Monday, January 30, 2012

பரிணாம எதிர்ப்பாளரின் கனவை நனவாக்கும் வண்ணச் சித்திரங்கள்


.

Fro+Monkey=Fronkey[குரங்கு+தவளையின் முன்னோர்]

பரிமாணம கொள்கைக்கு எதிர்ப்பு என்பது புதிதல்ல.இக்கொள்கை வரையறுக்கப்பட்ட நாட்களில் இருந்தே பல் விதமான் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.முதலில் அறிவியலாளர்கள் எதிர்த்தாலும்,பிறகு பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர்.இன்று உலகின் பெருமபாலான் பல்கல்லை கழகங்களில் பாடமாக் கற்பிக்கப் படுகிறது.

இபோதைய எதிர்ப்பு  என்பது மத்வாதிகளிடம் இருந்தே என்பது சொல்லித் தெரிவதில்லை என்றாலும் அ.வ கொள்கையாகத்திலும் சில அறிவியலாளர்கள் இயங்குகிறார்கள் என்பதையும் அறிவோம்.

இப்பதிவு ஒரு நகைசுவை பதிவு. அறிவியல் பதிவு அல்ல.தமிழ் பதிவுலகிலும் பரிமாண கொள்கை எதிர்ப்பு என்பது மத விள்மபர பிரச்சாரமாக வலம் வருகிறது என்பதை அறிவோம்.நாம் எதிர் கருத்தாளர்களிடம் இருந்து கூட கற்கவே விரும்புகிறோம்.ஆனால் சில விள்க்கங்கள் இப்படி இருக்கும் போது நகைக்த்தான் முடியுமே தவிர அதனை ஒரு பொருட்டாக எடுப்பதோ ,மறுப்பதோ செய்ய இயலாது.


அது என்ன?

பரிமாண கொள்கையின் படி ஒரு உயிரினம் காலப் போக்கில் சிரற்ற சிறு மாற்றம்+இயற்கைத் தேர்வினால் இன்னொரு உயிரினமாக் மாறுகிறது.இம்மாற்றம் என்பது டி என் ஏ பிரதி எடுக்கும் போது நிகழ்கிறது.அப்ப்டி மாறும் போது அவ்வுயிரினத்தின் அனைத்து பகுதிகளுமே கொஞ்சம் கொஞ்சமாக் மாறும். அதாவது ஒவொரு குறுகிய கால கட்டத்திலும் மாற்ற‌ம் அடைந்து கொண்டே இருக்கிறது.ஒரு உறுப்பு அலது உடலின் பகுதி மட்டும் மாறாது.இதனை அறியாத இக்கருத்தை பாருங்கள்.

//மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும். 

இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்படி, வரலாற்றில் எலி இருந்திருக்கின்றது, அதுபோலவே புலியும் இருந்திருக்கின்றது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட உயிரினங்கள் (அதாவது 'பாதி எலி பாதி புலி' மற்றும் 1.1, 1.2 போன்ற உயிரினங்கள்) உயிரினப்படிமங்களில் காணப்படவில்லை.//

இயற்கைத் தேர்வை விட்டலாச்சார்யா ஆக்கி விட்டார்களே.சென்று படியுங்க்ள் அந்த நகைசுவையை!!!!!!!!!!!!!.
http://www.ethirkkural.com/2012/01/600.html

பரிணாம் ஆய்வாளர்கள் இப்படிப் பட்ட படிமங்களை எதிர் பார்ப்பதில்லை என்றாலும் நண்பர் மிகவும் ஆசை படுவதால் அதனை ஒரு படத்திலாவது காட்டி விட ஆசை வந்தது.இப்படிப்பட்ட படிமங்களை பரிணாம் எதிர்ப்பாளர்கள் கேட்பதால்,அவை இருக்க முடியாது என்பதை அறியாததால் பரிணம்த்தை மறுக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிய வேண்டுகிறேன்.

1.முதலை+வாத்து ஆகியவற்றின் முன்னோர்

Crocoducks[crocodile+Duck)
*********************************
2.எருது+தவளை முன்னோர்

Bullfrog=bull+frog ancestor
****************
3.கழுதை+த்வளை முன்னோர்

Donkey+Frog=Fronkey
************************
4.எலி+முதலை முன்னோர்
ratodile=rat+crocodile
***************
5.குரங்கு+ஆந்தை முன்னோர்
babowl=baboon+owl
******************
6.பறவை+மான்
Humming deer=humming bird+deer
********************
7.டாபர்மேன் நாய்+தேரை முன்னோர்
dabertoad=daberman dog+toad
********************
8.தவளை+ பறக்கும் பூச்சி
The Flog=Fly+frog
*******************
இதனை கண்டு பிடியுங்கள்

This too!!!!!!!!!!!!!!!!!!!!


மேலே கண்ட சுட்டியை பார்க்கும் போது இப்படியுமா பரிணாம்த்தை விள்ங்குவார்கள் சும்மா கிண்டலுக்காக் இப்படி படம் போடுகிறர்கள் என்றேன் நினைத்தேன்.ஆனால் இப்படி இடைப்பட்ட படிமங்களை எதிர்பார்க்கும் ஆட்களும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகி விட்டது.நன்றி.



பரிணாம் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைபட்ட படிமங்கள் எப்ப்டித்தான் இருக்கும்?
சும்ம ஒரு 60 முக்கிய இடைப் படிமங்கள் விள்மப்ரத்திற்காக மட்டும்.

60 Transitional Fossils accepted by science

20 comments:

  1. உண்மையான் இடைப்பட்ட படிமங்கள் எப்படி இருக்கும்?
    இவை அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட படிமங்கள்.
    http://www.transitionalfossils.com/

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஹா ஹா ஹா..சூப்பர் படங்கள் சகோதரர். அப்புறம் நான் சொல்ல வந்ததை நீங்கள் நல்ல்ல்ல்லாவே(?) புரிந்திருக்கீங்க..வாழ்த்துக்கள்.

    அப்புறம் இதையும் நான் தான் சொன்னேன்,

    ///பரிணாமவியல் குறித்த சில வார்த்தைகளை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன்.

    1. இயல்பு/இயற்கை தேர்வு (Natural Selection (NS))
    2. தற்செயலான மாற்றங்கள் (Random Mutations (RM))

    பரிணாமம் நடக்க நாம் மேலே பார்த்த இரண்டு உக்திகளும் அதி முக்கியமானது. அதாவது, இயற்கைக்கு ஏற்றவாறு, (பரம்பரை பரம்பரையாக) உயிரினங்களின் உடல்களில் (சிறுக சிறுக) தற்செயலாக ஏற்படும் (மரபணு) மாற்றங்களே புதிய உயிரினங்கள் உருவாக காரணம் (Origin of Species by means of natural selection and random mutations).///

    பார்க்க http://www.ethirkkural.com/2010/07/evolution-stheory-harry-potter-stories.html

    நீங்க பதிவில் கொடுத்த என்னுடைய லின்க்கில் உள்ள தகவல்கள் மிக எளிதாக மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்பதற்காகவே அப்படியான உதாரணத்தை கையாண்டேன். பாதி எலி பாதி புலி என்பதற்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாமே. அதாவது பாதி எலி முகம், பாதி புலி முகம். பாதி எலி கால், பாதி புலி கால். பாதி எலி காது, பாதி புலி காது. இப்படியும் அர்த்தம் கொள்ளலாமே ஹி ஹி ஹி.

    தெளிவா முன்னமே விளக்கிட்டு தான் இந்த உதாரனத்திற்கு வந்தேன். எப்படி என்றால் //ஒரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும்.// - இப்படி

    சூப்பரா புரிந்துகொண்டு விளக்கம் கொடுத்து இருக்கீங்க..மறுபடியும் வாழ்த்துக்கள்..

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  3. ஹா ஹா வாங்க நண்பரே
    இது நகைச் சுவை பதிவு என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்

    இப்ப்டி இடைப்பட்ட படிமம் எதிர்பார்க்கவில்லையா!!!!!!!!!!!!
    இந்த் பதில் எதிர்பார்த்ததுதான்!!!!!!!!!!!
    ********************
    சரி வேறு எப்படி எதிர்பார்க்கிறீர்கள் நண்பரே?
    ஏனெனில் அறிவியல் ஏற்கும் இடைப்பட்ட படிமங்களையும் மறுப்ப்பதால் எப்படி இருந்தாக வேண்டும் என்பதை விளக்கும் கட்டாயம் இருக்கிறது.

    படம் வரைந்து விள்க்கவும்.

    ReplyDelete
  4. சார்வாகன் கொஞ்சம் நெருங்கி வருவது போல் தெரிகிறது. கவலைப்படாதீர்கள் ஆஷிக். இன்னும் சில நாட்களில் டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று சார்வாகனே பதிவிடுவார்.

    ReplyDelete
  5. வாங்க சகோ சுவனன்
    இது நகைச்சுவை பதிவு என்பதால் தெரிவித்த நகைச்சுவை கருத்துக்கு வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  6. சகோ.சார்வாகன்,

    செம கலாய்! இவங்க எல்லாம் ஆதாம் ,ஏவாள் வழினு சொல்வாங்க, அவங்களூக்கு தொப்புள் கொடி இருக்கா? அவங்க வாரிசுகள் யாரை கல்யாணம் செய்து வம்ச விருத்தி செய்தார்கள்னு கேட்டா நத்தை போல உள் சுருண்டுக்கொள்வார்கள் :-))

    இந்த காமெடி பீசுங்களூக்கு எல்லாம் யாரும் பதில் சொல்வதே இல்லை.

    ReplyDelete
  7. வாங்க நண்பர் வவவால்
    இன்னிக்கு நம் பதிவை படித்த ஆத்திக நாத்திக சிரோமணிகள் எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால் மிகையாகாது.
    ஏதோ அவர்கள் சொல்ல நாம் படம் போட்டு விள்க்க அப்ப்டியே குஜாலா பதிவு வந்து விட்டது.

    சீக்கிர‌ம் மைட்டோகான்ட்ரியல் ஈவ் பற்றிய பதிவு இடுங்கோ!!!!!!!!!
    காத்திருக்கேன்
    நன்றி

    ReplyDelete
  8. சூப்பர் படங்கள்

    ReplyDelete
  9. என்னது...பிரபல பதிவர் திரு.சுவனப்பிரியன் இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் போட்டாரா?????

    அப்படியானால் கண்டிப்பாக இந்த பதிவு காத்திரமான விஷயத்தை தான் சொல்லுகின்றது.

    எல்லா காலத்திற்கு நேரத்திற்குமான படிமங்கள் உருவாகாது, கிடைக்காது, கண்டுப்பிடிக்கவில்லை என்பதை மனதில் வைத்தால் நலம்.

    ReplyDelete
  10. படங்களைப் பார்க்கும் எவருக்கும் இதில் கூடவா மார்பிங் செய்வாங்கன்னு நினைக்கத்தோன்றும்.

    வவ்வால் சீக்கிரம் ஓடிவாங்க!அப்ப நரசிம்ம அவதாரம்:)

    ReplyDelete
  11. ஐயா,

    நீங்கள் பதிவில் போட்ட புகைப்படங்கள் மிருகங்களை வதை செயவதற்கு போல் ஒப்பாகும்.

    அதனால் தங்கள் மீது மிருக வதைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். உரிய நேரத்தில் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

    இதன் நகலையும் மேனகா காந்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  12. வாங்க நண்பர் சமுத்ரா
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. @நரேன்
    //எல்லா காலத்திற்கு நேரத்திற்குமான படிமங்கள் உருவாகாது, கிடைக்காது, கண்டுப்பிடிக்கவில்லை என்பதை மனதில் வைத்தால் நலம்.//
    இயற்கை தன் செயல்களுக்கு எல்லாம் சான்று எபோது விட்டு செல்லும் என எதிர்பார்த்தல் தவறு.ஆனானப் பட்ட கடவுள்களே ஒழுங்கான சான்றுகளை அளிக்காத போது ,இயற்கை அதுபாட்டுக்கு யாரையும் கண்டுக்காமல் செல்லும்.
    இயற்கைக்கு அத்தாட்சி அவசியம் இல்லை.

    நமக்குத்தான் இயற்கையின் தயவு தேவை.ஆகவே ஏதேனும் மிச்சம் மீதி சான்றுகள் இருந்தால் பொறுக்க வேண்டியதுதான்.
    இச்சான்றுகள் கிடைப்பது கடினம்,அதிலும் சில போலிகள்[எ.கா பில்ட் மனித படிமம்] போன்ற்வையே பரிணாமம் மீதான எதிர்ப்பை கட்டிகாத்து வருகின்றன்!!!!!!!!!!!
    நன்றி

    ReplyDelete
  14. நண்பர் இராஜராஜன்
    நாம் கஷ்டப்பட்டு ,பல் தக்வல் திரட்டி ஒரு பதிவு எழுதினால் எவருமே சீண்ட மாட்டார்கள்.பாவம் நண்பர் என்று சிலர் மட்டும் சும்மா நல்லா இருக்கு என்று கருத்திட்டு செல்வர்.இம்மாதிரி நகைச்சுவை பதிவுக்கு கூட்டம் பிச்சுக்கிட்டு வரும்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    ஒரே மகிழ்ச்சி என்னவெனில் கேம்பிரியன் &இடியக்கரன் படிமங்கள் பற்றி பலரும் அறிந்து இருப்பது உண்மையில் வியப்பு
    நம் சகோக்களும் டார்வின்+குரங்கு போன்ற ஒரு படம் போட்டதுதான் இப்பதிவுக்கு வித்திட்டது.
    நன்றி

    ReplyDelete
  15. நண்பர் நரேன்
    //நீங்கள் பதிவில் போட்ட புகைப்படங்கள் மிருகங்களை வதை செயவதற்கு போல் ஒப்பாகும்.

    அதனால் தங்கள் மீது மிருக வதைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். உரிய நேரத்தில் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

    இதன் நகலையும் மேனகா காந்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.///
    இச்சட்டம் எனக்கு செல்லாது.அதாவது நாங்களும் குரங்கு இனத்தை சேர்ந்தவன் என்பதால் இப்பிரச்சினையை எங்களுக்குள் தீர்த்துக் கொள்வோம்.படைக்கப் பட்டவர்களின் சட்டம் எங்களுக்கு ஒத்துவராது!!!!!!!!!!!!!.

    இது வாலி இறக்கும் முன் இராமனிடம் கூறியது.........
    நன்றி

    ReplyDelete
  16. மிகவும் சிறந்த கிரியேட்டிவிட்டி தெரிகிறது. தங்களது மற்ற பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன். அதுவும் குறிப்பாக அறிவார்ந்த வடிவமைப்பு பற்றிய தகவல்கள்.

    ReplyDelete
  17. வாங்க சகோ இராதாகிருஷ்னன்
    நன்றி!!!!!

    ReplyDelete
  18. நண்பர்களே

    நம்ம் சகோக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக்[என்று நினைத்துக் கொண்டு] ஒரு கேள்வி கேட்கிறார்கள்.
    அதாவது கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய‌ விலங்கு ஒன்றின் படிமம் காட்டுங்கள் என்கிறார்கள்.இது குறித்த நம் கேள்விகள்.இபோது கிடைத்துள்ள படிமங்களில் பாக்டீரியா போன்ற உயிர்களே இருப்பதாக் நினைத்து கேட்கின்றார்.ஆனால் கிம்பெரல்ல என்னும் எடிகரன் கால விலங்கின் படிமம் இருக்கிறது என்ற அறியாமையில் வந்த கேள்வி இது.

    http://www.fossilmuseum.net/Fossil_Sites/whitesea/kimberella/kimberella.htm
    Description: This spectacular specimen of early life predates the Cambrian Explosion by tens of millions of years. Many early attempts at diversity were present during this time, both here and in the Ediacara Fauna of the Flinders Ranges of Australia. Many strange forms were present, some of which still do not have any parallels in modern times. This one is known as Kimberella, thought by some to have had a tough shell much like modern-day molluscs. It has been found associated with Radulichnus which appears to show scrapings much like those made by the radula of a modern snail, as well as traces that may have been made as Kimberella moved along the seafloor. Whatever its true identity, it has been assigned to the Vendozoa, a group of animals that existed prior to the better-known Cambrian Explosion. The incredible soft-bodied preservation is believed to be the result of impressions made in a microbial mat contained within the sand. Kimberella fossils are also found in the Ediacara Hills of Australia.

    1.கேம்பிரியன் படிமங்களில் மனிதன் இல்லை.ஆகவே ஆதம் ஹவ்வா இவர்களை எப்போது __________ படைத்தான்?

    ReplyDelete
  19. சகோ,
    நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கு புரியற மாதிரி ஒரு பதிவு :)
    நீங்கள் எழுதுவதில் பல விழயத்த நான் ரெண்டு வரி படிச்சாலே எஸ்கேப். (தவறு என்னுடையது தான் :)
    மற்றதை இனியாவது படிக்க பார்க்கிறேன்

    ReplyDelete
  20. வாங்க சகோ புரட்சி மணி
    நலமா
    பரிணாம் கொள்கை இபோதைய உயிர் தோற்ற‌ம் விளக்கும் அறிவியல் கொள்கை.இதை விட பொருந்தும் மாற்று கொள்கை வந்தாலும் நன்மையே!!!!!!
    ஆனால் மத‌ம் பற்றிய தங்கள் புரிதலுக்கு எதிராக உள்ளது என்பதற்கவே மதவாதிகள் எதிர்க்கிறார்கள்.
    அடிக்கடி வாங்க!!!!!!!!
    நன்றி

    ReplyDelete