Wednesday, June 26, 2013

செயற்கைக்கு எதிரான இயற்கையின் சீற்றம்!!.தீர்வு உண்டா????



வணக்கம் நண்பர்களே,

கடந்த சில நாட்களில் நடந்த மூன்று விடயங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்தின.அவையாவன!!

1.வட இந்தியா குறிப்பாக உத்தரகாண்ட்  வெள்ளம்& பேரழிவு

2. சவுதியில் வேகமாக பரவும் மெர்ஸ்[MERS:Middle East Respiratory Syndrome] வைரஸ்& மருந்து கண்டுபிடிப்பில் காப்புரிமை அரசியல்.

3. மும்பை அடுக்குமாடி குடியிருப்புகள் இடிதல்.

இந்த மூன்று விடயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றினாலும் ,இவையனைத்தும் செயற்கைக்கு எதிரான இயற்கையின் சீற்றம் எனவே வரையறுக்கலாம்.

1)உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் அமைந்த கோயில்களூக்கு பலர் புனிதப்பயணம்  செல்வது கடந்த சில ஆண்டுகளில் அதிகரிக்க,அது வணிக மயமாக்குதலில் ,காடுகளை அழித்து விடுதிகள்,உணவகங்கள் கட்டப்பட்டதும், இயற்கை சூழல் உலக முழுதுமே பாழ் படுத்தப்படுவதால் ஏற்றபட்ட புவி வெப்பமயமாதலினால் உலகைன் தட்ப வெப்ப சூழல் கணிக்க முடியாத படி மாறி வருவது கண்கூடு.

புவி வெப்பமயமாதலினால் கணிக்க முடியா பெருவெள்ளம், புனிதப் பயணம் வணிமயமாக்குதலில்,மிக சிலரே வசிக்கும் இடங்களில் இலட்சக் கண்க்கானோர் கூடியதும்,1000 பேருக்கு மேல் பலியாகவும்,பல்லாயிரம் பேர் உயிருக்கு போராடி மீளவும் வழி வகுத்தது.

உத்த்ரகாண்ட் விபத்தில் பலியான சகோதரர்களுக்கு நம் அஞ்சலி. இப்படி ஆபத்து மிகுந்த இடங்களை புனிதப்ப்யணம் அல்லது சுற்றுலா என எந்தப் பெயரிலும் தவிர்க்க்லாம் என்பதே நம் வேண்டுகோள்.

இப்படி புனிதப் பயணங்களுக்கு முன் எவ்வளவு மக்கள் போய் வர முடியும், இயற்கைச் சூழல் எப்படி உள்ளது, வருமுன் காப்போனாக பேரிடர் மேலாண்மை எப்படி செய்ய முடியும் என் திட்டமிடாமல் கூட்டம் சேருவதை தடுப்பது அரசின் கடமையாகும்

கங்கை வெள்ளத்தில் சிவனின் சிலை இழுத்து செல்லப்பட்டது, நமக்கு இன்னும் ஒரு விடயத்தை ஞாபக்ப் படுத்தியது. காளி அன்னை, சிவனை மிதித்து நடனம் புரியும் காட்சியை ஞாபகப் படுத்தியது. உண்மையில் இயற்கை [பார்வதி] அன்னையின் நடனத்தின் முன் சிவன் தோற்றுவிட்டார்!!.
திருவிளையாடலில் ஆணாதிக்க கதையாக அன்னை  தோற்றது போல் காட்டியது பொய்யே!!!


மத புத்தகங்களில் உள்ள இயற்கைக்கு மேம்பட்ட விடயங்களைத் தவிர்த்து,அவை இயற்கையை அறிய,உணரமுடிந்த ஞானியரின் அறிவு சார் விளக்கங்கள் எனப் பார்க்கும் மனநிலை நமக்கு உண்டு.
Bogotá : Building A Sustainable City


சிவம் பொருள் என்றால்,சக்தி ஆற்றல் பொருள் அழிந்து ஆற்றல் மிகுவது இயல்புதானே!!! பிரப்ஞ்சமே சிவனின் உடல் என இந்திரா சவுந்தரராஜன் நாவல் ஒன்றில் கூட வரும்.

ஆயினும் நாம் இயற்கையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டுமே தவிர ,இயற்கையை கட்டுப்படுத்தி மனம் போனபடி வாழ்ந்து விடுவோம் என்பது பேதமை.

பிரபஞ்சத்தில் அனைத்தும் இயற்கைதானே,எது செயற்கை என கேள்விக்கு இப்படி விடையளிக்கலாம்.

இயற்கை மாறும் தன்மை உடையது, அம்மாற்றத்தின் இயக்கமே பரிணாமம். இந்த மாற்றத்தை துரிதப் படுத்தும் எதுவும் செயற்கையே.

இயற்கையான காய்கரி,இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழி,ஆடு,மாடு போன்றவற்றை உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதும், மரபணு மாற்றம் செய்த, வேதிமுறை பதப்படுத்தப்பட்ட உணவு உண்போர் ஆரோக்கியம் அற்றும் இருப்பதை .கா ஆக சொல்லலாம்.
*****
2)சவுதி உள்ளிட்ட பல் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவி வரும் மெர்ஸ் வைரஸ் என்பது சுவாசித்தலில் பல் சிக்கல்களை உருவாக்க்கு உயிர்க் கொல்லி நோய் ஆகும். இத்னை ஏற்படுத்தும் வைரஸ் சவுதி சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இதற்கு சுமார் 50 பேர் வரை பலியானதால் சவுதி அரசு ,இந்த வைரசுக்கு மருத்து காணும் பொறுப்பினை நெதர்லாந்து வைரஸ் ஆய்வு அமைப்பு [Erasmus Medical Center in Rotterdam]ஒன்றிடம் கொடுத்தது.

அந்த அமைப்போ அந்த வைரஸ் சார்ந்த ஆய்வுகளுக்கு காப்புரிமை பெற்று,வேறு ஆய்வுகள் தன் அனுமதி இல்லாமல் நடக்க கூடாது என்கிறது. சவுதி அரசு எதுவும் செய்ய இயலாமல், எப்படியாவது மருந்து கொடுங்கள் என் கெஞ்சி நிற்கிறது.

The normally civil world of international health diplomacy was shattered yesterday, when Saudi Arabia complained that a patent taken out by Dutch scientists who isolated the Middle Eastern Respiratory Syndrome (MERS) virus was impeding Saudi efforts to track the virus within its own borders.
"Deals between scientists because they want to take intellectual property… are issues we need to address," said World Health Organization director-general Margaret Chan in response. "No IP will stand in the way of public health."
The Dutch researchers, based at Erasmus Medical Center in Rotterdam, the Netherlands, say the patent does nothing to stop the Saudis developing their own tests for the coronavirus that causes MERS. The Dutch have themselves developed and published tests for both the virus and antibodies to it, essential for tracking its spread. And they say they have sent the virus to 40 labs, some of which are developing their own tests, and that they are willing to send the virus to any laboratories who can handle it safely.

வருடாந்தர ஹஜ் பயணத்திற்கு கூட பல கெடுபிடிகள் விதிக்கப்படலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.  

  1. The applicant must submit proof of vaccination for meningitis and ACYW135. For infants and children up to fifteen (15) years of age, a vaccination report is required for polio as well as meningitis and polio. Children over fifteen (15) years of age should present the same vaccinations requested for adults.
            a. meningitis and ACYW135.
            b. The seasonal (or common) flu, which should be taken two weeks before applying for the visa.
            c. The H1N1 flu, if a vaccine is made available before Hajj season, and should be taken two weeks before
                     applying for the visa.
            d. Infants and children up to fifteen (15) years of age should provide a vaccination report for meningococcal and polio. 
            e. Children above fifteen (15) years of age should present the same vaccinations requested for adults.
            f.  Health experts advise the following groups to postpone their plans for Hajj and Omrah this year for their             own safety: The elderly, the terminally ill, pregnant women, and children.
பொ.ஆ 1928ல் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் கண்டறிந்த பென்சிலின் முதல் கிருமி எதிர்ப்பு மருந்து[antibiotic] ஆகும், அதன் பிற்கு கண்டுபிடிக்கப்பட்ட பல ஆன்டிபயாட்டிக் &இத்ர மருந்துகள் அம்மை, போலியோ போன்ற பல நோய்களை இல்லாமல் செய்தன. மனித்னின் ஆயுள் சராசரி உய்ர்ந்து 70+ ஆனது.

ஆனால் பரிணாம வளர்ச்சியில் வைரஸ்கள் ஆன்டிப்யாடிக் மருந்துகளை மீறி செயல்படும் விதத்தின் வளர்ந்தது மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

மருந்தகத் துறையில் டார்வினிய மருந்தகம் என்னும் துறை இப்படி சிக்கல்களை தீர்க்க முயல்கிறது. இதனை  ஒவ்வொரு நாடும் தேவையான செலவு செய்து வளர்ப்பது அவசியம்.

அதிலும் வைரஸ்களுக்கு ,நோய்களுக்கு காப்புரிமை என்பது தவிர்க்கப்பட வேண்டும். இன்னும் பரிணாம்ம என்பது கட்டுக்கதை,அதைப் படிக்க மாட்டோம் என்னும் சொல்லும் நாடுகளில் அடுத்த தலைமுறை இருக்காது!!!

நம் நாட்டிலும் ஒவ்வொருவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை என்பது கட்டாயம் ஆக்கப்பட்டு, அனைவருக்கும் இலவச சுகாதாரம் ,அது சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப் படுதல் நன்று. இல்லை எனில் இதிலும் பேரிடர் நிகழும் வாய்ப்பு உண்டு.
**
3) மும்பை அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இடிதல்.

விவசாயம் இலாபம் அற்ற தொழில் ஆனதாலும், சாதி இன முரண்களாலும் ,இயற்கை வளம் சுரண்ட அரசின்[பனாட்டு நிறுவனக்கள்] நில கையகப் படுத்தும் திட்டங்களினாலும்  கிராமங்களில் வாழ்வாதாரம் இழந்த மக்கள் நகரங்களை நோக்கி வருகிறார். மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஏற்ப ,வீடுகள் இன்மையால், சட்ட விதிகளை மீறி பாதுகாப்பு அற்ற வகையில் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்னும் கான்கிரீட் பொந்துகள் கட்டப்படுகின்றன..

அதுவும் சரியாக பராமரிக்கபடாததால்,இப்படி கட்டிடங்கள் இடியும் அபாயம் அடிக்கடி நிகழலாம்.

********
சரி இவற்றுக்கு தீர்வுதான் என்ன???
நடப்பது அனைத்தையும் எவரும் சரியாக் கணிக்க முடியாது என்றாலும், சூழலுக்கு ஏற்ற இயல்பான வாழ்வு முறை எது என் கண்டறிதலே முக்கியம்.
சென்னையின் மக்கள் தொகை 45 இலட்சம், சென்னையில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு மாவட்டத் த்லைநகரிலும் கிடைக்கும் என்றால்,குறைந்த பட்சம் சென்னையில் புதிதாக குடியேறுபவர்களின் தொகை குறையும். இரண்டு குழந்தை மட்டும் பெறும் குடுமபங்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் தரலாம்.மையப்படுத்தப் பட்ட உற்பத்தி,விநியோகம் முறை தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டம் சார்ந்த சுதேசி உற்பத்தி,விநியோகம் செய்யலாம்.


ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு ,அதற்கு வட்டியில்லா கடன்,வீட்டின் 10 கி.மீ சுற்றளவில் அருகிலேயே வெலை வாய்ப்பு,அதிகம் சைக்கிள், ரிக்சா போன்ற்வை பயன்படுத்துதல்,சூரிய ஒளி ப்யன்பாடு ஒவ்வொரு மாவட்டத்தில் கிடைக்கும் பொருள்களுக்கு ஏற்ப உணவு,வாழ்வுமுறை என ஒவ்வொருவரும் அரசின் மேற்பார்வையில் வாழ்தல் பல சிக்கல்களைத் தவிர்க்கும் என்றாலும், இது தீர்வின் தொடக்கம் மட்டுமே.

14 நாட்களில் குறைந்த செலவில்,சூழலுக்கு ஏற்ற வீடு கட்டும் நிறுவனம்!!!

IRIS KOTO System is a smart, green, high-speed, energy-efficient, sustainable, fully integrated building system for commercial, high rise, upmarket and affordable housing projects. 


This building system requires minimal tools, unskilled labour, uses far less concrete and steel, no connections or fixing and no timber formwork. 

Houses can now be built faster, resulting in higher efficiency, higher margins and cost savings, not to mention happier house owners!



இப்படி முயற்சிகளை முன்னெடுக்கும் போது அதன் நடைமுறைச் சிக்கல்கள் ஆவணப்படுத்தப்ப்ட்டு மாற்றுத் தீர்வுகள் முயற்சிக்க‌லாம்.

நம் நாட்டின் பிரச்சினைகளை தீர்வு காணும் கல்வி,ஆய்வுகளே முன்னிலை 
அளிக்கப்பட வேண்டும்.


சுருக்கமாக சொன்னால் இயற்கையை அறிந்து,உணர்ந்து பகிர்ந்துண்டு வாழ்வோம்!!
நன்றி!!!

9 comments:

  1. எப்போ எத்தனை பேர் செத்தாங்க எத்தனை பேர் மாட்டிக் கொண்டிருக்கலாம் என்றெல்லாம் புள்ளி விவரம் வேண்டுமானால் எடுக்கலாம். தீர்வெல்லாம் கிடையாது. அப்படி தீர்வு இருந்திருந்தால் இன்றைக்கு இவை நடந்தே இருக்காது. "இயற்க்கை சீற்றம்" நடந்தது, நடக்கிறது இன்னமும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண முடியாது.

    ReplyDelete
    Replies
    1. கண்ணு ,

      இப்படியெல்லாம் நாத்திகம் பேசபடாது .
      உங்க வேதத்துல மற்றும் கீதைல எதாச்சும் தீர்வு இருக்கா .. சொல்லுங்க வேணும்னா திருப்பதி வெங்கட்டுக்கு கையூட்டு வேணும்னா கொடுத்துடலாம் .

      நன்றி,
      செல்வகுமார்

      Delete
    2. மீன் மார்க்கெட்டுக்கு வந்திட்டு அங்கே நாறுது, சந்தனமும் ஜவ்வாது வாசனையும் வரணும் அப்படின்னு கேட்பது போல இருக்கு.

      நீங்க சுகமளிக்கும் ஜபக் கூட்டங்களை பார்த்து பார்த்து ஓஹோ.... மதத்தை நம்பிட்டா கஷ்டங்கள் ஜீரோவாயிடும் நினைப்பீங்க போலிருக்கு. சாரி, நாங்க அப்படி எந்த பிராமிசும் தருவதில்லை.

      Delete
  2. what happened to the blog of இக்பால் செல்வன?

    ReplyDelete
  3. சகோ ,
    அருமையான் கட்டுரை .
    மனித குலத்திற்கு பயன்படும் மகத்தான கண்டுபிடிப்புகள் தனியார் லாப வெறியால் காப்புரிமை பெறப்பட்டு முடங்கி பொகின்றது .
    இயற்க்கை மனிதனுக்கும் மற்றும் அணைத்து உயிர்களுக்கும் பொதுவானது . அதை தனியொருவன் சுயநலத்துக்காக பயன்படுத்தும் போது இது போன்ற சீற்றங்கள் தவிர்க்கவியலாதது .

    நன்றி...
    செல்வகுமார்

    ReplyDelete
  4. நம் நாட்டின் பிரச்சினைகளை தீர்வு காணும் கல்வி,ஆய்வுகளே முன்னிலை
    அளிக்கப்பட வேண்டும்.

    அந்த நாளும் வந்திடவேண்டும்..!
    இயற்கைச் சீற்றத்திலாவது பாடம் கற்கவேண்டும் நம்நாடு..!

    ReplyDelete
  5. //இப்படி புனிதப் பயணங்களுக்கு முன் எவ்வளவு மக்கள் போய் வர முடியும், இயற்கைச் சூழல் எப்படி உள்ளது, வருமுன் காப்போனாக பேரிடர் மேலாண்மை எப்படி செய்ய முடியும் என் திட்டமிடாமல் கூட்டம் சேருவதை தடுப்பது அரசின் கடமையாகும். //

    2004-ல் மகாமகம் கும்பகோணத்தில் கைகுழந்தையை வைத்துக்கொண்டு இரயிலில் இடம்பிடிக்க முடியாமல் தவித்த தம்பதிகளுக்கு கூட யாராலும் உதவ முடியாதளவுக்கு கூட்டம் அலை மோதியதை பார்க்க நேர்ந்தது.

    மக்களும் இதை உணர வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமை.

    ReplyDelete
  6. செயற்கையே இல்லாவிடினும் இயற்கை தனது ஆக்க அழிவு தொழிலை விடாமல் செய்துகொண்டுதான் இருக்கும். ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தினால் எந்த ஒரு அழிவும் பெரும் அழிவாக தோன்றுகிறது. நீங்கள் சொன்ன சென்னைக்கான ஐடியா முழு இந்தியாவிற்குமே தேவையாகிறது. ஆனால் நம்மவர்கள சீனா மாதிரி கடும் சட்டம் வரும் வரைக்கும் திருந்த போவதில்லை.

    இயற்கை வாழ்விடத்தை அழிப்பதாக முன்பு பழங்குடியினர் மட்டுமே போராடினார். உத்தரகண்டில் காளியே அவளின் வாழ்விடத்தை அழிப்பதால் தாண்டவமாடிவிட்டாளாம். மனிதரின் ஆசை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆதலால் அடக்கமின்மையும் அமரருள் தான் உய்க்கும் போலிருக்கிறது!

    ReplyDelete