Tuesday, October 20, 2015

மாட்டுக் கறி தடைக்கு முன்னால்!!!!!!!!!!!!!!!!

வணக்கம் ந(அ)ண்பர்களே,
மீண்டு(ம்) பதிவு எழுத ஆசை.ஆயிரம் கதை சொல்லி  ஆட்சி பிடித்த  மதம் சார் கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்,மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் , மத வெறியை தூண்ட முயற்சித்து வருகிறது.

மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதல் இடம் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? அல்லது எதிர்க்கும் அரசின் ஆதரவாளருக்கு தெரியாதா?

http://beef2live.com/story-world-beef-exports-ranking-countries-0-106903

World     10,200,000
Rank     Country     2015            Change
1     India                   2,400,000     23.53%
2     Brazil                  2,005,000     19.66%
3     Australia             1,590,000     15.59%
4     United States      1,098,000     10.76%
5     New Zealand        555,000        5.44%


இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல, மதங்களின் தொகுப்பு.

யார் முசுலீம், கிறித்த்வர் அல்லாதவரோ அவருக்கு  இந்து சட்டம் செல்லும்   என மட்டுமே நமது அரசியல் அமைப்பு சட்டம் வரையறுக்கிறது.

இந்து என்பதன் வரையறுப்பு பற்றி தெரியாது என நீதிமன்றத்தில் சொல்கிறது ஆளும் இந்ந்துத்வ அரசு.
http://www.thehindu.com/news/national/govt-does-not-have-info-on-definition-of-hindu/article7750000.ece

 Union Home Ministry does not know the definition of the word ‘Hindu’. In reply to an RTI query by Neemuch resident Chandrashekhar Gaur, the Ministry said it does not know the definition of the word Hindu.

“To my query under RTI about the meaning and definition of the word Hindu in the light of the Indian Constitution and the law, the Home Ministry in its reply on July 31 said the Central Public Information Officer (CPIO) doesn’t have information regarding it,” said Mr. Gaur, a resident of Neemuch district in Madhya Pradesh.

Mr. Gaur had also sought to know on what grounds a community was considered Hindu, and why Hindus were considered to be a majority community.

The government’s reply was baffling, he said.

“If the government doesn’t know the meaning and definition of the word Hindu, on what basis did it enact the Hindu Marriage Act?” he questioned.

இந்த சூழலில் இந்ந்துக்களின் உணவு இது என வரையறை செய்ய இயலுமா?

உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம்.உலக முழுதும் பல்வேறு உனவுப் பழக்க முறைகள் உண்டு.
காலம் காலமாக வ்ழக்கத்தில் இருது வரும்,பிடிக்கும் உணவை சாப்பிட எவருக்கும் உரிமை உண்டு.
மாட்டுக் கறி உண்ணுதல் சுமார் 10,000 வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது.சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட இந்த வழ்ழக்கம் இருப்பதகா அகழ்வாய்வு சான்றுகள் குறிப்பிடுகின்றன.

http://beef.sabhlokcity.com/2013/07/archaeological-evidence-of-beef-eating-in-india-indus-valley-vedic-period-etc/

பவுத்தம்,சமணம் ஆகியவற்றின் தாக்கத்தினால்தான் , மாமிச உணவு தவிர்த்தல் இந்தியாவில் வழக்கத்திற்கு வந்தது.வேத கால மதத்தில் பலியிடுதலும், சோமபானம் (அந்தக் கால சரக்கு) படைத்தலுமே வழிபாடு ஆக இருந்தது.

தாவர உணவு மட்டுமே சாப்பிடுவேன். அது உடலுக்கு நல்லது என பிரச்சாரம் செய்வேன் என்று சொல்வதும் ஒருவரின் உரிமை. ஆனால் ஆடு ,கோழி, பன்றி, எருமை சாப்பிடுவேன் ஆனல் யாரும் பசு, எருது மட்டும் சாப்பிடக் கூடாது என்பது சரியல்ல.

மாட்டுக் கறி பிரச்சினைக்கு முன்பு,அதாவது மாற்று மதத்தின‌னருக்கு உணவுக் கட்டுப்பாடு விதிக்கும் முன்பு

1. யார் இந்து என்பதை சரியாக வரையறுக்க வேண்டும். வேண்டும் எனில் மாட்டுக் கறி சாப்பிடாதவர் மட்டுமே இந்து என வரையறை செய்யலாம்.

2.இந்துக்கள் அனைவருக்கும் ஒரே உணவுப் பழ‌க்கம் கொண்டு வர வேண்டும்.ஒன்று அனைத்து இந்துக்களும் சைவ உணவு ,அல்லது  ஆடு ,கோழி, பன்றி, எருமை கரி சாப்பிட வேண்டும்.

3. இந்துக்களில் ஒரே சாதியில் திருமணம் செய்ய தடை வேண்டும். சாதி விட்டு சாதி மட்டுமே திருமணம் முடிக்க வேண்டும்.

4.அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.

5.சமீபத்திய‌ சேச சமுத்திரம தேர் எரிப்பு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம்.

யாரேனும் விவரம் அறிந்த(??) இந்துத்வ ஆதரவாளவர் (ஒருவேளை) இருந்தால் பசு மாட்டு இறைச்சி உண்ணக் கூடாது என சொல்லும் வேத வசனம் குறிப்புகள் தரவும்.

ந‌ன்றி!!!!!!!!!!!

27 comments:

  1. எங்க போனீங்க இத்தனை நாளா? :)

    அது மாட்டுக் கறி, "கரி" இல்லை! சரி செய்து விடுங்கள்.. கொன்னாப் பாவமில்லை.. தின்னாத்தான் பாவம்னு பகவான் சொல்லியிருக்காரோ என்னவோ! :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க ந‌ன்றி திருத்தி விட்டேன்!!!

      Delete
  2. வாங்க சார்வாகன்! நலமா!
    இவனுங்க இப்படியே போனா எதை எதை, எப்படி எப்படடி சாப்பிடனும் என்றும சொல்வார்கள்.
    ஏன் அவன் அவன் அவனது மனைவிகளை இப்படித்தான் பொதுவில் வர்ணிக்கணும் என்று சொல்லுவாங்க போல!
    புரியலையா?
    என் அடுத்த பதிவை படியுங்கள்---இன்னும் சில நேரங்களில்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நம்பள்கி ,
      நலமா? யார் இந்து என்பதை வரையறுக்க தெரியாது என சொல்கிறது இந்துத்வ அரசு.

      மாட்ட்டுக்கறி உண்ணும் நாடுகளுக்கு சென்று இங்கே வந்து தொழில் தொடங்குமாறும் அழைப்பார்களாம்.

      மாட்டுக் கறி விரும்பி சாப்பிடும் ஐரோப்பிய /அமெரிகாவில் பணி புரிவதே/குடி பெயர்வதே இலட்சியம் எனவும் சொல்வார்களாம்.அப்போதும் ஆச்சாரம் கெடாதாம்.

      ஆனால்!!!!!!!!!!!!!!!!!!!

      மாட்டுக் கறி ஏற்றுமதியில் முத்னமை இடம் பெறும் இந்திய அரசு சாதாரண குடிமகன் உண்ண எதிர்ப்பு விதிக்குமாம். கொலையும் செய்வார்களாம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      கொடுமையாக இருக்கிறது!!!!!!!!!!!!!.

      நன்றி!!!

      Delete
  3. தமிழனாக இருந்தால் சமாளிக்க தெரியனும்.
    இங்கு மாட்டுக் "கரி" தான் சாப்பிடுகிறார்கள். Beef Stake--என்றால் மாட்டுக் கறியை--மாட்டு "கரி" மாதிரி தீக்கனும்; தீச்சா தான், "மாட்டுக் கரி" நன்னா இருக்கும். சொன்னது என் மருமகன்.

    நான் சைவ மதம் ; நான் இந்து அல்ல! இந்து என்ற இல்லாத மதமே அல்ல. யார் உணவிலும் நான் த்டையிடமாட்டேன்-என் மனைவியும் அப்படிதான்.

    இதிலே தமாஷ்: என் குழந்தைகள் எல்லாம் சைவம். என் மகன் பால் தயிர் கூட தொடமாட்டான். என்னவோ---Greeen Party-ஆ

    எம்மதமும் எனக்கு சம்மதம் அல்ல!



    ReplyDelete
    Replies
    1. நாம் மாடு, ஆடு,பன்னி, கோழி,நண்டுகாடை... என எதையும் விடுவது இல்லை. ஆனால் அளவுதான்.
      வேகன் ஆகலாம் என முயற்சித்து தோல்வி ஹி ஹி!!

      ஆட்டுக் கறி தொன்பவன், மாடு புனிதம் எனப்துதான் காமெடி!!!

      இதில் மாட்டு மூத்திரம் ஒரு சர்வரோஹ இவாரணி என்னும் கொடுமை வேறு!!!!!!!!
      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நேரம் இருந்தால் இதனைப் படியுங்கள். குறிப்ப்பாக பின்னூட்ட விவாதங்களை
      http://nirmukta.com/2008/10/04/cows-excreta-as-medicine-insult-to-humanity/

      நன்றி!!!

      Delete
  4. சகோ! நலமா? தேடிய போது வராமல் தேடாமல் வந்த செம்மலே!
    தங்கள் பதிவு கண்ட மகிழ்ச்சியில் முதலில் மனதில் ஆர தழுவிக்கொள்கிறேன்.

    இனி கருத்துக்கு செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ ந‌லமா,
      நலம். தொடர்ந்து எழுதுவோம். மத வெறி மாய்ப்போம்.மனித நேயம் காப்போம்!!!!
      சிந்திக்க மாட்டீர்களா???!!!!
      நன்றி!!!

      Delete
  5. இந்துத்வா கொள்கையால் ப்.ஜே.பியின் தேனிலவு காலம் முடிந்து விட்டது என நினைக்கிறேன். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய அரசு இயந்திரத்தை தமது விருப்பத்துக்கு தகுந்தா மாதிரி வளைத்து விடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!!!

      Delete
  6. என்ன சார்வாள், லா...........ங் லீவு முடிஞ்சு வந்துட்டேளா?

    வடஇந்தியாவில் மாடு சாப்பிடுவது என்பது ரொம்ப சென்சிடிவான விடயமே. இதை மோடி அரசினால்தான் இந்த பிரச்சனை என்பது சரியல்ல என்பது எனது கருத்து. ஆனால் மோடி அரசில் உள்ள சிலர் கிறுக்குத்தானமாக கருத்து சொல்லி பிரச்சனையை பெரியாதாக்குகிறார்கள். இசுலாமிய சுல்தான்கள் மக்களை வாள் முனையில் கட்டாயமாக மதம் மாற்றிய போது கோவிலில் மாட்டுக்கறி சாப்பிட வைப்பதுதான் முக்கிய சடங்காக இருந்ததாம்.இதனால் மாட்டுகறி சாப்பிடுவதன் மீது கடும் கோபத்தில்தான் இன்னமும் மக்கள் இருக்கிறார்கள். முதலாம் இந்திய சுதந்திரப்போரின் முக்கிய உடனடி காரணம் மாட்டுகறி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சென்டிமென்ட் காரணமாகத்தான் முலாயம், லல்லு, நிதீஷ் என அனைவரும் கம்மென்றிருக்கிறார்கள்.

    முன்னேற்றத்தை மட்டும் ஓட்டாக்க முயன்றால் நம்மூரில் ஒண்ணும் தேறாது, வாஜ்பாயிடம் கற்ற அந்த பாடத்தால் இது போன்ற விடயங்களில் பொத்திக் கொண்டு இந்துதுவா அலையை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்கிறார் மோடி. 18-ம் நூற்றாண்டை தாண்டி 21 -ம் நூற்றாண்டுக்கு வந்துட்டோம் , மேலும் மாடு பிரியாணி சூப்பராயிருக்கும் என சாதாரண மக்களுக்கு புரிய வைப்பதுதான் ஒரே வழி. அதுதான் மத -சாதி வெறி ஒழிப்பு, திராவிட மாயை ஒழிப்பு போலவே ஈசியான வேலையல்ல என்பதுதான் சோகம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ ந‌லமா? நன்றாக சொன்னீர்கள்.நமது கருத்தும் இதுதான். வட இந்தியா இன்னும் நில பிபுரபுத்துவ சமூகம் ஆகவே உள்ளது.ஆகவே உணர்வு பூர்வ விடயங்கள் எளிதில் எடுபடும். தென்னிதியா முதலாளித்துவ அமைப்பிற்குள் வது விட்டது என்பதால் பணம் சார்ந்த சிந்த்னை வலுத்து விட்டது. தமழன், திராவிடன், இந்து,மாட்டுக் கறி, என எதை சொன்னாலும் காசில் குறியாக இருப்பான் ந‌ம்ம ஆள்!!!.

      நன்றி!!

      Delete
    2. சகோ நந்தவனத்தான்,
      //மேலும் மாடு பிரியாணி சூப்பராயிருக்கும் என சாதாரண மக்களுக்கு புரிய வைப்பதுதான் ஒரே வழி. அதுதான் மத -சாதி வெறி ஒழிப்பு, திராவிட மாயை ஒழிப்பு போலவே ஈசியான வேலையல்ல என்பதுதான் சோகம்! //
      தீயவைகளை ஒழிப்பது ரொம்ப கஷ்டம் சகோ.
      உலகத்தில் குண்டானவங்க வசதியான மக்கள் கொண்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் தற்போது உள்ள இந்திய மக்ககளுக்கு ஊட்டச்சத்து,வைட்டமின்கள் நிறைந்த மாட்டுகறியை அறிமுகபடுத்தினால் லபக்னு பிடித்து கொள்வார்கள்.

      Delete
  7. அட உங்க பதிவில் பின்னூட்ட மட்டுறுத்தலா? இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்ததும் கருத்து சொதந்திரத்திற்கு பெரும் ஆபத்துதான் போலிருக்குதே? :))

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்லை சகோ,
      கடையை மூடி வைத்து இருதோம். கெட்ட வசவுகள் இல்லாத பின்னூட்டம் எதையும் மட்டுறுத்தல் செய்தது(செய்வது) இல்லை.தொடர்ந்து எழுத நேரம் இல்லை. ஏதேனும் மாதம் இரு பதிவுகள மட்டும் ஆவது எழுத முடியுமா எனப் பார்க்கிறேன்.

      தொடர்ந்து எழுத முடியும் போது , மட்டுறுத்தல் எடுத்து விடுவோம்.பதிலோடு பின்னூட்டம் இட மட்டுமே மட்டுறுத்தல்.
      நன்றி!!

      Delete
  8. சகோ மீண்டும் வந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. வாங்க சகோ
    நலமா? உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!!
    நன்றி!!!

    ReplyDelete
  10. // வேகன் ஆகலாம் என முயற்சித்து தோல்வி ஹி ஹி!! //

    இங்கும் அதே! அதே!:)

    ReplyDelete
  11. வாங்க வாங்க.

    பகுத்தறிவுப் படையலே வருக

    அறிவுப் புயலே அன்பு வெயிலே வருக
    உங்கள் நலம் நாடி வெகு நாட்களாகக் காத்திருக்கிறோம்

    நீங்கள் இக்பால் போன்றவர்கள் இல்லாமல் பதிவுலகம் ம்ஹூம்

    ReplyDelete
  12. வணக்கம் சகோ. மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.பதிவுகளை தொடருங்கள்;;;இப்ப மாட்டு கறிதான் ஃபேமசு.திங்காதவன் கூட திங்க ஆரம்பிச்சிட்டான்...இது ஏதோ இவனுங்க தவறை திசை திருப்பவே நடந்து வரும் நாடகமாக கூட தோன்றுகிறது...

    ReplyDelete
  13. ஒரு நாத்திகனிடம் ஒரு குழந்தையின் அப்பா இவர்தான் என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களுக்கு அந்த பெற்றோரின் கல்யாண பத்திரிக்கையை காட்ட வேண்டும், போட்டோ ஆல்பத்தை காட்ட வேண்டும், கல்யாண வீடியோவை காட்ட வேண்டும். இவை இருந்தால் பத்தாது. அவர்களுக்கு இன்னும் விளக்க வேண்டும். டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து காட்டினால் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள். டாக்டர், கம்பவுண்டரிடம் காசு கொடுத்து ரிசல்டை மாற்றியதாக சொல்வார்கள். நாத்திகர்களின் கூற்று எப்படிப்பட்டது என்பதற்கு இது உதாரணம்.

    ReplyDelete
  14. பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! -
    கேட்டவர் ‪#‎தேவர்‬!
    ( ‪#‎பசும்பொன்‬ தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)
    நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
    சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
    இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
    எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
    உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
    சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
    அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
    என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
    ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
    என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
    ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
    நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !
    கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.
    இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
    இது என்ன பூ எனக்கேட்டால்
    அதன் பெயரை சொல்லலாம்..!
    நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
    இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
    அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
    ‪#‎கடவுள்‬ எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!
    ( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

    ReplyDelete
  15. இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?
    கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?
    ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் ‘‘தாசிகள்’‘ என்று சொல்லத் தயாரா?

    ReplyDelete
  16. ‘‘ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே? என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னைத் தெலுங்கர்-நாயுடு என்றே நினைக்கிறாங்க. ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆரம்பிச்சது சுயமரியாதைக் கொள்கைக்குத்தானே? அதை ஆரம்பிச்சது யார்? சர்.பி.டி.செட்டியார்- தெலுங்கர். டி.எம்.நாயர் & மலையாளி. நான் - கன்னடத்துக்காரன். தமிழன் யார் இதைச் செய்தான்?’’
    (தந்தை பெரியார் 1972-ல் கலைமகளுக்கு அளித்த பேட்டியில்.
    நன்றி: வே.: ஆனைமுத்து வெளியிட்ட பெரியார் ஈவெரா சிந்தனைகள்.)
    தன்னை கன்னடத்துகாரன் என பெருமையுடன் கூறிக் கொண்டவரின் அடிவருடிகளே! "தமிழர் விரோத களவாணிகளே" ௨ங்களுக்கு தமிழினம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்....

    ReplyDelete
    Replies
    1. சென்னை ராஜதானியாக (இந்தியாவில் மூன்றில் ஒரு பாகம்) இருக்கும் பொது, நான்கு மொழியும் இங்குண்டு.

      Delete
  17. பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.
    தலைமைக்குத் தெரிந்த விவரம் தொண்டர்களுக்குத் தெரிய ஐம்பது ஆண்டு காலம் ஆகியிருக்கிறது. ஈ.வே.ரா.வின் பேச்சைப் பதிவு செய்த கவிஞர் கருணானந்தம் எழுதுகிறார்:
    பெரியார் சேலம் அன்னதானப்பட்டியில் 01.07.1963 அன்று திருவண்ணாமலை தேர்தல் பிரசாரம் பற்றிக் குறிப்பிட்டார். “நான் பத்தாயிரம் பேர் அடங்கிய பெரிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவன் அதோ எம்.ஜி.ஆர். என்று கூவிக் கொண்டே ஓடினான். கூட்டத்தில் 300 பேர் கூட மீதி இல்லை. அவ்வளவு பேரும் அவன் பின்னே ஓடினார்கள். பிறகு சினிமாக்காரன் வரவில்லை என்று திரும்ப வந்து உட்கார்ந்தார்கள். அவர்களை நன்றாக வெளுத்து வாங்கிவிட்டேன்” என்றார்.
    – பக்கம் 387 / தந்தை பெரியார் / கவிஞர் கருணாநந்தம்

    ReplyDelete
  18. //vrkumar18January 19, 2016 at 12:26 PM
    பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது.//

    பகுத்தறிவு என்பது ஒரு சிறிதேனும் இல்லாத நிலமையியினால் தான் இந்த மக்கள் தாங்கள் திருமணம் செய்ய மாநிலத்தின் முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி திருமணம் செய்ததும் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை தங்களது தலையில் ஒட்ட வைக்க அனுமதித்ததும்.

    ReplyDelete