Thursday, December 29, 2011

Archaeopteryx ன் கதை நடந்தது என்ன?

Artist's impression of Xiaotingia zhengi (Xing Lida and Liu Yi)

An artist's impression of the new creature from China.

பரிணாமம் என்பது கிடைத்த படிம சான்றுகள்,DNA analysis,காலக் கணக்கீடுகளை அடிப்படையாக கொண்டு உயிர்களின்  பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான[random] நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும்  இப்போதைய அறிவியல் கொள்கையாகும். நாம் பரிணாமம் கற்கும் மாணவன் என்பதால் அது குறித்த ஆய்வுகள், விமர்சன‌ங்கள் மீது ஈடுபாடு காட்டி வருகிறோம்.

பரிணாமம் குறித்து சில பதிவுகள் எழுதலாம் என முயற்சிக்கிறேன். இப்பதிவில் சில மாதங்களுக்கு முன்பு பரிணாமத்தின் மீது விமர்சனமாக Archaeopteryx ஐ அடிப்படையாக கொண்டு வைக்கப்பட்ட கருத்தை இப்பதிவில் ஆராய்வோம்.

பரிணாம கொள்கையின் படி உயிர்கள் ஒரு செல் உயிரில் இருந்து கிளைத்து தழைத்து ஒரு பரிணாம மரம் போல் அனைத்து உயிரினங்களும் வள‌ர்ச்சி அடைந்தன என்று கூறுகிறது. உலகில் தோன்றிய 99% உயிரினங்கள் இபோது இல்லை.அவற்றில் கிடைத்த‌ படிமங்கள் மீதான,DNA ஆய்வுகள் மூலம் அவை பரிணாம மரத்தின் பொருந்தும் இடத்தில் வைக்கப் படுகின்றன.பரிணாம மரமும் டி என் ஏ ஒப்பீட்டு ஆய்வுகள் ஒன்றுக் கொன்று ஒத்துப்போவதும் பரிணாம்த்தின் சான்றுகளாகும் .மனிதனுக்கு நெருக்கமான் உயிரினமாக கருதப்படும் சிம்பன்ஸி குரங்கின் DNA (96 to 98)% ஒத்துப்போகிறது.இபோது மனிதனில் இருந்து பரிணாம மரத்தின் வேறு கிளை உயிரினம்  இதை விட அதிகம் ஒத்து வந்தால் பரிணாம கொள்கையின் மீதான ஆய்வு பூர்வமான் விமர்சனம் ஆகிவிடும். இப்போது பரிணாம் கொள்கையே DNA அடிப்படையில் சீர்திருத்தப்படுகிறது எனலாம். ஒவ்வொரு பரிணாம படிம ஆய்வும் DNA மூலம் சரி பார்க்கப் படுகிறது.இதன் மூலம் பரிணாம மரம் மேம்பட்ட வகையில் கட்டமைக்கப் படுகிறது.

மனிதன்,பிற உயிரினங்களின் ஜீனகளை ஒப்பீடு செய்தல்  comparative genomics என்றழைக்கப்படுகிறது.ஆய்வு மாணவர்களுக்கு அதிக வாய்ப்புள்ள துறை இது.




சரி அது என்ன Archaeopteryx ஐ அடிப்படையாக கொண்ட விமர்சனம்?

பரிணாமத்தின் படி டைனோசாரின் ஒரு பிரிவான theropods dinosar ல் இருந்து பறவைகள் தோன்றியதாக பரிணாம கொள்கை கூறுகிறது.


அதாவது பறவைகளுக்கும் theropods dinosar ம் பொதுவான முன்னோராக Archaeopteryx பரிணாம் மரத்தில் குறிக்கப்பட்டு வந்தது. என்பதை அனைத்து பறவைகளின் முன்னோர் என்றே பரிணாம ஆய்வாளர்கள் அதனை ஒரு சான்றாக கடந்த 150 வருடங்களாக வைத்தனர்.


கடந்த ஜூலை 2011 ல் நேச்சர்[nature] ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையில் Xing Xu[a palaeontologist at the Institute of Vertebrate Palaeontology and Palaeoanthropology in Beijing, and his colleagues]. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களின் மீதான ஆய்வில்  பறவையை விட  ஒரு  theropods dinosar யே ஒத்து வருகிறது என்று கூறியிருந்தார். இது பரிணாம் ஆய்வில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம். பறவைகளின் முன்னோர் அல்ல என்பது பரிணாம எதிர்ப்பாளர்களுக்கு(கவனிக்கவும் விமர்சகர்கள் அல்ல)  கொஞ்சம் வாய்ப்பளித்தது. என்ன கூறுகிறார்கள்?.

பார்த்தீர்களா இந்த பரிணாம ஆய்வாளர்கள் கடந்த 150 வருடங்களாக் கூறிவந்த பறவைகளின் முன்னோர்  என்பது தவறாகி விட்டது.வேண்டுமென்றே ஒரு டைனோசாரை பறவையாக காட்டி ஏமாற்றி விட்டார்கள். இவர்கள் கூறுவது எல்லாமே இப்படித்தான் இருக்கும்.ஆகவே பரிணாமம் என்பது தவறு என்பதற்கு இன்னொரு சான்று என்கின்றனர்.


இது பற்றிய  பாரபட்சமற்ற உண்மையை அறிய வேண்டும்.அடுத்த பதிவுகளில் இதனை நோக்கி நமது தேடல் தொடங்கும்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு



(தொடரும்)
,


2 comments:

  1. நண்பரே அருமையான தகவல் பதிவு. லிங்குகளுக்கு நன்றி. இதைப் பற்றி முன்னரே தங்களிடம் கேட்கவேண்டும் என்று இருந்தேன்.

    பதிவில் சொன்ன குறளை இரண்டாவது தடவையாக படிக்க வேண்டியதாகிவிட்டது.

    தொடருங்கள்...அந்த six day creation தளத்தை படித்தால், அதிலிருந்து உருவிதான் தமிழில் நம் சகோதரர்களின் பதிவுகள் வந்திருப்பதை அறியலாம்.

    ReplyDelete
  2. வணக்கம் நரேன்,
    என்னமோ நம் தளம் கொஞ்சம் பிரச்சினை பண்ணியது பேக் அப் இருந்ததால் சமாளித்தாயிற்று.
    இந்த முதல் பறவை விஷயத்தில் உண்மையிலேயே சீன ஆய்வாளர்கள் உண்மையிலேயே என்ன சொன்னார்கள் .அது அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டதா?என்பதுதான் ந்மது தேடல்
    யார் எது சொன்னாலும் அதை சரி பார்ப்பது நம்து பணி.ஹா ஹா ஹா

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ReplyDelete