வணக்கம் நண்பர்களே,
சமீபத்தில் படித்த இந்த பதிவு நம்மை சிந்திக்க வைத்தது.
சகோ காமக்கிழத்தன் சில் கேள்விகளை ஆத்திக சகோக்களுக்கு
கேட்டு இருக்கிறார்.
அந்தக் கேள்விகளின்
மீதும்,
நாம் சரி என்று சான்றுகளின்
அடிப்படையில் எண்ணும் விளக்கங்களை பதிலாகவும் இப்பதிவில் அளிக்கிறோம்.
அதற்கு முன் ஆத்திகம்
என்னும் இறை நம்பிக்கை,நாத்திகம் என்னும் இறை மறுப்பு இரண்டையும்
கொஞ்சம் நன்கு புரிவோம்.
ஏற்கெனவே புதிய நாத்திகம்[newatheism] என்பதன் விளக்கப்பதிவு ஒன்று இட்டு இருக்கிறோம். இப்பதிவு அதன்
தொடர்ச்சியாக நாம் கருதுவதால் , விரும்பும் சகோக்கள் அத்னையும் படிக்கலாம்.
கணிதத்தில் நிகழ்த்கவு(probability) கோட்பாடு நாம் படித்து இருக்கலாம். ஒரு நாணயத்தை சுண்டினால் தலை விழலாம் அல்லது பூ
விழலாம். ஒன்று விழுந்தால் இன்னொன்று நிச்சயம் விழாது. இது போன்ற நிகழ்வுகள் ஒன்றையொன்று
விலக்கும் நிகழ்வுகள் என்கிறோம்.
ஷோலே படம் பார்த்த
நண்பர்கள், அதில் நண்பர்கள்
தர்மேந்திரா,அமிதாப் பச்சன் முடிவெடுக்க
நாணயத்தை சுண்டுவதை வ்ழக்கமாக கொண்டு இருப்பர். ஒரு சமயம் நாணயம் செங்குத்தாக நின்று
விடும்.[ இந்த நாணயம் சுண்டுதல்+ஷோலே பற்றி தொடர்ந்தால் நம் பதிவு திரைமணத்தில்தான்
வரும் ஆகவே சிந்திக்கும் திசையை மாற்றுவோம்]
இது நிகழும் வாய்ப்பு
இருப்பின் நிச்சயம் நிகழும். இதை ஏன் சொல்கிறோம் எனில் ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்வுகள்
என சொல்லும் நிகழ்வுகள் மிக மிக அபூர்வம். அந்த இரு(அல்லது மேற்பட்ட) நிகழ்வுகளுக்கும்
பொதுவான சில விடயங்களும் உண்டு. அதில் ஆத்திகம் நாத்திகமும் அடக்கம்.
அதாவது ஒரே வரியில்
சொல்ல வேண்டும் எனில்
ஆத்திகமும்,நாத்திகமும் ஒன்றை ஒன்று முற்றும் விலக்கும்
நிகழ்வுகள் அல்ல!!
இதனைப் புரிய கீழ்க்கண்ட
விள்க்கப் படத்தை பார்க்கவும்.
Does not claim
Proof exist- (கடவுளுக்கு)
நிரூபணம் உண்டு என சொல்வது இல்லை.
Does claim Proof
exist- (கடவுளுக்கு)
நிரூபணம் உண்டு என சொல்வது உண்டு.
Does believe in
god- கட்வுள் நம்பிக்கை
உண்டு.
Does not believe
in god- கட்வுள் நம்பிக்கை
இல்லை
Gnostic Theist -ஆன்மீக அறிவு
சார் ஆத்திகம்.
[கடவுளுக்கு நிரூபணம்
உண்டு என்பதை மதபுத்தகங்களின் மூலம்(அல்லது தனிப்பட்ட தேடலில்) கற்றுணர்ந்து, நம்பிக்கை
கொண்டோர்’]
Gnostic Atheist -ஆன்மீக அறிவு
சார் நாத்திகம்.
[கடவுளுக்கு நிரூபணம்
இல்லை என்பதை மதபுத்தகங்களின் மூலம்(அல்லது தனிப்பட்ட தேடலில்) கற்றுணர்ந்து, நம்பிக்கை
மறுப்போர்.]
Agnostic Theist - எதார்த்தவாத ஆத்திகர்.
கடவுளுக்கு நிரூபணம்
இல்லை ஹி ஹி எதுக்கும் ஆத்திகனாகவே இருக்கிறேன்
Agnostic Atheist - எதார்த்தவாத நாத்திகர்.
கடவுளுக்கு நிரூபணம்
இல்லை ஆகவே நாத்திகனாகவே இருக்கிறேன்.
இதில் நம்நிலை என்பது
இன்னும் இடைப்ப்ட்ட நிலை போல் தோன்றுகிறது.
கடவுள் என்று எதை
சொல்கிறார்கள், நிரூபணம்
எனெதை சொல்கிறார்கள் என்பதும் இந்த நான்கு வகை பிரிவினருக்கு வேறுபடும் என்பதால் ஆத்திகம்
நாத்திகம் என எளிதில் வரையறுப்பதின் சிக்கல் புரியும்.
இரண்டுக்கும் இடைப்பட்ட , அல்லது இரண்டும் ஒன்றான,அல்லது இரண்டுக்கும் சேராத
நிலையும் உண்டு.
கணிதத்தில் இதனை ஃப்ஜ்ஜி(இது வேற Fuzzy logic ஹி ஹி!!!) லாஜிக் என்பார்.
நிகழ்த்கவு கோட்பாட்டின் மாற்றுக் கோட்பாடாக சிக்கலான முடிவெடுக்கும்(decision making) பிரச்சினைகளில்
பயன்படுத்தப்படும்.
என்ன சகோ குழப்புகிறீர்கள்?அதெப்படி இடைநிலை இருக்க முடியும்
என்போர் மத வாதிகளின் பரிணாம எதிர்ப்புக் கொள்கையான இடைநிலை பொது முன்னோரின் படிமங்களை(transitional fossils) மறுப்பவர் போன்றோரே!!!
இது நாத்திகரும், ஆத்திகரும் ஒன்றுபடும் ஒரு வாதத்தின் எடுத்துக் காட்டு ஆகும்.
இப்போது அவரின் கேள்விகளுக்கு செல்வோம்.அவரின் கேள்விகள் நீல வண்ணத்தில் உள்ளன!!
1.//நாத்திகர்கள் வேண்டாம். “கடவுள் இருக்கார்னு நம்பவும் முடியல;
நம்பாம
இருக்கவும் முடியல” என்று பூசி மெழுகுகிற ‘ரெண்டும் கெட்டான்கள்’ எட்டி நின்று வேடிக்கை பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு
மட்டுமேயான கேள்வி இது.//
இப்படி மிகச்சரியாக பிரிக்க முடியாது
என்பதை மேலே விள்க்கி இருக்கிறோம்.. ஆகவே புதிய நாத்திகர்களாகிய நாங்களும் பதில் அளிப்போம்!!!
2.//மகான்களையும் அவதாரங்களையும் ஆன்மீகங்களையும் மகா மகா பெரியவர்களையும் துணைக்கு அழைக்காமல் உங்கள் சுய அறிவுகொண்டு பதில். சொல்லுங்கள்.//
2.//மகான்களையும் அவதாரங்களையும் ஆன்மீகங்களையும் மகா மகா பெரியவர்களையும் துணைக்கு அழைக்காமல் உங்கள் சுய அறிவுகொண்டு பதில். சொல்லுங்கள்.//
இது சமீப கால்ங்களாக தமிழர்களுக்கு
நகைச்சுவை விருந்து அளிக்கும் மத விவாதங்களின் ஒப்பந்த கட்டுப்பாடு போல் உள்ளது. ஒரு
விவாத வல்லுனர் போடும் கட்டுப்பாடுகளாவன.
a). மத புத்தகத்தின் என்னுடைய இப்போதைய மொழி பெயர்ப்பும்,இப்போதைய நிலைப்பாடு மட்டுமே சரி.
முந்தைய விடயங்களை பேசக் கூடாது.
b). துணைப் புத்தகங்களில் நான் சொல்லும்
பகுதிகள் மட்டுமே ஏற்கப்படும், என விளக்கம் மட்டுமே சரி!!!
இப்படி விவாதக் கட்டுப்பாடுகள் போடுவதில்
இருந்தே அவரின் மத புத்த்கங்களின் நிலை அனைவரும் புரிய முடியும். அதே போல் சகோ காமகிழத்தன்
கட்டுப்பாடுகள் போடுவதும் நாத்திக ஆத்திக ஒற்றுமையை விளக்கும் சான்றாக நாம் முன்வைக்கிறோம்.
விவாதத்தில் இரு புறக் கருத்துகளையும்
வைக்க இருவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து கருத்துகளும்
ஆவணப் படுத்தப்பட வேண்டும்.இப்படி கட்டுப்பாடுகள் விதித்துவிட்டு பதில் அளிக்காதவரை
முட்டாள் என திட்டுவது சரியா?
3.//கடவுளை 100% நம்புகிறவரா நீங்கள்?//
இதையும் பதிவின் தொடக்கத்தில் விளக்கி இருக்கிறோம். 100% என்பது இயற்கையில் கிடையாது என்பது வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி(thermodynamics second law)!!!
http://en.wikipedia.org/wiki/Second_law_of_thermodynamics
4.//நீங்கள் வேண்டிக்கொண்டதால் கடவுள் உங்களை மனிதனாகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, உங்கள் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாது.//
கடவுள் என்பது மனிதனின் உருவாக்கம்
என்பதால் கடவுளும் மனித பண்புகள்,உணர்வுகள் கொண்டவ்ராகவே அறியப்படுகிறார்.
நாம் நமது குழந்தையை பெற்று எடுத்து
வளர்க்க அதனிடம் அனுமதி பெறுவது இல்லை,பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இன்பமாக
வாழ்வது இல்லை. இது கடவுளுக்கும் பொருந்தும் அல்லவா!!!!???
5.//ஆசை...‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசைதான் காரணம். //
இதைத்தான் பரிணாம அறிவியலும் சொல்கிறது
வாழ்வதற்கான போட்டியில், சூழலுக்கு ஏற்ப தலைமுறைரீதியாக தகவமைக்கும் உயிர்கள் வாழ ,பிற அழிய வாழ்வு தொடர்கிறது.
நானும் என் தந்தையும் ஒன்றே என்கிறார்
விவேகானந்தர். நான் இறந்தாலும் என் சந்ததி மூலம் வாழ்கிறேன் என்னும் அவரது கருத்து
உயிர்களுக்கு இறப்பில்லை என்பதை சொல்வதாக நான் கருதுகிறேன்.
இன்பம் துன்பம் இரண்டும் சார்பியல்
நோக்கு உடையவை. நம்க்கு முன் வாழ்ந்த 99% உயிர்கள் மறைந்துவிட்டன. ஹோமோ சேஃபியன்களாககிய
நாம் தோன்றி 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. பூமியின் 350 கோடி உயிரின வரலாற்றில் இது எத்த்னை
சத வீதம்?இதில் ஒரு மனிதனின் பிறப்பு வாழ்க்கை,இறப்பு என்பது என்ன விளைவு?
பிரப்ஞ்சம் மனிதனுக்காவே
படைக்கப்பட்டது என்னும் பார்வை கொண்ட நாத்திகரின் கேள்விதான் இது. மீண்டும் நாத்திகர்
ஆத்திகர் ஒற்றுமை!!!
பிறப்பு,இறப்பு என்பதும் பரிணாம நிகழ்வுகளே!!!!
கடவுள் என் ஒருவர் இருப்பார் என்றால் அவரும் பரிணாம வளர்ச்சி அடைவார் என்றே கூறுகிறோம். மத புத்த்கங்களின் காலரீதியான மொழி பெயர்ப்புகள், விள்க்கங்கள் இதையே உறுதிப் படுத்துகின்றன்.
6// ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.
ஆனால், மானுடப் பதர்களான நமக்கு மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.
இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?//
நாத்திகர்கள் அறியா விடயத்தை ஆத்திகர்கள் சொல்ல வேண்டும், மத புத்த்கம்& மகான் சொல் சாராமல் சொல்ல வேண்டும் என்பது ஒரு நீச்சல் வீரனின் கை கால்களைக் கட்டி கல்லோடு சேர்த்து கடலில் தள்ளி நீச்சல் அடி என்பது போல் ஆகும்.
6// ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.
ஆனால், மானுடப் பதர்களான நமக்கு மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.
இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?//
நாத்திகர்கள் அறியா விடயத்தை ஆத்திகர்கள் சொல்ல வேண்டும், மத புத்த்கம்& மகான் சொல் சாராமல் சொல்ல வேண்டும் என்பது ஒரு நீச்சல் வீரனின் கை கால்களைக் கட்டி கல்லோடு சேர்த்து கடலில் தள்ளி நீச்சல் அடி என்பது போல் ஆகும்.
நமக்கு அறிவியல் ஏற்படுத்தி உள்ள மாதிரிகள்
சார்ந்த கணிப்புகளால்[model based predictions] பிரபஞ்சம் 1370 கோடி ஆண்டுகள் முன் பெரு விரிவாக்கத்தினால்
உருவானது என் அறிகிறோம்.
இதனை ஒளிப்படிமங்கள் மூலம் மாதிரி
வரையறுத்தனர். அதற்கு முன்னால் என்றால் சான்றுகள் இபோது இல்லை. ஒருவேளை கிடைத்தால்
அதுவும் விளக்கப்படலாம், அப்போது அதற்கு முன்னால் என்ற கேள்வியும் வரும்.
அறியா விடயங்கள் அறிவியலில் இருப்பது
போல் ஆத்திகத்திலும் இருப்பதில் தவறில்லை!!
முதல் செல் எப்படி வந்தது?
பெரு விரிவாக்கம்
முன்பு என்ன நடந்தது? இதற்கு நாத்திகர்கள் விடையளிக்க முடியாமையால் கடவுள் உண்டு என
சொல்லும் ஆத்திக பெருமான்களை கண்டிருக்கிறோம் அல்லவா?
நாத்திக சகோவின் கேள்வியும் அப்படித்தான்
ஹி ஹி!
இதுவும் நாத்திக ஆத்திக ஒற்றுமையே!!
7.//தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த வஞ்சகரையா நீங்கள் இத்தனை காலமும் வழிபட்டீர்கள்? இனியும் வழிபடப் போகிறீர்கள்?//
வணங்குவது என்ப்து பலன் கிடைக்கும்
,நினைத்து
நடக்கும் என்பதற்கு மட்டும் அல்ல. இது சமூக,குடும்ப ஒற்றுமை சார் நிகழ்வு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இதில்
மனோ தத்துவரீதியான காரணங்களூம் உண்டு.
மதம் என்பதை தந்தை மீதான ஈர்ப்பு என்கிறார்
சிக்மண்ட் ஃப்ராய்ட்
மதம்,வழிபாடு என்பது ஒருவரின் அடையாளம்
ஆகி விட்டது.ஆகவே மதத்தில் என்ன் குறை இருந்தாலும் அதனை வேறுவழியில்லவிட்டால் நீக்கி,மாற்றுக் கருத்து சொல்லியே
மதத்தினைக் காப்பாற்றுகிறார்கள்.
தமிழகத்தில் பெரியார் மதிக்கப் பட்டாலும்
அவரின் நாத்திகம் ஏன் இபோதைய தலைமுறையிடம் எடுபடவில்லை என்றால் அவரின் இயக்க நாத்திகம்
இந்து மத மறுப்பு இயக்க்மாகவே இருந்தது. திராவிட இயக்கத்தின் பிரச்சாரங்களை ஆபிரஹாமிய
மத பிரச்சாரகர்கள் கையில் எடுப்பது எதிர்வினைகளை மட்டுமே ஏற்படுத்தி இந்து மதம் புத்துணர்ச்சி
பெற்றது.
ஆகவே மதம் ,கடவுள் ஆதாரம் உள்ளதா என்பதை
விட இன்னொரு மதத்தினரின் பிரச்சாரம் மாற்று மதத்திற்கும் நிலைப்பட
உதவுகிறது.
அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துகிறேன் என்பதுதான்!!!
ஆகவே இப்படி கேள்வி கேட்டு வழிபாடுகளைத்
தவிர்க்க முடியாது. ஆகவே வழிபாட்டில் சமத்துவம் இருக்க வேண்டும்.அனைவரும் பிறப்பு சாராமல்
மத குரு ஆகவேண்டும் போன்றவற்றையும், மதம் சார் பிரச்சாரகர்களின் தந்திர
உத்திகளையும், மதம் ,சாதி சார் அரசியலின் அபாயத்தினையும் அம்பலப் படுத்துவதே சால சிறந்தது.அறிவியல்
சார்,சான்றுகளின் அடிப்படையிலான சிந்தனையை வளர்ப்பதே முக்கியம்.
இயற்கையின் பல விந்தை முடிச்சுகளுக்கு பதில் தேடுகிறோம்.இத்தேடல் ஒரு தொடர்கதை என்பதால் விடையில்லா கேள்விகள் எப்போதும் இருக்கும்.
இப்படி விடையில்லாக் கேள்விகளின் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆத்திகர்,நாத்திகர் இருவரின் செயலும் தவறு என்றே கூறுகிறோம்.
மதம் மறுக்க மத புத்தகம் படியுங்கள்,அதன் மீதான மாற்று விமர்சனங்களையும் படியுங்கள்!!
ஐன்ஸ்டினின் கடவுளின் பக்தர்கள் அறிவியல் படியுங்கள், அதனை அனைவருக்கும் பகிருங்கள்!!
http://en.wikipedia.org/wiki/Religious_views_of_Albert_Einstein
மதம் சார் ஆட்சி,சட்டம் அனைவரும் எதிர்ப்போம்!!!
மதம் சார் ஆட்சி,சட்டம் அனைவரும் எதிர்ப்போம்!!!
கேள்வி நல்லதுதான்,ஆயினும்( பல மாற்றுக் கருத்துகள்
உள்ளடக்கிய) பல பதில்களையே எதிர்நோக்குகிறோம்!!!அதில்
அதிகம் பொருந்துவதை மட்டுமே இப்போது ஏற்க முடியும்!!என்பதே சரியான நிலைப்பாடு!!
நன்றி!!!
சகோ சார்வாகன் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteஎன் பதிவு [‘நீங்கள் முட்டாள் என்பதைச் சோதிக்க...சில கேள்விகள்!!!’] தங்களைச் சிந்திக்கத் தூண்டியதறிந்து மிகவும் பெருமைப்படுகிறேன்; நன்றி சொல்கிறேன்.
பதிவிட்டதன் ‘உள்நோக்கம்’ என்ன என்பதை மட்டுமே இப்பின்னூட்டத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
நம்மில் மிகப் பெரும்பாலான மனிதர்களைப் போலவே, குறைந்த அளவு இன்பங்களையும் பெருமளவு துன்பங்களையும் அனுபவித்த நான், சிறு வயதிலிருந்தே, “நான் ஏன் பிறந்தேன்?” என்று என்னை நானே நொந்துகொண்டதுண்டு.
பிறரைப் பார்த்து, கடவுளை வழிபடக் கற்ற பிறகு, கடவுளிடமும் அடிக்கடி, “ஏன்?” என்று கேட்டதுண்டு.
பதில் கிடைக்காததோடு, அவரை வழிபட்டதால் பலனேதும் கிட்டாததால் அவர் மீது நம்பிக்கை இழந்தேன்.
கடவுள் குறித்து நிறையச் சிந்தித்ததில் [‘கடவுளின் கடவுள்’, ‘ஒரு பக்கக் கதைகள் ஓராயிரம்’ என்னும் தலைப்புகளிலான வலைப்பக்கங்களில் நிறைய எழுதியுமிருக்கிறேன். {சில காரணங்களால் அவற்றை முடக்கி வைத்துள்ளேன்}] கடவுள் என்று ஒருவர் இருந்தாலும் அவரால் விளையும் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று. இது பற்றி இங்கு விரித்துரைப்பது தேவையற்றது]
அண்மைக் காலங்களில், நாம் மட்டும் இம்மண்ணில் பிறந்து, துன்பங்களில் துவண்டு சலித்து மண்ணோடு மண்ணாகிப் போக, மிகப் பெரும்பாலான மக்களால் போற்றித் துதிக்கப்படுகிற அந்தக் கடவுள் மட்டும் என்றும் அழியாதவராக, அனைத்தையும் ஆள்பவராக் இருப்பது ஏன் என்ற எண்ணம் மனதைக் குடைந்தெடுத்தது; பொறாமையாகவும் இருந்தது!!!
இயற்கையில் இப்படியொரு முரண்பாடான நிலை சாத்தியமே அல்ல என்று என் அறிவுக்குப் பட்டது.
இதைப் பிறர்க்கு உணர்த்த வேண்டும் என்ற ஆசையில் பிறந்ததே இப்பதிவு.
மற்றபடி, கடவுளின் இருப்பு குறித்தோ, ஆத்திக நாத்திகர் பற்றியோ இங்கு ஆராய்வது என் நோக்கம் அல்ல.
முதலில், ‘நீங்கள் அறிவு ஜீவியா என்பதைச் சோதிக்க...ஒரே ஒரு கேள்வி!!!’ என்றுதான் தலைப்பிட்டேன். ”நீங்கள் முட்டாளா...” என்று கேட்கும் போது வாசகர்களின் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும் என்பதற்காகத் தலைப்பை மாற்றினேன். கெட்ட எண்ணம் ஏதுமில்லை.
என் கேள்விக்கான பதிலை சுய அறிவில் தேடட்டுமே என்ற எண்ணத்தில்தான், மகான்களையும் பிறரையும் துணைக்கு அழைக்க வேண்டாம் என்று சொன்னேன்.கடவுள் நம்பிக்கையாளைரை நிராயுதபாணியாக்கி வாதப் போர் புரிய நினைப்பவனல்ல நான்.
இது நகைப்புக்குரியது என்றால் இருந்துவிட்டுப் போகட்டும்.
கடவுளை 100% நம்புவது சாத்தியமில்லை என்கிறீர்கள். சாத்தியமே என்பது என் நம்பிக்கை. உயிர் பிரிய இருந்த இறுதி வினாடியிலும்கூட, “ஹரே ராம்..” என்று காந்தி சொன்னாரே? அவர் கடவுளை முழுமையாக நம்பியவர்.
“கடவுள் இல்லையென்றே கொள்வோம். உலகைப் படைத்தது யார்? இன்பதுன்பங்களுக்குக் காரணமானவ்ர் யார்? அல்லது எது? அவற்றைப் போக்குவதற்கு என்ன வழி? பகுத்தறிவாளனான நீயே சொல்” என்று என்னிடம் யாரேனும் கேட்டால்.....என் பதில்.
“நான் பகுத்தறிவாளன் அல்ல; இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. இவை பற்றிச் சிந்திக்க மட்டுமே எனக்குத் தெரியும்” என்பதுதான்.
மீண்டும் நன்றி சார்வாகன்.
பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்.
//காரணமானவ்ர்// திருத்தம்: ‘காரணமானவர்’
Delete//கேட்டால்.....என் பதில்.// திருத்தம்: ‘கேட்டால்.....என் பதில்.......’
மேலும் ஒரு பிழை......
Deleteபின்னூட்டத்தில் குறிப்பிட்ட என் பதிவின் தலைப்பு, ‘நீங்கள் முட்டாள் என்பதை...’ என்றிருப்பது தவறு; ’நீங்கள் முட்டாளா என்பதை...’ என்றிருப்பதே சரி.
முக்கிய வேலை காரணமாக அவசரகதியில் பதிவிட்டதில் தவறுகள் நேர்ந்துவிட்டன.
மூன்று முறை பலமாகத் தலையில் குட்டிக்கொண்டேன். சீத்தலைச் சாத்தன் நினைவில் வந்து போகிறார்!!!
வணக்கம் அய்யா நீங்கள்தானா?
Deleteநலமா?
நான் உங்கள் பதிவின் மீது ஏற்பட்ட சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து இருக்கிறேன்.
முடாள் என்னும் சொல்லை தவிர்த்து இருப்பின் நலமாக இருந்து இருக்கும் . எனினும் உங்களின் விளக்கம் ஏற்புடையதே!!!
தங்கள் அனுபவத்தின் ரீதியாக நாத்திகம் வந்தது மிகவும் சரியான பாதை.
நானும் அப்படித்தான் என்றாலும் , அனுப்வரீதியாக மட்டும் அல்லாமல் மத புத்தக ஆய்வு, மத நம்பிக்கையாளர்களுடன் விவாதமே நம்மை நாத்திகம் நோக்கிய பாதையில் வளர்க்கிறது.
என் அனுபவத்தின் படி முழுமையான ஆத்திகனோ, முழுமையான நாத்திகனோ இருக்க முடியாது. அப்படி வேண்டுமானால் சொல்லிக் கொள்ள மட்டுமே முடியும்.
ஆனால் பாருங்கள் கடவுள் எனப்படும் இயற்கைக்கு மேம்பட்ட சக்தி குறித்து அறிவியல் எதுவும் சொல்வது இல்லை. இயற்கை குறித்த சான்றுகள் மீதான புரிதல் மட்டுமே அறிவியல்.
இப்போதைய அறிவியலின் படி பிரப்ஞ்சம் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் பெருவிரிவாக்கத்தின் படி உருவாகி, 5000 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றி, 350 கோடி முன் முதல் செல் உயிர் தோன்றி அதில் இருந்து பரிணாம நிகழ்வால் 2 இலட்சம் ஆண்டுகள் முன் ஹோமோ சேஃபியன்களாகிய நாம் தோன்றினோம்.
நிற்க!!
இப்போது அபியோஜெனிசிஸ் என்ப்படும் துறையில் வேதியியல் மூலம் செயற்கை உயிர் தயாரிக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. வரும் காலத்தில் முயற்சி வெற்றி பெறும் . அதே போல் பெருவிரிவாக்கத்தின் மாதிரி சோத்னைகள் கூட அணுத்துகள் உடைப்பான் மூலம் நடந்து இருக்கின்றன. இப்போது பிரபஞ்ச பெருவிரிவாக்கம்+செயற்கை உயிர் + பரிணாம நிகழ்வு அனைத்தையும் நிகழ்த்தும் விதம் அறியப்பட்டால். நாம் பிரப்ஞ்சத்தை படைக்கும் கடவுள் ஆகிறோம்.
ஏன் நமது பிரப்ஞ்சம்+நாம் வேற்றுக் கிரகவாசிகளின் அறிவியல் பரிசோதனை முயற்சியாக இருக்க கூடாது???
இது சரி/தவறு என்று சொல்ல முடியாது அல்லவா!!!
நாம் சொலவது மத புத்தகம்,மதங்கள் அனைத்துமே மனித செயல்கள்.மத புத்த்க மதங்களை எளிதில் தவறு என நிரூபிக்க முடியும்!!!
இயற்கைக்கு மேம்பட்ட ஐன்ஸ்டினின் கடவுளுக்கு சான்றில்லை என மட்டுமே சொல்ல முடியும் என்பதுதான்!!!
சான்றில்லாமை இல்லாமையின் சான்றாகி விடுமா?(கார்ல் சேகன்)
http://en.wikipedia.org/wiki/Evidence_of_absence
“Absence of evidence is not evidence of absence"
விடையில்லா கேள்விகளை, கடவுளின் சான்றாக ஆத்திகர் பயன்படுத்துவது போல் நாத்திகர் பயன் படுத்த வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்.
மற்றபடி உங்களுடன் நம்க்கு கருத்து வித்தியாசம் எதுவும் இல்லை!!
தொடர்ந்து கலக்குங்கள்!!!
நன்றி!!!
// Gnostic Atheist -ஆன்மீக அறிவு சார் நாத்திகம்.
ReplyDelete[கடவுளுக்கு நிரூபணம் இல்லை என்பதை மதபுத்தகங்களின் மூலம்(அல்லது தனிப்பட்ட தேடலில்) கற்றுணர்ந்து, நம்பிக்கை மறுப்போர்.]//
சார்வாகன்,
கடவுளுக்கு நிரூபணம் இல்லை என்பது
"கடவுளுக்கு நிரூபணம் உண்டு" என்று இருக்க வேண்டும். இது typographical error என்று நினைக்கிறேன்.
I will post my comments later.
வணக்கம்சார்புதியதேடல்புதியசிந்தனைநன்றிவாழ்த்துகள்என்மனதேடலுக்குஓர்புதியவிடையளித்துள்ளீர்மதநூல்வழிகடவுள்(களை)மறுத்துவந்தாலும்தேடலின்தொடர்சிஇன்னும்தொடரும்இறைமறுப்புபாதையில்
ReplyDeleteசகோ நலமா.
ReplyDeleteமொழிப்பெயர்ப்பை சரிப்பார்க்கவும்....
// Does not claim Proof exist- (கடவுளுக்கு) நிரூபணம் உண்டு.
Does claim Proof exist- (கடவுளுக்கு) நிரூபணம் இல்லை.///
நம்பிக்கை என்ற மனநிலையை சரியாக விளக்கியது பதிவு. எந்த ஒன்றையுமே வரையறுக்க (define) முடியாது. அப்படி வரையறுக்க முனையும் போதுதான் தத்துவமே பிறக்கின்றன. பகுத்தறிவு என்பதிலும் அறிவியல் சார்ந்ததாக இருந்தாலும், அறிவியலில் சில கோட்பாடுகளை நம்பிக்கை அடிப்படையில், (நம்முடைய தமிழ் இலக்கியவாதிகளின் சண்டை சச்சரவுகளை) போல சச்சரவுகள் இருந்து, சான்றுகளை தேடித்தான் அறிவியல் வளர்ந்தது. வேற்று கிரகவாசிகள் இருக்கின்றன என்று ஒருத்தர் நம்பினால், கடவுள் இருக்கின்றது என்று ஒருவர் நம்பினால், இருவரும் ஓரே தளத்தில் உள்ளனர். ஆனால் அந்த நம்பிக்கை வைத்து அவர்கள் எப்படி எதார்த்த வாழ்க்கை செயல்படுகின்றனர் எனபதை பொறுத்தே விமர்சனம் இருக்கும். மதம் என்ற நம்பிக்கை, அடையாளமாக இருந்தாலும் அது தனி வாழ்க்கை தளத்திலிருந்து பொது தளத்திற்கு வந்து ஏற்படுத்தும் பிரச்சனைகளை ஆத்திக நாத்திக விவாதங்களில் முன்நிற்கின்றன. அது செயல்பாடுகளை பொறுத்துதான். எதிலுமே நம்பிக்கை அற்றவனாக ஒருவன் இருக்க முடியாது. அய்யா காமகிழத்தான் சொன்ன மனித துன்பங்கள்- துன்பங்களா இல்லையா என்பதை தத்துவமாக, வாழ்வியலாக, மனோரீதியாகவே அனுகவேண்டும்.
Bill Bryson ன் A Short History of Nearly Everything மறுவாசிப்பு செய்த போது, அது மிக எளிமைபடுத்தப்பட்டதாக இருந்தாலும், சில விஷயங்கள் அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டு வாழ்க்கைக்கு உதுவும். எல்லாமே அணுக்கள்தான் என்கிறார்..))))
செஸ் சுட்டிக்கு நன்றி..
சகோ ஏலியன்,
ReplyDeleteGnostic என்னும் ஆங்கில சொல்லை சரியாக மொழி பெயர்க்க இயலவில்லை.
Gnosticism (from gnostikos, "learned", from Ancient Greek: γνῶσις gnōsis, knowledge) is a term describing a collection of ancient religions which basically taught that the material world created by the demiurge should be shunned and the spiritual world should be embraced.
இவர் மத புத்தகம்,உய தேடல் சார்ந்த ஆன்மிக ஞானி. இவருக்கு மதம் சார் கடவுள் அல்லது எந்த கடவுள் மேலும் பிடிப்பு இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
க்னாஸ்டிக் என்றாலே ஆத்திக நாத்திகத்திற்கு இடைப்பட்டவர் ஆகிறார். இதில் க்னாஸ்டிக் ஆத்திகர்/நாத்திகர் என்பது சரியா?
உங்களின் கேள்வி எனக்கும் வந்தது!! மிக்க நன்றி!!!
நன்றி!!
சகோ சாதிக் ,
ReplyDeleteமிக்க நன்றி!!
சகோ நரேன்,
ReplyDeleteமாற்றி விட்டேன். மிக்க நன்றி!!!
//ஆத்திகனோ, முழுமையான நாத்திகனோ இருக்க முடியாது.///
ReplyDeleteஅப்படியா?