Wednesday, October 9, 2013

நிழலின் நீளம் அறிவோமா?



வணக்கம் நண்பர்களே,

அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை தொடர்ந்து பதிவுகள் படிக்கிறேன், இரசிக்கிறேன் ஆனால் பின்னூட்டமோ, அல்லது புதிய பதிவோ எழுத படு சோம்பல் ஆகி விட்டது.

இதன் காரணம் ஒத்த சிந்தனையோ அல்லது மாற்று சிந்தனை நண்பர்களும் பதிவு எழுதாததே எனவே நினைக்கிறேன். நாம் எப்போதும் கடைசி இருக்கை மாணவன்தான். கூட்டத்தில் கோவிந்தா போடுபவன்.அவர்கள் பதிவு எழுத நாம் ஆதரித்து விள்க்கப் பதிவோ[தொடர் வினை] இல்லை மறுப்பு பதிவோ[எதிர்வினை!] எழுத பதிவுகள் மள மளவென எகிறும்.


 மாற்றுக் கருத்து சகோக்கள் மீண்டும் தொடர்ந்து  பரிணாம எதிர்ப்பு பதிவு எழுத வேண்டி விரும்பி அழைக்கிறேன்.

சரி சகோ வவ்வால் நிழல் பற்றி பதிவு படித்தவுடன் அதற்கு நாமும் கொஞ்சம் விளக்கம் சொல்லி பதிவு இட வேண்டும் என ஆவல் வந்துவிட்டது[ஹி ஹி தொடர் வினை!!!].

நிழல் என்றதும் நம்க்கு "நிழல் நிஜமாகிறது" மற்றும் நிழல்கள் படம் வேறு ஞாபகம்தான் வருகிறது. நல்ல படங்கள்தான் வருகிறது. ஸ்னேக் இன் தி மன்க்கிஸ் ஷேடோ என சண்டைப்படமும் ஞாபகம் வருகிறது. மூடர் கூடம் சென்ட்ராயன் போல் சண்டைப் படமும், _____ படம் மட்டும் ஆங்கிலத்தில் பார்த்த அது ஒரு நிலாக்காலம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

சரி வேறு என்ன ஞாபகம், வருகிறது என்றால் அடுத்து என்ன ஆன்மீகமதான்.[நாம் ஆத்திகம் கற்கும் நாத்திகர் என்பதால் இதை விட முடியாது ஹி ஹி!!].

சரி நமது தமிழ் ஏக இறைவன் சிவ பெருமானின் திருவடி நிழல் பற்றி தேவாரம் அழகாக கூறுவதைக் கேளுங்கள்!!

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

பொழிப்புரை :

இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

அப்புறம் இங்கே நீழல் என்கிறார்கள்,நாமோ நிழல் என்கிறோம். நெடில் எப்படி குறில் ஆனது? நம்க்கு தமிழ் பிடிக்கும் அள்வுக்கு அதில் ஞானம் இல்லை.

சிந்தித்து தமிழ் ஆய்வாளர்கள் இதற்கு தீர்வு அளியுங்கள். சிந்திக்க மாட்டீர்களா???
**
நாம் உண்மையான மத சார்பற்ற நாத்திகர் என்பதால் தமிழர்களின் இதர மதங்களிலும் ஒரு எ.கா பார்த்து விடுவோம்.

கிறித்துவம்

ங்கீதம் 63:7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.

சத்தம் போடாமல் களிகூர்ந்தால் நாமும் மகிழுவோம்!!
***
(நமக்கு மிகவும் பிடித்த ஏக இறை மார்க்கமான) இஸ்லாம் என்ன சொல்கிறது

13:15
.
 வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).

[ஸுஜூது, ஸஜ்தா=வழிபாடு]

எனது நிழல் நான் அறியாமல் செய்யும் வழிபாட்டுக்கு மறுமையில் கூலி[ ஹி ஹி அதுதான்!] கிட்டுமா என்பதை யாரேனும் சகோக்கள் விளக்கவும்!

ஒரு வழியா  வம்பு வளர்த்து விட்டாகி விட்டது சரி இனியாவது பதிவு எழுதுவோம்.

நிழல் என்றால் என்ன?                    
·                    ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒளிமறையுரு.

நன்றி தமிழ் விக்சினரி. அருமையான பொருள் ஒளிமறையுரு. தமிழ் அன்னை வாழ்க!!!

அதாவது

1.ஒளி(சூரியன்)

2. ஒளியை தடு[மறை]க்கும் பொருள்.

3. தளம் அல்லது தரை(பூமி)

இந்த மூன்றும் இருக்க வேண்டும்.

தரை என்பதை தோராயமாக சமதளமாக எண்ணிக் கொள்ளுதல் நிழல் கண்க்கீட்டை எளிது ஆக்கும். இந்த கண்க்கீடுகள் எந்த ஒளி,பொருள்,தளத்திற்கும் பொருந்தும் என்றாலும் நாம் சூரியன் , த்ரை ,ஏதேனும் பொருள் என்பதை மட்டும் கண்க்கில் எடுப்போம்.

ஏன் சம தரை தளத்தின் நிழலை பார்க்க முடிவது இல்லை?

த்ரையில் மீது நிழல் விழுகிறது. த்ரையின் அதாவது பூமியில் நிழல் பூமி தாண்டி விழுவதால் பார்க்க முடிவது இல்லை. சந்திரன்(சூரியன்) நிழல் விழுவதை கிரகணம் என்கிறோம்.

இதில் இருந்து நீழல் அமைய மேலெ சொன்ன மூன்று விடயங்களும் அவசியம் என்பதை அறிய முடியும். சரி இப்போது சூரியம் , பூமி ,பூமி மீது உள்ள ஒரு பொருளின் நிழல் பற்றி மட்டுமே [இப்பதிவில் கன்னாபின்னாவென] சிந்திப்போம். 

இதனை அறிய இந்த படத்தினைப் பார்க்கவும்.

.

Sun altitude and shadow





L=h/tan(a),

h - சம தரையில் இருந்து பொருளின் செங்குத்து உயர‌ம்t,

a -
சூரிய ஒளித் தளம் தரையின் கிடைமட்ட இடைக்கோணம்.





சூரிய ஒளிக்கதிக்கள் இணைகோடுகளாக பூமியை நோக்கி வருகின்றன என்பது ஒரு நல்ல தோராய அணுகுமுறை ஆகும். இது சிறிய பூமியின் பகுதியை சமதளமாக எண்ணுவதும், சூரியன் வெகு தொலைவில் இருப்பதால் இது சரியான அணுகுமுறை ஆகும்.

சூரியன் கிழக்கே உதிக்கும் போது அதிக பட்ச நிழல்  நிழல் மேற்கே விழும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மதியம் 12 மணிக்கு நிழல் பொருளுக்கு அடியில் விழுவதால் பார்க்க  இயலாது.அப்போது கோணம் 90 டிகிரி என்பதால் ஆகவே நிழலின் உயரம் பூச்சியம் ஆகும். இதில் நீங்கள் பூமியில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது பொறுத்து குறைந்த பட்ச கோணத்தின் அள்வு மாறும். கோணம் பூச்சியம் ஆதல் நிலநடுக்கோட்டு பகுதிகள் அதிகம் சாத்தியம்.

அப்போது நிழல் இல்லை என என சொல்ல முடியாது. பொருளுக்கு கீழ் உள்ளது என்பதே உண்மை.அப்பொருளை செங்குத்து திசையில் சிறிது தூக்கி பார்த்தால் இது புரியும். ஆகவே பொருளின் எழுச்சி, மற்றும் வளர்ச்சி[ நன்றி தோழர் வினவு!], புவி ஆயத் தொலைகள் பொறுத்தே அதன் நிழலின் நீளமும் மாறுகிறது.

இந்த சூரியனின் நிலை,கோணம் புவி ஆயத்தொலைகள் பொறுத்து  கண்டறிதல் பற்றியே ஒரு பதிவு எழுத வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரை மேலதிக தகவல் விரும்பிகளுக்கு!!


பிறகு சூரியன் மறையும் வரை நிழல் நீளம் அதிகரித்து பிறகு மறையும்.


சரி எப்படி பிரமிட் அல்லது சில கட்டுமான அமைப்புகள் போன்றவை பல மணி நேரங்களுக்கு நிழல் [வெளியில்] விழுவது இல்லை என்றால் அற்றின் வடிவ அமைப்பு கீழ்க்கண்ட குணங்களைக் கொண்டு இருக்கும்.

1. அவை மேல் இருந்து கீழ் வரை குறுக்கு வெட்டு பரப்பு அதிகரிக்கும்.

2. சமச்சீராக மேலிருந்து கீழ் வெட்ட முடியும்.

பிரமிடுக்கு மட்டும் அல்ல கூம்பு அல்லது அரைக் கோளம் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.


[நான் தேடிய வரை] நிழலை முற்று முழுதும் தவிர்க்கும் வடிவ அமைப்பு இருக்க முடியாது. ஆனால் நிழலின் நீளம் மாற்ற வீதம் குறைவாக இருக்கும் பிரமிட்,அரைக் கோளம் போன்றவற்றை சொல்ல முடியும்.

இத்தளத்தில் நீங்கள் இருக்கும் ஊரின் புவி ஆயத்தொலைகள் அறிந்தால் ஒரு பொருளின் நிழல் நீளம் நேரம் பொறுத்து எப்படி மாறும் என்பதை அறிய முடியும்.

அறிந்த தகவல்களை பகிருங்கள்!!. கேள்வி கேளுங்கள் தொடர்ந்து விவாதிப்போம்.

நன்றி!!! 



24 comments:

  1. நிழலே என்பது நீழலே என நீண்டு வருவதால் இது நீட்டல் விகாரம் (செய்யுள் விகாரம்)

    ReplyDelete
    Replies
    1. தலை சீர் தொடை எல்லாம் யாரும் சிந்திப்பது இல்லையே..

      Delete
    2. நன்றி சகோ கலா குமரன்

      Delete
  2. நிழல் பற்றி விரிவான உங்கள் பதிவை படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோ ராஜி,
      விள்க்கமான பதிவிட்டது சகோ வவ்வால்தான்.
      அவருக்கே எல்லாப் புகழும்!!
      நமது நீட்சிப் பதிவு மட்டுமே
      நன்றி!!!

      Delete
  3. //நிழலை முற்று முழுதும் தவிர்க்கும் வடிவ அமைப்பு இருக்க முடியாது. //குண்டூசிக்கு கூட அதன் நிழல் அதன் மேலேயே விழ சாத்தியம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. குண்டூசியை தலை கீழாக வைத்தால் கூட அதன் மீது செங்குத்தாக ஒளி பட்டால் கூட கீழே நிழல் சிறிது தெரியும் என்றால் முடிவு செய்து கொள்ளுங்கள்.

      நன்றி சகோ

      Delete
  4. எந்த அறிவியல் பேசினாலும் நடுவே மத/மார்க்க சகோக்களை வம்பிழுக்கும் உங்கள் திறமையைக்கண்டு மெச்சினோம்.
    படம் ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்திலேயே வணக்கம் போட்டது மாதிரி ஆகிவிட்டது இந்தப்பதிவு.

    ReplyDelete
    Replies
    1. சகோ வானம்
      இது ட்ரய்லர்தான்,

      பாருங்க நையாண்டி ட்ரய்லருக்கே தொப்புள் வடிவில் எதிர்வினை வரவில்லையா?

      நம் சகோக்கள் நாடினால் முழுப் படமும் காட்டுவோம்!!

      நன்றி!!

      Delete
    2. சகோ வானம் அறிவியலை மத புத்தகத்தில் காட்டுவதே சரியான தாவா!!!

      Delete
  5. சகோ.சார்வாகன்,

    நல்லதொரு நீட்சி :-))

    நிழலின் இன்னொரு பரிமாணத்தை காட்டிவிட்டீர்கள்,நன்றி!

    மார்க்கப்பந்துக்கள் பந்து வீசினாத்தானே பேட்டிங் செய்ய முடியும்,தனியா எப்படி பேட்டிங்க் செய்யனு , விளையாட்டில் இருந்து சச்சின் போல "ஓய்வு" கொடுத்துட்டிங்களோ, கவலையே படாதீங்க ,மோடி ஜீரம் புடிச்சு எல்லாம் புத்துல இருந்து வர நேரம் தான் , இனிமே வினை மற்றும் எதிர்வினைகளுக்கு பஞ்சமே இருக்காது அவ்வ்!

    # நிழலை நீழலே என இழுப்பதால் சீர் பிரிக்கும் போது சரியா வரும், ஒரு வரிக்கு ஆறு சீர் விருத்தம், எட்டு சீர் தாண்டகம்னு தான் திருநாவுக்க்ரசர் தேவாரம் பாடினார், எனவே நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமாவுக்கு என இழுத்துபுட்டார்னு நினைக்கிறேன் :-))

    இந்தப்பாட்டு சுண்ணாம்ப்புக்காலவாயில் வச்சு சுட்டப்போ ,இப்படி குளு குளுனு இருந்துச்சுனு பாடியதாம், அதுக்கு காரணம் ஏக இறைவனின் காலடி நிழலாம் :-))

    இதுல "இணையடி" என சொல்லி இருப்பதன் மூலம் ஒரு டக்கு வச்சிருக்கார் திருநாவுக்கரசர், வழக்கமா சிவன் ஒரு காலை தூக்கி வச்சி ஆடிக்கிட்டே இருப்பார், ஹி...ஹி அதனால தான் குஞ்சித பாதம் என்பார்கள், குஞ்சிதம் என்றால் தூக்கி வளைந்த நிலையில் இருப்பது, வேற கற்பனை வேண்டாம் :-))

    உட்கார்ந்த போசில் கூட கால் மேல கால் போட்ட மாதிரி தான் காட்சியளிப்பார், தனது அன்பு தொண்டருக்காக இரண்டு காலையும் நீட்டி இழல் கொடுத்திருக்காராம் , என்னமா திங்க் பண்ணுராங்க :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வவ்வால்,

      //மோடி ஜீரம் புடிச்சு எல்லாம் புத்துல இருந்து வர நேரம் தான் , இனிமே வினை மற்றும் எதிர்வினைகளுக்கு பஞ்சமே இருக்காது அவ்வ்!//

      மார்க்க பந்துக்கள் இல்லாமல் தமிழ்மணமே போரடிக்கிறது.

      இந்த மோடியினால் சக்தி ,எழுச்சி,வளர்ச்சி வருகிறது என்றார்கள், நம் சகோக்களுக்கு ஒன்றுமே வரவில்லையே!!இருந்த எழுச்சியும் போய் விட்டதே!!
      **
      /உட்கார்ந்த போசில் கூட கால் மேல கால் போட்ட மாதிரி தான் காட்சியளிப்பார், தனது அன்பு தொண்டருக்காக இரண்டு காலையும் நீட்டி இழல் கொடுத்திருக்காராம் , என்னமா திங்க் பண்ணுராங்க :-))/

      அந்தக் காலத்தில் யாரோ எதையோ சிலை வடிக்க அதற்கு விள்க்கம் சொல்லியே அடியார்கள் வளர்கிறார்.ம்ம்ம்ம்ம்ம்ம்

      இறைவனின் ஆடல்,பாடல் கண்டு அவன் லீலைகளை போற்றிப் புகழ்வதுதானே அடியார்க்கு அழகு!!!

      நன்றி!!!

      Delete
  6. வணக்கம்சார்.. நிழலைநிஜமாக்கிவிட்டிர்கள் கூடவே தாவா கொஞ்சம் அல்ஹம்துலில்லாஹ் ஹி ஹீஹி....?

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ சாதிக்

      ஜசக்கல்லா ஹைர்.
      நாம் என்ன ஏக இறைவன் ஆட்டுவித்தால், அவன் பணி செய்யும் அடியான். அவ்வளவுதான்.ஏதோ நம்மால் முடிந்த தாவா!!!

      நிழலின் சஜ்தாவோடு ,நம் தாவாவும் சேர்ந்தால் கிடைக்கும் பலன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      ஏக இறைவன் வழங்கிய குரான் ஹதித் நிழலில் அனைத்துக்கும் விடை தேடுகிறோம். அளிக்கிறோம்.

      நம் சகோ இப்பூ சீக்கிரம் வர துவா செய்யுங்கள்!!!

      நன்றி!!!

      Delete
  7. மாமு என்ன மேட்டர் இந்த பதிவு?

    ReplyDelete
    Replies
    1. யோவ் மாப்ளே,
      பதிவில் என்ன தப்பு கண்டுபிடிக்கலாம்,உள்குத்து இருக்கா என யோசனையிலேயே படிக்க கூடாது.பதிவை ஆராய்ச்சி பண்ணக் கூடாது அனுபவிக்கனும்.[நன்றி கமல்ஹாசன்]

      சரி அம்பீ, விளக்கறேன்.

      நிழல் விழாத வடிவமைப்பு பற்றி வவ்வால் ஒரு பதிவு இட்டார். அது குறித்து நாம் அறிந்த தகவல் பகிர்ந்தோம்.

      இடையே நிழல் பற்றி கொஞ்சம் பழைய நினைவு, ஆன்மீகம் கலந்து காக்டெயில் ஆக கொடுத்தோம்.

      நீர் கோயில் தீர்த்தம் தவிர எதுவும் குடிக்க மாட்டீர் அல்லவா.ஆகவே காக்டெயில் ஒத்துக் கொள்ள வில்லை.

      சகலமும் கிருஷ்னார்ப்பணம்.

      நன்றி!!!

      Delete
  8. //நிழலை முற்று முழுதும் தவிர்க்கும் வடிவ அமைப்பு இருக்க முடியாது.//

    நிழலை முற்றிலும் தவிர்க்கும் 50 மாடி skyscraper பாரிஸ் நகரில் 2007-ல் கட்டப்பட்டு உள்ளது. முக்கோண வடிவில் சுறாவின் துடுப்பு போன்ற வடிவில் உள்ளது இக்கட்டிடம். சூரியன் நகரும் திசையை (altitude& azimuth) பயன்படுத்தி கட்டிட திசை(கட்டிடம் தகடு போன்றது என்பதினை நினைவில் கொள்ளவும்) கணனி மூலம் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இதற்கும் நிழல் உண்டு, ஆனால் பக்கத்து கட்டிடம் அல்லது தெருவில் விழாமல் அக்கட்டிடத்தின் மீதே விழும். இது சூரியன் ஓளி தேவை உள்ள பாரிஸ் நகரின் நலன் கருதி வடிவமைக்கப்பட்டதாம். இதனை 2008 ன் சிறந்த 50 இன்னோவேசன்களில் ஒன்னு என டைம் பத்திரிக்கை தேர்தெடுத்தது.

    இதுதான் இப்படி கட்டப்பட்ட முதற்கட்டிடம் இதுவா எனில் இல்லை. சுலபமான ஜியோமிதி கணக்கீடுகள் மூலம் இப்படியான கட்டிடங்கள், குறிப்பாக சூரிய தேவை உள்ள குளிர் நாடுகளில் கட்டப்பட்டுள்ளன. நீயூயார்க் நகரில் 1931-ல் கட்டப்பட்ட மாடிஸன் அவின்யூ டவர் ஒரு உதாரணம்.

    ---------------------

    மாசில் வீணையும் பாடல் ஐம்புலனுக்கும் இன்பம் தருவதாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சொன்னதாக அநாநியான ஒரு தமிழன்பர் இப்பதிவின் எழுதியிருக்கிறார் பாருங்கள் http://365paa.wordpress.com/2012/04/04/273/.

    இப்படி பழந்தமிழ் பாடல்களின் உள்குத்தை தமிழறிஞர் கண்டு சொல்லுவதை படிப்பதே இன்பம்தான். ஆனால் சில சமயம் பாட்டை எழுதியவருக்கே தெரியாததெல்லாம் பாட்டில் இருப்பதாக கண்டு சொல்லுவார்கள்! ;)

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,

      த்கவல்களுக்கு நன்றி. சகோ வவ்வாலின் பதிவில் படித்தீர்கள் என்றால் அவரின் பிரமிட் கூட காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நிழல் வெளியே விழவில்லை. இபோது சூரியன் 9 மணிக்கு உதயம் ஆகி,3 மணிக்கு மறைகிறது என்றால் அவ்ரின் அமைப்பும் நிழல் விழா அமைப்புதான்.

      நான் சொல்ல வந்தது, வடிவ அமைப்பு மட்டும் சார்ந்து,அப்பொருளை சூரியன் ஒரு அரை வட்டம் போல் சுற்றி வரும் எனில்( பூமிதான் சுற்றுகிறது எளிதாக் புரிய சூரியன் நகர்வது போல் எடுப்போம்) நிச்சயம் நிழல் விழும் வாய்ப்பே அதிகம்.

      நீங்கள் சொன்ன கட்டிடம் பற்றி அதிக தகவல்கள் இல்லை.
      http://www.csmonitor.com/Innovation/Horizons/2008/1006/pariss-pyramid-project-casts-no-shadow

      Beyond its aesthetic presence, the two-faced tower has a bit of a gimmick. The architects claim that through carefully design and positioning, the skyscraper "does not cast shadows on adjacent buildings."

      Parisians' reactions to this proposed landmark are mixed -- much as they were with the glass pyramid in front of the Louvre when it first went up.

      கட்டிடம் கட்டிய வல்லுனர் கூறினார் என மட்டுமே தகவல். அந்த இடத்தில்[ஜி.பி.எஸ் ஆய தொலைவுகள்) சூரிய உதயம், நகர்வு,மறைவு பற்றிய கோணம்,நேரம் பற்றி த்கவல் இருப்பின் பதிவில் சொன்ன சுட்டியில் விவரம் இட்டு சரி பார்க்கலாம்.

      அதவாது நிழலின் நீளம் , கட்டிய அடிப்ப்குதியின் அளவுக்குள் உதயம் முதல் மறைவு வரை வந்தால் போதும்.

      ஆனால் விவரம் கிட்டாது என நினைக்கிறேன்.


      எனினும் நிழல் வீழாது என்றல் அது கட்டிட அமைப்பு மட்டும் அல்ல, இடத்தின் சூரிய உதயம், மறைவு, ஒளி நகர்வு சார்ந்தும் இருக்கும் என்பதே நம் கணிப்பு.

      அதே கட்டிடம் பூமியில் எங்கு இருந்தாலும் நிழல் விழாது என சொல்ல முடியாது எனவே கூறுகிறேன்.

      அதுவும் அக்க்ட்டிட சுவ‌ர்களில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தி இருப்பதன் விளைவு பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும்.

      நன்றி!!

      Delete
    2. நந்தவனம்,

      சூரியன் குறைவான கோணத்தில் இருக்கும் சூழலில்(உதயம்&அஸ்தமனம்) எதுவும் நிழலில் இருந்து தப்பாது.
      அப்படி தப்ப வேண்டும் எனில் அகன்ற கோணம் (சுமார் 120 டிகிரி கோணம் கொண்ட வளைவு)கொண்ட ஒரு ஹைப்பர் போல் வளைவாக அமைப்பு இருக்க வேண்டும் உ.ம்: டிடிஎச் டிஷ் ஆன்டனா போல.

      சுட்டியில பார்த்தேன் கட்டிடம் நல்ல உயரமாத்தான் இருக்கு, அடிப்பரப்பும் அவ்ளோ அகலமில்லை, ஒரு வேளை அதன் சுற்றுப்புறம்ங்களில் அந்த டவரை விட உயரமான கட்டிடங்கள் இருந்து, சூரியனை மறைக்கலாம், இல்லை எனில் ஒளி ஊடுருவும் வகையில் அமைத்திருக்கலாம்.

      மாவு சலிக்கிற சல்லடை வழியாக ஒளியை செலுத்தினால் ,அதற்கு அருகிலேயே நிழலை பிடிச்சால் தான் நிழலில் சல்லடையின் இழைகள் தெரியும், தள்ளி நிழல் விழ வைத்தால் நிழலே விழாது, காரணம் ஒளியின் விளிப்பு வளைதல் ,அதே போல ஒளியின் விளிம்பு வளைவு எல்லையின் அளவில் கட்டிடம் மெல்லீசாவா இருக்கு?

      எளிமையான உதாரணம் கார் ஹெட் லைட்டில் வைக்கப்படும் கருப்பு பொட்டு, தொலைவு கூடி ஒளி விழும் போது கருப்பு பொட்டின் நிழல் தெரியாது..

      மிக உயரத்தில் விமானம் பறக்கும் போது பூமியில் நிழல் விழாது, காரணம் நிழல் விழும் தளத்துக்கும், பொருளுக்கும் (விமானத்துக்கும்) உள்ள தொலைவு கூடுதல், ஒளி மூலம்(சூரியன்) பெரிது.

      எனவே தரையில் கட்டும் உயரமான அமைப்புக்கு முழுக்க நிழலை தவிர்க்க இயலாது என்பது எனது கருத்து.

      Delete
    3. @ வவ்வால் & சகோ சார்வா

      இந்த கட்டிடத்தை கட்டும் ஆசாமிகளான Herzog and de Meuron புகழ் பெற்ற ஆர்கிடெக்டுகள், பல புகழ்பெற்ற கட்டிடங்களை வடிவமைத்தவர்கள். உதாரணமாக பெய்ஜிங் ஒலிம்பிக் மைதானம் இவர்களால் வடிவமைக்கப்பட்டதாம். ஆகவே இவர்கள் சும்மா கதை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் டைம் பத்திரிக்கை போன்ற நம்பகத்தன்மை மிகு பத்திரிக்கைகள் முக்கியத்துவம் தருகின்றன என நினைக்கிறேன்.

      நம்ம சகோ யூகித்தது போல கட்டத்தில் உள்ள கண்ணாடிகள் சூரிய ஒளியை நிழல் விழாமல் செய்ய உதவ இருக்கின்றன. வவ்வால் சொல்லுவது போல நிழல் விழாமல் செய்வது மிகவும் கடினமானது, சாத்தியமற்றதாக தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அந்த மாஜிக்கை எப்படி செய்வார்கள் என கட்டிடம் முழுவதும் முடிந்த பிறகு தெரிந்துவிடும் அல்லது அவர்கள் சாயம் வெளுத்துவிடும்.

      பாரிஸ் நகரில் சூரிய ஒளியை கட்டிடங்கள் மறைக்க கூடாது என 37 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை. ஆனால் இக்கட்டிடம் சூரிய ஒளியை மறைக்காது நிழலை வீழ்த்தாது என்பதற்காகவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள 40 மாடி கட்டிடம் (10 மாடிகள் குறைத்துவிட்டார்களாம்)- 180 மீட்டர்கள். பூர்த்தியான பிறகு பாரிஸின் 3 உயரமான கட்டிடமாக இருக்கும், ஈபிள் டவருக்கும் மான்ட்பாரினாஸ் டவருக்கும் பொறவு.

      இதில் இன்னொரு விடயம் இது நிழலை வீழ்த்தாது அதே நேரத்தில் அதிகபட்ச சூரிய ஒளியை அறுவடை செய்யும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். சூரிய மற்றும் காற்று சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி மூலம் முடிந்த அளவு சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுமாம். ஆகவே இதை பற்றி உண்மையை அறிய ஆர்வமாகத்தான் இருக்கிறது. இது 2014-ல் முடிக்கப்பட வேண்டியது. ஆனால் அரசின் சிகப்புநாடாத்தனம் காரணமாக 2017 ஆகிவிடும் என்கிறார்கள்.


      Projet Triangle Paris - Building Information

      - 92,500 sqm SHON
      - 88,400 sqm SHON for the office part
      - 2,600 sqm public areas (a big atrium on Porte de Versailles square, a panoramic restaurant ont the last floor)
      - 1,500 sqm of retailers on the ground floor
      - parking

      Size of the Projet Triangle tower
      - height: 180 m
      - length on the ground floor (Ernest Renan avenue): 150 m
      - width on the ground floor: 35 m
      - width on the top: 16 m
      - total cost: around 500 M€

      http://vimeo.com/45183206

      நிழல் விழாமல் செய்வதின் முக்கியத்துவமே இவ்வாறான பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்தான் பயன்படும். சும்மா பெரிய கோவில் கோபுரம் தரையில் விழுவதும் விழாததும் ஒரு சுவாரஸ்மான விடயமே அன்றி வேறில்லை.அமெரிக்க வானுயர கட்டிடங்களின் நிழல் சூரிய டயல் போல நகருமாறு வடிவமைக்கபட்டதாம். அதாவது நிழல் ஓரிடத்தில் அதிக நேரம் இருக்காமல் வட்டப்பாதையில் நகரும் வண்ணம் வடிவமைப்பு இருக்குமாம். மேலும் நான் குறிப்பிட்ட மாடிசன் டவரில் நிழல் கட்டிடத்தினுள் விழாமல் (building’s interiors “virtually shadowless") அதிக சூரிய ஒளியை உட்புறமாக திருப்பும் வண்ணம் வடிவமைக்கபட்டது. அதை தவறாக நிழலை தரையில் வீழ்த்தாது என ஒரு வெப்சைட்டில் குறிப்பிட்டதை 'நம்பி' முன்னர் எழுதிவிட்டேன், அழிச்சுடுங்க!

      Delete
    4. நந்தவனம்,

      அந்த கட்டிட நிறுவனம் புகழ்ப்பெற்றது தான்,நான் சொன்னதை கவனிக்கலையா, ஒளி ஊடுருவும் வகையில் ஆங்காங்கே கண்ணாடிகள் வைத்து விடலாம் என்பதையே குறிப்பிட வந்தேன்,சோலார் பேனல்கள் அமைப்பதால் நிழல் விழுவது தடுக்கப்படாது, ஆனால் சோலார் பேனல்கள் இடையே கண்ணாடிகள் வைத்தால் அதிக வித்தியாசம் தெரியாது.

      முழுக்க சோலார் பேனல்களால் போர்த்தி கட்டிடம் கட்டினால் நல்லாவே நிழல் விழும்!

      முழுக்க ஒளிஊடுருவா திடப்பொருளால் கட்டினால் தான் நிழல் பற்றிலாம் கணக்கில் எடுத்து சொல்லலாம்,கண்ணாடி மற்றும் சோலார் பேனல்களை வைத்து நிழலை சமன் செய்வது "வித்தை" மட்டுமே :-))

      அமெரிக்க வானுயர் கட்டிடங்களில் எல்லாம் மிக அதிக கண்ணாடி பரப்பு இருக்க காரணம் சூரிய ஒளியை வைத்தே உள்ளே அதிக வெளிச்சம் மட்டும் சூடு உருவாக்க.

      மேலும் அக்கண்ணாடிகள் இரட்டை தகடுகளாக இருக்கும் இடையே அரிதிற்கடத்தி வாயு நிறப்பி இருக்கும், மேலும் கண்ணாடியின் வெப்பத்தினை கட்டிட சூடாக்கும் அமைப்புடன் இணைத்து வைத்து பகல் நேர வெப்பத்தினை கடத்தி சேமித்து இரவில் கட்டிடத்தினை சூடாக வைத்திருக்கும் படி கட்டியிருக்கிறார்கள்.

      பகலில் வெளியில் இருந்து அதிக வெளிச்சம் உள்ளே போகும்,ஆனால் வெப்பம் உள்ளே போகாது ,இரவில் உள்ளே இருக்கும் வெப்பம் வெளியே வராது, அப்படி ஒரு இன்சுலேஷன் தன்மை, மற்றும் அமைப்புடன் கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளாதாம்.

      இந்த டெக்னாலஜி எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டும் போதே பயன்ப்படுத்திவிட்டார்கள்னு டிஸ்கவரில விரிவா காட்டினான் ,நிகழ்ச்சி பேரு "மெகா ஸ்ட்ரக்சர்"னு (சகிலா,நமிதா எல்லாம் நினைச்சுக்கப்படாது அவ்வ்)நினைக்கிறேன்.,நான் எங்கே அத எல்லாம் பாக்க, சும்மா தொ.கா பார்த்து தெரிஞ்சுக்கிட்டு ஜல்லியடிக்க வேண்டியது தான், " யு க்னோ ஐ,அம் நாட் அன் எக்ஸ்பெர்ட்" :-))

      அதிக கண்ணாடிகள் கொண்டிருந்தால் அக்கட்டிடத்தின் interiors “virtually shadowless" ஆக அமைந்து விடும்.

      பாரிஸ் கட்டிடத்தில் அதிக அளவு ஒளி ஊடுருவும் கண்ணாடிகளால் தான் அமைக்க போறாங்க போல,குறிப்பா அதன் டாப் ஃப்ளோர் கண்ணாடியால் அமைத்து விடுவார்கள் என நினைக்கிறேன்,எனவே அதனை நிழல் விழாக்கட்டிடம் என சொல்வதில் பெருசா சிறப்பு இல்லைனு தான் சொல்லனும்.

      Delete
    5. @ வவ்வால்

      //ஒளிஊடுருவா திடப்பொருளால் கட்டினால் தான் நிழல் பற்றிலாம் கணக்கில் எடுத்து சொல்லலாம்,கண்ணாடி மற்றும் சோலார் பேனல்களை வைத்து நிழலை சமன் செய்வது "வித்தை" மட்டுமே :-))//

      அந்த வித்தையை செய்வது சுலமல்லவே. ஜாமென்ரி மற்றும் ஒளியியலின் ஒருங்கினைந்த கணக்கீடுகள் மூலம் 180 மீ உயரமான 18-35 மீ அகலமான ஒரு கட்டிடத்தின் நிழலை முற்றும் தவிர்ப்பது சுலமான விடயமல்ல என நினைக்கிறேன். மேலும் சூரியனின் ஒளி கோணத்தில் விழுவதை கணக்கின் எடுத்தால் 40 மாடி கட்டிடத்தில் ஒளி கடக்கும் தூரம் மேலும் கூடும் அல்லவா

      //ஆனால் சோலார் பேனல்கள் இடையே கண்ணாடிகள் வைத்தால் அதிக வித்தியாசம் தெரியாது....அதிக அளவு ஒளி ஊடுருவும் கண்ணாடிகளால் தான் அமைக்க போறாங்க போல,குறிப்பா அதன் டாப் ஃப்ளோர் கண்ணாடியால் அமைத்து விடுவார்கள் என நினைக்கிறேன்//

      இடையில் கண்ணாடி அமைத்தாலும் நிழலின் shadeயை குறைக்க முடியுமே தவிர முற்றிலும் தவிர்க்க இயலாதே? மேலும் டாப் தளத்தை கண்ணாடியால் அமைத்து என்ன புண்ணியம்? மீதமுள்ள தளங்களின் நிழல் விழுகுமல்லவா? மேலும் சூரிய ஒளி சரிவு கோணத்தில் விழுவதால் தளத்தின் தரையை கண்ணாடியால் அமைக்க முடியாதே! (யாராவது ஜட்டி போடாமல் வந்தால் ரசாபாசமாகிவிடாது?)

      அவர்கள் நிழலின் அடர்த்தியை சற்றே குறைத்தால் அதில் மிகுந்த ஆச்சர்யம் இல்லைதான். ஆனால், கண்ணாடிகளை வைத்தும் பிற ஒளியியல் அமைப்பு, கட்டிடத்தின் இருப்பிடம், அமைப்பு இவற்றை கொண்டு முற்றிலும் நிழலை தவிர்த்து >90% ஒளியை கடத்தினாலே பெரிய விடயம் என கருதுகிறேன். இதை அடைவே அவர்கள் கணனி மூலம் கடுமையான கணக்கீடுகள் போட வேண்டியிருக்கும். ஏனெனில் கட்டடத்தின் கீழ்பகுதி பிரமீடு போல பெரியது அல்ல. சூரியனின் சுற்றுப்பாதை, உதயம் மறைவு இவற்றை கணித்து குறைந்த பட்சநிழல் விழுமாறு கட்டிட அமைப்பு இருக்க வேண்டும். அந்த குறைந்த பட்ச நிழலை அகற்ற கண்ணாடிகளை சரியாக நிழல் விழும் இடத்தில் பிரதிபலிக்கும் கோணத்தில் அமைக்கனும், இந்த கணக்கீடு ஆண்டு முழுவதற்குமாக செய்யபட வேண்டும். இது சாத்தியமில்லாவிடில் அல்லது கூடுதல் ஒளிக்காக கண்ணாடி பொறுத்த வேண்டும். அக்கண்ணாடி வழியாக ஊடுவும் ஒளி >18 மீட்டர் தொலைவு சரியான கோணத்தில் பயணித்து இலக்கை அடைய வேறு தடை இல்லாது இருக்க வேண்டும். கட்டிடத்தை கண்ணாடி கொண்டு முற்றிலும் நிரப்பாமல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். இதெல்லாம் 40 மாடி கட்டிடத்தில் செய்வது கடினம் என எனது சிற்றறிவுக்கு தோன்றுகிறது. இது உலகை புரட்டிப்போடும் விடயமல்ல, உண்மை. ஆனால் செய்யப்பட்டால் நல்ல இன்னோவேசன் என கருதலாம் என நினைக்கிறேன். ஆனால் உங்களுக்கு வேறுவிதமாய் தோணுது.

      0-------------------------------

      //அமெரிக்க வானுயர் கட்டிடங்களில் எல்லாம் மிக அதிக கண்ணாடி பரப்பு இருக்க காரணம் சூரிய ஒளியை வைத்தே உள்ளே அதிக வெளிச்சம் மட்டும் சூடு உருவாக்க.//

      வானுயர கட்டடம் மட்டுமல்லாது எல்லா கட்டிடங்களிலும் பெரிய சைஸ் கண்ணாடி வின்டோக்கள் பொறுத்தி வெப்பத்தை அனுமதிப்பார்கள்- வட பகுதிகளில். வீடுகளுக்கு இந்த இரட்டை தகடு ஜன்னல்கள் கிடைக்குது. எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் இரட்டை தள சன்னல்களை (>6000), மேலும் வெப்பத்தை சேமிக்க 2010-ல் ரினோவேசன் செய்தார்கள். சன்னல்களை பெயர்த்தெடுத்து, இடையே ஒரு வெப்பத்தை உள்ளே அனுமதிக்கும் ஆனால் வெளியே விடாமல் பிரதிபலிக்கும் பிலிம் வைத்து,- inert கேஸ் நிரப்பி மாட்டினார்கள். இரட்டைதள சன்னல் பழசு ஆனால் இந்த நவீன கோட்டிங்கை கண்ணாடி தளத்திற்கு இடையே அடிப்பது புதிது.

      சம்மர் முடிஞ்சு இலையுதிர் காலம் தொடங்கிவிட்டது.விரைவில் குளிர்காலம் வந்துடும். இரட்டைதள சன்னல், கேஸ் & கோட்டிங்கிற்கு எங்கு போவது? ஹார்டுவேர் கடையில் இன்சுலேசன் கிட் என பிளாஸ்டிக் பேப்பர் விற்பார்கள். வாங்கி டேப் போட்டு ஒட்டிவிட வேண்டியதுதான். இன்னர்ட் கேசுக்கு பதிலா காத்து! ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை! பின்பு சம்மரில் இதோடு இருக்க முடியாது- சூடு- பிய்த்து எரிந்து விட்டு மறுபடி அடுத்த வருடம் ஒட்டுவோம். Life is a Circle!

      Delete
  9. எதுக்கு இவ்வ்வ்ளோ..பெரிய பதிவு சகோ.மூமின்களின் அல்லாஹ் நாடினால் நிழல் விழும் நாடாவிட்டால் விழாதுன்னு ஒத்த வரியில் சொல்லிட்டு போகலாம்ல.... நிழலின் நீட்சி அருமை நன்றி சகோ....

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete