இபோது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கலாமா என்ற விவாதம் அனைத்து தளங்களிலும் எதிரொலிக்கிறது.உலகமயமாக்குதலில் இதுவும் ஒரு அங்கமே.சுதேசி பொருளாதாரத்தின் ஆணி வேரை அறுக்கும் ஒரு முயற்சிதான் இந்த சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்றே கூறலாம். இதில் உலகாளாவிய சில்லறை வணிக அசுரன் வால்மார்ட்ன் செயல்முறைகள் மிகவும் வித்தியாசமானது.உலகின்,மனித வளங்களை சுரண்டுவதும் அதனை அதிக விலையுள்ள இடங்களில் விற்பதும்,போட்டியாளர்களை இல்லாமல் ஆக்குவதும் ஒப்பீடு அற்றவை.
இப்போதைய அமெரிக்க பொருளாதாரத்தை நிலை நிறுத்த அந்நிய முதலீடு பல் நாடுகளில் இடப்பட்டே ஆக வேண்டும் என்பதால் இதனை தவிர்க்க இயலுமா என்பது கேள்விக்குறியே.இந்தியாவில் மிக பெரிய சந்தை இருப்பதால் வால் மார்ட் உட்பட பல நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன.
இந்த ஆவணப் படம் எப்படி வால் மார்ட் நிறுவனம் செயல் படுகிறது,அதன் விலை குறைவு இரகியங்கள் முதலியவற்றை அலசுகிறது.
இது குறித்த பெரும் விழிப்புணர்வு வந்தால் நல்லது.சரி வால் மார்ட் வந்தால் என்ன நடக்கும்?
1.சில்லறை வணிகத்தில் ஈடு பட்டுள்ள பலர் தங்கள் தொழிலை இழப்பார்கள்.வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.
2.விவசாயம்,போக்குவரத்து உட்பட்ட பல துறைகள் தனியார் கட்டுப்பாட்டில் வந்து விடும்.இவர்களுக்கு சாதகமான அரசு மட்டுமே ஆள முடியும்.
இன்னும் பல் காரணங்கள் கூறலாம் என்றாலும்,இதனை தவிர்க்க இயலுமா என்பதை காலம் மட்டுமே சொல்லும்.ஏனெனில் உலக மயமாக்குதலில் பாதிக் கிணறு தாண்டிய இந்தியா இதனை மட்டும் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது.
http://www.walmartmovie.com/
http://en.wikipedia.org/wiki/Wal-Mart:_The_High_Cost_of_Low_Price
http://en.wikipedia.org/wiki/Walmart
இதனால் பாதிக்கபடுவது விவசாயிகளும் . சில்லரை வணிகர்களுமே
ReplyDeleteநல்ல தகவல்
survival of fittest
ReplyDeleteஅருமையான பகிர்வு
ReplyDeleteஇதையும் வேண்டும் என்று கூறும் இந்தியர்களை என்ன வென்று சொல்லுவது என்று தெரியவில்லை.
ReplyDeleteதமிழ் இந்து தளத்தில் ஒரு தேச பக்தன் போட்ட பின்னூட்டம்.
//Finishing Touch
கரப்பான் பூச்சியின் புழுக்கையுடன் புளியையும், பருப்பையுமே எவ்வளவு
நாள்தான் சாப்பிடுவது!முடியலே!//
இந்த பகிர்வுக்கு , இந்தியன் என்ற முறையில் நன்றி நண்பரே.
ReplyDeleteநன்றி நண்பர்களே,
ReplyDeleteஇந்த அந்நிய முதலீட்டுக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.அவர்கள் வைக்கும் வாதம் இப்போதைய சிலறை வணிக முறையில் (இந்திய) வியாபாரிகளால் விவசாயிகளுக்கு சரியான இலாபம் கிட்டவில்லை என்பதுதான்.இதனை தவிர்க்க கூட்டுறவு அமைப்புகளை பலப் படுத்த வேண்டுமே அன்றி வால்மார்ட் போன்ற அசுரன்களை அனுமதிப்பது அல்ல.ஒவொரு கிராமமும் தன்னிறைவு பெரும் வகையில் பொருளாதார திட்டங்கள் அமல் படுத்தப் பட வேண்டும்.
இவர்கள் நெடு நாள் நடைமுறையில் சுதேசி வணிகத்தை ஒழித்து விடுவார்கள்.விவசாயிகளுக்கு கடன் கொடுத்து அதனையும் கைக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.திரு வ.உ.சி அய்யா தொடங்கிய கப்பல் வணிகத்தை வெள்ளையர் அழிக்க எவ்வளவு பாடுபட்டனர் என்பதை யோசித்தாலே புரிந்து விடும்.