Tuesday, December 31, 2013

புத்தாண்டில் இன்பமாக வாழ வாத்துகிறோம்

வணக்கம் நண்பர்களே,

2014ல் இருந்து பதிவுலகில் தொடர்ந்து இயங்க வேண்டும் அதாவது குறைந்த பட்சம் மாதம் இரு பதிவுகள் என்னும்  என்னும் உறுதி மொழியோடு இவ்வருடத்தின்  கடைசிப் பதிவினை இடுகிறேன்.
****
நம் மதிப்பிற்குறிய இயற்கை அறிவியலாளர் அய்யா  திரு நம்மாழ்வார் மறைவுக்கு அஞ்சலி . இயற்கையோடு இணைந்த வாழ்வினை நோக்கி மனித சமூகம் சென்றாகவே வேண்டும்.அதற்கான அவரின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் குடும்பம்,நண்பர்களுடன் அவரின் இழப்பை பகிர்கிறோம்.

***
ஆம் ஆத்மி கட்சியின் திடீர் விசுவரூபம் நம்மை எந்த அளவு வியப்பில் ஆழ்த்துகிறதோ அதே அளவு அதன் திட்டங்கள் பற்றிய சாத்தியக் கூறுகள் பற்றியும் யோசிக்க வைக்கிறது. எனினும்  சாதி,மதம் ,இனம்,மொழி சாரா புதிய கட்சி,புதிய நடைமுறைகள் இந்தியர்களுக்கு தேவைதான். அவர்கள் நன்கு மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள்.


இரு பாடல்களைப் பகிர்ந்து பதிவினை முடித்து விடுவோம்!!!
முதல் பாடலில் திடீர் பணக்காரன்,முறையற்ற வழியில் சம்பாதித்து விட்டு , கடவுள் கொடுத்ததாக ஆடிப்பாடுகிறான்.



இரண்டாவது பாடல் உண்மையான இன்பம் என்றால் என்ன எனக் காட்டுகிறது

அனைவரும் இன்பமாய் வாழ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

நன்றி!!!

9 comments:

  1. இனம் மொழி மதம் பேசாத ஆம் ஆத்மியின் வெற்றி வியப்பானதே! தமிழகத்தில் என்றால் தமிழ் தமிழா, தமிழன் அழிகிறான் என்று உணர்ச்சி பெருக்கெடுக்க வைத்தால் தான் வெற்றி பெறமுடியும். அரச அலுவலகங்களில் லஞ்சம் அறவே கிடையாது என்பது பல நாடுகளில் உள்ள சிறந்த முன்னுதாரணம்.ஆனா இவங்க இதர திட்டங்களின் நடைமுறை சாத்தியம் பற்றி தான் தெரியல்ல.
    சகோவுக்கு புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மாதம் மும்மாரி என்பது போல, வாடிய நெஞ்சங்களுக்கு மாமுவின் மாதமிருமுறை பதிவுகள் சபாஷ். [அங்க யாருப்பா கிழிஞ்சது போ.....ன்னு சொல்றது.........!!]. பதிவுதான் ரெண்டுன்னு சொன்னீங்க, அது சரி எதுக்கு மாமு கருத்து பெட்டிகள் ரெண்டு வச்சிருக்கீங்க?!! [வீடியோவுக்கு மேலே ஒன்னு, நான் பதிவு முடிஞ்சு போச்சே எங்கேடா வீடியோவைக் காணோம்னு குழம்பிட்டேன்......................ஹி ஹி ..........ஹி .....]

    ReplyDelete
  3. அய்யய்யோ, என்னோட பிரவுசர் பிரச்சினை போல, இப்போ சரியாயிடுச்சு!!

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே உம்மட ப்ரௌசர் மட்டும் அல்ல ட்______ம் கிழிந்து நாளாகிறது ஹி ஹி வாழ்க வளமுடன்!!!
      நன்றி!!!

      Delete
  4. Happy pongal!

    Ullasa ulagam enakkee sontham saiyada ....saiyada....jalsa seyya da...seyya da ...Aadaludan paadalai keettu rasippathilee thaan sugam...:-))

    ReplyDelete
  5. என்ன சகோ, புதுவருட கொண்டாட்ட சரக்கு ஓவராயிடுச்சோ? பதிவுதலைப்பில் எல்லோரையும் இந்த வாத்து வாத்துறீங்க?

    எனிவே உங்களுக்கும் எமது வாத்து.. சீ... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. மாதம் இரு பதிவுகள்.
    இன்று தேதி 29.
    இன்னும் முதல் பதிவே காணோம். புதுவருட உறுதிமொழி ஒரு மாதத்துக்கூட தாக்குப்பிடிக்கவில்லையே.
    என்ன கொடுமை சார்வாள் இது.

    ReplyDelete
  7. சகோக்கள் அனைவருக்கும் நன்றி,
    பணியின் காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை. தொடர்ந்து எழுதுவோம்.

    சகோ வானம் வாழ்த்தும் பதிவுதான் ஹி ஹி மொத்தம் இரண்டு கண்க்கு சரியா!!
    அம்பிகாபதி படம் ஞாபகம் வருதா ஹி ஹி!!!!
    நன்றி!!!

    ReplyDelete