வணக்கம் நண்பர்களே,
நமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய இந்து தத்துவஞான
சிந்த்னையாளரும், பிரபல எழுத்தாளரும் ஆன சகோதரர் ஜெயமோகன் இந்து தமிழ் நாளிதழில் தமிழ் எழுத்தினை
ஆங்கில எழுத்துருவில் எழுதினால் நல்லது என எழுதியதும், அது பல எதிர்வினைகளை தமிழ் பதிவுலகு
உள்ளிட்டு தமிழ் உலகில் ஏற்படுத்தியது என்பதை அறிவோம்.
ஒரு மொழியின் எழுத்துரு என்பது அதன் உடல் போன்றது. எழுத்துருக்கள்
சார்ந்து ஒரு மொழி பல பிரிவாகியுள்ளதும் வரலாறு. கிரந்த எழுத்துருவில் எழுதப் பட்ட
மலையாளம், கன்னடம்,
தெலுங்கு போன்றவை தனித்த
மொழிகளாயின என்பது நாம் அறிந்த எடுத்துக் காட்டு ஆகும்.
தமிழ் கிரந்த எழுத்துருவில் இந்தியாவின் பெரும்பான்மை
மொழிகளை எழுத முடியும் என்றாலும், பல சமய நூல்கள் தமிழ் கிரந்தத்தில் இருந்தாலும் யாரும் தமிழ்
கிரந்தத்தில் எழுத முன் வருவது இல்லை.
வேதங்கள் கூட பின் தோன்றிய தேவ நாகரி எழுத்துருவில் மட்டுமே
எழுதப் படுகின்றன.
இதில் நாம் சொல்வது ஒரே எழுத்துரு பல மொழிகளை சரியாக எழுத
முடியும் என்றாலும் கூட அது ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை என்பதுதான்.இதற்கு மொழிப்
பற்று,அரசியல்
உள்ளிட்டு பல காரணங்கள் உண்டு.
இப்போது ஆங்கிலத்தில் ஏன் சரியாக தமிழை எழுத முடியாதது ஏன் என்பதை விள்ங்குவோம்.
தமிழில் 12 உயிர் எழுத்து, 18 மெய் எழுத்துகள் உண்டு. இவை இணைந்து
12*18=216 உயிர்
மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.
ஆங்கிலத்தில் 5 உயிர் எழுத்துகளும்,21 மெய் எழுத்துகளும் உண்டு. இவற்றின் ஒப்பீட்டை கீழே உள்ள ஒப்பீடு
விளக்குகிறது.
தமிழ்
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
ஆங்கிலம்
|
|
உயிர் எழுத்து
|
உயிர் எழுத்து
|
மெய் எழுத்து
|
மெய்
எழுத்து
|
|
1
|
அ
|
a
|
க்
|
k
|
2
|
ஆ
|
ā
|
ங்
|
ṅ
|
3
|
இ
|
i
|
ச்
|
c
|
4
|
ஈ
|
ī
|
ஞ்
|
ñ
|
5
|
உ
|
u
|
ட்
|
ṭ
|
6
|
ஊ
|
ū
|
ண்
|
ṇ
|
7
|
எ
|
e
|
த்
|
t
|
8
|
ஏ
|
ē
|
ந்
|
n
|
9
|
ஐ
|
ai
|
ப்
|
p
|
10
|
ஒ
|
o
|
ம்
|
m
|
11
|
ஓ
|
ō
|
ய்
|
y
|
12
|
ஔ
|
au
|
ர்
|
r
|
13
|
ல்
|
l
|
||
14
|
வ்
|
v
|
||
15
|
ழ்
|
|||
16
|
ள்
|
|||
17
|
ற்
|
|||
18
|
ன்
|
|||
12
|
7
|
18
|
10
|
தமிழ் உயிர் எழுத்துகளில் 7 ம், உயிரெழுத்துகளில் 10 மட்டுமே குழப்பம் இல்லாமல்
ஆங்கில எழுத்துகளில் குறிக்க முடியும்(saffron color). ஆகவே ஒருவேளை ஆங்கில எழுத்துருவில் எழுத வேண்டும்
என்றால் இன்னும் புதிய எழுத்துருக்கள்(blue color) தேவை.
இந்த எழுத்துருக்கள் தமிழர் அல்லாதோர் தெரிந்து கொண்டிருக்க
மாட்டார்கள் என்னும் போது இந்த முயற்சி தேவையற்றது ஆகிறது.
ஆகவே திரு ஜெயமோகனின் கருத்தான தமிழை ஆங்கிலம் அறிந்த
எவரும் எளிதில் படிக்க ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்னும் கருத்தும் தவறாகிறது.
சரி தமிழ் வேறு எழுத்துருவில் எழுதப் பட்டு இருக்கிறதா
என கொஞ்சம் தேடியதில். தமிழ் மலையாளம் அரபியில் சில நூற்றாண்டுகளாக எழுதப் பட்டதும்,பிறகு அது வழக்கொழிந்து போனதும்
அறிய முடிந்தது.
இதன் காரணம் என்ன ?
அரபியில் 28 எழுத்துகள்
மட்டுமே உண்டு. அரபி எழுத்துருவில் எழுதப்படும், உருது, பெர்சிய மொழிகளுக்கு கூட இன்னும் எழுத்துகள் சேர்த்தே பயன் படுத்துகின்றனர்.
அதே போல் தமிழை,மலையாளத்தில் அரபி எழுத்துருவில் எழுத சில எழுத்துகள் சேர்க்கப்பட்டன.
இதனை பிற அரபி எழுத்துரு பயன்பாட்டாளர்கள் அறிந்து பயன்படுத்தாமையால்
மட்டுமே வழக்கு அழிந்து போனது.
அரபியில் எழுதப் பட்ட தமிழ் அரவி எனப்பட்டது. விக்கி பாருங்கள்.
அரபியில் எழுதப் பட்ட மலையாளம் அரபி மலையாளம் எனப்பட்டது.
விக்கி பாருங்கள்.
ஆகவே முடிவாக என்ன சொல்கிறோம்?
1. ஐரோப்பிய,மத்திய கிழக்கு எழுத்துருக்கள் இந்திய
மொழிகளில் உள்ள ஒலி அமைப்புக்களுக்கு ஏற்றது அல்ல.ஒருவேளை புதிய எழுத்துகள் உருவாக்கினால்
அது அனைவருக்கும் பலன் அளிக்காது.
2. ஒரு எழுத்துரு சில மொழிகளுக்கு பொருந்தினாலும்
கூட சமூக,அரசியல்
காரணங்களுக்காக ஏற்கப் படுவது இல்லை. கன்னடம் ,தெலுங்கு மொழி எழுத்துருக்கள் மிக
மிக ஒத்த எழுத்துரு என்றாலும் கூட ஒன்றுபட முடியவில்லை.
3.இந்திய மொழிகள் அனைத்தையும் தமிழ் கிரந்தத்தில் எழுதினால்
தமிழர்கள் அனைத்து இந்திய மொழிகளையும் எளிதில் கற்க ஏதுவாக இருக்கும் என்பதால் அனைத்து இந்திய மொழிகளையும் தமிழ் கிரந்தத்தில் எழுத நாம்
பரிந்துரை செய்கிறோம்.
பின் குறிப்பு
ஏன் தமிழ் கிரந்தம் என பதிவில்சொல்கிறோம் என்றால் சிலர்
தமிழில் 4 க
,4 த இல்லையே
என கதை சொல்வதை தவிர்க்க மட்டுமே!!
நன்றி!!!!
சார்வாகன் ,
ReplyDeleteசிறிய ஆனால் நல்ல பதிவு .
அவரு ஒரு வேல நம்ம மொழிய ஒலக முழுசா பரவ வழி சொல்றாரோ என்னவோ?
அப்புறம் அரபு எழுத்துருல எழுதுனாங்களா ? எனக்கு புது தகவல் .
நம்ம மொழிய எல்லாரும் ஒலக அளவுல பரப்ப முயற்சி எடுக்குறாங்க போல ...
நன்றி
சகோ செல்வா நல்மா?
Deleteஇப்பதிவில் சொல்லியது குறைவு. சொல்லாமல் சொல்லிய சான்று பலப்பல.
"இதில் சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன"
எப்பொழுதெல்லாம் அரசு மாறுகிறதோ அப்போது மட்டுமே எழுத்துரு மாறி மொழிகள் பிரிந்த்ன.
தமிழகம், கேரளம் தவிர பெரும்பான்மை மாநில மூமின் சகோக்கள் உருது பேசுகின்றனர். ஏன் தமிழகம் கேரளம் மூமின் அரசர்களால் மிக குறைந்த காலமே ஆளப்பட்டன.தமிழகத்தில் மொழி மாற்றத்தின் முதல் படி எழுத்துரு மாற்றம்.
தமிழ் கிரந்தத்தில் எழுதிய மணிப்பிரவாளம், உருமாறி,வடமொழி கலந்து மலையாளம் ஆனது. இந்த சுட்டி பாருங்கள் இன்னும் புரியும்!!!
http://en.wikipedia.org/wiki/Grantha_alphabet
நன்றி!!!
//ஏன் தமிழ் கிரந்தம் என பதிவில்சொல்கிறோம் என்றால் சிலர் தமிழில் 4 க ,4 த இல்லையே என கதை சொல்வதை தவிர்க்க மட்டுமே!!//
ReplyDelete:)))
சகோ கு.பி,
Deleteநலமா?
தமிழில் உள்ள ஒலி வடிவங்களுக்கு,சொற்களுக்கு நம் எழுத்துரு போதுமானது ஆனாலும் சில மேதகு அறிஞர்கள் அப்பா டக்கர் மொழியின் டண்டனக்கா ஒலிக்கு தமிழில் எழுது என 10 ச, 12 க என விவாதம் செய்வதை தவிக்கவே முன் எச்சரிக்கை!!
எப்பூடீ!!!
நன்றி!!!
//தமிழ் கிரந்தத்தில் எழுதினால் தமிழர்கள் அனைத்து இந்திய மொழிகளையும் எளிதில் கற்க ஏதுவாக இருக்கும் என்பதால் அனைத்து இந்திய மொழிகளையும் தமிழ் கிரந்தத்தில் எழுத நாம் பரிந்துரை செய்கிறோம்.//
ReplyDeleteநல்ல காலம் வெறும் கிரந்தம்னு போடாம தமிழ் கிரந்தம்-ன்னு எழுதுனீங்க. இல்லை தமிழை கிரந்த மொழி எழுத்துருவுல எழுதுவதான்னு 4 பேர் பதிவு போட்டு உங்களை கும்மியிருப்பாங்க!
சின்ன வயசு நாங்க பேசிக்குவோம் " என்னடா இது அநியாயம், நம்ம கஷ்டப்பட்டு இங்கிலீஸ் பாடம் படிக்குறோம்.ஆனா வெள்ளைகாரன் ஸ்கூல்ல தமிழா படிக்கிறான். அவன் தமிழ் படிச்சாத்தான் நாம இங்கிலீஸ் படிக்கோணும்" என்று. ஆனா அது இன்னைக்கு வரைக்கும் நடக்கல. குறைந்த பட்சம் உங்க ஆசையாவது நிறைவேறுதான்னு பாக்கலாம்!
வணக்கம் சகோ நந்தவனம் நலமா?
Deleteஉங்களின் மேலதிக தகவல்கள் மிக அருமை. பேரா.சக்ரவர்த்தியின் எழுத்துமுறை போல் இந்திய எழுத்து முறைகள் இருப்பின் நலமாக இருக்குமே என்னும் சிந்த்னை நமக்கும் உண்டு.
அவரின் எழுத்து முறை பற்றியும் ஒரு சிறு விளக்கம் கொடுத்து விடுவோம்.
http://www.biotech.iitm.ac.in/faculty/CNS_LAB/bharathi_draft2.html
சக்ரவர்த்தியின் எளிமையான திட்டம் இதுதான்.
1. எழுத்துகள் கூடுமான வரை கோடுகளாக இருக்க வேண்டும்.
2. ஒரு ஒலி வடிவுக்கும்,இன்னொரு மாறு பட்ட ஒலி வடிவின் எழுத்துருக்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு எழுத்தின் குறில் நெடில் இடையே வித்தியாசம் குறைவாக இருக்க வேண்டும்.இந்த குறில் நெடில் வித்தியாசம் ஒரே போல் இருக்க வேண்டும்.
.
3. இதே போல் க்+இ=கி என்றால் க'வின் மீது கொம்பு முளைப்பது போல் அனைத்து எழுத்துகளுக்கும் வர வேண்டும். எ.கா ச்+இ=சி
இந்த எளிய முறைகள் எல்லாமே தமிழ் எழுத்துருவில் இருக்கின்றன என்பதே வியப்பு. கடைசி எழுத்து சீர் திருத்தம் இதே போல் லை,ழை,ளை சீர்திருத்தம் அன்றே தந்தை பெரியாரால் முன்மொழியப்பட்டதையும் வியப்புடன் நினைவு கூர்வோம்.
http://en.wikipedia.org/wiki/Simplified_Tamil_script
Periyar was the first post-independence politician to promulgate script reform.[4] A Script Reform Committee was formed in 1947 underPeriyar, while in 1951 the Government of Tamil Nadu accepted its recommendations, it failed to enforce them.[5] He encouraged it on the basis that it allegedly eased learning and writing.[6]
ஒரு மணி நேரத்தில் ஒரு இந்திய எழுத்துரு அறிந்தவர் இம்முறையை அறிய முடியும் என்கிறார் பேராசிரியர்.
நம்பலாம் எனவே தோன்றுகிறது. எனக்கு தமிழ்,தெலுங்கு,இந்தி எழுத படிக்க தெரியும் என்பதால் அவரின் எழுத்துகள் பரிச்சய்ம் ஆகவே உள்ளது.
எனினும் இந்திய எழுத்துகளூக்கு ஒரு பொது எழுத்துமுறை இப்படி எளிமையாக இருத்தல் நலம் என்றே கருதுகிறோம்.
மிக்க நன்றி
ஆனால் இது யாரிடமும் எடுபடாது என்பதுதான் சோகம்.
http://articles.timesofindia.indiatimes.com/2013-07-17/india/40634852_1_indian-languages-alphabet-bharati
ReplyDeleteஇந்த ஐஐடி பேராசிரியரை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு! ஒரு மொழிக்காரன்கிட்ட ஸ்கிரிட்டை மாத்த சொல்லிப் விட்டு இந்த மொத்து வாங்குறார் உத்தம தமிழ் எழுத்தாளர்! இயாளு எப்படி 58 மொழி பேசுறவங்க அடியையும் தாங்குவாரு?
சகோ நந்தவனம் ,
Deleteவடிவம் அறியும் கலையில்(pattern recognition) கணிணி மூலம் மொழி உணர்தல் முக்கிய பங்கு ஆற்றுகிறது. வரும் காலத்தில் சூழல் இசைந்தால் எதுவும் நடக்கும்.
நன்றி!!!
அந்த ஆள் விளம்பரத்திற்காக அப்படி எழுதியுள்ளார். இது தெரியாமல் ஒரு கூட்டம் இந்து அலுவலகதிற்கு சென்றது? எதுக்கு? அதான் எல்லாம் படிச்சாச்சே! நீங்க கூட முதல் பாராவில் உள்ள அவர் பெயரை எடுத்துவிடுங்கள். எதுக்கு ஒசியில் விளம்பரம்?
ReplyDeletelinguistics ஒரு கடல். சும்மா இந்துத்வா பத்தி எழுதினால் மொழியில் புலமை உண்டு என்று அர்த்தமா? இல்லை linguistics -கரைத்து குடித்தவர என்று அர்த்தமா?
லூசை லூசிலே விடுங்கள்!
தமிழ்மணம் பிளஸ் 1
சகோ நம்பள்கி,
Deleteஏதோ நமக்கும் கொஞ்சம் தமிழ் பணி செய்ய ஒரு வாய்ப்பு அவ்வளவுதான்.
மற்றபடி பின் நவீனத்துவ சி(நி)ந்தனையாளர்கள் அளவு எல்லாம் நம்மால் முடியாது!!!
தமிழ் எழுத்துரு பிற இந்திய எழுத்து முறைகளை விடவே கணிணி தட்டச்சுக்கு இயல்பாக இருப்பதை உணர்கிறேன். உண்மைதானே!!!
நன்றி!!!
சகோ.சார்வாகன்,
ReplyDeleteநல்ல ஆய்வு!
எங்கே கொஞ்ச நாளா குகைய விட்டே வரக்காணோம்,
நம்ம பொங்கலைப்பார்த்தீரா?
ஹி...ஹி செமோ செய்த ஒரு திருட்டுத்தனத்தை கண்டுப்பிடிச்சுட்டேன், அவரு சொந்தமாக கூட அந்த கட்டுரைய எழுதலை, யுனிகோட்.ஆர்க் தளத்தில் இருந்த கட்டுரைய சுட்டு ஆங்காங்கே,வெட்டி ஒட்டி எழுதி இருக்கார்.
ஆனால் எங்கே இருந்து சுட்டதுனு சொல்லாம மறைச்சிட்டு என்னமோ சொந்தமா ரூம்ப்போட்டு யோசிச்சு தமிழ் சீர்திருத்தம் செய்ய வந்த போராளி போல காட்டிக்கிட்டு இருக்கார் அவ்வ்.
அது சரி எல்லாரும் என்ன போல சுட்டிக்கொடுத்து எழுதுவாங்களா என்ன அவ்வ்!
இதுக்கு ஒரு பொங்கலை வைக்கலாம்னு இருக்கேன்.
---------------------
கிரந்தம்னாலே தமிழ் எழுத்துருவை தான் சொல்லுறது, என்ன கிரந்தம்னு வடமொழில பேரு வச்சிட்டாங்க.
பிரம்மினு ஒரு பொது எழுத்துருவில் இருந்து கொஞ்சம் கலந்து தமிழ் வட்டெழுத்து எழுதினது கிரந்தம்.
அதே பிரமில இருந்து உருவானது தேவ நகரி.
நெறய பேரு தமிழ்கிரந்தம் என்பதை நைசா மாத்தி தமிழ்பிரமினு பேரு கொடுத்து குழப்பிட்டாங்க.
பேரு வைக்கிற வேலைய எல்லாம் வட இந்திய அறிஞர்கள் கையில எடுத்துக்கிட்டு வச்சதால இந்த குழப்பம்.கூடவே வெள்ளைக்காரனௌம் சேர்ந்து தென்னிந்திய சமாச்சாரத்துகுலாம் வடைந்திய சாயலில் பேர வச்சு ,எல்லாம் அங்கே இருந்து உருவானப்போல தோற்றத்தை உருவாக்கிட்டாங்க.
பிரமியும் ,தமிழும் சமகால மொழி எழுத்துரு என்றே பலரும் சொல்கிறார்கள். தேவநகரிலாம் ரொம்ப பின்னாடி வந்த ஒன்னு.
அடுத்த பதிவில் மிச்சத்த சொல்றேன்.
சகோ வவ்வால்,
Deleteநாம் இந்தப் புறா ஆட வேண்டும் என்றால் இளவரசர் பாடா வேண்டும் என விரும்பும் சாதி(அய்யோ இது வேற சாதி நான் அவன் இல்லை!!).
நாம் விரும்பும் எசப்பாட்டு பாட்டுக்கு முதல் பாட்டு பாடும் நம் சகோக்கள் அப்படி எழுதாமல் மோடி காய்ச்சல் கண்டு கிடப்பதை எண்ணி நெஞ்சு வெதும்புகிறேன்.
மற்ற்படி ஒன்றும் இல்லை. தோன்றினால் எழுதுவோம்!!!
***
/நெறய பேரு தமிழ்கிரந்தம் என்பதை நைசா மாத்தி தமிழ்பிரமினு பேரு கொடுத்து குழப்பிட்டாங்க./
அப்புறம் இந்த பிரமி,தமிழ் கிரந்தம் எழுத்துரு நம்முடையதுதான். இது பற்றி பதிவு எழுதப்போகிறீர்கள் என அறிய முடிந்தாலும், இப்போதே துண்டு போட்டு வைக்கிறேன்.
நமக்கு தமிழ் பற்றினை கிளப்பிய அண்ணன் ஜெ.மோ'விற்கு நன்றி!!
வெல்க தமிழ்
நன்றி!!
@சார்வாகன் விரிவான பதிலுக்கு நன்றி. எப்படி பால் போட்டாலும் அடித்து விடுகிறீர்கள். எதை சொன்னாலும் அதில் மேலதிக விபரங்களை சேர்த்து விடுவதை சொன்னேன்.
ReplyDeleteடாக்டர் நம்பிள்கி அதிசயமாக என்னுடன் ஒத்துப்போகிறார். ஜெயமோகன் வரவர ஒரு பிளாக்கு எழுத்தாளராக மாறி வருகிறார். எல்லாவற்றை பற்றியும் கருத்து சொல்கிறார். இவரை மாதிரியான சமூகத்தில் துறையில் மதிப்பு பெற்ற ஆட்கள் அளவாக பேசவேண்டும்(அவர் இலக்கியத்தில் மதிப்பு பெற்றவரா என சிலர் சீறிப்பாயக்கூடும், இந்த விடயத்தில் லக்கி போன்றவர்களை விட அசோகமித்ரன் சொல்வதை சரியென நம்புகிறேன்). தாங்கள் வல்லுனராக இருக்கும் துறை எதுவே அது பற்றி மட்டும் கருத்து சொல்வது நல்லது. அதைவிடுத்து இவர் தன்னை மொழியில் வல்லுநராக நினைத்து எழுத ஆரம்பித்தால் இப்படியான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதுதான். அவற்றை ஒதுக்கிவிட்டு நாம் போக வேண்டியதுதான்!
அசோகமித்ரன் பெயரை போட்டது அவரது பழய பேட்டி ஒன்று நினைவிற்கு வந்தது
Delete//''தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?''
''ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுதுவதும் பேசுவதும்... ம்ஹூம்...'' // -(நன்றி; இட்லிவடை)
ஜெமோ இதை படித்தாரா என தெரியவில்லை!
சகோ நந்தவனத்தான், நீங்க அறிமுகபடுத்தி தான் நான் முதன் முதல் ஜெயமோகன் 2 /3 கட்டுரை படிச்சேன் நன்றாக இருந்தது. இவரா இப்படி சொன்னார் என்பது ஏமாற்றமாயிருந்தது.நம்ம சகோ சார்வாகனே ஜெயமோகனின் பிரச்சனையால் தனது கொடநாட்டு ஓய்வை உதறிட்டு பொங்கி புறப்பட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்குங்களேன்.
Delete//டாக்டர் நம்பிள்கி அதிசயமாக என்னுடன் ஒத்துப்போகிறார்.//
நானும் ஆச்சரியபட்டேன். அமெரிக்காவில் ஆங்கிலம் சிறப்பு என்றபடியால் என்று.. தொடங்குவார் என்றே நினைச்சேன்.
சகோ வேகநரி, இப்பிரச்சனைக்கு ஜெமோ என்ன சொல்லுகிறார் என பார்க்க அவரது தளத்துக்கு போனேன். இதை ஒரு விவாத பொருளாக ஆக்குவதுதான் எனது நோக்கமேயன்றி இதை பயன்பாட்டு கொணருவது என எண்ணமல்ல (? ) என்கிறார். மேலும் இதற்கு நாசா விஞ்ஞானியும், தமிழ் அறிஞருமான Dr.நா கணேசன் அவர்களின் எதிர்வினை ஜெமோ வின் தளத்தில் பிரசுரமாகி இருக்கிறது //மொழியியலாளர் நா.கணேசன் . ‘ஜெயமோகன் ஓர் இன்றியமையாத விவாதத்துக்கு வழிகோலியிருக்கிறார்’ என்று சொல்லி ‘ஏற்கெனவே, தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளையும் ரோமன் எழுத்துமுறையில் எழுதும் ISO 15919 முறை இருக்கிறது. மாநிலங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றத்துக்கு ரோமன் எழுத்துமுறையைக் கையாளலாம். ISO 15919 வினோத் ராஜனின் அக்ஷரமுகம் பயன்படுத்தி ஆண்டிராய்ட், ஐபோன் போன்றவற்றுக்கு அளிக்கவேண்டும். அப்போது தமிழ் லிபி வலைப்பக்கங்களை, மின்மடல்களை, குறுஞ்செய்திகளை ரோமன் லிபியில் படிக்கலாம். கணிமுனைவர்கள் இந்த Apps செய்து அளிப்பது மிக எளிது. ஆசிய மொழிகள் அனைத்துக்குமே Digraphia என்னும் பொதுமுறை வந்த்துவிட்டது’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.// இது உங்களின் கவனத்துக்கும் சிந்தனைக்கும்.
ReplyDeleteவண்க்கம் சார். நலமா? சிற்ந்த ஆய்வு ஜெ மொவின் கருத்திற்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு நல்லதொரு எழுச்சி. நம் தமிழுக்கு காலமாற்றத்தில் கரைந்து க்கொண்டிருக்கிற்து பலமொழிகள். வாழ்க. தமிழுலகம். நன்றி தங்களின் சிறந்த ஆய்வுக்கு(அந்த அல்லாஹ்வின் கூ.....லி..... உங்களுக்காவது கிடைக்கட்டும்)
ReplyDeleteமிகவும் சிறப்பான பதிவு. தமிழ் மொழி பண்டைய காலத்தில் சித்திர எழுத்துக்களில் எழுதப்பட்டது. பின்னர் தமிழி எனப்படும் தமிழ் பிராமியில் எழுதப்பட்டு அதுவே பரிணாமம் அடைந்து இன்றைய எழுத்துக்களாகி உள்ளன. ஓலைகளில் எழுதத் தொடங்கியமையால் கோடுகளான தமிழி எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக உருமாறின. 6-ம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து வந்த பார்ப்பனர் சமற்கிருத நூல்களை எழுத பல்லவர்கள் தமிழி எழுத்துக்களை காப்பியடித்து கிரந்தத்தை உருவாக்கினர். அதே சமயம் தமிழ் எழுத்துக்களையே தமிழ் மொழிக்கு பயன்படுத்தினர். அதன் நெடுங்கணக்கை மாற்றவில்லை. கிரந்த எழுத்துக்களை பல்லவர்கள் தமிழகத்துக்கு வெளியே கன்னடம், தெலிங்கு, துளு, சிங்களம், சாவகம், மலாய், மியன்மார் என பல நாட்டு மொழிக்கும் பரப்பினர். அவை காலப்போக்கில் உருமாறி தனித் தனி எழுத்துக்கள் ஆகின. கிரந்தத்தின் முழு வடிவமும் உருமாற்றம் குறைவாக இன்றைய மலையாளத்தில் எழுதப்படுகின்றன. 10-ம் நூற்றாண்டில் சோழர்கள் தமிழோடு சில கிரந்த எழுத்துக்களான ஜ, ஸ, ஹ, ஷ, முதலியவற்றை இணைத்து எழுதினர். ஆனால் அதன் நெடுங்கணக்கு மாறவில்லை. கிரந்தத்தை தமிழர்கள் ஏற்கவும் இல்லை. 16-ம் நூற்றாண்டில் கிரந்தத்தோடு கிரந்தத்தில் இல்லாத ழ, ற, ந, ஏ, ஓ, போன்ற எழுத்துக்களை இணைத்து துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள லிபியை உருவாக்கி மலையாள மொழியை உருவாக்கியும் விட்டார். கிரந்த எழுத்துக்களில் தமிழ்/மலையாளம் தவிர அனைத்து இந்திய மொழிகளையும் எழுதலாம். மலையாள லிபியில் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் எழுதலாம். தமிழை ரோமன் எழுத்துக்களில் முதன்முதலில் எழுதியோர் போர்த்துகேயர். தமிழில் எழுந்த முதல் புத்தகம் ரோமன் எழுத்துகளில் எழுதப்பட்டது. பின்னர் போர்த்துகேயர்கள் தமிழை ரோமனில் எழுதுவது கடினம் என்பதால் தமிழ் எழுத்தில் தம்பிரான் வணக்கம் என்ற புத்தகத்தை கொச்சினில் அச்சடித்தனர். அதே காலக்கட்டத்தில் தமிழகம் கேரளத்தில் வாழ்ந்த முஸ்லிம் பெரியவர்கள் தமிழ் - அரபி கலந்த மொழியான அரவி என்பதை எழுத அரவி எழுத்துக்களையும் உருவாக்கினர். இது தமிழ் - சமற்கிருதம் கலந்த மணிபிரவாளம் போன்றதே. பிற்காலங்களில் இவை வழக்கொழிந்து போன்து. ஆக தமிழ் மொழி அன்று முதல் இன்று வரை எழுத்தை மாற்றவோ, நெடுங்கணக்கை மாற்றவோ இல்லை. தமிழோடு தொடர்புடைய பிற நாட்டவர் தமது எழுத்துக்களில் தமிழையும் தம் மொழியையும் கலந்து எழுத முயன்று புதிய எழுத்துக்களைத் தோற்றுவித்து பின்னர் தோல்வி கண்டு தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டனர் இதுவே வரலாறு. இன்று சிலர் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்தத்தை சேர்க்க முயன்று தோற்றனர். அதே கூட்டம் ரோமன் எழுத்தில் தமிழை எழுதலாம் என மீண்டும் கிளப்பிவிட்டு குழப்பம் செய்வது. தமிழோடு பிறமொழியை கலக்க விட்டும், அதன் தனித்துவ எழுத்துக்களை ஒலிகளை அழித்து இந்தியாவிலே மிக எளிதான எழுத்துக்களையும், லாஜிக்கான அறிவியல் பூர்வமான வர்க்கமற்ற எழுத்து முறைகளை அழித்துவிட நினைக்கின்றனர். தமிழ் எழுத்துக்கு சீர்திருத்தம் தேவை, இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் குறிகள் எழுத்தோடு பிணைந்துள்ளத்தை நீக்கி மலையாளத்தில் உள்ளது போல தனிக் குறியாக்கினால் தமிழ் இன்னும் எளிமையாகும். அதை விட்டு தமிழ் எழுத்தையே மாற்றி ஆங்கில எழுத்தில் எழுதி ஆங்கில சுனாமிக்கு பலிக் கொடுக்க நினைப்பது முட்டாள்தனம்.
ReplyDeleteசகோ.சார்வாகன்,
ReplyDeleteசெயமோகர் ,யுனிகோட்.ஆர்க் தளத்தில் இருந்து சுட்டு எழுதினார் என முன்னரே நான் சொன்னேன் அது இப்போ தானாகவே வெளியாகிட்டிருக்கு அவ்வ்!
தமிழுக்கான யுனிகோட் பிளாக்கில் "ஷ,ஜ,ஹ,ஸ' போன்ற 6 எழுத்துக்களை சேர்க்கனும்னு ரமண ஷர்மா என்பவர் போட்ட மனு மீதில் இருந்து இந்த விவாதம் ஓடிக்கிட்டிருக்கு. அந்த விவாதத்தில் இருந்து ஒரு பகுதிய அலேக் செய்தால் அதன செமோவின் "தி இந்து(தமிழ்) கட்டுரை அவ்வ்!
ஆனால் அப்படி செய்யக்கூடாதுனு "உத்தமம்" குழுமம் சார்பாக மனுப்போட்டவர் ஆச்சே நா.கணேசன் ,அவர் எப்படி இதுக்கு ஆதரவாக இப்போ இவருக்கு சொல்லி இருப்பார்னு டவுட்டா இருக்கு அவ்வ்.
# "digraphia" என்றால் என்னனு தெரியாமல் செயமோகர் பேசிட்டு இருக்கார்,ஆனால் அதை நா.கனேசன் சொன்னார்னு சொல்லிக்கிறார்,
ஆசிய மொழிகளிக்கு பொதுவான "digraphia" முறை வந்துடுச்சுனு சொல்வதே சிரிப்பூட்டுது. ஒரு மொழிக்கு இரண்டு ஸ்கிரிப்ட் (வரி வடிவம் வச்சுக்கிட்டு பொன்டிக்கலா அப்படியே எழுதுவது தான் "digraphia",ஆனால் இவரோ digraphia என்பதே ஒரு கண்டுப்பிடிப்பு போல பொதுவா ஒரு digraphia வந்துடுச்சு என்கிறார் அவ்வ்.
30 நாளில் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் புக்கில,
what is your name?
வாட் இஸ் யுவர் நேம்?
இப்படி எழுதுவது தான்!
இப்பொ இன்னொரு வரிவடிவம் என்ன என்பது தான் பிரச்சினையே, மலேசியாவில் ஆங்கில எழுத்தில் எழுதுறாங்கனு சொன்னாலும் அங்கே அரபிய வரிவடிவ "ஜாவி" இருக்குனு என் பதிவில் சொல்லி இருக்கேன் ,அப்படி ரெண்டு இருப்பது தான் digraphia. ஆரம்பத்துல மலேசியாவில் ஆங்கில எழுத்தில் இருக்குனு சொல்லிட்டு இப்போ digraphia என்பதே ஒரு பொது மெத்தட் என்பதாக சொல்லிட்டு கிளம்பிட்டார் அவ்வ்.
சமஸ்கிருதத்தினை ,அப்படியே தமிழில் எழுதுகிறோமே அதுவும் digraphia தான்.
ஸங்கீதா = சங்கீதா என எழுதிட்டா போச்சு ,எனவே digraphia ல இன்னொரு மொழி வரிவடிவம் என்னனு பார்க்கனும், எங்கேயுமே பொதுவான digraphia என ஒரு அமைப்பே இல்லை அவ்வ்.
நம்ம ஊரு பேருந்து பெயர்ப்பலகையில ல "chennai - சென்னை " என எழுதி இருக்கும் அதுவும் digraphia தான், நம்ம ஊருல தெரு பெயர்ப்பலகை ,பேருந்துல எல்லாம் ஹி..ஹி digraphia தான் அவ்வ்!
இதல்லாம் வச்சு தான் ஒரு பதிவு போட்டு பொங்கல் வைக்கலாம்னு இருந்தேன் ,இங்கே ச்சும்மா ஒரு டிரெய்லர் :-))
ஹி...ஹி சொல்ல மறந்துட்டேன்,
ReplyDeleteThe hindu - தி இந்து(தமிழ்) என பேப்பர் பேரு வச்சிருக்காங்களே அதுவும் digraphia எனவே தமிழின் முதல் digraphia செய்தித்தாள்(பெயரளவில்) தி இந்து தான் அவ்வ்!
//@சார்வாகன் விரிவான பதிலுக்கு நன்றி. எப்படி பால் போட்டாலும் அடித்து விடுகிறீர்கள். //
ReplyDeleteஹலோ தம்பி நந்தவனம் அண்ணாச்சி,
சௌக்கியமா?போட்ட பாலை அடிச்சிட்டார் என்று சந்தோஷப்படுங்கள். ஏனென்றால்,
(நான் இப்போது மெதுவடை (உளுந்த வடை) சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். நான் எடுத்த அந்த வடை அடுத்த 1 நிமிடத்திற்குள் என் வயிற்றுக்குள். இப்போது சார்வாகனும் வவ்வாலும் என் ஞாபகத்திருக்கு வருகிறார்கள். இந்த வடை இவர்கள் இருவருக்கும் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை.
சார்வாகனும் வவ்வாலும் மெதுவடையை கையில் எடுக்கிறார்கள். ஒரு சின்ன பீசை பிச்சி பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்கிறார்கள் (இது எதுக்கு??????.........வீட்ல போய் அவங்க லேப் ல வச்சி Test பண்றதுக்காம். அவ்வ்.....). இப்போது அவர்கள் ஆராய்ச்சி ஆரம்பம்.
1) What is the Ingredients?
2) How much oil does it have?
3) Manufacuring date?
4) Expriry date?
5) How deeply it has been fried?
6) How deeply it could have been fried further?
7) How much Blackgram does it have?
8) How it reacts after going into stomach?
9) Benifit of eating Vadai?
9) Harm of eating Vadai?
10) What is to be done before eating this Vadai?
11) What is to be done after eating this Vadai?
12) Weight of Vadai?
13) Physical Dimensions
13a) Inner Diameter?
13b) Outer Diameter?
13c) Thickness (in mm)?
14) Colour of Vadai?
15) இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது. அதையெல்லாம் இப்போது இங்கே குறிப்பிட்டால் வாசகர்கள் என்மேல கொலைவெறி ஆகிடுவாங்க. அதனால் இத்தோடு முடிச்சிக்கிறேன்.
இந்த இரண்டும் குடுத்த வடையை சாப்பிடாமல் மேல உள்ள கேள்வியை ஆராய்ச்சி பண்ற கேசுங்க. நல்லவேள போட்ட பாலை ஆராய்ச்சி பண்ணாம விட்டுடாரு..ஹி...ஹி...ஹி...
This comment has been removed by the author.
ReplyDelete@ஏலியன்
Delete//போட்ட பாலை அடிச்சிட்டார் என்று சந்தோஷப்படுங்கள். ஏனென்றால்//
உண்மைதான், அவரு பதிவு போட்டதும் உடனே பின்னூட்டம் போட்றோனும். கொஞ்சம் லேட் ஆனோம்னா கடையை அம்போன்னு விட்டுட்டு அவரு போயிடுவாரு. அப்புறமா நம்மளே மாத்தி மாத்தி டீஆத்தி குடிச்சிகிட்டு இருக்க வேண்டியதுதான்!
//அவர்கள் ஆராய்ச்சி ஆரம்பம்.//
இதுதான் அந்த ஆராய்ச்சி ஆராய்ச்சிங்கறதா...