Tuesday, April 29, 2014

பங்கு சந்தை+ சோதிடம்= ஒரு ஏமாற்று வேலை!!!


வணக்கம் நண்பர்களே,

மனிதர்கள் இயற்கை வளங்களை நுகர்வதற்கு, ஏற்பட்ட அமைப்பே பொருளாதாரம்.இதில் சிலர் செல்வம் உள்ளோர் ஆகவும், பலர் அன்றாட வாழ்வுக்கே தடுமாறுவதும் இப்போதைய சூழல் மட்டும் அல்ல, மனித நாகரிகம் தோன்றிய நாள் முதலே இப்படித்தான்.


இயற்கை அனைவருக்கும் (கொள்கை அளவில்) பொது என்றாலும், நுகர்வில், உழைப்பிற்கு விலையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. இது பொருளாதார பிரமிட் போல் கீழ் இருப்பவனின் உழைப்பை மேலே இருப்பவன் சுரண்டுவதை தார்மீக நீயாயம் ஆக்குகிறது.

அனைவருக்கும் குறைந்த பட்சவாழ்வாதாரம், பாதுகாப்பு வழங்கும் வாழ்வியல் முறை, பொருளாதார அமைப்பு இதுவரை கண்டறியப்பட்டவில்லை( பொது உடமை கொள்கை ஆதரவாளர்கள் மன்னிக்கவும்!!!) என்பதுதான் உண்மை.

இயற்கை வழங்கும் மூலப் பொருள்களை , முதலீடு+ உழைப்பு மூலம் ,தேவைக் கேற்ற பொருள் தயாரித்து, சந்தையில் விற்று இலாபம் அடைதல் என்பதே சந்தை பொருளாதாரம். இதுவே  இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மை நாடுகளின் இப்போதைய பொருளாதாரக் கொள்கை.

போதுமான  முதலீடு இல்லாதோர், வங்கி மூலமோ, அல்லது பங்குகள் மூலம் முதலீடு  பெறுவது கடந்த 20 வருடங்களில் இந்தியாவில் வழக்கம் ஆகி வருகிறது.
இந்திய பங்கு வணிகம் 1870 ல் மும்பையில்அப்போது பம்பாய்தொடங்கியது. 1992 க்கு பிற்கு உலகமயமாக்குதலில் அசுர வளர்ச்சி கண்டதுஇந்த சுட்டி இந்திய பங்கு வணிகம் பற்றிய சில வரலாற்று குறிப்புகளைத் தருகிறது.



.முதலில் பங்கு வணிகம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் எளிமைப் படுத்தி புரிந்து கொள்வோம்.பங்கு வணிகம் என்பது பலர் முதலீடு செய்து நடத்தும் வணிகம் எனலாம்நீங்கள் ஒரு தொழில் தொடங்க முனைகிறீர்கள்உங்களிடம் போதுமான நிதி இல்லைஅதற்கு பலரிடம் கடன் வாங்குகிறீர்கள்அவர்களையும் உங்கள் தொழிலில் பங்குதாரர் ஆக்கிஇலாபத்தில் பங்கு கொடுக்கிறீர்கள் என்பதுதான் ங்கு வணிகம்.



உங்களுக்கு கடன் கொடுப்பவர்,உங்களின் தொழில் இலாபகரமானதாநீங்கள் தொழிலில் திறமை உடையவராநாணயம் உள்ளவரா என்பதைப் பொறுத்தே உங்களுக்கு கடன் வழங்கதொழிலில் பங்குதாரர் ஆக முன்வருவார் என்பது அனைவரும் அறிந்த விடயம்இக்காணொளி பங்கு வணிகம் பற்றிய எளிய விளக்கம் தருகிறது.


அதிக இலாபம் கொடுக்கும் பங்குகளின் மதிப்பு சந்தையில் அதிகரிக்கும் என்பதால், பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்க அதில் ஈடுபட்டு உள்ளோர் முயல்கின்றனர்.இச்சூழலில் ஒரு பங்கின் செயற்கையாக  விலையை அதிகரிக்க பல ந்திரங்களும் நடைமுறைக்கு வருகின்றது.


பங்கு வணிகம் என்பதே ஒரு சூதாட்டம் போன்றது என்ற கருத்து உடையவர் உண்டு.பங்கு வணிகத்திலும் பிற துறை போன்று ஏமாற்றுவோர் இருப்பதும் உண்மைதான். இலாபம் சம்பாதிக்காமலேயே பங்குகளுக்கு தேவையை ,ஊடகம், அரசியல் துணையுடன் அதிகரித்து, பலரை ஏமாற்றி பங்குகளை வாங்க வைத்து, பிறகு பங்கு உரிமையாளர்கள் விற்க முடியாமல் போகும் போது, பங்குகளின் விலை முழுவதும் சரியும். அப்போது மொத்த பணமும் இழக்கும் சூழல் ஏற்படும்.சத்யம் தொழில் நுட்ப நிறுவன வீழ்ச்சி, ஹர்சத் மேத்தா மோசடி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


இச்சூழல் தவிர்க்க, ஒரு நிறுவன பங்கு கடந்த 10 ஆண்டுகளில், என்ன மாற்றங்களைக் கண்டு வந்தது என அனுமானித்து முதலீடு செய்வது நலம். ஒரு .கா ஆக இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் பற்றி அறிய முயற்சி செய்வோம்.

சில நிறுவனங்கள் , பங்கின் மதிப்பை இரட்டிப்பு அல்லது அதற்கு மேலும் போனஸ் ஆக அதிகரிக்கின்றன. 1993 ஒருவர் 100 பங்கு தலா 95 ரூபாய் என 9,500 முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று என்ன தெரியுமா???.
சுமார் 1.5 கோடி என  சொல்லப் படுகிறது.


ஆனால் அது தவல் தொழில் நுட்ப புரட்சியின் ஆரம்பம் என்பதால் மட்டுமே அப்படி அசுர இலாபம் கிடைத்தது. இன்று இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கினால் சாதாரண இலாபம் மட்டுமே கிட்டும்.ஆனால் இப்படிப்பட்ட நிறுவன பங்குகள் மிகவும் குறைவான,(ஆனால் நம்பகமான) இலாபங்களைக் கொடுக்கும்.
இன்ஃபோசிஸின் இந்த வார‌ நிலவரம் விலை 52.38$(டாலர் அதாவது 3179.90 ரூபாய்)
Date
Open
Price
High
Price
Low
Price
Close
Price
Total
Volume(Nos)
52 High
52 Low
26-apr-14
52.38
52.75
52.22
52.50
1,293,508
63.20
0.00
25-apr-14
52.50
52.61
52.15
52.55
1,383,032
63.20
0.00
24-apr-14
52.25
52.31
51.80
52.30
1,635,072
63.20
0.00
23-apr-14
51.99
52.69
51.51
52.45
1,749,217
63.20
0.00
22-apr-14
52.44
52.78
52.33
52.50
796,584
63.20
0.00



அதாவது நல்ல நம்பகமான நிறுவனம் என்றால், குறுகிய காலத்தில் இலாபம் அதிகரிப்பு குறைவாகவே இருக்கும் என்றாலும், நீண்ட கால முதலீடு என்றால்,இலாபம் தரும்.

Thanks to


இன்ஃபோஸிசில் முதலீடு செய்யுங்கள் என தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம். பங்கு வணிகத்தின் சாதகம்,பாதகம் இரண்டையும்  விளக்க ஒரு .கா அவ்வளவுதான்.

ஒரு நிறுவனத்தின் பங்கு ஏறுமா?இறங்குமா என்பதைக் கணிக்கும் மென்பொருள்களும் உண்டு.

பங்கு வணிகத்தில் முதலீடு செய்து குறைந்த காலத்தில் அதிக இலாபம் என்பது ,அனைவருக்கும் கிட்டாது என்பதை அதில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியும். கணிப்பு என்றாலே தவறாகும் வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் கொள்வது நல்லது.

ஆகவே விரும்பும் சகோக்கள் அதன் நெளிவு சுழிவு அறிந்து, உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யவும். அரசு வங்கியில் முதலீடு செய்வது பாதுகாப்பு என்றே சொல்கிறோம். அதிக வட்டி அல்லது இலாபம் என்பதுதான் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்கிறது என்பதே நம் கருத்து.

இப்பதிவு எழுதக் காரனமே தமிழ் மணத்தில் கண்ட ஒரு பதிவுதான். சரி பங்கு வணிகம் பற்றி நண்பர் ஏதேனும் தகவல் கொடுப்பார் என முதன் முதலில் அவர் தளத்திற்கு சென்று பார்த்தால் அதிர்ச்சி!!!


ஜாதகம் பார்த்து பலனும் பரிகாரமும் பெற வேண்டுமா?
நீங்கள் ஏற்கனவே நஷ்டமடைந்திருந்தாலும், இனி எப்போதும் சரியாக டிரேடிங் செய்து ஷேர்மார்க்கெட்டில் லாபமடைய உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலனும் எளிய பரிகாரமும் சொல்ல வேண்டுமானால் இதற்கான எளிய கட்டணமாக ரூ 1555/- நமது வங்கிக் கணக்கு ஏதாவது ஒன்றில் செலுத்தி விட்டு உங்களது ஜாதக நகலை மின்னஞ்சலில்(bullsstreet.com@gmail.com) அனுப்பி விடுகங்கள்.நேரில் வருவதென்றாலும் முன்னதாக பணம் செலுத்தி ஜாதக நகலை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு அப்பாயின்ட்மென்ட் பெற்றுக்கொண்டு வாருங்கள்.
ஜோதிட ரீதியிலான ஷேர் டிரேடிங் பயிற்சி
 ****

நண்பர் (பதிவர்), பங்கு வணிக முதலீடுகளுக்கு , சோதிட அடிப்படையில் ,முடிவு எடுக்க கற்பிப்பதாக விளம்பரம் செய்கிறார்.அப்படி கற்பிப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்கள் வரை தொகையாகவும் நிர்ணயம் செய்கிறார் என்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தியது

சோதிடம் என்பது  சில கோள்கள்,நட்சத்திரம் போன்றவை, ஒருவரின் வாழ்வின் மீது தாக்கம் செலுத்துகின்றன என்பதும் பிறந்த நேரம் சார்ந்து அவை கணிக்கப்படுகின்றன. டாலமியின் புவிமையக் கோட்பாட்டின் கணித அடிப்படையில் கோள்களின் இயக்கம் கணிக்கப்படுகிறது. கோள்களின்  இருப்பிடம் சார்ந்து பலன்கள் என கணிக்கிறார்கள்.சோதிட அடிப்படையில்  திருமணம், புதுமனை வாங்குதல்,விற்றல், தொழில் தொடங்குதல் என பல விடயங்கள் நடக்கின்றன.
சோதிடம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விடயம்.ஒருவரின் மனதுக்கு ஆறுதல் கொடுப்பது என்ற அளவில் மட்டுமே ஏற்கலாம். மற்றபடி எதிர்கால விடயங்களை சரியாக கணித்து அதன் மூலம் பங்கு வணிகத்தில்  இலாபம் அடையலாம் என்பது நிச்சயம் அறிவார்ந்த செயல் ஆகாது.
ஏன் சோதிடம் என்பது மோசடி என்பதை இக்காணொளி விளக்குகிறது




ஆகவே  பங்கு வணிகத்தில் சாதகம்,பாதகம் இரண்டும் உண்டு. அதனை அனுமானித்து மட்டுமே முதலீடு செய்யவும். சோதிடம் சார் பங்கு வணிக கணிப்பு என்பதை தவிர்த்தல் உங்களின் பணத்தை பாதுகாத்து சேமிக்கும்.
http://articles.orlandosentinel.com/2013-08-13/business/os-broker-pleads-guilty-prison-20130813_1_ex-broker-ponzi-scheme-fraud

Ex-broker who ran astrology-based investment scheme pleads guilty to fraud, sentenced to prison

August 13, 2013|By Richard Burnett, Orlando Sentinel

நன்றி!!!!



37 comments:

  1. நல்ல நேரத்தில் எழுதியிருக்கிறீர்கள். சோதிடம் பற்றிய தங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். எனினும், பங்கு சந்தையில் பணம் பண்ண ஜோதிடம் என்பது பித்தலாட்டமே. 1927 great depression னுக்கு முன், அமெரிக்காவிலும் இதே போல் ஜோதிடம் பார்த்து பங்கு வர்த்தகத்தில் பணம் விரயம் பண்ணவர்கள் ஏராளம். security analysis போன்ற புத்தகங்கள் வந்து fundamental analysis பற்றிய விழிப்புணர்வு வந்ததும் தான் அது ஒழிந்தது..

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் பந்து,
      சோதிடமோ, ஆன்மீகமோ உங்களையோ பிறரையோ (பொருளாதாரம்+மன நலம்)பாதிக்காமல் பின்பற்றும் உரிமை உங்களுக்கு உண்டு.

      என்றாலும் சோதிடம் சார் பங்கு வணிக கணிப்பு என்பது மோசடி என்பதை ஏற்றுக் கொண்டமைக்கும், மேலதிக தகவல்களுக்கும் நன்றி!!

      Delete
  2. antha fradu thinamum ethaiyaavathu eluthivaippathu valakkam

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இராஜேஸ்,
      நண்பரின் சோதிடம் சார் பங்கு வணிகம் என்பது எப்போதும், பலருக்கு சரியான பலன் தராது. மற்றபடி தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாமே.
      நன்றி!!

      Delete
  3. சோதிடம் மூலம் கணித்து அதன் மூலம் பங்கு வணிகத்தில் அதிக இலாபம் அடையலாம் என்றால் அதில் ஏமாறுவதற்கு எம்மவர்கள் பலர் ஆர்வத்துடன் இருப்பர்கள். தேவையான கட்டுரை சகோ.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரி,
      குறுகிய காலம், அதிக இலாபம் என்பதே பலரின் இலட்சியம் என்னும் போது இப்படி விளம்ப்பரம் முளைப்பதில் வியப்பு என்ன??

      ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற புத்தரின் பொன்மொழிக்கு இன்று மதிப்பு உண்டா???
      நன்றி!!!

      Delete

  4. Congrads. Mr.Rajesh Kumar knows well what I also know.

    Namakkal Venkatachalam

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சகோ!!!

      Delete
  5. நல்ல விளக்கம்! நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சகோ!!!

      Delete
  6. ஜோதிடம் மூலம் பங்கு வர்த்தகம் மட்டுமல்ல. அடுத்த பிரதமர், முதல்வர் யார் என்பதையும் கணிக்க முடியும். மே 16 வரை பொறுத்துக் கொள்ளுங்கள். "நான் அப்பவே சொல்லல!!" என்று யாரவது துல்லியமாக கணிப்பார்கள். :))

    ReplyDelete
    Replies
    1. ஓய் குட்டிப்பிசாசு,

      நான் அப்போவே சொல்லிட்டேன்யா, இந்த முறை யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காதுனு, தேர்தல் முடிவு வந்ததும் , இதை அப்போவே சொல்லல நான் சொல்ல வேண்டாமா?

      ஹி...ஹி கூடவே நீரும் வந்து அப்போவே வவ்வால் சொல்லியாச்சுனு சொல்லணும் சொல்லிட்டேன் :-))
      --------------

      பங்கு சந்தை என்பதே ஏமாற்று வேலை எனவே அதில் ஜோதிடம் சொல்லி ஏமாற்றுவது என்ன பெரிய தப்பா அவ்வ்!

      Delete
    2. //அப்போவே வவ்வால் சொல்லியாச்சுனு சொல்லணும் சொல்லிட்டேன் :-))//

      சரிங்க ஆபிஸர்!!

      //பங்கு சந்தை என்பதே ஏமாற்று வேலை எனவே அதில் ஜோதிடம் சொல்லி ஏமாற்றுவது என்ன பெரிய தப்பா அவ்வ்!//

      நாங்கெல்லாம் கோட்டீஸ்வரனாகிரது உனக்கு பிடிக்காதே!

      Delete
    3. சகோ கு.பி,
      //ஜோதிடம் மூலம் பங்கு வர்த்தகம் மட்டுமல்ல. அடுத்த பிரதமர், முதல்வர் யார் என்பதையும் கணிக்க முடியும். மே 16 வரை பொறுத்துக் கொள்ளுங்கள். "நான் அப்பவே சொல்லல!!" என்று யாரவது துல்லியமாக கணிப்பார்கள். :))//
      இங்கே பாருங்கள் 10 இலட்சம் ரூ வெல்ல நல்ல வாய்ப்பு!!!

      முயற்சி செய்யுங்கள் ஹி ஹி

      நன்றி!!!
      http://nirmukta.com/2014/04/27/predict-election-results-and-win-1-million-rupees/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+Nirmukta+%28Nirmukta%29
      Predict Election Results And Win 1 Million Rupees!

      Delete
    4. சகோ வவ்வால் ஆண்டவரே(அல்லது தூதரா?),
      லேட்டஸ்ட் நிலவரம் தெரியவில்லை ஹி ஹி

      //நான் அப்போவே சொல்லிட்டேன்யா, இந்த முறை யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காதுனு, தேர்தல் முடிவு வந்ததும் , இதை அப்போவே சொல்லல நான் சொல்ல வேண்டாமா?

      ஹி...ஹி கூடவே நீரும் வந்து அப்போவே வவ்வால் சொல்லியாச்சுனு சொல்லணும் சொல்லிட்டேன் :‍))//

      உங்களால் முடியாத விடயம் உண்டா என்ன !!!

      ஹி ஹி
      **
      பங்கு வணிகத்தில் மோசடி நடக்கும் வாய்ப்பு அதிகம் என்று மட்டும் சொல்வோமே!!!.

      பணம் என்பது ஒருவரை விட இன்னொருவரிடம் எவ்வளவு அதிகம் என்பது பொறுத்தே அதன் மதிப்பு என்னும் போது, சிலர் செல்வந்தராகவும், பலர் ஏழைகளாக இருப்பது மட்டுமே இப்போதைய பொருளாதார அமைப்பில் சாத்தியம்.

      நன்றி!!!

      Delete
    5. கு.பி,

      அது....!

      ஊருக்கு நாலு கேடிஸ்வரன்கள் தான் இருக்காங்க அவ்வ்!
      -----------

      சகோ.சார்வாகன்,

      ஹி...ஹி இப்போத்தான் "தீர்க்க தரிசனம்" எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சு இருக்கு , கூடிய சீக்கிரம் இறைத்தூதர் , ஆண்டவர்னு புரோமோஷன் ஆகிடும்னு நினைக்கிறேன் :-))

      #//உங்களால் முடியாத விடயம் உண்டா என்ன !!!//

      ஹி...ஹி இந்த உண்மைய நல்லா ஊருல நாலுப்பேர் கேட்கிறாப்போல சொல்லுங்க, அதுவும் இஸ்கான் பாகவதர் காதுல விழுறாப்போல சொல்லுங்க (கரகாட்டம்லாம் நியாபகம் வந்தா அடியேன் பொறுப்பல்ல)அப்போத்தான் "வருங்காலத்தில்" வரலாறு நம்ம பேரை சொல்லும் அவ்வ்!

      #//பங்கு வணிகத்தில் மோசடி நடக்கும் வாய்ப்பு அதிகம் என்று மட்டும் சொல்வோமே!!!//

      வாய்ப்பு அதிகம் , அதனை பயன்ப்படுத்தி ஆட்டைய போடுவதும் அதிகமே!
      -------------

      Delete
    6. ஜனவரி 1 சிறப்பு நீயா நானாவில் சோதிடர்கள் நிறைந்த அவையில் தேர்தல் கணிப்பு நடத்தியுள்ளார்கள். பார்ப்போம் முடிவுகள் எப்படி வருகிறதென்று.

      Delete
  7. சோதிட நம்பிக்கையுள்ளவர்கள் இவர்கள் வழி போகப் போகிறார்கள். யார் சொல்லி அவர்கள் கேட்கப் போகிறார்கள். இருந்தும் இந்தப் பதிவைப் போட்டவரின் qualifications பார்த்து அசந்து விட்டேன். metallurgical engineering-ல் M.E. முடித்து அதிலேயே ப்ராக்கட் Ph.D. இவர்.but poor guy... he could not make out that i was trying to pull his legs. very sincerely answering my not-so-cite-questions!!!

    (Ph.D), ஜோதிடம், ஷேர்கள், சாயி .... எல்லாமே நல்ல காம்பினேஷன் .....!
    ரொம்ப பிடிச்சிருக்கு ... -- இப்படி சொல்லியும் அவருக்குப் புரியவில்லை. ஆகவே நானே ஜகா வாங்கி விட்டேன். !!! அவரது கிரகங்கள் அவரையும் 15,555 அல்லது 1555 பணம் கொடுத்து சேரும் அவரது மாணவ திலகங்களையும் காப்பாற்றட்டும் !!!

    ReplyDelete
    Replies
    1. தருமிய்யா,

      //metallurgical engineering-ல் M.E. முடித்து அதிலேயே ப்ராக்கட் Ph.D. இவர்.but poor guy... he could not make out that i was trying to pull his legs. very sincerely answering my not-so-cite-questions!!!//

      நீங்க இம்புட்டு நல்லவரா அவ்வ்!

      படிச்சிட்டு வேலை அதே துறையில் வேலை செய்யத்தான் படிச்சிருக்கணும், அதே துறையில் வேலை செய்யாமல் இருக்க அதனை படிச்சிருக்க வேண்டாம் ,சும்மா பேருக்கு முன்னர் போட்டுக்கிட்டா "அதுக்குலாம்" கேஸ் போட மாட்டாங்க அவ்வ்.


      //metallurgical engineering-ல் M.E. //

      பீஹார்ல ஒரு டுபாக்கூர் டீம்டு யுனிவர்சிட்டி இருந்தது, அவங்க கரஸ்பாண்டன்ஸ்ல பொறியியல் படிப்புகளை வாரி வழங்கிட்டு இருந்தாங்க , கொஞ்ச நாள் முன்னர் தான் புடிச்சு உள்ளப்போட்டாங்க ,அது போல பணம் கொடுத்து பட்டம் வாங்கிக்கலாம் அவ்வ்!

      # சிட்டுக்குர்வி லேகிய வைத்தியர் போல மதுரை,காரைக்குடினு ஊருக்கு ஒரு பேங்க் அக்கவுண்ட் வச்சிருக்கார் அவ்வ்!

      Delete
    2. வணக்கம் தருமி அய்யா,
      தனிப்பட்ட விமர்சனம் தவிர்த்து கொள்கை சார்ந்து விமர்சிப்போம்.

      கல்வி என்பது பட்டம் பெறுதல் என்னும் கண்ணோட்டம் தவறு.

      படித்தவர்கள்தான் அதிகம் சாமியார் பின் செல்பவர்கள்.

      நீங்களும் மார்க்கப் பிரியர் என்பதால் கொஞ்சம் மார்க்கம் பேசுவோம்.

      குரானின் வட்டி வாங்கக் கூடாது என்பது மிகவும் அருமையாக கருத்து என்றாலும், இஸ்லாமிய வங்கி மறைமுகமாக வட்டி வாங்குகின்ற்ன.

      ஆகவே பொருள் என்றால் கடவுள் சொல் கூட இரண்டாம் பட்சம் ஆகிறது.

      ஆகவே பொருள் சம்பாதிக்க கடவுள், கிரகங்கள் உதவி என கதை விடுவதா பெரிய விடயம்???

      சிந்திக்க மாட்டீர்களா???

      நன்றி!!!

      Delete
  8. நிறுவனம் பொதுவில் திரட்டும் நிதி அதன் செயல்பாடுகளுக்கு மட்டுமே ,மாறாக பங்கு வணிகத்திற்கு அல்ல.பதிவின் கருத்து அருமை. பங்கு வணிகம் ,நிறுவன வணிகம்(பிசினஸ் )வேறு .இதை சரியாக உணர்ந்து மீண்டும் ஒரு சிறந்த பதிவு இட்டால் மிக நலம்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோ குணா,
      பங்கு வணிகம் என்பது என்ன என்பதை மிக எளிதாக சொல்லும் முயற்சி மட்டுமே இப்பதிவு. இதைத் தாண்டி செல்ல விரும்பவில்லை.

      அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதாரம் என்பதற்கு இப்போதைய பொருளாதார அமைப்பு உதவாது என்பது கருத்து.

      நன்றி!!!

      Delete
  9. //நிறுவனம் பொதுவில் திரட்டும் நிதி அதன் செயல்பாடுகளுக்கு மட்டுமே ,மாறாக பங்கு வணிகத்திற்கு அல்ல.பதிவின் கருத்து அருமை. பங்கு வணிகம் ,நிறுவன வணிகம்(பிசினஸ் )வேறு .இதை சரியாக உணர்ந்து மீண்டும் ஒரு சிறந்த பதிவு இட்டால் மிக நலம்.நன்றி//

    நீங்க கூட பங்கு வணீகத்தினை புரிந்துக்கொண்டு கருத்திட்டால் நலம்!

    பங்கு வணீகத்திற்காக நிதி திரட்டுகிறது என சொல்லவில்லை, அவ்வாறு நிதி திரட்டுவதை "பங்கு வணீகம்" என்கிறார்.

    அப்புறம் மியூட்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 'நிதி திரட்டி" பங்கு வணிகத்தில் ஈடுபடுகிறார்கள் :-))

    எனவே நிறுவனம் என எதை வச்சு "பங்கு வணிக" வரையறை செய்யுறிங்க என புரிந்துக்கொள்ளவும்.

    # நிறுவனம் பங்குகளை விற்று நிதி திரட்டுகிறது- அது என்ன வணிகம்?

    முதன் முதலில் பங்கு வெளியிடுவது(IPO) - பிரைமரி மார்க்கெட் ஷேர் டிரேடிங் ஆகும்.

    # அதே நிறுவனம் ,குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மெர்ஜெர் அல்லது கன்சாலிடேட் செய்ய "முன்னர் விற்றப்பங்குகளை மீண்டும் வாங்கவும் செய்யும் "buy back" இது செகண்டரி மார்க்கெட்டில் நிகழும்.

    எனவே ஈக்விட்டி ஷேர்ஸ் மூலம் நிதி திரட்டி செயல்ப்படும் நிறுவனம் "பங்கு வணிகம்" செய்கிறது என சொன்னால் தப்பா?

    ReplyDelete
  10. MF can issue only NFO not IPO.
    Company which issue IPO may or maynot be listed entity in exchange.If it is not listed ,how trading possible?
    Promotors only sell and buy their stake for their profit.
    MF meant for market investment and cannot be compared with any other company.
    only for clarification not quarrel.Anyway thanks for rapid reply.Wishes and regards

    ReplyDelete
  11. சேகர் குணசேகர்,

    //MF can issue only NFO not IPO.//

    மண்டையில மயிரு மட்டும் தானா நல்லா வளரும் :-)))

    //Company which issue IPO may or maynot be listed entity in exchange.If it is not listed ,how trading possible?//

    எனக்கு எதுனா ஃபீஸ் கட்டினா எப்படினு சொல்லித்தருவேன் :-))

    #//Promotors only sell and buy their stake for their profit.//

    அப்போ மத்தவன்லாம் அடுத்தவன் பிராஃபிட் கா வாங்கி விக்குறான் அவ்வ்!

    அய்யா உமக்கு தமிழில் சொன்னாலும் விளங்காது ,ஆங்கிலத்திலும் விளங்காது எனவே சோதிடரிடம் பணம் கட்டி ஏமாறவும் அவ்வ்!

    # நாட்டுல எனக்கு மட்டும் ஏன் இப்படியான மாக்கான்கள் சிக்குறாங்க அவ்வ்!!!

    ReplyDelete
  12. நல்லது. நல்ல இருங்க நண்பா

    ReplyDelete
  13. Magarishi " Vavvaal " engayaavathu entry kodutthaal, Antha pinnoottamey
    Sudaaga irukkum..ingayum ippaditthaan... engayum Appaditthaan...

    ReplyDelete
    Replies
    1. சகோ நாசர்,
      அஸ்ஸலாமு அலைக்கும்.
      வ‌வ்வாலுக்கு(ம்) அமைதி உண்டாகட்டும்.
      நன்றி!!!

      Delete
    2. நாசர்,

      வுட்டா நம்மள சாமியார் ஆக்கி கமண்டலத்தை கையில கொடுப்பார் போல இருக்கே அவ்வ்!

      ஹி...ஹி நடிகைகள் சிஷ்யைகளாக வர ஏற்பாடு செய்தால் " சாமியாராவதில்" ஆட்சேபனையில்லை அவ்வ்!
      ---------

      சகோ.சார்வாகம்,

      அப்படியே "சாந்திய உண்டாக்க" சொல்லிடாதிங்க ,அப்புறம் குடும்பத்துல குழப்பம் உண்டாகிடும் அவ்வ்!

      Delete
  14. \\சோதிடம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விடயம்.ஒருவரின் மனதுக்கு ஆறுதல் கொடுப்பது என்ற அளவில் மட்டுமே ஏற்கலாம். மற்றபடி எதிர்கால விடயங்களை சரியாக கணித்து \\சோதிடம் ஒரு விஞ்ஞானம். கைதேர்ந்த சோதிடர் வாழ்க்கையை தெளிவாக கணித்துக் கூறி விடுவார். கணிப்பு சோதிடருக்கு சோதிடர் சற்றே வேறுபட்டாலும் மெயின் பாயிண்டுகள் மாறுவதில்லை. வெளியூரில் இருந்து எங்க ஊருக்கு வந்த ஜாதகத்தைப் பார்த்து அப்படியே அவர்கள் கதையை நேரில் பார்த்தமாதிரி புட்டு புட்டு வைத்தார் அவர்கள் யார் என்றே தெரியாத எங்க ஊர் சோதிடர். இதுபோல எண்ணற்ற அனுபவங்கள் உண்டு. ஆனால் ஒன்று சோதிடத்தை வைத்து நமக்குன்னு நிர்ணயித்ததைவிட அதிகம் சம்பாதிக்க முடியாது, அது பங்கு வியாபாரத்துக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. வாரும் மாப்ளே,
      நலமா??

      1/சோதிடம் ஒரு விஞ்ஞானம்/

      அறிவியல் என்றால் என்ன ? என்னும் கேள்விக்கு நீர் இதுவரை விடை அளிக்கவில்லை. நான் சொல்லும் சான்றுகளுக்கு அதிகம் பொருந்தும் விள்க்கம் என்பதன் மீதும் கருத்து சொல்ல மறுக்கிறீர்.

      ஆகவே உம் அறிவியல் வரையறைக்குள் சோதிடம் வரும் என்பதில் எனக்கு வியப்பு இல்லை.
      **
      2./கைதேர்ந்த சோதிடர் வாழ்க்கையை தெளிவாக கணித்துக் கூறி விடுவார்./
      சில கை தேர்ந்த சோதிடர்களின் பெயரைக் கூறவும். என்ன தெளிவாக கணித்த்னர என்பதும் இங்கே சொல்லும். அல்லது பதிவு போடும்.
      **
      3./சோதிடருக்கு சோதிடர் சற்றே வேறுபட்டாலும் மெயின் பாயிண்டுகள் மாறுவதில்லை/

      அப்படி என்ன மாறுகிறது? ஏன் மாறுகிறது என்பதை சிந்திக்க( ஹி ஹி மூக்கு சிந்தவே) மாட்டீரா??
      4/வெளியூரில் இருந்து எங்க ஊருக்கு வந்த ஜாதகத்தைப் பார்த்து அப்படியே அவர்கள் கதையை நேரில் பார்த்தமாதிரி புட்டு புட்டு வைத்தார் அவர்கள் யார் என்றே தெரியாத எங்க ஊர் சோதிடர். இதுபோல எண்ணற்ற அனுபவங்கள் உண்டு. //

      கதையை எடுத்து விடும். அனைவரும் பலன் அடைய வேண்டும் அல்லவா!!!


      5./ஆனால் ஒன்று சோதிடத்தை வைத்து நமக்குன்னு நிர்ணயித்ததைவிட அதிகம் சம்பாதிக்க முடியாது, அது பங்கு வியாபாரத்துக்கும் பொருந்தும்./

      யோவ் நீர் கில்லாடி, சோதிடம் சார் பங்கு வணிக கணிப்பு உண்மை என்றால்,
      சரி உம்மை பணம் செலவு செய்து பரிசோதிக்க சொல்வோம் என நழுகிறீரே.

      கில்லாடி மாப்ளே!!

      ஹி ஹி
      தேசம் ஞானம் கல்வி,
      ஈசன் பூசை எல்லாம்
      காசு முன் செல்லாதடி
      குதம்பாய்!!


      நன்றி!!

      Delete
  15. நேர்மையான சோதிடர்கள் பரிகாரத்தின் மூலம் கடவுள்களைக் குளிர்வித்து பலன் பெற முடியாது எனத் தெளிவாகக் கூறுவார்கள்.

    டுபாக்கூர்களிடம் ஆடுகள் விரும்பிச் சென்று பிரியாணியானால் யார் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  16. It's Very useful Information tnx lot

    http://tradersguides.blogspot.in/

    ReplyDelete
  17. இவரது ஜோதிட ரீதியிலான ஷேர் டிரேடிங் பயிற்சியுடன் தான் Warren Buffett பணக்காரர் ஆனாரோ..../

    ReplyDelete
  18. இப்போது எழுதுவதைக் குறைத்து விட்டீர்களா? I miss you so much...........

    ReplyDelete
  19. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நலமா சகோ?

    ReplyDelete
  20. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நலமா சகோ?

    ReplyDelete