வணக்கம் ந்ண்பர்களே,
உயிர்களின் தோற்றம் பற்றிய இப்போதைய அறிவியல் கொள்கையான பரிணாம் கொள்கையின் பிதாமகன் திரு.சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாளான பிப்ரவர் 12 ஐ அவருடைய தினமாக உலக முழுவதும் அறிவியலாளர்கள்,கொள்கை கற்கும் மாணவர்கள்,ஏற்பாளர்கள் பலரும் கொண்டாடுகிறோம்.அவரை பெருமைப் படுத்தும் விதமாக முனைவர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தயாரித்த சார்லஸ் டார்வினின் உன்னத அறிவு என்ற ஆவணத் திரைப்படம் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி.
டார்வின் வெளியிட்ட இயற்கைத் தேர்வின் மூலம் உயிர்களின் தோற்றம் என்ற புத்தகம் உலக முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் தாக்கங்கள் இன்னும் எதிரொலிக்கின்றது.அறிவியல் தேடல் உள்ள ஒவொருவரும் படிக்க வேண்டிய அரிய புத்தகம்.கடந்த 150+ வருடங்களாக டார்வினை எங்கும், எப்போதும் எதற்கும் விமர்சிக்கும் மதவாதிகளின் கூக்குரலே இதற்கு அத்தாட்சி!!!!!!!!!!!!!
இக்காணொளி மூன்று பகுதிகளை உடையது.முதல் பகுதியில் ஒரு பள்ளிக்கு செல்லும் ரிச்சர்ட் டாகின்ஸ் அங்குள்ள மாணவர்களுடன் உரையாடி,அவர்களை சுற்றுலா போல் அழைத்து சென்று படிமங்கள் சேகரிக்க ,ஆய்வு செய்ய கற்று தருகிறார்.அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.இயற்கைத் தேவின் மூலம் டார்வின் பரிணாம் வளர்ச்சி என்னும் கொள்கையை எப்படி வடிவமைத்தார் என்பதையும் விள்க்குகிறார்.
இரண்டாம் பகுதியில் கென்யா செல்லும் டாக்கின்ஸ் அங்கு மனித பரிணாம வளர்ச்சி பர்றிய சான்றுகள்,மத குருக்களுடன் உரையாடல்,சமுக டார்வினியம் என்னும் தவறான் பயன்பாட்டு முயற்சி பற்றியும் விளக்குகிறார்.
மூன்றாம்& இறுதி பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோன்றிய பரிணாம எதிர்ப்பு பற்றி விளக்குகிறார்.
HAPPY DARWIN DAY!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வணக்கம் நண்பா,
ReplyDeleteகூர்ப்புக் கொள்கையின் தந்தையின் பிறந்த நாளுக்கு ஏற்றாற் போல, அவரது கூர்ப்புக் கொள்கை பற்றி விளக்கிக் கூறும் காணொளியைக் குடுத்திருக்கிறீங்க.
புக் மார்க் செஞ்சு வைச்சிருக்கிறேன்.
அப்புறமா பார்க்கிறேன் நண்பா.
இந்த அரிய தொகுப்பினை எமக்குப் பகிர்ந்தமைக்கு நன்றி.
வாங்க சகோ நிரூபன்
ReplyDeleteபரிணமத்தை ஏற்கிறோமோ எதிர்க்கிறோமோ அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் இப்போதைய அறிவியல் கொள்கை என்ற வகையில் அனைவரும் அறிய வேண்டும்.அறிந்து வல்லிய காரணனக்களை விமர்சனமாக வைக்க வேண்டும்,அதற்கு பதில் இருந்தால் அளிக்க தயாராகவே பதிவுல்கில் பல வித்தகர்கள் உண்டு.நாம் பரிணாமம் கற்கும் மாணவன் என்ற வகையிலேயே பல விமர்சனக்ங்களுக்கு எளிதில் பதில் அளிக்க முடிகிறது.உங்களுடன் ஈழம் பற்றி மனம் விட்டு பேச வேண்டும் என்ற ஆசை உண்டு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நண்பா,
ReplyDeleteசந்தர்ப்பம் கிடைக்கையில் ஈழம் பற்றி மனம்விட்டு பேசுவோம்!
பரிணாமம் பற்றி எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை! நேற்று இரவும் ஓர் Podcast இனை இது தொடர்பாக கேட்டேன்! ரொம்பவே சூப்பரா, காமெடி கலந்து பரிணாமம், மனிதர்களின் இயல்புகளை எடை போடுவது தொடர்பில் சொல்லியிருந்தார்கள்.
தேடி எடுத்து லிங் கொடுக்கிறேன்.
கேட்டுப் பாருங்கள்.
சகோதரா,
ReplyDeleteநான் ituens இல் தரவிறக்கி கேட்டேன்.
கூகிளில் தேடி ituens இனை டவுண்லோட் செய்தால் நிறைய அறிவியல், விஞ்ஞான விடயங்களை விரும்பிய நேரம் இலவசமாக கேட்டு மகிழலாம்.
நான் கேட்ட நிகழ்ச்சியின் லிங் இதுட் தான்
ReplyDeletehttp://www.abc.net.au/local/stories/2011/11/30/3380410.htm
நன்றி சகோ நிரூபன்
ReplyDeleteசகோ சார்வாகன்,
ReplyDeleteஅவனவன் காதலர் தினத்துக்கு ஒரு வாரமாகவே தோரணம் கட்டிக்கிட்டு திரியிறாங்க, நீங்க என்னவென்றால் பரிணாமம், அறிவியல்னு பொழைக்க தெரியாம பேசிக்கிட்டு, பிப்12 மறக்காதிங்கனு சொல்லிக்கிட்டு எல்லாம் ஆதம்,ஏவாள் வாரிசுங்க, ஆப்பிள் தின்ன ஆசைப்படும் குரங்குக்கூட்டமே அதிகம் :-))
பிப்14 க்கு எவளையாவது புடிச்சு ரோசு கொடுத்து காசு செலவு செய்து ஈசிஆர் கூப்பிட்டு போய்டு வாங்க அப்போ தான் ஜென்மம் சாபல்யம் அடையுமாம் :-))
வாங்க சகோ வவ்வால்
ReplyDeleteஜீன்களின் தூண்டுதலே காதல் என்ற பரிணம் கொள்கை உடையவனால் உயிருக்குயிராய் காதலிக்க முடியுமா?
கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்
பள்ளி,கல்லூரியில் இருந்தே நமக்கு காதல் கைவசப் பட்டது இல்லை,அதுவும் கிராம பகுதியில் நகரம் சென்று ஆங்கிலத்தில் தட்டு தடுமாறி படிக்கவே உயிர் போய் விட்டது!.
நாகரிகமான நகரப் பெண்களிடம் பேசவே தயக்க்கம் அப்போது!!!!!ஆங்கிலத்திலேயே பேசினால் என்ன செய்ய முடியும்!!!!!!!!
.சூழ்நிலை புரிவதற்குள் படிப்பு முடிந்து விட்டது!!!!!!!!!!!!.
முயற்சி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது!!!!!!.ஹி ஹி ஹி
நம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதே!!!!!!!!.
நம் திருமண நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் நம்க்கு காதலர் தினமே!.இருப்பினும் பிப்ரவரி 14 விடுமுறையாக் இருப்பின் எங்கேனும் சுற்றுலா செல்வோம்.விடுப்பு இல்லையெனில் ஏதேனும் அன்பளிப்பு கொடுப்பது உண்டு.
அவ்வளவுதான் நம் காதலர் தினம்!!!!!!!!!!!!!!
சகோ.சார்வாகன்,
ReplyDelete//அதுவும் கிராம பகுதியில் நகரம் சென்று ஆங்கிலத்தில் தட்டு தடுமாறி படிக்கவே உயிர் போய் விட்டது!.
நாகரிகமான நகரப் பெண்களிடம் பேசவே தயக்க்கம் அப்போது!!!!!ஆங்கிலத்திலேயே பேசினால் என்ன செய்ய முடியும்!!!!!!!!
.சூழ்நிலை புரிவதற்குள் படிப்பு முடிந்து விட்டது!!!!!!!!!!!!.
முயற்சி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது!!!!!!.ஹி ஹி ஹி//
அடச்சே நம்ம கதை தானா உங்களுக்கும் :-))
இப்போ ஆங்கிலம் எல்லாம் கத்துக்கிட்டேன் ஆனால் ஒன்னும் சிக்க மாட்டேன்குது :-))
// ஒவ்வொரு நாளும் நம்க்கு காதலர் தினமே!.//
அப்புறம் என்ன சுவீட் எடுங்க ,கொண்டாடுங்க, இல்லாதவங்களுக்கு ஒரு நாள் இருக்கிறவங்களுக்கு வாழ் நாள் எல்லாம் கொண்டாட்ட தினங்களே!
டார்வின் தின வாழ்த்துக்கள், உண்மையை நோக்கி நமது பயணம் செல்லட்டும். காணொளிகளுக்கு நன்றி!
ReplyDeleteவாங்க நண்பர் சீனிவாசன்,
ReplyDeleteடார்வின் தின் வாழ்த்துகள்.அருமையாக் சொன்னீர்கள்,உண்மை நோக்கிய பயணம் தொடரும்!!!!!!!!
நன்றி
டார்வின் தின வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி சகோ.
ReplyDeleteநன்றி சகோ
ReplyDeleteஇந்த நாளில் இனிப்பு ஏதும் தர மாட்டீங்களா?
ReplyDeleteவாங்க நண்பர் சுவனன்
ReplyDeleteஇன்னும் இந்த சுதந்திர தின மிட்டாய் வாங்கி தின்று விட்டும் சுதந்திரம் என்பது என்ன என்று மறந்து போகும் இந்தியக் குடிமகனாகவே இருப்பதற்கு நன்றி.
டார்வின் தின கொண்டாட்டத்தில் இனிப்பு வழங்குவதில் தவறில்லை எனினும் அதைவிட அவரின் பரிணாம் கொள்கை பற்றிய தவறான் புரிதல்களை சரி செய்வதே முக்கிய கடமை.கருத்துக்கு நன்றி .ப்ரிசீலிப்போம்!!!!!!!!!!!
http://duraidaniel.blogspot.com/2012/02/1.html
ReplyDeleteக்கு மறுப்பு
வணக்கம் சகோ துரை டேனியல்
இத்தொடர்பு பதிவிற்கு வாழ்த்துக்கள்.இப்பதிவு பற்றிய மாற்று கருத்துகளையும் அனுமதிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
***************
நீக்கள் பரிணாமத்தை ஏற்க மறுப்பது ஏன் எனில் கீழ்க்கண்ட காரணங்களை குறிப்பிடுகிறீர்கள்.
1.இறை மறுப்பை வளர்க்கிறது.
2.இறை மறுப்பு ஒழுக்கக் கேட்டை வளர்க்கிறது
_______________
பரிணாமம் கொள்கை இப்போதைய உயிர்த் தோற்றம்,பரவல் விள்க்கும் அறிவியல் கொள்கை.இது கடவுள் ,மதம்,புத்தகம் ,ஒழுக்கம் பற்றி எதுவும் கூறவில்லை.
பரிணாமம் சான்றுகளின் மீது கட்டமைக்கப்பட்ட ,விள்க்கமளிக்கும் கொள்கை. இது அறிவியல்ரீதியாக்வே தவறென்று நிரூபிக்கப் படவேண்டும்.
பரிணாம கொள்கையாளர்களில் பலர் இறை மறுப்பாளர்களாக இருப்பது உண்மை.இது ஏன் எனில் உயிர் தோற்றம்+பரவல் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு விள்க்கப் படுகிறது.உயிர்களின் தோற்றத்திற்கு இயற்கைக்கு மேம்பட்ட சக்திகளின் துணை தேவையில்லை என்பதுதான்
மற்றபடி படி ஒழுக்கம் என்பதன் வரையறையாக எதனை சொல்ல வருகிறீர்கள்? என விள்க்கினால் நல்லது,அந்த வரையறுப்பின் படி பரிணாம்க் கொள்கை கொண்ட இறை மறுப்பாளர்களே அந்த வரையறுப்பை அதிகம் மீறுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்களாக் நிரூபித்தால் நல்லது
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬XXXXXXXXXXXXXXXXXX
இப்பதிவில் பரிணம்த்தின் மீது வைக்கப்ப்டும் அறிவியல்ரீதியான் குற்றச்சாட்டு
சில தாவரங்களின் இனப்பெருக்க முறை[விதை பரவல்] பரிணமித்து இருக்க முடியாது என்பதுதான்.இது ஒருவகையான எளிமைப்படுத்த முடியாத சிக்கலான் வடிவமைப்பு[எ.சி.வ] கொள்கையாக்கமே!!!!!!!!!!
இது பரிணமிக்க முடியாது எனில் எப்போது தோன்றியது,அப்போது இருந்து அப்ப்டியே இருக்கிறது என்ற ஆதாரம் கொடுக்க வேண்டும்.எபோதும் எ.சி.வ விற்கு சான்றுகள் இருக்காது அலல்து சான்றுகள் இல்லாதவற்றையே எ.சி.வ ஆக காட்டுவார்கள்.
தாவரங்களின் பரிணாம் வளர்சி என்பது ஒரு கடல்.
ஓவ்வொரு தாவரத்திற்கும் பரிணம் வளர்ச்சி வரலாறு உண்டு.. இதற்கும் பரிணாம் ரீதியான விள்க்கம் உண்டு
/ இம்மரங்களின் பெயர் லோடேய்சியா மால்டிவிக்கா (Lodoices Maldivca). ஆதாரம்: Readers Digest-Book of Facts./
http://en.wikipedia.org/wiki/Timeline_of_plant_evolution
http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1756-1051.2002.tb01371.x/abstract
ife history evolution in Lodoicea maldivica (Arecaceae)
http://www.mendeley.com/research/life-history-evolution-lodoicea-maldivica-arecaceae/
அறிவியல் எழுதும் போது அதன் தொடர்பு சுட்டிகள் கொடுப்பது நன்று.
நன்றி
//நீங்களே ஒத்துக்கொண்டுள்ளீர்கள். பரிணாமக் கொள்கை கொண்டவர்கள் அதிகம் இறைமறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்று. அதனால்தான் நாங்கள் இப்படி உபதேசம் செய்யவேண்டியதாகி விட்டது. அப்புறம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவேண்டிய அவசியமில்லை. காரணமம் இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். நம்பினால் உங்களுக்கு நல்லது. நம்பாவிட்டால் போங்கள். யாருக்கு நஷ்டம். வருத்தம் கொள்ள வேண்டாம். உங்களுக்காக இந்த பதிலல்ல. ஒட்டுமொத்த நாத்திகர்களுக்காக சொல்கிறேன். காற்று இருப்பது உண்மை. //
ReplyDeleteமிக்க நன்றி சகோ,
நான் கூட ஏதோ அறிவியல் ரீதியாக் பரிணம் எதிர்ப்பு என்று எண்னியதால் மட்டுமே பின்னூட்டம் இட்டேன். மற்றபடி நம்பிக்கை எனில் உங்கள் இஷ்டத்துக்கு போட்டு தாக்குங்க யாரும் கோபப் படமாட்டொம்!!!!!!!!!.
ஒரு 1000 வருடம் அறிவியல்,மனித குல முன்னேற்றத்தையே தடுத்து வைத்த மதத்தின் ஆதரவாளரிடம் பேசுகிறேன் என்பதை உணர ,முடிகிறது.
ஹி ஹி நாத்திக வெறியர் என்ற புதிய சொல்லை கண்டுபிடித்ததற்கு நன்றி.மத விளம்ப்ரதாரியாக இருப்பதை விட இப்பட்டம் சிறந்ததே!.
பழைய கால்ம் மாதிரி இந்த மத எதிர்ப்பாளர்களை எல்லாம் சூனியக்காரர்கள் என்று எண்ணி தீயில் போட முடியவில்லையே என்பதுதான் இப்படி சொல்லில் வெளிப்படுகிறது.
எதற்கும் போப்பிடம் இன்னும் பிற தலைவர்களிடம் சொல்லி இன்னொரு இன்குசிஷன்,சிலுவைப் போர்கள் மாதிரி முயற்சி செய்யுங்களேன்.மீண்டும் கற்காலத்துக்கே போகலாம்.வாழ்த்துக்கள்.
http://en.wikipedia.org/wiki/Inquisition
http://en.wikipedia.org/wiki/Crusades
மிக்க நன்றி
சகோ ஒரு விடயத்தை கவனித்திங்களோ? Mr.துரைடேனியல் என்ன செல்கிறார்றென்றால் உயிரினங்கள் மற்றும் இயற்கை ஆகியவைகளின் சிருஷ்டிப்பு சம்பந்தமான விஷயங்களில் ம ட் டு ம் இந்த பரிணாமக் கொள்கை தேவையில்லை. அதில் ம ட் டு ம் ஏன் பரிணாமக் கொள்கை தேவையில்லை?
ReplyDeleteஅவரே காரணம் சொல்கிறார்.இறைஅச்சம் மக்களிடம் அகன்று விடுகீறது. ஆகையினால்தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி எல்லாம் துணிகரமாக செய்யப்படுகிறது. கடவுள் பயம் இருந்ததால் மக்கள் இவற்றை செய்யமாட்டார்கள்.
நீதிமன்றம் தண்டனை சிறைசாலை பொலிஸ் என்று எவ்வளவு தண்டசெலவு?
முன்னேறிய நாடுகளே பொருளாதர நெருக்கடியில் இருக்கும் போது.
ஓபாமா,அன்கெலா மார்க்கில், யூலியா கில்லாட், சார்க்கோசி எல்லோரும் ரூம் போட்டு தீவிரமாக இதுபற்றி யோசிக்கும் படி வேண்டிக்கிறேன்.
வாங்க சகோ குயிக்ஃபாக்ஸ்
ReplyDeleteஇமாதிரி கருத்துகளை என்ன செய்வது?.பரிணாம்க் கொள்கை சார்ந்த உயிர் தோற்றம்,வளர்ச்சி,பரவல் விள்க்கம் என்பது மத புத்தக புனைவு கதைகளை பொய்யாக்கிவிடும் என்பது உறுதியாகி விட்டது.பரிணாமம் உண்மையென்றால் பல் மதங்கள் பொய்யாகிவிடும் என மதவாதிகள் உறுதியாக் தெரிந்து இருக்கிறார்கள்.அதனால்தான் எதையாவது சொல்லி எதிர்க்க முனைகிறார்களா!!!!!!
ஆதாம் ஏவாள் கதை சொல்லிக் கொடுத்தால் அனைவரும் ஒழுங்காக இருப்பார்களா!!!!!!!!!.
Good Joke!!!!!!!!!!!!!
இம்மாதிரி கருத்துகளுக்கு சிரிக்க மட்டுமே முடியும்!.
நண்பரே லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்ட்டாக...
ReplyDeletehappy darwin day...
சுவனப்பிரியர்களுக்கு இந்தப் பதிவு non-iodized உப்பாகத்தான் இருக்கும், அதனால் ஸ்வீட் கேட்கிறார்கள். அறிவியல் ”வச்சிக்கிட்டு” வஞ்சகமா செய்கிறது. மததிற்கு அது கசப்புதான் அறிவியலார்களுக்கு அது இனிப்புதான்.
ஏதோ, டார்வின் திடீரென்று ஒருநாள் காலையில் எழுந்து மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தான் என்று கூறினார் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. இருபது ஆண்டு காலம் தன் இளமைக்கால கடும் உழைப்பு இருப்பது தெரியவில்லை. really hats of to that man. காணொளிகளுக்கு நன்றி.
வாங்க நண்பர் நரேன்,
ReplyDeleteஅவர்கள் பரிணாமத்தை எதிர்ப்பதும் மதத்தின் முக்கியக் கடமையாக கொண்டு வந்து விட்டார்கள்.பரிணம்த்தை மட்டும் எதிர்க்கும் எவரையும் ஆதரிக்க தயாராகி விட்டார்கள்.அப்ப்டியெனில் பரிணாமம உண்மையென்று அனைவரும் உணரும் போது மதங்களின் ஆட்சி ஒழிந்துவிடும்.மதம் என்பது வேறு அர்த்தத்தில் ,பரிமாணத்தில் அபோதும் உணர்ந்து பின்பற்றப்படும்.
Theist gods will go .Deist Gods will take over!!!!!!!
.புத்தக மதங்களுக்கு பரிணாம் கொள்கை ஒரு சவால்தான்.மத புத்த்கவாதிகள் எவ்வளவு நாள் தாக்கு பிடிப்பார்கள் என பார்க்கலாம்.
உங்களுக்கு இப்பதிவு படிக்க பரிந்துரை செய்கிறேன்.
படித்து மகிழுங்கள்!!!!!!!!!!!!!!
http://annatheanalyst.blogspot.com/2012/02/blog-post_14.html