கொஞ்சம் தீவிர கருத்துள்ள பதிவுகள் எழுதி கொஞ்சம் போரடிப்பதால் கொஞ்சம் மாறுதலாக் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை பகிர்கிறேன்.பாடி பழகி கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கற்று கொடுக்கலாம்.
**************
பாடல்: துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
திரைப்படம்:பெயர் ஓர் இரவு(1951)
கதை: அறிஞர் அண்ணா
இயக்குனர்: ப. நீலகண்டன்
நடிகர்கள்: நாகேஸ்வரராவ், லலிதா, பத்மினி ,பி. எஸ். சரோஜா
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இசை:தண்டபானி தேசிகர்&ஆர் சுதர்சன்
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
இராகம்:தேஷ்,தாளம்:ஆதி
***********************
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?
எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல்
ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே?
கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்
இது இல்லை, பாடு,, கண்ணே சரிதானான்னு கேட்டேன்
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?
அறாமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
அருகிலாத போதும் - யாம்
அருகிலாத போதும் - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?
1.திரைப்படத்தில்[ நாகேஸ்வரராவ், லலிதா]
2.திரு தண்டபானி தேசிகர்& திரு உன்னி கிருஷ்னன்(நன்றி திரு யோவான்)
No comments:
Post a Comment