Monday, December 12, 2011

ஹூபிள் தொலை நோக்கியின் கதை:காணொளி

ஹூபிள் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope) டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரை பெருமைபடுத்தும் விதத்தில் அவர் பெயர் சூட்டப் பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும். அத்துடன் இது ஒரு ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது. இது நாசா, ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி ஆகும்.
அது பற்றிய சில காணொளிகளை இப்பதிவில் கண்டு களியுங்கள்!!!!!!!!!!!!!



Part 2


http://en.wikipedia.org/wiki/Hubble_Space_Telescope

2 comments:

  1. அருமையான காணொளி நண்பரே.

    என்ன நீளமாக இருப்பதால் கொஞ்சம் பிச்சு பிச்சு பார்க்கவேண்டும்.
    ஹுப்பிள் தொலை நோக்கியின் முக்கியமான சிறப்பம்சம் விண்வெளியில் அதன் தப்பான கண்ணாடியை சரிசெய்ததுதான். complicated maneuvering and repairing in space என்று பி.பி.சி சொன்னதாக ஞாபகம்.

    இந்த தளத்தில் கேட்கக் கூடாதுதான் sorry. simply can't resist taking potshots. அல்லாவின் “கிரகத்தை” ”அர்ஷை” ஹுப்பிள் தொலைநோக்கியின் மூலம் பார்த்ததாக எதாவது ஆவணங்கள் செய்திகல் உள்ளனவா?????

    ReplyDelete
  2. /அல்லாவின் “கிரகத்தை” ”அர்ஷை” ஹுப்பிள் தொலைநோக்கியின் மூலம் பார்த்ததாக எதாவது ஆவணங்கள் செய்திகல் உள்ளனவா????? /

    வணக்கம் நரேன்,
    அறிவியல்ரீதியாக நான் அறிந்தவரை அப்படி கடவுளின் கிரகம் பற்றி எதுவும் தகவல் இல்லை.
    ஆனால் கடவுள் துகள் என்றழைக்கப்படும் ஹிக்ஸ் துகள் இருப்பதற்கான சான்று பெரும் துகள் உடைப்பானின்[LHC] சோதனையில் புலப்பட்டு இருக்கிறது.இன்னும் ஒரு கண்டு பிடிப்பாக அங்கீகரிக்க பல் சோதனைகளை கடக்க வேண்டும்.ஒரு துகளுக்கே இவ்வளவு 60+ வருட தேடல் என்றால் ஒரு கோளுக்கு எவ்வளவு தேட வேண்டும்!!!!!!!!!!!!

    LHC: Higgs boson 'may have been glimpsed'

    http://www.bbc.co.uk/news/science-environment-16158374

    ****************
    வேண்டுமானால் வைரத்தினால் ஆன ஒரு கோளை கண்டு பிடித்துள்ளார்கள் அதில் யாராவது இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது!!!!!!!!!!!!!!!

    http://www.reuters.com/article/2011/08/25/us-planet-diamond-idUSTRE77O69A20110825

    நாயர்(இவர் இப்போ தமிழன் கூட டூ:ஆகையால் மன்னிக்கவும்) பிடித்த புலிவால என்பதன் விளக்கம் எனக்கு நன்றாக புரிகிறது!Haa ha ha ha!!!!!!!!!!!!!!!

    ReplyDelete