Saturday, March 29, 2014

ஆரிய திராவிட கருத்தியல்கள் ஆய்வின் படி சரியா?


வணக்கம் நண்பர்களே,

இந்தியாவில்,குறிப்பாக நம் தமிழகத்தில் ஆரியர்,திராவிடர் என்ற கருத்தியல் மீது அடிக்கடி விவாதங்களைக் கேட்கிறோம். அரசியலில்  இந்த கருத்தியல் மிகுந்த தாக்கம் செலுத்துகிறது என்பதை நாம் அறிவோம்.
இப்பதிவில் அதற்கு வரலாற்று, அறிவியல் ரீதியான சான்றுகள் உண்டா என்பதை அறிய முயற்சி செய்வோம்.
 ***

ஆரிய திராவிட கருத்தியல் என்றால் என்ன?

இதனை ஆரியர்  ஊடுருவல் கொள்கை(Aryan invasion theory) எனவும் பலரால் அழைக்கப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம்( பொ., மு (3300–1300) பூர்வகுடிகளாகிய திராவிட இனத்தவருடையது.இவர்களின் உருவ அமைப்பு ,கருப்பு நிறம், உயரம் குறைவானவர்கள்,சிவனை வழிபட்டவர்கள்,தமிழ்க் குடும்ப மொழிபேசியவர்கள்.

ஆரியர் என்போர் மத்தியக் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள், இரான்,அரபு,ஐரோபியர்கள் உடன் நெருங்கிய ,உருவ,மொழித் தொடர்பு கொண்டவர்கள். சம்ஸ்கிருத குடும்ப மொழி பேசியவர்கள்.குதிரை பயன்படுத்தியவர்கள்.இவர்களின் வருகை பொ..மு 1500 ல் இருந்து தொடங்கியது. இவர்கள் திராவிடர்களைத் தோற்கடித்து தெற்கே விரட்டினர்.வேதங்களில் வரும் தேவர் அசுரர் போர் என்பது ஆரிய திராவிட போரை குறிக்கிறது.

பிறகு மத,மொழி,இனக் கலப்பு நிகழ்ந்து அவை சாதிகளாக பரிணமித்தன‌. இன்றுவரை தொடர்கிறது.

***

இதற்கு மாற்றுக் கருத்து(out of india theory) இந்துத்வ சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது.


இந்திய மக்கள் அனைவருமே ஆரியர்கள்.இந்தியாவில் இருந்துதான் ஆரியர்கள் மத்திய கிழக்கு,ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் மூலம்.இந்தியர்களின் உருவ அமைப்பு வேறுபாடுகளுக்கு காரணம் தட்ப வெப்ப நிலை, வாழும் சூழல் மட்டுமே. இந்திய ஆரியர் திராவிடக் கருத்தியல் ஆங்கிலேயரின் திக் கோட்பாடு. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்சி சரஸ்வதி நதி நாகரிகம்( 3300 B.C. and 2700 B.C) எனவும் கூறுகின்றனர். மேலும் துவாரகையில் பொ..மு 10000 லேயே(அதற்கும் முன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆல் என்றும்) நாகரிகம் இருந்தது எனவும் நிறுவ முயல்கின்றனர் 


மேலே சொன்ன இரு கருத்தியல்களின் வரையறையை முடிந்தவரை எளிமையாக சொல்லி இருக்கிறேன். ஏதேனும் விட்டுப் போய் இருந்தால் பின்னூட்டங்களில் நண்பர்கள் கூறலாம்,பதிவில் இணைத்து விடுகிறேன்.


ஆய்வு முடிவுகள் என்பது உணர்ச்சிகளாலோ அல்லது விருப்பு வெறுப்பு சார்ந்தோ இருந்தால் அவை நீடிக்க இயலாது.தொடர்ந்து கிடைக்கும் சான்றுகள் அடிப்படையில் ஆய்வின் முடிவுகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் நலம்.

வரலாறு ஆவணப்படுத்தல் என்பது கடந்த இருநூற்றாண்டுகளில் நடந்த விடயங்களை ஒரு அளவுக்கு ஆதார பூர்வமாக சொல்ல இயலும். காலத்தின் முன்னோக்கி செல்ல செல்ல சான்றுகள் அரிதாக கிடைப்பதால், அதனை  மிகச்சரியாக சொல்வதில் சிக்கல்கள், சில சான்றுகளின் மேல் வைக்கப்படும் மாறுபட்ட கருத்துகள், முரண்படும் விளக்கங்கள்…….… இது எவ்வளவு கடினமான பணி என்பதை விளக்குகிறது.

பழங்கால வரலாற்று நிகழ்வுகளை அகழ்வாய்வுகள்,மொழியியல் ஒப்பீடு  போன்றவற்றால் வரையறுப்பதுதான் நடைமுறை.ஒரு கடந்த கால  விடயம் நடந்து இருக்கும் சாத்தியம் பற்றி மட்டுமே சான்றுகள் மீதான விளக்கமாக கூற இயலும்.

இப்பதிவில் அகழ்வாய்வுகள்  பற்றி விவாதிக்காமல் மொழியியல் ஒப்பீடு  ,மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதை மட்டும் சொல்லிவிடுவோம்.

சமஸ்கிருதம் ஒரு  இந்தோ ஐரோப்பிய மொழி என்பதும், திராவிட மொழிக் குடும்ப மொழிகளை விட ஐரோப்பிய மொழிகளுக்கு நெருங்கியது என்பது மொழியியல் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் ஒருமித்த கருத்து ஆகிவிட்டது. இதனை மறுக்கும் ஆவாளர்கள் குறைவு.


மேலே சொன்ன இணைய தள‌ கருத்தின்படி மத்திய ஆசியாவில் தோன்றி இந்திய மத்திய கிழக்கு, ஐரோப்பிய பகுதிகளுக்கு பரவியது 
Map of migratory routes
இந்திய ஐரோப்பிய குடும்ப மொழிகள் என்பது அறிய முடியும். சிந்து சமவெளி நாகரிகம் ரிக் வேதம் குறிப்பிடும் மொழியோ, நாகரிகமோ அல்ல, அதற்காக திராவிட மொழி,நாகரிகம் என்றும் கூற இயலாது என்பதே இப்போதைய ஆய்வுகளின் முடிவு.

 சிந்து சமவெளி எழுத்துகள் ,மொழி இன்னும் அறிய இயலாத, வகைப்படுத்த இயலாத விடயமாக உள்ளது. அந்த எழுத்துகள் அரபி,ஹீப்ரு போல் வலம் இருந்து இடமாக எழுதப் பட்டன என்பது மட்டுமே ஒருமித்த கருத்தாக உள்ளது.

 Iravatham Mahadevan published a corpus and concordance of Indus inscriptions listing 3,700 seals and 417 distinct signs in specific patterns. The average inscription contains five signs, and the longest inscription is only 17 signs long. He also established the direction of writing as right to left


சிந்து சமவெளியில் குதிரை பயன்பாடு இல்லை.
குதிரைப் பயன்பாடு என்பது ரிக் வேதத்தில் பல இடங்களிலும், (கிளுகிளு!!!!) அசுவ மேத யாகம் பற்றி பல இந்து புராணங்களிலும் குறிப்பு வருகிறது.


மொழியியல் ஆய்வுகளின் படி சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பது மட்டும் ஆரியர் திராவிடர் கருத்தியலுக்கு ஆதாரம் ஆகிவிடுமா என்றால்,குறைந்த பட்சம் எதிரானது அல்ல என சொல்ல முடியும்.

****
பாருங்கள் பரிணாம கொள்கையின் படி மனிதன்(ஹோமோ சேஃபியன்) பரிணமித்தது கிழக்கு ஆப்பிரிக்காவில் என்பது பெரும்பான்மை ஆய்வாளர்களின் கருத்து ஆகும். அதில் இருந்து சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன் உலக முழுதும் பரவினார் என்பதும் பெரும்பான்மை ஆய்வியல் முடிவு ஆகும்.

குழுவாக இடப்பெயர்வு நடக்கும் என்பதும்,இடப்பெயர்வு பல தலைமுறையாக நடக்கும் என்பதால், ஒரு இட்த்திற்கு சில  குழுக்கள் வந்து வசிப்பதும், அந்த இடம் நோக்கி இன்னும் சில குழுக்கள் வரூவதும், வாழ்வதற்காக வசதி வாய்ப்புகளுக்கான போட்டி ஏற்படுவதும் மிக இயல்பான விடயம்.

1.ஆப்பிரிக்காவில் இருந்து மத்தியக் கிழக்கில்  வசித்த குழு மக்கள் தொகை அதிகரிப்பில் பல குழுக்கள் ஆகி, இடம் பெயர்ந்து இந்தியா, ஐரோப்பா நோக்கி செல்லும் சாத்தியம் அதிகமா?

2. இந்தியாவில் ( ஹி ஹி பிரம்மாவின் உடலில் இருந்து) மனிதன் தோன்றி,இதர பகுதிகளுக்கு செல்லும் சாத்தியம் அதிகமா?
Verse 13
brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: |
ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 ||
(asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:)
the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:)
Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were
made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet
(shoodro) were the servants (ajAyata) born.
புருஷனின் முகம்(mukham)  பிராமணன் (brAhmaNo)ஆனது
புருஷனின் கை(krta:)  சத்திரியன்(rAjanya)  ஆனது
புருஷனின் தொடை(ooru) வைசியன்(vaishya)  ஆனது
புருஷனின் பாதம்(padbhyAm) சூத்திரன் (shoodro) ஆனது

3. ஆப்பிரிக்காவில் உருவான  மனித இனம், இந்தியா வந்து இங்கிருந்து ஐரோப்பா வரை பரவினார் என்பதும் சில இந்துத்வ ஆதரவு ஆய்வாளர்களின் கருத்தியல் ஆகும்.இது சாத்தியமா?


மொழிரீதியாக சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பதும்,சிந்து சமவெளி நாகரிகம் வேத கால நாகரிகத்திற்கு முந்தையது என்பதும், ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் பூமியின் பிற பகுதிகளுக்கு பரவியது என்ற பெரும்பான்மை ஆய்வு முடிவுகள் எதன் சாத்தியத்தை வலியுறுத்துகின்றன என்பதை சிந்திக்க மாட்டீர்களா?
  ***
இப்பதிவில் நாம் கூற வந்த விடயமே வேறு!!!

இந்த அகழ்வாய்வு சான்றுகள் மட்டும் அல்லாமல், நிகழ்கால சான்றாக மரபணு ஒப்பீட்டு ஆய்வுகளும் வரலாற்றை கட்டமைக்க பயன்படுகின்றது.

மரபணுரீதியாகவே ஆபிரிக்காவில் இருந்து எப்படி மனித பரவல் நிகழ்ந்தது என்ற ஆய்வினை நடத்திய ஸ்பென்சர் வெல்ஸ்(Spencer Wells) மதுரைக்கும் வந்து தமிழர்களின் மரபணுவும் பழமையான ஒன்று என் கண்டறிந்தது கூட சொல்ல முடியும்.


ஆரியர் வருகைக்கு முன்பே சாதி இருந்தது என்பது திராவிட மேன்மை கருத்தியலின் புரட்டுகளையும் வெளிக் கொண்டு வருகிறது. நாம் நல்லவர்கள், அவர்கள் கெட்டவர்கள் என்ற பார்வை கொள்வது நிச்சயம் நல்ல விளைவைத் தராது. மனிதப் பரவலில் ,முன் வந்தான் ,பின் வந்தான் என்பது வரலாற்று நிகழ்வை அறியவும்,யாரும் எந்த இடத்திற்கும் நிரந்தர சொந்தக் காரன் அல்ல என்பதை உணர மட்டுமே என்பதை வலியுறுத்துகிறேன்.


எந்த அளவுக்கு பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்துத்வ கொள்கை மனித விரோதமோ,அதே அளவு  ஆரியர் வருகையே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்னும் திராவிட கருத்தியலும் மனித விரோதமே!!!!!.

இன்னும் இந்தியர்களின் மரபணுக்களை ஆய்வு செய்த பல ஆய்வாளர்கள்(இதில் குமாரசாமி தங்கராஜ் என்னும் தமிழரும் இருக்கிறார்) கூறும் கருத்தானது,

Most Indian groups descend from a mixture of two genetically divergent populations: Ancestral North Indians (ANI) related to Central Asians, Middle Easterners, Caucasians, and Europeans; and Ancestral South Indians (ASI) not closely related to groups outside the subcontinent.
1.      இந்தியாவில் உள்ள மக்கள் குறைந்த பட்சம் இரு வித்தியாசமான‌  இனக்குழுவாக பிரிக்கலாம்.
a)ஐரோப்பியர்,மத்திய கிழக்கினர்,மதிய ஆசியர்கள்  ஆகியவர்களுக்கு நெருங்கிய ஆதி வட இந்தியர்கள்.


b) இவர்களில் இருந்து மாறுபட்ட இனக்குழுவினருக்கு(அதாவது ஆப்பிரிக்கர்கள்) நெருங்கிய ஆதி தென்னிந்தியர்கள்.

தமிழர்கள் கருப்பின மக்கள் என தோழர் கலையரசன் பல பதிவுகள் எழுதி இருக்கிறார். அவைகளைப் படிக்க பரிந்துரைக்கிறேன்.


ஆனால் இவை எல்லாம் 4000 வருடத்திற்கு முந்தைய சூழல் மட்டுமே. அதன் பிறகு இனக்கலப்பு  சுமார் 2000 ஆண்டு முன்பு வரை அதிகம் நிகழ்ந்தது.

எடுத்துக் காட்டு என்றால் வேதங்களைத் தொகுத்த  வியாசர் பராசர முனிவருக்கும், மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். திருதராட்டிரன்,பாண்டு,விதுரன் ஆகிய மூவருக்கும்  உயிரியல் தந்தை(biological father) வியாசர்.

 அருச்சுனனுக்கும் ,நாகர் குலப் பெண்ணுக்கும் பிறந்தவன் அரவான், பீமனுக்கும் அரக்கர் குலப் பெண்ணுக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.கிருஷ்னனின் மகன் பிரத்யும்னன் தன்னை வளர்த்த மாயாவதி என்னும் பணிப்பெண்ணை மணம் முடித்தான்( ஹி ஹி இதுதான்  கிளுகிளு இரதி நிர்வேதம் கதையின் அடிப்படை!!!).


அரச குடும்பங்களில் கலப்பு இருக்கும் போது பிற சொல்லத் தேவை இல்லை!!!


ஆகவே ஆரியர் வருகையின் பிறகும் இனக்கலப்பு இயல்பாக இருந்தது என்றால் சாதி உயர்வு தாழ்விற்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை!!! ரிக் வேதத்தில் 10வது காண்டத்தில்தான் வர்ணம் பற்றிய குறிப்பு முதலில் வருகிறது. அதன் பிறகு சடங்குகள் சாதிரீதியாக வரத் தொடங்குகிறது.வேதங்கள் தொகுக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆனது என்பதை சிந்தித்தால் கணக்கு சரியாக வரும்.


அதன் பிறகு அமலுக்கு வந்த சாதி அமைப்பு, சாதிரீதியாக மட்டுமே திருமணத்தை வலியுறுத்தியது.

சாதி எப்படித் தோன்றியது  என்பது குறித்து இன்னும் ஒருமித்த கருத்து நான் அறிந்த வரை இல்லை. அரசு இழந்த பவுத்தர்கள் தாழ்த்தப்பட்டவர் ஆக்கப் பட்டார்கள் என அம்பேத்கார் கூறுகிறார்.

ஆகவே 2000 வருடம் சாதி ரீதியாக , அகமண முறை அமலில் இருந்தாலும், சாதிப்பெருமை,தூய்மை பேசும் பெருந்தலைகள் மேன்மை பாராட்டினாலும், இந்திய மக்கள் கலப்பின மக்கள்தான்.


ஆகவே ஆரியர்  வருகை,அதற்கு முந்தைய ஆப்பிரிக்க இனத்தவர் இங்கு வந்து வாழ்ந்தமை  எல்லாம் பழைய கதை. அனைவரும் ஒன்றோடு ஒன்றாக 2000 வருடம் கலந்து விட்டோம்.
Between 4,000 and 2,000 years ago, intermarriage in India was rampant. Figure by Thangaraj Kumarasamy
அதன் பிறகு தோன்றிய சாதிக் கட்டமைப்பு  2000 வருடமாக இன்றுவரை நீடித்தாலும், ஆயிரம் கதை சொன்னாலும் உண்மையை மறைக்க முடியாது.

ஆகவே நமது முந்தைய உண்மையான வரலாறான  இனக் கலப்பு மணங்கள் முன்னெடுத்து, வலுவான சந்ததியை உருவாக்க முயற்சி செய்வதே இந்தியா வல்லரசு மட்டும் அல்லாமல் நல்லரசு ஆகும் ஒரே வழி!!!!

 திராவிடர் எனப்படும் ஆப்பிரிக்கர்களுக்கு நெருங்கிய இனக்குழுக்கள் முந்தி வந்தமையும்,அதன் பிறகு ஐஅரோப்பிய மத்திய ,கிழக்கு ஆசிய  மக்களுக்கு நெருங்கிய இனக்குழுக்களும் வந்திருக்கும் சாத்தியம் அதிகம்.சான்றுகள் அதனை சுட்டினாலும், அதன் பிறகு 2000 வருடம் நடந்த இனக்கலப்பில் ,ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டனர்.சாதி என்னும் மனித விரோத அமைப்பு மனிதர்களை கூறு போடாலும் நமது மரபணுவில் பொதிந்த உண்மைகள் சாதி அமைப்பு என்பது   போலி என்பதை நிரூபிக்கிறது.


எதிர் விவாதம் செய்ய விரும்பும் நண்பர்கள் தங்கள் தரப்பு சான்றுகளை சுட்டி வாதங்களை வைக்க வேண்டுகிறேன்.அதாவது

)சமஸ்கிருதத்தில் இருந்தே மொழிகள் தோன்றின,

)இந்தியாவில் மனிதன் தோன்றினான்,

) சிந்து சமவெளி நாகரிகம்தான் வேத கால சரஸ்வதி நாகரிகம்((அதுதான் இது செந்தில் பாணி)

)ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்து மத்திய கிழக்கு போய் ஐரோப்பா சென்றான்.

) மரபணு ஆய்வுகள் சதிக் கோட்பாடு.

ஊ) சொந்தமாக ஏதேனும்………………..

இக்கருத்துகள் ஏதேனும் சிலவற்றின் மீது சான்று ரீதியாக முன் வைக்கலாம்.
அதை விட்டு ஆரிய திராவிட கருத்தியலுக்கு 100% ஐயந்திரிபர நடந்த போது எடுத்த காணொளி மூலம் விளக்க முடியாமையால்  மாற்றுக் கருத்தான வேத கால நாகரிகமே உண்மை என நகைச்சுவை பண்ணக் கூடாது!!!!காணொளி கிடைத்தநித்தி விடயத்தையே இந்துத்வர்கள் போலி என்கிறார் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் (வாரணாசித் தொகுதியை மோடியிடம் ஏமாந்த) முரளி மனோகர் ஜோஷி தலைமையில் துவாரகையை தேடுகிறேன் எனத் தோண்டி புரளிகள் கிளம்பியதுதான் மிச்சம், ஒரு செம கட்டையை(மரம் சகோ) எடுத்து அது 20000+ வருடம் பழமை என கதை விட்டனர்.இனி மோடி வந்தால் சொல்லவே வேணாம்!!!

(பிற மத வழிபாட்டுத் தலம்) இடிக்க,(ஆதாரம் வேண்டித்)  தோண்ட இந்துத்வர்களுக்கு ஓட்டு போடுங்கள்!!! ஹி ஹிநன்றி!!!

28 comments:

 1. //எடுத்துக் காட்டு என்றால் வேதங்களைத் தொகுத்த வியாசர்//
  // அரச குடும்பங்களில் கலப்பு இருக்கும் போது பிற சொல்லத் தேவை இல்லை!!!//

  நான் அரச குடும்பத்து கதையெல்லாம் சொல்லாமல், ஒட்டு மொத்தமாக, “சுவர் ஏறிக் குதித்தது ...” என்று சொல்லி விடுகிறேன். அவை எங்கு தான் இல்லை. இதைப் பற்றி என் பதிவில் சொல்லி, இன்னும் கலப்படம் இல்லாத சாதின்னு எதையும் சொல்லாதீங்கன்னு சொல்லியிருக்கேன்.

  //ஆகவே ஆரியர் வருகையின் பிறகும் இனக்கலப்பு இயல்பாக இருந்தது என்றால் சாதி உயர்வு தாழ்விற்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை!!! //

  இது புரியவில்லை. சாதி அமைப்புகள் உருவாகின. அதன்பின் இனக் கலப்பு இருந்தாலும், இன்றும் பலர் தங்கள் சாதி கலப்பில்லாத சாதின்னு நெஞ்சைத் தூக்கிட்டு திரியறது இல்லையா ... இனக் கலப்பால் சாதியின் ‘மகிமை’ குறையணும். ஆனால் சாதி ஆழமாக மனதிற்குள்ளும் சமூகத்திற்குள்ளும் பதிந்தல்லவா போய் விட்டது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தருமி அய்யா,
   வணக்கம் சகோ வவ்வாலின் வாதங்களை கவனியுங்கள்.
   Thank you

   Delete
 2. என்ன மாமூல் மாமு,

  ரொம்ப நாளா ஆளையே காணோம்??!!

  ஒரு இடத்தில் 3300 B.C. and 2700 B.C போட்டிருக்கீறு, அது புரியுது, அதென்னது பொ.ஆ, மு ?? இப்படியெல்லாமா மனுஷனை சாவடிப்பீறு? எதாச்சும் ஒரு முறையை பின்பற்றலாமே?

  என்னை மாதிரி எளிமையானவர்களுக்கு எல்லாம் புரியும்படி பதிவு போட மாட்டீரா? அம்பதெட்டாயிரம் தொடுப்பு, பாதிக்கு மேல புரியாத இங்கிலீஸ், அப்புறம் நீர் எழுத்தும் பாகிஸ்தான் தமிழ். செத்தாண்ட சேகரு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாப்ளே,
   நலமா?
   உமக்கு புரியும் ஒரே விடயம் கிளுகிளு இரதி நிர்வேதம் திரைப்படத்தின் மூலக் கதை உம்ம கிருஷ்ன பர்மாத்மாவின் மகன் ப்ரத்யும்னன் வாழ்க்கை என சொல்லி இருக்கிறேனே. அது கூடவா புரியலை!!!!!!

   மற்ற்படி சகோ நரியின் பதிவின் சாரம் படியும் .நன்றாக புரியும்.

   வெண்டைக்காய் சாப்பிடுவது இல்லையா?சாப்பிட்டால் முளை வளரும் என்பது உண்மை இல்லையா??? ஹி ஹி

   நன்றி!!

   Delete
 3. ஆரியர் வருகை அப்படி ஒண்ணு உண்மையிலே இருந்திச்சா, இருந்தது என்றால்
  ஆரியர் வருகையின் பிறகும் இனக்கலப்பு இந்தியாவில் இருந்து வருகிறது என்றால் ஜாதி பார்த்து மனிதர்களை இழிவுபடுத்தும் முறைக்கும் ஆரியர் வருகை எந்த தொடர்புமில்லை என்றே சகோ சொல்லவாறார். ஜாதின்னு நெஞ்சைத் தூக்கிட்டு திரியறவங்க, பச்சை தமிழன் என்று நெஞ்சைத் தூக்கிட்டு திரியறவங்க எல்லாமே கலப்புகளே தான்.

  ReplyDelete
  Replies
  1. சகோ நரி வாங்க.
   பதிவினை நன்கு விளங்கியமைக்கு நன்றி!!! பதிவின் சாரம் உமது பின்னூட்டம்
   வாழ்த்துக்கள்.

   Delete

 4. சார்வாகன்,

  நீண்ட நாட்களாச்சி பதிவுப்பக்கம் பார்த்து?

  சரியாக சாதிய படிநிலை உருவாக்கத்தின் வரலாற்றினை புரிந்துக்கொள்ளவில்லையோ எனத்தோன்றுகிறது?

  //ஆகவே ஆரியர் வருகையின் பிறகும் இனக்கலப்பு இயல்பாக இருந்தது என்றால் சாதி உயர்வு தாழ்விற்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை!!! //

  எப்படி இதனை சொல்கிறீர்கள் என தெரியவில்லை?

  ஆரியர் அல்லது வேத மதக்குழுவினர் வரும் முன்னர் இந்தியாவில் இனக்குழு படிநிலை என்பது போன்ற ஒன்று மட்டுமே இருந்தது.

  அது ஒரு அடையாளம் மட்டுமே, பிறப்பால் செய்தொழில் வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை.

  ஒரு படி நிலையில் இருப்பவர் தனது திறமையால் வேறு படி நிலைக்கு உயரலாம்ம்,தடையேயில்லை.

  அதனால் தான் மாடுமேய்க்கும் தொழிலை செய்த யாதவர்கள் கூட அரச வம்சம் ஆனது.

  ஒரு பகுதியில் எந்த ஒரு தொழிலை செய்யும் இனக்குழு அதிகமோ அவர்களில் ஒருவர் "அங்கு தலைவர்" அவ்வளவே.

  விவசாயம் செய்யும் பகுதியில் வேளாண் இனக்குழு தலைவர், மாடுமேய்க்கும் தொழில் அதிகம் இருக்கும் பகுதியில் ஆயர்குல தலைவன், மண்பாண்டம் செய்யுமிடத்து அவர்களில் ஒரு தலைவன், மலையகப்பிரதேசத்தில் வேட்டையாடும் இனக்குழு தலைவன் என இருந்தது.

  ஒரு தலைவன் இறந்த பின்னர் , வலிமையான ஒருவன் தலைவன் ஆனான்,அல்லது தலைவனின் வாரிசை ஏற்றுக்கொண்டால் அவனே தலைவன்.

  இல்லை எனில் யானை கையில் மாலைக்கொடுத்து போட சொல்லி தலைவனை தேர்ந்தெடுப்பதும் நடந்திருக்கலாம்( தொன்ம இலக்கியங்களில் இருக்கே)

  சத்ரியன் ,பிராமனன், வைசியன் ,சூத்திரன் என பிறப்பால் " தொழில்" நிர்ணயமில்லை, அவரவர் விருப்பப்படி தேர்வு செய்யலாம்.

  அதனால் தான் வள்ளுவர் கூட,


  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
  செய்தொழில் வேற்றுமை யான்.

  மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
  கீழல்லார் கீழல் லவர்.

  ரொம்ப தெளிவாக்கவே சொல்லியிருக்கிறார்.

  எனவே மனு என்பதனை உருவாக்கி பிறப்பின் மூலம் சமூக படிநிலைகளை நிலை நிறுத்தியது வேதமதத்தினரே ,அப்படியிருக்க ஆரியர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லைனு எப்படி சொல்கிறீர்கள் என தெரியவில்லை.

  இனக்கலப்பு ஆரியர்களின் வருகையின் போதும், அதன் பின்னரும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது ,பின்னர் படிப்படியாக "மனு" என்றப்பெயரில் பிறப்பால் சமூகபடி நிலைகளை நிலை நிறுவி அதனை ஜாதி என்றழைக்கலாயினர். இதெல்லாம் "ஆரிய மாயைகளே"!

  தொடரும்...

  ReplyDelete
 5. சகோ வவ்வால் வாங்க,
  1./சரியாக சாதிய படிநிலை உருவாக்கத்தின் வரலாற்றினை புரிந்துக்கொள்ளவில்லையோ எனத்தோன்றுகிறது?//
  ஆம்.ஆனால் புரிய முயற்சி எடுக்கிறேன்.நல்ல நூல்கள் அல்லது சுட்டிகள் அளித்தால் நலம்.

  2.இப்பதிவில் ஆரியர்( ஐரோப்பியருக்கு நெருங்கிய இனக்குழுக்கள்) வருகை, அதற்கு முந்தைய திராவிடர்(ஆப்பிரிக்கர்களுக்கு நெருங்கிய இனக்குழுக்கள்) ஆகிவற்றை மொழியியல்,மரபணு சான்றுகள் நிரூபிக்கின்றன என்பதுதான் பதிவின் முக்கியக் கருத்து.இந்த வருகை 3000 பொ.ஆ.மு ல் இருந்து தொடங்கியது,பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தது. முதலில் இனக்க்லப்பு இயல்பாக இருந்தது, ஒரு 2000 வருடத்திற்கு பிறகு சாதி என்னும் அமைப்பு அமலுக்கு வருகிறது.

  இந்த சாதி அமைப்பும் பரிணமித்து இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. சாதி உருவாக்கத்திற்கு ஆரியம் திராவிடம் கலந்த கலப்பினத்த்வரே காரணம் என்பதே என் வாதம்.மனுவும் கலப்பினத்தவ‌னதான்.

  இந்த மனு தர்மம்( பொ.ஆ.மு 500) சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட்மையால் அனைத்துக்கும் ஆரியரே காரணம் என சொல்ல முடியுமா?
  சம்ஸ்கிருதம் ஒரு கட்டமைக்கப்பட்ட ,கலப்பு மொழி.

  பிராகிருதம் சம்ஸ்கிருதத்திற்கு முந்தைய மக்க்ள் மொழி.

  3/ஆரியர் அல்லது வேத மதக்குழுவினர் வரும் முன்னர் இந்தியாவில் இனக்குழு படிநிலை என்பது போன்ற ஒன்று மட்டுமே இருந்தது.

  அது ஒரு அடையாளம் மட்டுமே, பிறப்பால் செய்தொழில் வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை.

  ஒரு படி நிலையில் இருப்பவர் தனது திறமையால் வேறு படி நிலைக்கு உயரலாம்ம்,தடையேயில்லை.

  அதனால் தான் மாடுமேய்க்கும் தொழிலை செய்த யாதவர்கள் கூட அரச வம்சம் ஆனது.//

  இவை ஆரியர் வருகை முன் என எப்படி சொல்ல முடியும் சகோ? மகாபாரதம் திராவிடர்களின் கதையா?கலப்பினத்தவர் கதையா?

  (contd)

  ReplyDelete
  Replies
  1. /எனவே மனு என்பதனை உருவாக்கி பிறப்பின் மூலம் சமூக படிநிலைகளை நிலை நிறுத்தியது வேதமதத்தினரே ,அப்படியிருக்க ஆரியர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லைனு எப்படி சொல்கிறீர்கள் என தெரியவில்லை.//


   வேத மதத்தினர் சுத்தமான ஆரியர் என சொல்ல முடியுமா? கலப்பினத்தவன்தான்.

   //இனக்கலப்பு ஆரியர்களின் வருகையின் போதும், அதன் பின்னரும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது ,பின்னர் படிப்படியாக "மனு" என்றப்பெயரில் பிறப்பால் சமூகபடி நிலைகளை நிலை நிறுவி அதனை ஜாதி என்றழைக்கலாயினர். இதெல்லாம் "ஆரிய மாயைகளே"!
   //
   அதே!!!! ,ஆரிய இனத்தூய்மை என்னும் மாயையை விதைக்க முயன்று வெற்றி பெற்ற கலப்பின மனுவின் கோட்பாட்டுக்கு அறிவியல் சான்று இல்லை என்கிறேன்.

   சரியா?

   இருப்பினும் தங்களின் கருத்தை விள்க்கமாக காலரீதியாக கூறவும்.

   நன்றி!!!

   Delete
 6. தொடர்ச்சி...

  # ஃபார்முல ஒன் கார் ரேஸ் டிரைவர் மைக்கேல் ஷூமாக்கார் , குடும்ப வழித்தொழிலாக " காலணி- ஷீ" தயாரிப்பவர்களே, அதனால் பெயரிலேயே ஷீ மாக்கர் என வைத்திருக்கிறார்கள். மேலையுல வழக்கப்படி தொழில் என்பது தொழில் மட்டுமே , அது பிறப்பால் "உயர்வு, தாழ்வை" கொடுக்காது.

  அதே செருப்பு தயாரிக்கும் தொழிலை செய்பவரை இந்தியாவில் எப்படி நடத்துகிறார்கள் என அறிவீர்கள் தானே?


  "Butcher" என்ற பெயரின் பின்னால் "குடும்ப" பெயராக கொண்டவர் தொழில் இறைச்சி வெட்டும் தொழில் கொண்டார்களை குறிப்பது.

  smith- கொல்லர் தொழில் செய்பவர்களை குறிப்பது.

  Haywards- வைக்கோலை காப்பவர் ,அல்லது நிலத்தினை காப்பவர்கள்.

  stewards- அரண்மனை பணியாளர்களாக இருந்தவர்கள்.

  இப்படி அவர்கள் செய்த தொழிலை குடும்ப பெயர்களாக கொண்டாலும் , அனைவரும் ஒரே குடிமக்களாக மட்டுமே ஐரோப்பிய உலகில் இடம் கொடுக்கப்படும்.

  கொல்லர்களாக இருப்பவர்கள் நிலப்பிரபுக்களாக உயர்ந்து , அரச பரம்பரை "லார்ட்" ஆகலாம், உ.ம் ஆடம் ஸ்மித் என்ற பொருளாதார மேதை அக்கால இங்கிலாந்து "லார்ட்" , அதாவது குறுநில மன்னர் ஆவார்கள். ஒரு கவுண்டிக்கு மன்னர்களாக கருதப்படுவார்கள். பெரிய நிலப்பரப்பிற்கு மன்னர் என்றால் மேஜர் கவுண்டி, அதை விட சிறிய நிலப்பரப்பு என்றால் மைனர் கவுண்டி.

  நம்ம நாட்டில் நிறுவப்பட்ட சமூகப்படி அமைப்பு -சாதி ஆனது பிறப்பால் ஒரு தொழிலை நிர்பந்தப்படுத்தி , அதனை தவிர செய்ய தகுதி இல்லை என்றது ,இதனை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

  மனுவை புகுத்திய ஆரியர்களே? ஆரியர்கள் வருகைக்கு முன்னர் , சிறிது காலம் ஆனப்பிறகும் கூட "தொழிலால் சாதியம்" உருவாகவில்லை ,ஆனால் ஆரிய சித்தாந்தம் வேருன்றிய பின்னர் , தொழிலால் சாதியம் அது பிறப்பால் அப்படியே தொடரும் என "மனு" வாக்கிவிட்டார்கள்!

  மன்னர்களாக முடிசூட வேண்டும் என்றாலும் " பிராமண முறைக்கு" மாற்ற வேண்டும் என விதி உருவாக்கி " பட்டாபிஷேகம்" என ஒன்றை உருவாக்கி அன்று பூநூல் அணிவித்து பின்னரே "மன்னராக முடியும் என்றார்கள், இதெல்லாம் ஆர்ய வருகைக்கு முன்னர் இல்லையே?

  மன்னராக பதவி ஏற்பவரை புனிதராக்க செய்யும் "சடங்க்கினை" எகிப்திய கலாச்சாரத்தில் இருந்து தான் கொண்டு வந்துள்ளார்கள், எகிப்திய பாரோக்கள் மன்னராக பதவி ஏற்கும் நாளில் அவரை "கடவுளின் வழித்தோன்றலாக்கி" விடுவார்கள் இதனை பிரைஸ்ட்ஹூட் என்கிறார்கள். அன்றே அவருக்கு எகிப்திய கோயிலில் சிலை வைத்துவிடுவார்கள் :-))

  எகிப்திய கலாச்சாரம் ,அப்படியே கிரேக்க ,ரோமானியாவுக்கும் போயிற்று, அதுவே மத்தியஆசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தது.

  ஆர்ய வழிமுறைகள் கோட்பாடுகள் இடைக்காலத்தில் தான் இந்தியாவில் நன்கு வேரூன்றின, தமிழகத்தில் சொல்லப்போனால் , கி.பி 7-8 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே.

  தமிழ் நாட்டில் மன்னர்களை "தெய்வாம்சம்" எனக்குறிக்க தேவ எனபெயரின் கூட சேர்க்கும் வழக்கும் பிற்கால சோழர்களின் ஆட்சியின் போது ஏற்பட்டது.

  ராஜ ராஜ சோழத்தேவர் எனப்பட்டம் போட்டதால் தான் ,இன்றும் அவரை தேவரின அரசனாக போஸ்டர் ஒட்டுகிறார்கள், ஜாதியம் இப்படித்தான் துவங்கியது!

  ReplyDelete
  Replies
  1. சகோ வவ்வால்,
   உங்கள் கருத்துகளின் சாரம்

   1.ஆரிய வருககைக்கு முன்பு சாதிப்பிரிவுகள் இருந்தன. ஆனால் உயர்வு தாழ்வு இல்லை.

   2. ஆரியர் வந்து கொஞ்ச நாள்( அதாவது பதிவின் படி 2000 வருடம்)சும்மா இருந்தார்கள் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக மனுதர்மம் கொண்டு வந்தார்கள்.

   3. அப்புறம் சாதியை உறுதியாக நிலை நிறுத்தினார் ஆரியர்.
   ***

   இதனை நான் ஏற்கவில்லை. ஆரிய திராவிட கல‌ப்பினத்தவர், சமூக அமைப்பில் பரிணமித்தது சாதி என்னும் சமூக படிக்கட்டு அமைப்பு என்பது நம் கருத்து.

   எனினும் சாதி உருவாக்கம்,வரலாறு குறித்து இன்னும் அறிய விரும்புகிறேன். கொஞ்சம் தரவுகள் பரிந்துரையுங்கள்

   //மன்னராக பதவி ஏற்பவரை புனிதராக்க செய்யும் "சடங்க்கினை" எகிப்திய கலாச்சாரத்தில் இருந்து தான் கொண்டு வந்துள்ளார்கள், எகிப்திய பாரோக்கள் மன்னராக பதவி ஏற்கும் நாளில் அவரை "கடவுளின் வழித்தோன்றலாக்கி" விடுவார்கள் இதனை பிரைஸ்ட்ஹூட் என்கிறார்கள். அன்றே அவருக்கு எகிப்திய கோயிலில் சிலை வைத்துவிடுவார்கள் :-))//

   சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் அறிஞர் அண்ணா அரசர்களை ,மதகுருக்கள் எப்படி ஏமாற்றுகிறார் என்பதை விளக்கி இருப்பார்.ம்ம்ம்ம்ம்ம்
   ப்ரீடம் அட் மிட்னைட் நூலில் நேருவுக்கும் இப்படி ஏதோ பதவி சடங்கு செய்ததாக படித்து இருக்கிறேன்.

   நன்றி!!!

   Delete
 7. கொஞ்சம் விட்டுப்போனது...

  பிற்கால சோழர்களுக்கு பட்டாபிஷேகம் செய்விப்பது , அரசனாக மூடிசூட்ட்டுவதை எல்லாம் தில்லைவாழ் அந்தணர்கள் தான் செய்ய வேண்டும், அதுவும் எப்படி எனில் , ஒரு அந்தணர் தன்னையே சிவனாக உருவகித்து காலை தூக்கி சோழன் மன்னன் தலையில் வைத்து , மூடிசூட்டுவதாக அறிவிக்க வேண்டும் :-))

  ராஜராஜ சோழனுக்கு சிவபாத சேகரன் அதாவது சிவனை பாதத்தினை சுமப்பவன் எனப்பட்டப்பெயர் கூட உண்டு, அவனது கிரிடத்தில் பாதம் போல உருவம் பொறித்திருக்கும், அது தான் சோழர்களின் பரம்பரை மணிமுடி,அதனை தலையில் வைத்து காலை வைத்து "தில்லைவாழ் அந்தணர்கள்" ஆசிர்வதிப்பதே பட்டாபிஷேகம் :-))

  இப்படியெல்லாம் கட்டமைத்தது "வேதமதக்குழுவினர்" அவர்களே ஆர்யர்கள்!

  ReplyDelete
 8. நீண்ட நாள்களுக்கு பின்னர் சார்வாகன் வருகை. அருமையான பதிவோடு.

  ஆரியர் - திராவிடர் என்ற சொல்லையே மானுடவாய்வாளர்கள் ஏற்பதில்லை. வட இந்திய பொது மூதாதையர், தென்னிந்திய பொது மூதாதையர். இங்கு வட இந்திய பொது மூதாதையர் என்போர் மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஊடாக வந்தோர். தென் இந்திய பொது மூதாதையர் கற்காலத்தில் இங்கு வந்த மக்கள்.

  தென் இந்திய பொது மூதாதையர் எப்படி இருப்பார்கள் என யாராவது விரும்பினால் சிறைச்சாலை படம் பாருங்கள், அதில் அந்தமான் பழங்குடிகள் வருவார்கள். கறுத்த உருவம், குட்டையான அகலமான உடலமைப்பு கொண்டவர்கள் . அவர்கள் தான் உண்மையான தெனி இந்திய மூதாதையர்.

  வட இந்திய மூதாதையர் எப்படி இருப்பார்கள் என கேட்டால், அப்படியே கசுமீர், ஆப்கான், வடக்கு பாகிஸ்தான் மலையடிவாரம் போனால், அங்கு இன்றளவும் வேத கால மதங்களை பின்பற்றிக் கொண்டு கலாஷ் என்ற பழங்குடிகள் இருக்கின்றனர். அவர்கள் தான்..

  அதற்கு இடைப்பட்ட பகுதியில் சுத்த ரத்தம் கொண்ட எந்த பயலும் கிடையாது, எல்லாம் கலப்பினமே. தெற்காசியாவில் யாராவது ஒருவரின் கலியாண வீட்டுக்குப் போங்கள், அத்தை மாமா, சிற்றப்பா, சிற்றம்மை, மாமன் மச்சான் சகளை என ஒரு பட்டாளமே வரும், அதில் அமர்ந்து கொண்டு அனைவரின் தோற்றத்தைக் கவனியுங்கள். அதில் எப்படியும் கறுப்பு, சிவப்பு, மாநிறம் என பல வர்ணங்களில் சொந்த பந்தம் இருக்கும். இது ஒன்றே போதும் நாம் எல்லோரும் கலப்பினம் என்பதற்கான ஆதாரம்.

  ஆரிய மொழி பேசும் அனைவரும் ஆரியருமல்ல, திராவிட மொழி பேசும் அனைவரும் திராவிடரும் அல்ல, எல்லாமும் எல்லாவற்றிலும் உண்டு.

  வெள்ளைத் தோல் அதிகமுள்ல பஞ்சாப், கசுமீர், அரியானா, ராஜஸ்தான் மற்றும் கொங்கணம், குடகு, துளுநாடு, வட கேரளம் உட்பட அனைத்து பகுதிகளிலும் கூட கறுப்பு தோல் சொந்தம் பந்தம் உண்டு.

  கறுப்பு தோல் அதிகம் காணப்படும் உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவற்றிலும் வெள்ளைத் தோல் சொந்தங்கள் உண்டு.

  ஆக இனம் என்பது வெறும் கற்பிதமே... ஒழிய மரபணு ரீதியில் ஒன்றுமே இல்லை.

  பார்ப்பனர்களின் மரபணுவை ஆராய்ந்தாலே அந்தந்த பகுதியில் உள்ள பிற சாதி மரபணுக்கள் கலந்துள்ளன. எல்லாம் மதில் தாண்டிய பூனைகள் தான்.

  ஆரிய மொழி பேசிய மக்கள் வந்தது தொடக்கம் பவுத்தம் சரியத் தொடங்கி குப்தர்கள் ஆட்சி தொடங்கிய வரைக்கும் கலப்பினம் தடையில்லாமல் போய் கொண்டிருந்துள்ளது. அப்போதைய பாலியல் சுதந்திரம், கலாச்சாரம் வேறு வகையில் இருந்துள்ளதை வரலாறும், இலக்கியங்களும் காட்டுகின்றன.

  குப்தர்கள் வருகையோடு சாதி கட்டுமானம் இறுகியதோடு, கலப்பு மணங்களும் குறையத் தொடங்கின, நல்ல வேளையாக மதில் ஏறிக் குதித்தோரின் தயவால் கலப்பு மறைமுகமாக் நிகழ்ந்துள்ளது.

  இதே குப்தர்கள் தான் மனு சாஸ்திரத்துக்கு சட்ட வடிவம் அளித்து அதை நாடு முழுவதும் பரப்பியோர்.

  ஆரியர் வருகையின் முன் இங்கு சாதிகள் கிடையாது, ஆனால் குலங்கள் கோத்திரங்கள் உண்டு, அதே சமயம் கலப்பு மணம் சர்வ சாதரணமாய் நிகழ்ந்துள்ளதை சங்கப் பாடல்களின் அகநானூறு ஒன்றே சாட்சி.

  குலங்கள் குடிகளை நால்வருணத்தில் இணைத்து சட்டமாக்கி சமூக கடமையாக்கி கலப்பு மணத்தை தடுத்தவர்கள் பார்ப்பனரே. இது தாம் பெற்ற சமூக உயர்வு நிலையை தக்க வைக்க அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த ஏற்பாடே. அதன் நீட்சி இன்று வரை தொடர்கின்றது.

  இருபதாம் நூற்றாண்டின் கடைசி வரையில் இந்த கலப்பு மணம் வெகுவாக தடுக்கப்பட்டு வந்தன, அதாவது அகத்தில் என்ன கலப்பு நடந்தாலும் பரவாயில்லை புறத்தில் சாதியும் சாத் சார்ந்த சமூக அந்தஸ்தையும் தக்க வைப்பதில் முனைப்பாகவே உள்ளனர்.

  சாதி மதம் இனம் மொழி சார் அடையாளங்களில் மரபணுக்களை தேடியோர் தோல்வியே கண்டுள்ளனர். கொங்கு நாட்டு தமிழரின் மரபணுக்கள் மைசூர் காரணோடு ஒத்து போகின்றதும், ஈழத் தமிழரின் மரபணுக்கள் சிங்களவனோடு ஒத்துப் போவதும், ஸ்ரீரங்கத்து பார்ப்பனரின் மரபணுக்கள் தஞ்சையின் சூத்திரரோடு ஒத்துப் போவதும் காலம் செய்த கோலமடா.. மதில் மேல் பூனையடா..

  :))))

  ReplyDelete
 9. சகோ.சார்வாகன்,

  நீங்கள் மேலும் பல சொல்லி இருப்பின், அடிப்படையில் சொல்ல வரும் கருத்து ,

  //ஆரிய திராவிட கல‌ப்பினத்தவர், சமூக அமைப்பில் பரிணமித்தது சாதி என்னும் சமூக படிக்கட்டு அமைப்பு என்பது நம் கருத்து.//

  இதற்கு ஆதாரமில்லையே?

  ஆனால் தொழில் என்பது பிறப்பால், அத்தொழிலால் சாதி என கட்டமைத்தது "மனு" என தொன்ம சான்றுக்ள் உள்ளன.

  புருஷ சூக்தம் அதன் பின் மனு என்ற சமஸ்கிருத "இலக்கியங்கள்" தொன்ம இந்தியாவில் இல்லையே :-))

  #//இந்த சாதி அமைப்பும் பரிணமித்து இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. சாதி உருவாக்கத்திற்கு ஆரியம் திராவிடம் கலந்த கலப்பினத்த்வரே காரணம் என்பதே என் வாதம்.மனுவும் கலப்பினத்தவ‌னதான்.//

  மக்களிடையே படி நிலைகள் என்பது , கிமு 3000 காலத்திலேயே எகிப்திய கலாச்சாரத்திலேயே இருந்துள்ளது ,

  கிரேக்க ரோமானிய இனக்குழுக்களிலும் ,அரச வம்சம், நோபிள் கிளாஸ், காமன் மேன் என மூன்று படி நிலை உண்டு.

  எனவே அப்படிநிலைகளை அங்கிருந்து வரும் போது கையோடு எடுத்து வந்துவிட்டார்கள் எனலாம்.

  தொன்ம இந்தியாவில் "சிறு இனக்குழு" என கிராம அமைப்பில் தான் கிமுவில் வாழ்ந்தார்கள் ,வலிமையானவன் தலைவன், அவரவருக்கு செய்ய தெரிந்த வேலைகளை செய்தார்கள்.

  இந்தியாவில் வரலாற்றினை பதிவு செய்யும் வழக்கமே இல்லாத நிலை அப்பொழுது.

  //பிராகிருதம் சம்ஸ்கிருதத்திற்கு முந்தைய மக்க்ள் மொழி.//

  பிராகிருதம் என்பது என்ன மொழி?

  இடமிருந்து வலமாக எழுதிய எழுத்து முறை எல்லாமே பிராகிருதமே.

  அப்பொழுது கலவையாக பல மொழிகள் "பிராகிருத" எழுத்து வடிவில் எழுதப்பட்டிருந்தன.

  பிராகிருதத்திற்கு முன்னரே வழக்கில் இருந்தது பாலி ,கரோஷ்தி ,மைதிலி போன்றவை.

  பாலி மொழியே ஒலியியல் மொழி,அதனை பிராகிருத எழுத்தில் எழுதினார்கள்.

  கரோஷ்தி என்பது வலமிருந்து இடமாக எழுதும் எழுத்து அவ்வளவே ,அவ்வடிவிலும் பாலி எழுதப்பட்டது.

  பொதுவாக சொல்லப்படுவது என்னவெனில் பிராகிருதம் எழுத்து மொழி , பாலி வழக்கு மொழி என.

  புத்தர்காலத்தில் எல்லாம் பாலி தான் கோலோச்சியது.

  பின்னர் சமஸ்கிருதம் , பிராகிருத எழுத்தில் எழுதப்பட்டது , கொஞ்சம் மாத்தி எழுதி "பிரம்மி" என பேர் வச்சு அதான் பழமையானது , பிரம்மா வியாசருக்கு கற்றுக்கொடுத்த எழுத்துமொழி என புராணம் கட்டிக்கொண்டார்கள்.

  பிரம்மி என்பதை ஸ்தாபித்ததே மாக்ஸ் முல்லரும், ஜியார்ஜ் ஃபியூலரும் தான் அதற்கு முன்னர் பிரம்மி என எந்த எழுத்து மொழியையும் வரலாற்றில் குறிக்கவே இல்லை :-))

  ஐரோப்பியர்கள் வந்து தான் எல்லாத்துக்கும் பேரு வச்சாங்க, அதுவும் "பிராம்மன" அறிஞர்கள் துணையோடு எனவே எல்லாமே ஆர்ய ஆதிமூலம் கொடுத்துவிட்டார்கள்.

  # மதம்,இனம் என குறிப்புகள் உருவானது எல்லாம் மகாவீரர் ,புத்தர் காலத்துக்கு பின்னர் தானே?

  தொன்மையான இந்து மதம் என்பவர்களால் , அப்படியான மத தலைவர்களாக ஒருவரையும் காட்ட முடியாது?

  ஏன் எனில் அப்பொழுது " இந்து மதம்" வைதீக கோட்பாடுகளை போன இடத்தில் எல்லாம் நிறுவிக்கொண்டு தான் இருந்தன ,அது மதமாக கூட இல்லை , வைதீக கோட்ப்பாடுகள் "ஒரு சட்டம்" போல தான் ஆர்யர்கள் வருகையினால் பரப்பப்பட்டது.

  எங்கெங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ ,என்ன வழிப்பட்டார்களோ அவற்ரை எல்லாம் "கோட்பாடு" என உருவாக்கி இப்படித்தான் செய்யணும் என உட்புகுத்திக்கொண்டார்கள்.

  சமூக படிநிலை மையக்கோட்ப்பாட்டினை கொண்டு வந்தது ஆர்யர்கள், பின்னர் கலப்பினமானவர்களை வைத்து நிலை நிறுத்தினார்கள்!

  ReplyDelete
 10. சகோ.சார்வாகன்,

  கீழ்க்கண்ட நூல்கள் தற்சமயம் நினைவுக்கு வருது. படித்துப்பார்த்தால் ஓரளவுக்கு இந்திய சமூக,மத நிலைகள் எப்படி இருந்து எப்படி மாறிச்சு என ஒரு புரிதல் கிடைக்கும்.

  The religious life of india- The village gods of south india
  by
  Henry whitehead.D.D

  The bishop of Madras.

  # Caste and tribes of South india

  by
  E.Thurston.

  # Religion and society among the goorgs of southindia
  by
  M.N.Srinivas

  # சங்கக்கால தமிழ் மக்கள்

  வித்வான்.க.வெள்ளைவாரணர்.

  # அறியப்படாத தமிழகம்

  தொ.பரமசிவம்

  இதில் நிறைய சுவையான சம்பவங்கள் இருக்கு,எப்படி "ஒடுக்கப்பட்ட மக்களாய் மாற்றப்பட்டார்கள் என சில சொல்லி இருக்கிறார்,ஆனால் என்ன ஆதாரமென தெரியாது.

  பறையர்கள் எனப்படுவர்கள் ஆதியில் இசைக்கலைஞர்கள்,விவசாயிகளாம்,அக்கால தமிழகக்கோயில்களில் இசைவாசித்துள்ளார்களாம், பின்னர் பார்ப்பனர்கள் தான் "கீழ்மைப்படுத்தியதாக சொல்கிறார்.

  # whoe were the shudras

  by

  B.R.Ambedkar


  # Indian anthropology- History of anthropology in india

  by

  Dr.abhik Ghosh

  இவரது கட்டுரையில் நிறைய மானிடவியல் ஆய்வாளர்கள் பெயர்கள்,நூல்களின் பெயர்கள் என குறிப்பிட்டிருக்கும்,அவற்றை இணையத்தில் தேடி விரிவாக படிக்க முயற்சிக்கலாம்(அப்படித்தான் நான் சில நூல்களைப்பிடித்தேன்)

  # மேலும் எகிப்திய, ரோமானிய , அரேபிய, ஐரோப்பிய வரலாற்று நூல்களில் படித்ததை வைத்து ,அதன் சமூக கட்டமைப்பினை கொண்டு ,இந்தியாவில் நிலவும் சூழலை ஒப்பிட்டே , எதன் தாக்கம் என "என்னளவிள்" புரிந்ததை சொல்லி வருகிறேன்.

  நிறைய நூல்கள் இன்டெர்நெட் ஆர்கைவைசில் இலவசமாக கிடைக்கிறது, இந்த நூல்களின் பெயரை கொடுத்து தேடினாலே கிடைத்துவிடும், இவை போல பல பிடிஎஃப்கள் என்னிடம் உள்ளது, அவ்வப்போது படித்தது, இதனால் என்ன பிரச்சினை எனில் எந்த புக்கில் எதைப்படித்தேன் என எனக்கு நினைவில் வராது ,எனவே தோராயமாக இதான் சாரம்சம் என சொல்லிவிடுவது தான் :-))

  ReplyDelete
 11. ஆரியர்களெல்லாம் இப்போ அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு போய்ட்டாங்க.
  :)

  ReplyDelete
 12. வள்ளுவர் சாதி குறித்து எதுவும் எழுதவில்லை, ஒருவேளை அப்போது சாதி இல்லாமல் இருந்திருக்கும், மனிதனின் உயர்வு தாழ்வை 'பிறப்பெக்கும் எல்லா உயிர்கும்' என்று குறளில் சொல்லி உள்ளதாக சிலர் கூறுவதுண்டு, ஆனால் அந்த குறள் மனிதனின் செயல்கள் மற்றும் பிற உயிரினங்களையும் ஒப்பிட்டு வருவதாகும். அவ்வையார் காலத்திற்கு முன் சாதி நுழைந்திருக்கக் கூடும் அதனால் தான் சாதி இரண்டொழிய என்கிற சாதி எதிர்ப்பை பதிய வைத்திருக்கிறார்

  ReplyDelete
 13. நண்பர் சார்வாகன், அருமையான பதிவு. உங்கள் பதிவின் சாராம்சத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். ஆரிய திராவிட கலப்பு போக, இன்னும் இங்கிருந்த முண்டா வெளியில் இருந்து வந்த சகா, கிரேக்க, ஹன் எல்லா கலப்பும் தான் நாம். திரு இக்பால் செல்வனின் கருத்துகளுடனும் உடன்படுகிறேன்.

  சங்ககால தமிழகத்தில் சாதி இருந்ததா என்று பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் ஒரு ஆய்வு அறிக்கை செய்துள்ளார். அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களை கொண்டு சங்க மருவிய காலத்துக்கு முன்பே சாதி இருந்தது என்றும் கீழோராய் புலையர் நடத்தபட்டதாகவும் கூறுகிறார். பிராமணீயம் தமிழகத்துள் தலையெடுக்கும் முன்பே இங்கே நிலவி வந்த தமிழ் மத நம்பிக்கைகளின் ஊடே இந்த மேலோர் கீழோர் வேறுபாடு வந்ததாக சொல்கிறார்.
  http://tamilnation.co/caste/hart.pdf

  இந்த மேலோர் கீழோர் பிரிவை இன்றைய சாதி அமைப்பின் மூலம் என்று சொல்லாமல், அதை போன்ற ஒன்று என்றும் இன்றைய அமைப்பின் காரணிகளில் இது ஒன்றோ என்ற கேள்வியின் ரீதியாக இவர் ஆய்வு செல்வதை காணலாம்.

  இவர் ஆய்வுக்கு மாற்று கருத்து இல்லாமல் இல்லை. திரு சுடலைமுத்து பழனியப்பன் இதை மறுத்து indology list இல் நல்ல முறையில் விவாதம் புரிந்து வந்தார். ஆயினும் மறுப்பு ஆய்வாய் வெளி வந்ததாய் தெரியவில்லை. இது தொடர்பாக வேறு ஆய்வுகள் நீங்கள் அறிந்திருந்தால் சுட்டுங்கள். பயனுள்ளதாய் இருக்கும். நன்றி.

  ReplyDelete
 14. கணேசன்,

  //இந்த மேலோர் கீழோர் பிரிவை இன்றைய சாதி அமைப்பின் மூலம் என்று சொல்லாமல், அதை போன்ற ஒன்று என்றும் இன்றைய அமைப்பின் காரணிகளில் இது ஒன்றோ என்ற கேள்வியின் ரீதியாக இவர் ஆய்வு செல்வதை காணலாம்.
  //

  அய்யோ அய்யோ , அப்போ பிறப்பின் அடிப்படையில் மேலோர் கீழோர் என பாகுபாடு சந்ததிக்கு செல்லும் தொழில் பிறப்பின் அடிப்படையில்னு சொல்லி இருக்கா?

  சும்மா தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டிக்கிட்டு அலையாதீர், உம்மை போன்ற வெறியர்களின் பின்னூட்டம் "எந்த மாதிரி" கருத்துள்ள இடத்தில் மட்டும் தலை தூக்குதுனும் பார்த்துட்டு தான் வாரேன் :-))

  தமிழ்நேஷனில் வந்தது என தூக்கிட்டு வரும் நோக்கம் என்ன ? தமிழ்நேஷனுல் வரும் மற்ற கட்டுரையை நீர் ஏற்பீரா? உடனே அவங்கலாம் ஈழத்துக்கோஷ்டினு ஓடிற மாட்டீர் :-))

  ஈயென இரத்தல் இழிந்தன்று ,ஈயேன் என அதனினும் இழிந்தது.

  பிச்சை இல்லைனு சொன்னால் இழிவுனு சொல்லி இருக்கு , எனவே வாழ்நாளில் பிச்சை போடமாட்டேனு சொல்லாமல் வாழ்ந்தால் தான் மேலோர் , இப்போ நீங்க சில்லறை இல்லைனு ஒரு பிச்சைக்காரனிடம் சொல்லிட்டால் "கீழோர்" உங்க வம்சமே கீழோர் வம்சம் என குறிப்பிடலாமா?


  நீங்க என்ன செஞ்சீங்களோ அதான் உங்க பையனுக்கும் , நீங்க இழிந்துவிட்டால் உங்க வம்சமே அப்படினு வச்சிக்கிடலாம், இப்போ சொல்லுங்க சங்கம் மறுவிய காலத்தில் புலையர்கள் எப்படி இருந்தாங்க ?

  ReplyDelete
 15. கருத்துகளுக்கு பதில் வைக்க தெரியாமல் வவ்வால் செய்துள்ளது இரண்டு
  காரியங்கள்
  .
  1. தரம் கெட்ட தனி மனித விமர்சனம்/தாக்குதல்.
  2. கோர்வை அற்ற பல தவறான தகவல்கள்.

  இவருடன் நேர விரயம் செய்ய நான் விரும்புவதில்லை. ஆயினும் ஒரு நல்ல ஆய்வு கட்டுரையை பற்றி பல தவறான தகவல்கள் சொல்லப்பட்டிருப்பதால் சில குறிப்புக்கள் கீழே கொடுத்து விலகி கொள்கிறேன்.

  1. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் ஆய்வு கட்டுரையை tamilnation தளத்தில் எழுதி பதிக்கவில்லை. கட்டுரை
  Dimensions of Social Life: Essays in honor of David G. Mandelbaum, Edited by Paul Hockings Mouton de Gruyter, Berlin, New York, Amsterdam, 1987.
  என்ற தொகுப்பில் வெளி வந்தது. யாரோ ஒருவர் கட்டுரையை pdf வடிவில் tamilnation தளத்தில் ஏற்றி வைத்துள்ளார். சார்வாகன் பார்க்க இந்த pdf வோட லிங்கை நான் கொடுதேன் அவ்வளவே. கட்டுரைக்கும் tamilnationக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

  2. சங்க நூல்களில் பல இடங்களில் இழிபிறப்பாளன், இழிபிறப்பினோன் என்ற பதங்கள் வருகிறது. உ.ம் புறநானூறு 170இல் "இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப" என்று முரசு அறைபவர் கை சிவக்க அறைவதை பற்றி வருகிறது. புறநானூறு 363 இல் "இழிபிறப்பினோன் ஈயப் பெற்று" என்று வருகிறது. இது போன்ற ஆதாரங்களை கொண்டு தான் ஜார்ஜ் ஹார்ட் பிறப்பு சார்ந்த பிரிவுகள் சங்க காலத்தில் இருந்தது என்கிறார். கட்டுரையை படித்து கூட பார்க்காமல், வவ்வால் "மேலோர் கீழோர் என்பது ஈதல் சம்பந்தபட்டது" என்று சொந்த கதைகளை முன் வைக்கிறார்.

  3. இம்மாதிரி ஆய்வுகள் நாம் விரும்புகிறோமோ இல்லையோ நடந்து கொண்டு தான் இருக்கும். இந்த ஆய்வின் கருத்தோடு மாறுபட்டால் அதை தெரிவிக்கவும் முறை உண்டு. இதோ சுடலைமுத்து பழனியப்பன் இங்கே மாறுபடுகிறார்.
  http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf
  சங்ககாலத்தில் சாதி என்பதற்கு பல பரிமாணங்கள் உண்டு என்பதை காட்டவே இதையும் சுட்டுகிறேன். எது எப்படியோ சுடலைமுத்து பழனியப்பன் செய்திருப்பது முறையான வாதம். வவ்வால் செய்வது வாதமல்ல, வெறும் நேர விரயம்.

  ReplyDelete
 16. கணேசன்,

  முதலில் பதிவைப்படித்து ,புரிந்துக்கொண்டு கருத்திட வாருங்கள்.

  இங்கு பேசிக்கொண்டிருப்பது ,ஆரியர்களின் வருகைக்கு முன்னர் மற்றும் வருகை புரிந்த காலக்கட்டத்தினை பற்றி.

  நீங்களோ சங்ககாலம் என ஆரம்பிக்கிறீர்கள்,சங்ககாலம் ஆரியர்கள் வருகைக்கு முந்தைய காலம் என யார் சொன்னது? நான் சங்ககால வாழ்க்கையை விளக்கும் நூலினையும் குறிப்பிட்டுள்ளேன். சங்ககாலத்துக்கும் முந்தைய காலத்தினை தான் கருத்தில்க்கொண்டு பேசி வருகிறோம்.

  மேலும் இங்கு தமிழ்நாட்டைப்பற்றி மட்டும் பேசவில்லை ,இந்திய அளவில் பேசுகின்றோம்.

  ஆர்யர்கள் வருகை செய்த காலத்திற்கு பிந்தைய காலத்தினை மட்டும் முன்வைத்து "ஆய்வு" அடிப்படையில் பேசுகிறேன் என வெற்று கூச்சல் ஏன்?

  # நீங்கள் ஒருக்கட்டுரையை குறிப்பிட்டுவிட்டால் உடனே அதனைப்படித்து விட வேண்டுமா?

  தெரியாமல் தான் கேட்கிறேன் , இங்கு நான் கூட நான்கைந்து புத்தகங்கள் பெயரைப்போட்டுள்ளேன் அதில் ஒன்றையாவது படித்துவிட்டு தான் பேச வந்தீர்களா?

  ஜியார்ஜ் ஹார்ட்டுக்குலாம் முன்னரே ஹென்ரி ஒயிட் ஹெட் ,அம்பேத்கர் எல்லாம் தரவுகளோடு எழுதிய நூல்களை நான் குறிப்பிட்டுள்லேன் ,அதில் உள்ள கருத்தினை மறுக்க தரவுகள் இருக்கா?

  பல ஆய்வுகள் புருஷ சூக்தம்,மனு போன்றவையே சாதியை பிறப்பின் அடிப்படையில் நிர்ணயத்தது என சொல்லிவிட்டது,அப்படி இருக்க புதுசா ஒருக்கதை கொண்டு வந்து சொல்லிவிட்டால் உண்மையாகிடுமா?

  உங்களைப்போன்ற ஒருதலைப்பட்சமான சிந்தனைக்கொண்டவர்களோடு எல்லாம் நேரம் விரயம் செய்வதில்லை, பேசுப்பொருளுக்கு சம்பந்தமில்லாமல் கருத்தினை முன் வைத்து பேசிக்கொண்டுள்ளீர்கள் என்பதை சுட்டிக்காட்டிவிட்டு ,உங்களை கண்டுக்காம விடுவதே சிறந்தது என அறிவேன்.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. சிந்து சமவெளி நாகரீகத்தில் சமஸ்க்ருத பங்கும் உண்டு- அஸ்கோ பர்போலா
  http://www.deccanherald.com/content/79062/sanskrit-has-contributed-indus-civilisation.html

  அவ்வப்போது வந்து கருத்திடுங்கள்
  http://pagadhu.blogspot.in/2014/04/blog-post_6733.html

  ReplyDelete
 19. Tolkappiyam and Manu Smriti A Comparative study

  http://www.mayyam.com/talk/viewlite.php?t=8496

  ReplyDelete
 20. திருக்குறள்-மனு ஸ்மிருதி, மனுநீதி,மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து

  http://newindian.activeboard.com/t48209402/topic-48209402/

  ReplyDelete
 21. http://nanduonorandu.blogspot.com/2014/05/blog-post_5.html?showComment=1399295849542#c9119263588126551269
  நண்பர் நண்டு,

  கால்ட்வெல் ஒரு மத மாற்ற பிரச்சாரகர் ஆக இருந்து இருக்கலாம்.கிறித்தவ மதமும் இந்து மதம் போல் மக்களை சிலர்(மத குரு+மன்னன்) ஏமாற்றிப் பிழைக்கும் வழியே.எப்படி வேதங்கள் புருடாவோ,அதே போல் பைபிளும் புருடாதான். யூதனை மேன்மைப் படுத்துவது பைபிள், பிராமணனை மேன்மைப் படுத்துவது வேதம். இன்றும் தீட்சிதர் தவிர எவரும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சகர் ஆக நுழைய முடியவில்லை என்பது பார்ப்பனீய அரசியலின் செல்வாக்கை காட்டுகிறது.நீதி மன்றமும் வளைந்து கொடுக்கிறது.ம்ம்ம்ம்ம்ம்!!

  1) ஆனால் தமிழ் மொழிக் குடும்பம், இந்தோ ஐரோப்பிய மொழியான சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தில் இருந்து மாறுபட்டது என்பதே இப்போதைய ஆய்வுகளின் கருத்து.

  இதற்கு மாற்றான ஆய்வுக் கட்டுரைகளை தாங்கள் முன் வைக்கலாம்.

  2).பரிணாமம் உண்மை எனில், மனிதன்(ஹோமோ சேஃபியன்)கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலக முழுதும் பரவினான் எனில், கருப்பின மக்களுகு நெருங்கிய திராவிட மக்கள் இந்தியாவிற்கு முதலிலும், ஐரோப்பியருக்கு நெருங்கிய ஆரிய மக்க்ள் பிறகு வந்தனர் என்பதே ஆய்வுலகின் ஏற்கப்பட்ட கருத்து.

  மரபணு ஆய்வுகளும் இதனை வலியுறுத்துகின்றன.

  இதற்கும் மாற்றான ஆய்வுக் கட்டுரைகளை முன் வைக்கலாம்.

  இது தொடர்பான நம் பதிவு.
  http://aatralarasau.blogspot.com/2014/03/blog-post.html

  ஆரியர், திராவிடர் பிரிவு உண்மை,ஆனால் அது இக்காலத்தில் அரசியல் செய்ய தேவையற்றது என்பதுதான் உண்மை.
  ஆங்கிலேயர் (, முஸ்லீம்கள்) வருகை முன் இந்தியா சமதர்ம பூமியாக, இருந்தது என்பது பொய்.

  ஒரு நாட்டில் பொருளாதர சிக்கல் என்றால் ,அடுத்த நாட்டைக் கொள்ளை அடித்து ,தன் கஜானாவை நிரப்புவான் அரசன். அதில் கோயில் கட்டி மத குருக்களுக்கு கொடுத்து ,மீதியை கொஞ்சம் மக்களுக்கு கொடுப்பவன் சிறந்த அரசன் ஆகி விடுவான்.

  அரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்பொழுது தம் பெயர் விளங்கத் தம் பெயருடன் "சதுர்வேதி மங்கலம்" என்பதனை இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துத் தந்திருக்கின்றனர்.[27]

  அர்த்த சாஸ்திரம், மனுதர்மம் இரண்டும் அக்கால அரசியலை படம் பிடித்துக் காட்டுகின்றன."

  நன்றி

  ReplyDelete
 22. வியாசர் வேதங்களைத் தொகுத்தார்... அந்த வியாசர் ஆரியரா....திராவிடரா...?

  …வியாசர் என்பது ஒருவரா....இல்லை ஒரு குழுவா...?

  …வியாசர் தொகுத்த வேதம் ஆரிய வேதமா...? இல்லை திராவிட வேதமா?

  …வேதம் என்றால் என்ன?

  ReplyDelete
 23. வேதங்களைத் தொகுக்க 1000 ஆண்டுகள் ஆனதா?

  …வேதம் என்றால் என்னவென்று அறிந்தால் மேலே பேசலாம்.

  நாட்டில் இருந்த சடங்குகள்... சம்பிரதாயங்கள்...கலைகள் .... மருத்துவ முறைகள் ... இவைதான் வேதங்கள்.

  …இவற்றைத் தொகுப்பது சாதாரண விசயம் இல்லை.

  …நாடு என்றால் அப்போது இந்த உலகம்.

  …முழுமையாக தொகுக்கப்படவில்லை.

  …இப்போது வேதம் என்று சொல்லப்படுவது வியாசர் கும்பலால் தொகுக்கப்பட்டது கிடையாது. இது பிற்கால பிராமணர்களால் செய்யப்பட்ட ஒன்று.

  …இன்றைய வேதத்தில் ஒன்றுமே இல்லை...ஆனால் அனைத்தும் இருப்பதாக பிராமணர்கள் கதை எழுதுகின்றார்கள்.

  ReplyDelete