Friday, November 27, 2015

இந்த புதிய குரான் விளக்கம் வன்முறையைத் தடுக்குமா(ம்!)?


வணக்கம் ந‌ண்பர்களே,
நேற்று சி. என். என் தொலைக்காட்சியில் ஆய்வு குரான்(STudy Quran) என்ற ஒரு புத்தம் புதிய குரான் விளக்கம் பற்றி ஒரு செய்தி ஓளிபரப்பு ஆனது. அது பற்றியே இந்தப் பதிவு.குரான் என்பது முசுலீம்களின் மதப் புத்தகம் என்பதும், பொ.ஆ 610 முதல் 632 வரை அரேபியாவின் மெக்க,மதினா நகரங்களில்,திரு முகமது என்ற இறைதூதருக்கு அரபி மொழியில் வழங்கப்பட்ட‌ட செய்தி என்பது அவர்களின் நம்பிக்கை.அரபி அல்லாத குரான்கள், குரான் விளக்கமாக மட்டுமே கருதப் படுகின்றன.

உலகில் அதிகம் மதிக்கப்படும், விமர்சிக்கப்படும் புத்தகம் இதுதான் என்றால் மிகையாகாது.குரானை நம்புவோர் அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும், ஏக இறைவனின் மாற்றமில்லா இறுதி வாக்கு என்பதால் அதனை அப்படியே ஏற்கின்றனர்.ஆனால் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தினர்,முன்னாள முசுலிம் ஆகியோர் அதில் உள்ள வன்முறை சார் வசனங்க‌ளை சுட்டி அதனை விமர்சிக்கின்றனர்.
குரான் உலகின் பெரும்பான்மை மொழிகளில் , விளக்க உரைகள் உண்டு. ந‌மது தாய்த் தமிழிலும் 20க்கும் மேற்பட்ட குரான் விளக்க உரைகள் உன்டு.


இந்தப் பதிவில் சி என் என் தொலைக் காட்சி தரும் தகவல் அடிப்படையில் மட்டுமே விவாதிப்போம். நமது சொந்தக் கருத்துகளை பின்னூட்டங்களில் மட்டுமே நாகரிகமாக விவாதிப்போம்.இதுதான் தொலைகாட்சி செய்தியின் சுட்டி .
http://www.cnn.com/2015/11/25/living/study-quran-extremism/index.html

இது அப்புத்த்கத்தின் அமேசான் தள இனைப்பு
http://harperone.hc.com/studyquran/
http://www.amazon.com/The-Study-Quran-Translation-Commentary/dp/0061125865

இது அமெரிக்க பல்கலைக் கழக மத ஆய்வாளர்களான 
Seyyed Hossein Nasr (Editor-in-Chief), University Professor of Islamic Studies at the George Washington University,Caner

K. Dagli (General Editor), Associate Professor of Religious Studies at the College of the Holy Cross,

Maria Massi Dakake (General Editor) is Associate Professor of Religious Studies at George Mason University,

Joseph E. B. Lumbard (General Editor) is Assistant Professor in the Department of Arabic and Translation Studies at the American University of Sharjah 
,Mohammed Rustom (Assistant Editor), Associate Professor of Islamic Studies at Carleton University.

ஆகியோரால் மொழி பெயர்க்கப்ப்ட்டது.ஒவ்வொரு வசனத்திற்கும் அடிக்குறிப்பு (foot note)விள்க்கம் அளித்து இருப்பதாக‌ செய்தி சொல்கிறது.

இது விமர்சனத்திற்கு உள்ளாகும் வசனங்களுக்கு ,மாற்றுப் பொருள் அளிக்கிறதாம்.ஷியா,சுன்னி பிரிவு சார் தனித் தனி விளக்கமும் இருக்கிறது.எனினும் இது அதிக முசுலிம்களால் ஏற்கப்ப்டாது என்பது ந‌மது கணிப்பு.
ஏன்?
1. இந்ந்த மாற்று விள்க்கம் சரி என்றால் கமுந்தைய 1400 வருட விளக்கங்கள் தவறாகி விடும்.மத குருக்கள்,அடிப்படைவாதிகள் பிடியில் இருந்து புத்தக விளக்கம் கல்வியாளர்கள் கையில் செல்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏதேனும் ஃபத்வா கூட வரலாம்.

2.இந்ந்த புத்த்கத்தில், மூல அரபி வசனங்கள் இடம் பெறவில்லை.ஆங்கிலம் மட்டும்தான் என்பதாலும்,மொழிபெயர்பாளர்கள் மேலை நாட்டவர் என்பதாலும் இது இசுலாமிய ஆய்வு சார் மேலை நாட்டு பல்கலைக் கழகங்கள் தாண்டி படிக்கப்ப்டாது.

3. ஏற்கெனவே அகமதியா மற்றும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்க உரைகளும் இப்படித்தான் இருக்கிறது. நாமும் குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்லவில்லை என்னும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்கம் சார்ந்து ஒரு பதிவு இட்டோம்.
http://saarvaakan.blogspot.com/2011/04/434.html
ஜிஹாத் என்னும் புனிதப் போரை , மன‌தின் தவறான எண்ணங்களுக்கு எதிரான போராட்டம் என விளக்கம்  தருகிறார்கள். http://www.muslim.org/islam/jihad.htm
அகமதியா, குரான் மட்டும் பிரிவினர் ,முசுலீம்களில் சிறுபான்மை என்பது குறிப்பிடத் தக்கது.

என்றாலும் மனிதர்களுக்கு சமாதானம் ஏற்படுத்தும் இப்படி முயற்சிகள் பாராட்டப் படத் தக்க‌வைதான்.நமது இதயம் மாற்று விள்க்கம் பெரும்பான்மையினரால் ஏற்கப்பட விரும்பினாலும்,அறிவோ வாய்ப்பு குறைவு என்பதையே இயம்புகிறது.

எப்படி இருந்தாலும், மதம் சார் சட்டங்கள் தூக்கி எறியப் படும் வரை, மதகுருக்கள் அரசியல் செல்வாக்கு அழியும் வரை இப்படிப்பட்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.

ந‌ன்றி!!!நன்றி!!! நன்றி!!!