Friday, January 31, 2014

சாமியார் பாபா இராம்தேவின் உணவு பழக்க அறிவுரை சரியா?



வணக்கம் நண்பர்களே,

ஒரு உயிர்கள் அனைத்துக்கும் அடிப்படைத் தேவை உணவே  என்பதும். ஒருவரின் உணவுப் பழக்க வ்ழக்கம், உடல் உழைப்பு மற்றும் பயிற்சிகள் ஒருவரின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது அனைவரும் உணரும் விடயம்.

சாமியார்கள்,மதப் பிரசாரகர்கள் என்றாலே ஏதாவது சர்ச்சைக்குறிய முறையில் சொல்லி,செய்து பரபரப்பு கிளப்புவது வழக்கம் என்பதை நாம் அறிவோம்.உலகமயமாக்கலில் அவ்ர்களும் புதுமையாக இப்படி செய்தால் மட்டுமே கல்லா கட்ட முடியும் என்பதால் வேறு வழியில்லை.

நிர்முக்தா இணைய தளம் ஒரு அருமையான இறை மறுப்பு தளம். அதில் வரும் கட்டுரைகள் வாழ்வின் பல வித அம்சங்களையும் விவாதித்து விளக்கும் என்பதால் அதன் வாசகன் என்பதில் நம்க்கு மகிழ்ச்சியே. நம் நண்பர்கள் அனைவருக்கும் இத்தளத்தை  பரித்துரைக்கிறோம்

திரு பாபா இராம்தேவ் இந்தியா மற்றும்  இதர நாடுகளில் கோபால் பல்பொடிக்கு இணையாக புகழ் பெற்றவர். ஆகவே நாம் அறிமுக விளக்கம் சொல்லத் தேவையில்லை!!!.பாபா இராம்தேவ் இப்போது பாஜக பிரதமர் வேட்பாளர் திரு நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 20 கோடி ஓட்டு பாஜகவுக்கு விழும் என ஆருடம் சொல்கிறார்.

அதில் பாபா இராம்தேவின் புத்தகத்தில் அவரின் கருத்தான‌  சரியான உணவுப் பழக்கம் எது என்பதை அத்தளத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்க சுருக்கமே இப்பதிவு!!. நிர்முக்தா தளத்திற்கு நம் நன்றிகள்!!!


இது அந்தப் புத்தகம்.
Front Cover
Yog Its Philosophy & Practice

1.# As per the philosophy of Jainism, Yoga is the emancipation of the soul. At the same time, mind, speech and all the physical faculties are also known as Karmayoga. (Page 1)

1.சமண மத தத்துவத்தின் படி யோகம் என்பது ஆத்மாவை விடுதலையாக்கும் உன்னத ஒழுங்கு ஆகும். இது மட்டும் அல்லாமல் மனம்,பேச்சு, மற்றும் உடலின் அனைத்து இயக்கங்களையும் மேம்படுத்துகிறது. இதுவே கர்மயோகம் எனப்படுகிறது. (பக்கம் 1).

[இது மட்டுமா இன்னும் சாமி சொல்வது எல்லாம் அக்கட்டுரையில் இருக்கிறது. மனிதன் பிறவி எடுத்ததே இறைவனை வணங்க,யோகத்தின் கடவுளைக் காணலாம்,காமத்தினை தவிர்க்காமல் யோகி ஆக முடியாது,பசு,பிராமணனை காப்பாற்ற மட்டுமே பொய் சொல்லலாம்,வழிபாட்டுத் த்லங்களில் உண்மை பேச வேண்டும்,ஆத்மாவை சுத்திகரிக்க ரிஷிகளின் வாழ்வை பின்பற்ற வேண்டும்,நம் தேவைகளுகு மேல் நம்க்கு இறைவன் தந்து இருக்கிறார்,.....

நம்புவோர் நம்பினால் நம்க்கு ஆட்சேபம் இல்லை!!!]


  2.# The ideal time for taking the morning food or breakfast is between 8 and 9 in the morning. It is better to take fruits and light drink. (Page 5)
2.உண்மையான  காலை உணவுக்கு சரியான நேரம்  காலை 8ல் இருந்து 9 மணி வரை ஆகும். அதுவும் பழங்கள் மட்டுமோ அல்லது மிதமான திரவ வகை உணவு எடுப்பதே நல்லது. (பக்கம் 5).

  3.# People above the age of 50 years should not eat anything in the morning.
3.)50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை உணவைத் தவிர்த்தல் நல்லது!!!.

[யாருக்கு நல்லது சாமி? தெளிவா சொல்லுங்க!!.இதனை  படிக்கும் மருமகள்கள் இத்திட்டத்தை ,மாமனார்,மாமியாருக்கு அமல் படுத்தினால் என்ன ஆகும்????]

  4.# The ideal time for taking the morning meal or lunch, is between 11am and 12 noon. One can extend the time up to 1pm. but beyond that is a strict NO.
4)காலை(அல்லது மதிய)  உணவு  உண்ண சரியான நேரம் 11.00 மணி முதல் 1.00 மணி வரை ஆகும்.அதன் பிறகு சாப்பிடக் கூடவே கூடாது.

[சாமி மாதிரி சும்மா இருந்தால் நாமும் இதை செய்யலாம் ஆனால்,
காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து பணிக்கு செல்ல வேண்டும்.மதியம் 2 மணி சுமாருக்கு 30 நிமிடம் உணவு இடைவேளை கிட்டலாம். இரவு வீடு வர 8_9 மணி ஆகும் என்னும் போது சாமி தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!!!]

5.      # Again the best time for dinner is 7pm to 8pm.or at the most to 9pm. No food is recommended after that.
 5)இரவு உணவுக்கு சரியான நேரம் மாலை 7 .00 மணி முதல் 8.00 மணி வரை, அதிக பட்சம் 9.00 மணி வரை மட்டுமே.அதற்கு பிறகு அவ்வளவுதான்.சத்தம் மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!!


 6.# While eating, one should maintain silence and keep praying to God while chewing the food carefully.(Page 22)
6) சாப்பிடும் போது பேசாமல் அமைதியாக ,இறைவனை வழிபட்டுக் கொண்டே,சாப்பிட வேண்டும்.( பக்கம்  22)  

 மிகவும் நல்ல விடயம் இத்னை வீட்டு அம்மா செய்தால் நிம்மதியாக சாப்பிடலாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் . ச‌மையல் சரியில்லை என்றால் காப்பாற்ற கடவுளை ஆத்திகர்கள் வேண்டுவதில் தவறில்லை.]

7.# Before you start eating, pronounce ‘OM’ or utter the Gayatri Mantra and wash your hands three times. Why?
 7). உணவு உண்ணும் முன் ஓம் என்றோ அல்லது காயத்ரி மந்திரமோ சொல்லலாம். மூன்று முறை கை கழுவ வேண்டும்.

 [எதுக்கும் நம்ம காஃபிர் அண்ணனிடம் மார்க்கத்தின் படி என்ன செய்யலாம் என‌ஒரு கேள்வி கேட்டு விடுவோம்?]

8. # Non-vegetarian food destroys our subtle and soft feelings-like love, kindness etc.( Page- 5)

8) ஊன்(மாமிச) உணவு நமது நுட்பமான, மென்மையான் உணர்வுகளான இரக்கம் ,அன்பு போன்ற்வற்றை இழக்க வைத்து விடும்.[ ஹி ஹி சாமி மோடி ஆதரவாளர் !!!]

சாமி குஜராத் கோத்ரா கலவரத்தை பற்றி என்ன சொல்கிறார்?

அது தேர்தல் பிரச்சினை இல்லை என்கிறார். இபோதைய முக்கிய பிரச்சினை இல்லை என்கிறார்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அன்பும் இரக்கமும் வழிகிறது நமக்கு புரிகிறது!!!

Holding that 2002 Gujarat riots is no longer a poll issue, Yoga guru Baba Ramdev today said Rahul Gandhi had raised old matters which have no significance in the present and he needs to be more "mature" in his approach.






சரி நம் விவாதத்தை இங்கு தொடங்குவோம்.

காலை உணவைத் தவிர்த்தல் அல்லது மிக மிதமான உணவு என்னும் கருத்து சரியா?

மருத்துவரீதியாக காலை உணவு சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு உண்பதால் மற்ற வேளைகளை விட அதுதான் நல்ல சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.


இதைப் படிப்போம்

இந்தப் பெண் காலையில் காலை உணவு நன்றாக பன்றி மாமிசத்துடன் சாபிடுகிறார்.
Yesterday I had 3 slices of 50/50 bread, 2 sausages and 2 slices of bacon with a cup of cappuccino for breakfast. Total calorie count: 753.”

என்றெல்லாம் காலையில் நன்றாக சாப்பிட முடிகிறதோ அன்றெல்லாம் மிகவும் சுறுப்பாக இருந்தமையாக சொல்கிறார்.


நாம் தேடியவை காலை உணவு நன்றாகவே சாப்பிட சொல்கிறார்கள். மூன்று வேளைகளில் அதுவே அதிக கலோரி கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

Researchers have found that eating a big breakfast of 700 calories promotes weight loss and reduces risks for diabetes, heart disease and high cholesterol.

காலை உணவு அரசன் போலவும், மதிய உணவு இளவரசன் போலவும், இரவு உணவு ஏழை போல் இருக்க வேண்டும் என்னும் பழமொழி கூட உண்டு!!!

Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper.”

இராம்தேவின் கருத்தான‌ காலை உணவு தவிர்த்தல் அல்லது மிக மிதமான உணவு சரியாக இருக்க முடியாது என்பது நம் கருத்து.

மூன்று நேரமுமே முக்கியம்தான். . இரவு மட்டும் அரிசி தவிர்க்கலாம் ,அதுவே மிதமாக இருக்க வேண்டும் என்பதே நம் நடைமுறை. காலை,மதியம் இரண்டு நேரமும் நன்றாக உண்டு விடுவோம். தண்ணீர் அதிகம்,அடிக்கடி குடிக்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை காலையில் சரவண பவனில் இட்லி,தோசை,பொங்கல் வடை ஒரு கட்டு கட்டலாம். மதியம் பாய் கடையில் பிரியாணி , இரவு சப்பாத்தி,தாவர உணவு என்பதுதான் நமக்கு பிடித்த உணவுப் பழக்கம். தினமும் பிரியாணி கிட்டாது என்பதால் சாப்பாடு, காய்கரிகள்தான் ஹி ஹி. வாரம் மூன்று முறையாவது மாமிசம் என்பது நம் வழக்கம் ஹி ஹி!!

உங்களின் கருத்துகளை சொல்லுங்கள்!!!
சாமியின் கலக்கல் யோகம்,நடனம் கண்டு களியுங்கள்!!!!


நன்றி!!!

15 comments:

  1. வாங்க சார்வாகன். இங்கே ஒரு கட்டுரை இதுமாதிரி படித்தேன். நானும் இது குறித்து குழப்பத்துடனே இருக்கிறேன்.

    http://www.dinamani.com/editorial_articles/2014/01/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/article2008984.ece

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ தமிழ்.
      இப்படியே அறிவியல் சான்று அடிப்படை இன்றி எதையாவது எழுதி குழப்புவது பலருக்கு வாடிக்கை.அந்த கட்டுரை பின்னூட்டத்தில் நல்ல பதில் உண்டு.
      நன்றி!!

      Delete
  2. //நம்மைப் பொறுத்தவரை காலையில் சரவண பவனில் இட்லி,தோசை,பொங்கல் வடை ஒரு கட்டு கட்டலாம். மதியம் பாய் கடையில் பிரியாணி , //

    காலை டிபனுக்கு இட்லி, தோசை, பத்தாதிற்கு தமிழ்நாட்டு ஸ்லீப்பிங் டோஸான பொங்கலையும் சேர்த்து கட்டினால் நன்றாக தூக்கம் வந்து விடுமே, மத்தியானம் அலாரம் வைத்து எழுந்து பாய் கடைக்கு பிரியாணி சாப்பிட போவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நந்த வனம்,

      தமிழரின் தேசிய சிற்றுண்டியாம் பொங்கலை கிண்டல் செய்வதை கண்டிக்கிறோம்.

      பொங்கல் உறுதி மொழி!!!

      பொங்கலைத் தவிர எதுவும் நல்ல சிற்றுண்டி இல்லை!!!

      அடிக்கடி பொங்கல் (வீட்டில்)சமைத்து தருபவரே நல்ல மனைவி!!! ஹி ஹி

      நன்றி!!!

      Delete
  3. நண்பர் தமிழானவன்,
    அரசியல் தொடக்கம் ஆரோக்கியம் வரை கவர்ச்சியானது எதுவோ மக்களை சுலபமா சென்று அடைய கூடியது எதுவோ மக்களை கவரகூடியது எதுவோ அதை எழுதுவது தான் தமிழகத்தின் பெரும்பாலான பத்திரிக்கைகளின் கொள்கை . உடல் ஆரோக்கியத்தில் இவர்கள் சொல்வதை எல்லாம் நம்பினா தற்கொலை மாத்திரை சாப்பிட்டு நாமே செத்து போவது மாதிரியிங்க.

    ReplyDelete
    Replies
    1. சகோ வேகநரி, சரியான சொன்னீர்கள். அவர் கொடுத்த தினமணி கட்டுரையின் இரண்டாவது பாரா தாண்டி படிக்க முடியவில்லை. /அமெரிக்காவில் கோதுமை உணவை மக்கள் தவிர்க்கிறார்கள்./ என எழுதியுள்ளார். கோதுமை உணவை தவிர்த்து விட்டு வடை பாயசத்துடன் சாதமா சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்?

      /இது குளுடன் லிஸ்டில் வருகிறது./ குளூடன் என்பது கோதுமையுள்ள புரதம். பல அமெரிக்கர்களுக்கு பலவித ஒவ்வாமை வியாதிகள் உண்டு. ஆகவே பலர் குளுடன் செரிமான சரியில்லாம பாதிக்கபடுகிறார்கள். இவர்கள் மட்டும் குளுடன் இல்லாத கோதுமை உணவு சாப்பிடுகிறார்கள். மற்றபடி சகோ சார்வாகன் சொன்ன படி புரதம்மிகு காலை உணவே நல்லது. பெரும்பாலான தமிழர்கள் காலையில் மாமிசம் சாப்பிட விரும்புவதில்லை, ஆகவே குறைந்தபட்சம் முட்டையுடன் நாளை ஆரம்பிப்பது நல்லது. முன்பு அமெரிக்காவில் காலை உணவாக நார்சத்துமிகு ஓட்ஸ் சாப்பிட சொன்னார்கள். இப்போது முட்டை சிபாரிசு செய்கிறார்கள்.

      Delete
    2. சகோ நந்தவனத்தான்,
      குளுடன் ப்ரீ உணவு உங்க நாட்டிலே கிடைக்குமா என்று ஒரு வெளிநாட்டவர் என்னிடம் கேட்டார். அப்போ தான் இப்படியும் ஒண்ணு இருக்கு என்று புரிச்சது. கவலையே படாதீங்க அங்கே சாதம் தான் முக்கிய உணவு அதில்லிருந்து வருவது தான் இட்லி மற்றும் எல்லாமே என்று அடித்து சொல்லிவிட்டேன். பின்பு எதற்கும் நம் நாட்டு சமைக்க தெரிந்த சீனியர் ஒருவரிடம் அறிந்து சொல்கிறேன் என்றேன். சீனியர் விளக்கம் தந்தார் சாதத்தின் மாவோடு கோதுமையும் கலந்து நிறைய உணவு வகைகள் இந்தியாவில் செய்யிறாங்க, ஆனபடியா குளுடன்காரங்க மிக ஜாக்கிரதையா இருக்க வேண்டும் என்று.
      சகோ நந்தவனத்தான், இந்த குளுடன் பிரச்சனை இருக்கே அது பல இந்தியர்களுக்கும் இருக்கும். ஆனா அது பற்றி எதுவுமே தெரியாம ஏதோ சாதாரண வயிற்று கோளாறு என்று நினைச்சுகிட்டு கோதுமை ரொட்டி,கோதுமை கலந்த உணவுகளை தொடர்ந்து தாராளாமா சாப்பிடுறாங்க.
      அமெரிக்காவின் விழப்புணர்வு பாராட்டதக்கது.

      Delete
  4. மாமூல் மாமு,

    இதோ நம்ம பாலிசி:

    பசிக்கும் போது உண்ணு.

    பசி தீர்வதற்கு சற்று முன்னரே நிறுத்து.
    உன் உடலுக்கென்று இயற்கை படைத்ததை மட்டும் உன்னு, நாய், நரிக்கெல்லாம் இருப்பதையும் நீயே தின்று விட்டால் பாவம் அதுங்க எங்கே போகும்.

    பன்றியைத் தவிர மற்ற எல்லா ஜீவன்களோடும் உணவுக்கு போட்டியிடுவேன் என்ற மனப்போக்கை தவிர்.

    எப்பூடி?????????

    மாமு, கோத்ரா விஷயத்தை தீர்க்கத்தான் சட்டம், கோர்ட்டு எல்லாம் இருக்கு. நீங்க ஏன் தவ்வுறீங்க மாமு ? நீங்களோ நானோ தீர்ப்பை எழுதலாம்னா நாட்டில ஒரு அரசியவாதி கூட வெளியே இருக்க மாட்டான், பலர் அதிக பட்ச தண்டனைக்குள்ளாவான்.

    ReplyDelete
    Replies
    1. @:தாஸ்

      //பசிக்கும் போது உண்ணு. பசி தீர்வதற்கு சற்று முன்னரே நிறுத்து.//

      பசி தீரும் முன் நிறுத்தினால் மீண்டும் பசிக்குமே. உடனே அடுத்த ரவுண்ட் ஆரம்பித்து விடுவீர்களா? இப்படியே ஒவ்வொரு வேளையும் எத்தனை ரவுண்டு கட்டி அடிப்பீர்கள்?

      //உன் உடலுக்கென்று இயற்கை படைத்ததை மட்டும் உன்னு, நாய், நரிக்கெல்லாம் இருப்பதையும் நீயே தின்று விட்டால் பாவம் அதுங்க எங்கே போகும்.//

      இயற்கை நம் உடலுக்கென்று எதையும் படைத்தாக தெரியவில்லை. ஆடு மாடு, கோழி பன்றிகெல்லாம் இருப்பதை சாப்பிட்டால் அதுக எங்கே போகும் என சாப்பிடுவதையே நிறுத்தும் யோசனை உங்களுக்கு வந்ததுண்டா?

      Delete
    2. \\பசி தீரும் முன் நிறுத்தினால் மீண்டும் பசிக்குமே. உடனே அடுத்த ரவுண்ட் ஆரம்பித்து விடுவீர்களா? இப்படியே ஒவ்வொரு வேளையும் எத்தனை ரவுண்டு கட்டி அடிப்பீர்கள்?\\ சாப்பிட்டுக் கொண்டே இருங்கள் ஆனால் சாப்பிட்டு முடிக்கும்போது இன்னமும் ஒருவாய் சாப்பிடலாம் என்ற நிலையில் நிறுத்த வேண்டும். 90-95% பசி தீர்ந்தவுடன் நிறுத்தி விடலாம்.

      \\இயற்கை நம் உடலுக்கென்று எதையும் படைத்தாக தெரியவில்லை. ஆடு மாடு, கோழி பன்றிகெல்லாம் இருப்பதை சாப்பிட்டால் அதுக எங்கே போகும் என சாப்பிடுவதையே நிறுத்தும் யோசனை உங்களுக்கு வந்ததுண்டா?\\ காட்டில் கூட்டமா மான்கள் இருக்கு, வரிக்குதிரை இருக்கு, Wilder beasts என இருக்கு, ஏன் யானைகள் கூட இருக்கு, எல்லாமே புல் இலைகளைத்தானே சாப்பிடுது, கிடைக்குதுல்ல்ல? ஆனால், வரிக்குதிரை மானை பிடிச்சு சாபிட்டொ, புலி புல்லைத் தின்னோ பார்த்திருக்கீங்களா? இந்த கூத்து மனிதன் மட்டும் தான் பண்ணுறான். பன்னியோட மட்டும் போட்டி போடுவதில்லை [ஆனால் அந்தப் பன்னியையும் காலி பண்ணிடுறான்!!], மத்த எல்லாத்தோடும் போட்டி போட்டு அதுங்க உண்ணுவதை பிடிங்கித் தின்னுறான். இருப்பதிலேயே அயோக்கியன் மனிதன் தான்.

      Delete
    3. மாப்ளே தாசு,

      எப்படி இப்பூடி?

      நீங்க சொன்னா சரிதான்.

      ஆனால் ஒரு பேச்சுக்கு உங்களின் பதிவுக் கருத்துகளினால் உந்தப் ப்ட்டு மனிதர் அனைவரும், தாவர உணவுக்கு மாறி விடுகிறார் என்றால் என்ன ஆகும்?முட்டை கூட உம்ம பாணியில் கிடையாது.

      மாமிசத்திற்காக வளர்க்கப்படும் உயிரிகள் ,வளர்க்கப்படாமல் அழிந்து போகும்.காடுகள் குறைவதால் அவற்றுக்கு உணவு கிட்டாது.கோழி,பன்றி இல்லாமல் போகும். ஆடு மாடு பாலிற்காக மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் வளர்க்கப்படும்.

      இது சரியா?
      இல்லை கீழே வாருங்கள்
      ஒரு நாளில் கொல்லப்படும் உயிரினங்கள்.

      Cattle: 35,507,500
      Pigs: 116,558,900
      Chickens: 9,075,261,000
      Layer hens: 69,683,000
      Broiler chickens: 9,005,578,000
      Turkeys: 271,245,000
      ஒரு நாளில் கொல்ல‌ப்படுவது 1% கீழாக மட்டுமே இருக முடியும். இறப்புக்கு சம‌மாக பிறப்பு அல்லது கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். கொல்லுதல் பிறப்பு, பாதுகாத்தல்(some years) அடுத்தே நிகழ்கிறது.

      ப்யன் அற்ற விலங்குகளை பெரும்பான்மை வளர்க்க மாட்டார்கள்.

      ஆகவே மில்லியன் கணக்கில் பிறந்து கொஞ்சம் வருடம் வாழ்ந்து, கொல்லப்படுவது சரியா?

      இல்லை விலங்கினங்களின் இனமே ஒட்டு மொத்தமாக வளர்க்காமல் குறைவது சரியா?
      புலிகளை யாரும் சாப்பிடுவது இல்லை ஆனாலும் அதன் தொகை குறைந்து விட்டது. ஆடு,மாடு,கோழி,பன்றி தொகை அதிகரிக்கிறது.


      நன்றி!!!

      Delete
  5. //வாரம் மூன்று முறையாவது மாமிசம் என்பது நம் வழக்கம் //
    சகோ,
    அதை வாரம் இரண்டு முறை மட்டுமே மாமிசம்
    வாரம் ஒரு தடவை மட்டுமே மாமிசம்
    அதன் பின்பு மாமிசமே இல்லை என்று படிப்படியாக குறைக்கலாமே.
    சகோ, மாமிசம் சாப்பிடுவதை முடிந்தளவில் குறைத்து கொள்ளும் படி எனது நிறுவனம் வைத்திருக்கும் மருத்துவ காப்புறுதி மதாந்த பத்திரிக்கை பல தடவை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.

    ReplyDelete
  6. //சாமியின் கலக்கல் யோகம் நடனம் கண்டு களியுங்கள்//
    ஏன் சகோ இந்த யோகாவோ, நடனமோ, உடல் பயிற்ச்சியோ செய்ய விரும்புபவங்க தாராளாவே தங்க வீட்டிலே இதை ஒரு தடவை பார்த்திட்டு செய்யலாமே! எதற்கு அங்கே போறாங்க? பணமும் அவருக்கு கொடுக்கணும்மோ?

    ReplyDelete
    Replies
    1. அறிவுறுத்தலுக்கு நன்றி சகோ!!!
      சாமி இல்லாமல் செய்தால் யோகம் த்வறான விளைவுகளித் தரும் என்வும் பயமுறுத்துவார்கள் சகோ .................
      எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!!!

      Delete