வணக்கம் நண்பர்களே,
ஒரு உயிர்கள் அனைத்துக்கும் அடிப்படைத் தேவை உணவே என்பதும். ஒருவரின் உணவுப் பழக்க வ்ழக்கம்,
உடல் உழைப்பு மற்றும்
பயிற்சிகள் ஒருவரின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது அனைவரும் உணரும் விடயம்.
சாமியார்கள்,மதப் பிரசாரகர்கள் என்றாலே ஏதாவது சர்ச்சைக்குறிய முறையில்
சொல்லி,செய்து
பரபரப்பு கிளப்புவது வழக்கம் என்பதை நாம் அறிவோம்.உலகமயமாக்கலில் அவ்ர்களும் புதுமையாக
இப்படி செய்தால் மட்டுமே கல்லா கட்ட முடியும் என்பதால் வேறு வழியில்லை.
நிர்முக்தா இணைய தளம் ஒரு அருமையான இறை மறுப்பு தளம்.
அதில் வரும் கட்டுரைகள் வாழ்வின் பல வித அம்சங்களையும் விவாதித்து விளக்கும் என்பதால்
அதன் வாசகன் என்பதில் நம்க்கு மகிழ்ச்சியே. நம் நண்பர்கள் அனைவருக்கும் இத்தளத்தை பரித்துரைக்கிறோம்
திரு பாபா இராம்தேவ் இந்தியா மற்றும் இதர நாடுகளில் கோபால் பல்பொடிக்கு இணையாக புகழ் பெற்றவர். ஆகவே நாம் அறிமுக விளக்கம் சொல்லத் தேவையில்லை!!!.பாபா இராம்தேவ்
இப்போது பாஜக பிரதமர் வேட்பாளர் திரு நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார் என்பதும்
குறிப்பிடத் தக்கது. 20 கோடி ஓட்டு பாஜகவுக்கு விழும் என ஆருடம் சொல்கிறார்.
அதில் பாபா இராம்தேவின் புத்தகத்தில் அவரின் கருத்தான சரியான உணவுப் பழக்கம் எது என்பதை அத்தளத்தில் வந்த
கட்டுரையின் தமிழாக்க சுருக்கமே இப்பதிவு!!. நிர்முக்தா தளத்திற்கு நம் நன்றிகள்!!!
இது அந்தப் புத்தகம்.
Yog Its Philosophy
& Practice
1.# As per the philosophy
of Jainism, Yoga is
the emancipation of the soul. At the same time, mind, speech and all the
physical faculties are also known as Karmayoga. (Page 1)
1.சமண மத தத்துவத்தின் படி யோகம் என்பது ஆத்மாவை விடுதலையாக்கும்
உன்னத ஒழுங்கு ஆகும். இது மட்டும் அல்லாமல் மனம்,பேச்சு, மற்றும் உடலின் அனைத்து இயக்கங்களையும் மேம்படுத்துகிறது.
இதுவே கர்மயோகம் எனப்படுகிறது. (பக்கம் 1).
[இது மட்டுமா இன்னும் சாமி சொல்வது எல்லாம்
அக்கட்டுரையில் இருக்கிறது. மனிதன் பிறவி எடுத்ததே இறைவனை வணங்க,யோகத்தின் கடவுளைக் காணலாம்,காமத்தினை தவிர்க்காமல்
யோகி ஆக முடியாது,பசு,பிராமணனை காப்பாற்ற மட்டுமே பொய் சொல்லலாம்,வழிபாட்டுத் த்லங்களில் உண்மை பேச வேண்டும்,ஆத்மாவை சுத்திகரிக்க ரிஷிகளின் வாழ்வை பின்பற்ற வேண்டும்,நம் தேவைகளுகு மேல் நம்க்கு இறைவன் தந்து இருக்கிறார்,.....
நம்புவோர் நம்பினால் நம்க்கு ஆட்சேபம் இல்லை!!!]
2.# The ideal time for taking the morning food or breakfast is between 8 and 9
in the morning. It is better to take fruits and light drink. (Page 5)
2.உண்மையான காலை உணவுக்கு சரியான நேரம் காலை 8ல் இருந்து
9 மணி வரை ஆகும். அதுவும் பழங்கள் மட்டுமோ
அல்லது மிதமான திரவ வகை உணவு எடுப்பதே நல்லது. (பக்கம்
5).
3.# People above the age of 50 years should not eat anything in the morning.
3.)50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை உணவைத் தவிர்த்தல் நல்லது!!!.
[யாருக்கு நல்லது சாமி? தெளிவா சொல்லுங்க!!.இதனை படிக்கும் மருமகள்கள் இத்திட்டத்தை ,மாமனார்,மாமியாருக்கு அமல் படுத்தினால் என்ன
ஆகும்????]
4.# The ideal
time for taking the morning meal or lunch, is between 11am and 12 noon. One can
extend the time up to 1pm. but beyond that is a strict NO.
4)காலை(அல்லது மதிய) உணவு உண்ண சரியான நேரம் 11.00 மணி முதல் 1.00 மணி வரை ஆகும்.அதன் பிறகு சாப்பிடக் கூடவே கூடாது.
[சாமி
மாதிரி சும்மா இருந்தால் நாமும் இதை செய்யலாம் ஆனால்,
காலையில்
7 மணிக்கு வீட்டில் இருந்து பணிக்கு செல்ல
வேண்டும்.மதியம் 2 மணி சுமாருக்கு
30 நிமிடம் உணவு இடைவேளை கிட்டலாம். இரவு
வீடு வர 8_9
மணி ஆகும் என்னும் போது சாமி
தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!!!]
5. # Again the best time
for dinner is 7pm to 8pm.or at the most to 9pm. No food is recommended after
that.
5)இரவு உணவுக்கு சரியான நேரம் மாலை 7 .00 மணி முதல் 8.00 மணி வரை, அதிக பட்சம் 9.00 மணி வரை மட்டுமே.அதற்கு பிறகு அவ்வளவுதான்.சத்தம் மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!!
6.# While eating, one should maintain silence and keep praying to
God while chewing the food carefully.(Page 22)
6) சாப்பிடும் போது பேசாமல் அமைதியாக ,இறைவனை வழிபட்டுக் கொண்டே,சாப்பிட வேண்டும்.( பக்கம் 22)
7.# Before you start
eating, pronounce ‘OM ’ or utter the Gayatri
Mantra and wash your
hands three times. Why?
8. # Non-vegetarian food destroys our subtle and soft
feelings-like love, kindness etc.( Page- 5)
8) ஊன்(மாமிச) உணவு நமது நுட்பமான, மென்மையான் உணர்வுகளான இரக்கம் ,அன்பு போன்ற்வற்றை இழக்க வைத்து விடும்.[ ஹி ஹி சாமி மோடி
ஆதரவாளர் !!!]
சாமி குஜராத் கோத்ரா கலவரத்தை பற்றி என்ன சொல்கிறார்?
அது தேர்தல் பிரச்சினை இல்லை என்கிறார். இபோதைய முக்கிய பிரச்சினை இல்லை என்கிறார்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அன்பும் இரக்கமும்
வழிகிறது நமக்கு புரிகிறது!!!
Holding
that 2002 Gujarat riots is no longer a poll
issue, Yoga guru Baba Ramdev today said Rahul Gandhi had raised old matters
which have no significance in the present and he needs to be more
"mature" in his approach.
சரி நம் விவாதத்தை இங்கு தொடங்குவோம்.
காலை உணவைத் தவிர்த்தல் அல்லது மிக மிதமான உணவு என்னும்
கருத்து சரியா?
மருத்துவரீதியாக காலை உணவு சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு உண்பதால்
மற்ற வேளைகளை விட அதுதான் நல்ல சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
இதைப் படிப்போம்
இந்தப் பெண் காலையில் காலை உணவு நன்றாக பன்றி மாமிசத்துடன் சாபிடுகிறார்.
“Yesterday I had 3 slices of 50/50
bread, 2 sausages and 2 slices of bacon with a cup of cappuccino for breakfast.
Total calorie count: 753.”
என்றெல்லாம் காலையில் நன்றாக சாப்பிட முடிகிறதோ அன்றெல்லாம்
மிகவும் சுறுப்பாக இருந்தமையாக சொல்கிறார்.
நாம் தேடியவை காலை உணவு நன்றாகவே சாப்பிட சொல்கிறார்கள்.
மூன்று வேளைகளில் அதுவே அதிக கலோரி கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
Researchers have found that
eating a big breakfast of 700 calories promotes weight loss and reduces risks
for diabetes, heart disease and high cholesterol.
காலை உணவு அரசன் போலவும், மதிய உணவு இளவரசன் போலவும், இரவு உணவு ஏழை போல் இருக்க வேண்டும் என்னும் பழமொழி கூட
உண்டு!!!
Eat breakfast like a
king, lunch like a prince and dinner like a pauper.”
இராம்தேவின் கருத்தான காலை உணவு தவிர்த்தல் அல்லது மிக
மிதமான உணவு சரியாக இருக்க முடியாது என்பது நம் கருத்து.
மூன்று நேரமுமே முக்கியம்தான். . இரவு மட்டும் அரிசி தவிர்க்கலாம்
,அதுவே மிதமாக
இருக்க வேண்டும் என்பதே நம் நடைமுறை. காலை,மதியம் இரண்டு நேரமும் நன்றாக உண்டு விடுவோம். தண்ணீர்
அதிகம்,அடிக்கடி குடிக்கலாம்.
நம்மைப் பொறுத்தவரை காலையில் சரவண பவனில் இட்லி,தோசை,பொங்கல் வடை ஒரு கட்டு கட்டலாம்.
மதியம் பாய் கடையில் பிரியாணி , இரவு சப்பாத்தி,தாவர உணவு என்பதுதான் நமக்கு பிடித்த உணவுப் பழக்கம்.
தினமும் பிரியாணி கிட்டாது என்பதால் சாப்பாடு, காய்கரிகள்தான் ஹி ஹி. வாரம் மூன்று
முறையாவது மாமிசம் என்பது நம் வழக்கம் ஹி ஹி!!
உங்களின் கருத்துகளை சொல்லுங்கள்!!!
சாமியின் கலக்கல் யோகம்,நடனம் கண்டு களியுங்கள்!!!!
சாமியின் கலக்கல் யோகம்,நடனம் கண்டு களியுங்கள்!!!!
நன்றி!!!