Thursday, February 23, 2012

மதமாற்றம் என்பது என்ன? தேவையான ஒன்றா?


 

நாம் மதம் சார்ந்த பதிவுகளை எழுத இப்போது விரும்புவது இல்லை.ஏன் எனில் எழுதிய வரை போதும் எனற மன்நிலையும்,,அறிவியல் சார்ந்த கற்றல்,ஈடுபாடு  அதிக நேரம் எடுப்பதாலும் கைவிட்டு விட்டோம்.

இருப்பினும் மதமாற்றம் என்னும் விடயம் எப்போதும் நம்மை ஈர்க்கும் ஒன்று.இது ஏன் என்பதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக்.நாம் கல்வி கற்றது ஒரு மதம் சார்ந்த பள்ளி என்பதால் அம்மதம் குறித்த பல விள்க்கங்கள்,பழக்க வழக்கங்கள் அறிய முடிந்தது. மத புத்தகத்தின் தமிழ் பிரதி ஒன்றும் விடுதியில் கொடுக்கப் பட்டதால அதனை படித்தும்  இன்னும் கொஞ்சம் விவரம் அறிய முடிந்தது.

அம்மதம் சார்ந்த மாணவர்கள் வாரம் ஒருமுறை ஒரு அறையில் கூடி வழிபாடு செய்வதும் ,அதற்கு அனைவரையும் அழைப்பது உண்டு.சில சமயம் சென்றது உண்டு.அதில் மத புத்தக்த்தில் இருந்து சில வரிகள் படிப்பார்கள்,அதனை விளக்கி ஒரு நண்பர் சிறு உரையாற்றுவார். பிறகு அங்கிருக்கும் பலர், அந்த வாரத்தில் இறைவன் தனக்கு செய்த நன்மைகள் என்று சில சம்பவங்களை கூறினர்,தனக்கு சில காரியம் வாய்க்க வேண்டும் என வழிபாடு செய்ய வேண்டினர்.இதனை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தேன் .

பிறகு வழிபாடு தொடங்கும். ஒருவர் இறைவனை வேண்ட இடையே பல்ரும் சத்தமாக் ஏதோ கூற ஒரே குழப்பம். ஒரு வழியாக் முடிந்தது.இப்படி ஒருமுறை சென்றபின் அடுத்தமுறை நண்பர்கள் வந்து அழைத்தனர்.அபோது நாம் கடவுள்,மதம்,இறைமறுப்பு பற்றி எதுவும் அறியாத வயது.நட்பின் நெருக்கத்தால் சில சமயம் சென்று பங்கு கொண்டதும் உண்டு.தேர்வின் போது தான் ஹி ஹி!!!.

எப்படியோ மதிப்பெண் கிடைத்தால் சரி!!!!!!.தேர்வின் போது விடுதியிலேயே  மதம் சார்ந்த வழிபாடு ஓவ்வொருவருக்கும் ஆசீர்வாதம் விடுத்திக் காப்பாளரிடம் இருந்து கிடைக்கும்.பிற மதம் சாந்த மாணவர்களும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வர்.

சரி ஒருவழியாக பள்ளி படிப்பு  முடித்து கல்லூரி சேர்ந்தால் அங்கும் நம் அறைத் தோழர் ஒரு அதே மத அதீத நம்பிக்கையாளர். அதிகாலை 5 மணிக்கே எழுந்து பாட்டு பாடி சத்தமாக வழிபாடு செய்வார். நண்பா தூக்கத்தை கெடுக்காதே என்றால் நம்க்கு அறிவுரை சொல்ல ஆரம்பிப்பார்.அறிவுரைக்கு சத்தமே பரவாயில்லை என்று தோன்றும்.சரி இவர் நம்க்கு இலவச‌ கடிகாரம் அல்லது விடியற்காலை கூவும்  சேவல் போல் என எண்ணிக் கொள்வேன்.

கல்லூரியிலும் இதேபோல் ஒரு அறையில் கூடி வழிபாடு செய்வார்கள் ,சரி இது பழகிய கஷ்டம்தானே  என்று நினைக்கலாம், பெரிய கஷ்டம் என்னவெனில் கூட்டம் என் அறையிலே நடத்த ஆரம்பித்து விட்டார் நண்பர்.

அறையை மாற்ற‌ முயற்சித்தேன் பயன் இல்லை.அச்சம்யங்களில் வேறு எங்காவது சென்று விட்டு வருவேன்.நண்பர் பலமுறை நம்க்கு போதனை செய்வார்.புத்தகம் ஏற்கென்வே படித்து இருந்ததால் அவர் சொல்லாமல் விட்ட விவரங்களும் தெரிந்தது.சில மதபுத்தக வரலாறு அவருக்கு சரியாக‌ தெரியவில்லை என்பதும் உணர முடிந்தது.ஆனாலும் அபார நம்பிக்கை!!!!!!!!!.இந்த ஆள் நடிக்கிறாரோ என்று கூட சந்தேகம் வந்து கண்கானித்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை, புரியவில்லை.சரி சீக்கிரம் இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.

பிறகு ஒரு சுற்றுலா  மூன்று நாள் வா என்று அழைத்தார்.நண்பர்கள் பலரும்(பிற மதத்தினரும்) அவ்ருடன் சென்றோம்.கோவைக்கு அருகில் ஒரு அழகிய இடம்.அங்கு தங்க,உணவு ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக் சிறப்பாக் ஏற்பாடு செய்திருந்தனர்.கொஞ்சம் விளையாட்டு,புதிர் போட்டிகள் என்றாலும் இடையிடையே மதம் சார்ந்த போதனைகளே அதிகம் கொடுக்கப் பட்டன.போதனை செய்தவர் நான் '' என்னும் மதத்தில் பிறந்தவன்.உண்மை மதமான 'க்வை அறியாமல் தவறான வழியில் திரிந்தேன்.மது,சினிமா இன்னும் பல் தீய(?) பழக்கங்களுக் குஆளாகி இருந்த நான் 'க்' மதத்தை ஏற்றபின் மிகவும் நல்லவனாகவும்,'க்' மதத்தை அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் பணிக்கு தன்னை முழு நேர ஊழியனாக் அர்பணித்ததாகவும் கூறினார். மூன்றாம் நாள் நான் அறியாத சிலர் முன்வந்து தாங்கள் இச்சுற்றுலாவில் 'க்' மதம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.என் நண்பர் என்னிடம் உனக்கு விருப்பமா என்றார்.நான் இறை மறுப்பிற்கு முன்பே மதம் கடவுள் போன்ற விடயங்களில் ஈடுபாடு இல்லாத‌வன்.நான் கூறியது"நண்பா அவர்கள் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை,இறைவன் தங்களோடு பேசியதாக் கூறுகின்றனர்,இது மிக ஆச்சர்யமாக் உள்ளது.எனக்கு அப்ப்டி ஒன்றுமே இங்கு நிகழவில்லை,ஆகவே மன்னிக்கவும் என்றேன்.நாண்பருக்கு கோபம் சென்றுவிட்டார்.பிற்கு அடுத்த வருடம் நம் போன்ற மத ஈடுபாடு இல்லாத நண்பருடன் அறை பகிந்ததால் இவருடன் தொடர்பு குறைந்தது.என்னினும் சில சம்யம் வழிபாட்டுக்கு அழைப்பார்.. சுற்றுலாவின் பிறகு மதம் மாற்றுவதே இவர்களின் நோக்கம் என்று அறிந்த பிறகு செல்ல மனம் வரவில்லை.

                  மதபுத்தக்த்தை மட்டும் அதில் உள்ள வரலாற்று நிகழ்வுகளாக் குறிப்பிடப் பட்டுள்ள்வற்றை ஆழ்ந்து படித்தேன்.இவை நடந்தது 90கள் என்பதால் இணையம் மூலம் எளிதில்  தகவல்கள் சரி பார்க்க இயலவில்லை.புத்தகம் சரி போலவே தோன்றுகிறதே ஆதாரம் இல்லாமலா எழுதி இருப்பார்கள்.நண்பர் இது இறைவன் தன் அடியார்கள் மேல் இறங்கி எழுத வைத்ததாகவும் கூறுகிறார்.சரி இந்த வரலாறு உண்மையாக் இருக்குமா என பிற்காலத்தில் முடிந்தால் அறிய வேண்டும் என தீர்மானித்தேன்.

ஒரு நாள் இன்னொரு நண்பர்[இவர் '' மதம்] நம் அறைக்கு வந்த போது நம் வசம் உள்ள மத புத்தகம் கண்டு இதை ஏன் வைத்து இருக்கிறாய் என்றார்.அதுவா நம் முன்னாள் அறைத் தோழர் கொடுத்தார் என்றேன்.இதை நீ படிக்கிறாயா என்றார் இவர்.படித்தேன் அதில் உள்ள வரலாறு+கதைகள் உண்மையாக இருக்கும் வாய்ப்பு உண்டா என கண்டுபிடிக்க முயல்கிறேன் என்றேன்.திடீரென கோபப்ட்டார் இதை படிக்காதே இவர்கள் இப்படியே உன்னை குழப்பி மதம் மாற்றி விடுவார்கள் என்றார்.அது அவ்வளவு சுலபமில்லை நண்பரே என்று கூறினாலும் அதன் பிறகு அவர் என்னை சில மத சமூக கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்.அதுவும் ஒரு மதம் சார்ந்த அமைப்புதான் ,அங்கும் '' மதத்தின்  அருமை பெருமைகளை பேசினாலும் 'க்' உள்ளிட்ட பிற மதங்களின் மத மாற்றங்கள் குறித்து அதிகம் விவாதித்தனர்.

மத மாற்ற‌ம் நம் கலாச்சாரத்தை அழிக்கிறது ஆகவே இதை எதிர்க்க வேண்டும் என்றனர்.அங்கும் சில புத்தகங்கள் கிடைத்தன.அக்கூட்டங்களுக்கும் இருமுறை சென்றேன் என்றாலும் மதம் என்றாலே கூட்டம் சேர்ப்பதுதானா என்று நம்க்கு மனதில் வரும் எரிச்சலை உணர முடிந்தது.'' மதத்தின் புத்தகங்களும் ஒன்றும் பெரிதாக விள்க்க வில்லை. மிஞ்சியது குழப்பம்தான்.மதம் நம் நேரத்தை வீணடிப்பதாகவே தோன்றியது.

பிறகு படிப்பு வேலை தேடல் ,திருமணம் என்று காலம் வேகமாய் ஓடியது.கடவுள்,மதம் சார்ந்த சில சமூக செயல்பாடுகள் கடமைக்காக செய்ய வேண்டி இருந்தது.எவரிடமும் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக் பதில் கிடைத்த மாதிரி தெரியவில்லை.

ஒவ்வொருவரும் ஒரு வாழ்வுமுறைக்கு வாழ பழகி விட்டார்கள்.அதில்   வசதியாக் இருப்பவர்கள் அங்கேயே இருக்கிறார்கள்.பிறர் வாய்ப்பு கிடைத்தால் மதம் மாறுகிறார்கள் என்பதையும் உணர முடிந்தது.சில நண்பர்கள் மதம் மாறியதற்கு அவர்களின் சமூக பொருளாதார காரணங்களே என்பதும் நாம் அறிந்த உண்மையே. சிலருக்கு மதப் பெயர் ஒன்றும் உண்மைப்[வேறு மதம்] பெயர் ஒன்றும் இருக்கும். அரசு சலுகைக்காக் இப்படி செய்கிறார்கள் என்பதும் உண்மை. எவரும் எந்த மதம் பற்றியும் அனைத்தும் அறிந்து புரிந்து மாறுகிறார்கள் என்பது என்பது மிகவும் அரிய செயல் என்பது நம் கருத்து.

அதன் பிறகு நம் தேடல் தொடங்கியது. மதம்,புத்தக்ம் சார்ந்த பல தேடல்கள்,விவாதங்கள் என விரிவடைந்த போது மதம் என்பது அரசியல் சமூக அமைப்பு மட்டுமே என்பது நிச்ச்யமாக் புரிந்தது.

இப்பதிவு ஏன் எனில் இம்மாதிரியான் அனுபவங்கள் பல்ருக்கும் ஏற்பட்டு இருக்கும்.இம்மாதிரி மதமாற்ற நிகழ்வுகள் நம் குடும்பத்தில் நிகழும் வாய்ப்பும் உண்டு.ஆகவே சில அனுபவரீதியான படிப்பினைகள்.

1.மதமாற்ற‌ம் என்பது தேவையற்ற ஒன்று .ஏன் எனில் எந்த மதமும் [வரலாற்று ரீதியாக்] உண்மை என சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட முடியாது.

2.சில மதங்களில் மதப் பிரச்சாரமும்,மதமாற்றமும் அதீத ஈடுபாட்டுடன் முன்னெடுக்கப்படுகின்றன். பெரும்பாலும் ஒருவர் மட்டும் மதம் மாறும் போது அவரின் குடும்பத்தில் இருந்து பிரிவு பலமுறை தவிர்க்க இயலாது. இதனை தவிர்க்க மதம் குறித்த வரலாற்று ரீதியான உண்மைகளை ஒவ்வொருவரும் அறிந்தாக வேண்டும்.

3.இப்போது உள்ள மதத்தில் சரியாக நடத்தப்படாதோர் மதம் அதிகம் மாறுவதாக் சொல்லப்படுகிறது.இதனை தவிர்க்க அவர்களுக்கு உரிய மரியாதை,மதிப்பு கொடுத்து அம்மதத்திலேயே தக்க வைக்க்லாம்.இல்லையெனில் மத மாற்றம் என்பது தவிர்க்க இயலாமல் போகலாம்.
***************************
இவை என் சொந்த அனுபவத்தில் இருந்து பெற்ற‌ கருத்துகளே.மத மாற்ற முயற்சிகள்,காரணங்கள்,இதர பிற விடயங்கள் குறித்த மாற்றுக் கருத்துகள் அறிய விருப்பம்.

இப்பதிவுக்கு மட்டும் அனானிகளுக்கும் வாய்ப்பு அளிக்கிறேன்.பயனுள்ள கருத்துகளை பகிருமாறு வேண்டுகிறேன்.
நன்றி

29 comments:

  1. தங்கள் கூற்று உண்மையானதே .
    இல்லாத மதத்திற்கு எதற்கு மாற வேண்டும்.
    பெரும்பாலும் தான் இருக்கும் மதத்தில் தனக்கு கொடுமைகள் , அவமானங்கள் நேரும் பொது மக்கள் மத மாறுவதை மேற்கொள்ளுகிறார்கள்.
    மற்றும் புதிய மதத்திற்கு மாறும் போது சில சலுகைகள் கிடைகின்றன .அனால் அது நிரந்தரமானது இல்லை என்று அவர்கள் அறிவது இல்லை.
    அனால் உலகில் நம் நாட்டில் தான் மத மற்றம் அதிகம் நடந்துள்ளது .
    வெள்ளைகாரர்கள் இந்தியாவை விட்டு சென்ற அடுத்த நாளே முஸ்லிம்,கிறிஸ்து,சீக்கியர்கள்,புத்த மதத்தினர் தவிர அனைவரயும் இந்து வாக மத மாற்றம் செய்து விட்டார்கள் .
    அனால் மத மற்றம் அடைந்ததை அறியவே அவர்களுக்கு ஆண்டுகள் பலவாயின.
    நான் தெளிவாகவே உள்ளேன் , தமிழர்களுக்கென்று எந்த ஒரு மதமும் இல்லை. மற்றவர்களைப் பற்றி அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  2. சகோ சார்வாகன்!

    ஒரு மார்க்கத்தை தழுவுவதால் தனது முந்தய மதத்தில் இருந்த தீணடாமையும் சாதிக் கொடுமையும் நீங்குவதாக ஒருவன் நினைத்து மாறினால் அது வரவேற்கப்பட வேண்டுமல்லவா! எங்காவது சென்று குறைந்த பட்சம் மனிதனாகவாவது வாழட்டுமே!

    உடன் நீங்கள் அதற்கு நாத்திகராக இருக்கலாம் என்பீர்கள். எவ்வளவுதான் நாத்திக வாதம் பேசினாலும் வீடுகள் சொந்தங்கள் என்று வரும்போது கடவுள் வழிபாட்டை தவிர்க்க முடியாது. நீங்கள் இந்து என்பதையும் மறுக்க முடியாது.

    மதம் மாறும் ஒரு சிலர் இந்த தலைமுறையில் சிறிது சிரமத்தை ஏற்றுக் கொண்டாலும் அவர்களின் வாரிசுகளின் வருங்காலம் சிறப்பாகவே இருக்கும். இதற்கு உதாரணமாக தமிழக முஸ்லிம்களை சொல்லலாம். கிறித்தவர்களை சொல்லலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிறித்தவத்திலும் சாதி புகுந்து விட்டது.

    ReplyDelete
  3. மதமும் மார்க்கமும் மனிதர்களுக்குத் தேவையா? மற்ற உயிரினங்கள் மதத்தின், மார்க்கத்தின் பின் செல்லவில்லையே.

    சில சுயநலம் பிடித்த கூட்டத்தின் கண்டுபிடிப்பே மதமும் மார்க்கமும்.

    எதுவுமே இல்லாமல் மனிதராக வாழமுடியாதா?

    ReplyDelete
  4. நண்பர் செல்வக் குமார்.
    நீங்கள் கூறுவது உண்மைதான்,இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி கிறித்தவ,இஸ்லாமிய,பார்சி அல்லாதவருக்கு இந்து சமூக சட்டங்கள் செல்லும் என கூறுகின்றன.பிறருக்கு தனியான் சமூக சட்டங்கள் உண்டு. இந்து மதம் பல மதங்களின் கலப்பு,தொகுப்பு என் கொள்ளலாம்.
    Article 25 (2)(b) of the Constitution stipulates that “the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jain or Buddhist religion”.1 The Hindu Marriage Act of 1955 goes in greater detail to define this “legal Hindu”, by stipulating in Section 2 that the Act applies:
    “(a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,
    “(b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and
    “(c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion”.

    தமிழர்கள் மத்மற்றவர்களாக இருந்தார்களா என்பது நல்ல கேள்வி,உலக வரலாற்றில் ஒவொரு சமூகமும் ஏதோ ஒரு முறையில் இயற்கை அல்லது தெய்வ வழிபாடு மேற்கொண்டார்கள் என்பதுதான் பொதுவான கருத்து.எதற்கும் கொஞ்சம் தேடி முடிவு செய்வோம்.

    இந்து மதம் பற்றி இன்னொரு சமயம் உரையாடுவோம்.பொதுவாகவே ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு ஒருவரை மாற்றும் சமூக காரணிகள் என்ன என்பதைப் பற்றியே விவாதிக்க விரும்புகிறேன்.
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  5. நண்பர் சுவனப்பிரியன்
    உங்களின் கருத்துப்படி
    தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளானார் அதிகம் இந்து மதத்தில் இருந்து கிறித்தவ,இஸ்லாமிய மதங்களுக்கு மாறியிருக்கின்றனர் என்பதே.

    தமிழ் இஸ்லாமியர்களில் மதம் மாறிய தலித்களின் எண்ணிக்கை குறைவாக்வே இருக்கும் என்பது என் கணிப்பு.தலித் மக்களுக்கு பெரும்பாலும் விவசாயம் செய்வதுதான் தொழில். வங்காளம் உள்ளிட்ட பல் இடங்களில் இஸ்லாமியர்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டு உள்ள போது இங்கு அப்ப்டி இல்லை.ஏன்? மதம் மாறினால் உடனே தொழில் மாறுவது ஒரு 100+ வருடங்களுக்கு முன் மிக கடினம்.90% இஸ்லாமியர்கள் குறைந்த‌ பட்சம் 200+ ஆண்டுகளுக்கு முன் மதம் மாறியவர்கள்.

    ம‌த மாற்ரத்தின் உண்மையான காரணிகளை அறிந்தால் மட்டுமே தவிர்(டு)க்க விரும்புவோர் ஏதாவது செய்ய இயலும்.
    இன்னும் நம் நாட்டில் இறைமறுப்பாளர்கள் ஒரு தனிபட்ட சமூகமாக் அடையாளம் காணப்படும் நிலை,சூழல் உருவாக் வில்லை.அவர்களும் தங்கள் மதம்,சாதி அடையாளம் சார்ந்தே அறியப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ReplyDelete
  6. நண்பர் இராவணன்
    நம் கருத்தும் இதுதான் எனினும் மதமாற்ரத்தின் காரணிகள்,தூண்டுகோல் என்ன என்பதை பற்றி மட்டும் விவாதிப்போம்.
    நன்றி

    ReplyDelete
  7. சகோ,
    மதம் முதலில் ஆன்மீக நோக்கத்தால் பலரால் தோற்றுவிக்கப்படாலும் பிறகு அரசியல், அதிகாரம் இவற்றை நோக்கி பயணிக்கிறது.
    இன்று உலகில் அதிகமாக பிரச்சாரத்தில் ஈடுபடும் இரண்டு மதங்களின் நோக்கமும் ஆன்ம விழிப்புணர்வு அல்ல...
    அரசியல், அதிகாரத்தை நோக்கிய பயணம் தான்.
    முடிந்தால் விளக்கமாக ஒரு பதிவிட முயல்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க சகோ புரட்சிமணி

    மத மாற்றம் என்பது அரசியல் அதிகாரத்தை நோக்கிய பயணம் என்பதை அருமையாக் சொனீங்க சகோ!!!!!!!!
    ஆயினும் இப்பதிவை நான் எழுதியன் நோக்கம் இம்மத பிரச்சாரத்தில் நம் குடும்பத்தினர் எவரேனும் கூட மாறும் வாய்ப்பு உள்ளதை எப்படி மேற்கொள்ளப் போகிறோம் என்பதையே கேட்கிறேன்.

    தான் மட்டும் மதம் மாறும் ஒருவர் குடும்பத்தை பிரிவது பல சிக்கல்களை அக்குடும்பத்தில் உருவாக்கும்.நன் அறிந்த ஒரு நண்பர் காதலுக்காக் மதம் மாறினார்.அவர் தாயின் ஈம சடங்கு மதம் அனுமதிக்காததால் அவரால் செய்ய இயலவில்லை.

    என் சொந்த அனுபவங்களில் எனக்கு ஒருவேளை ஏதேனும்,பயம்,விரக்தி,காதல் தோல்வி ஏற்பட்டு இருந்தால் அச்சமயத்தில் மத மாற்றக் குழுவினர் அன்பாக பேசி இருந்தால் ஒருவேளை செவி சாய்த்து இருப்பெனோ என்று கூட தோன்றுகிறது.எவரும் எப்போதும் அறிவிற்கு வேலை கொடுக்க முடியாது. மனரீதியான தாகுதல்களை எதிர்கொள்ள அதிக பலம் தேவை.
    நன்றி

    ReplyDelete
  9. comment in sakoo suvanappiriyan's blog

    வாழ்க வள்முடன் சகோ சுவனப்பிரியன்,
    உலகின் முதல் மனிதனக சில மத வேதங்களின் படி ஆதம் அறியப்படுகிறார்.புஹாரியில் உள்ள ஒரு ஹதித் ஆதம் 60முழ்ம்(90 அடி) உயரம் இருந்ததாக் கூறுகிறது.பைபிளில் நூஹ்(னோவா) கால்த்தில் இராட்சதர்கள் வாழ்ந்ததாக [ஆதியாகம் 6:4]கூறுகிறது.அந்த எலும்புக்கூடு அதனை நிரூபிக்கும் வகையில் த்யாரிக்கப்பட்ட காணொளி என்றே கூறலாம்.இவை அறிவியலின் படி ஆதாரமற்ற விடயம்.
    நீங்கள் குறிப்பிட்ட மலைக்குகை மக்கள் எபோது வாழ்ந்தார்கள் என விவரங்கள்,அங்கு கிடைத்த கல்வெட்டுகள் குறித்து விவரம் இருந்தால் பகிரலாம்.
    *************
    சரி பரிணம்த்திற்கு வருவோம்

    /. தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை./
    எங்கு சம்ர்ப்பிக்க பட வேண்டும் சகோ?.அறிவியலின் படி இதற்கு இடைப்பட்ட படிமங்கள் உண்டு.ஒரு விந்தையான் விடயம் எனில் திமிங்கலம் நிலத்தில் இருந்து நீருக்கு சென்ற உயிரினம்
    http://www.talkorigins.org/faqs/comdesc/section1.html#morphological_intermediates
    http://www-personal.umich.edu/~gingeric/PDFfiles/PDG413_Whaleevol.pdf

    இபோது அறிவியலில் இடைபட்ட உயிரின படிமங்களாக் ஏற்கப்பட்ட ஒன்றையாவது தவறு என நிரூபித்தால் நீங்கள் இருக்கும் இடமே வேறு சகோ!!!!!!!பல் பல்கலை கழகங்கள் உங்களை அழைத்து பல் மில்லியன் டாலர்கள் தந்து ஆய்வு மேற்கொள்ள அழைப்பார்கள்.
    உங்களுக்கு ஆய்வு செய்ய பிடிக்கவில்லை எனில் எனக்கு மட்டும் ஒரே ஒரு இடைப்பட்ட உயிரின படிமம் தவறு என்ற இரக்சியம் சொல்லுங்கள்.நான் பெரிய ஆளாகி விட்டு போகிறேன்.பரிணாமம் கிடக்குது வெங்காயம்!!!!!!!!!!.
    .ஆளுக்கு 50 -50

    Deal or No Deal!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. Transitional Fossils - Fish to Amphibians
    http://www.youtube.com/watch?v=uJQMq5ZZmv0&feature=related
    ************

    ReplyDelete
  11. 'அ' மதம், 'க' மதம் என்பதற்குப் பதில் மதங்களின் பெயர்களையே பயன் படுத்தியிருக்கலாமே. எதெது எப்டின்னு நமக்கெல்லாம் தெரியாதா?!அந்த //ஆளுக்கு 50 -50// என்னையும் சேர்த்துக்கங்களேன், ப்ளீஸ்!

    ReplyDelete
  12. //ஆயினும் இப்பதிவை நான் எழுதியன் நோக்கம் இம்மத பிரச்சாரத்தில் நம் குடும்பத்தினர் எவரேனும் கூட மாறும் வாய்ப்பு உள்ளதை எப்படி மேற்கொள்ளப் போகிறோம் என்பதையே கேட்கிறேன்.//

    சகோ, குடும்பத்தினரை மட்டுமல்ல உலகையே மதமாற்றம் அல்லது மதவெறி பிடிக்காமல் இருக்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்றுதான்....அது மதங்கள் மனிதனால் ஏற்ப்படுத்தப்பட்டது, இறைவேதம் மனிதனால் இயற்றப்பட்டது என்ற உண்மையை எடுத்து சொல்ல வேண்டும். இதை ஒருவன் புரிந்து கொண்டால் அவனுக்கு மத வெறி பிடிக்காது.

    ReplyDelete
  13. வாங்க தருமி அய்யா,வணக்கம் நலமா?

    மதங்களின் பெயரா முக்கியம் ?அவற்றின் செயல் அல்லவா முக்கியம்.இந்த 'அ' ,'க்' என்று குறிப்பிடுவதில் ஒரு இரகசியம்.மத்வாதிகள் பெயரைக் குறிப்பிட்டு செயலை விமர்சித்தால் அப்படி இல்லை என்பார்கள்.இப்போது மதவாதிகள் ஏன் என்மதத்தை குறிப்பிடுகிறாய் எனில் அந்த செயலை அவர்கள் உண்மையாக் ஏற்பதாக்த்தானே பொருள்?ஹி ஹி

    *********
    நம்ம சகோ சுவனன் ஒரு புதிய 90 அடி மனிதனின் படிமம்(எலும்புகூடா? ஏதோ ஒன்று) சான்றாக் முன் வைக்கிறார்.கண்டிப்பாக அனைவரும் கண்டு களியுங்கள்.
    இதைப் பற்றி நாம் முன்பு விவாதித்ததாக நினைக்கிறேன்.
    *************
    சரி நீங்களும் ஆய்வு செய்ய வார்ரீங்களா,பங்கு போட்டுக்க்க்லாம் ,நம்ம சுவனன் மதப்புத்தக்த்தில் சொன்னபடி சரியாக பங்கு பிரிப்பார்.
    அது எப்படின்னும் கேட்காதிர்ர்கள் அதுவும் இரகசியம்!!!!!!!!!!!
    *************
    அப்புறம் நம்ம் சகோ வவ்வாலுக்கு மட்டும் சொல்லிடாதீங்க அவரும் பங்கு கேட்பார்!!!!!!!!

    சரி இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து படிமங்களுமே தவறு என்றே நம்ம சகோக்கள் கூறுவதால் அனைவ்ருக்குமே லம்ப்ஃபா கிடைக்கும்!!!!!!!!!
    *****************

    ReplyDelete
  14. "Skeleton of Giant" Is Internet Photo Hoax
    James Owen
    for National Geographic News
    December 14, 2007
    The National Geographic Society has not discovered ancient giant humans, despite rampant reports and pictures.

    The hoax began with a doctored photo and later found a receptive online audience—thanks perhaps to the image's unintended religious connotations.


    Enlarge Photo
    Printer Friendly
    Email to a Friend

    What's This? SHARE
    Digg
    StumbleUpon
    Reddit
    RELATED
    National Geographic Photography: Wallpapers and More
    Asian "Atlantis" Shows Strange Structure (September 19, 2007)
    Pyramid in Bosnia—Huge Hoax or Colossal Find? (May 12, 2006)
    A digitally altered photograph created in 2002 shows a reclining giant surrounded by a wooden platform—with a shovel-wielding archaeologist thrown in for scale.

    (Photo Gallery: "Giant Skeletons" Fuel Web Hoax)

    By 2004 the "discovery" was being blogged and emailed all over the world—"Giant Skeleton Unearthed!"—and it's been enjoying a revival in 2007.

    The photo fakery might be obvious to most people. But the tall tale refuses to lie down even five years later, if a continuing flow of emails to National Geographic News are any indication. (The National Geographic Society owns National Geographic News.)

    The messages come from around the globe—Portugal, India, El Salvador, Malaysia, Africa, the Dominican Republic, Greece, Egypt, South Africa, Kenya. But they all ask the same question: Is it true?

    Perpetuating the Myth

    Helping to fuel the story's recent resurgence are a smattering of media outlets that have reported the find as fact.

    An often cited March 2007 article in India's Hindu Voice monthly, for example, claimed that a National Geographic Society team, in collaboration with the Indian Army, had dug up a giant human skeleton in India.

    "Recent exploration activity in the northern region of India uncovered a skeletal remains of a human of phenomenal size," the report read.

    The story went on to say the discovery was made by a "National Geographic Team (India Division) with support from the Indian Army since the area comes under jurisdiction of the Army."
    ***********
    http://news.nationalgeographic.com/news/2007/12/071214-giant-skeleton.html

    ReplyDelete
  15. சகோ சார்வாகனுக்கு இந்த பதிவுக்காக நன்றி.
    நண்பர் புரட்சிமணி சொன்னதுபோல் மதமாற்றத்தின் நோக்கம் அரசியல் அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமே. அரபுக்களினால் மதம் மாற்றபட்ட சோமாலியர்ககளின் இன்றைய நிலை மேற்குலக உதவி நிறுவனத்திடம் பெண்கள் கையேந்தி நிற்க்கும் நிலையிலும் பர்தா மற்ற கையால் மூடிகிட்டு நிற்க்க வேண்டிய துர்பாக்கியம்.அதுவே மதவெறியர்கள் பூரிப்படைய வேவையானது.
    வேண்டாம் இந்த கொடுமை. வேண்டாம் மத மாற்றம்.
    வேண்டாம் சாதி கொடுமைகள்.

    ReplyDelete
  16. மதவாதிகளுக்கு எதிரான பதிவுகள் தொடர்ந்து எழுதப்படவேண்டும், நல் முயற்ச்சி.

    //ஒரு மார்க்கத்தை தழுவுவதால் தனது முந்தய மதத்தில் இருந்த தீணடாமையும் சாதிக் கொடுமையும் நீங்குவதாக ஒருவன் நினைத்து மாறினால் அது வரவேற்கப்பட வேண்டுமல்லவா! எங்காவது சென்று குறைந்த பட்சம் மனிதனாகவாவது வாழட்டுமே!//

    இமாம் அலிங்கிறவன் தலித்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினான். என்ன ஆச்சு ? தீவிரவாதியாகி சுட்டுக் கொன்னாங்க, அவனோடு இன்னும் சிலரும் செத்தார்கள், மாறாமல் இருந்திருந்தால் உயிராவது மிஞ்சி இருக்கும்

    ReplyDelete
  17. வாங்க சகோ குயிக்ஃபாக்ஸ்,சகோ கோவி
    மத மாற்றத்தினால் நிகழும் பல் நிகழ்வுகள் குடும்ப,சமூக அள்வில பல விரும்பத்தகாதவை என்பதை வலியுறுத்திய கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  18. thamizhargalukku eyarkkaiyai thavira veroru samayamum illai
    nandri
    surendran

    ReplyDelete
  19. ஒரு மதம் பிடித்து (வயிறு வலி சரியாக ஆனதால் இருக்கலாம் (ரஹ்மான்); சாதிப் பிரச்சனையாக இருக்கலாம்; காசு கிடைக்கலாம்; கல்யாணம் ஆகலாம். சரி ஏதோ ஒரு காரணத்திற்காக மதம் மாறலாம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் ஏதோ ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதம் மாறிய பின் 'இந்த மதத்தை விட்டு இனி விலகினால் உன் உயிர் உனக்கில்லை' எனற 'பெரும் தத்துவம்' மட்டும் எப்படி சரி என்பது மட்டும் புரியவில்லை. 'அ' விலிருந்து 'ஆ'விற்கு வா என்பது சரின்னா, 'ஆ' விலிருந்து 'இ'க்குப் போவது எப்படி தப்பாகும்?லாஜிக் ரொம்ப உதைக்குது!

    ReplyDelete
  20. மனிதாபிமானத்துடன் வாழ முனைந்தால், மதச் சார்பு தேவையில்லை என்பது புரிய ஆரம்பிக்கும்.

    தங்கள் பெயர் என்னை ஈர்த்தது; கருத்துகளும்தான்.

    மதம் பற்றிய கருத்துகளுக்கான தேவை இன்னும் இருக்கிறது. எழுதுங்கள் சார்வாகன்.

    ReplyDelete
  21. சகோ சார்வாகன்,
    நீங்கள் பெற்ற அனுபவங்கள், பொதுவாகவே 90 களில் பிற்பகுதி வரை படித்த மாணவர்களுக்கு இருக்கும். ஏன்னென்றால் கல்வி நிலையங்கள் ஒரு கூறிப்பிட்ட மதத்தினர் மற்றுமே பெரும்பான்மையாக நடத்திக்கொண்டு வந்தனர். ஆனால் அதன் பிறகு மெட்ரிக் பள்ளிகள் வளர்ச்சியாலும், குடிசை தொழில் இஞ்சினியர் கல்லூரி வெடிப்பாலும், மாறியிருக்கும். உங்கள் அனுபவங்கள் எனக்கும் ஏறக்குறைய ஓத்துப் போகின்றது.

    மதத்தை ஒரு உளவியல் சம்பந்தப்பட்டது, சமூகச் சூழல் சம்பந்தப்பட்டது என்று நோக்கினால்....

    1. உடல், மருத்துவ, கடன், குடும்ப மற்றும் இன்னும் பல தனிநபர் பிரச்சனையால் மன உளைச்சலில் கஷ்டப்பட்டேன். ”அ” பற்றி அறிந்தேன், வேண்டினேன். கஷ்டம் தீர்ந்தது அதனால் மதம் மாறினேன் என்பது.

    இதில் பிரச்சனைகள் எப்போதும் செயல்களால் ஒரு முடிவிற்கு வந்துவிடும். அந்த கடவுளால் தான் முடிவிற்கு வந்தது என்பது சரியல்ல. உலகத்தில் இருக்கும் பல மதத்தினர் தங்கள் கடவுல்களிடம் வேண்டி பிரச்சனைகள் தீர்க்கின்றன அதனால் அனைத்து கடவுள்களும் உண்மையா. இப்படி பார்த்தால் நித்தியானந்தாவும் உண்மையான கடவுள் தான்.



    2. இன்னொன்று சமுதாய் கொடுமைகளிலிருந்து மாறினேன் என்பது.
    ஒரு தாழ்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர் மதம் மாறிவிட்டால் அவர் சார்ந்த சமுதாய கொடுமையிலிருந்து எப்படி விடுப்படுவார் என்று தெரியவில்லை. அவர் முன்னால் இருந்த மதத்தில் கொடுமையில்லாமிலிருந்து விடுப்பட்டு எதை எதிர்பார்க்கிறாரோ அது மதம் மாறினால் கிடைப்பத்தில்லை வேறு ஏதோ கிடைக்கிறது. இந்த மதமாற்றம் மத நம்பிக்கைக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரி மாறுபவர்கள்தான் மத அடிப்படை வாதி ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    3. மதத்தில் சகோதரர்த்துவம் உண்டாக்குவதற்கு வாய்ப்புகள் இல்லாமலிருந்து மற்ற மதத்தில் கூட்டமாக “சகோதரர்” “சகோதரரி” (brotherhood) மனோரீதியாக மதம் மாற தூண்டும்.

    4. கடைசியாக் காந்தி தாத்தா சிரிப்பு காகிததற்க்காக மதம் மாறுபவர்கள் இருக்கிறார்கள்.

    5. perfection, utopia நோக்கி மனிதன் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறான் அதை மதம் தருகிறது என்றால் அந்த மதத்தை நோக்கியும் ஓடுவான்.

    இது தனி பதிவிற்கு உண்டான சப்ஜெக்ட்.

    திட்டும் அனானிகள் யாரையும் காணொம்.
    பதிவிற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  22. வாங்க தருமி அய்யா
    'அ' நிலையில் ல் இருந்து'ஆ' நிலை அடையும் அனைத்து விடயங்களும் எதிராக 'ஆ'வின் இருந்து 'அ'அடைய வேண்டும் என்று கட்டாயமா என சகோக்கள் கேட்பார்கள்.எ.கா காலம் செலவிட்டு பொருள் சம்பாதிக்கிறோம்.பொருள் செல்விட்டு இழந்த காலத்தை பெற முடியுமா?
    2+2=4 மட்டுமே.சரியான் மார்க்கம் வந்தவர் எப்படி தவறான மார்க்கம் செல்வது சரியாகும்?. ஆகவே நீங்கள் கூறுவது தவறு.எப்படி நம் தாவா?.சக்வாசம் சரியில்லையே
    *********
    வாங்க பரம சிவம் சார்
    ஏதோ அறிந்தவரை கொஞ்சம் எழுதுகிறோம்.வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி
    **********
    @நரேன்
    வரவர தெரிவுக்கும் கருத்துகள்,சான்றுகள் மெருகேறி வருவது கண்கூடு.இதற்கு அதிக நேரம் செலவிட்டால் மட்டுமே சாத்தியம்.உங்கள் கருத்துகள் அனைத்தும் என் அனுபவமே.
    ஒருவரும் நம்கூட சண்டைக்கு கூட அனானியாக கூட வரமாட்டேன் என்கிறார்கள்,எதிர்பதிவாவது போடுவார்கள் என்றால் அதுவும் இல்லை என்ன செய்வது?
    நன்றி

    ReplyDelete
  23. மதம் என்பது வாழும் முறை. ஒரு குழுவுக்கான சட்டதிட்டங்களும் சமூக அமைப்புகளும், அடையாளமும் தான் மதம் என்பது. ஒவ்வொரு மதத்திற்கான உடை, இருப்பிடம்,மண்,சாப்பாடு, உறவுமுறை,தொழில் என்று காலையில் எழுந்ததில் இருந்து படுக்கும் வரை அத்தனையிலும் மதம் உள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள். மதம் என்பது ஜீனில் கலந்த விஷயம். அதில் கடவுள் என்பது மிகச்சிறிய பகுதிதான்.இத்தனையிலும் சமரசம் செய்து கொண்டு மதம் மாறுகிறவன் ஒரு சமூக விரோதி.அவன் எதையும் செய்யத்துணிந்தவன் என்று உணர்த்துகிறான்.

    ReplyDelete
  24. சகோ.சார்வாகன்,

    நல்லப்பதிவு, மதம் தேவை இல்லை, மதமில்லாத மதம் என்று கூட பதிவு செய்யலாம், ஆனால் இந்தியாவில் நாத்திகம் பேசியவர்கள் அரசியலுக்காக என்பதால் அவர்கள் பேச ஒரு மேடை கிடைத்தால் போதும் என்று திருப்தி பட்டுக்கொண்டார்கள்.

    ஹி..ஹி ஏற்கனவே நான் மண்வெட்டி,கடப்பாரை எல்லாம் எடுத்துவச்சுட்டேன் நானும் ஒரு படிமத்தை கண்டுப்பிடிச்சு பேர் ,பணம் எல்லாம் சம்பாதிக்காம விட மாட்டேன் :-))

    ReplyDelete
  25. சகோ.சார்வாகன்,

    நல்லப்பதிவு, மதம் தேவை இல்லை, மதமில்லாத மதம் என்று கூட பதிவு செய்யலாம், ஆனால் இந்தியாவில் நாத்திகம் பேசியவர்கள் அரசியலுக்காக என்பதால் அவர்கள் பேச ஒரு மேடை கிடைத்தால் போதும் என்று திருப்தி பட்டுக்கொண்டார்கள்.

    ஹி..ஹி ஏற்கனவே நான் மண்வெட்டி,கடப்பாரை எல்லாம் எடுத்துவச்சுட்டேன் நானும் ஒரு படிமத்தை கண்டுப்பிடிச்சு பேர் ,பணம் எல்லாம் சம்பாதிக்காம விட மாட்டேன் :-))

    ReplyDelete
  26. வாங்க ஜோதிடம்(பெயர் ரொம்ப நீளம் ஆக்வே சுருக்கமாக்)
    கருத்துக்கு நன்றி
    **************
    சகோ வவ்வால்
    நீங்களும் கிளம்ம்பிட்டீங்களா,சரியான(த்வறாக நிரூபிக்கப்ப்ட்ட) இடைப்ப்ட்ட படிமத்தை கண்டுபிடிப்பவருக்கு 100 பொற்காசுகள் வழங்குவதாக் பாண்டிய மன்னன் சபையில் அறிவித்து உள்ளார்கள்.மதுரை தருமி அய்யாவுக்கு கிடைக்க திருவிளையாடல் நடத்தி சொக்கன் உதவுவாரா!!!!!!!!!!!!!
    எனக்கில்லை! எனக்கில்லை! எனக்கில்லை! எனக்கில்லை! எனக்கில்லை! எனக்கில்லை! எனக்கில்லை!

    ReplyDelete
  27. // மத மாற்றம் என்பது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும்.
    மத மாற்ற‌ம் தவிர்க்க என்னைக் கேட்டால் அனைவருமே அனைத்து மத புத்தகங்களையும் இமதவாதிகளின் பதிவுகளையும் படிப்பதுதான்.ஆன்டிபயாட்டிக் மாதிரி சரியாக எதிர்வினை புரியும். குழம்பி தெளிவு பெற்று விடுவோம்.//

    சகோ சார்வாகன் சொன்னது மிகவும் உண்மை.
    மத புத்தகங்களை படிப்பது என்பது சரியான ஒரு boring இருக்கும். (என்னை பொறுத்தவரை) மற்றது நேரமும் பொறுமையும் வேண்டும். கோவை கண்ணண் எழுதிய இந்துத் தீவு என்ற சுப்பர் சிறந்த பதிவையே 4 வரை தான் நான் படிச்சிருக்கேன் மிகுதி படிக்க நேரமில்லை. ஆகவே குறைந்தது மதவாதிகளின் பதிவுகளை அவசியம் படியுங்கள். அப்போ விழுப்புணர்வு பெற முடியும் மதவாதிகளின் பதிவுகளை படித்து அதன் பின் தெளிவடைந்தவர்கள் சிலரை எனக்கு தெரியும்.

    சகோ நான் நண்பர் பதிவிலிட்ட பின்னோட்டம் இது-

    ReplyDelete
  28. வாங்க‌ சகோ குயிக் ஃபாக்ஸ்
    மத்வாதிகள் சான்றுகள்,பரிணாம் மறுப்பு என்று கூறும் எதையும் மறு பரிசீலனை செய்தே ஆகவேண்டும்.பெரும்பாலும் உண்மையாக் இருக்காது என்பது என் அனுபவம்.அப்ப்டி எதுவும் கண்டால் நம்க்கு தெரியப் படுத்துங்கள்.
    நன்றி சகோ

    ReplyDelete
  29. கல்லூரிக்கால அனுபவங்கள் சிரிப்பை வரவழைத்தன.எனக்கும் அது மாதிரியான அனுபவங்கள் என்ற போதிலும் மாற்றாக அறை நண்ப்ர்கள் என்னைக் கண்டு ஓடியது இப்பொழுது நினைத்தால் சிரிப்பை தருகிறது. இத்தனைக்கும் நான் அ கா பற்றியோ வாய் திறக்கவில்லை.காரணம் நீங்கள் பதிவில் சொல்லும் கருத்துக்களை அப்பொழுது சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தேன்.இப்பொழுது பரிணாமக் கோட்பாடுகள்,மதங்கள்,கலாச்சாரங்கள் என்று கொஞ்சம் வளர்ச்சி மாற்றமே.

    பின்னூட்டத்தின் இடையே முந்தைய பதிவில் மதம் சார்ந்த உங்கள் பின்னூட்டத்தை தேடும் போதே டேவிட் ஆட்டன்பரோ பற்றி சொல்லியிருந்ததை கண்டேன்.நன்றி.மீண்டுமொரு முறை காண்பேன்.

    உயிரின படிமங்களுக்கு மெக்னாஸ் கோல்ட் மாதிரி ஆளாளுக்கு போட்டி போடுறீங்களே!50-50 துவங்கி தருமி அய்யாவும் உள்ளே நுழைய நீங்க வவ்வாலுக்கும் பங்கு சொல்ல இனி நானெல்லாம் எங்கே நுழைவது:) நாலு பேரே பிரித்துக்கொள்ளுங்கள்.கூடவே உயிரினப் படிமங்களின் வளர்ச்சியில் கொரில்லா குரங்கிலிருந்து மனிதன் நடக்கத் துவங்கியதிலேயே உயிரினப் படிமங்களின் தொடர்பு அறுபட்டிருப்பதாயும் அதுக்கே பரிசு தருவதாகவும் கேள்விப் பட்டேன்.

    அ,க ஜீரணித்துக்கொள்ளவும்,எளிதான இரண்டு டாக்குமெண்டரி பாடங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு பாடமும் 6 மெகா சீரியலாக மொத்தம் 12 சீரியல்கள்.அதுவே முழுதான ஒன்றல்ல,மாற்றுக் கருத்துக்கள் வைப்பதற்கும் நிறைய உள்ளது என்றாலும் மொத்த மேக்ரோ பார்வையில் புரிந்து கொள்வது அவசியம்.

    அவை மைக்கேல் வுட் டாக்குமெண்டரி வரலாற்றாளர் சொல்லும்

    The Cradle of Civilization மற்றும்
    The True India

    புத்தக வடிவிலும்,டி.வி.டி யாகவும் கிடைக்கிறது.

    தளம்: pbs.org

    ReplyDelete