Showing posts with label business. Show all posts
Showing posts with label business. Show all posts

Tuesday, December 6, 2011

வால் மார்ட்டின் கதை

இபோது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கலாமா என்ற விவாதம் அனைத்து தளங்களிலும் எதிரொலிக்கிறது.உலகமயமாக்குதலில் இதுவும் ஒரு அங்கமே.சுதேசி பொருளாதாரத்தின் ஆணி வேரை அறுக்கும் ஒரு முயற்சிதான் இந்த சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்றே கூறலாம். இதில் உலகாளாவிய சில்லறை வணிக அசுரன் வால்மார்ட்ன் செயல்முறைகள் மிகவும் வித்தியாசமானது.உலகின்,மனித  வளங்களை சுரண்டுவதும் அதனை அதிக விலையுள்ள இடங்களில் விற்பதும்,போட்டியாளர்களை இல்லாமல் ஆக்குவதும் ஒப்பீடு அற்றவை.

இப்போதைய அமெரிக்க பொருளாதாரத்தை நிலை நிறுத்த அந்நிய முதலீடு பல் நாடுகளில் இடப்பட்டே ஆக வேண்டும் என்பதால் இதனை தவிர்க்க இயலுமா என்பது கேள்விக்குறியே.இந்தியாவில் மிக பெரிய சந்தை இருப்பதால் வால் மார்ட் உட்பட பல நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன.

இந்த ஆவணப் படம் எப்படி வால் மார்ட் நிறுவனம் செயல் படுகிறது,அதன் விலை குறைவு இரகியங்கள் முதலியவற்றை அலசுகிறது.
இது குறித்த பெரும் விழிப்புணர்வு வந்தால் நல்லது.சரி வால் மார்ட் வந்தால் என்ன நடக்கும்?

1.சில்லறை வணிகத்தில் ஈடு பட்டுள்ள பலர் தங்கள் தொழிலை இழப்பார்கள்.வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.

2.விவசாயம்,போக்குவரத்து உட்பட்ட பல துறைகள் தனியார் கட்டுப்பாட்டில் வந்து விடும்.இவர்களுக்கு சாதகமான அரசு மட்டுமே ஆள முடியும்.

இன்னும் பல் காரணங்கள் கூறலாம் என்றாலும்,இதனை தவிர்க்க இயலுமா என்பதை காலம் மட்டுமே சொல்லும்.ஏனெனில் உலக மயமாக்குதலில் பாதிக் கிணறு தாண்டிய இந்தியா இதனை மட்டும் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது.


  


http://www.walmartmovie.com/

http://en.wikipedia.org/wiki/Wal-Mart:_The_High_Cost_of_Low_Price

http://en.wikipedia.org/wiki/Walmart