பரிமாணம கொள்கைக்கு எதிர்ப்பு என்பது புதிதல்ல.இக்கொள்கை வரையறுக்கப்பட்ட நாட்களில் இருந்தே பல் விதமான் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.முதலில் அறிவியலாளர்கள் எதிர்த்தாலும்,பிறகு பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர்.இன்று உலகின் பெருமபாலான் பல்கல்லை கழகங்களில் பாடமாக் கற்பிக்கப் படுகிறது.
இபோதைய எதிர்ப்பு என்பது மத்வாதிகளிடம் இருந்தே என்பது சொல்லித் தெரிவதில்லை என்றாலும் அ.வ கொள்கையாகத்திலும் சில அறிவியலாளர்கள் இயங்குகிறார்கள் என்பதையும் அறிவோம்.
இப்பதிவு ஒரு நகைசுவை பதிவு. அறிவியல் பதிவு அல்ல.தமிழ் பதிவுலகிலும் பரிமாண கொள்கை எதிர்ப்பு என்பது மத விள்மபர பிரச்சாரமாக வலம் வருகிறது என்பதை அறிவோம்.நாம் எதிர் கருத்தாளர்களிடம் இருந்து கூட கற்கவே விரும்புகிறோம்.ஆனால் சில விள்க்கங்கள் இப்படி இருக்கும் போது நகைக்த்தான் முடியுமே தவிர அதனை ஒரு பொருட்டாக எடுப்பதோ ,மறுப்பதோ செய்ய இயலாது.
அது என்ன?
பரிமாண கொள்கையின் படி ஒரு உயிரினம் காலப் போக்கில் சிரற்ற சிறு மாற்றம்+இயற்கைத் தேர்வினால் இன்னொரு உயிரினமாக் மாறுகிறது.இம்மாற்றம் என்பது டி என் ஏ பிரதி எடுக்கும் போது நிகழ்கிறது.அப்ப்டி மாறும் போது அவ்வுயிரினத்தின் அனைத்து பகுதிகளுமே கொஞ்சம் கொஞ்சமாக் மாறும்.அதாவது ஒவொரு குறுகிய கால கட்டத்திலும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.ஒரு உறுப்பு அலது உடலின் பகுதி மட்டும் மாறாது.இதனை அறியாத இக்கருத்தை பாருங்கள்.
//மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும்.
இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்படி, வரலாற்றில் எலி இருந்திருக்கின்றது, அதுபோலவே புலியும் இருந்திருக்கின்றது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட உயிரினங்கள் (அதாவது 'பாதி எலி பாதி புலி' மற்றும் 1.1, 1.2 போன்ற உயிரினங்கள்) உயிரினப்படிமங்களில் காணப்படவில்லை.//
பரிணாம் ஆய்வாளர்கள் இப்படிப் பட்ட படிமங்களை எதிர் பார்ப்பதில்லை என்றாலும் நண்பர் மிகவும் ஆசை படுவதால் அதனை ஒரு படத்திலாவது காட்டி விட ஆசை வந்தது.இப்படிப்பட்ட படிமங்களை பரிணாம் எதிர்ப்பாளர்கள் கேட்பதால்,அவை இருக்க முடியாது என்பதை அறியாததால் பரிணம்த்தை மறுக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிய வேண்டுகிறேன்.
மேலே கண்ட சுட்டியை பார்க்கும் போது இப்படியுமா பரிணாம்த்தை விள்ங்குவார்கள் சும்மா கிண்டலுக்காக் இப்படி படம் போடுகிறர்கள் என்றேன் நினைத்தேன்.ஆனால் இப்படி இடைப்பட்ட படிமங்களை எதிர்பார்க்கும் ஆட்களும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகி விட்டது.நன்றி.
பரிணாம் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைபட்ட படிமங்கள் எப்ப்டித்தான் இருக்கும்? சும்ம ஒரு 60 முக்கிய இடைப் படிமங்கள் விள்மப்ரத்திற்காக மட்டும்.
அறிவார்ந்த வடிவமைப்பின் முக்கிய கொள்கையான் எளிமைப் படுத்தமுடியாத வடிவமைப்பு பற்றி கற்றல்+விவாததித்தல் செய்துவருகிறோம்.எ.சி.வ ன் முக்கிய சான்றுகளுள் ஒன்றான கேம்பிரியன் படிமங்கள் பற்றி எழுதினால் மட்டுமே எ.சி.வ பற்றிய கற்றல் முற்றும் பெறும் என்பது உண்மை. கேம்பிரியன் என்பது புவியியல் கால அளவில் 542 ± 0.3 மில்லியன் ஆண்டுகள் முதல் 488.3 ± 1.7 மில்லியன் ஆண்டுகள் வரை உள்ள காலத்தை குறிக்கிறது .கன்டாவில் உள்ள உடஹ் ,சினாவில் பல் இடங்களில் கேம்பிரியன் படிமங்கள் கிடைத்தன்.இதில் கிடைத்த பல படிம உயிரினங்கள் கடின உடல்,முழு வளர்ச்சி பெற்றதாக் காணப்பட்டன.பெரும்பாலான் உயிரின தொகுதிகளின் முன்னோர்கள் உடல்கள் முழுமையாக கிடைத்ததும் குறிப்பிடத் தக்கது.கேம்பிரியனுக்கு முந்தைய கால படிமங்கள் மிக குறைவு.
கேம்பிரியன் படிமங்களை பற்றி இப்பொதுவான கருத்துகளை கூறலாம்
1. அனைத்து படிமங்களும் நீர்வாழ் உயிரினங்களாக் இருந்தன.
2.உயிரினங்களின் பெரும்பாலான படிமங்கள் ஒப்பீட்டளவில் சிறியயதாக இருந்தது.
3. பெரும்பாலான கேம்பிரியன் உயிரினங்கள் அழிந்து விட்டன
கேம்பிரியன் படிமங்கள் அ.வ கொள்கையாளர்களால் பரிணாமத்திற்கு எதிரான விமர்சனமாக் வைக்கப் படுகிறது.என்ன விமர்ச்னம் எனில் கேம்பிரியனுக்கு முந்தைய படிமங்கள் இல்லை என்பதால் கேம்பிரியன் படிமங்கள் முழு வளர்ச்சி+கடின உடல் உள்ளதாக் இருப்பதல் இவை வடிவமைக்கப் பட்டதாக இருக்க்லாம் என்பதே அவர்களது வாதம்.
இதனை பற்றி அடுத்த பதிவில் பதில் அளிப்போம்.முதலில் அ.வ கொள்கையாளர்களின் கேம்பிரியன் பற்றிய கருத்தாக்க திரைப்படம் ஒன்று பார்ப்போம்.டார்வினின் தர்ம சங்கடம் என்னும் திரைப்படம் முதலில் பார்ப்போம்.பிறகு அப்படத்தின் முக்கிய கருத்துகளுக்கு பதில் அளிப்போம்.
இந்த்ப் படம் பார்க்கும் நண்பர்கள் தங்கள் கேள்விகளை அளித்தால் அதற்கும் பதில்கள் முயற்சிப்போம்.
நண்பர்களே பரிணாம் கொள்கைக்கு மாற்றாக வைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பின் முக்கிய கொள்கையாக்கமான எளிமைப் படுத்த முடியாத சிக்கலமைப்புகள் குறித்து சென்ற பதிவில் பார்த்தோம்.இதன் பல வடிவங்களை பல் பதிவுகள்,விவாதங்களில் பார்த்து இருக்க்லாம்.அதனை எப்படி மேற்கொள்வது என இப்பதிவில் அறிவோம்.
நம் பணி உண்மையில் பரிணாமத்திற்கு எதிரான வாதங்களை தமிழில்ஆவணப் படுத்துவது மட்டுமே. அவ்வகையில் இந்த அ.வ கொள்கை என்பதுதான் இபோதைய பரிணாம் எதிர்ப்பு கொள்கை என்பதால் அதன் கொள்கையாளர்களின் கருத்தையே ஆவணப்படுத்தி,அதனை வாதமாக வைக்க இயலுமா என்பதை பரிசோதித்தோம்.அதற்கு பரிணாம் கொள்கையின் விளக்கம்&மறுப்பு இடுவதும் நம் நோக்கமே!!!!!!!!!!.
ஆனால் எ.சி.வ ன் பல கருதுகோள்கள்,ஏமாற்று வேலைகளை நண்பர் நரேன் சென்ற பதிவு விவாதத்தில் தவிடு பொடியாக்கி விட்டார்.அப்படியே அ.வ கொள்கையாளர்களின் வழியில் மழுப்பி விட்டோம் எனினும் அவர் காட்டிய இணைப்பு மிகவும் அருமை.இப்பதிவில் நான் விளக்கும் பல விவரங்களை நண்பரே கூறிவிட்டார்.அவருக்கு நம் நன்றிகள்.
எ.சி.வ என்பது பரிணாமத்திற்கு மாற்றாக விளக்கங்களை வைப்பது இல்லை.அதை விடபரிணாமத்தால் விளக்க முடியாத சான்றுகள் உருவாக்குவதில்தான் அதிக ஈடுபாடு காட்டுகிறது.
இப்போதைய சான்றுகளாக அவர்கள் முன்வைக்கும் பாக்டீரிய ஃப்லெகல்லம், கண் அமைப்பு,இரத்தம் உறையும் தன்மை,செல்களின் சிக்க்லான அமைப்பு அனைத்துமே இவ்வகையை சேர்ந்தவையே.
சான்றுகள் இல்லை என்னும் போது ஊகித்த மாதிரி [prediction model] மூலம் விளக்க முயல்வதை எ.சி.வ கொள்கையாளர்கள் ஏற்க மறுத்து விடுவார்கள்.இக்காணொளி பாருங்கள் கண் என்பது எப்படி பரிணாமத்தில் உருவாகிஇருக்க முடியும் என்பதை டாக்கின்ஸ் விளக்குகிறார்.
எ.சி.வ என்பது பரிணமிக்க முடியுமா என்பதை முற்று முழுதாக சான்றுகளால் விளக்க முடியுமா என அறிய இன்னும் கொஞ்சம் பரிணாம கொள்கை விளக்கம் அறிவோம்.
'அ' என்னும் உயிரினம் 'ஆ' என்னும் உயிரினத்தின் முன்னோர் என வைத்துக் கொள்வோம். அதாவது 'அ' என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பரிணாம காரணிக்ள்[சீரற்ற சிறு மாற்றம்+இயற்கைத் தேர்வு]மூலம் 'ஆ' வாக சிறிது சிறிதாக மாறுகிறது.
இபோது 'ஆ' என்பது வாழும் உயிரினம். 'அ' உட்பட்ட சில இடைப்பட்ட உயிரினங்களின் படிமம் கிடைத்திருக்கிறது என்றால் 'அ' என்பது 'ஆ' ன் முன்னோர் என்று அறிவியலாளர்கள் சில உயிரியல் நடைமுறைகளுக்கு உட்பட்டு வகைப் படுத்துவார்கள் . 'அ' மட்டுமல்லாமல் இன்னொரு வாழும் உயிரினமும் 'இ' ம் அதே முன்னோரில் இருந்து தோன்றி இருந்தால் டி.என் ஏ பரிசோதனை மூலம் 'ஆ' மற்றும் 'இ' உள்ள ஒற்றுமை அளவு கண்டுபிடிக்கப் பட்டு உறுதி செய்யப் படும்.
எ.காமனிதனும் மனித குரங்கு(சிம்பன்ஸி) ம் ஒரே முன்னோர்[4 to 7 million years ago]என்பது பரிணாம் அறிவியலின் ஏற்றுக் கொள்ளப் பட்ட கூற்று.
அம்முன்னோரில் இருந்து பல இடைபட்ட நிலை படிமங்கள் உண்டு.மனிதன்,மனித குரங்கின் டி.என்.ஏ 98% ஒத்துப் போகிறது. ஆகவே ஒரு பரிணாம் முன்னோரை உறுதி செய்ய பரிணாம் அறிவியல்
1) படிமங்கள்
2) வாழும் அதே குழுவை சேர்ந்த இன்னோர் உயிரினத்தின் டி என்.ஏ ன் அருகாமை[similarity]
இந்த இரு சான்றுகளை ஏற்கிறது.
இப்படி இருந்தால் மட்டுமே ['அ' வில் இருந்து 'ஆ' மற்றும் 'இ'] பரிணமித்த உயிரினம் என்று பரிணாம் அறிவியலாளர்கள் ஏற்கின்றனர்.
இப்போது எ.சி.வ கொள்கைக்கு இதே மாதிரியை பயன் படுத்துவோம்.முதலில் எலிப்பொறி
இது ஒரு உயிரற்ற பொருள்.பரிணாமம் என்பது உயிரினங்கள் தலைமுறை ரீதியான மாற்றங்களை விளக்கும் கொள்கை.
உயிரற்ற பொருள்களுக்கும் , உயிர்களுக்கும் என்ன வித்தியாசம்?
1.உயிரினங்கள் இயற்கை சூழலுக்கு ஏற்ப தகவமைக்கின்றன.
2. இன விருத்தி செய்கின்றன.
இம்மாதிரி எலிப்பொறி செய்யாது என்பதால் இது பரிணமிக்க முடியாது. அப்படியென்றால் எ.சி.வ வெற்றி என்று அறிவித்து விடலாமா!!!!!!!!
கொஞ்சம் பொறுங்கள் உயிர்களிலேயே[தாவரங்களில்] பொறி போல் செயல்பட்டு பிற உயிர்களை பிடிக்கும் வகைகள் உண்டு.அதனை ஆய்வு செய்வோம்.
Venus' Flytrap (Dionaea muscipula)
பாவம் அந்த 'ஈ'. பொறி வைத்து பிடித்தாள் கொலைகாரிவீனஸ்(பெயர் மட்டும் காதல் தேவதை!!!!!!!!!!).இது எப்படி பரிணமிக்கும் என்று சந்தேகம் வராது.இலை மட்டும் பிறகு முள் என்று பரிணமிப்பது பெரிய விஷயமில்லை.இன்னும் அதிக விவரம் வேண்டுபவர்கள் இங்கே பாருங்கள்.
சரி இப்போது பிற உயிர்களில் உள்ள எ.சி.வ அமைப்புகளுக்கு வருவோம்.
Michael J. Katz இன்னும் உயிரியலில் காணப்படும் சிக்கலான அமைப்பை பற்றியும் இவ்வாறு கூறுகிறார்.
"Cells and organisms are quite complex by all pattern criteria. They are built of heterogeneous elements arranged in heterogeneous configurations, and they do not self-assemble. One cannot stir together the parts of a cell or of an organism and spontaneously assemble a neuron or a walrus: to create a cell or an organism one needs a preexisting cell or a preexisting organism, with its attendant complex templets. A fundamental characteristic of the biological realm is that organisms are complex patterns, and, for its creation, life requires extensive, and essentially maximal, templets.”
“செல்கள் சிக்கலான ஒழுங்கு வடிவமைப்பை கொண்டவை.அவற்றின் பகுதிகளும் சிக்கலான அமைப்பை கொண்ட குறிப்பிட்ட பணியாற்றுபவை, அப்பகுதிகள் இணைந்தும் (i.e. செல்) குறிப்பிட்ட பணியாற்றுபவை.ஒரு செல் இன்னொரு செல்லில் இருந்தே உருவாகியிருக்க மட்டுமே முடியும். அந்த முன்னோர் செல்லும் உயிரியல்வகையின்அதிகபட்ச சிக்கலான ஒழுங்கு வடிவமைப்பை கொண்டிருக்க வேண்டும்.”
அந்த முதல் செல் எப்படி வந்தது என்பதன் விளக்கமான அபியோஜெனிஜிஸ்[Abiogenesis] அ.வ கொள்கையாளர்கள் ஏற்பது இல்லை.ஒரு வேளை செயற்கையாக ஒரு செல் தயாரித்தால் கூட அப்போதும் அறிவார்ந்த சக்தியும் இதுபோல் படைத்து இருக்கலாம் என்றே வாதிடுவர்.
நாம் இப்போதைய காலகட்டத்தில் இருந்து உயிர்கள் எப்படி பரிணமித்தது என்றே அறிய விழைகிறோம். .இக்காலத்தில் இருந்து கடந்த காலத்தை கட்டமைக்கும் கொள்கையாக்கம் சான்றுகளை மெய்ப்பிப்பதாக இருக்க வேண்டும்.சான்றுகளின் மேல் உறுதிப்படுத்தப் பட்ட மாதிரி[model] மூலம் சான்றுகள் இல்லாத காலத்திற்கு ஊக[prediction] முறையில் கணிக்கப் படுகிறது.
ஆகவே இபோது உள்ள எ.சி.வ செல்லின் முன்னோரும் ஒரு செல்தான் என்பதை ஏற்போம்.[ இப்போதைய மிக பழைய செல் படிமங்கள் குறித்த விவரங்கள் ஆய்வில் உள்ளதால் மிக சரியாக முன்னோர் செல் என கணிப்பது கடினம். ஆகவே முதல் செல் பற்றிய விவாதம் இப்போது தவிர்க்கப்படுகிறது.].எ.சி.வ செல் பரிணமிக்க முடியுமா என்பதை பற்றி மட்டும் ஆராய்வோம்.
மீண்டும் 'அ' செல் என்பது 'ஆ' ன் முன்னோர் செல் என வைத்துக் கொள்வோம். எ.சி.வ கொள்கையாக்கத்தின் படி 'ஆ' என்பது 'அ' வில் இருந்து பரிணமிக்க முடியாது.அல்லது 'அ' வும் 'ஆ'வும் ஒன்றே[i.e வித்தியாசம் மிக குறைவு].
'ஆ' மட்டுமே உள்ளதால் 'அ' உள்ளிட்ட இடைப்பட்ட படிமங்கள், பிற குழு செல் இல்லாததால் பரிணாம் கொள்கையின் படி 'ஆ'வின் முன்னோரை மிக சரியாக கண்டறிய முடியாது.
பரிணாம கொள்கையின் படி சான்றுகள் இருந்தால் மட்டுமே உறுதிப் படுத்த முடியும். கொள்கையை சான்றுகளுக்கு பொருந்தும் வண்ணம் விள்க்குவதே அறிவியல்.இங்கு சான்றுகள் இல்லாத பட்சத்தில் 'ஆ' ன் முன்னோர் செல் என்று சான்றுஇல்லாத ஒன்றை உறுதிப் படுத்த முடியாது.
அப்போது எ.சி வ அமைப்புகள்[செல்கள்] எப்போதும் இருந்தே இருந்தாக வேண்டும்.அல்லது குறிப்பிட்ட காலத்தில் தோன்றியதில்(?) இருந்தே இப்போது வரைக்கும் [வெவ்வேறு கால கட்ட சான்றுகள் கொண்டு] மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது என்று நிரூபித்தால் மட்டுமே அ.வ கொள்கையாக்கம் சரி.
இதுவும் முடியாது!!!!!!!!!.அ.வ ஆட்களுக்கும் இது தெரியும்.இபோது உள்ள 'ஆ" செல் எப்போது எப்படி தோன்றியது என்று இப்போது தெரியாது என்பதால் வடிவமைக்கப்பட்டு இருக்க்லாம் என்பதே உண்மையான் வாதம். இதனை சொல்ல முடியாது என்பதால் எ.சி.வ என்று குழப்புகிறர்கள் என்பதே உண்மை.
ஆகவே இது வெற்றி தோல்வி இல்லாமல் இப்போதைய தீர்வு இல்லாத முடிவு தெரியாத பிரச்சினை என்று முடிக்கலாமா?
செல்களின் பரிணாம வளர்ச்சி குறித்து இப்படி கூறலாம் எனினும்,இந்த அ.வ கொள்கையின் சவால்களை அப்ப்டியே விட முடியுமா?
இக்கட்டுரை மொழியாக்கம் அல்ல.கொஞ்சம் நாம் தேடி அறிந்த விவரங்களை ஒரு கோர்வையாக கூறியது மட்டுமே.
ஆனால் இணையத்தில் எ.சி.வ அமைப்புகளை விள்க்கும் பல கட்டுரைகள் உண்டு..எடுத்துக்காட்டாக Bacterial Flagellum என்பது எ.சி.வ ஆக இருக்க முடியாது என ஐயந்திரிபர நிரூபிக்கும் கட்டுரை
கட்டுரை படிக்க நேரமில்லாத நண்பர்களுக்கு அதாவது இந்த பாக்டீரியாவின் ஒரு பகுதி தனியாக இயங்கும் என நிரூபிக்கப் பட்டதுதான் விவரம்.
The existence of the TTSS in a wide variety of bacteria demonstrates that a small portion of the "irreducibly complex" flagellum can indeed carry out an important biological function. Since such a function is clearly favored by natural selection, the contention that the flagellum must be fully-assembled before any of its component parts can be useful is obviously incorrect. What this means is that the argument for intelligent design of the flagellum has failed.
ஆகவே எ.சி.வ என்பது மிகப்பெரிய சவால் அல்ல என்பதுதான் நம் முடிவு. ஆகவே ஒவொரு எ.சி.வ க்கும் பரிணமிக்கும் விளக்கம் நிச்சயம் கிடைக்கும். இன்னும் கூறினால் பரிணமிக்க முடியாத எ.சி.வ என்று இதுவரை ஒன்றை அறிவியல் அங்கீகரிக்கவில்லை
இன்னும் புழக்கத்தில் அ.வ.வின் சில கொள்கையாக்கங்களையும் வரும் பதிவுகளில் அறிவோம்.
அடுத்து வில்லியம் டெம்ஸ்கியின் கணித ரீதியான அ.வ கொள்கையாக்கங்கள் பற்றி அறிவோம்.இது அதிக நேரம் எடுப்பதும்,நமக்கு ஒரு முக்கியமான் பணி இருப்பதால் இன்னும் ஒரு 10 நாட்களுக்கு பதிவு வராது.
எ.சி.வ பற்றிய விவாதங்களுக்கு மட்டும் கூடுமானவரை பதில் அளிக்க முயல்கிறேன்.நன்றி
இவ்வருட ஆரம்பத்தில் இருந்தே அறிவார்ந்த வடிவமைப்பு பற்றி கற்றலும் பகிர்தலும் செய்யத் தொடங்கியதால் நம்மால் கணிதம் குறித்த பதிவுகள் எழுத முடியவில்லை.
நண்பர் சமுத்ராவின் பதிவுகளில் நமக்கு எப்போதும் பல கேள்விகளும் ,சிந்திக்க தூண்டும் பதில்களும் கிடைக்கும்.அப்படி ஒரு கேள்வியாக முடிவிலி[infinite] என்பது என்ன? அதனை பற்றி நமக்கு என்ன தெரியும் என்ற சிந்தனை வந்தது.
மனிதர்கள் நாகரிகமடைய தொடங்கியபோது எண்ண[count] ஆரம்பித்து இருக்கலாம். பிறகு பாகம் பிரிக்க பின்னங்களை பயன் படுத்தி இருக்கலாம்.குழந்தைகளுக்கும் கணிதத்தில் முதலில் ஒன்றில் இருந்து 10,100 என்றே எண்ணுதல்[counting] கற்று கொடுக்கிறோம்.இருப்பதிலேயே பெரிய எண் என்பது என்ன? என்றால் அதுதான் முடிவிலி என்று கணித வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இருக்கும்(?) எண்களிலேயே மிகப் பெரிய எண் முடிவிலி!!!!!!!!!!
முடிவிலி என்றால் எப்படி இருக்கும்?உண்மையிலேயே உண்டா?
ஏன் இக்கேள்வி தேவை எனில் நம் பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட அளவு உடையதா?அல்லது முடிவற்றதா ?அப்படி என்றால் எப்படி இன்னும் விரிவடைய முடிகிறது?.இது போன்ற கேள்விகளை விள்க்கும் போது முடிவிலியும் விவாதத்தில் வந்து விடும்.
சரி இந்த முடிவிலியை எப்படி கணிதத்தில் கூறுவார்கள்.பொதுவாக
பூச்சியமல்லாத ஒரு எண்/பூச்சியம்=முடிவிலி
A non zero real number/0= ω
கேள்வி: 1/∞ன் மதிப்பு என்ன??
இதனை கொஞ்சம் வரைபடம் மூலம் விள்க்குவோம்.
Y=1/X என்ற ஒருதொடர்பை எடுத்துக் கொள்வோம்..X க்கு வெவ்வேறு மதிப்புகள் இட்டு Y கணித்து வரைபடம் வரந்தால் இப்படி வரும்.
X
Y
0.0001
10000
0.001
1000
0.01
100
0.1
10
1
1
2
0.5
3
0.333333
4
0.25
5
0.2
6
0.166667
7
0.142857
8
0.125
9
0.111111
10
0.1
100
0.01
அதாவது X முடிவிலி தூரம் செல்லும் போது 1/X பூச்சியம் ஆகிறது.
Georg Ferdinand Ludwig Philipp Cantor[March 3 ,1845 – January 6, 1918] என்னும் ஜெர்மன் கணித மேதை முடிவிலி பற்றி பல ஆய்வுகள்&வரையரைகள் செய்தவர்.இவர் மெய்யெண்கள்[Real number] முழு எண்களை[natural numbers]விட அதிகம் என்று நிரூபித்தவர்.அது எப்படி இரண்டுமே முடிவிலி அளவு ஆயிற்றே என்றால் அதுதான் அவ்ர்.
முடிவிலி பற்றி இவர் பல ஆய்வு செய்து இருந்தாலும் இப்பதிவில் இவருடைய முக்கிய கருத்து மட்டும் விள்க்குகிறோம்.அதாவது முடிவிலி என்பதும் எண்ணற்ற முடிவிலிகளை கொண்டது.முடிவிலி என்பது ஒரு எண் அல்ல.எண்ணற்ற முடிவிலி எண்கள் உண்டு.அந்த முடிவிலிகளுக்கு சில தொடர்புகளையும் வரையறுக்க இயலும் என்றெல்லாம் இவரின் விள்க்கம் செல்கிறது.
இத தத்துவ விள்க்கம் வழக்கம் போல் [கிறித்தவ] மதவாதிகளிடம் இருந்து பலமான் எதிர்ப்பு வந்தது.இறைவன் என்பவர் முடிவிலியாக தத்துவார்த்தமாக விள்க்கப்படும் போது எண்ணற்ற முடிவிலிகள் என்பது பல கடவுள்கள் தத்துவத்தை நியாயப் படுத்துகிறது.
இவர் ஒரு சிறந்த மேதை என்றாலும் ஒரு சக்தி தன்னோடு பேசுவதாக கூற ஆரம்பித்தார்.நம் இரமானுஜம் கூட இப்படி கூறினார் என்பதும் இந்த ஒற்றுமை வியக்க வைக்கிறது. இது அவருக்கு உடல் & மன் நலக்குறைவு ஏற்படுத்தியது.இறுதி வாழ்வு மிக்க வறுமையில் காப்பக்த்தில் இறந்தார்.
அவரை நினைத்தல் வருத்தமாக் இருப்பினும் அவரின் எண்ணற்ற முடிவிலிகள் என்பது பிரபஞ்ச இரகசியங்களை அறிவதில் பெரும் பணி ஆற்றுகிறது என்பது மட்டும் உண்மை.
அவர் & முடிவிலி கருத்தாக்கம் பற்றிய காணொளி
முடிவிலி பற்றிய கணிதம் பிரபஞ்ச அறிவியலில் எப்படி பயன்படுகிறது என்பதை இக்காணொளியில் காணலாம்.
இதில் அதிக விவரங்கள் உண்டு எனினும் எண்ணற்ற முடிவிலிகள் உண்டு என்பதை மட்டும் கூறினால் போதும் என்றே நினைக்கிறேன். முடிந்தால் இவர் பற்றி,முடிவிலி கணிதம் பற்றி வரும் காலத்தில் முயற்சிப்போம்.
நம் அறிவார்ந்த வடிவமைப்பு பற்றிய தொட்ர் பற்றி நண்பர் நரென் சில கேள்விகளை எழுப்பினார்.அவருக்கு பதிலாக இப்பதிவு.
வணக்கம் நண்பர்நரேன்,
நிச்சயம் இதற்கு கடும் உழைப்பு+அதிக நேரம் தேவைப்படுகிறது.இதில் கிடைக்கும் மகிழ்ச்சியே உங்கள் போல் புரிந்து கேட்கப் படும் கேள்விகள்தான்.நாம் எந்த கொள்கையையும் அறிவியல் பார்வையில்தான்[சான்றுகள் நிகழ்தல்+கொள்கையாக்கம் +பரிசோதனை+உறுதிப்படுத்தல்] அணுகுகிறொம்].சரி உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்.Just for fun!!!!!!!!!
//1.அதற்கு complexity மற்றும் நிரூபித்தால் போதுமா, அதையும் தாண்டிஆராயவேண்டாமா?.//
அதற்கு பரிணாம ஆய்வாளர்கள்தான் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.சரியான பதிலாக் இருந்தால் முதலில் ஏற்க மாட்டோம்.பிறகு அனைவரும் ஏற்கும் பட்சத்தில் அ.வ(வேதாளம்) முருங்கை மரத்தில் ஏறி வேறு எ.சி.வ எடுத்துக் காட்டு தருவோம்.அதற்கும் அவர்கள்தான் விள்க்கம் தர வேண்டும.
ஹி ஹி விள்க்க முடியாததுதான் complexity.விளங்கினா அது easy!!!!!!!!!!!!
//2.மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் அறிவியல் ஆராய்ச்சி வரையறைகுள்ளே வந்துவிடுமா.
//அறிவியலால் முடியாது என்பதுதானே அடிப்படை சகோ!!!!!!!!! .அப்படி ஒரு அறிவார்ந்த சக்தி இந்த சிக்க்லமைப்பை தோற்றுவித்தது.அதனை[சக்தி] எந்த ஆய்விலும் அறிய முடியாது.ஆகவே எ.சி.வ சிக்கலாக் இருப்பதால் சிக்கலை [எப்போதும் போல்] ஏற்படுத்துவது அதுதான் அதேதான்!!!!!!
//3.complexity என்பது relative term ஆகாதா. ஒருவருக்கு கடினமாக் இருப்பதுஇன்னொருவருக்கு கடினமாக இருப்பதில்லை. ஆதிமனிதனுக்கு கடினமான விஷயங்கள் இப்போதுஎளிமை.//
இதுதான் சகோ!.நீங்கள் நம் வழிக்கு வர ஆரம்பித்து விட்டீர்கள். அந்த சக்திக்கு எளிமையாக இருப்பது மனிதர்களுக்கு விடை காண முடியா சிக்க்லாக உள்ளது!!!!!!!
[இப்போதைய] விடை தெரியா கேள்விகள் அனைத்திற்கும்அதுவே விடை,ஒளி மற்றும் வழி.அச்சக்தி மிக பெரியது!!!!!!!!!!!
//4)மாற்றங்களுக்கு காரண காரணிகள் இயற்கையில் இருப்பதுதானே.//
அதனை எ.சி வ அமைப்புகளுக்கு நிரூபியுங்கள் என்பதுதானே சவால்,மரண அடி சகோ!!!!!!.
இது[எ.சி.வ] எப்படி வரும் பரிணாமத்தில் என்னும் கேள்விக்கு ஓடி ஒளிகிறார்களே பரிணாம தத்துவ மேதைகள் பார்க்கவில்லையா!!!!!!!!!!!!!!சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!
//5 உலகின் காலத்தை கணக்கிட்டால் எளிமையிலிருந்து கடினத்திற்கு வரும் சாத்தியகூறு அதிகம் உள்ளது.//
எப்படி வந்தது என்று கூறாமல் வரும் சாத்தியம் என்று கூறுவது பரிணமத்தின் உறுதியற்ற தன்மையையே காட்டுகிறது.
இது சிக்கலான செல் அமைப்பு இதுக்கு முன்னாடி என்ன? அதை சொல்லுங்க சகோ!!!!!!!!!!
//6. இப்போது எளிமை படுத்த முடியவில்லையென்றால் பிற்பாடு எளிமை படுத்திவிட்டால்//
மிக மிக பழைய பதில். ஒரே ஒரு உண்மை [இதை எளிமைப் படுத்தி காட்டினால் முதலில் ஒத்துக் கொள்ள மாட்டோம் .பிறகுஎங்களுக்கு இன்னொரு எ.சி.வ கிடைக்காமல் போய் விடுமா!!!!!!!.
இப்போது பதில் தெரியாத கேள்விமட்டும் கேட்க நாங்கள் தயார் . நீங்கள் இப்படியே [தலையை பிய்த்துக் கொண்டு] உளர வேண்டியதுதான்!!!!!!!!!!!!!!
அது விளக்கத்திற்காக மட்டும் சகோ!!!.முன்னாள் ஆட்கள் கைக்கடிகாரம் [watchmaker argument] வைத்து இதனை ஆரம்பித்தார்கள்உண்மையில் நம்ம ஆட்களுக்கு எலிப்பொறி விடயம் மட்டுமே புரியுது. சக்தி போட்ட சிக்கல் அல்லவா.ஆனால் பரிணாம நாத்திகர்கள் இதற்கும் விடை அளித்தே ஆக வேண்டும். அவர்களை சும்மா விடப் போவதில்லை!!!!!!!
//8) கடைசியாக கணிதத்தின் மூலம் I.D. நிரூபிக்க முயல்கிறார்கள். கணிதத்தை பல பரிணாமங்களை கொண்ட நிதர்சன உலகத்திற்கு சரியான ஒப்பீட்டாகுமா. //
அவர்கள்evolutionary algorithms மூலம் பரிணாம மாதிரி,செயலாக்கம்சரி என்றால் நாங்கள் No free lunch theorem& complexity theory மூலம்அது சாத்தியமில்லை என்றே கூறுகிறோம்.நியாயமாக வாதிடுங்கள் சகோ!!!!!!!! சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!! Thanks a lot naren!!!!!!!!!!!!!!!!!
அ.வ கொள்கையாளரின் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் வன்முறையில் இறங்கும் பரிணாம நாத்திகர்கள்
பரிணாம் ஆதரவாளர் தருமி(அய்யா மன்னிக்கவும்!!!!!!!)யின் கேள்விகளுக்கு அறிவார்ந்த சக்தியின் அழகிய முறையில்,அதிரடி பதில்கள்.