வில்லியம் டெம்ஸ்கியின் பரிணாம் [கணித] விமர்சனம்.
வணக்கம் நண்பர்களே,
இதுவரை அ.வ கொள்கையாக்கத்தின் எ.சி.வ[எளிமைப் படுத்த முடியாத சிக்க்லான வடிவமைப்பு] பறி கற்று வந்தோம்.அதன் பிதாமகன் மிக்கேல் பெஹே அவருடைய எடுத்துக் காட்டுகள் மற்றும் கேம்பிரியன் படிமங்கள் பற்றியும் விவரங்கள் அறிந்தோம்
வில்லியம் டெம்ஸ்கி ஒரு கணித ஆய்வாளர்.கணித முறையில் பரிணாம செயலாக்கம் தவறு என நிரூபிக்க இயலுமா என்று ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டு வருகிறார்.
இந்த அறிவியலில் என்ன சிக்கல் என்றால் ஏற்கும் அல்லது மறுக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் சில அடிப்படை விவரங்கள் தேவை.சில சம்யம் அதற்கும் அடிப்படை விவரங்கள்....... என்று போய் கொண்டே இருக்கும். ஆக்வே கூடுமான் வரை எளிமைப் படுத்தி தர முயல்கிறேன்.வரும் சந்தேகங்களை பின்னூட்டங்களில் சரி செய்கிறேன்.
சரி ஒரே வரியில் வில்லியம் டெம்ஸ்கி என்ன செய்கிறார்?
வில்லியம் டெம்ஸ்கி பரிணாம் செய்ல் முறையை கணிதரீதியாக நடக்க முடியாத ஒன்று என நிறுவ விழைகிறார்.
அப்படியா நல்லது பரிணாம் செயல் முறை என்றால் என்ன?. .அது எப்படி கணிதம் ஆகும்?
பரிணாமம் என்பது உயிரின தொகுதிகளின் மேல் நடைபெறும் இயற்கையின் செய்ல்களாகும்.இயற்கைத் தேர்வு[natural selection]+சீரற்ற சிறு மாற்றங்கள்[random mutations] உயிரின தொகுதிகள் மீது செயல் பட்டு கால அளவில் மாற்றங்களுடன் கூடிய [வேறு] உயிரினத் தொகுதிகளாக மாற்றுகின்றன.
ஒரு தோராயமான எடுத்துக்ட்டு தருகிறேன்.
பூமியில் முதல் ஒரு செல் உயிர் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.அதில் இருந்து இபோது வரை ஒவ்வொரு மில்லியன் ஆண்டுகளாக் கால இடைவெளி என்று கொண்டால் 3000 இடைவெளிகள் வருகிறது.இந்த ஒவ்வொரு கால் இடைவெளியிலும் உள்ள உயிரின்ங்கள் அடுத்த கால இடைவெளிக்கு செல்லும் போது மாற்றம் அடைந்து வேறு உயிரினங்களாக் மாறுகின்றன.[ஒரு மில்லியன் என்று சம கால அளவு எடுத்தது எளிதாக விள்க்க மட்டுமே!]
பரிணாமம் உயிரின தொகுதிகள்,கூட்டங்கள் மேல்தான் செய்ல்படும்.பரிணாம் மாற்றத்தின் வேகம் குறித்த சில விவரங்கள் ஆய்வு விவாதங்களில் இருப்பதால் எவ்வளவு மாற்றம் என்பதை பற்றி கூற அவசியம் இல்லை. இது என்ன விவாதம் எனில் கால அளவில் சீரான தொடர்சியான் மாற்றமா[Gradual Change] அல்லது வேகமான மாற்றம் பிறகு மிக, மிக சிறிய மாற்றமா[punctuated equilibrium] என்பதுதான்.
இந்த 3000 கால இடைவெளிகளிலும் பெரும்பாலான உயிரினங்கள் படிம வர்லாறின் படி வெவ்வேறாக் உள்ளதும. பல[99.9%] உயிரினங்கள் அழிந்ததும் பரிணாம் கொள்கையின் படி மட்டுமே பொருந்தும படி விளக்கப்படுகிறது.
ஒரு கால கட்டத்தின் உயிர் தொகுதிகள் எப்படி இன்னொரு கால கட்ட உயிர்த் தொகுதிகளாக மாறுகிறது என்பதை கணித முறை செயலாக்கமாக வரையறுத்து கணிதத்தின் முக்கிய பிரிவாகி பல துறைகளில் பயன் படுத்தப்படுகிறது.அந்த கணித முறையின் பெயர் பரிணாம் செய்லாக்க முறை[Evolutionary Computation or Evolutionary Algorithms or Intelligent Algorithms ].
இந்த பரிணாம் செயலாக்க கணிதம் பரிணாம் கொள்கையின் மாதிரி[model] என்றே முன் வைக்கப் படுகிறது.இதற்கு பல் மென பொருள்கள் தயாரிக்கப் பட்டு பல சிக்க்லான முடிவெடுக்கும் பிரச்சினைகளில்[Complex Decision Making problems] ப்யன்படுத்த்ப் படுகிறது.
சரி பரிணாம் கணித முறை எப்படி செய்ல்படுகிறது? என்பதை கணிதரீதியாக் அறிய நிச்ச்யம் விரும்புவீர்கள்!!!!!!!!!.
முதலில் அது தெரிந்தால் மட்டுமே வில்லீயம் டெம்ஸ்கியின் எதிர் வாதம் புரியும்.
இப்பதிவில் சொன்ன அடிப்படைகளில் சந்தேகம் இருந்தால் விவாதிக்கலாம்.அடுத்த பதிவுகளில் பரிணாம் கணிதம் பற்றிய சில அடிப்படைகள் கற்று பிறகு வில்லியம் டெம்ஸ்கியின் விமர்சனம் பற்றி விவாதிப்போம்.அவர் வெளியிட்ட சில கட்டுரைகளின் சாராம்சம் தமிழ் படுத்தி வெளியிடலாம் என முயல்கிறேன்.
நன்றி
//முயல்கிறேன்.//
ReplyDeleteமுயலவும்
தொடருங்கள்..
ReplyDeleteவாங்க நண்பர்கள் ஷர்புதீன் நரேன்,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பரிணாமத்தை கணிதப் படுத்தும் மாறுபட்ட கண்ணோட்டம். தமிழில் எழுத்துப் பிழைகள் அதிகம் காணப்படுகிறது. தவிர்க்கவும்.
ReplyDeleteவாங்க நண்பர் சந்துரு,
ReplyDeleteசொற் பிழைக்கு வருந்துகிறேன்.
சொல் பிழை, பொருள் பிழை இருப்பின் நீங்கள் கண்ட அப்பிழையை இடத்தை சுட்டி ,சரியான சொல்,கருத்து அளித்து இருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்பேன்.நண்பர்களிடம் இம்மாதிரி உதவிகள் வரவேற்கப்ப்டுகின்றன என்பதை நம் பதிவுகளில் வலியுறுத்தியே வருகிறேன்.பரிணாமமும் இதெ போல் பிழை திருத்தும் செயலாக்கம்[error correcting mechanism] என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.எனினும் கவனமாக இருக்க முயற்சிப்பென்!!!!!!!!!!!!
அடிக்கடி வாங்க
நன்றி