Wednesday, June 26, 2013

செயற்கைக்கு எதிரான இயற்கையின் சீற்றம்!!.தீர்வு உண்டா????



வணக்கம் நண்பர்களே,

கடந்த சில நாட்களில் நடந்த மூன்று விடயங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்தின.அவையாவன!!

1.வட இந்தியா குறிப்பாக உத்தரகாண்ட்  வெள்ளம்& பேரழிவு

2. சவுதியில் வேகமாக பரவும் மெர்ஸ்[MERS:Middle East Respiratory Syndrome] வைரஸ்& மருந்து கண்டுபிடிப்பில் காப்புரிமை அரசியல்.

3. மும்பை அடுக்குமாடி குடியிருப்புகள் இடிதல்.

இந்த மூன்று விடயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றினாலும் ,இவையனைத்தும் செயற்கைக்கு எதிரான இயற்கையின் சீற்றம் எனவே வரையறுக்கலாம்.

1)உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் அமைந்த கோயில்களூக்கு பலர் புனிதப்பயணம்  செல்வது கடந்த சில ஆண்டுகளில் அதிகரிக்க,அது வணிக மயமாக்குதலில் ,காடுகளை அழித்து விடுதிகள்,உணவகங்கள் கட்டப்பட்டதும், இயற்கை சூழல் உலக முழுதுமே பாழ் படுத்தப்படுவதால் ஏற்றபட்ட புவி வெப்பமயமாதலினால் உலகைன் தட்ப வெப்ப சூழல் கணிக்க முடியாத படி மாறி வருவது கண்கூடு.

புவி வெப்பமயமாதலினால் கணிக்க முடியா பெருவெள்ளம், புனிதப் பயணம் வணிமயமாக்குதலில்,மிக சிலரே வசிக்கும் இடங்களில் இலட்சக் கண்க்கானோர் கூடியதும்,1000 பேருக்கு மேல் பலியாகவும்,பல்லாயிரம் பேர் உயிருக்கு போராடி மீளவும் வழி வகுத்தது.

உத்த்ரகாண்ட் விபத்தில் பலியான சகோதரர்களுக்கு நம் அஞ்சலி. இப்படி ஆபத்து மிகுந்த இடங்களை புனிதப்ப்யணம் அல்லது சுற்றுலா என எந்தப் பெயரிலும் தவிர்க்க்லாம் என்பதே நம் வேண்டுகோள்.

இப்படி புனிதப் பயணங்களுக்கு முன் எவ்வளவு மக்கள் போய் வர முடியும், இயற்கைச் சூழல் எப்படி உள்ளது, வருமுன் காப்போனாக பேரிடர் மேலாண்மை எப்படி செய்ய முடியும் என் திட்டமிடாமல் கூட்டம் சேருவதை தடுப்பது அரசின் கடமையாகும்

கங்கை வெள்ளத்தில் சிவனின் சிலை இழுத்து செல்லப்பட்டது, நமக்கு இன்னும் ஒரு விடயத்தை ஞாபக்ப் படுத்தியது. காளி அன்னை, சிவனை மிதித்து நடனம் புரியும் காட்சியை ஞாபகப் படுத்தியது. உண்மையில் இயற்கை [பார்வதி] அன்னையின் நடனத்தின் முன் சிவன் தோற்றுவிட்டார்!!.
திருவிளையாடலில் ஆணாதிக்க கதையாக அன்னை  தோற்றது போல் காட்டியது பொய்யே!!!


மத புத்தகங்களில் உள்ள இயற்கைக்கு மேம்பட்ட விடயங்களைத் தவிர்த்து,அவை இயற்கையை அறிய,உணரமுடிந்த ஞானியரின் அறிவு சார் விளக்கங்கள் எனப் பார்க்கும் மனநிலை நமக்கு உண்டு.
Bogotá : Building A Sustainable City


சிவம் பொருள் என்றால்,சக்தி ஆற்றல் பொருள் அழிந்து ஆற்றல் மிகுவது இயல்புதானே!!! பிரப்ஞ்சமே சிவனின் உடல் என இந்திரா சவுந்தரராஜன் நாவல் ஒன்றில் கூட வரும்.

ஆயினும் நாம் இயற்கையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டுமே தவிர ,இயற்கையை கட்டுப்படுத்தி மனம் போனபடி வாழ்ந்து விடுவோம் என்பது பேதமை.

பிரபஞ்சத்தில் அனைத்தும் இயற்கைதானே,எது செயற்கை என கேள்விக்கு இப்படி விடையளிக்கலாம்.

இயற்கை மாறும் தன்மை உடையது, அம்மாற்றத்தின் இயக்கமே பரிணாமம். இந்த மாற்றத்தை துரிதப் படுத்தும் எதுவும் செயற்கையே.

இயற்கையான காய்கரி,இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழி,ஆடு,மாடு போன்றவற்றை உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதும், மரபணு மாற்றம் செய்த, வேதிமுறை பதப்படுத்தப்பட்ட உணவு உண்போர் ஆரோக்கியம் அற்றும் இருப்பதை .கா ஆக சொல்லலாம்.
*****
2)சவுதி உள்ளிட்ட பல் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவி வரும் மெர்ஸ் வைரஸ் என்பது சுவாசித்தலில் பல் சிக்கல்களை உருவாக்க்கு உயிர்க் கொல்லி நோய் ஆகும். இத்னை ஏற்படுத்தும் வைரஸ் சவுதி சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இதற்கு சுமார் 50 பேர் வரை பலியானதால் சவுதி அரசு ,இந்த வைரசுக்கு மருத்து காணும் பொறுப்பினை நெதர்லாந்து வைரஸ் ஆய்வு அமைப்பு [Erasmus Medical Center in Rotterdam]ஒன்றிடம் கொடுத்தது.

அந்த அமைப்போ அந்த வைரஸ் சார்ந்த ஆய்வுகளுக்கு காப்புரிமை பெற்று,வேறு ஆய்வுகள் தன் அனுமதி இல்லாமல் நடக்க கூடாது என்கிறது. சவுதி அரசு எதுவும் செய்ய இயலாமல், எப்படியாவது மருந்து கொடுங்கள் என் கெஞ்சி நிற்கிறது.

The normally civil world of international health diplomacy was shattered yesterday, when Saudi Arabia complained that a patent taken out by Dutch scientists who isolated the Middle Eastern Respiratory Syndrome (MERS) virus was impeding Saudi efforts to track the virus within its own borders.
"Deals between scientists because they want to take intellectual property… are issues we need to address," said World Health Organization director-general Margaret Chan in response. "No IP will stand in the way of public health."
The Dutch researchers, based at Erasmus Medical Center in Rotterdam, the Netherlands, say the patent does nothing to stop the Saudis developing their own tests for the coronavirus that causes MERS. The Dutch have themselves developed and published tests for both the virus and antibodies to it, essential for tracking its spread. And they say they have sent the virus to 40 labs, some of which are developing their own tests, and that they are willing to send the virus to any laboratories who can handle it safely.

வருடாந்தர ஹஜ் பயணத்திற்கு கூட பல கெடுபிடிகள் விதிக்கப்படலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.  

  1. The applicant must submit proof of vaccination for meningitis and ACYW135. For infants and children up to fifteen (15) years of age, a vaccination report is required for polio as well as meningitis and polio. Children over fifteen (15) years of age should present the same vaccinations requested for adults.
            a. meningitis and ACYW135.
            b. The seasonal (or common) flu, which should be taken two weeks before applying for the visa.
            c. The H1N1 flu, if a vaccine is made available before Hajj season, and should be taken two weeks before
                     applying for the visa.
            d. Infants and children up to fifteen (15) years of age should provide a vaccination report for meningococcal and polio. 
            e. Children above fifteen (15) years of age should present the same vaccinations requested for adults.
            f.  Health experts advise the following groups to postpone their plans for Hajj and Omrah this year for their             own safety: The elderly, the terminally ill, pregnant women, and children.
பொ.ஆ 1928ல் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் கண்டறிந்த பென்சிலின் முதல் கிருமி எதிர்ப்பு மருந்து[antibiotic] ஆகும், அதன் பிற்கு கண்டுபிடிக்கப்பட்ட பல ஆன்டிபயாட்டிக் &இத்ர மருந்துகள் அம்மை, போலியோ போன்ற பல நோய்களை இல்லாமல் செய்தன. மனித்னின் ஆயுள் சராசரி உய்ர்ந்து 70+ ஆனது.

ஆனால் பரிணாம வளர்ச்சியில் வைரஸ்கள் ஆன்டிப்யாடிக் மருந்துகளை மீறி செயல்படும் விதத்தின் வளர்ந்தது மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

மருந்தகத் துறையில் டார்வினிய மருந்தகம் என்னும் துறை இப்படி சிக்கல்களை தீர்க்க முயல்கிறது. இதனை  ஒவ்வொரு நாடும் தேவையான செலவு செய்து வளர்ப்பது அவசியம்.

அதிலும் வைரஸ்களுக்கு ,நோய்களுக்கு காப்புரிமை என்பது தவிர்க்கப்பட வேண்டும். இன்னும் பரிணாம்ம என்பது கட்டுக்கதை,அதைப் படிக்க மாட்டோம் என்னும் சொல்லும் நாடுகளில் அடுத்த தலைமுறை இருக்காது!!!

நம் நாட்டிலும் ஒவ்வொருவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை என்பது கட்டாயம் ஆக்கப்பட்டு, அனைவருக்கும் இலவச சுகாதாரம் ,அது சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப் படுதல் நன்று. இல்லை எனில் இதிலும் பேரிடர் நிகழும் வாய்ப்பு உண்டு.
**
3) மும்பை அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இடிதல்.

விவசாயம் இலாபம் அற்ற தொழில் ஆனதாலும், சாதி இன முரண்களாலும் ,இயற்கை வளம் சுரண்ட அரசின்[பனாட்டு நிறுவனக்கள்] நில கையகப் படுத்தும் திட்டங்களினாலும்  கிராமங்களில் வாழ்வாதாரம் இழந்த மக்கள் நகரங்களை நோக்கி வருகிறார். மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஏற்ப ,வீடுகள் இன்மையால், சட்ட விதிகளை மீறி பாதுகாப்பு அற்ற வகையில் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்னும் கான்கிரீட் பொந்துகள் கட்டப்படுகின்றன..

அதுவும் சரியாக பராமரிக்கபடாததால்,இப்படி கட்டிடங்கள் இடியும் அபாயம் அடிக்கடி நிகழலாம்.

********
சரி இவற்றுக்கு தீர்வுதான் என்ன???
நடப்பது அனைத்தையும் எவரும் சரியாக் கணிக்க முடியாது என்றாலும், சூழலுக்கு ஏற்ற இயல்பான வாழ்வு முறை எது என் கண்டறிதலே முக்கியம்.
சென்னையின் மக்கள் தொகை 45 இலட்சம், சென்னையில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு மாவட்டத் த்லைநகரிலும் கிடைக்கும் என்றால்,குறைந்த பட்சம் சென்னையில் புதிதாக குடியேறுபவர்களின் தொகை குறையும். இரண்டு குழந்தை மட்டும் பெறும் குடுமபங்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் தரலாம்.மையப்படுத்தப் பட்ட உற்பத்தி,விநியோகம் முறை தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டம் சார்ந்த சுதேசி உற்பத்தி,விநியோகம் செய்யலாம்.


ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு ,அதற்கு வட்டியில்லா கடன்,வீட்டின் 10 கி.மீ சுற்றளவில் அருகிலேயே வெலை வாய்ப்பு,அதிகம் சைக்கிள், ரிக்சா போன்ற்வை பயன்படுத்துதல்,சூரிய ஒளி ப்யன்பாடு ஒவ்வொரு மாவட்டத்தில் கிடைக்கும் பொருள்களுக்கு ஏற்ப உணவு,வாழ்வுமுறை என ஒவ்வொருவரும் அரசின் மேற்பார்வையில் வாழ்தல் பல சிக்கல்களைத் தவிர்க்கும் என்றாலும், இது தீர்வின் தொடக்கம் மட்டுமே.

14 நாட்களில் குறைந்த செலவில்,சூழலுக்கு ஏற்ற வீடு கட்டும் நிறுவனம்!!!

IRIS KOTO System is a smart, green, high-speed, energy-efficient, sustainable, fully integrated building system for commercial, high rise, upmarket and affordable housing projects. 


This building system requires minimal tools, unskilled labour, uses far less concrete and steel, no connections or fixing and no timber formwork. 

Houses can now be built faster, resulting in higher efficiency, higher margins and cost savings, not to mention happier house owners!



இப்படி முயற்சிகளை முன்னெடுக்கும் போது அதன் நடைமுறைச் சிக்கல்கள் ஆவணப்படுத்தப்ப்ட்டு மாற்றுத் தீர்வுகள் முயற்சிக்க‌லாம்.

நம் நாட்டின் பிரச்சினைகளை தீர்வு காணும் கல்வி,ஆய்வுகளே முன்னிலை 
அளிக்கப்பட வேண்டும்.


சுருக்கமாக சொன்னால் இயற்கையை அறிந்து,உணர்ந்து பகிர்ந்துண்டு வாழ்வோம்!!
நன்றி!!!

Tuesday, June 11, 2013

திரு .அத்வானி தரப்பு நியாயம் அறியுங்கள்!!!



Thanks to
http://indiaopines.com/narendra-modi-reaching-delhi-a-cartoon/

வணக்கம் நண்பர்களே,

நாம் நாத்திகர் என்றாலும் அதிகம் மதப் புத்தகம் படித்து ,ஆய்வு செய்து மதபிரச்சாரங்களை சரி பார்ப்பதால் நமக்கு அவர்களின் மனநிலை நன்கு புரியும்.

மதவாதிகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதை நாம் நன்கு அறிவோம்.”மதவாதியைப் புரிய மதப் புத்தகம் படிப்பீர் எனவே நாம் வலியுறுத்துகிறோம்.

இப்போது திரு அத்வானி பாஜக கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகல் , மோடியின் தலைமைக்கு எதிர்ப்பு என இந்திய அரசியல் பரபரப்பு அடைந்து இருப்பதை அறிவோம். இந்துத்வ அடிப்படைவாதக் கட்சியான பாஜக' வில் இப்படி குழப்பம் நிலவுவதை நாம் இப்பதிவில் ஏன் என சான்றுகள் அடிப்படையில் இப்பதிவில் விளக்குகிறோம்.

மதவாதிகள் என்றாலே இரட்டை வேடப் பேர்வழிகள் என்பதற்கு எந்த மதமும் விதிவிலக்கு இல்லை என்றாலும், இந்த இரட்டை வேடம் போடுவதிலும் உள்ள வித்தியாசங்களைக் கூறி,வலாற்றுரீதியாக சான்றுகள் ரீதியாக அலசி  புரியும் போது திரு அத்வானி தரப்பு நியாயம் பிடிபடும்.அப்படி நமக்கு பிடிபட்டதை பகிர்கிறோம்.மதவாதிகள் இரட்டை வேடம் போட மத புத்த்கத்தின் இரட்டை நாக்கில் விளக்கப்படும் கருத்துகள் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.

மத்தியக் கிழக்கில் உருவான ஆபிரஹாமிய மதங்கள் சிறுபான்மையாக இருக்கும் போது ஒரு வாதமும்[அன்பு,அமைதி,மதச்சார்பின்மை],பெரும்பான்மை ஆகும் போது வேறு வாதமும்[ இறைவனின் சட்டமே இறுதியானது] செய்வார் என்பதை நாம் பல பதிவுகளில் அலசி இருக்கிறோம்.இந்தியாவின் சனாதன தர்ம மதம் பெரும்பான்மையாக இருந்தாலும் எப்போதும் நான் இரொம்ப நல்லவன்டா எனவே வேடம் போடும். [ஏன்???? சிந்திக்க மாட்டீர்களா???]

நந்தனாரை தீயில் இட்டுக் கொன்றாலும், அவர் ஜோதியில் கலந்துவிட்டார் என அற்புதமாக கயிறு திரிக்கும் வித்தை அறிந்தவர்கள் என்பதால்,பொய் புரட்டு கண்டுபிடிக்க மிக நுட்பமான பார்வை வேண்டும். பரம்பரைத் திருட்டுக்கும்,பஞ்சத்திற்கு திருடுவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா!!!??? இன்னும் .கா சொல்ல வேண்டும் என்றால் பவுத்தம்,சமணம் போன்ற்வற்றை நீர்த்து போக வைத்து , ஆட்சியில் இருந்து இறக்கி,ஒன்றுமில்லாமல் ஆக்கியதையும் சொல்லலாம்.

பாருங்கள் இந்துத்வா என்றால் என்ன என்பதை அக்கொள்கையாளர் எப்படி இங்கே விளக்குகிறார்!!!


இந்த தேசத்தின் அடிப்படையான ஒற்றுமை என்பது, ஒரு ஆன்மிக  பண்பாட்டு ஒற்றுமையிலிருந்து பெறப்பட்டது. எனவே, நவீன சர்வதேச சூழலில், இந்த ஒற்றுமையின் அடிப்படையில் தேசியமும்  அரசியலும் இந்த மண்ணில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே ஹிந்துத்துவத்தின் அடிப்படை””.

பேச்சில்,எழுத்தில் குற்றம் இருக்காது,அதாவது திருவிளையாடல் பாணியில் சொற்குற்றம் இருக்காது,பொருள் குற்றம்[நடைமுறை!!] மட்டுமே இருக்கும்.

பொதுவாக இந்துத்வ அரசியல் என்றால் இந்தியா என்பது புனிதமான நாடு,இதன் கலாச்சாரம் உயர்ந்தது, ஆதியில் அனைத்தும் சரியாக இருந்தது,சமஸ்கிருதம் தேவ மொழி,வேதத்தில்,புராணத்தில் சாதி உயர்வு தாழ்வு இல்லை,சாதி இருக்கணும் ஆனால் தீண்டாமை மட்டும் ஒழியனும், பசு புனித விலங்கு  நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பிற மதத்தினரே,திராவிட இயக்கத்தினரே காரணம் என்ற கருத்துகள் கொண்டவை என்லாம்.

இந்துத்வ அரசியல் சுமார் ஒரு நூற்றாண்டாக இருந்தாலும்,அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்தது ஜனசங்கம் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியால் 1951ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட பிறகுதான். அதற்கு முந்தைய ராஷ்ட்ரிய ஸ்வ்யம் சேவக்[RSS],இந்துமஹா சபா போன்றவையும் சுதந்திரத்திற்கு முந்தைய மத ரீதியான பிரச்சினைகளில்,முரண்களில் முக்கிய பங்கு ஆற்றின.

திருமதி இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்திற்கு எதிராக போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் பல இடது,வலது(ஜனசங்கம்), விவசாயக் கட்சிகளின் கூட்டமைப்பான ஜனதா கட்சி 1977 தேர்தலில் வெற்றி பெற்றது.

திரு மொரார்ஜி தேசாய் மிதவாத இந்துத்வ கருத்து கொண்டவராக அறியப்பட்டார், அப்போது வாஜ்பாய்,அத்வானி போன்றோர் கடும்போக்கு இந்துத்வ கொள்கையாளராக அறியப்பட்டனர். ஆட்சி அமைக்கும் போது தேசாய் பிரதமர் ஆகவும், வாஜ்பாய் வெளியுறவுத்துறை,அத்வானி தகவல்தொடர்பு அமைச்சர்கள் ஆகினர்.[கவனிக்கவும் மிதவாத போக்கு உடையவர் முதன்மை இடம் பெறுகிறார்.] . அரசில் பங்கு வகிப்பவர் இன்னொரு அமைப்பில் ஆர்.எஸ்.எஸ்]ல் பங்கு இருக்க கூடாது என் ஒரு பிரச்சினை வந்து அதில் கடும்போக்கு வாஜ்பாய்,அத்வானி மட்டும்அரசை விட ஆர்.எஸ்.எஸ் முக்கியம் என பதவி வ்லகினர்.பிறகு அரசில் ஒவ்வொரு கட்சியும் பொருளாரம், கொள்கை சார் முடிவுகளில்ஒவ்வொரு போக்கில் இழுக்க முயன்று குழப்பத்தில் அரசு கவிந்ததது.மிதவாத தேசாய் அரசியல் ஓய்வு பெற்றார்.

அது எப்படி தேசாய் அவர்களை இந்துத்வ கொள்கையாளர் என சொல்லலாம் என்னும் சகோக்களேஇந்துத்வ அமைப்புகளில் உறுப்பினராக இல்லாதோர் அதற்கு எதிரிகள் என நம்பும் அப்பாவிகளே கீழே படியுங்கள்.

கோத்ரா போன்ற ஒரு சம்பவத்தில் இன்று மோடி போல் அன்று குற்றம் சாட்டப் பட்டவர் திரு தேசாய்!!!
Morarji Desai was born into an Anavil Brahmin family in Bhadeli, Valsad in Bombay Presidency (now in Gujarat). His schooling life of Primary section is in Saurashtra The Kundla School,Savarkundla. It's now actual name is J.V.Modi School. After he joined Bai Ava Bai High School, Valsad. After graduating from Wilson College, Mumbai, he joined the civil service in Gujarat. Desai resigned as deputy collector of Godhra in May 1930 after being found guilty of going soft on Hindus during the riots of 1927-28 there.


அதாவது மிதவாத தலைவராக ஒருவர் முதன்மைப் படுத்தப்படுவார்,பிரதமர் பதவி வகிப்பார்,கடும்போக்கு கொள்கையாளர்கள் இரண்டாம் அல்லது கொஞ்சம் கீழான பொறுப்பில் இருப்பது போல் காட்டப் பட வேண்டும் என்பதே தந்திரம்.!!

ஜனசங்கம் பா.. வாக 1977 பரிணமித்தது .கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் 2 பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலைக்கு வந்தது

சரி இப்போது இன்னும் கொஞ்சம் வருடம் முன் சென்று1990 வருகிறோம். அத்வானியின் ரதயாத்ராவால் புத்துயிர் பெற்ற இந்துத் உணர்வுகளை அறுவடை செய்து ,முக்கிய எதிர்கட்சி ஆனது. வி.பி.சிங்கின் அரசு கவிழ அடுத்த ,அடுத்த தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது வாஜ்பாயி மிதவாதப் போக்கு கொண்டவராகவும்,மனிதப் புனிதர் போல் சித்தரிக்கப்பட்டார். ஆகவே பல கட்சிகள் ஆத்ரவு அளிக்க தயங்கவில்லை. அப்போது மிதவாத வாஜ்பாயி பிரதமர்,கடும்போக்கு அத்வானி துணைப் பிரத்மர்.

அப்புறம் இந்தியா இருளில் ஆழ்ந்து இருக்கும் போது ,இந்தியா ஒளிர்கிறது என பிரமோத் மஹாஜன் நகைச்சுவைப் பிரச்சாரம் செய்ய ,மக்கள் எரிச்சல் அடைய மீண்டும் காங்கிரஸ்  2004 ஆட்சிக்கு வந்து 10 வருடம் ஆகிறது.
http://en.wikipedia.org/wiki/India_Shining

The negative assessment of the India Shining campaign was echoed after the election by former Deputy Prime Minister L.K. Advani, who described it as "valid," but "inappropriate for our election campaign... By making them verbal icons of our election campaign, we gave our political opponents an opportunity to highlight other aspects of India's contemporary reality... which questioned our claim."[8][9]


தேசாய் வழியில் ,வாஜ்பாய் அரசியல் ஓய்வுக்கு செல்ல வழக்கம் போல் அத்வானி மிதவாதி ஆக வேண்டும் அல்லவா, அதற்காக பாகிஸ்தான் சென்றார், ஜின்னாவைப் புகழ்ந்தார் , எப்படியும் காங்கிரசுக்கு மாற்று பாஜக  என்பதாலும், அத்வானி இப்போது மிதவாதி என்பதால் பிரதமர் ஆகிவிடுவோம் என எதிர்ப்பார்ப்பு  இருப்பதில் வியப்பு இல்லை அல்லவா!! 
ஆனால் 2002 கோத்ரா இரயில் எரிப்பு பிண்ணனியில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க எதுவும் செய்யவில்லை என  இன்றும் [திரு தேசாய் போல்] குற்றம் சாட்டப்படும் திரு நரேந்திர மோடி குஜராத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் அரசியல் செய்ய நினைப்பது அத்வானியின் கனவில் மண்ணைப் போட்டு விட்டது.

இந்துத்வ அரசியல் கணக்கின்படி இப்போது மிதவாதி அத்வானி என்பதால்,நரேந்திர மோடி கடும்போக்காளர் ஆக காட்டப் பட்டு இருக்க வேண்டும்.அதாவது பிரதம வேட்பாளர் அத்வானி 2014 தேர்தலுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அத்வானி ஓய்வின் பின் மோடி மிதவாதி ஆக்கப்பட்டு[எப்பூடி அவரை விட ஒரு இந்துத்வ கடும் போக்காளர் உருவாக்கிவிட்டால் போதும்!!மக்களுக்கு மறதி அதிகம் ஹி ஹி] பிரதம வேட்பாளர் ஆனால் கணக்கு சரியாக வரும்!!

இப்போது சிந்தித்தால் அத்வானி ஏன் கோபப் படுகிறார் என புரியும்!!

மிதவாதியாக பரிணமித்த அத்வானி இருக்கும் போது இன்னும் மிதவாதி ஆக முடியாத நரேந்திர மோடி முன்னிலைப் படுத்தப்படுவதுதான் அத்வானியின் கோபம்!!!

அப்புறம் ஒரு கேள்வி ஏன் இந்துத்வ மதவாதிகளின் இரட்டை வேடம் வித் தியாசமாக இருக்க மத புத்தக அடிப்படை என்ன? சிந்திக்க மாட்டீர்களா!!!???

பதிவு தொடர்பான கேள்விகளுக்கு பதில்களும் தேவையானால் இன்னும் சில விளக்கப் பதிவுகளும் இட தயாராக இருக்கிறோம்.

சிறுபான்மை/பெரும்பான்மை எதுவாயினும் மத ஆட்சிகளை எதிர்ப்பது நம் தார்மீக கடமை!!

நன்றி  நன்றி  நன்றி!!