Thursday, December 29, 2011

Archaeopteryx ன் கதை நடந்தது என்ன? பகுதி 2

 Archaeopteryx fossil
Archaeopteryx lithographica, is the earliest bird in the fossil record, coming from the Late Jurassic lithographic limestone near Solnhofen

போன பதிவை படித்தவர்கள் Archaeopteryx பற்றி கொஞ்சம் அறிந்து இருப்பீர்கள் இப்பதிவை கொஞ்சம் கேள்வி பதிலாக கொடுத்து விடலாம் என எண்ணுகிறேன்.

இந்த  Archaeopteryx பறவை (முன்னோர்) அல்ல என்று கூறப்படுவது இதுதான் முதல் முறையா?

இல்லை.முதலில் பொ.ஆ 1861ல் முழுமையான படிமம் ஜெர்மனியில்[Solnhofen limestone in Bavaria, southern Germany] கண்டு பிடிக்கப்பட்டது. படிம சான்றுகளின் மீதான ஆய்வுகள் இது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வழ்ந்ததாக  உறுதிப்படுத்தின. இது இறுதி ஜுராசிக் காலத்தை ‌ [161.2 ± 4.0 to 145.5 ± 4.0 மில்லியன் வருடங்கள் (Ma)], சேர்ந்தது.

a) பல பரிணாம் எதிர்ப்பாளர்கள் இந்த  படிமமே ஒரு ஏமாற்று வேலை ,அதன் இறகுகள் பறக்கும் தன்மை ஆகியவை ச்ந்தேகத்திற்கு உரியது என்று கூறி வந்தன‌ர்.இது பற்றிய சில விவரங்கள் இங்கே கிடைக்கும்.


b)1984ல் திரு சங்கர் சாட்டர்ஜி எனப்படும் பரிணாம் ஆய்வாளர் 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை இனம் என்று ஒரு படிமத்தின்[Protoavis] மீதான ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார். ஆனால் இந்த படிம விலங்கு பறக்கும் தன்மை உடையதா என்பதை சரியாக நிரூபிக்க முடியாததால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

c) இக்கேள்விகள் பல விவாதங்களுக்கு கடந்த 50+ வருடங்களாக் உள்ளகியே வந்தன.

i) Archaeopteryx உண்மையான படிமமா இல்லை ஏமாற்று வேலையா? A legitimate fossil or an artful hoax? Is it a crucial missing-link or a bizarre offshoot?

இது ஒரு உண்மையான படிமமே மற்றும் ஏமாற்றும் வேலை அல்ல என்பது பரிணாம் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.மற்றும் இப்படி எந்த ஆய்வுக்கட்டுரையும் ஏமாற்று வேலை என்று நிரூபிக்கவில்லை. இப்போதைய சீன ஆய்வாளர்கள் இப்படிமம் போன்ற இன்னொரு படிமத்தின் மீதான் ஆய்வின் மீதே தங்கள் கருத்தை வெளியிட்டு உள்ளதான் ஆகவே அவர்களின் விமர்சன‌ கூற்றை பயன்படுத்துபவர்களும் அவர்களின் படிமத்தின் நம்ப‌கத்தன்மையை ஏற்பதாகவே பொருள். படிமங்கள் உண்மை என்பதே இபோதைய அறிவியலின் கூற்று. படிமங்கள் பொய் என்று வாதிடும் நண்பர்கள் தங்கள் கருத்துகளை ஆதாரபூர்வமாக் விவாதிக்கலாம்.


ii) அது ஒரு வகை டைனோசாரா இல்லை பறவையா? Was it a theropod dinosaur or a bird?

இத்தொடர் பதிவில் சீன ஆய்வாளர்கள் Xing Xu & co  ஆய்வு கட்டுரையின் மீதான் விமர்சனத்திற்கு மட்டுமே பதில் சொல்கிறோம்.சீன ஆய்வாளர்களின் 2011 கட்டுரையின் படி [மட்டும்] Archaeopteryx  ஒரு வகை டைனோசாரே [theropod dinosaur].ன். அவர்களின் உண்மையான கூற்றை இன்னும் ஆய்வோம்!!!!!!!!!!!!!!!!!!!

iii) Archaeopteryx பறக்குமா இல்லையா? Could it fly or not?

இக்கேள்விக்கு விடையளிக்கு முன் ஒரு விளக்கம் பரிணாம கொள்கையின் படி நான்கு கால் உயிரினங்களின்  முன் இரு கால்களே  இறக்கையாக மாறியது. அதாவது எந்த பறவைக்கும் 4 கால்கள் இருக்கவே முடியாது. Archaeopteryx க்கு இறக்கைகள் உண்டு பரிணாம அறிவியலின் படி அது முழுமையான பறவை இல்லாத படியால் அது கோழி போல் சிறிது தூரம் மட்டுமே பறக்க இயலும் என்பதே கருத்து. பறப்பது என்பது உண்மை எவ்வளவு தூரம் என்பதே இன்னும் விவாதத்திற்கு உரியதே.

ஆகவே  Archaeopteryx  என்பது

உண்மையான‌ 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிமம்

அதற்கு இறக்கைகள் உண்டு,

பறக்க இயலும்

என்பதே இப்பதிவின் சாராமசமாகும்.

இன்னும் நிறைய இருக்கிறது.அறிவியலின் படி

பறவை என்பதன் இலக்கணம் என்ன?

பறக்கும் டைனோசார் உண்டா?

அந்த சீன ஆய்வாளர்களின் உணமையான கூற்று என்ன?

அதுவே இறுதி கூற்றாக அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? 

என்பதெல்லாம் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

(தொடரும்)

5 comments:

  1. தொடருங்கள் ... காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. இங்கேதான் வந்தேன்!ஆனால் வவ்வாலுக்கு விவசாயம் பார்க்கப் போயிட்டேன்:)

    ReplyDelete
  3. சிறந்த இடுகை. தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. த‌ருமி அய்யா,நண்பர்கள் ராஜராஜன்,சுவனப் பிரியன்
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ReplyDelete
  5. நண்பர் ராஜராஜன்
    நண்பர் வவ்வாலின் தளம் எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று. அருமையாக் எழுதுகிறார்.
    நன்றி

    ReplyDelete