கம்யுனிஸம் அல்லது பொது உடமைக் கொள்கை என்பது 1950களில் உலகின் பதிக்கு மேற்பட்ட பகுதியை ஆண்டு கொண்டிருந்த கொள்கை.கார்ல் மார்க்ஸ்,எங்கல்ஸ் போன்ற அறிஞர்களின் தத்துவ அறிவியல் சார்ந்த கொள்கைகள் இதற்கு அடிப்படையாக இருந்தது. சோவியத் இரஷ்யா இந்நாடுகளின் தலைமை பொறுப்பில் இருந்தது. 1980களில் பொது உடமைத் தத்துவம் பல நாடுகளில் வீழ்ச்சி அடைந்தது எனினும் அது இன்னும் சீனா,கியூபா உட்பட்ட சில நாடுகளில் நீடிக்கிறது.அது ஏன் வீழ்ச்சி அடைந்தது என்பது பற்றியல்ல இப்பதிவு. சீனா ஒரு கம்யுனிஸ நாடாக அறிவித்துக் கொண்டாலும் அதன் கொள்கைகள் ஒரு முதலாளித்துவ நாடாக மாறி நாளாகிறது என்பதை ஆவணப் படுத்தும் பதிவே இது.
இதன் பின் 1990களில் உலகமயமாக்கல் இந்தியா உட்பட்ட வளரும் நாடுகளை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது.இதன் விளைவாக சில நடுத்தர வர்க்கம் உட்பட்ட மேட்டுக்குடி வர்க்கம் பலனடைந்தது எனினும் நம் விவசாயம் சார்ந்த சுதேசி பொருளாதரத்திற்கு குழி தோண்டும் வேலையை மெதுவாக ஆரம்பித்தது.
சரி நாம்தான் முதலாளித்துவம்,கம்யுனிஸம் அல்லாத சோஷலிஷ(?) நாடு ஆகையால் முதலாளித்துவத்தின் பக்கம் சாரும் சூழ்நிலைகள் அமைந்தது என்றால் தன்னை ஒரு கம்யுனிஸ நாடாக அறிவிக்கும் சீனா சந்தை பொருளாதாரத்தின் நாயகனாக உலகமயமாக்குதலில் முக்கிய பங்கு வகிப்பது மிக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
நமது சிவகாசி பட்டாசு தொழில்.திருப்பூர் பின்னலாடை தொழில் போன்றவை சீனாவின் இப்போக்கால் மிகுந்த பாதிப்பு அடைந்தவை.
இந்த ஆவணப்படம் திரு டெர் கோப்பல் என்பவரால் டிஸ்கவரி தொலைக்காட்சிக்காக் தயாரிக்கப்பட்டது. சீனாவில் வாழும் ஒரு மேட்டுக்குடி ,நடுத்தர,ஏழைக் குடும்பம், என பல் தரப்பட்ட மக்களின் வாழ்வு முறையையும் அது சீனாவின் தீவிர சந்தை பொருளாதார மயமாக்குதலால் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்பதை மிக அருமையாக படமாக்கியுள்ளார்.
இதில் பல வாழ்வியல் நடைமுறைகள் இந்தியர்கள் போன்றே இருப்பது வியப்பளிக்கும். மகளை ஆங்கில கல்வி கற்க அதிக செலவு செய்யும் நடுத்தர வர்க்க பெற்றோர், ஒரு வேளை கூலிக்காக கடின உழைப்பு மேற்கொள்ளும் ஏழை தொழிலாளி, ஏழைகளின் நகரங்கள் நோக்கிய இடப் பெயர்ச்சி, மாஃபியா கும்பல்கள், மேலை நாட்டு நாகரிக வாழ்வை நாடும் இளைஞர்கள்,விபசாரம் என்று பல தரப்பட்ட மக்களின் வாழ்வையும் ஆவணப்படுத்திய விதம் நன்றாக இருந்தாலும் உண்மை மிக உரைக்கிறது.
பொறுமையாக் முழு காணொளிகளையும் பாருங்கள் பல விஷயங்கள் புரியும்.
part1
Part2
Part 3