த விக்கிபிடியாவில் பாருங்கள்.

இந்த சான்றுகளின் அடிப்படை வரலாற்றில் அனைத்து மத ,இன,மொழிப் பெருமைகள் காணாமல் போகிறது என்பதை வலியுறுத்துகிறோம்.

பரிணாமத்தை மறுக்கும் மத வியாதிகள் பரிணாமம் பொய் என மத புத்தகம் சொல்கிறது எனக் கூட உறுதியாக சொல்ல தயங்குவதை பல விவாதங்களில் நிரூபித்து இருக்கிறோம். இது மதவாதிகள் எப்பாடுபட்டாவது,எதை செய்தாவது தங்களுக்கு அடையாளமாக விளங்கும் மதத்தை காப்பாற்ற முயல்வது நன்கு புரியும்.
**
இபோது எதார்த்த நடைமுறை வாழ்வு பற்றி யோசிப்போம்.

நாத்திகர் மட்டும் அல்ல,அனைவருக்கும் பாரபட்சம் அற்ற மனித உரிமை மீதான பொது சமூக,குற்றவியல் சட்டம் உலக முழுதும் வேண்டும் என்கிறோம். மதம்,இனம் சார் கொள்கைகள் அரசினால் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறோம். 

பழைய  பஞ்சாங்க நாத்திகர்கள் இந்து மதத்தை மட்டும் விமர்சித்து , பிற மதங்களுக்கு ஜால்ரா போடுவதை நாத்திகம் என சொல்வது நகைப்புக்கு உரியது!!!

உண்மையை சொன்னால் இந்து மதம் என்பது பல மதங்களின் சங்கமம், ஒருவர் சட்டவிரோதம் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் வழிபட இந்து மதம் உரிமை அளிக்கிறது. உபநிஷத்துகளின் தத்துவரீதியான வாதங்கள் சான்றில்லாதவை என்றால் கூட அவற்றின் பொதிந்து இருக்கும் அறிவார்ந்த சிந்த்னை என்னை மலைக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் பல(30) உபநிஷத்துகளின் மொழிபெயர்ப்பு தருகிறேன். அவசியம் அனைவரும் படித்து அலச வேண்டுகிறேன்.


இந்த உபநிஷத்துகள் 1914ஆம் வருட மொழி பெயர்ப்பு.சில மத புத்தகங்களின் இதே சம‌கால மொழிபெயர்ப்புகளை தவறு என ஒதுக்கிறார்,கருத்தினை திருத்தி மீள் மொழியாக்கம் செய்யும் ஏமாற்று வேலைகளையும் சிந்தியுங்கள்!!!.

உபநிஷத்து படியுங்கள் என்பதால் உடனே சில பட்டம் கிடைக்கும் என்பதை அறிவேன்.

நம்மைப் பொறுத்த‌வரை உபநிஷதுகளோ,இதர மத புத்தக்ங்களோ சொல்லும் கருத்திற்கு,நிகழ்விற்கு  சான்று இருக்கிறதா,அறிவார்ந்த வாதம் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கிறோம்.

மதம் விமர்சிக்க ,முதலில் மத புத்தகம் வித்தியாசமான மொழி பெயர்ப்புகள் சார்ந்து படித்தால் மட்டுமே,மதம் என்பது அரசியல் ஆதிக்கம் பெற உருவாக்கப்பட்ட கட்டுக் கதைகள் எனப் புரியும். 

இதில் திரு சேசாசலம் என்னும் பெரியார்தாசன் என்னும் சித்தார்த்தர் என்னும் அப்துல்லாஹ் இந்துமத விமர்சனம் செய்த அள்வுக்கு வேறு மதங்களை விமர்சிக்கவில்லை.

அவர் எழுதிய  இந்திய மரபும் பார்ப்பன திரிபும்  என்னும் நூலில் இருந்து சில வரிகள் தருகிறேன்.

""ஆரண்யகங்கள் என்ன சொல்கிறது என்றால், இந்தப் பிரபஞ்சம் எதிலேயிருந்து வந்தது? ஒருத்தன் சொன்னான் பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. நல்லா கவனிச்சீங்கன்னா புரியும். கொஞ்சம் கடினமான செய்திதான் இது. பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. பக்கத்துல ஒருத்தன் நின்னான். இவன் சொக்காய புடிச்சு, கோமணத்த புடிச்சு இழுத்து, நீரு எதுல இருந்து வந்தது; அப்புறம் பிரபஞ்சம், நீரில இருந்து வந்ததுன்னா, நீரு எதுல இருந்து வந்தது. பக்கத்துல இருந்தவன் ஏதாவது ஒண்ணு சொல்லிட்டு போவனுமில்ல, நீர் நெருப்பிலே இருந்து வந்ததுன்னு அவன் போயிட்டான்.

இவரு ஒரு ஆரண்யக தத்துவ ஞானி. முதல் ஞானி பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது என்றார். பக்கத்துல இருந்தவர் கேட்டார் நீர் எதுல இருந்து வந்ததுன்னு? நீர் நெருப்புல இருந்து வந்ததுன்னார். நெருப்பு எதுல இருந்து வந்ததுன்னு, பக்கத்துல இருந்தவன் சொக்காய புடிச்சு இழுத்தான். அவன் சொன்னான் கருமுட்டையிலேயிருந்து வந்ததுன்னு. இவங்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பறதா, இல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரியை இங்கேயே கொண்டு வந்து இவங்களை அமுக்கிறதா? இதெல்லாம் ஒரு தத்துவமாம். இது என்னா மசுருக்கு உதவும்.""

இதே கருத்தை திரு அப்துல்லாவின் இப்போதைய மதத்திலும்,பிற மதங்களிலும் காட்ட முடியும். [ஹி ஹி சகோக்கள் வந்தால் வித்தை காட்டுவோம்]

இதில் சேஷாசல,பெரியார் தாச,சித்தார்த்த அப்துல்லா பிரச்சினையில் , திராவிட பஞ்சாங்க நாத்திகர்களும், வஹாபிகளும் ஒருவருக்கொருவர் கை துக்கி விட்டு என் மீசையில் மண் ஒட்ட்டவில்லை என்பது நல்ல நகைச்சுவை.

ஒருவர் முஸ்லீம் ஆகிவிட்டால் ,அவரின் வாழ்வு ஷரியாவின் படியே நிர்ணயிக்கப்படும் என்றாலும், சிறுபான்மை என்பதால் வஹாபிகள் ஷரியாவுக்கு விரோதமான  அவரின் உடல் தானத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட, திராவிட  நாத்திகம் ,மதம் மாறினாலும் நாத்திகன் நாத்திகன் தான் என்பது ம்ம்ம்ம்ம்ம்ம் மனோகரா படத்தில் "சந்தேக மில்லை" பாடலில் வரியான " வரும் குலத்தில் பிறந்தவள் குடி கெட்டாலும் குணம் போகாதே மணம் போகாதே " என்பதை ஞாபகப் படுத்துகிறது பாடலைக் கண்டு களியுங்கள்.

(போலி நாத்திகர் +மத வியாதி) இருவரும் பாடுகிறார்!!!!!!!!!!!
உண்மையான‌ நாத்திகத்தை யாரும் இழிவு படுத்த முடியாது.அதனை விமர்சனம் என்றே ஏற்கிறோம்.திராவிட பஞ்சாங்க நாத்திகர்கள் தங்களின் நிலைப்பாட்டினால் தேவையற்ற விமர்சனத்திற்கு ஆளகிறார்கள்.

புதிய நாத்திகர்களை விமர்சிக்கிறீர்களா ,மிக்க நன்றி!!.

சான்றுகள் அடிப்படையில்  வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதில் அளிக்கிறோம்.

நன்றி!!!


47 comments:

 1. இறைமறுப்பு என்பதை எப்போதும் போல அக்குவேறு ஆணிவேறாக உங்கள் பாணியில் விவரித்து இருக்குறீங்க.

  ஒரு தளத்திற்கு இணைப்பு கொடுக்கும் போது அது தனியாக திறக்கும்படி உருவாக்கவும். தொடர்ச்சியாக படிக்க ஒப்பிட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.

  என் அனுபவத்திலிருந்து நான் புரிந்து கொண்டது.

  இறைவழிபாடு, சாதி சார்ந்த கொள்கைகள், மதம் சார்ந்த கொள்கைகள் அனைத்தும் தனி மனித விருப்பங்கள் என்பதை விட இது சமூகத்தோடு ஒன்று சேர்க்கவும், சேராத போது அந்த சமூகமே ஒதுக்கி வைத்து பேசவும் உதவுகின்றது என்பது தான் உண்மை.

  நீ சாமி கும்மிட மாட்டீயா? நல்ல புத்தி சீக்கிரம் கிடைக்கட்டும்.

  என்ன சாதி விட்டு கல்யாணம் பண்ண யோசிக்கீறீயா? அப்ப நாங்க எல்லாம் உனக்கு வேண்டாமா?

  என்ன மதம் வேண்டாமா? கண்ட புத்தகங்களை படிக்காதே என்று சொன்னால் கேட்டால் தானே?

  இது சுழல் போல. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதற்குள் உழன்று கொண்டு இருப்பதற்குக் காரணம் சுற்றுப்புறம் என்பதை ஒரு சாக்கு போல வைத்துக் கொண்டு தன்னிடம் இல்லாத வலிமையான எண்ணங்களுக்கு புத்துயிர் ஊட்ட முடியாதவர்களும், சுய சிந்தனை மழுங்கிப் போனவர்களும்.

  மனைவி ஒத்துழைப்போடு இருந்தால் இங்கே முக்கால்வாசி விசயங்கள் முதல் கட்ட ஏற்பாட்டில் ஜெயித்து வந்து விடலாம். குழந்தைகளின் தொடக்க வாழ்க்கையில் ஓரளவுக்கு புரிய வைத்து விட்டால் நிச்சயம் நல்ல மாறுதல்கள் உருவாகும்.

  அறிந்த செயல்படுத்தி ஜெயித்து உண்மை.

  ஓரங்கட்டுகின்றார்கள் என்பதற்காக ஒளிந்து கொண்டே வாழ முடியுமா? பல சமயம் தந்தை பெரியாரை ஆச்சரியமாக நினைத்துக் கொள்வதுண்டு.

  எப்போதும் போல என்னளவில் அனுபவ பார்வையாக என் கருத்தை எழுதியுள்ளேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஜோதிஜி,
   வணக்கம்
   1./ஒரு தளத்திற்கு இணைப்பு கொடுக்கும் போது அது தனியாக திறக்கும்படி உருவாக்கவும். தொடர்ச்சியாக படிக்க ஒப்பிட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்./
   அறிவுறுத்தலுக்கு நன்றி.செய்தாயிற்று
   *
   2./இது சுழல் போல. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதற்குள் உழன்று கொண்டு இருப்பதற்குக் காரணம் சுற்றுப்புறம் என்பதை ஒரு சாக்கு போல வைத்துக் கொண்டு தன்னிடம் இல்லாத வலிமையான எண்ணங்களுக்கு புத்துயிர் ஊட்ட முடியாதவர்களும், சுய சிந்தனை மழுங்கிப் போனவர்களும்.

   மனைவி ஒத்துழைப்போடு இருந்தால் இங்கே முக்கால்வாசி விசயங்கள் முதல் கட்ட ஏற்பாட்டில் ஜெயித்து வந்து விடலாம். குழந்தைகளின் தொடக்க வாழ்க்கையில் ஓரளவுக்கு புரிய வைத்து விட்டால் நிச்சயம் நல்ல மாறுதல்கள் உருவாகும்./
   மிகச்சரி. மதம் என்பது நமது அடையாளம் என்றாகி விட்டமையால். அது சான்றுகள் அற்றது என்பது தேவையற்ற விவாதப் பொருள் ஆகி விடுகிறது.

   மதம் நீடிப்பதன் காரணம் இது மட்டுமே. இதன் மீது எழுப்பப் பட்ட அரசியல்,பொருளாதார கட்ட்மைப்புகள் மதம் நீடிப்பதை விரும்புகின்றன.

   தனிப்பட்ட குடும்பத்தினர் ஒத்துழைப்பு இருப்பின் குறைந்த பட்சம் மதம் சார் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

   அ)செய்வினை வைத்து விட்டார்கள் என பிரச்சினை வந்து பிரிந்த குடும்பங்கள் பலப்பல.

   ஆ)குடுமபங்களை சீரழித்த ஆன்மீக வேடதாரிகள் பலப்பல!!!

   3//ஓரங்கட்டுகின்றார்கள் என்பதற்காக ஒளிந்து கொண்டே வாழ முடியுமா? பல சமயம் தந்தை பெரியாரை ஆச்சரியமாக நினைத்துக் கொள்வதுண்டு./
   நாம் பெரியாரை அவர் காலத்து புரட்சியாளராக மதிக்கிறோம்.சமூக விடுதலையில், பல சாதனைகள் செய்தாலும் ஜின்னாவை ஆதரித்தது போன்ற சில வரலாற்றுத் தவறுகளும் செய்தார் என்பதையும் சான்றுகள் அடிப்படையில் கூறுகிறோம்.அவர் ஒரு தீர்க்க தரிசி அல்ல !!

   அவரின் மிகப் பெரிய சாத்னையாக நாம் சொல்வது இந்திய சுதந்திரத்தில் போது வட இந்தியாவில் இரத்த ஆறு ஓடினாலும்,தமிழகம் அமைதியாக இருந்தமைக்கு பெரியார்தான் காரணம்.

   மனித உயிர் மதத்தை விட உயர்ந்தது!!!

   உங்கள் கருத்துகளுக்கு நன்றி!!!

   Delete
 2. சகோ சார்வாகன்,
  அருமையான பதிவு. நாத்திகம் பற்றி இப்போதும் எழுதிகொண்டிருக்கும் பதிவு பற்றி உங்க பதிவும் ஜோதிஜியின் கமெண்டும் ஓத்திருக்கின்றன, அதை பதிவாக வரும்.
  ஜின்னா கொடுத்த அல்வாவை படித்தவுடன் முதலில் சிரிப்புதான் வந்தது, அதன்பிறகு யோசிக்க வைத்தது.
  இஸ்லாமின் கொள்கை எந்த கொள்கையுடன் ஒத்து போகாது, சேர்ந்தும் வாழாது, என்பது நிதர்சனம். அதை அம்பேதகார் புரிந்து கொண்டார்.
  காந்தியின் மீதிருந்த வெறுப்பின் வெளிப்பாடே, அவர்களின் கொள்கையை காந்தியின் செயல்களை பொருத்தி எதிரியாக்கி day of deliverance ல் பங்கேற்றனர். அப்போதே நன்றாக அரசியலும் செய்துள்ளனர், அதில் காந்திதான் பாப்புலராகிவிட்டார். அம்பேத்கரின் நிலைப்பாட்டில் தவறு ஒன்றுமில்லை, அன்றைய இன்றைய சமூகச் சூழல் அந்த நிலைப்பாட்டை சரி எனக்காட்டுகிறது. ஒரு வேளை திராவிடஸ்தான் வந்திருந்தால், தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை என்னவாகிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
  காந்தி அம்பேத்கர் பற்றி பேசினால் ஒருவரை ஒருவர் எதிரியாகத்தான் பேச வேண்டிய சூழ்நிலை தற்போதுள்ளது. அவர்களை, ஒரு கொள்கையுடன் வாழ்ந்த தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் கொள்கைகளை காலத்திற்கு ஏற்ப முன்னேடுக்க வேண்டும், கொள்கைகளிள் அவர்களுக்குள் முரண்கள் இல்லை. குறிப்பிட்ட சாதியின் தலைவர்களாக ஆக்குவது மிகவும் தவறு. அம்பேத்கர் எல்லா சாதிகளுக்கும் உரியவர். காமராஜரையே ஒரு சாதியின் தலைவராக, ஏன் வணிகர் சங்கம் தலைவராக ஆக்கிய காலகட்டத்தில் வாழ்கிறோம்.
  ஜின்னாவிற்கு அவர் சார்ந்த ஷியா முஸ்லிம்கள் மீது ஏன் இந்த வன்மம் என்று தெரியவில்லை, ஒரு பாகிஸ்தானை உருவாக்கி, அதில் ஷியா முஸ்லிம்களை தினம் தினம் நரக வேதனை அனுபவிக்குமாறு வைத்திருகிறார்.

  ReplyDelete
  Replies
  1. சகோ நரேன்,
   1./ஜின்னா கொடுத்த அல்வாவை படித்தவுடன் முதலில் சிரிப்புதான் வந்தது, அதன்பிறகு யோசிக்க வைத்தது./
   ஜின்னா ஷியா முஸ்லீம் மட்டும் அல்ல. இஸ்லாமை பின்பற்றாதவர். அவர் மனைவி பார்சீ(ஜொராஸ்ட்ர மதம்). மது அருந்துவார்,பன்றிக் கரி சாப்பிடுவார்.

   ஆனாலும் அறிவில் சிற‌ந்த வக்கீல்,ஆங்கிலேயரையும் அசர வைக்கும் வகையில் வாதிடுவார் என்பதால் அக்கால மூமின்கள் ஜின்னாவை த்லைவராக ஏற்றுக் கொண்டார்கள்.
   http://www.historytoday.com/ian-talbot/jinnah-and-making-pakistan
   Although he was not a devout Muslim (he drank alcohol and ate pork), he demanded in the name of Islam the creation of Pakistan. Although he could not speak most of the main Indian Muslim languages, he captivated audiences of millions during the campaign for Pakistan.
   இப்போது எப்படி பெரியார்தாசன் புகழ் பெற்ரவர் என்றது உடல்தானம் என்பதை கண்டுகொள்லாமல் தொழுகை நடதுகிறார்கள் அது போல் ஹி ஹி
   *
   2./ /ஒரு வேளை திராவிடஸ்தான் வந்திருந்தால், தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை என்னவாகிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.//

   தனிநாடு வேண்டாம் இந்த தமிழ் தேசியம் என்னும் தமிழ் ஆதிக்க சாதீய கட்சிகளின் பிடியில் ஆட்சி சிக்கினாலே நிலை மோசம் ஆகிவிடும்.

   பெரியார் காலத்தில் ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையினர் நிலையும் கல்வி,வேலைவாய்ப்பில் தாழ்த்தப்ப்ட்டோர் நிலை போலவே இருந்தது. பல சாதிகளுக்கு பேரே அப்போது வேறு. இப்போது புதிய பேரு, ஆண்ட பரம்பரைனு பீற்றல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   எப்படி இருந்த நான் இப்பூடி என்லாம ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   பெரியாட் இத்னை சரியாக கணிக்கவில்லை.ஆனால் அண்ணல் மொழிவாரி மாகாணத்தைக் கூட எதிர்த்தார் என்பது பாரட்டுக்கு உரிய அற்புதமான விடயம்.


   மொழி மட்டுமோ,மதம்,இனம் மட்டுமோ அனைவரையும் இணைக்க முடியாது.

   அனைவருக்கும் சம உரிமை,வாழ்வாதாரம் நோகிய அரசியலே தேவை
   *
   3./அம்பேத்கர் எல்லா சாதிகளுக்கும் உரியவர். காமராஜரையே ஒரு சாதியின் தலைவராக, ஏன் வணிகர் சங்கம் தலைவராக ஆக்கிய காலகட்டத்தில் வாழ்கிறோம்./
   நம்மைப் பொறுத்தவரை அண்ணல்தான் இந்திய தேசத் தந்தை என அழைக்கப்பட வேண்டியவர்.
   அய்யா காமராசர்,அய்யா ஓமந்தூர் இராமசாமி, அறிஞர் அண்ணா போன்றோர் நாட்டின் ஈடு இணையற்ற ஆட்சியாளர்கள்,த்வப்புதல்வர்கள். அவரை சாதி,மதம் சார்ந்து பார்த்தல் தவறு
   3//ஜின்னாவிற்கு அவர் சார்ந்த ஷியா முஸ்லிம்கள் மீது ஏன் இந்த வன்மம் என்று தெரியவில்லை, ஒரு பாகிஸ்தானை உருவாக்கி, அதில் ஷியா முஸ்லிம்களை தினம் தினம் நரக வேதனை அனுபவிக்குமாறு வைத்திருகிறார்./

   இது ஜின்னாவின் தவறு அல்ல.

   அரபி ஏக இறைவனின் திட்டம்,அவனே அனைத்தும் அறிந்தவன்

   அரபி ஏக இறைவன் ,யூத மார்க்கம் 72 பிரிவுகள் ஆனது போல் இஸ்லாம் 73[ ஹி ஹி ஒன்னு கூட] பிரிவுகள் ஆகி ,அதில் ஒன்று மட்டுமே சரி(நம்ம அண்ண‌ன் பிரிவுதான் சரி ஹி ஹி)என்க் கூறியதால்.
   http://www.sunniforum.com/forum/showthread.php?3287-The-Hadith-about-73-sects
   My ummah will be divided into seventy three sects. All of them will be in the Fire except one?), [Saheeh Muslim, no.976]

   பிரிவினருக்கிடையே யார் சரி என அன்பு,அமைதி வழியில் முடிவு செய்வதை எப்படி குற்றம் காண முடியும்?

   நன்றி!!!

   Delete
 3. நல்ல பதிவு. நாத்திகனோ ஆத்திகனோ அடுத்தவர்க்கு தொந்தரவு இல்லாமல், சுய-அறிவுடன் சிந்தித்து பின்பற்றுவதோ சால சிறந்தது. நாத்திகமும் அடுத்தவர் சொல்லவதை அப்படியே பினபற்றினால் முட்டாளதனத்தில்தான் முடியும். நம்பிக்கை எப்படி இருப்பினும் மனிதனாக மனிதத்துடன் வாழ முயற்சி செய்தால்தான் வாழ்வு பொருள் கொண்டதாக இருக்கும்!

  //கருமுட்டையிலேயிருந்து வந்ததுன்னு. இவங்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பறதா,//

  அடடா Big-bang ங்கை பற்றி ஆரண்யகங்கள்யோ சொல்லிட்டாங்களா? (ஏதோ நம்மால முடிஞ்சது கொளுத்தி போடுவோம்!)


  //உபநிஷத்துகளின் தத்துவரீதியான வாதங்கள் சான்றில்லாதவை என்றால் கூட அவற்றின் பொதிந்து இருக்கும் அறிவார்ந்த சிந்த்னை என்னை மலைக்க வைக்கிறது.//

  அதே! இந்து மதமாக ஒருங்கினைந்தவையாக இப்போது. ஆனால் உபநிடதங்களில் பல்வேறு விதமான பிரிவு தத்துவங்களை காணமுடியும், நாத்திகம் உட்பட. அதே போலத்தான் பௌத்த தத்தவங்களும். இவை அனைத்து இந்தியர் தத்துவ இயலில் அடைந்திருந்த முதிர்ச்சினை காட்டுகின்றன். ஆனால் தொடர்ந்து வந்த அந்நிய படையெடுப்புகளால் இவை அனைத்தும் அழிந்து இறை வழிபாடும் சடங்குகளும் கொண்டதாக இந்திய மதங்கள் மாறிவிட்டது கேடுதான். இந்த தத்துவங்களை கவனிக்காமல் சதா புராணத்தில் உள்ள பாலியல் குப்பைகளை காட்டியும், இவை பார்ப்பான்களுக்கு சொந்தமானதாக சொல்லி நிராகரித்தால் அது முட்டாள்தனம். இவை அனைத்தும் நமது பாட்டன் முப்பாட்டான்களுக்கு சொந்தமானது, வால்மீகி என்ன பூணூல் போட்ட ஐயரா? இவற்றினை அனைவரும் அறியவேண்டும். இந்த விடயத்தில் ஜெயமோகன் இந்திய தத்துவ மரபு என்று இது குறித்து எழுதுவதை படிப்பதுண்டு. இதனை பலர் கிண்டலடித்தாலும் இவற்றை அனைவரும் அறிய ஜெயமோகன் வழிகாட்டுகிறார் எனவே கருதுகிறேன்.

  மேலும் இவ்வளவு சொறிவான தத்துவ இயலில் ஊறியவர்கள், அதுவும் உலகில் உள்ள எல்லா பொருட்களும்- உயிருள்ளது உயிரல்லாதது எல்லாம்கூட ஒன்றுதான் என கருதியவர்கள் பின்பு எவ்வாறு சாதியை உருவாக்கி மனிதருள் வெறுப்பினை விதைத்தார்கள் என்பதும் ஒரு ஆச்சர்யம்தான்!

  ஆனால் உபநிடங்கள் சொல்ல முயலுவதை நாத்திகரான வைரமுத்து தனது பாணியில் சொன்னது எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்,
  நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்,

  இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்,
  அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்,

  அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
  மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா,

  யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
  வாழ்வே தவம், அன்பே சிவம்

  அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்…

  http://www.youtube.com/watch?v=ZmTsTt7S0Wc

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ நந்தவனம்,
   நல்ல கருத்து.

   நாம் அப்புறம் பேசலாம்.

   நம்ம மாப்ளே மொக்கைச்சாமி தாசு வந்திருக்காக ,அவுகளைக் கவனித்து விட்டு அப்புறம் வருகிறேன்.

   நன்றி!!

   Delete
 4. தமிழ்நாடு போன்ற தமக்கென வரையறுக்கப்பட்ட எல்லைகளையுடைய மாநிலங்கள் அல்லது நாடுகளில் உள்ள தேசிய இனங்கள் நாத்திகம் பேசி தமது பாரம்பரிய மதங்களை எதிர்க்கலாம். விமர்சிக்கலாம், ஆனால் ஈழத்தமிழர்கள் போன்று, தமது சொந்த நாட்டிலேயே தமது இருப்பு கேள்விக்குறியாகும் நிலையில் உள்ள சிறுபான்மைத் தேசிய இனங்கள் நாத்திகம் பேச முடியாது.

  உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் நாத்திகம் பேசி தமது பாரம்பரிய ஆலயங்களை, வரலாற்றுச் சின்னங்களை ஒதுக்கினால், அதைத் தமதாக்கி, ஈழத் தமிழர்களை இலங்கைத் தீவில் எந்தவித வரலாற்று அடையாளமில்லாத வந்தேறிகளாக்க சிங்கள பெளத்தர்கள், இலங்கை அரசின் முழு ஆதரவுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் பாரம்பரிய சைவம் வரலாற்று ஆதரங்களையும், அடையாளத்தையும் கொடுக்கிறது. இலங்கை மண்ணில் தமக்குமுள்ள உரிமைகளை நிலைநாட்ட சைவமசமயம்(திருமாலியம் உட்பட) உதவுகிறது.

  எங்களின் முன்னோர்கள் கட்டிக்காத்த மதம், வெறும் பொய்யாக, மூடநம்பிக்கையாக , அல்லது முட்டாள் தனமாக இருந்தாலும் கூட அது எமது கலாச்சாரத்தில் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது. நாம் நாத்திகம் பேசி கோயில்களை, கல்வெட்டுக்களை எல்லாம் புறக்கணித்தால் இலங்கையில் எமது தாயக கோரிக்கைக்கு ஆதாரமாகக் காட்ட, அந்த மண்ணில் எமது முன்னோர்களின் வேர்களைக் காட்ட எம்மிடம் ஒன்றுமில்லாமல் போய்விடும். பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதது என்று நினைப்பதற்கும், கோயில்களை புதுப்பிப்பதிலும், கட்டுவதிலும் தமது பணத்தை செலவிடுவதற்குக் காரணம், கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல, எமது மண்ணின் எமக்குள்ள உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகவும் தான். அதனால் நாங்கள் ஈழத்தமிழர்கள், நாத்திகத்தையும் பெரியாரிசத்தையும் கடைப்பிடித்தால், இலங்கையில் எமது அடையாளத்தை இழந்து காணாமல் போய் விடுவோம்.

  அதனால் தான் நான் கூட நாத்திகம் பேசுவதில்லை, உதாரணமாக நான் நல்லூர் முருகன் கோயிலின் திருவிழா காணொளியை ஒவ்வொருநாளும் எனது வலைப்பதிவில் இணைப்பதைப் பார்த்த பலர், நான் ஒரு மதவாதி என்று நினைத்திருக்கலாம். நான் முருகபக்தியினால் அவற்றை இணைக்கிறேன் எனபதை விட நல்லூர் முருகன் கோயிலும், அதன் சடங்குகளும் , சம்பிரதாயமும் , ஈழத்தமிழர்களுக்கென தனி இராச்சியம் இலங்கையில் இருந்தது, அவர்கள் ஆண்ட பரம்பரை, தமக்கென பாரம்பரியமும், கலாச்சாரமும் இலங்கையில் கொண்டவர்கள் என்பதை, நல்லூர்க் கோயிலும், திருவிழாவும் உலகுக்கு அறிவிக்கிறது என்பது தான் உண்மையான காரணமாகும். :)

  ReplyDelete
 5. அதாவது நாத்திகம் பேசுவது கூட ஒருவகையான Luxury தான், எல்லா நாட்டில் உள்ளவர்களாலும் அவர்கள் விரும்பினாலும் நாத்திகம் பேச முடியாது என்பதை ஈழத்தமிழர்களின் நிலைமை தெளிவாகக் காட்டுகிறது. இலங்கையில் எந்தவொரு சிங்களவனும் நாத்திகம் பேசி, புத்தரை இழிவு படுத்தி, பெளத்த வரலாற்றுச் சினங்களை புறக்கணிக்க மாட்டான். அப்படியிருக்கும் போது ஈழத்தமிழர்கள் மட்டும் நாத்திகம் பேசி, ஏற்கனவே சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பால் அழிந்து கொண்டிருக்கும் கோயில்களை இழந்தால், நாங்கள் சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாகி, எங்களின் நிலை உள்ளதும் போச்சடா கொள்ளிக்கண்ணா என்றாகி விடும்.

  ReplyDelete
  Replies
  1. சகோ வியாசன்,
   நீங்கள் சொல்லும் எதார்த்த உண்மைகளை ஏற்கிறேன். மதம் என்பது ஒரு அடையாளம் என்பதும். நாம் மதத்தை துற்க்கும் போது அது பிற ஆக்கிரமிப்பு மதவாதிகளின் செயலுக்கு துணை ஆகிறது என்பது உண்மைதான்.

   ஐரோப்பாவில் கிறித்தவ மத ஈடுபாடு குறைந்ததால், வஹாபிகள் கடை திறந்து பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார். இதற்குத்தான் அனைத்து மதங்களையும் நாம் எதிர்க்கிறோம். நீங்கள் சொன்ன விடயம் மிகவும் ஆழமான விடயம். இது குறித்து தகவல் திரட்டி இன்னொரு பதிவிடுகிறேன்.
   நன்றி!!!

   Delete
 6. மிக நல்ல சுயப் புரிதல் ... உங்களோடு நானும் ‘கட்சி’ சேர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா, நம்மையும் அந்த கட்சியில் சேர்த்துக் கொள்ளவும்.

   நன்றி!!!

   Delete
 7. \\பிரபஞ்சம் தோன்றியது 1370 கோடி ஆண்டு முன்பு,

  பூமி தோன்றியது 5000 கோடி ஆண்டுகள் முன்பு,\\நீங்க கணக்குப் புலி மாமு!!

  ReplyDelete
  Replies
  1. நல்லது .நீங்களாவது சுட்டி காட்டினிர்களே .ஒரு கருத்தை உணர்வுபூர்வமாக எழுதும்போது இப்படி அபத்த பிழை ஏற்படுமா? எங்கேயோ சுட்டு மொழிமாற்றம் செய்து பதிவிடுவது போல் இருக்கே! இது என் ஐயம் .நிலைப்பாடு இல்லே .நந்தவனத்தான் மனித நேய புரிதலோடு இருக்கிறார்.இப்படி எல்லோரும் யோசித்தால் ஒருவேளை மனிதன் தான் வாழ்நாளில் கொஞ்சம் அன்பையும் நிம்மதியையும் காணலாம்

   Delete
  2. வணக்கம் மாப்ளே தாசு 500 கோடி ஆண்டுகள் என மாற்றி விட்டேன். மிக்க நன்றி.

   Delete
  3. சகோ சேகர், வணக்கம்
   / எங்கேயோ சுட்டு மொழிமாற்றம் செய்து பதிவிடுவது போல் இருக்கே! இது என் ஐயம்/
   ஆமாம்.மிகவும் சரியான கணிப்பு. பல புத்தகங்களில்,செய்திகளில் படித்த்வைகளை தொகுத்து அளிக்கிறோம்.

   இதே கருத்தினை பல பதிவுகளில் சொல்லி இருக்கிறோம்.

   அடிக்கடி வாருங்கள்.

   நன்றி!!!

   Delete
 8. \\ஒரு நாத்திகருக்கும்,பிறருக்கு உள்ள சமூக,சட்டம் சார்ந்த வாழ்வியல் சிக்கல்கள் இருந்தே தீரும்.\\ மாமு ஏன் உங்களுக்கு இன்னமும் நோபல் பரிசு தரலைன்னு தான் புரியல.........

  ReplyDelete
  Replies
  1. மாப்ளே நோபல் பரிசு எதுக்கு தருவாக??!!!

   Delete
 9. கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். என்ற முறையில், எதை வைத்து கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தீர்கள் என்பதை இங்கே சொல்ல கடமைப் பட்டிருக்கிறீர்கள். அதை இந்த பதிவில் நீங்கள் செய்யவில்லை. கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ரீதியாக யாரும் நிரூபிக்க வில்லை என வைத்துக் கொண்டாலும், இல்லை என்றும் யாரும் நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள் என்றால், குறி சொல்லும் சாமியார் பேச்சைக் கேட்டவருக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. அடிப்படை ஆதாரமே இல்லாமல் உங்கள் புத்திக்கு என்ன தோன்றியதோ அந்த நிலைப்பாட்டை எடுத்துவிட்டு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு பீலா விடக் கூடாது......... அடக்கி வாசிங்க.

  ReplyDelete
  Replies
  1. மாப்ளே தாசு,
   1. உலகில் விடை தெரியா புதிர்க் கேள்விகள் உண்டு. விடைகளை தேடுவது தொடர் பயணம் கடந்த சில ஆயிரம் வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.

   2. நாங்கள் சான்றுகளின் மூலம் அறிந்த விடயம் பற்றி மட்டுமே கருத்து இடுகிறோம். ஆனால் நீங்கள் அறியா வியங்களை ,மனிதர்களால் அரசியல் பொருளாதார ஆதயங்களுக்காக எழுதப் பட்ட மத(ட) புத்த்கங்களுக்கும் ஏன் தொடர்பு படுத்த வேண்டும்?

   3. கடவுள் என்பது இயற்கைக்கு மேம்பட்ட சக்தி,பரிசோதிக்க முடியாதது என்வும் சொல்வீர்கள்,அப்புறம் அது இல்லை என்வும் நிரூபி என்றால் எப்பூடி மாப்ளே!!

   4. பாரும் இந்தியாவில் முதல் நாகரிகம் சிந்து சமவெளிதான் [பொ.ஆ.மு 3000 ‍‍_1300].அதன் மொழி சமஸ்கிருதம் அல்ல. உலகின் முதல் மொழியும் சம்ஸ்கிருதம் அல்ல என்பது உமது இஸ்கான் புருடாக்களை பொய்யாக்க போதுமானது.

   5. மதங்கள் சொல்லும் கடவுளை,மத புத்தக சான்றுகளின் படி இல்லை என அறிவியல் நிரூபிக்கும் என்பது தேவையான, மற்றும் போதுமான நிரூபணம் ஆகும்.

   6. மதம் சாராக் கடவுளை மட்டுமே பின்பற்றுகிறோம்,மத புத்தகங்கள் குப்பை என ஒத்துக் கொண்டால்,ஐன்ஸ்டினின் கடவுள் பற்றியும் விவாதிப்போம்.

   நன்றி!!!

   Delete
 10. பெரியார்: பொம்பளை கர்ப்பப் பையை அறுத்துப் போடு, குடும்ப வாழ்க்கையே தப்பு, சூரியனைக் கும்பிடு, சாமி சிலை கல்லு,ஏன் சிலைக்கு மாலையைப் போடு, இவர் பச்சை தமிழன், அவர் கலப்படத் தமிழன்........... அடேங்கப்பா அறிவுன்னா அறிவு பகுத்த அறிவு. உங்க அறிவுக்கு தோதான நபர் இவராத்தான் இருக்கும். புடிச்சி தொங்குங்க. ஐயோ...........ஐயோ............

  ReplyDelete
  Replies
  1. மாப்ளே தாசு,
   அந்த கருத்து நமக்கு உடன்பாடுதான். குடும்பக் கட்டுப்பாடு என்பதை அவசியத்தை உணர்ந்த நல்ல கணிப்பு.

   மக்க்ள் தொகையைக் குறைக்காமல் விட்டால் அடித்துக் கொண்டு சாவோம்.

   பூமாதேவி,கிஷ்னனின் மக்க்ள் தொகை அதிகரிப்பால் பாரம் தாங்கவில்லை என முறையிட , மகாபாரதப் போரில் பலரை இறக்க வைத்து மக்கள் தொகையை குறைப்பேன் என் சொல்லும் ப்ளே பாய் கிஷ்னனை தந்தை பெரியாரின் கருத்து மோசம் இல்லை.

   Read this

   http://www.slideshare.net/kameshaiyer/ecocritical-review-of-the-mahabharata-v2-kindle

   Thank you

   Delete

  2. மாப்ளே,
   பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதை விட அவரின் கருத்துகளைப் படியுங்கள் எனவே கூறுகிறோம்.


   http://www.periyar.org/html/dl_books.asp

   Delete
 11. \\நாம் நாத்திகர் என்பது மட்டும் அல்லாமல் இயற்கையை பாழ்படுத்தாத எளிய வாழ்வு, அனைவருக்கும் குறைந்த பட்ச‌ வாழ்வாதாரம், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு. பொது சமூக சட்டம்,அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதர உத்திரவாதம் போன்ற நடைமுறைகளையும் வலியுறுத்துகிறோம்.\\ இந்த கொள்கையை பின்பற்றும் ஒரே ஆசாமி நீங்களாத்தான் இருப்பீங்க. [உங்களையும் நேர்ல வந்து பார்த்தாத்தான் தெரியும்!!] நாத்தீகம்னா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு செம்பு தூக்குவது, எந்த அறிவியல் கண்டுபிடிப்பாவது இயற்கையைப் பாழபடுத்தாதுன்னு ஒன்னு இருக்கா. புறவென்ன இந்த டுபாக்கூர் வெத்துவேட்டு வாதம்?

  ReplyDelete
  Replies
  1. மாப்ளே எப்பூடி,

   அறிவியல் என்பது பரிசோதிக்கப் பட்ட சான்றுகளின் அதிகம் பொருந்தும் விள்க்கம்.

   நாத்திகம் என்பது சான்றுகள் அடிப்படையில் மட்டுமே உண்மையாக ஏற்றல்.
   ஆகவே இரண்டும் ஒன்றுதான்!!

   இயற்கை ஒரு நன்மை/தீமை அறியா அசுரன் என்பதால், அதன் இரகசியம் அறியும் அறிவியலும் அசுரனே.
   ஆகவே இயற்கையை பாழ்படுத்தாத அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்போம்.

   நன்றி!!

   Delete
 12. ஒரு பொருள் முன்னே இருக்கிறது , அது இருக்கிறது என்று அறிவியலும் சொல்வதை ஏற்கிறோம் . அது போல் எதோ ஒன்று இல்லை என்றால், அதற்கு ஏன் ஆதாரம் தேவை. இல்லாததை எப்படி நிரூபிப்பது? இருந்தால் யாராவது எந்த விதமாவது இருப்பதை மெய்பிக்கலாம்

  மேலும் கண் கூடாக பார்க்கிறோம் எங்கும் கடவுள் தத்துவம் எயித்து பிழைக்கவே உதவியுள்ளதை. யாரோ எந்த காலத்திலோ அவர்களுக்கு உள்ள அந்த அறிவின் படி எழுதியது இந்த காலத்திலும் எப்படி சரியாகும்.

  நம் நாட்டின் சோகமே வறுமையையும் , சாதி பிரிவினைகளையும் ஏற்று கொண்டு வாழும் மக்களாலே. என்று இவைகள் ஆண்டவனால் அல்ல , சுய நலம் கொண்டவர்களால் உண்டாக்கப்பட்டது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருமோ அன்று முதல் மக்கள் நலமாக வாழ முடியும்.

  இயற்கை பேரிடர்கள் மனிதர்களால் மட்டுமே என்பது சரியல்ல. உலகம் தானாகவே பல ஆண்டுகளாக மாறியே வந்துள்ளது முக்கியமாக நில நடுக்கம் போன்றவை . அறிவியலால் தீமையை விட நன்மைகள் அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. சகோ எஸ்.எஸ்.கே,
   முதலில் சிவன் இமயமலைமேல் இருக்கிறார் என்றார்கள்.அவர் தலையில் இருந்து கங்கை வருகிறது.ம்ம்ம்ம்ம்ம்ம்.

   விஷ்னு [பிரப‌ஞ்ச] பாற்கடலில் துயில் கொள்கிறார்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   அப்புறம் சாட்டிலைட் போட்டு இல்லை என்றது ,அவர் பிரப்ஞ்சத்துக்கு அப்பலிக்கா என்பார்கள். ஹி ஹி இதெல்லாம் ஆன்மீகத்தில் சகஜம்தானே.

   மத புத்தக சான்றுகள் உள்ள‌து என் விவாதிக்கும் ஒரு ஆன்மீகவாதியையும் இப்போது கண்டது இல்லை.
   அறிவியலின் இபோதைய விடை தெரியா கேள்விகளுக்கு விடை கடவுளாம் ஹி ஹி!!!

   நாம் இயற்கையின் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழக்கப் படும்போது,கடவுள் அப்பாலிக்கா போய்ய்கினே கீறார். கடவுள் ஓடும் வரை ஓடட்டும்,ஒளியட்டும் விரட்டுவோம் ஹா ஹா ஹா


   நன்றி!!!

   Delete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. இதை தனியாக பதிவு எழுதும் அளவுக்கு நிறைய அனுபவங்கள் இருந்தாலும் நந்தவனம் சொன்ன கருத்து (உங்க மூலம் அப்பப்ப தகவல்களை கூகுள் ப்ளஸ் ல் உங்கள் சார்பாக போட்டுக்கிட்டுஇருக்கேன்) மிக மிக அற்புதமான நான் தற்போது கடைபிடித்துக் கொண்டு வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டு வருகின்றேன்.

  ஒரு விசயம் மட்டும் புரியவில்லை.

  கடவுளையும் விஞ்ஞானத்தை பேசுபொருளாக வைத்துக் கொள்கின்றார்கள். ஆனால் தன் அளவில் என்ன மாற்றங்கள் உருவாகின்றது? என்ன உணர்ந்தோம்? எது தேவை? எது தேவையில்லை? ஆத்திகம் நாத்திகம் என்ற இரு விசயத்திற்கு இடையே உள்ள இடைவெளி என்பது ஒன்று உண்டு என்பதை எவரும் யோசிப்பதே இல்லை.

  ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தைமடம்.

  தொடர....................

  ReplyDelete
 15. சார்ஸ்,

  …இங்க யாரும் முழுமையான மதவாதிகள் இருப்பதில்லை. சந்தர்ப்பவாதிகள் தான் அதிகம். அவர்களுக்கு ஒத்துப்போகும் சடங்குகளையும் சம்பிரதாயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள்.

  ReplyDelete
 16. //ஐரோப்பாவில் கிறித்தவ மத ஈடுபாடு குறைந்ததால், வஹாபிகள் கடை திறந்து பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார்.//
  சகோ, மேற்குலக நாடுகளின் கிறித்தவ மத ஈடுபாடு குறைந்ததால் இல்ல,மேற்குலக நாடுகளின் அளவற்ற சுதந்திர உரிமைகளை சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியாத இஸ்லாமிய மத நாடுகளை சேர்ந்தவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.இதனால் இஸ்லாமிய மத அடக்கு முறைகளில் இருந்து தப்பி ஆரோக்கியமான வாழ்கை வாழும் நல்ல இஸ்லாமியர்களும் பாதிக்கபடுறாங்க.மேற்குலக நாடுகளின் அளவற்ற சுதந்திரங்களை துஷ்பிரயோகம் செய்வதை புலிகள் போன்ற வன்முறை அமைப்புக்களும் செய்தன. பின்பு அந்த நாட்டு அரசுகளாளால் ஒடுக்கபட்டன.
  மத ஈடுபாடு நிறைந்த பாகிஸ்தான்,இந்தியா,அப்கானிஸ்தான்,பங்களாதேஷ் என்று மத நம்பிக்கை நிறைந்த நாடுகளில் மக்கள் எல்லாம் இஸ்லாமிய மதவாதிகளால் என்ன பாடுபடுறாங்க என்று அறிந்தது தானே.
  ஐரோப்பா மக்கள் எல்லாம் கிறித்தவ மதத்தை துறந்து எங்க இஸ்லாமை தழுவுறாங்க உலகத்திலேயே இஸ்லாம் வேகமா பரவி வருகிறது என்பது இஸ்லாமிய மதவாதிகளால் ஆசிய ஏழை இஸ்லாமியரிடம் நடத்தபடும் பிரசாரம்.

  //நாம் மதத்தை துற்க்கும் போது அது பிற ஆக்கிரமிப்பு மதவாதிகளின் செயலுக்கு துணை ஆகிறது என்பது உண்மைதான்.//
  கொஞ்சம் குழப்பமா தெரியுது சகோ.
  பல மதங்களுக்கு முன்பு ஒரு மத பிரசாரகரை சந்திச்சோம்(அவர் பிடித்து கொண்டார்) அவர் சொன்னார் மனிதனானவன் ஏதாவது ஒரு மதத்திலே கண்டிப்பா இருக்கணும். அவனே நல்ல மனிதன் என்றார். இவர் ஏன் நல்ல மனிதன் ஒரு மதத்திலே கண்டிப்பா இருக்கணும் என்று சொன்னார் என்று ஆழமா சிந்திச்சா இந்து மதத்தில் இருப்பவன் தான் கிறிஸ்தவத்திற்கு மாறுகிறான். இஸ்லாமிய மதத்தில் இருப்பவன் தான் கிறிஸ்தவத்திற்கு மாறுவான். ஆனா மதங்களை கேள்விக்கு உட்படுத்துபவன் கிறிஸ்தவத்திற்கோ வேறு மதத்திற்கோ மாறுவதில்லை.
  (ஆனா தமிழகத்தில் மட்டும் பெரியார்தாசன் போன்ற விதிவிலக்குகல் உண்டு)


  ReplyDelete
 17. My comment on

  http://timeforsomelove.blogspot.com/2013/08/blog-post_8221.html
  மச்சான் வருண்,&சகோ சுவனப் பிரியன்,

  பாலியல் தொடர்பு விடயம் என்றால் 18+ போட வேண்டும் அவ்வளவுதான். ஒழுக்க சீலர்கள் ஒதுக்கி விடலாம். இதுக்கு மேல் இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை என்பதே நம் கருத்து!!!
  **
  சரி விவாதத்தை ஆரம்பித்து விட்டீர்கள்

  உங்களுக்கு ஒரு கேள்வி[தியரி).

  ஆபாசம் என்றால் என்ன? தெளிவாக ,சுருக்கமாக ஒரே வரியில் வரையறுக்கவும்.

  ***
  இப்ப பரிசோதனை(ப்ராக்டிகல்)
  இப்படிப்பட்ட ஆபாச வரையறுப்பில்,எனது பதிவுகள் பின்னூட்டங்கள் வரவே வராது என மச்சான் வருண் உறுதி அளிக்க முடியுமா?

  [குஞ்சு செத்த பய பதிவு என்பது ஆபாசமா இல்லையா ]
  **
  இப்படிப்பட்ட ஆபாச வரையறுப்பில்,, சகோ சு.பி,ன் எழுத்துகள்குரான்,ஹதீதுகள் வரவே வராது என சகோ சு.பி உறுதி அளிக்க முடியுமா?

  ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணை மண்க்கிறார்,ஆனால் இன்னும் உடல் உறவு கொள்ளவில்லை. அந்த மனைவிக்கு ஒரு மகளும் இருக்கிறார்]. இச்ச்சுழலில் நம்ம மூமின் சகோவுக்கு மனைவியின் மகள் மீது ஆசை வந்தால்,மனைவியை விவாகரத்து செய்து விட்டு அவளின் மகளை மணக்கலாம் என குரானில் அரபி ஏக இறைவன் கூறுகிறார்.
  4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; “”அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை””. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.

  இன்னும் இல்லை என்றால் தேடிப் பார்ப்ப்போம் ஹி ஹி!!!

  ***
  நன்றி!!


  ReplyDelete
  Replies
  1. 4.23 வசனத்தில் நீங்கள் கண்ட ஆபாசம் என்னவோ?

   Delete
  2. சகோ இப்பூ இந்த குரான் 4.23 உங்களுக்கு இது ஆபாசமாக தெரிந்தால் நீங்கள் மூமினே அல்ல!!!

   இருந்தாலும் காஃபிர்களுக்கு எ.கா வுடன் விளக்குகிறேன்.

   ஒரு மூமின் பெரியவர் ஒரு 35 வயது விதவைப் பெண்ணை மணக்கிறார். இன்னும் முதல் இரவு நடக்கவில்லை. அந்த வித்வைப் பெண்ணுக்கு, 16 வயதில் ஒரு பெண் முந்தைய கணவன் மூலம் உண்டு. திருமணம் முடிந்தவுடன்,அப்பெண்னைப் பார்த்த நம்ம மூமின் அடியாருக்கு அந்த இள்வயதுப் பெண் மீது ஆசை வந்து விட்டால், விதவைத் தாயை தலாக் செய்து விட்டு, மகளை மணம் முடிக்கலாம் என அரபி ஏக இறைவன் அழகாக கூறுகிறான்.[இது மண முடித்த விதவைப் பெண்ணுடன் உடல் உறவு கொள்ளாமல் இருந்தால் மட்டுமே செல்லும் ஹி ஹி]

   இத்னை குரானில் சொல்லி இருக்கிறார் என்றால்,இப்படி சிக்கல்கள் அதிகம் வந்து இருக்க வேண்டும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   இது காஃபிர்களுக்கு ஆபாசமா என்றே சிந்திக்க வேண்டுகிறேன்.

   நன்றி!!!


   Delete
 18. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=2kIuMEcY5B8

  நண்பா இது குறித்து ஒரு பதிவை உங்களுடன் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 19. ////அவற்றின் பொதிந்து இருக்கும் அறிவார்ந்த சிந்த்னை என்னை மலைக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் பல(30) உபநிஷத்துகளின் மொழிபெயர்ப்பு தருகிறேன். அவசியம் அனைவரும் படித்து அலச வேண்டுகிறேன்.////
  உங்களை மலைக்க வைத்த அறிவார்ந்த சிந்தனைகளால் சமுதாயத்தில் அதன் பிரதிபலிப்புகள என்னெவென்று சொல்லமுடியு மா?

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,

   ரூஹ் என்னும் குரானில் வரும் அரபி சொல்லுக்கு உயிர்,ஆத்மா என பொருள் கொள்ளப்படுகிறது. அக்கால யூதர்கள் திரு முகமதுவிடம் ரூஹை விளக்கும் என்றபோது,அவருக்கு தெரியாமல் முழிக்க,அரபி ஏக இறைவன் அல்லாஹ் ,ஜிப்ரீல் மூலம் அளித்த பதில் இதுதான்
   *
   17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
   *
   இதே கேள்வியை உபநிஷத்துகள் பல பரிமாணங்களில் அலசுகின்றன. குறைந்த பட்சம் அவற்றை த்வறு என நிரூபிக்க முடியாது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இப்படி எல்லாம் யோசித்து இருக்கிறார்களே என்னும் மலைப்புதான் இது.
   அஹம் ப்ரமாஸ்மி என்னும் நான் கடவுள் என்பதை விட சிறந்த நாத்திக தத்துவம் உண்டோ!!!!
   சில உபநிஷத்துகளை தமிழில் மொழி பெயர்ர்க்கும் ஆவல் உண்டு!!!

   நன்றி!!!

   Delete
 20. //கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ரீதியாக யாரும் நிரூபிக்க வில்லை என வைத்துக் கொண்டாலும், இல்லை என்றும் யாரும் நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள் என்றால், குறி சொல்லும் சாமியார் பேச்சைக் கேட்டவருக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.//

  தாஸ்,

  I strongly agree with ssk Sir.

  இல்லாத ஒன்றை எப்படி நிரூபிக்க முடியும்? இல்லாத ஒன்றை நிரூபிக்க தேவையில்லை. இருக்கு என்று சொல்லுகிறவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். உதாரணமாக நான் உங்கள் computer monitor முன் "nufyak" என்ற பொருள் இருக்கிறது என்கிறேன். ஆனால் என்னால் நிரூபிக்க முடியவில்லை. நீங்கள் nufyak இல்லை என்கிறீர்கள். இப்போது நீங்கள் இல்லையென்று நிருபியுங்கள் பார்ப்போம்???

  இதை நீங்கள் நிரூபித்தால் கடவுள் இல்லையென்று நாங்களும் நிரூபிக்க தயார்.

  ReplyDelete
 21. ஐரோப்பாவில் கிறித்தவ மத ஈடுபாடு குறைந்ததால், வஹாபிகள் கடை திறந்து பல சிக்கல்களை ஏற்படுத்துகிறார். இதற்குத்தான் அனைத்து மதங்களையும் நாம் எதிர்க்கிறோம். சார்வாகன்
  சகோ, மேற்குலக நாடுகளின் கிறித்தவ மத ஈடுபாடு குறைந்ததால் இல்ல,மேற்குலக நாடுகளின் அளவற்ற சுதந்திர உரிமைகளை சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியாத இஸ்லாமிய மத நாடுகளை சேர்ந்தவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். வேகநரி
  பொறாமையின் வெளிப்பாடுகள்

  ReplyDelete
 22. சார்வாகன் ,முஸ்லிம்களுக்கும் பெரியார்தாசனின் குடும்பத்திற்கும் பிரச்னை ஏற்பட்டு அதனால் நீதிமன்றம் வரை விஷயம் போகும். அதனால் பிரேதம் நாறும் .என்று எதிர்பார்த்த சார்வாகனுக்கு பெரும் ஏமாற்றம் .சில மாற்றங்கள் சிலருக்கு எமாற்றமாக் இருக்கும் .மேற்கத்திய நாடுகளில் உள்ள மதமாற்றம் உட்பட

  ReplyDelete
  Replies
  1. சகோ இப்பூ,
   திரு சேஷாசல,பெரியார்தாச,சித்தார்த்த அப்துல்லா, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட மாட்டார் என் கணித்தேன். அது நடந்து விட்டது.

   ஏதோ சில காரணங்களுக்காக மதம் மாறினாலும், இறுதி சடங்குகளை தவிர்க்கவே விரும்பி உடல்தானம் அளித்தார் எனவே சொல்லலாம்.

   இதை பெரிது படுத்தினால் சிறுபானமையாக உள்ள்மையாலும் மூமின்களின் எதிர்கால மத மாற்றும் செயல்கள் சிக்கல் ஆகும். ஆகவே அடக்கி வாசித்தார்.

   பெரியார்தாசனுக்கு உடல்தானம் விதி விலக்கு அளித்தவர்கள் ஷா பானு ஜீவனாம்ச வழக்கிலும் அளித்து இருந்தால், பாபர் மசூதி பிரச்சினையே வந்து இருக்காதே!!!
   http://en.wikipedia.org/wiki/Shah_Bano_case
   The Shah Bano case (1985 SCR (3) 844) was a controversial maintenance lawsuit in India, in which Shah Bano, a 62-year-old Muslim, daughter of a police constable[1] and mother of five from Indore, Madhya Pradesh, was divorced by her husband in 1978 but even after winning the case at the Supreme court of India was subsequently denied alimony because the Indian Parliament reversed the judgement under pressure of Islamic orthodoxy


   மத மாற்றம் என்பது சமூக,பொருளாதர காரணங்களுக்காக மட்டுமே நிகழும்.ஆய்வு செய்து மாறினார் என்றால் மோசடி மட்டுமே!!

   நன்றி!!!

   Delete
 23. அருமையான பதிவு சகோ. புதிய நாத்திகத்தில் நானும் ஒரு அங்கத்தினராக இணைந்து கொள்கிறேன். எந்த சிலையாக இருந்தாலும் மாலை அணிவிப்பதோ,புகைப்படங்களுக்கு கும்பிடுபோடுவதோ மூட நம்பிக்கையைச் சார்ந்ததே எனவே மூட நம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுப்போம் அதற்காக மராட்டியத்தில் ஏற்படும் சட்டம் இந்தியா முழுவதும் வர பாடுபடுவோம்...

  ReplyDelete
 24. நண்பர் வேகநரி..
  //ஐரோப்பா மக்கள் எல்லாம் கிறித்தவ மதத்தை துறந்து எங்க இஸ்லாமை தழுவுறாங்க உலகத்திலேயே இஸ்லாம் வேகமா பரவி வருகிறது என்பது இஸ்லாமிய மதவாதிகளால் ஆசிய ஏழை இஸ்லாமியரிடம் நடத்தபடும் பிரசாரம்.//

  நானும் கேள்விப் பட்டேன் கிருத்தவர்கள் இசுலாத்திற்கு மாறிவருகிறார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா..???அறிந்து கொள்ளத்தான்..

  ReplyDelete
  Replies
  1. நண்பர் இனியவன்,
   நீங்க இப்படியெல்லாம் ஆதாரம் கேட்டால் நான் என்ன செய்வது :)
   நீங்க பகுத்தறிவுவாதி அதனாலே சிந்திக்கிறிங்கஆதாரம் கேட்கிறிங்க. ம்.. கடவுள் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அந்த புத்தகத்திலே கிறித்தவங்க மட்டுமென்ன எல்லோருமே தங்க மதத்தை துறந்து இஸ்லாமை தழுவுவங்க என்று முன்னமே அடிச்சு சொல்லியிருக்கு. இதை விட என்ன உறுதியான ஆதாரம் வேண்டும்!

   Delete
  2. ஆப்ரிக்காவில் ஆண்டு தோறும் 6 மில்லியன் மக்கள் இஸ்லாமில் இருந்து கிறிஸ்தவத்துக்கு ஓடுகின்றார்கள்.
   இது இப்ராகிம்முக்கு தெரியாது போலும்

   Delete
  3. எதிகாலிஸ்ட்,
   அவங்க ஒரு fantasy உலகத்திலே வாழ ஏத்தி வைக்கபட்டுள்ளாங்க.அவர்களால் அங்கிருந்து எல்லாம் இஸ்லாமியர்கள் இஸ்லாமைவிட்டு கிறிஸ்தவத்துக்கு ஓடும் யதார்த்த காட்சிகளை பார்க்க முடியாது.

   Delete
 25. 50 ஆண்டுகள் முன்பே வேறு எந்த மதத்தைவிட மதச் சார்பின்மையும் நாத்திகமும் தான் கிறிஸ்துவ மத வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்ச் பல வகைகளில் எழுதியது. சூரியனை பூமி சுற்றுகிறது என்றவரை சிறையில் இட்ட சர்ச் இன்னும் நாத்திகத்தில் இருந்து தப்பவில்லை.
  தங்கள் பணி தொடரட்டும்.

  நம் கட்டுரைகள் இனி நண்பர் ஒருவர் மூலம் இங்கே, இத்தளத்தில் தொடர்ந்து வந்து விமர்சிக்கவும்


  http://chennaipluz.in/wp/tamilchristian/

  ReplyDelete
 26. இஸ்லாமிய பெண்கள் கலந்து கொள்ளும் அழகு ராணி போட்டி ஒன்று இஸ்லாமிய நாடான இந்தோநிஸ்யாவில் நடந்துள்ளது.
  http://www.bbc.co.uk/news/world-asia-24148779
  அழகு ராணி போட்டி நடத்த தமிழக இஸ்லாமில் அனுமதி உண்டா? இப்ராகிம் சயிக்மொஹமெட் என்ன சொல்கிறார்?

  ReplyDelete