நண்பர்களே
இன்னொரு நண்பரும் விவாதத்திற்கு வந்து சில கருத்துகளை முன் வைக்கிறார். ஆகவே கேள்விகளை அளித்தவருக்கு நம் நன்றிகள்.இன்னும் பல் கேள்விகளை கேட்டு தமிழ் கூறும் நல்லுலகு பரிணாம் அறிவு பெற உதவ வேண்டுகிறோம்.
பதில் அளிக்க அவர் சில கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார்.
1.படிம வரலாறு பற்றி விவாதம் வேண்டாம்.
//பரிணாமம் குறித்த விவாதங்களில் படிம ஆதாரங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால் பரிணாமம் எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. முதலில் படிம ஆதாரங்கள் மூலமாக பரிணாமத்தை நிரூபிக்க முடியுமா ?//
படிம ஆதாரங்கள் மூலம் பூமியின் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்துள்ள்ன என்பதை அறிய முடிகிறது.பல உயிரினங்கள் அழிந்ததும் அவற்றில் இருந்து சிறிது மாறுபட்ட உயிரினங்கள் அடுத்த கால்கட்டத்தில் வாழ்ந்ததும் அறிய முடிகிறது.இது அறிவியலில் சென்ற கால்கட்ட உயிரினங்கள் சி(ப)ல இயற்கைத்தேவில் வெற்றி பெற்றவை அடுத்த கால் கட்ட விலங்குளாக மாறியுள்ளன என்ற டார்வினின் கொள்கையாக் ஏற்கப்பட்டுள்ளது.ஆகவே படிம வரலாறு பரிணாம்த்திற்கு ஆதாரம் அல்ல என்ற கருத்து அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல.
படிம வரலாறை ஏன் ஆதாரமாக ஏற்க முடியாது என்று இன்னும் கொஞ்சம் தெளிவாக கூற முடியுமா?.
இதனை கூறும் அறிவியலாளர்கள், அவர்களின் கருத்துகள் அடங்கிய சுட்டிகள் தர முடியுமா?.
இது உங்கள் சொந்தக் கருத்து எனில் அதை கொள்ள உங்களுக்கு இருக்கும் உரிமையை ஆதரிக்கிறேன்.
படிம வரலாறு பரிணாம்த்திற்கு ஆதரவாக இருப்பதால் இப்படி கூறுகிறார் என எடுக்க்லாமா அல்லது குறைந்த பட்சம் எதிராக இல்லை என்பதை ஏற்பதாக்வே இவரின் கருத்து விள்ங்க முடியும்.படிமங்கள் மூலம் பரிணாமம் தவறு என்ற மத விஜ்ஜானிகளின் விமர்சன பதிவுகள் அர்த்தமற்றவை என்பதை கூறியதற்கு நன்றி.
******************
2.பரிணாம் செய்லாக்கம் [இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறுமாற்றங்கள்] எப்படி நடக்கிறது என சான்றுகள் மூலம் விள்க்க வேண்டும்.
////முடிவாக "இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறு மாற்றங்கள் " மூலம் பரிணாமம் எவ்வாறு நிகழ்கிறது என்று விளக்கவும்//
ஒரு உயிரின இனவிருத்தியின் போது நிகழும் பிரதி எடுப்பின் சிறு மாற்றங்கள் [தவறுகள்!] தலைமுறை தலைமுறையாக தொடரும் போது புதிய உயிரினமாக பரிணமிக்கிறது.
இதில் இயற்கை சூழலுக்கு உதவும் மாற்றங்கள் மட்டும் தப்புகின்றன.. முன்னேற்ற மாற்றங்கள் கொண்ட உயிரினங்கள் பலுகி பெருகிறது.உதவாதவை அழிகின்றன. இதுதான் பரிணாமம் எப்படி நடகிறதென்ற கேள்விக்கு விடை. மெலே படம் பார்க்க்லாம்!!!!!!!!!!!.
3. காணொளி விளக்கம் கூடாது.
//தயவுசெய்து யுடியூப் வீடியோக்கள் வேண்டாம். authoritative sourcesகளிலிருந்து கட்டுரை வடிவில் இருந்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும்..//
காணொளியோடு கட்டுரையும் அளிக்கப்படும்.காணொளியை விரும்பாத நண்பர்கள் தவிர்க்கலாம்.நாம் எதிர்பாளர்களுக்காக பதிவு எழுதவில்லை.
Mechanisms Of Evolution: How Does Variety Arise?[சீரற்ற சிறு மாற்றங்கள் பல்வேறு வகையான உயிரினங்ளை உருவாக்குகின்றன]
Mechanisms Of Evolution: How Does Variety Give Rise To New Species?[இயற்கைத்தேர்வு எவ்வாறு பல வகை உயிரின தொகுதிகளில் இருந்து புதிய உயிரினங்களை உருவாக்குகிறது]
4. நிகழும் சிறு மாற்றங்கள் முன்னேற்றங்களை தோற்றுவிக்காது
//.மருத்துவ உலகில் ஆயிரக்கணக்கான mutations பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த mutations எதுவும் ஒரு புதிய உறுப்பையோ , புதிய செயல்பாட்டையோ உருவாக்கவில்லை. மாறாக இந்த mutations குறைபாடுள்ள குழந்தைகளையும், புற்று நோய் மற்றும் பலவிதமான நோய்களையே உருவாக்குகின்றன. //
இக்கேள்வியில் ஒரு தந்திரம் இருக்கிறது.சிறுமாற்றம் எப்போதும் முன்னேற்றம் தரவே தராது என்று கூறாமல் அறிந்தவரை என்று கூறுகிறார்.
மனிதனில் ஏற்பட்ட எய்ட்ஸ் எதிர்ப்பு சிறுமாற்றம் இருக்கு நண்பா!!!!!!!
சில ஐரோப்பிய ,மேற்காசிய மனிதர்களில் நிகழ்ந்த ஒரு மாற்றம் அவர்களை எய்ட்ஸ் நோய்க்கு எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக் மாற்றியுள்ளது என்ற அறிவியல் சஞ்சிகை கட்டுரை.
Geographic Spread of an AIDS-Resistant Mutation
The discovery in the 1990s of a gene variant that thwarts HIV infection triggered development of a promising new class of medications. The gene normally encodes a protein receptor, called CCR5, that sits on the surface of white blood cells. HIV gains entry to these cells through CCR5. The variant gene, or allele, contains a mutation—called Δ32, because 32 base pairs are deleted—that produces truncated CCR5 receptors that are useless to the virus, conferring resistance to individuals with both copies of the mutation, and delaying disease progression to those with one copy. The Δ32 mutation also raised interesting questions for evolutionary biologists.
About 10% of Europeans and inhabitants of western Asia carry the mutation, which researchers think evolved at least 700 years ago—yet HIV emerged only about 50 years ago. According to population genetics theory, for a mutation to be neutral, or confer no selective advantage, it would have to be much older to occur at such a high frequency in the population. This inconsistency raised the possibility that the mutation spread because it provided an advantage against some other selective factor, now thought to be smallpox.
பதில் சொல்லியாயிற்று என்றாலும் இன்னும் விளக்கங்கள்.
டி.என் ஏ ஆய்வுரீதியாக் சுமார் 10+ வருடங்களாக்வே கண்காணிக்கப் படுகின்றன இதன் மூலமே மனிதக் குரங்கு,மனிதனின் டி.என்.ஏ 98% பொருந்துவது அறியப்பட்டது.இதனால் இரண்டுக்கும் ஒரே முன்னோர் இருக்க முடியுமா என்பார் நண்பர்.முதலில் இரு வேறு உயிரினங்கள் என்றால் அறிவியலின் படி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு உயிரினமும் தன்னந்தனியாக் உருவாவது இல்லை.. அவை பெரும்பாலும் குழுக்களாக்வே பரிணாமத்தின் படி உருவாகின்றன.
ஒரு குழு உயிரினங்களுக்கு ஒரு முன்னோர் என்பது சிறு பரிமாணம்[micro evolution] example dogs evolution..
எந்த இரு உயிரினங்கள் இணைந்து [இனவிருத்தி செய்ய இயலும்] இன்னொரு உயிர்னத்தை உருவாக்க முடியாதோ அவைதாம். வெவ்வேறு உயிரினங்கள்.
எ.கா குதிரை கழுதை இணைந்து கோவேறு கழுதை[mule] உருவாகும்.ஆனால் கோவேறு கழுதை மலடு.ஆகவே கழுதை,குதிரை வெவ்வேறு உயிரினம்.
ஆனால் சிங்கம்,புலி இணைந்து லைஜர் என்னும் புதிய விலங்கை உருவாக்க முடியும் ஏன் எனில் இரண்டுக்கும் குரோமோசோம் எண்னிக்கை ஒன்று.
By classification, they are separate species, Panthera leo and Panthera tigris, respectively. However, according to the biological definition of species, they are the same because the result of crossbreeding between them is fertile.

இது வெவ்வேறு உயிரினம் என்பதன் விள்க்கமாக்வே அளிக்கிறேனே தவிர பரிணாமம் இப்படி நடக்கிறது என்று குழப்ப வேண்டாம்.
இரு உயிரினங்களின் குரோமோசோம் எண்ணிக்கை வேறுபட்டால் அவற்றால் இனவிருத்தி செய்யக்கூடிய இன்னொரு விலங்கை உருவாக்க முடியாது.
என்ன சிம்பன்சிக்கு 48 குரோமோ சோம்,மனிதனுக்கு 46. இபோது சீனாவில் ஒரு மனிதனுக்கு 44 குரோமோ சோம் என கண்டறிந்து இருக்கிறார்கள்,இது நடந்தது பிரதியெடுப்பின் போது நிகழ்ந்த மாற்றமே.44குரோமோசோம் மனிதர் 46 குரோமோசோம் மனிதர்களோடு இனவிருத்தி செய்ய முடியாததால் அவர் வேறு உயிரினம் சரியா!!!!!!!!!!!.ஏப்படி 46 குரோமொசோம் மனிதனில் இருந்து 44 குரோமோசோம் மனிதன் தோன்ற முடிந்ததோ அதே போல் 48 குரோமோசோம் சிம்பன்சி[போன்ற உயிரினத்திடம்]யிடம் இருந்து 46 குரோமோசோம் மனிதன் தோன்றியிருக்க முடியாதா?
ஒருவேளை உலகின் மக்கள் தொகை குறைவாக் இருந்தால் அதில் 44 குரோமோசோம் மனிதர்கள் ஒரு 1% இருந்து அவர்களுக்கு ஏதேனும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.அந்த நோய் 46 குரொமோசோம் மனிதர்களை பலி கொண்டால் கால்ப்போக்கில்,44 குரோமோசோம் மனிதர்கள் மட்டுமே மிஞ்சுவர்.நாம் படிமம் மட்டுமே!.
The 44 Chromosome Man And What He Reveals About Our Genetic Past
http://www.thetech.org/genetics/news.php?id=124
அப்போதும் ஒரு மதவா(வியா)தி அது எப்படி 46 குரோமோசோம் ஹோமோ சேஃபியனில் இருந்து 44 குரோமோசோம் மனிதன் வர முடியும்,அது அப்போது வாழ்ந்தது என்று மட்டுமே கூறலாம் என்று வழக்கம் போல் காமெடி ப்ண்ணுவார் என்பதற்கு மட்டும் நான் உத்த்ரவாதம் அளிக்கிறேன்.

//5.இந்த mutations மூலமாக பரிணாமம் நிகழ்கிறது என்பதற்கு ஆதாரம் என்ன ? Mutations மூலமாக ஒரு புதிய செயல்பாடுள்ள உறுப்பு (functional organ) உருவானதற்கான ஒரு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்//.
புதிய மனிதன் ஆதாரமே கொடுத்தாயிற்று.
எதற்கும் இங்கும் விரும்புபவர்கள் பார்க்கலாம் சிறுமாற்ற ஆய்வுக்கூடம்.இதில் பலவித் ஆய்வுகளை fruit fly மீது நடத்துகிறார்கள்
http://bioweb.wku.edu/courses/biol114/vfly1.asp
6.படைப்புக்கு ப டைப்பவன் அவசியம்.எதற்கும் இங்கும் விரும்புபவர்கள் பார்க்கலாம் சிறுமாற்ற ஆய்வுக்கூடம்.இதில் பலவித் ஆய்வுகளை fruit fly மீது நடத்துகிறார்கள்
http://bioweb.wku.edu/courses/biol114/vfly1.asp
//.உதாரணமாக ஒரு செல்போன் தொழிற்சாலையில் ஒரு தொழில்நுட்ப கோளாறினால் புதிய மாடல் செல்போன் உருவானது என்று கூறினால் நம்புவீர்களா ? கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த தொழிற்சாலை இயங்கி, பல்லாயிரக்கணக்கான கோளாறுகள் சேர்ந்தால், உயர்தொழில்நுட்ப மாடல்கள் உருவாகும் என்று சொல்வீர்களா என்று தெரியவில்லை?//
இது நகைச்சுவை கேள்வி என்பதால் ஹி ஹி
பரிணாமம் உயிரினங்களூக்கு மட்டும்தான்,ஆற்றலை பயன்படுத்துவதும, இனவிருத்தி செய்யக்கூடியவையே உயிர்கள் என்ப்படுகிறது. அப்படி என்றாலும் செல்ஃபோன்களுக்கு முன்னோர் கம்பி தொலைபேசி,அதற்கும் முன்னால் மிகவும் எளிய அமைப்பாக்வே கிரகாம் பெல் உருவாக்கினார்.அதன் அடிப்படை ஒலி ஆற்றல மின்சாரமாக் மாற்ற முடியும் என்பதுதான்.மனிதனின் படைப்பு கூட பரிணமிக்கிறது.எதுவும் உடனே தோன்ற முடியாது.
தொலைபேசியை படைத்தவன் அதற்கு இப்படி எனக்கு மட்டும் பயன்[ப்]படு ,இப்படி செய்,செய்யாதே உடைந்து பயனற்று போனபின் காயலான் கடைக்கு வந்தால் இன்னும் சிறப்பானதாக்கி_______,________ connection!!!!! எல்லாம் கொடுப்பேன் என்று கூறுவான் என்றால் எவ்வளவு காமெடியாக் இருக்குமோ அதுபோல்தான் இக்கேள்வியும்!!!!!!!!!!!

இதே போன்ற கருத்துகளை கூறும் ஒரு மதவாத தளத்தின் கட்டுரை.
நண்பர் சாதிக்கும் இதே போன்ற கருத்துகளை வெளியிட்டார்.அதற்காக இத்தளத்தில் இருந்து கூறுகிறார் என்று கூறமுடியுமா?.அல்லது இக்கருத்துகள் அனைத்தும் அவ்ருக்கு பிறப்பில் இருந்தே[அல்லது அதற்கும் முன்!] தெரியும் என்று கூற முடியுமா?..அறிந்த பல கருத்துகளை தொகுத்து மட்டுமே ஒரு கருத்தை கொஞ்சம் மாற்றத்தோடு ஒருவர் உருவாக்க முடியும்.
அது போல்தான் ஏற்கென்வே இருக்கும் உயிரினங்களில் இருந்து புதிய இனங்கள் உருவாகின்றன.ஒரு வேளை தொலைபேசிகள் குட்டி போடும் என்றால் அவையும் பரிணமித்து இருக்கும்.
பாத்திரங்கள் குட்டி போட்ட முல்லா நசுருத்தீன் கதை ஞாபகம் வருகிறது.யாருக்கேனும் கதை வேண்டுமெனில் பின்னூட்டத்தில் கூறுகிறேன்.
கேளுங்கள் (விடைகள்) கொடுக்கப்படும்
தட்டுங்கள் (புதிர்கள்)திறக்கப்படும்
தேடுங்கள் (இலக்கு) கிடைக்குமென்போம்!!!!!!!!!!!!!
................................
................................
நன்றி
Are Mutations Harmful?
ReplyDeleteby Richard Harter
Copyright © 1999-2003
http://www.talkorigins.org/faqs/mutations.html
நண்பரே கலக்குறீங்க போங்க,
ReplyDeleteபரினாமத்தை பற்றிய தங்கள் தமிழ் வழி விளக்கங்கள் அருமையாக உள்ளன.
உண்மையாகவே பரிணாமக் கோட்பாடை சரியாய் கொண்டு செல்வதூடாக மக்களின் மூட பழக்க வழக்கங்களை
அழித்து விடலாம் என்றே நான் எண்ணுகிறேன் சற்று காலம் தாழ்ந்தாலும்.
நன்றி.
பதிவின் முதலில் போட்ட அந்த “கிராபிக்ஸ்” படம் எளிதாக விளக்கியது. வர வர ப்திவுகளில் அந்த படங்களே “ஹைலைட்”டாக இருக்கின்றன.
ReplyDeleteஅந்த முல்லா கதையை நான் அறிந்திருக்க வில்லை சொன்னால் தூங்கப் போவேன்.
வாங்க நண்பர் செல்வக் குமார்,
ReplyDeleteஇதுவரை அறிவியலில் உள்ள சான்றுகள் பரிணாம் கொள்கையை முற்றும் முழுதாக் ஏற்பதற்கு போதுமானவை.மூலக்கூறு அறிவியலின் அடிப்படையில் இன்னும் சில மேம்படுத்தல்கள் ,சான்றுகள் வரும் எனவும் எதிர்பார்க்க்லாம்.
பரிணாமம் விளங்குவதற்கு சிறிது கடினம்தன்,அதிலும் இந்த இயற்கைத் தேர்வின் செயல்கள், இயற்கைக்கு மேம்பட்ட சக்தி(களி)யின் செயல் போல் எளிதில் காட்டப்படலாம்.இயற்கையும் படைக்கிறது ஆனால் ஒன்றுமில்லாததில் இருந்து அல்ல ஏற்கெனவே உள்ளதை சிறிது சூழலுக்கு ஏற்ப பண்படுத்தும்.இது வடிவமைப்பு போல் உள்ளதும்,பல சூழலுக்கு பொருந்தாதா உயிரினங்கள் அழிவதும் பரிணாம்த்திற்கு எதிராக சான்றுகள் போல் ஆகிறது.நலவேளையாக் இயற்கை கொஞ்சம் படிமங்களை விட்டு வைத்தது.இப்போது (மனித)குரங்கினமே இல்லாமல் அழிந்து போய் இருந்து படிமங்களும் இல்லாமல் இருந்தால் மனிதன் இயற்கைக்கு மேம்பட்ட சக்தி(களி)யின் படைப்புத்தான் என்றே கூத்த்தாடி இருப்பார்கள்.மனிதனின் உடல் அமைப்பு போல் உள்ள எந்த விலங்குமே இல்லை ஆகவே பரிணாமம் தவறு என்று சொல்லி இருப்பார்கள்.ஒரு 50+ வருடங்களுக்கு முன் பரிணாம் அறிவியலளர்கள் எவ்வளவு எதிர்ப்பை சந்தித்து இருப்பார்கள்? .இபோது போல் எளிதில் விவரங்கள் கிடைக்காது.கிடைத்தாலும் சரி பார்க்க முடியாது.மிக கடினம்.
அக்கால கட்டம் எல்லாம தாண்டி வந்தாயிற்று.பார்க்க்லாம் இன்னும் கேள்விகள் வரட்டும் .அதற்கும் பதில் அளிப்போம்.மூட நம்பிக்கை ஒழிகிறதோ இல்லையோ மத மாற்றப் பிரச்சாரத்தின் பெருமிதம் குறையும்.இப்போது அனைத்து விலங்குகளின் டி என் ஏ வும் எடுக்கப்பட்ட அவற்ரின் சிறு மாற்றங்கள் இன்னும் ஒரு 10+ ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆய்வு செய்தால் இன்னும் செயலாக்க விளக்கங்கள் எளிமையாகலாம்.
விரைவில் பரிணாம் எதிர்ப்பு பதிவு எழுதுவது எப்படி? என்ற நகைச்சுவை[ஹி ஹி ஹி...] பதிவும் எழுதுவோம் என்பதை மகிழ்வோடு அறிவிக்கிறோம்.
நன்றி
வாங்க நரேன்
ReplyDeleteகதை சொல்லி சொல்லியே ஓய்ந்து போயிட்டேன்[தீப்பொறி ஆ________ ஸ்டைலில் படிக்கவும்]
முல்லா நசிருத்தீன் அப்போதைய[not now!!!!!!] இரான்[பெர்ஷிய] நாட்டு அறிஞர்.அவரின் அண்டை வீட்டுக்காரன் வட்டிக்கு பணம் கொடுத்து ஏழைகளை வாட்டி வதைக்கும் ஒரு கொடுமைக்காரன். முல்லா அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினார்..முல்லா அவனிடம் சென்று உன் வீட்டு பெரிய பாத்திரங்கள் இரண்டு வாடகைக்கு கொடுத்தால் விருந்து சமைக்க உதவும் என்றார்.
அவனும் கொடுத்தான்,திருப்பி கொடுக்கும் போது இரண்டு பாத்திரங்களோடு இரு சிறு பாத்திரமும் சேர்த்துக் கொடுத்தார் முல்லா. வட்டிக்காரன் எதற்கு அந்த மூன்றாவது சிறு பாத்திரம் என்றான் .முல்லா அந்த பாத்திரங்கள் கர்ப்பமாக் இருப்பது தெரியாமல் வாஙினேன்,இரவு பிரசவம் நடந்து குட்டிப் பாத்திரம் பிறந்தது என்றார்.வட்டிக்காரனுக்கு உள்ளூர மகிழ்ச்சி.ஆஹா ஒரு முட்டாள மாட்டிக்கிட்டான் இவனிடம் இருந்து நிறைய ஏமாற்ற வேண்டும் என முடிவு செய்தார்.
சில நாள் கழித்து முல்லா அவனிடம் உன் மனைவியின் வைர நெக்லஸ் இரவல் தந்தால் நாளை திருப்பி தருகிறேன் என்றார்.அவனுக்கு ஒரே குஷி நெக்லஸ் கொடுக்கும் போது இதுவும் கர்ப்பமாக் இருக்கிறது,ஆகவே குட்டிகளோடு திருப்பி கொடு என்றான்.பல் நாட்கள் ஆகியும் முல்லா திருப்பிக் கொடுக்கவில்லை.அவன் முல்லாவிடம் ச்ன்று எங்கே என் மனைவியின் நெக்லஸ்,அதன் குட்டிகள் என்றான்.அதற்கு முல்ல அவனை கட்டி அணைத்து கதறி அய்யோ நெக்லஸ் பிரசவத்தின் போது குட்டியோடு இறந்து விட்டது ,அவ்வளவுதான் என்றார்.
என்னய்யா ஏமாற்றுகிறாய்! நெக்லஸ் எப்படி குட்டி போடும்? என்றான் வட்டிக் கடைக்காரன்.அதற்கு முல்லா பாத்திரம் போட்ட குட்டியை வாங்கும் போதே இதனை யோசித்து இருக்க் வேண்டும் என்றார்!!!!!!!!!!!!!!!!!!!.
ஹி ஹி ஹி அவ்வள்வுதான்!!!!!!!!!!!!!!!
இப்போது ஏன் சாதிக் அந்த சிறுமாற்றங்களின் மூலமாக் பரிணாமம் நடைபெறுகிண்றது என்பதை சான்றுகள் மூலமாக் விள்க்க முடியுமா என்று கேட்டார் என ஆராய்வோம்.
ReplyDelete1.இடைப்பட்ட படிமங்களாக அறிவியல் உலகில் ஏற்கப்பட்டவற்றை மறுப்பது இயலாத காரியம்.பல்லாயிரம் இடைப்பட்ட படிமங்கள் ஆதாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ள்து.
http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils
http://www.talkorigins.org/indexcc/CC/CC200.html
2. 2. மூலக்கூறு அறிவியல் அடிப்படையிலான பரிணாம் அறிவியல் விள்க்கங்கள் ஒரு வளரும் துறை ,பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.டி.என்.ஏ வில் பில்லியன்களில் அமிலக் கட்டமைபுகள் உள்ளன.அவற்றில் இந்த நிகழும் சிறுமாற்றங்கள் குறித்த ஆய்வுகள் சூப்பர் கம்புட்டர் உதவியுடன் நடத்தப்படுகின்றன.
இந்த ஜீன் மாற்றத்தால் என்ன விளைவு நடக்கும் என்பதை கண்டறியும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதும் அறிந்ததே.
இப்படி சூழலில் தன் கேள்வி வருகிறது.இதுவும் வழக்கமான் தந்திரம் எது அறிவியலில் முடிவுக்கு விவாதத்தில் உள்ளதோ ,அதனை பரிணாம் எதிர்ப்புக்கு பயன்படுத்தும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.இந்த 44 குரோமோசோம் மனிதனும் மனிதன் தானே என்று ஜல்லியடிப்பார் என்பதும் நாம் அறிந்ததே.
ஒரு சிறு மாற்றத்தில் ஒரு புது உறுப்பு விட்டலாச்சார்யா படம் போல் உருவாக்கி காட்ட வேண்டும் என்ற் சாதிக்கின் எதிர்பார்ப்பு பரிணம்த்தின் படி த்வறானது.
அறிவியல் ஒரு கருத்தை உறுதிப்படுத்த பல சோதனைகள் சான்றுகள் மீது நடத்தியே ஆகவேண்டும்.அதுபோல் இந்த சிறுமாற்ற நிகழ்வுகளின் மீதான் பரிணாம் செயலாக்கம் இன்னும் பல கதவுகளை திற்க்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
இந்த 44 குரோமோசோம் மனிதனின் தலைமுறையில் என்ன மாற்றம் நடக்குமோ அவ்ற்றை ஆய்வுப்பூர்வமாக கண்காணித்து மட்டுமே கூற முடியும்.பார்க்கலம் இதில் என்ன குழப்புவார்கள் என்று!!!!!!!!!!
பரிணாம் எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம் குழப்புவது மட்டுமே!!!!!!!ஆனால் அவர்கள் நோக்கத்தில் குழப்பமில்லாமல் இருப்பார்கள்.ஹி ஹி நாமும்தான்!!!!!!!
http://www.theweek.co.uk/health-science/religion/45552/outspoken-atheist-dawkins-admits-he-agnostic
ReplyDeletehttp://www.telegraph.co.uk/news/religion/9102740/Richard-Dawkins-I-cant-be-sure-God-does-not-exist.html
டாகின்ஸ் நாத்திகர் இல்லையாமே! அடடா...என்ன சார்வாகன் இப்படி பண்ணிட்டாரு...!
வாங்க சகோ சுவனன்
ReplyDeleteஅது என்ன்மோ தெரியலை பதிவுக்கு தொடர்பில்லாத கேள்விகளை மூமின்கள் கேட்டாலும் நமக்கு பதில் அளிக்குமாவல் பொங்கி விடுகிறது.ஆவலை மிகவும் கட்டுப்படுத்திய படியே கவனமாக பதில் அளிக்க வேண்டியுள்ளது.
எதுவும் எபோது எங்கே என்ன ,ஏன் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து விள்க்குவோம்!!!!!!!
1. இது திரு டாக்கின்ஸ்,இங்கிலாந்து ஆங்கிலிகன் சபை பேராயர் திரு ரோஹன் வில்லியம்ஸ் ஆகியோரின் நாகரிகமான விவாதத்தின் போது அவர் கூறிய கருத்து.நாகரிகமான மனிதர்களின் விவாதம் என்பதால் காது கொடுத்து முழுதும் கேட்க முடிந்தது.விவாதம் என்றவுடன் P.J[பயில்வான் ஜாங்கோ]வின் வழக்கமான ஆபாச மத விவாதம் என்று நினைக்க வேண்டாம்.
2.திரு டாக்கின்ஸ் த்னது The GOD Delusion புத்த்கத்தில் இறைமறுப்பு,நம்பிக்கை ஆகியவற்றை 1 to 10 கொண்ட அள்வுகோலில் வகைப்படுத்துகிறார்.அதில் 1 என்பது முழு இறை நம்பிக்கை. http://www.eoht.info/page/Dawkins+scale
இதில் 6 என்பது கடவுள் இருப்பதற்கு மிகசிறிய ஆனால் சூனயம் அல்லாத நிகழ்தகவு மதிப்பு அளிக்கிறது.
எ.கா 0.000000000000000000....001%
இதில் 7 என்பது கடவுள் என்பது இல்லவே இல்லை.என்னும் நிகழ்தகவு '0 'கொடுக்கும் நிலை.
இந்த அள்வுகோலில் டாக்கின்ஸ் தனது நம்பிக்கை 6.9 என்று அந்த விவாதத்தில் கூறினார்.அவ்வளவுதான். சார்வாகனுக்கு 7 கொடுக்கலாம்!!!!!!!!!!.Hi Hi I am better!!!!!!!!!
3.டாக்கின்ஸ்க்காக நான் பதில் கூறவில்லை,அது அவர் கருத்து.
. 0.1/10 இறை நம்பிக்கை டாக்கின்ஸ்க்கு உண்டு என்று மகிழ்ச்சி அடைய ,கொண்டாட உங்களுக்கு உரிமை உண்டு.குர்பானி[நம்க்கு ஆடு,மாடு ,ஒட்ட்கம் எதுவும் நமக்கு ஓகே], கொடுத்து பிரியாணி போடலாமா ?
எதிர் கேள்விகள்
அ).இறைமறுப்பாளர்கள் கலிமாவில் லா இலாஹ்[கடவுள் இல்லை] என்பதை மட்டும் ஏற்பதால் 25% முஸ்லிமா? அல்லது முஸ்லிமகளும் லா இலாஹ் என கூறுவதால் அவர்கள் 25% இறைமறுப்பாளரா!!!!!???????????
ஆ).இதே போல் அஹமதியாக்கள் குரானில் நம்பிக்கை உள்ளது என்பதற்காக அவர்களை முஸ்லிம்களாக் ஏற்பீர்களா?நிச்சயம் அவர்களின் நம்பிக்கை 0.1/10ஐ விட பெரியதே
இந்த இரு கேள்விகளுக்கும் விடை தெரிந்தும் கூறாவிட்டால் பிரியாணியில் மாமிச துண்டுகள் இல்லாமல் வழங்கப்படும் என அன்புடன் தெரிவிக்கிறோம்.
பரிணாமம் குறித்த ஆவலின் காரணமாக ஏற்கனவே சில புரிதல்கள் இருந்தாலும்
ReplyDeleteஇந்த கட்டுரை மூலமாக மேலும் பல தகவல்கள் தெரிந்துகொண்டேன் நன்றி நண்பரே...
நண்பர் செல்வகுமாரின் கருத்தையும் வழிமொழிகிறேன்
எனக்கு ஒரு கேள்வி
//சிம்பன்சிக்கு 48 குரோமோ சோம்,மனிதனுக்கு 46. இபோது சீனாவில் ஒரு மனிதனுக்கு 44 குரோமோ சோம் என கண்டறிந்து இருக்கிறார்கள்,இது நடந்தது பிரதியெடுப்பின் போது நிகழ்ந்த மாற்றமே.44குரோமோசோம் மனிதர் 46 குரோமோசோம் மனிதர்களோடு இனவிருத்தி செய்ய முடியாததால் அவர் வேறு உயிரினம் சரியா!!!!!!!!!!!.//
இந்த 44 குரோமோசோம் கொண்ட புது உயிரினம் எப்படி இனவிருத்தி செய்வது
வாங்க நண்பர் வேர்கள்
ReplyDeleteநல்ல கேள்வி நண்பரே.44 குரோமோசோம் மனிதருக்கு 44 குரோமோச்சொம் உள்ள பெண்தான் வேண்டும்.இவர் குடும்பத்தில் பல்ருக்கும் இந்த 44 குரோமோ சோம் இருக்க்லாம் என்பதே செய்தி.ஆகவே பிரசினை இருக்காது.எனினும் இது குறித்து துறை சார் வல்லுனர் சகோ அனலிஸ்ட் ஒரு பதிவிட்டு உள்ளார்.அதையும் பார்த்து விட்டு வாருங்கள்.
http://annatheanalyst.blogspot.com/2011/07/44.html
நன்றி
நன்றி நண்பரே
ReplyDelete//அவர்கள் மற்றைய 46 சோடி நிறவுருக்களைக் கொண்ட மனிதரோடு இனப்பெருக்கம் செய்யக் கூடியதாக உள்ளது. although, உயிருள்ள பிள்ளைகள் பெறுவது நிறவுருக்குகள் கூடிக் குறைவதால் கடினமாகும். So, பிள்ளைகள் பெறுவதைத் தவிர, மற்றைய விடயங்களில் ஒத்தவர்களே.//
இதன் மூலம் அறிவது
ஒரு உயிரி உருவாவதற்கு பிரதி எடுத்தலில் நேரக்கூடிய தவறுக்கான நிகழ்தகவு...., பிறகு அதன் இனப்பெருக்கம்...., அந்த உயிரி பிழைத்து வாழ்வதற்கான தகவமைப்பு காரணிகள்......
நினைத்தாலே கண்ணை கட்டுகிறது
ஆனாலும் ஆர்வமாயிருக்கிறது..
நண்பர் வேர்கள்
ReplyDeleteபரிணாம் நிகழ்வது உண்மை.ஆனால் அதனை மூலக்கூறு அறிவியலின் துணையோடு வரும் காலங்களில் மிக எளிதாக் விள்க்குவார்கள்.தமிழர்கள் இதில் பலர் ப்ங்கு கொள்வது சால சிறந்தது.உங்கள் வீட்டு குழந்தைகளை ஜெனெட்டிக்ஸ் படிக்க வைப்பது நல்ல எதிர்காலம் அளிக்கும்.
இந்த 44 குரோமோசோம் உள்ளிட்ட குரோமோசோம் வேறுபாடுகள் ராபர்ட்சோனியன் இடமாற்றம் என அழைக்கப்படுகிறது.இது குறித்த விக்கி பீடியா பக்கம்.
http://en.wikipedia.org/wiki/Robertsonian_translocation
நான் இத்துறை சார்ந்தவன் அல்ல,பொறியியல்துறை சார்ந்தவன்,அவ்வப்போது கற்கும் விடயங்களை பகிருகிறேன்.உண்மையாகவே இந்த மூலக்கூறு அறிவியல் சார் பரிணாம் கொஞ்சம் கடினம்தான்.இன்னும் நிறைய எழுதுவோம்!!!!!!!!!
நன்றி
என்னுடைய கேள்விகளுக்கு தனிப்பதிவாக பதிலளித்ததற்கு நன்றி.
ReplyDeleteஉங்களுடைய ஆதாரங்களை ஆராய்வோம்
//இந்த mutations மூலமாக பரிணாமம் நிகழ்கிறது என்பதற்கு ஆதாரம் என்ன ? Mutations மூலமாக ஒரு புதிய செயல்பாடுள்ள உறுப்பு (functional organ) உருவானதற்கான ஒரு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்//
என்னுடைய இந்த கேள்விக்கு 2 ஆதாரங்களை கொடுத்துள்ளீர்கள்
1. ccr5 mutation
http://en.wikipedia.org/wiki/CCR5
இங்கு நடப்பது என்ன?
மனிதனின் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் T cells என்ற வகை உண்டு. இந்த T cell உடைய வெளிப்பகுதியில் ccr5 receptor என்ற பகுதி உள்ளது. இந்த T cell சரியாக செயல்படுவதில், ccr5 receptor க்கும் பங்கு உண்டு. HIV கிருமி தாக்கும் இரு வகை receptor களில் இதுவும் ஒன்று. இந்த mutationஆல் ccr5 receptor பழுதடைவதால் HIV கிருமி T cell க்குள் நுழைய முடிவதில்லை. இதனால் HIV கிருமி தாக்கும் வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான். இதனால் பாதகமும் ஏற்படுகிறது. இந்த mutation T cell உடைய செயல்பாட்டை (நோய் எத்ர்ப்பு சக்தி) பாதிக்கிறது. இந்த mutation உள்ளவர்களுக்கு West Nile virus என்ற கிருமி தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
http://www.niaid.nih.gov/news/newsreleases/2006/pages/ccr5.aspx
சரி இது நான் கேட்ட ஆதாரமா என்று பார்ப்போம்.
இந்த mutation புதிய உறுப்பை (functional organ) உருவாக்கியதா?
அல்லது புதிய செல்லை உருவாக்கியதா ?
அல்லது ஒரு செல்லின் புதிய receptorயாவது உருவாக்கியதா?
எதுவேமே இல்லை!!! மாறாக ஒரு functional receptorஐ பழுதடைய செய்துள்ளது.
2. புதிய மனிதன் ?
இந்த mutation நகைச்சுவை ஆதாரமா என்று தெரியவில்லை?
இந்த 44 குரோமோசோம் மனிதன் , மனிதன் இல்லையாம், எனவே பரிணாமம் நிரூபணமாகிவிட்டதாம் !!!
பரிணாமத்தின் ஆதாரங்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
சரி 44 குரோமோசோம் உயிரினத்தை மனிதன் அல்ல, புதிய விலங்கு என்றே வைத்துக்கொள்வோம் (zooவில் அடைப்பார்களா என்று தெரியவில்லை). இதனால் பரிணாமம் நிரூபணமாகுமா?
இந்த mutation புதிய உறுப்பை (functional organ) உருவாக்கியதா?
அல்லது புதிய செல்லை உருவாக்கியதா ?
அல்லது ஒரு செல்லின் புதிய receptorயாவது உருவாக்கியதா?
எதுவுமே இல்லை!!! மாறாக இனவிருத்தி வாய்ப்பு குறைவாக உள்ள ஒரு உயிரினத்தை (?)உருவாக்கி உள்ளது.
இந்த சுட்டியில் 45 குரோமோசோம் மனிதன்/விலங்கு, 47 குரோமோசோம் மனிதன்/விலங்கு பற்றிய விளக்கம் உள்ளது. முடிந்தால் இவற்றையும் உங்கள் பரிணாமத்திற்கான (நகைச்சுவை) ஆதாரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
http://www.biology.iupui.edu/biocourses/N100/2k2humancsomaldisorders.html
அடுத்து இன்னொரு ஆதாரம் கொடுத்துள்ளீர்கள்
//எதற்கும் இங்கும் விரும்புபவர்கள் பார்க்கலாம் சிறுமாற்ற ஆய்வுக்கூடம்.இதில் பலவித் ஆய்வுகளை fruit fly மீது நடத்துகிறார்கள்
http://bioweb.wku.edu/courses/biol114/vfly1.asp//
இங்கேயாவது எதாவது ஆதாரம் இருக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.
fruit fly (drosophila)என்ற ஒருவகை ஈயின் மீது ஒரு நூற்றான்டாக மரபியல் ஆராய்ச்சி நடத்துகிறார்கள். சில வாரங்களிலேயே பல தலைமுறைகளை உருவாக்கும், மரபியல் ஆராய்ச்சிக்கு ஏற்ற உயிரினம் இது.
http://en.wikipedia.org/wiki/Drosophila_melanogaster
இந்த fruit flyல் ஒரு mutation / பல mutation மூலம் ஒரு புதிய functional wing/ ஏதாவது உறுப்பு உருவானதற்கான ஆதாரம் உண்டா ? ஒரு நூற்றாண்டு ஆராய்ச்சியில் எதுவும் கிடைக்கவில்லையா ?
இதில் இந்த துறை புதியது என்ற சமாளிப்பு வேறு. படிமங்களைப்பற்றி கேட்கும் போது "பாதுகாக்கப்படவில்லை" என்று சமாளிப்பதைப் போல்.
அடுத்து கமென்ட் பகுதியில் இன்னொரு மிகப்பெரிய ஆதாரம்
ReplyDelete//ஒரு சிறு மாற்றத்தில் ஒரு புது உறுப்பு விட்டலாச்சார்யா படம் போல் உருவாக்கி காட்ட வேண்டும் என்ற் சாதிக்கின் எதிர்பார்ப்பு பரிணம்த்தின் படி த்வறானது.//
இதை ஆரம்பத்திலேயே கூறியிருந்தால் , இந்த விவாதமே அவசியம் இல்லாமல் போயிருக்கும்.
சரி ஒரு சிறு மாற்றத்தால் (mutation ) எதைத்தான் உருவாக்கி காட்ட முடியும்?
ஒரு உறுப்பு வேண்டாம் ஒரு functional cell உருவாக்கி காட்ட முடியுமா?
உங்களுடைய 2 ஆதார்ங்கள் எதையுமே உருவாக்கி காட்டவில்லையே. ஏற்கனவே இருப்பதை பழுதாக்கிதானே காட்டி இருக்கிறது.
இந்த ஆதாரங்களை வைத்து தான் கண் உருவானது, கால் உருவானது, கை உருவானது, இறக்கை உருவானது என்று பரிணாம கற்பனை உலகில் மிதக்கிறீர்களா ?
//அறிவியல் ஒரு கருத்தை உறுதிப்படுத்த பல சோதனைகள் சான்றுகள் மீது நடத்தியே ஆகவேண்டும்.அதுபோல் இந்த சிறுமாற்ற நிகழ்வுகளின் மீதான் பரிணாம் செயலாக்கம் இன்னும் பல கதவுகளை திற்க்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.//
இதுவரைக்கும் எந்த கதவையும் திறந்த மாதிரி தெரியவில்லை.
பதிவின் ஆரம்பத்தில் ஒரு படம் இருக்கிறதே, அந்த படத்திற்கான ஆதாரம் என்ன ? எந்த உயிரினத்தில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது?
உண்மையிலேயே "தமிழ் கூறும் நல்லுலகு பரிணாம அறிவு" பெற வேண்டுமென்றால் சிறு மாற்றம் (mutation ) பற்றி விளக்குங்கள். ஒவ்வொரு உயிரினங்களிலும் நீங்கள் கூறக்கூடிய "favorable mutation" எத்தனை சதவீதம்"unfavourable mutation" எத்தனை சதவீதம் என்று பட்டியலிடுங்கள். பிறகு அந்த படத்தின் / பரிணாமத்தின் உண்மை நிலவரம் தெரிந்து விடும்.
படிம ஆதாரங்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தீர்கள்.
ஒரு உயிரின குழுவை, இன்னொரு உயிரின குழுவாக மாற்ற பரிணாமத்தின் அடிப்படையான natural selection + random mutationக்கு ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்க வேண்டும். நிரூபித்து விட்டால் பிறகு படிம ஆதாரங்களை (இருந்தால்) துணை ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளலாம். இதுதான் என்னுடைய கருத்து. ஒரு படிமத்தைக் காட்டி கற்பனைக் கதை சொல்வதுபோல் mutations விஷயத்தில் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு மணி நேரம் ஒரு வீடியோவை கஷ்டப்பட்டு பார்த்து (என்னுடைய நெட் கனெக்சன் slow), ஒரு ஆதாரமும் இல்லாமல் ஏமாறுவ்தால்தான் , வீடியோ ஆதாரம் வேண்டாம் என்று கூறினேன். வீடியோவில் ஏதாவது புதிய ஆதாரம் இருந்தால் கூறுங்கள், பார்க்க முயற்சி செய்கிறேன்.
மற்றபடி நானும் முல்லா நசுருதீன் கதையை (ஏற்கனவே தெரிந்திருந்தாலும்) ரசித்தேன் .
ஒரு சந்தேகம். உயிரில்லாத molecules குட்டி போட்டு first cell உருவானது என்று நம்புபவரா நீங்கள். பரிணாமம் இதைப்பற்றி பேசவில்லை என்று தப்பித்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறீன்.
http://en.wikipedia.org/wiki/Abiogenesis
my comments disappeared. Is it waiting for moderation?
ReplyDeleteஎன்னுடைய கேள்விகளுக்கு தனிப்பதிவாக பதிலளித்ததற்கு நன்றி.

சகோ.சார்வாகன்,
ReplyDeleteமியுட்டேஷன் பரிணாமத்தில் ஏதும் செய்யவில்லை என்கிறார் போல அறிஞர், இதோ நானும் வந்துட்டேன்,
மியூட்டேஷன் என்பது திடிர் மாற்றம் எனப்படும்(சிறு மாற்றம் அல்ல) இது இயற்கையாகவோ அல்லது தூண்டியோ கூட செய்யலாம், வேதியல்,கதிர்வீச்சு போன்றவை மூலம்,
திடீர் மாற்றத்தால் புதிய கலப்பினத்தை உருவாக்கலாம், விலங்கின வகையில் உதாரணம் கொடுத்து குழப்புவதை விட தாவரயியல் ரீதியாக சொன்னால் எளிதாக புரியும், காட்டுவதற்கும் உதாரணங்கள் இருக்கு,
புல் என்று சொன்னால் எத்தனை புல் இருக்கு , அருகம் புல், கோரை புல் ,கொரியன்ன் புல் சொல்வீங்க, அது மட்டும் இல்லை அரிசி, கோதுமை , ஓட்ஸ், கம்பு , கேழ்வரகு, சாமை சோளம், ரை இன்ன பிற தானியன்ங்களும் புல் தான் , மூங்கில் ,கரும்பும் புல் தான் எப்படி புல் என்ற ஒன்றில் இத்தனை வேறுப்பாடுகள், மூங்கிலும் ,அரிசியும் ஒரே வழில எப்படி வந்தது,முதலில் ஏதோ ஒரு ஆதிப்புல்லில் என்ற ஒரு குடும்பத்தில் இருந்து மாற்றங்கள் ஏற்பட்டு அது நிலைத்து அடுத்த தலைமுறைக்கும் செல்லும் போது ஒரு புதிய இனம் மற்றும் துணை இனமாக ஆனது, ஒரு துணை இனத்திலும் ஏகப்பட்ட வேறுபாடுகள் வரும் போது பயிரிடும் வகைகள்(கல்டிவார்) உருவானது.
அரிசியில் இருக்கும் பொன்னி,பொன்மணி, பாசுமதி எல்லாம் இப்படியானவைத்தான், இயற்கை தெரிவு மற்றும் பிரிவு.
தாவரங்களில் ஒரே வகையில் பல ஜோடி குரோமோ சோம் (பாலிப்பிலாய்ட்)வகைகள் உண்டு, மனிதனில் வெகு அரிது 44 குரோமோ சோம் போல 45 டர்னர் சிண்ட்ரோம் , 47 டவுன் சிண்ட்ரொஒம் என எல்லாம் உண்டு . இது போன்று குரோமோசோம் பிரியாமல் ஏற்படும் மாற்றங்களும் மியுட்டேஷன் தான். மனிதன் போன்ற விலங்கினங்களில் பல வகைப்பட்ட பாலிப்பிலாய்ட் என்பது சகஜம் அல்ல. மேலும் நாம் சுய இனப்பெருக்கம் செய்பவர்களும் அல்ல.
ஆனால் தாவரங்கள் அப்படி அல்ல.நிலையான பாலிப்பிலாய்ட் வகைகள் உண்டு.
கோதுமையில்
இரு ஜோடி என்கோர்ன் கோதுமை - டிரைடிகம் மோனோகாகம்-
மூன்று ஜோடி-டுயுரம் கோதுமை- டி.டுயுரம்
ஆறுஜோடி -பிரட் கோதுமை-டி.எயிஸ்டிவம்.
டெட்ரா பிளாய்ட் வகை கோதுமையை இரண்டு டைப்பிளாய்ட் கோதுமையை கலப்பினம் செய்து உருவாக்கினார்கள், அதற்கு கோல்சிசைன் என்ற ரசாயனத்தை செலுத்தி குரோமோசோம் பிரிதலைக்கட்டுப்படுத்தி ஒரே வகையான குரோமோ சோம் கொண்ட ஹேப்லாய்ட் உருவாக்கி பின்னர் அதனுடன் டைப்பிளாய்ட் வகையை கலப்பினம் செய்து ஒரு டெட்ரா பிளாய்ட் வகையாக நிலை நிறுத்தினார்கள்.
இப்போது கோல்சிசைன் இராசாயனம் பயன்ப்படுத்தி குரோமோ சோம் பிரிதலை கட்டுப்படுத்தியது தூண்டிய வகை மியூட்டேஷன் அதன் மூலம் கிடைத்த மாற்றமே நாம் சாப்பிடும் பிரட் கோதுமை.
இது போல குட்டையான ,மென்மையான , ஸ்பைக் எனப்படும் முள் இல்லாத என கோதுமைகள் உருவாக்கலாம்.இதையே டிஎன் ஏ உள்ளப்போயும் மாற்றம் செய்யலாம். இதெல்லாம் தாவரங்களில் செய்வது எளிது விலங்குகளில் சிக்கலான மரபணு என்பதால் உடனே செய்யவில்லை ஆனாலும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
உ.ம்; குதிரை*கழுதை =கோவேறு கழுதை.
சிங்கம்*புலி= லைகர்
இயற்கையா மியுட்டேஷன் ஏற்பட்டு குரோமோசோம் பிரிவதில் மாற்றம் ஏற்படுவது தான் பரிணாம மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.
சகோ வவ்வால்
ReplyDeleteஅவர்கள் என்ன கூறுவார்கள் இந்த மாற்றம் அனைத்தும் இது செயற்கை இயற்கையாக உடனே நடப்பதை காட்டு என்பார்கள்.அவர்கள் கேரக்டரையே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்களே!!!!!!!!!!!
முதல் செல்லில் இருந்து இப்போதைய வாழும் உயிர்னங்கள் வரை அனைத்து வரைக்கும் ஏற்பட்ட பரிணாம் வளர்ச்சிக்கும் ம்யூட்டேஷன்ஸ்+இயற்கைத் தேர்வு மூலம் இயல்பாகவே வந்தது என ஆய்வுக்கூடத்தில் நிரூபிக்க முடியுமா என்பதுதான் அவர்களின் கேள்வி!!!!!!!!!.
நமக்கு அவர்கள் நினைப்பது,சொல்வது,கருத்திடுவது நன்கு புரிகிறது,இதற்கு எதுவும் முயுட்டேஷன் காரணமா!!!!!!!!!!!!!!!
நீங்க ஆதாம் ஏவாள் கதை எடுத்து போட்டு தாக்குங்க,மைட்டோ கன்டிரியன் ஈவ் பற்றி பதிவு தொடங்குங்கள்.நானும் வந்து விடுகிறேன்!!!!!!
பார்க்க்லாம் வேதாளங்களின் அடுத்த கேள்வியை!!!!!!!!!!
விக்கிரமாதித்தன்கள் ரெடி!!!!!!!!!!!!!
ரெடி ஜூட்!!!!!!!!!!!!!!
நன்றி
தொடர்ச்சி...
ReplyDeleteகோதுமையில் இருக்கும் வகை ,மனிதர்களில் ஆசியன்,அமெரிக்கன் , ஆப்பிரிக்கன் போன்றது தான் என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள் என்பதால் தான் குரோமோசோம் ஜோடிகளை சொல்லி இருக்கேன். மனிதர்கள் எந்தக்கண்டத்தவராக இருந்தாலும் 46 குரோமோசோம் தான்.
மியூட்டெஷனால் ஒரு உயிரியின் புறத்தோற்றத்தில் அல்லது பண்பில் ஒன்றை சேர்க்கவும் முடியும் நீக்கவும் முடியும்.
ஒரு உயிரினத்தில் திடீர் என மாற்றம் இயற்கையாக குரோமோ சோம் பிரிதல் ,மீண்டும் சேர்தலின் போத்உ ஏற்படும் விளைவாளும் ,டி ,என் ஏ வின் அடிப்படையிலும் நிகழலாம். இயற்கையா நடக்க பல்ல மில்லியன் ஆண்டுகளும் ஆகலாம் சில நூறாண்டுகளும் ஆகலாம், விலங்குகளின் கட்டமைப்பு சிக்கலானது என்பதால் மனிதனால் உடனே செய்துக்காட்ட இயலாமல் இருக்கலாம், அப்படி செய்து கிடைக்கும் உயிரினமும் இனப்பெருக்கம் செய்ய இயலாத மலடாக இருக்கும், ஆனால் தாவரங்கள் அப்படி இல்லை நிறைய பரிசோதனை செய்யலாம், மேலும் உற்பத்தி செய்ய வேறுவகையான வழிகளும் உண்டு. விதை இல்லாமல் , தண்டு, கிழங்கு கொண்டும் உற்பத்தி செய்யலாம்.
இரண்டு டை பிலாய்ட் வாழைகள் கலந்து ஒரு டெட்ரா பிலாய்ட் வாழை உருவானது
மியூசா அகுமினேட்டா(2n) Xமியூசா பல்பிசியோனா(2n)= மியுசா xபாரடைசியா(3n)
ஆனால் அது விதை இல்லாத மலடு, அதனால் தான் வாழைப்பழத்தில் கொட்டை இல்லை, எனவே நிலத்தடி தண்டு மூலம் வெஜிடேடிவ் புரபகேஷன் செய்யப்படுகிறது. இது போன்ற விலங்கினத்தில் செய்ய வராது என்பதால் உடனே மாற்றத்தைக்காட்ட முடியாது.
ஒரே வாழை இனம் என்றாலும் வேறுப்பட்ட குரோமோசோம் எண்ணிக்கை இருப்பது போல மனிதனும் ,மனித குரங்கும், ஹேப்லாய்டுகளை இருவருக்கும் உருவாக்க முடிந்தால் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே ஒன்று உருவாக்க முடியும்.
இயற்கைத்தேர்வில் அப்படி உருவாகி இருந்தாலும் ஒரே ஒரு உயிரினம் உருவாகி இருந்தால் அதே போல ஒத்த குரோமோ சோம் ஜோடி உள்ள உயிரினம் இல்லை எனில் சந்ததி உருவாகாமல் அழிந்து போய் இருக்கலாம்,ஆனால் தாவரங்களுக்கு பல வகை இனப்பெருக்க வழிகள் உள்ளதால் எளிதாக பெருகி நிலைக்க முடிகிறது.
சகோ.சார்வாகன் தான் கலக்குகிறார் என்றால் சகோ.வவ்வாலும் சேர்ந்து கலக்கோ கலக்குறீங்களே..... இருப்பினும் அரிய பதிவுகளுக்கு மிக்க நன்றி.
ReplyDelete