Tuesday, July 26, 2011

அற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா?ஒரு செய்முறை விளக்கம்.



டேரன் பிரௌன் 

குருடர் பார்க்கிறார்,செவிடர் கேட்கிறார்,முடவன் நட்க்கிறான் என்ற விளம்பரங்கள் அறியாதவர்கள் இருக்க முடியாது என்னும் அளவிற்கு இந்த சுகமளிக்கும் கூட்டங்க்கள் என்பது மிக பிரபல்ம்.இது பெரும்பாலும் அனைத்து மதங்களிலும் உள்ள பொதுவான விஷயம் என்றாலும் முண்ணனியில் இருப்பது கிறித்தவ பிரச்சாரகர்களே என்பதும் அறிந்ததே.
              
இந்த நிகழ்வுகள் குறித்த சில தகவல்கள்

1.இது பெரிய மைதானத்தில் நடத்தப் படும்

2.அதிக விள‌ம்பரம் கொடுத்தும் பெரும் மக்கள் திரள் கூட்டப் படும்.

3.பல மொழி பேசும் மக்களை கவர மொழி பெயர்ப்ப்பு வசதியும் அளிக்கப் படும்.

முதலில் பாடலகள்,காணிக்கை[இது இல்லாமல் எதுவுமே இல்லை] என்று சுமுகமாக்வே ஆரம்பிக்கும்.பிரச்சாரகர் உரையை திடங்கி மத புத்தக்த்தின் சில வசனங்களை கூறி அவருக்கு தோன்றிய விள‌க்கம் அளிப்பார்.இந்த விளக்கத்தை இறைவன் தனக்கு தனது பிரார்த்தனையின் போது வெளிப்படுத்தினார் என்பதையும் தவறாமல் சொல்வார் என்பதும் கவனிக்கப் படவேண்டும்.ஒரு வழியாக நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யும்    உச்சகட்டம் வரும்.நோய் இருப்பவர்கள் தங்கள் உடலின் நோய் கண்ட பகுதியில் கை வைத்து பிரார்த்த்னை செய்ய அறிவுறுத்தப் படுவார்கள்.மெதுவாக பிரார்த்தனை ஆரம்பிக்கும் பிரச்சாரகர் திடிரென்று உணர்ச்சிவசப் பட்டவராக 'அஆஇஈ' உனக்கு இந்த ''ககாகிகீ' வியாதியை இறைவன் இப்போதே சுகமாக்குகிறார் என்பர்ர்.   இப்படியெ ஒரு சிலரை குறிப்பிட்டு பிரார்த்தனையை தொடர்வார்.

 பிரார்த்தனை முடிந்த பிறகு சிலர் மேடை ஏறி பிரச்சாரகர் குறிப்பிட்டது என்னைத்தான்,எனக்கு அவர் குறிப்பிட்ட 'ககாகிகீ' வியாதி பல நாட்களக இருந்தது.இப்போது சுகமடைந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க சாட்சி அளிப்பார்கள். பார்க்கும் பலருக்கு பக்தி பெருகும்,பிரச்சாரக்ரின் புகழும் பரவும் என்பதில் ஐயமில்லை.  

இறை மறுப்பாள‌ர்களுக்கு இதில் நம்பிக்கை இருப்பது இல்லை என்றாலும் பொதுவாக கண்டு கொள்ளாமல் செல்வது இல்லை . இவற்றை பொய் என்று நிரூபிக்கவே முயற்சிக்கின்றனர்.இதற்காக் முயற்சி எடுத்த டேரன் பிரௌன் என்னும் புகழ் பெற்ற எழுத்தாள‌ர்,சிந்தனையாளர்,தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாள‌ர் குறித்து இப்பதிவில் அறிவோம்.

        இவர் கொஞ்சம் வித்தியாசமான் ஆள். இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தார்.ஒருவேளை இம்மாதிரி அற்புதம் விற்கும் பிரச்சாரக்ர்களிடம் சென்று விவாதித்தால் ஒன்றும் நடவாது,அவர்கள் அற்புத சுகம் என்பது நம்புபவர்களுக்கு மட்டுமே பலிக்கும் என்று அதனையே திருப்பி திருப்பி சொல்வர்.மதவாதிகள் அனைவருக்குமே அவர்கள் செய்வது ஏமாற்று வேலைகள் என்று நிச்சயமாக் தெரியும்,அப்படி தெரியாமல் இருக்கும் பிரச்சாரகர்கள் சீக்கிரம் மதம் விட்டு வெளியேறி விடுவார்கள்.

டேரன் பிரௌன் இங்கிலாந்தில் இதே மாதிரி ஒரு ஆளை உருவாக்குவது என்று முடிவெடுத்து பல சோத்னைகளுக்கு பிறகு உருவாக்குகிறார்.முன்கூறிய நடைமுறைகளின் படியே விளம்பரம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்.டேரன் பிரௌனால் உருவாக்கப் பட்ட பிரச்சாரகரும் கூட்டத்தில் சுகமளிக்கும் பிரச்சாரம் செய்கிறார்.சிலரின் பெயரையும் சொல்லி அழைத்து சுகமளிக்கப் பட்டதாக் கூறுகிறார்.கூட்டத்தின் முடிவில் பிரச்சாரகர் தான் ஒரு இறை மறுப்பாளன் ,இக்கூட்டமே ஒரு மக்களை திருத்தும் முயற்சி என்று போட்டு உடைப்பதுதான் நோக்கம். 

இந்த பிரச்சாரத்தின் மூலம பயன் இருந்ததா? முடிவு என்ன? என்பதனை காணொளியில் காண்க!!!!!!!!!!!
               

4 comments:

  1. நல்ல பதிவு.

    எனக்கு பல சமயங்களில் காணொளி கேட்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

    காணொளியில் கருத்து
    என்ன என்பதை ஓரிரு வரிகளில் கோடிட்டுக் காட்டினால் சிறப்பாக இருக்கும்.

    மேஜிக் செய்வதல்லாமல் வேறு அற்புதம் செய்யும் ஒருவரை நான் இதுவரை(எந்த மதத்திலும்) கண்டதில்லை.

    பிராடு செய்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதிலே பில்ட் அப் குடுக்க என்றே பலர் உள்ளனர். ஹா, நான் நேரில் பார்த்தேன், அப்படி இப்படி என்று விஸ்தரிப்பார்கள்.

    ReplyDelete
  2. //பிராடு செய்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். // கொலை செய்த சங்கராச்சாரியாரையே ஒன்றும் செய்ய முடியவில்லை.

    ReplyDelete
  3. பிராடு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொன்னவுடன அப்படியே துடிக்கிறார்கள்! இத்தனைக்கும் நான் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. //மேஜிக் செய்வதல்லாமல் வேறு அற்புதம் செய்யும் ஒருவரை நான் இதுவரை(எந்த மதத்திலும்) கண்டதில்லை//
    என்று எழுதியிருக்கிறேன்.

    மற்ற மதத்துக்காரனுக்கு முதல்ல தண்டனை கொடுத்துட்டு அப்புறம் என் மதத்துக்காரனை கேளு, மத்த மதத்துக் காரனுக்கு தண்டனை குடுக்கலைனா என் மத சார்பா பிராடு பண்றவனை
    ஒன்னும் செய்ய கூடாது, என்கிற ரீதியில் இருக்கிறது.

    ஆங்காங்கே நடைபெறும் "அற்புத" நிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று அக்கறை போல் இருக்கிறது.

    மற்றபடி எந்த வழக்காக இருந்தாலும் , யாராக இருந்தாலும் விசாரித்து கோர்ட்டார் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும், குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.

    யாருக்கு எந்த தண்டனையை கோர்ட் வழங்கினாலும் எனக்கு ஒரு துடிப்பும் இல்லப்பு.

    ReplyDelete
  4. அருமையான காணொளி. கடைசியில் பணம் வாங்கும் நேரத்தில் நேதனின் பிரசங்கம் அருமை....சுகமளிக்கும் நிகழ்ச்சிகள் நம்பினால் அதை நம்பிமக்கைய அளவில் வைத்தால் நல்லது. மாறாக மருத்துவ சிகிச்சையை விடுவது, இருக்கும் பணத்தை காணிக்கையாக தருவது என்றால் அது மூட நம்பிக்கையாகத்தான் முடியும்.

    அற்புதங்களை ஏசுவினால் தான் நடத்த முடியும், அவர் திரும்பி வரும் வரை!!! காத்திருப்போம்... போலி பிரசங்கிகளை நம்பாமல்.

    சென்னையின் பேரிரிரிரிரின்ன்ன்ன்பபப பெருவிழாக்கள் கூட்டங்கள் குறைந்துள்ளதாக பேச்சு.

    ReplyDelete