வணக்கம் நண்பர்களே,
குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடி வரும் செப்டம்பர்
26ல் திருச்சியில்
பா.ஜ.க வின் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார். அவரை தமிழகத்தில் நுழைய
வேண்டாம் என பல இயக்கங்கள் போராட்டம் என முயற்சிகள் எடுக்க்கும்வேளையில் இந்த
எதிர்ப்பு சரியானதா ,எதிர்ப்பை எப்படி சரியாக முறையாக காட்டுவது என நம் சிந்தனைகளைப் பகிர்கிறோம்.[ஹா
ஒன்னு மறந்துட்டேன் சிந்திக்க மாட்டீர்களா அப்பாடா!!!]
திரு நரேந்திர மோடி நல்லவரா கெட்டவரா என்ற விவாதம் தேவையற்றது
என்பதை நாம் அறிவோம். ஏன் எனின் நல்லவன் ,கெட்டவன் என்பது ஒருவரின் சார்பியல் பார்வை சார்ந்தது.ஆகவே
ஒருவருக்கு நல்லவராக தெரிபவர் இன்னொருவருக்கு கெட்டவ்ராக தெரியலாம்.இதற்கு திரு மோடி
போன்ற மனிதன் மட்டும் அல்ல, பல கடவுள் அவதாரங்கள், கடவுளின் தூதர்கள்(என சொல்லப்படுபவர்கள்) கூட அடங்குவர்.ஒரு குறிப்பிட்ட சூழலில்
ஒருவரின் செயல் ,இன்னொரு கால கட்டத்தில் வேறுவிதமாக நோக்கப்படுவது இயல்பே!!!.
திரு நரேந்திர மோடியின் ஆதரவு குழுவினர் சொல்வது என்ன?
1. திரு மோடியின் ஆட்சியில் குஜராத் முன்னேறியது
போல் மொத்த இந்தியாவையும் முன்னேற்றும் வல்லமை
கொண்டவர்.
2. கங்கிரசுக்கு மாற்று பாஜக(மோடி) மட்டுமே
3. 2001ல் நடந்த கலவரம் பாஜகவிற்கு தொடர்பு
இல்லை. 2001க்கு பிறகு சிறுபான்மையினரும் மதிக்கும் வண்ணம் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
சரி
திரு நரேந்திர மோடியின் எதிர்க் குழுவினர் சொல்வது என்ன?
1.2001 குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கு
உண்டு.கலவ்ரத்தில் போது சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை
2. மோடி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை
மதத்தினர்,உயர்
சாதி அல்லாதோர் நலன் பாதிக்கப்படும்,இரண்டாம் த்ர குடிமக்களாக நடத்தப் படலாம்.
3. குஜராத் பிற மாநிலங்களை விட முன்னேறி உள்ளது என சொல்வது கட்டுக்
கதையே..
இதில் உண்மை எது,பொய் எது எதற்கு சான்று இருக்கிறது
என்பதையும் நாம் அலசப் போவது இல்லை.
ஏன் எனில் நாம் ஆதரவாளரோ அல்லது எதிர் குழுவினரோ இல்லை!!!!
தமிழகத்தில் மோடியின் திருச்சி வருகையை எதிர்ப்பவர்கள் யார்?
தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகளான அதிமுக,திமுக,காங்கிரஸ்,தேமதிக,பாமக் போன்றவை அமைதியாக இருக்கின்றன.
விடுதலைச் சிறுத்தைகள்,புதிய தமிழகம் கூட எதிர்ப்பது போல் தெரியவில்லை.மோடி வருகைக்கு நடுநிலை எடுப்பதின்
காரணம் தேர்தல் கூட்டணி அல்லது,மோடி அரசு அமைத்தால் ஆட்சியில் பங்கு போன்றவை காரணமாக இருக்கலாம்.
சரி வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் யார்?
II. (தேர்தலில் ப்ங்கேற்காத)திராவிட இயக்கங்கள்
III. முஸ்லீம் கட்சிகள்
I.இதில் இடது சாரிகளில் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள்,
மேலே சொன்ன நடுநிலைக்
கட்சிகளில் கூட்டணி வைத்து சில இடங்களை வென்று இருக்கின்றன.2001 ல் நடந்த பிரச்சினைக்கு இன்றும்
மோடியை குற்றம் சொல்வோர்(வலது, இடது பொது உடமைக் கட்சிகள்),பாஜகவுடன் கூட்டணி கண்ட இரு கழகங்களை
ஏன் அதற்காக விமர்சிப்பது இல்லை?.ஆகவே தேர்தலில் பங்கேற்கும் தமிழக இடதுகளின் எதிர்ப்பு ஒரு
மோசடி மட்டுமே!!!
தேர்தலில் பங்கேற்காத இடது சாரிக் குழுக்கள் தேர்தல் பாதை
திருடர் பாதை என்கிறார். அனைத்தும் மாற வேண்டும் என்கிறார்.
மாற்றம் என்பது இயல்பாக ,சிறிது சிறிதாக சூழல் சார்ந்து நிகழ
வேண்டும். அப்படி நிகந்தால் மட்டுமே நிலைக்கும்.
ஒருவேளை இவர்களின் கையில் ஆட்சி என்றால் மட்டும் நியாயமாக
நல்லாட்சி தருவார்கள் என எப்படி உறுதியாக நம்ப முடியும்?. அதுவும் ஜன்நாயகம் தேர்தல் இல்லாமல்
எப்படி இருக்க முடியும்?
ஜனநாயகத்தில் தேர்தல்தான் அரசியல்வாதிகளுக்கு ஒரு கடிவாளம்.
அய்யன் திருவள்ளுவர் கூறிவிட்டார்
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
கடந்த 50 வருடங்களில், பல ஒடுக்கப்பட்ட சாதியினரே ஆதிக்க
சாதியாக பரிணாம வளர்ச்சி பெற்றதை பார்க்கிறோம். ஏன் அன்று ஒடுக்கப்பட்டவன் இன்று ஒடுக்குபவன்
ஆகிறான்? ஏன்
ஒரு ஏழை பணக்கார முதலாளி ஆனாலும் அவனும் ,ப்ரம்பரை மேட்டுக் குடி ஆள் போலவே சிந்த்னை,வாழ்வுமுறை கொள்கிறான் என்பதை
அனைவரும் உணர முடியும்.
இந்த வகையில் இந்த தீவிர இடதுசாரியினர் மட்டும் எப்போதும் உத்தம புத்திரர்களாக இருப்பார்கள்
என்பதை நாம் நம்பத் தயாராக இல்லை.
முதலில் ஜனநாயகத்தில் வாசலாகிய தேர்தலை ஏற்றுக் கொண்டால்
மட்டுமே இவர்கள் குறித்து கொஞ்சம் யோசிக்கலாம்.அதுவரை நமது இளைய சமூகத்தை இவர்களின்
பிரச்சாரத்தில் இருந்து பாதுகாப்பது நல்லது.ஏன் எனில் இவை வன்முறை நோக்கி நகரும் அபாயம்
உள்ளவை.
இவர்களின் மோடி எதிப்பு அவர்களின் கொள்கைப் பிரச்சாரம்
மட்டுமே!!
ஒரு ஊராட்சி ஒன்றிய தலைவராகி கூட மக்கள் பணி செய முடியும்
என நிரூபித்து பிறகு புரட்சி செய்ய அன்போடு நமது காம்ரேடுகளை வேண்டுகிறோம்.
**
II.
பெரியாருக்கு பிறகு கொள்கையிலும், செயல்களிலில் சூம்பிப் போன
தேர்தலில் பங்கேற்காத திராவிட இயக்கங்கள் என்ன
செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.
இளைய த்லைமுறைக்கு இறைமறுப்பையோ, சுயமரியாதையையோ,பெண் விடுதலையையோ கற்றுக்
கொடுக்காமல் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே சிந்திப்பதால் எதார்த்தம்
புரிவது இல்லை.
இன்றைய பார்பனீயத்தில் பல ஆதிக்க சாதியினரும்,
அதீத மதப் பிரியர்களும்
அடக்கம் என்பதை உணர மறுப்பவர்கள்.
இவர்களின் மோடி எதிர்ப்பு இந்துத்வ அதாவது பிராமண எதிர்ப்பு
மட்டுமே.
அதாவது மோடி உயர்சாதியினரின் விசுவாசி ஆகவே எதிர்க்கிறோம்
என்பதுதான் இவர்களின் எதிர்ப்பு. நாளை ஒருவேளை
மோடி பிராமணரை எதிர்த்தால் சூத்திர மோடி வாழ்க என சொல்வார்கள் என உறுதியாக நம்பலாம்.
**
III
முஸ்லீம் கட்சிகள் சிறுபான்மையாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு,பெரும்பான்மை என்றால் ஒரு
நிலைப்பாடு என்பது 1400 வருடங்களாக,உலக முழுதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கோட்பாடு ஆகும்.
உலக முழுதும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் ஷரியா
மீதான ஆட்சி, உலகளாவிய இஸ்லாமிய பேரரசான கிலாஃபா அமைப்போம் என்னும் நோக்கில் பல லட்சிகள் செயல்
பட்டு வருகின்ற. பல் ஆயுதப் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இதில் மத்தியக் கிழக்கில் முதன்மை இடம் பெறும் கட்சி இஸ்லாமிய
சகோதரத்துவ கட்சி ஆகும்.ஜனநாயக ரீதியாக ஆட்சியைப் பிடித்து ,ஷரியா ஆட்சி கொண்டுவருவதே அதன் நோக்கம்
ஆகும்.
அந்த வகையில் பாஜக என்பதை இந்து சகோதரத்துவ கட்சி எனலாம்.இரண்டின்
நோக்கம் செயல்பாடுகள் ஒன்று என்றாலும் நமது சகோக்கள் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி சரி,ஆனால் பாஜக(இந்து சகோதரத்துவ
கட்சி) சரியல்ல என்பார்கள்.
நமது சகோக்களுக்கு மோடி முஸ்லீமாகவும், பாஜக இஸ்லாமியக் கட்சியாக் இல்லை என்பது மட்டும்தான்
வருத்தமே தவிர வேறொன்றும் இல்லை.
அப்படி மட்டும் இருந்தால் மோடி ஏன் அப்படி செய்தார் என
விளக்கம் அளித்து இணையத்தை கதி கலங்கை வைப்பார்கள் என்பது உறுதி!!!!
நாளையே மோடி ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு இந்தியாவில் ஷரியா
மீதான் இஸ்லாமிய ஆட்சியை அமைப்போம் என்றால்
மகிழ்ச்சி அடைவார்களா இல்லையா என்பதை நடுநிலை காஃபிர்கள் சிந்திக்க வேண்டும்.
ஆனால் தாடி வைத்து இருக்கும் திரு மோடி மூமின்கள் கொடுத்த குல்லாவை ஏற்க மறுத்ததால் மட்டுமே மூமின்கள் எதிர்க்கிறார்கள்.
முசாஃபர் நகரில் கூட கோத்ரா போல்தான் நடவடிக்கை சரியாக
இல்லை என்றாலும் திரு அகிலேஷ் யாதவ் குல்லா போட்டதால் மூமின்கள் பிரச்சினை ஆக்கவில்லை
என்பதை சிந்திக்க மாட்டீர்களா???
அப்புறம் சகோ ஓசூர் இராசனின்
நகைச்சுவைப் பதிவில் இந்த தேவையான மாற்றங்களை செய்து படிக்க அன்புடன் வேண்டுகிறென்.
மோடி(இஸ்லாமியவாதி)யால் மூன்றாம் உலகப்போர் வரும்?
அகண்ட பாரதம்= கிலாஃபா
இந்துத்வ =இஸ்லாம்
ஆர்.எஸ்.எஸ்=ஜிஹாதிகள்
மோடி=இஸ்லாமியவாதிகள்
ஷாகா=தாவா
ஷாகா=தாவா
அப்போதும் பொருந்தும் ஹி ஹி!!!
சரி நாமும் மோடிக்கு மாற்று வேண்டும் என்வே சொல்கிறோம்
ஏன்?
/அது மூன்றாம் உலகபோராக மாறுவதை நிச்சயம் தடுக்க முடியாது. ஏனென்றால், மூன்றாவது உலகப்போர் இந்தியாவை மையமாக வைத்தே நடக்கும் என்று நாஸ்டர்டாம் என்பவர் எப்போதோ கணித்து சொல்லி உள்ளாராம்.! /
நாஸ்ட்ராடாமஸ் என்ன சொல்லி இருக்கிறான் என சரியாக இங்கே படியுங்கள் ஹி ஹி!!!
"Religion named after the seas (Hindu Mahasagar - Indian Ocean) will be victorious, Against the sons of the Caliph's adalat or rule."
http://www.scribd.com/doc/37994695/Hindu-Destiny-in-Nostradamus-pa-Part-1
********
/அது மூன்றாம் உலகபோராக மாறுவதை நிச்சயம் தடுக்க முடியாது. ஏனென்றால், மூன்றாவது உலகப்போர் இந்தியாவை மையமாக வைத்தே நடக்கும் என்று நாஸ்டர்டாம் என்பவர் எப்போதோ கணித்து சொல்லி உள்ளாராம்.! /
நாஸ்ட்ராடாமஸ் என்ன சொல்லி இருக்கிறான் என சரியாக இங்கே படியுங்கள் ஹி ஹி!!!
"Religion named after the seas (Hindu Mahasagar - Indian Ocean) will be victorious, Against the sons of the Caliph's adalat or rule."
http://www.scribd.com/doc/37994695/Hindu-Destiny-in-Nostradamus-pa-Part-1
********
இந்தியா ஒரு ஜனநாயக,இன,மத சார்பற்ற, அரசியல் அமைப்பு கொண்ட நாடு.சட்டம்
அமல் படுத்துவதில் குறைகள் இருக்கலாமே தவிர உலகின் பல நாடுகளின் பாகுபாடான சட்டங்களை
விட நமது அரசியல் அமைப்பு சட்டம் சிறந்தது
என்பதை நாம் உறுதியாக ஏற்கிறோம்.
இந்த சிறந்த அரசியல்
அமைப்பு சடங்களை ஒழுங்காக அமல்படுத்தும் அரசியல் த்லைவர்களோ, அரசு அதிகாரிகளோ மிக மிக குறைவு
என்பதுதான் நமது சிக்கல்.அதிகரிக்கும் மக்கள் தொகை எந்த ஒரு முன்னேற்றும் திட்டத்தையும்
செயல் அற்றது ஆக்குகிறது.
ம்க்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் போது,இயற்கை வளங்கள் பன்னாட்டு
நிறுவனங்களால் தொடர்ந்து சுரண்டப்படும் போது , காங்கிரசின் வெளிநாட்டு,பொருளாதார கொள்கைளை அப்படியே
சுவீகாரம் செய்த பாஜக (மோடி) என்ன செய்ய முடியும்?
குஜராத் சில அம்சங்களில் பிற மாநிலங்களை விட முன்னேறினாலும்,இன்னும் சில அம்சங்களில் பின்தங்கி
உள்ளதும் கண்கூடு. குஜராத்துக்கு பொருந்துவது மொத்த இந்தியாவுக்கும் பொருந்துமா?
தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு சில இடங்கள் தவிர செல்லாக் காசுதான்.ஏதேனும்
ஒரு கழகம் ,அதற்கு தேர்த்லுக்கு முன்னோ,பின்னோ ஆதரவு அளித்தால் மட்டுமே பலன் உண்டு.
இதில் மோடி திருச்சி வந்தாலும், தமிழகம் முழுதும் சுற்றினாலும்
பலன் இல்லை.இதற்கு கொடுக்கப்படும் எதிர்ப்பு தேவையற்ற விளம்பரம் தருகிறது.
ஆக்க பூர்வமாக மோடி எதிர்ப்பாளர்களுக்கு நாம் ஒரு யோசனை சொல்கிறோம்
ஆகவே தேர்தலில் நம்பிக்கை உள்ள மோடி எதிர்ப்பாளர்கள்,
இரு கழகங்களும் தேர்தலுக்கு
முன்னும்,பின்னும்
பாஜகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என அக்கட்சி தலைகள் உறுதி அளிக்க வேண்டும் என ஒரு
முயற்சி முன்னெடுக்கலாம். அப்படி அளித்தால் மட்டுமே ஓட்டு என கருத்தியல் ரீதியாக போராட்டம் தொடங்கலாம்.
இப்படி உறுதி அளித்து பிறகு மாறிவிடுவார்கள் என்றால் வேறு
கட்சிகளுக்கு வாக்கு அளிக்கலாம்.அடுத்த தேர்தல்களில் தண்டிக்கலாம்.
இது மட்டுமே மோடியை சரியாக முறையாக எதிர்க்கும் வழி ஆகும்.
நன்றி!!!!
மிக அருமையான சிந்திக்க வைக்கும் கட்டுரை.
ReplyDeleteமுஸ்லீம் கட்சிகள் எதிர்ப்பு என்பது உலக மகா தமாஷ். எகிப்தில் இஸ்லாமிய ஷரியாவை கொண்டுவரும் சான்ஸ் போச்சே என்று கண்ணீர் வடித்து கொண்டு இந்தியாவில் மோடியை எதிர்கிறார்களாம்.
வாங்க சகோ வேக நரி,
Deleteநம்ம வஹாபி சகோக்கள் போடும் இரட்டை வேடமே அலாதிதான், என்றாலும் பெரும்பான்மை தமிழக மூமின் சகோக்கள் இரு கழகங்களுக்கு மட்டுஏ வாக்களிப்பவர்கள் என்பதே எதார்த்தம்.
ஜன்நாயக முறையில் மோடியை எதிர்ப்போர் எதிர்த்து வாக்கு அளிக்கட்டும்.
தேர்தலின் முடிவை அனைவரும் ஏற்போம்.
வெற்றி பெற்றவரும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதம் இல்லாமல் நடக்க வேண்டும்.
நன்றி!!!
\\ஜனநாயகத்தில் தேர்தல்தான் அரசியல்வாதிகளுக்கு ஒரு கடிவாளம்.\\
ReplyDeleteஜனநாயகம் என்பது புத்திசாலிகளுக்கு மட்டும்தான் செயல்படும், முட்டாள்களுக்கல்ல.
[வள்ளுவனை வம்புக்கு இழுக்க வேண்டாம்!!]
வாங்க மாப்ளே தாசு,
Deleteபுத்திசாலி என்றால் யார்?
சூழலுக்கு தக்கபடி நடப்பவந்தான் புத்திசாலி.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஜனநாயக் சூழலில் மோடியை முறையாக தமிழகத்தில் எதிர்க்கும் வழி கூறினோம் அவ்வளவுதான்.
ஏற்போர் ஏற்கலாம், நிராகரிப்போரையும் மதிக்கிறோம்.
நன்றி!!!
\\கடந்த 50 வருடங்களில், பல ஒடுக்கப்பட்ட சாதியினரே ஆதிக்க சாதியாக பரிணாம வளர்ச்சி பெற்றதை பார்க்கிறோம்.\\ வந்ததுக்கப்புறம் அவன் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு ஒன்னும் புடுங்கவில்லை,மாறாக அவர்களது நிலங்களை பிடுங்கி பண முதலைகளுக்கு தாரை வார்த்து விட்டு திகார் ஜெயிலில் கனிவான மொழி பேசி கலி தின்னுவதைப் பார்க்கிறோம். ஹி .........
ReplyDelete[இதையெல்லாம் எப்பவாச்சும் சொல்லுவீங்களா மாமு? மாட்டீங்க, எதற்கு இந்த பிழைப்பு??..........]
மாப்ளே,
Deleteஇன்று அவன் ஊழல் செய்கிறான்,ஒடுக்கிறான் என்பவன் கையில் ஆட்சி வந்தாலும் அவனும் ஊழல் ஒடுக்குதல் செய்வதை தவிர்ப்பது எப்படி என பலரும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நல்லாட்சி பிறக்கும் என்றே சொல்கிறோம்.
நன்றி!!!
\\
ReplyDeleteபெரியாருக்கு பிறகு கொள்கையிலும், செயல்களிலில் சூம்பிப் போன தேர்தலில் பங்கேற்காத திராவிட இயக்கங்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.\\ பெரியார் கொள்கைப் பிடிப்புள்ளவர் என்பதற்கு ஆதாரம், நிறைய உண்டு. கோவில் சிலைகளை கோவிலில் உடைத்துப் போட்டுவிட்டு தன் சிலைகளை ஊர் பூராவும் திறந்து வைத்து மாலை மரியாதை செய்ய வைத்தது, திருமணம் குற்றம் என்று பிரச்சாரம் செய்து விட்டு தானே இரண்டு திருமணம் செய்தது என்று போகலாம்............
ஹி ............ஹி ............ஹி ............
மாப்ளே,
Deleteஇப்பதிவு மோடியை எப்படி சரியாக எதிர்ப்பது என்பது பற்றி மட்டுமே!!!
பெரியாரின் மீது விமர்சனம் அல்ல. பெரியாரின் வழித் தோன்றல்கள் அவரின் கொள்கைகளை கைவிட்டனர் என்பதை மட்டுமே எடுத்து காட்டி இருக்கிறோம்.
பெரியார் இரு திருமணம் என்றால் ,இராதாவுக்கும் கிருஷ்னனுக்கும் என்ன உறவு என்பதை எடுத்து சொல்லினால் நல்லது.
இராத கிருஷ்னனின் மனைவியா? சொல்லுங்கள் ஆம்/இல்லை
அப்புறம் இன்னொரு கேள்வி
நீங்க மோடி ஆதர்வாளரா, எதிர்ப்பாளரா???
நன்றி!!
\\பெரியார் இரு திருமணம் என்றால் \\மாமு, நீங்க சரியான மக்கு என்பதை மறுபடியும் மறுபடியும் புரூ ஃ ப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. பெரியார் ரெண்டு என்ன பத்து திருமணம் வேண்டுமானாலும் செய்திருக்கட்டும், அதை இங்கு கேள்வி கேட்க வில்லை, திருமணம் என்பதே அயோக்யத் தனம் என்று பிரச்சாரம் செய்துவிட்டு, இவர் ஏன் திருமணம் செய்தார் என்பதே கேள்வி, நன்றி............ [நீர் என்ன சோப்பு போட்டு வெளுத்தாலும் வெள்ளையாகவே மாட்டீறு........... எங்கே போய் முட்டிக் கொள்ள?!! ]
Delete\\இராத கிருஷ்னனின் மனைவியா? சொல்லுங்கள் ஆம்/இல்லை\\ மாமு இதே கேள்வியை வெள்ளைக்காரன்கிட்ட கேட்டா பத்து நாள் விழுந்து விழுந்து சிரிப்பான். சட்டங்கள் நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்துக்கு கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கும்போது இதுதான் பெஸ்டு அப்படின்னு எதையுமே சொல்ல முடியாது. அவங்க ரெண்டு பேரும் ஏன் நீங்க இன்னைக்கு எழுதிய இளிச்சவா சட்டத்தை பின்பற்ற வேண்டும்?!! அப்படியே உங்க சட்ட திட்டங்களைப் பார்த்தாலும், அது என்ன மக்களுக்கு நல்லது செய்யவா இருக்கு? ஏழையைக் கண்டால் எட்டி உதைக்கும், பணக்காரனை சுமந்து செல்லும் கழுதைக்குப் பெயர் தான் சட்டம். இது ஒரு சீனப் பழமொழி. இது நமக்கு நல்லாவே பொருந்தும். அரசியல்வியாதிகளும், பண முதலைகளும் ஏழைகளின் உழைப்பை பங்கு பிரிச்சு போட்டு தின்றுவிட்டு, அவர்களை பட்டினியால் சாகடிக்கும் வழிவகை செய்யும் மொள்ளமாறித் தனம் உங்க சட்டம், சதுரம், விட்டம்...........எல்லாம். , இதை எல்லோரும் பின்பற்றனுமா?
நீங்க மோடி ஆதர்வாளரா, எதிர்ப்பாளரா???\\
Deleteமோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி?- என்று பதிவு போடக் காரணம் என்ன? நடுவு நிலையில் இருக்கிறேன் என்கிறீர், அது உண்மையானால் இவரை எதற்காக எதிர்க்க வேண்டும்? ஒரு வேலை அவர் சட்டத்துக்கு புறம்பாகச் செயல் பட்டிருந்தால் அதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்க சட்டம் இருக்கிறது. அவர் எப்படி எதிர்ப்பது என்று நீங்கள் ஏன் கட்டுரை எழுத வேண்டும்? அவர் செய்த தவறுகள் என நீங்கள் நினைப்பதை மற்ற மாநில முதல்வர்கள் செய்யவேயில்லை என்று உங்களால் உறுதி கூற முடியுமா? அவர்கள் எல்லாம் தேர்தலில் நிற்க்கக் கூடாது என்று தடுக்கப் பட்டார்களா? சட்டப் படி தண்டிக்கப் பட்டார்களா? மனசாட்சியை தொட்டு பேச வேண்டும்.............. ஆஹா நீ மோடி ஆதரவாளன் என்பீர்...........
ஹி ..........
ஹி ..........
ஹி ..........
நான் நீர் விடும் புருடாக்களை வெளிச்சம் போட்டு கண்பிப்பவன் அவ்வளவே!!
மாப்ளே,
Deleteஉம்மைப் போன்றவர்கள் பெரியாரை எதிர்ப்பதே அவ்ருக்கு பெருமைதான். எதிரி நம்மைப் புகழ்ந்தால் கொள்கை த்வறி விடோஒம் எனவே பொருள் ஹி ஹி
அவரின் இரு திருமணங்கள் பற்றிய தகவல்கள் தருகிறேன்.
Periyar born on 1879 [Sep-17]
1898,He married NAGAMMAL, aged 13. He was 19
1949, Periyar's marriage with Mani Ammai ,aged 30 .He was 70,He was alive till 1973.
பெரியார் வைதீக முறைத் திருமணங்களைத் மட்டுமே எதிர்த்தார். கன்னிகா தானம்,சிறுமி திருமணம் போன்றவற்றை எதிர்த்த அவர் விதவைத் திருமணத்தை ஆதரித்தார்.
பல் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்த அவர் திருமணம் என்பதையே எதிர்த்தார் என கதை விடுவது இந்துத்வ புரட்டு மட்டுமே!!!.
அவரின் திருமணம்,பெண்கள் பற்றிய கருத்துகள் இங்கே!!!
http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy_and_women's_rights
பெரியாருக்கு இஸ்லாம்,கிறித்தவம் குறித்த சரியான புரிதல் இல்லை, வைதீக மதத்திற்கு சற்றும் குறையாத பிற்போக்குத் தனம் கொண்டவை என்பதை அவர் அறியவில்லை என்பது து மட்டுமே அவர் மீது நான் வைக்கும் விமர்சனம் என்றாலும். அவரை அப்ப்போதைய சூழலில் அனைத்தும் அறிந்தவராக எதிர்பார்க்க முடியாது!!!
****
சரி கிருஷ்னனை விட்டு விடுவோம். அந்தக் கால ஆள் என்பதால் காம லீலா வினோதங்கள் இயல்புதான்!!!!
உம்ம இஸ்க்கான் குருக்களின் குழந்தை காம லீலைகளை என்றாவது கண்டித்தது உண்டா? பாரும் சுட்டி
http://www.harekrsna.org/iskcon-child-abuse.htm
நன்றி!!!
மாப்ளே,
Deleteஇந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எதுவும் செய்யலாம்.
நம் ஆதரவு,எதிர்ப்பு சூழல் சார்ந்து மட்டுமே!!
இப்போது மோடிக்கு வாக்களிப்பாயா என்றால் இல்லை என்றே சொல்வேன்.
மோடியை ஆதரிக்க வேண்டிய சூழல் தமிழர்களுக்கு இல்லை!!!
தமிழகத்தை பொறுத்த்வரை பாஜக தனியாக போட்டியிட்டு எதுவும் சாதிக்க முடியாது.
அம்மா,அய்யா ஆதரவு எதிர்பார்த்து மட்டும்தான் கொஞ்சம் இடம் இதுவரை வென்று இருக்கிறது.
இந்த ஆதரவு மட்டும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டால் ஆட்சி அமைக்க முடியாது.
மற்றபடி பாஜக மொத்தம் 534ல் 200+ இடம் வென்றால் மட்டுமே கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உண்டு.
நான் மோடியை எதிப்பது இந்து மதவாத அரசியலுக்காக மட்டுமே!!
எகிப்து போல் இந்தியா ஆகக் கூடாது என்பதே நம் கவலை!!!
அப்படியும் மோடி வென்றாலும் ,அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முயலாமல்,மதப் பித்து பிடிக்காமல்,நாட்டின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க முயன்றால் நிச்சயம் பாராட்டுவேன்.அடுத்த முறை ஆதரிப்பேன்!!!
பொறுத்து இருந்து பார்ப்போம்.
நன்றி!!
\\இப்போது மோடிக்கு வாக்களிப்பாயா என்றால் இல்லை என்றே சொல்வேன்.\\ உமது வாக்குரிமை, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நான் கேள்வி கேட்கப் போவது இல்லை. ஆனால் மோடி என்பவரை எதிர்ப்பதற்கு வழுவான காரணங்கள் உண்டா? அவரை மோசம் என்று சொல்லும் அளவுக்கு மற்றவர்கள் யோக்யர்களா என்பதே கேள்வி.
Delete\\நான் மோடியை எதிப்பது இந்து மதவாத அரசியலுக்காக மட்டுமே!!\\ பாகிஸ்தானிய தீவிரவாதிகள் குஜராத் வழியாக ஊடுருவினால் உமக்கு கவலை இல்லையா? அது தற்போது தடுக்கப் பட்டிருக்கிறது. காஷ்மீர் வழியே நுழைவதற்கு நடுவண் அரசால் ஒன்னும் பிடுங்க முடியவில்லை. காரணம் மதச் சார்பற்றவர்கலாம்.......... ஹி .........ஹி .........ஹி .........
\\எகிப்து போல் இந்தியா ஆகக் கூடாது என்பதே நம் கவலை!!! \\ குஜராத் எகிப்து ஆகிவிடவில்லை. [இதை விட கேனத் தனமான காரணம் காட்டவே முடியாது!!]
\\அப்படியும் மோடி வென்றாலும் ,அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முயலாமல்,மதப் பித்து பிடிக்காமல்,நாட்டின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க முயன்றால் நிச்சயம் பாராட்டுவேன்.\\ தற்போதைய மண்ணு மோகன் சிங்கின் பொம்மை ஆட்சியை விட சிறப்பாகவே இருக்கும், தற்போது இந்தியாவை அடகு வைத்துவிட்டார்கள், மீட்க நிச்சயம் மாற்று சக்தி வேண்டும், அது மோடியால் முடியும் என்பது எனது நம்பிக்கை..............
This comment has been removed by the author.
Delete\\உம்மைப் போன்றவர்கள் பெரியாரை எதிர்ப்பதே அவ்ருக்கு பெருமைதான். எதிரி நம்மைப் புகழ்ந்தால் கொள்கை த்வறி விடோஒம் எனவே பொருள் ஹி ஹி\\ இங்கே உம்மா பிளாக்கில் எழுதுவதால் மறுக்கிறோம், தனிப்பட்ட முறையில் வரிந்து கட்டிக் கொண்டு எதையும் செய்வதில்லை.
Deleteஹி..........ஹி..........ஹி..........
\\பெரியார் வைதீக முறைத் திருமணங்களைத் மட்டுமே எதிர்த்தார். \\ பெரியாருக்கு கிருத்துவம், இஸ்லாம் தெரியவில்லை என்ற உமக்கு அவரைப் பற்றியே ஒன்னும் தெரியாதது வேடிக்கை. கர்ப்பப் பை இருப்பதால் தானே பெண் அடிமையாகிறாள், எனவே அதை வெட்டிப் போடு என்றவர் அவர். மேலும், திருமணம் என்ற ஒன்று இருப்பதால் தானே பெண்டாட்டி பிள்ளை குட்டிகள் என்று வருகிறது, அவர்களுக்கு சொத்து சேர்க்க மற்றவர்களை ஏய்த்து பிழைக்க வேண்டி இருக்கு, எனவே திருமணத்தையே தடை செய்ய வேண்டும் என்றார் அவர்.
\\
அவரின் திருமணம்,பெண்கள் பற்றிய கருத்துகள் இங்கே!!!\\ நீர் இங்கே கூமுட்டைத் தனமாக போட்டிருப்பது போல அவர் இன்னது குறித்து இன்னது தான் சொன்னார் என்று quoatation கொடுத்து எதையுமே சொல்லும் அளவுக்கு அவரிடம் consistency சுத்தமாக இல்லை. ஒரே விஷயத்தை குறித்து முதல் பத்தியில் ஒன்றும் அடுத்த பத்தியில் இன்னொன்றும் [அதற்க்கு நேர் மாறாக] சொல்லுவார். இது எதுவுமே தெரியாமல் பீலா விடுவதை நிறுத்துங்கள்...........
\\சரி கிருஷ்னனை விட்டு விடுவோம். அந்தக் கால ஆள் என்பதால் காம லீலா வினோதங்கள் இயல்புதான்!!!!\\ மாமு, உம்மைப் போல டியூப் லைட் கிடைப்பது அரிதிலும் அரிது. அவர் வயோதிக திருமணத்தை இந்த அளவுக்கு கொச்சைப் படுத்தலாமா? அவர் எந்த காரனத்திற்காக திருமணம் செய்தார் என்பது இங்கு கேள்வி அல்ல, எடுத்துக் கொண்ட கொள்கைக்கு இது விரோதம் அவ்வளவே.
\\உம்ம இஸ்க்கான் குருக்களின் குழந்தை காம லீலைகளை என்றாவது கண்டித்தது உண்டா? \\ மாங்கா........மாமு........ அவங்க செய்ததால் நீரும் செய்வீரா? கேனத் தனத்தின் உச்ச கட்டம் இது!! அதை ச்செர்த்திருத்தம் செய்வதாக சொல்லிவிட்டு நீரும் அதையே செய்தால், நீரும் இன்னொரு கள்ளச் சாமியாரா? [மாமு எப்படி விளக்கினாலும் உமக்கு உறைக்கவே உறைக்காதா?]
1.// ஆனால் மோடி என்பவரை எதிர்ப்பதற்கு வழுவான காரணங்கள் உண்டா? அவரை மோசம் என்று சொல்லும் அளவுக்கு மற்றவர்கள் யோக்யர்களா என்பதே கேள்வி.//
Deleteபதிவில் இதனை ஆதரவாளர்கள்,எதிர்பாளர்கள் இருவரின் கருத்தையும் கூறி இருக்கிறேன்.
குஜராத் தமிழகத்தை விட எந்த விதத்திலும் முன்னேறி இருப்பதாக தெரியவில்லை. மோடி ஒரு சூப்பர் மேன் என்ற விளம்பரத்தை நான் நம்பத் தயாராக இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை அளித்து இயற்கை வளம் சுரண்டி தொழில் தொடங்க உதவுவது முன்னேற்றம் அல்ல.
அரசு தொழில்களை நடத்தி பலருக்கு நிலையான வேலை வாய்ப்பு அளிப்பதே முன்னேற்றம்.
குஜராத்தில் இட ஒதுக்கீடு 50% மட்டுமே!!!
பிற்பட்டோருக்கு கிரீமி லேயர் முறை உண்டு!!!
ஆதிவாசிகள் அதிகம் மாநிலம் என்றாலும் ,அவர்களின் முன்னேற்றம் எதுவும் இல்லை.
http://en.wikipedia.org/wiki/List_of_Scheduled_Tribes_in_Gujarat
The population of Gujarat in 2001 Census of India was 50,671,017. Of this 7,481,160 persons belong to one of the Scheduled Tribes(STs) constituting 14.8 per cent of the total population of the state.
***
2.//பாகிஸ்தானிய தீவிரவாதிகள் குஜராத் வழியாக ஊடுருவினால் உமக்கு கவலை இல்லையா? அது தற்போது தடுக்கப் பட்டிருக்கிறது. காஷ்மீர் வழியே நுழைவதற்கு நடுவண் அரசால் ஒன்னும் பிடுங்க முடியவில்லை. காரணம் மதச் சார்பற்றவர்கலாம்.......... ஹி .........ஹி .........ஹி .........//
கைப்புள்ளை பாகிஸ்தானுக்கு எதிராக உதார் விடுவது பெரிய விடயம் இல்லை.
அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து அவமானப் படுத்தினாலும் , அவன் காலைப் பிடித்து அழும் அழகே அழகு!!!!
இதுவரை அமெரிக்காவை எதிர்த்தோ பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்தோ ஏதேனும் பேசி இருந்தால் சுட்டி கொடும்!!!
கோத்ரா குறித்த வழக்குகள்,போலி என்கவுண்டர் வழக்குகள் இன்னும் நடக்கின்றன.
மோடியின் வலது கை அமித் ஷா பற்றி அறியவும்!!
http://en.wikipedia.org/wiki/Amit_Shah
Amit Shah (born 1964) is an Indian politician from the Bharatiya Janata Party. He was Home Minister of Gujarat, but had to resign in 2010 after he was arrested on charges of having ordered a series of "encounter" killings by the State Police.[1]
Amit Shah is considered to be a confidant of Gujarat Chief Minister Narendra Modi.[2]Currently on judicial bail, the Supreme Court has directed that he may not enter his home state of Gujarat where he may influence the investigations of the encounter killings.[3] In the interim, Narendra Modi has designated Shah as the BJP poll manager for the forthcoming (2014) Uttar Pradesh elections.[4]
(contd)
1/ நீர் இங்கே கூமுட்டைத் தனமாக போட்டிருப்பது போல அவர் இன்னது குறித்து இன்னது தான் சொன்னார் என்று quoatation கொடுத்து எதையுமே சொல்லும் அளவுக்கு அவரிடம் consistency சுத்தமாக இல்லை. ஒரே விஷயத்தை குறித்து முதல் பத்தியில் ஒன்றும் அடுத்த பத்தியில் இன்னொன்றும் [அதற்க்கு நேர் மாறாக] சொல்லுவார். இது எதுவுமே தெரியாமல் பீலா விடுவதை நிறுத்துங்கள்.........../
Deleteசொல்லை எடுக்க கூடாது!!!
அதை ஏன் சொன்னார் ,எந்த சூழலில் சொன்னார் என்பதை பெரிதாக எடுக்க தேவை இல்லை.
அவரின் செயல்களின் அடிப்படையில் விமர்சிப்பதே உத்தமம். அவர் நிறைய சுய மரியாதை, சாதி மறுப்பு திருமணம் நடத்தி இருக்கிறார். அவரும் திருமணம் செய்து இருக்கிறார்.ஆகவே அவர் சுயமரியாதை திருமணத்திற்கு எதிரானவர் அல்ல!!!
***
2./மாங்கா........மாமு........ அவங்க செய்ததால் நீரும் செய்வீரா? கேனத் தனத்தின் உச்ச கட்டம் இது!! அதை ச்செர்த்திருத்தம் செய்வதாக சொல்லிவிட்டு நீரும் அதையே செய்தால், நீரும் இன்னொரு கள்ளச் சாமியாரா? [மாமு எப்படி விளக்கினாலும் உமக்கு உறைக்கவே உறைக்காதா?]//
இது செயல் சார்ந்த விடயம் . கண்டு கொள்ள மறுக்கிறீர் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சாமியார் என்றாலே கள்ளச் சாமிதான்!!!
நாத்திகன் எப்படி கள்ளச் சாமியார் ஆக முடியும்? ஹி ஹி?ஆத்திகன் என்றால்தான் கிருஷ்னனை சுற்றி வந்த கோபியர்கள் போல் பெண்கள் வந்து விழுவார்!!!
நன்றி!!!
/தற்போதைய மண்ணு மோகன் சிங்கின் பொம்மை ஆட்சியை விட சிறப்பாகவே இருக்கும், தற்போது இந்தியாவை அடகு வைத்துவிட்டார்கள், மீட்க நிச்சயம் மாற்று சக்தி வேண்டும், அது மோடியால் முடியும் என்பது எனது நம்பிக்கை..//
Deleteமன்மோகன் என்ன்மோ அவராக எல்லாம் செய்வது போல் சொல்கிறீர். ஆட்டுவிப்பவன் பன்னாட்டு நிறுவன முதலாளிகள்.ஆடுகிறார் அய்யா!!!.
என்று நரசிம்ம ராவ் உலகமயமாக்கலுக்கு கதவினை திறந்தாரோ அன்றே இந்தியாவின் மீது இன்னொரு காலனி ஆதிக்கம் தொடங்கி விட்டது!!!
பாஜக'வும் இரண்டாம் காங்கிரஸ் மட்டுமே!!!
பொருளாதாரம்,வெளிநாட்டு கொள்கைகளில் காங்கிரசின் அடிச்சுவடியை மட்டுமே பாஜக பின்பற்றும் என்பதை முன் அறிவிப்பு செய்கிறேன்!!!
நன்றி!!!
மாமு தமிழகம் குஜராத்தை விட மேலா? நீங்க காமடி நல்லா பண்ணுவீங்க, ஆனா இந்த அளவுக்கு போகனுமா? குஜராத்தில் மின்தடை ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம், இங்கே எத்தனை மணி நேரம்? ஒரு ரேஷன் கார்டை காசு குடுக்காமல் இங்கே உங்களால் மாற்ற முடியுமா? சாராயத்தை தடை செய்து இங்கே அரசு நடத்திவிட முடியுமா? இங்கே நடப்பது மானங்கெட்ட அரசு, இதை குஜராத் ஆட்சியுடன் ஒப்பிடலாமா? உங்களுக்கு மோடியை தனிப்பட்ட முறையில் பிடிக்காவிட்டால் விட்டுத் தள்ளுங்கள், அதற்காக தமிழக நாதாறித் தனங்களை தூக்கிப் பிடிக்க வேண்டாம்.............
Delete\\பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை அளித்து இயற்கை வளம் சுரண்டி தொழில் தொடங்க உதவுவது முன்னேற்றம் அல்ல.\\ மஞ்சள் துண்டு இங்கே அதைத்தான் செய்து கொண்டிருந்தது. மணல் கொள்ளையையும் சேர்த்து...............
Delete\\அரசு தொழில்களை நடத்தி பலருக்கு நிலையான வேலை வாய்ப்பு அளிப்பதே முன்னேற்றம்.\\ இவ்விஷயத்தில் குஜராத் தமிழகத்தை விட எவ்வளவோ பெட்டர்.
\\குஜராத்தில் இட ஒதுக்கீடு 50% மட்டுமே!!!
பிற்பட்டோருக்கு கிரீமி லேயர் முறை உண்டு!!!\\ எல்லாத்தையும் ஒதுக்கீடு பண்ணிட்ட, மற்றவன் எங்கே போவான்? தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அதிகம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
\\ஆதிவாசிகள் அதிகம் மாநிலம் என்றாலும் ,அவர்களின் முன்னேற்றம் எதுவும் இல்லை.\\ அங்க ஆதிவாசிங்க நிலையில் தான் மொத்த தமிழகமும் இருக்கு........... ஹி ...........
ஹி ...........
ஹி ...........
சகோ. சார்வாகன், நல்லா சொன்னீங்க....
ReplyDeleteமோடியின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தீயாய் வேலை செய்யறாங்க...
மோடி இந்தளவுக்கு நிற்பது, அவரின் எதிர்ப்பாளர்களின் கைங்கரியம்தான். எதை, எப்படி எதிர்கொள்வது என்பதில் அதை தீர்க்க உதவும். கோத்ரா ரயிலேறிப்பு சம்பவமும் அதன் பின் நிகழ்ந்த கலவரங்கள் தொடர்புடையவை. கலவரம் எதிர்க்கிறேன் என்று கோத்ரா சம்பவத்தை நியாயபடுத்தப்போய், மக்களிடையே இரட்டை வேடம் போடுகிறார்கள் என எண்ணம் பரவ தொடங்க அதை மோடி நன்றாக பயன்படுத்திக் கொண்டார். எதிர்ப்பதில் நியாயமில்லாத காரணத்தால், எதிர்ப்பு எல்லா நிகழ்ச்சிக்கு சமமாக இல்லாததால் வந்த எதிர்வினை. முஸ்லிம்களுக்குதான் இந்த எதிர்ப்பு என்ற நிலையை எதிர்ப்பாளர்கள் உருவாக்கினார்கள்- கலவரத்துக்காக அல்ல. எதிர்ப்பு மோடி ஆளுமையை உயர்த்தியது.
குஜராத்தை முன்னேற்றினாரா என்பதை அம்மாநிலத்தின் மக்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுவோம்.
மோடி பிரதமராக வருவாரா, தேர்தலில் யார் வெற்றி பெருவார்கள் என்பது கிளி ஜோஸ்யம் பார்ப்பதை போலத்தான். வருவது தற்போதிய சூழ்நிலையில் கஷ்டம்தான். தேர்தல் முடிவு இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும்.
வினவை பெயர் குறிப்பிடாமல் சொல்லியிருக்கீங்க.. யாரோ ஒரு புண்ணியவான் என் பெயரில் மோடி வாழ்க என ஆங்கிலத்தில் மறுமொழி வாசித்துள்ளார். வினவு தோழர்கள் பிரச்சாரத்தின் மூலம் மோடி கதிகலங்கி திருச்சிக்கு வராமல் போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு தெரியும் தேர்தல் என்பது எந்த இயக்கத்தையும் கொள்கையிலிருந்து வலுவிழுக்க செய்துவிடும்.
பெரியார் பிறந்த மண்ணில்--- ஊழல் இல்லை, சமுத்துவம் உண்டு, பெண்ணடிமை இல்லை, ஆத்திகத்தை ஒழித்து நாத்திகமே இருக்கின்றது. சாதி எண்ணமே இல்லாமல் சாதி ஒழிந்து எல்லோரும் திராவிடர்கள் என இனபற்றுடன் இருக்கிறார்கள், பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லை, திராவிடர்கள் கட்சியில் பார்ப்பனர்கள் இல்லை, தமிழர்கள் ஆட்சி செய்கிறார்கள், ஆங்கிலமே இல்லாமல் திராவிடமே மொழிகளே ஓளிக்கின்றன, தமிழில் கற்றால் வாழ்க்கையில் மேம்படலாம் என்ற நிலை, ஆங்கில வழி கல்வி மோகமில்லை, ஆதிக்க சாதியே இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்களை மனிதர்களாக ஏற்றுக்கொண்டு விட்டனர், வீரமணி பெரியார் கொள்கைகளை இந்த காலகட்ட இளைஞர்களுக்கு மக்களுக்கு எடுத்துச்செல்ல மும்முரமாக வேலை செய்கிறார், மற்ற திராவைடர்கள் தமிழர்களை தமிழை தன் தாய் போல எண்ணி மரியாதை செலுத்துகின்றனர், கருணாநிதி ஆட்சியில் பாலாறும் தேனாறு ஓடியது, இஸ்லாமியர்கள் தமிழர்கள்-- போன்ற நிலை தமிழகத்தில் இருக்கும்போது மோடி என்ற ஒரு துளி விஷம் திருச்சிக்கு வருவதால் தமிழகம் என்ற பால் கெட்டு போய்விடும்.
பெரியாரின் கொள்கைகளை தமிழ்நாட்டில் சிறுமைபடுத்தி விட்டு, பெரியார் பிறந்த மண்ணில் என்று பேசுவது விந்தைதான்
சகோ நரேன் ,
Deleteபதிவின் சிந்த்னைகளை சரியாக புரிந்தமைக்கு நன்றி!!!
உங்களுக்கு வஞ்சப்புகழ்சி நன்கு வருகிறது. வாழ்த்துக்கள்!!!
இங்கு நாத்திக போலிகள் ஆத்திக போலிகளை எதிர்ப்பது நமக்கு புரிகிறது ம்ம்ம்ம்ம்ம்ம்
உண்மையான நாத்திகன்,ஆத்திகன் இடையே வித்தியாசம் இருக்காது என்பதே நாம் கண்ட உண்மை.
மோடி ஆட்சிக்கு வராமல் தடுக்க எதிர்ப்பாளர்களுக்கு உரிமை உண்டு.
மோடி தேர்தலில் வென்றால் ஆட்சி அமைக்கலாம்.
ஆட்சி அமைத்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மேல் கை வைத்தால்,ப்ன்னாட்டு நிறுவனக்களின் நலனுக்கு எதிரானால் எகிப்து இஸ்லாமிய சகோ கட்சியின் சோக கதைதான் என்பதை முன் அறிவிக்கிறோம்.
நன்றி!!!!
மோடி உங்களையும் விட்டு வைக்கவில்லை போலிருக்குது, comment moderation வைத்துள்ளீர்கள்.
ReplyDeleteசகோ நரேன்,
Deleteகொஞ்ச நாள் இணையத்தில் இல்லை ஆகவேதான் ஹி ஹி!!!
நேரம் இல்லை மாதம் அதிக பட்சம் இரு பதிவு மட்டுமே,பினூட்டம் எனில் மறுமொழி இட வேண்டும் ஆகவே வேறுவழியில்லை!!
பின்னூட்டம் எதையும் இதுவரை தடுக்கவில்லை.அவசியம் ஏற்படவில்லை
நன்றி!!
மோடியை எதுக்கு எதிர்க்கனும்...நம் நாட்டை ஆள இத்தாலி சோனியாவுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு தந்து அமெரிக்க நாய்களுக்கு அடிமையாகனுமா..தினம் ஒரு ஊழல் ..ஒவ்வொரு ஊழலுக்கும் ஒரு கட்சியை பழி கொடுக்கும் ராஜதந்திரம் (ஊதார..தி.மு.க ராஜா.)தி.மு.க ஒன்றும் உத்த்ம கடசி அல்ல..கூட்டு சேர்ந்து திருடி விட்டு,மாட்டியதும் அடுத்தவர்களை பழிகடா ஆக்குவது ஏன்..இதாற்கெல்லாம் சரியான மாற்று மோடி ம்ட்டுமே..எல்லையில் வீரர்கள் தலையை வெட்டியெடுத்த பின்பும் சொரணையில்லாத சொரி நாயைப்போல வெட்டி அறிக்கை மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கும் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேச பக்தியுள்ள இந்தியன் தூக்கில்தான் தொங்க வேண்டும்..இப்போது நமக்கு தேவை ஒரு சர்வாதிகார ஆட்சி..பாகிஸ்தான்,இலங்கை வாலை ஒட்ட நறுக்க மோடியால் மட்டுமே முடியும்..தயவு செய்து மொடியை பிரதமராக்க உதவுங்கள்..நம் அனைவரின் நன்மைக்காகவும்தான்...
ReplyDeleteசகோ முருகேசன்,
Deleteஉங்களுக்கு மொடியை பிடிக்கும் எனில் அதற்கு உங்களுக்கு உள்ள உரிமை போல் ,மற்றவர்களுக்கு எதிர்க்கவும் உரிமை உண்டு.
அதுவே ஜனநாயகம் .இதுவே சர்வாதிகாரத்தை தடுக்கிறது. உலகின் பல நாடுகளில் இந்த ஜன்நாயக உரிமைகள் என்றால் என்ன என தெரியாத்வர் பலர் உண்டு.
நன்றி!!!!
//,இலங்கை வாலை ஒட்ட நறுக்க மோடியால் மட்டுமே முடியும்..தயவு செய்து மொடியை பிரதமராக்க உதவுங்கள்..நம் அனைவரின் நன்மைக்காகவும்தான்...//
Deleteதமாசு... தமாசு!
தமிழர்களுக்கெதிரான புள்ளியில் காங்கிரசும், பாஜகவும், அரசு அதிகாரவர்க்கம் எல்லோரின் சிந்தனையும் ஒன்று போலத்தான்.
வணக்க்ம் சார் அருமையானபதிவு
ReplyDeleteநன்றி சகோ சாதிக்,
Deleteநம் அரசியல் அமைப்பை வடிவமைத்த பெருந்தலைவர்கள் பல் சிந்த்னைகள்,நுண்ணோக்குடன் வடிவமைத்து இருக்கிறார்.
ஆகவே சர்வாதிகாரம் வருதல் என்பது மிகக் கடினம்.
இத்னை மதித்து அரசியல் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மோடியை எதிர்க்க,ஆதரிக்க மட்டுமே சொல்கிறோம்.
நன்றி!!!
வணக்கம் சார் எதிர் வரும் ஈதுல் அல்ஹாவை முன்னிட்டு ஓர்பதிவிடுங்கள் ஆடு மாடு ஒட்டகம் ஆகியவற்றுக்கு சாந்தியும் சாமாதாமும் ஏற்ப்படட்டும்
Deleteநீங்க எங்கேயிருந்து இதை எழுதுறீங்கன்னு தெரியல? கொஞ்சம் சொன்னீங்கன்னா அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாங்க உங்ககிட்டே அடைக்கலம் கேட்டு வந்துடலாம்.
ReplyDeleteசகோ ஜோதிஜி,
Deleteமகாபாரதத்தில் வரும் சகாதேவன் கதாபாத்திரம் போன்றோர் நாம்.
ஆருடத்தில் வல்லவர் சகாதேவன்.
துரியோதனனுக்கு கூட சரியாக ஆலோசனை வழங்கியவர் நகுலன்.
போரில் வெற்றி பெற அருச்சுனன் மகன் அரவானை பலியிட வேண்டும் என்ற சகாதேவன் துரியோதனனுக்கு அளித்த யோசனையை வழக்கம் போல் கிருஷ்னன் ஏமாற்றி பலியை& பலனை பாண்டவ்ருக்கு அளித்தார்.
நாம் கிருஷ்னனாக விரும்பியவர் வெற்றி பெற அல்ல,சகாதேவனாக பட்சபாதமின்றி அனைவருக்கு ஆலோசனை சொல்கிறோம்
இதற்கு உரிமை உள்ள ஜன்நாயக மத சார்பற்ற நாட்டின் குடிமகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆலோசனை கொடுப்போர் ஆதரவு வழங்க வேண்டும் என்பது நியாயமா!!!
கவலைப் படாதீர்கள்.
பாஜக ,காங்கிரஸ் இடையே அதிக வித்தியாசம் இல்லை!!!
பாஜக ஆட்சி வந்தால் ஒருவேளை ஊழல் அள்வு மட்டுமே குறையலாம் .
மற்றபடி திராவிட நாடு,அகண்ட பாரத வல்லரசு, உலகளாவிய கிலாஃபா என்பது எல்லாம் கஃப்சா!!!அப்பட்டமான பிழைப்பு வாதம்.
நன்றி!!!
//பாஜக ஆட்சி வந்தால் ஒருவேளை ஊழல் அள்வு மட்டுமே குறையலாம் .// I don't think so.. Because we already have history of BJP in Kargil Coffin Scam and other scams.. Also in most of the congress involved scams the biggest beneficiaries are MNCs.. But all parties including BJP keeps silent on this.. for example in spectrum out of 1 lanh 80 thousand crore the commision got may be 1000 or 2000 crore wat abt the rest of the money ??? This will remain the same.. Because in Gujarat some 40 acres of govt land is given at a price of 1 rupee per square feet for some MNC.... If u ask them they will say it DEVELOPMENT... Also the corruption involving the comman man such as bribe to get ration card, bribe to get govt posting will NOT even reduce 0.1 percent.... People are so naive that they think changing INDIA is as easy as changing a government :):):)
DeleteIf u remmember the same hype wat ever we are hearing was there for one more person in the past... In those days social network was NOT as active as it is today... I have seen people circulating his resume and in final sentence revealing his name... I have read so many articles such as all present politicians are NOT well educated but this qualified person will make INDIA great blah blah blah ... Also have seen so many foreign ministers and industrialists giving certificate ti him... ... The name is none other Dr. MANMOHAM SINGH... to be honest even as a college student i believed those stories at tat time.. But wat happened is history and it will repeat in this case also ...
Deleteதற்போது அரசியல் இருக்கும் நிலவரத்தில் யார் வெல்வார்கள் என்று சொல்ல இயலாது. மற்றபடி எதிர்க்கிறேன் பேர்வழி என முமீன்கள் செய்வது மோடிக்கு ஆதரவாகவே இருக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை தங்களின் ஆலோசனை சாலச்சிறந்தது. மோடியை எதிர்ப்பதைவிட, மோடியை ஆதரிக்காத கட்சி எது என்பதை தீர்மானிக்கலாம்.
ReplyDeleteஎன்னைப் பொருத்தவரை, மோடி ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்கள் நிலை அப்படி ஒன்றும் மோசமாகிவிடாது.
சகோ.சார்வாகன்,
ReplyDeleteஎன்னைப்பொறுத்த வரையில் அகில இந்திய அளவில் மோடிக்கு செல்வாக்கெல்லாம் இல்லை, "காவி பெல்ட்" பகுதிகளில் தான் செல்வாக்கு இருக்கலாம், அதுவும் அத்வானி, போன்ற மற்ற தலைகளின் ஒத்துழைப்பை பொறுத்தே.
ஆனால் மார்க்கப்பந்துக்களும் ,மற்ற சகாக்களும் மோடியை எதிர்க்கிறேன் என கொடுக்கும் எதிர்மறை விளம்பரம் ,மோடியைப்பற்றி தெரியாதவர்களையும் தெரிந்துக்கொள்ளவே பயன்ப்படும்.
இவங்களாம் ஏன் எதிர்க்கிறாங்க, அப்போ நாம ஏன் ஆதரிக்கக்கூடாது என பொதுவான இந்துக்களை நினைக்க வைக்கும் அளவில் மார்க்கப்பந்துக்களின் பிரச்சாரம் அமைகிறது என்பதனை ஒருவரும் உணர்ந்ததாக தெரியவில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தல் "மாநிலக்கட்சிகளின்" தேர்தல் ஆக இருக்கும், தனிப்பட்ட முறையில் தங்கள் பலத்தினை காட்டி ,பின்னாளில் சாதித்துக்கொள்ளலாம், அம்மையாரின் திட்டமும் அஃதே.
எந்த தேசியக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது, ஆட்சி யாருக்கு என்பது தேர்தலுக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளில் தான் முடிவாகும் என்பதே எனது கணிப்பு.(இதை பல முறை சொல்லிவிட்டேன், ஹி...ஹி நாமளும் ஒரு நாஸ்ட்ராடாமஸ் ஆகனும்ல)
மோடியின் முசுலீம் எதிர்ப்பு அவர் குஜராத் முதல்வராக இருக்கும் வரைதான். பிரதமரான பின், அவர் அவ்வெதிர்ப்பை மூட்டைகட்டி வைத்துவிடுவார். அந்நிய நாடுகளுக்கு இவர் போய் வரவேண்டும். அவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். முசுலீம் எதிர்ப்பைத் தொடர்ந்தால், இவர் ஓரங்கட்டப்படுவார். இந்தியா அநாதையாக்கப்படும். முசுலீம் எதிர்ப்பைக்ககக்கொள்ளும் நாடுகள் மட்டுமே மோடியை வரவேற்கும்.
ReplyDeleteஇந்தியா ஒரு முசுலீம்கள் எதிர்ப்பு நாடு என்றாகிவிடும். அரபு நாடுகளைத் தன்வசம் வைத்திருக்கும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும், இந்தியாவைப் புறந்தள்ளவேண்டியிருக்கும்.
இதையெல்லாம் கணித்து மோடி முசுலீம் எதிர்ப்பை முற்றிலும் புறந்தள்ளுவார் ஐந்தாண்டுகளில். மீண்டும் ஆட்சிக்கு வர விருப்பமில்லையென்றால் மட்டுமே இறுதி ஆண்டில் அவவெதிர்ப்பை எடுத்து இந்துத்வா அஜ்ண்டாக்களை அமல் படுத்தலாம்.
நன்றி சகோ கு.பிசாசி,சகோ வவ்வால் ,சகோ சேகரன்
Deleteஉங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்.
பொறுத்து இருந்து பார்ப்போம்!!!
நன்றி!!!
2001 - க்கு முன்பும் அதற்கு பின்பும் மோடி முதல்வராக மக்ளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வகுப்புவாதி இல்லை என்பதற்கு இதுவே போதும்.2001 -ல் நடந்தது காங்கிரஸ் கட்சியினரால் நடந்த இந்துகள் உயிருடன் ரயிலில் எரித்துக் கொன்ற சம்பவத்தின் பின்விளைவே. மைனாரிட்டியாக இருந்தபோதும் பெரும்பான்மையினராக உள்ள பிரிவினரை வன்முறைக்கு கொண்டுவர துாண்டியது எது சிறுபான்மையினர் என்ற பாதுகாப்பு கவசம் இருக்கும் என்ற வோட்டு வங்கி நம்பிக்கைதான். அது குஜராத்தில் செல்லுபடி ஆகவும் இல்லை ஆதராயம் தரவும் இல்லை மாறாக மோசமான பின் விளைவுகளை தந்தது அதை மறைக்க எதிர்தரப்பினரை குற்றம்சாட்டி தங்கள் குற்றத்தை மக்கள் மனங்களில் இடம்பெறாமல் பாரத்துக் கொள்வதை நோக்குமாக கொண்டு படுகின்ளர். மாலத்தீவு ஒரேநாள் இரவில் இஸ்லாமிய தேசமாக மாறியது எவ்வாறு? யார் காரணம் அல்லது எது காரணம்? மற்வர்கள் ஒரே இரவில் எங்கு சென்றனர்? ஏன் யாரும் அதை விமர்சிக்க வில்லை? ஒரு நாட்டில் சமமாக உரிமையுடன் நடத்த பட வேண்டும் ஆனால் இந்தியாவில் மட்டும் சிறுபான்மையினர் அதிக உரிமை உடையவர்களாக பொரும்பான்மையினர் அவர்களை சார்ந்தவர்களாக இருப்பதேன்? காங்கிரஸூக்கு மாற்றாக மோடி வருவதில் என்ன தவறு? பெரும்பான்மை மக்கள் அவர்வருவதை ஆதரித்தால் அது எவ்வாறு தவறாகும்? எனவெ மோடியை எதிரப்பது என்பது அரசியல் கொள்மை அடிப்படையில் என்றால் மட்டுமே சரியாகும் வேறு எந்தவயைிலும் சரியன்று!
ReplyDelete//2001 - க்கு முன்பும் அதற்கு பின்பும் மோடி முதல்வராக மக்ளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வகுப்புவாதி இல்லை என்பதற்கு இதுவே போதும்.//
DeleteEven the SAUDI royal family and their sahariah is well suppported by the majority of SAUDI population so can u say that SAUDI is a SECULAR COUNTRY ??..
//2001 - க்கு முன்பும் அதற்கு பின்பும் மோடி முதல்வராக மக்ளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வகுப்புவாதி இல்லை என்பதற்கு இதுவே போதும்.2001//
Deleteant சொன்னது சரியானது. மோடி முதல்வராக இஸ்லாமியர்கள் உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சவூதி அரேபியா மதவாத மன்னராட்சி நாடு. ஜனநாயகம்,மக்கள் தெரிவு என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.
ஆனா அமெரிக்க எப்போதும் சவூதி அரேபியாவுக்கு உறுதியான பக்கபலமாக இருந்து வருகிறது.
Iam not saying tat SAUDI is a democracy.. Wat u are saying is, "As MODI has support of the people he cannot be communal".. Wat iam asking is even SAUDI govt has support of the people can u call it as a secular givernment ??? Even in case of Pakistan onlt the party that supports ISLAM as a part if their policy can win there.. can u say tat pakistan is secular.... The argument u pose is valid only wen sensible people who think apart from religion only VOTES but INDIA has a long way to reach there this fits for all INDIANS including HINDUS, MUSLIM, CHRISTIANS etc etc
Deleteசார்வாகன் ,2001 க்கு முன்பும் மோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பொய் சொல்லியிருக்கிறார் உங்களது மாப்பிள்ளை .நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்காதது கண்டிக்க தக்கது
Delete1997 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு ராமன்பாய் என்பவரும் 1998 இல் கேசுபாய் படேலும் முதல்வராக இருந்தார்கள் .2001 இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வியுற்றதால் கேசுபாய் படேல் ராஜினாமா செய்யவைகப்பட்டு மோடி அத்வானியின் ஆதரவுடன் முதல்வராகுகிறார் .அதன் பின் 2002 சடட்டசபியா தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க அத்வானியின் ஆலோசனையில் வியுகம் வகுக்கப் படுகிறது .அதில் மோடியின் அற்புத கோத்ரா திட்டம் செயலாக்கம் பெறுகிறது
சகோ சார்வாகன் ,
ReplyDelete//திரு நரேந்திர மோடி நல்லவரா கெட்டவரா என்ற விவாதம் தேவையற்றது என்பதை நாம் அறிவோம்.
ஏன் எனில் நாம் ஆதரவாளரோ அல்லது எதிர் குழுவினரோ இல்லை!!!!//
முதலில் நடுவு நிலை என்று ஒன்று உள்ளதாக நான் நம்பவில்லை.
நடுவு நிலை என்பது பெரும்பாலும் ஒரு பக்க சார்பு நிலைஎடுக்கவே உதவும் என்பதை என் அனுபவத்த்தின் ஊடாகவே உணர்ந்துள்ளேன்.
இந்தியா ஒரு சாதி மத இன பேதமற்ற நாடு என பாட நூலில் மட்டுமே படித்த்துள்ளேன் . ஆனால் நடைமுறை என்பது வேறாகவல்லவா உள்ளது . உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி, ஏழை பணக்காரன் , படித்த்தவன் படிக்காதவன்,முதலாளி தொழிலாளி, சிறுபான்மை பெரும்பான்மை என மேடு பள்ளமாகவலலவா இருக்கின்றது நடைமுறை ... சமூக மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வு என்பது எங்கும் வியாபித்து உள்ளது என்பது கண்கூடு .
//ஒருவேளை இவர்களின் கையில் ஆட்சி என்றால் மட்டும் நியாயமாக நல்லாட்சி தருவார்கள் என எப்படி உறுதியாக நம்ப முடியும்?. அதுவும் ஜன்நாயகம் தேர்தல் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?//
நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிகின்றது .
இப்பொழுது இருப்பது உண்மையான மக்களாட்சியா ? எனக்கு தெரிந்த வரை அவர்கள் ஜனநாயகத்தை எதிர்ப்பதாக தெரியவில்லை அப்படி ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுங்கள். எனக்கு அவர்கள் மற்ற அரசியல் கட்சிகளை விட நேர்மையானவர்களாக தெரிகிறார்கள்.
//நமது இளைய சமூகத்தை இவர்களின் பிரச்சாரத்தில் இருந்து பாதுகாப்பது நல்லது.ஏன் எனில் இவை வன்முறை நோக்கி நகரும் அபாயம் உள்ளவை.//
அவர்கள் ஜனநாயகப்பூர்வமாகவே போராடுகிறார்கள் என்று நான் கருதுகிறேன் . அப்படி ஏதாவது அவர்கள் வண்முறைகளில் ஈடுபட்டதாக ஆயுத போராட்டம் செய்ததாகவோ உங்களுக்கு தெரிந்தால் ஆதாரம் கொடுங்கள். நாம் நாட்டை ஆளும் கட்சிகள் செய்யாத வன்முறையா இவர்கள் செய்து விட்டார்கள்.?
ஒரு ஊராட்சி ஒன்றிய தலைவராகி கூட மக்கள் பணி செய முடியும் என நிரூபித்து பிறகு புரட்சி செய்ய அன்போடு நமது காம்ரேடுகளை வேண்டுகிறோம்.//
இதற்கு நீங்களே பதில் சொல்லி இருக்கிறீர்கள் "அவர்கள் இந்த தேர்தல் பாதை திருடர் பாதை " என்கிறார்கள் என்று. நான் மட்டுமல்ல யாரை கேட்டாலும் இதை தானே சொல்லுவார்கள் . நாம் அவர்களை வேறு வழியின்றி ஏற்று கொண்டு விட்டோம் ஆனால் அவர்கள் தயாராக இல்லை .
//நான் மோடியை எதிப்பது இந்து மதவாத அரசியலுக்காக மட்டுமே!!
//அப்படியும் மோடி வென்றாலும் ,அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முயலாமல்,மதப் பித்து பிடிக்காமல்,நாட்டின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க முயன்றால் நிச்சயம் பாராட்டுவேன்.அடுத்த முறை ஆதரிப்பேன்!!!//
உங்கள் கூற்றில் முரண்பாடு தெரிகின்றது .
மோடி ஒரு மதவாதி என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என நான் நம்புகிறேன் . ஆனால் ஒரு மதவாதி ஆட்சிக்கு வருவதை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறீர்கள் //ஆனால் இந்த வகையில் இந்த தீவிர இடதுசாரியினர் மட்டும் எப்போதும் உத்தம புத்திரர்களாக இருப்பார்கள் என்பதை நாம் நம்பத் தயாராக இல்லை// என்றும் கூறுகிறீர்கள். மோடியை மட்டும் எப்படி நம்புவீர்கள்?.
இது என்னுடைய ஒரு பக்க சார்பு நிலையே .ஆனாலும் நான் வன்முறையை விரும்பவில்லை ஏனெனில் அதற்கான மனவலிமை எனக்கில்லை அது போல அமைதியான போராட்டாத்த்தின் பேரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை ஏனெனில் அது ஏழை எளிய மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாது என்பது வரலாறு சொன்ன பாடம் .
நன்றி
செல்வகுமார்
வாங்க சகோ செல்வகுமார்,
Deleteஉங்களின் பின்னூட்டத்தில் இருந்து அறிய முடிவது
மோடியை யார் எதிர்த்தாலும் அவர்களை விமர்சிக்க கூடாது சரியா?
மோடியை எதிர்ப்பவர் அனைவரும் யோக்கியர் ஆக முடியாது!!
தீவிர இடதுசாரிகள் பேச்சில் சொல்வதை செயலில் கொண்டுவர ஜனநாயகப் பாதையில் முயற்சிக்க சொல்கிறோம். இந்தியாவில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் குழுக்கள் உண்டு.
இவர்களின் ஆட்சி சென்றால் என்ன ஆகும் என்றே வினவுகிறோம்!!!
என குடும்பத்திலோ, நண்பர்கள்,சுற்றம் சார் இளைஞர்கள் எந்த ஆயுதக் குழுக்களிலும் சேர்வதை நான் ஆதரிக்க மாட்டேன்..
தீவிர இடதுகளின் மோடி எதிர்ப்பு விளமபரப் பிரச்சாரம் மட்டுமே, மூமின்களின் ஆதரவைப் பெற மட்டுமே!!
தமிழகத்தில் செல்லாகாசான பாஜகவுக்கு இந்த அளவு எதிர்ப்பு என்னும் விளம்பர பிரச்சாரம் தேவையா?
***
ஜனநாயகத்தில் யார் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்கலாம்.
மோடியை பிடிக்காதவர்கள் ,அவரின் கட்சிக்கோ,கூட்டணி வைக்கும் வாய்ப்புள்ள கட்சிகளுக்கோ வாக்களிக்காதீர் ,அப்படியும் ஜனநாயகத்தில் கிடைக்கும் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்பதே நாம் சொல்கிறோம்.
அதீத மோடி எதிர்ப்பாளரான நீரும், அதீத மோடி ஆதரவாளர் மாப்ளே தாசும் ஒரு சேர என் கருத்தை எதிர்ப்பது நான் நடுநிலையாக எழுதி இருக்கிறேன் என்னும் நிம்மதி தருகிறது.
மிக்க நன்றிகள்
சகோ சார்வாகன் ,
Deleteபதிலுரைக்கு நன்றி,
என்னை பற்றி முழுமையாக தெரியாமல் என்னை இசுலாமியர் ஆதரவாளர் என்று முத்ததிரை குத்துவது எவ்வகை ஜனநாயகம் என்று அடியேனுக்கு தெரியவில்லை .
இதற்க்கு முன்பு கூட உங்களது அனைத்த்து கட்டுரைகளையும் படித்த்து விடுவேன் சில கட்டுரைகளுக்கு பின்னூட்டமும் இட்டு உள்ளேன் . எத்தனை இசுலாமியர் விமர்சன கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்த்து பின்னூட்டம் இட்டுள்ளேன் என எனக்கு தெரியவில்லை.
போதுவாக உங்களது கட்டுரைகள் குறிப்பாக பரிணாமத்த்ை விளக்கும் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் .
என்னுடைய நேர்மையான ஜனநாயகமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இப்படி இசுலாமிய ஆதரவாளர் முத்ததிரை குத்துவது சரியானதா?
சிந்திக்க மாட்டீர்களா?
நன்றி
This comment has been removed by the author.
Deleteசரியாகச் சொன்னீர்கள் செல்வகுமார்!!
ReplyDeleteமாப்ளே தாசு
Deleteஅவரு என்ன சொல்ராறு ? ஹி ஹி
//இது என்னுடைய ஒரு பக்க சார்பு நிலையே .ஆனாலும் நான் வன்முறையை விரும்பவில்லை ஏனெனில் அதற்கான மனவலிமை எனக்கில்லை அது போல அமைதியான போராட்டாத்த்தின் பேரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை ஏனெனில் அது ஏழை எளிய மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாது என்பது வரலாறு சொன்ன பாடம் .//
அவரு இடது சாரி(,முஸ்லீம்) ஆதரவு மோடி எதிர்ப்பாளர்.
நீர் இந்துத்வ மோடி ஆதரவாளர்.நாத்திகரை எதிக்க வஹாபிகள் ஆதர்வு நாடுபவர்.
எப்படி கூட்டணி ஒத்து வரும்??????????
நல்லா காமெடி பண்ரீரு,
மோடி மஸ்தானைப் பாக்க திருச்சி போறீரா, ஒரு ஆள் 5 இருக்கையில் உக்கார வேண்டுமாம் ஹி ஹி
நன்றி!!!
சகோ சார்வாகன் ,
Delete//இது என்னுடைய ஒரு பக்க சார்பு நிலையே .ஆனாலும் நான் வன்முறையை விரும்பவில்லை ஏனெனில் அதற்கான மனவலிமை எனக்கில்லை அது போல அமைதியான போராட்டாத்த்தின் பேரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை ஏனெனில் அது ஏழை எளிய மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாது என்பது வரலாறு சொன்ன பாடம் .//
எதை வைத்து நீங்கள் என்னை இடது சாரி(,முஸ்லீம்) ஆதரவு மோடி எதிர்ப்பாளர் என்று கருதுகின்றீர்கள்?.
நன்றி !
Deleteசகோ சார்வாகன் ,
//மோடியை யார் எதிர்த்தாலும் அவர்களை விமர்சிக்க கூடாது சரியா?
மோடியை எதிர்ப்பவர் அனைவரும் யோக்கியர் ஆக முடியாது!!//
நல்லவன் கெட்டவன் என்று யாரும் இருக்க முடியாது என்று உரை எழுதி விட்டு இப்போது
யோக்கியர் ஆக முடியாது என்று விளக்க உரை கொடுக்கின்றீர்களே .
நீங்கள் கெட்ட அதே கேள்வியை ஏன் நான் கேட்க கூடாது ?
மோடியை எதிர்த்தால் நான் இசுலாமிய ஆதரவாளன் ஆதரித்தால் நான் இந்து ஆதரவாளன் இது போன்ற வாதங்கள் வளரவே உங்கள் பதிலுரை உதவுகின்றது .
ஏன் மோடியால் ஒரு இசுலாமியன் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கனுமா என்ன ?
நன்றி!
\\ இந்தியாவில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் குழுக்கள் உண்டு.
ReplyDeleteஇவர்களின் ஆட்சி சென்றால் என்ன ஆகும் என்றே வினவுகிறோம்!!!\\ மோடியை மாவோயிஸ்ட் குழுக்கள்
போல என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? அவர் சட்டத்துக்குப் புறம்பாக செயல் பட்டிருந்தால் சட்டம் என்ன செய்துகொண்டிருக்கிறது. கண்டுகொள்ளாமல் விட மத்தியில் நடப்பது பா ஜ க இல்லை, காங்கிரஸ் தான் ஏன் நடவடிக்கை இல்லை?
மாமு, ஒரு அடிப்படை விஷயம் உங்களுக்கு ஏறவேயில்லை. சட்டம் அனுமதிக்கும் யாரும் நாட்டின் பிரதமராகலாம், இங்கே கேள்வி, சட்டப் படி மோடி தகுதியானவரா என்பதே. மற்றபடி அது ஆயிடும் இது ஆயிடும் என்பதெல்லாம் நீங்கள் திரித்து விடும் கப்சா. சாராயக் கடையை மூடிவிட்டு ஆட்சி நடத்த முடிய வக்கில்லாத தேசத்தை வாய் கூசாமல் புகழும் உங்களிடம் நடுவு நிலை எங்கே இருக்கும்?
மாப்ளே தாசு
Deleteஉமக்கு பதிவு புரியவில்லை.
என்ன சொல்லி இருக்கிறேன் பதிவில்
1. மோடியை எதிர்க்கும் திராவிட, தீவிர இடதுகளின் எதிப்பு விளம்பரம் மட்டுமே.
2. முஸ்லீம்கள் எதிர்ப்பது மோடி குல்லா அணியவில்லை என்பதல் மட்டுமே!!
2. மோடியை ஜனநாயக ரீதியாக் எதிர்க்க விரும்புவோர் அவருக்கோ, கூட்டணி கட்சிகளுக்கோ வாக்கு அளிக்காதீர் என்பது மட்டுமே போதுமான எதிர்ப்பு ஆகும்.
***
/மோடியை மாவோயிஸ்ட் குழுக்கள்
போல என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? அவர் சட்டத்துக்குப் புறம்பாக செயல் பட்டிருந்தால் சட்டம் என்ன செய்துகொண்டிருக்கிறது. கண்டுகொள்ளாமல் விட மத்தியில் நடப்பது பா ஜ க இல்லை, காங்கிரஸ் தான் ஏன் நடவடிக்கை இல்லை?/
மோடி அப்படி வெளிப்படையாக செய்ய மாட்டார்.
மோடி ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்கு நல்ல பிள்ளை ஆக வேண்டும் என்பதால் மன்னு மோகன் மாதிரி மோடி ஆகிவிடுவார்.காங்கிரஸ் 2 ஆக பாஜக மாறிவிடும்.
இருந்தாலும் விசுவ இந்து பரிஷத் இந்துத்வ அமைப்புகள் அவ்வப்போது முஸ்லீம்களை சீண்டி விளையாடுவர்.அதுக்கும் கொஞ்ச ஆட்களை தயாராக வைத்து இருக்கிறார்கள்.
இந்த அமைப்பிலும், சேர வேண்டாம் என்வே கூறுகிறோம்
மோடியைப் பற்றிய ஆதீத பரப்புரைகளை நான் ஏற்கவில்லை.
புரிந்ததா!!
என்னை எதிர்க்க யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி அமைப்பீரா ஹி ஹி
நன்றி!!!
மாப்ளே தாசு
Delete1./மாமு, ஒரு அடிப்படை விஷயம் உங்களுக்கு ஏறவேயில்லை. சட்டம் அனுமதிக்கும் யாரும் நாட்டின் பிரதமராகலாம், இங்கே கேள்வி, சட்டப் படி மோடி தகுதியானவரா என்பதே.//
100% உடன்படுகிறேன்.
2./மற்றபடி அது ஆயிடும் இது ஆயிடும் என்பதெல்லாம் நீங்கள் திரித்து விடும் கப்சா. /
கப்சா அல்ல கணிப்பு. கணிப்பு பொய்யானால் மிக்க மகிழ்ச்சி எனக்குதான். உமக்கு குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தருகிறேன். அபச்சாரம் அப்ச்சாரம். மன்னிச்சுடுங்கோ!!!
புளியோதரையும், இரசகுல்லாவும் வாங்கித் தருகிறேன்.
3./சாராயக் கடையை மூடிவிட்டு ஆட்சி நடத்த முடிய வக்கில்லாத தேசத்தை வாய் கூசாமல் புகழும் உங்களிடம் நடுவு நிலை எங்கே இருக்கும்? /
சரக்கு அளவாக அடித்து மகிழ்வாக வாழத் தெரியாதவ்ர்களை என்ன சொல்வது?
மாதம் ஒரு தடவைக்கே பைசா முடியலை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அப்புறம் உம்மட குசராத்தில் கள்ளச்சாரயம் பெருக்கு எடுத்து ஓடுகிறது!!!
http://www.telegraphindia.com/1130423/jsp/frontpage/story_16817007.jsp
Gujarat’s liquor demand has fuelled smuggling and illicit production, the study has observed, adding liquor is smuggled into the state from Daman and Diu, Maharashtra and Rajasthan.
The illegal trade is “managed by bootleggers” along Gujarat’s borders; beer is often diverted from defence canteens; and outlets for liquor range from home-shops to provision stores. “We were told it’s also home-delivered,” Benegal said.
நன்றி!!!
//உலகளாவிய கிலாஃபா என்பது எல்லாம் கஃப்சா!!!அப்பட்டமான பிழைப்பு வாதம்.//
ReplyDeleteஆஹா ஆஹா கேட்க எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது. அந்த வல்லவன் பூனையார் கிலாஃபா ஏற்படாம எம்மையெல்லாம் காத்தருளுகிறார்.
அல்லது எமது நிலைமை என்ன?
சென்ற வாரம் பாகிஸ்தானில் சார்ச்சுக்கு போன 81 காபிர்கள் படுகொலை,
நைரோபியில் இதுவரை 67 காபிர்கள் படுகொலை.
பாகிஸ்தானில் தலிபான்கள் அல்லது தலிபான்களால் பேஷிக்கபடும் குழுவே காபிர்களை படுகொலை செய்துள்ளது .இதே தலிபான்களை விஸ்வரூபம் படத்தில் ஒரு சிறிதளவு காட்டுவதன் மூலம் அவர்களது புனித இமேஜ் கெட்டுவிட கூடாதே என்று பாதுகாக்க 23 தமிழக இஸ்லாமி அமைப்புகள் போராடினாங்க. இந்தியா ஒரு ஜனநாயகநாடானபடியால் அதன் மானிலமான தமிழகத்தில் ஜனநாயகப்பூர்வமாக போராடினாங்க.
எம்மை எல்லாம் காக்கும் வல்லவன் பூனையாருக்கு நன்றி.
சகோ சார்வாகன்,
நம்ம காபிர் செல்வகுமாரை பார்த்த ஞாபகம் இல்லையோ.
இந்திய ஜனத் தொகையானது 2050 மிக மேசமான நிலையடையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ReplyDeletehttp://www.ndtv.com/article/india/india-to-be-world-s-most-populous-nation-by-2050-report-426710
பின்பு பஞ்சம் தலைவிரித்தாடும்.எந்த நல்லவர் வல்லவர் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கும் நாட்டுக்கும் எந்த நன்மையும் செய்ய முடியாது. இரண்டு குழந்தைகள் தான் ஆக கூடியது என்ற கட்டுபாடு யாவருக்கும் அவசியம் என்று இப்போதே சட்டம் கொண்டுவரபட வேண்டும்.
//பின்பு பஞ்சம் தலைவிரித்தாடும்.எந்த நல்லவர் வல்லவர் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கும் நாட்டுக்கும் எந்த நன்மையும் செய்ய முடியாது. இரண்டு குழந்தைகள் தான் ஆக கூடியது என்ற கட்டுபாடு யாவருக்கும் அவசியம் என்று இப்போதே சட்டம் கொண்டுவரபட வேண்டும்.
ReplyDelete//
Right point at the exact time..... The people who show CHINA as an example never think about this... China ahs already implemented one child plan for 10 years now and it has achieved all the mile stones set also have overperformed on population reduction.. But INDIA has already missed most of the milestones..... Whomsoever comes INDIA cannot improve with out a change from the people of INDIA...
சார்வாகன் ,2001 க்கு முன்பும் மோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பொய் சொல்லியிருக்கிறார் உங்களது மாப்பிள்ளை .நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்காதது கண்டிக்க தக்கது
ReplyDelete1997 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு ராமன்பாய் என்பவரும் 1998 இல் கேசுபாய் படேலும் முதல்வராக இருந்தார்கள் .2001 இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வியுற்றதால் கேசுபாய் படேல் ராஜினாமா செய்யவைகப்பட்டு மோடி அத்வானியின் ஆதரவுடன் முதல்வராகுகிறார் .அதன் பின் 2002 சடட்டசபியா தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க அத்வானியின் ஆலோசனையில் வியுகம் வகுக்கப் படுகிறது .அதில் மோடியின் அற்புத கோத்ரா திட்டம் செயலாக்கம் பெறுகிறது
வணக்கம் சார்வாகன்,
ReplyDeleteஉங்கள் நிலைபாடு தவறானது என நிரூபிக்கிறேன். பரிசீலிப்பீர்களா? ஆம் என்றால் இதற்கு நான் எதிர்பதிவு இடுகிறேன். பரிசீலித்து நீங்கள் தொடரலாம்.
வணக்கம் சாருவாகன்,
ReplyDeleteஎதிர்ப்பதிவு இடப்பட்டிருக்கிறது, உங்கள் பார்வைக்கும் பங்களிப்புக்கும்