வணக்கம் நண்பர்களே,
நண்பர் நரேன் பரிணாம் கொள்கைகளின் அடிப்படை சான்றுகளான் படிமங்கள் எப்படி கண்டு பிடிக்கப் படுகின்றன.அதில் இருந்து தகவல்கள் எவ்வாறு பெறப்படுகின்றன் என விள்க்குமாறு பணித்தார்.நாம் திரு அட்டன் பரொவின் லைஃப் தொலைகாட்சி தொடர்[Life Series] தேடியபோது இந்த மறைந்து போன உலகம் என்னும் அரிய காணொளி கிடைத்தது.என்ன ஆச்சர்யம் எனில் இதும் நரேனின் கேள்விக்கு பதிலாக அமைந்து இருப்பதுதான்.
நம் பூமி தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்தது.அந்த மாற்றங்களுக்கு தக்க தகவமைக்கும் உயிர்கள் மட்டுமே வாழ முடிந்தது. மற்றவை மடிந்தன.அவற்றின் உடல்கள் படிமங்களாக கிடைத்ததே அறிவியலின் உண்மைத் தேடலுக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு ஆகும்.
இக்காணொளிகளில் படிமங்கள் எப்படி சேகரிக்கப் படுகின்றன.எப்படி இக்கால தொழில் நுட்பங்கள் அதற்கு பயன் படுகின்றன்.மறைந்த உயிரிஅங்களின் வாழ்வு முறைகள் எப்படி கணிக்கப் படுகிறது என்பதை அருமையாக் விள்க்கி இருக்கிறார்.கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பதால் பொறுமையாக பார்க்கும் படி வேண்டுகிறேன். நன்றி!!!!!!!!!!!!!
காணொளிகளுக்கு நன்றி நண்பரே,
ReplyDeleteகண்டிப்பாக பார்த்துவிடுவேன். அந்த காணொளிகளில் வந்த மறுமொழிகளில் மூன்று...
//If there wás a god, it would surely be Sir David Attenborough.
And if Sir D.Attenborough isnt God, surely god is but a fool in his presence.//
//And God said, “Let there be light,” and there was light. 4 God saw that the light was good, and he separated the light from the darkness. 5 God called the light “day,” and the darkness he called “night.” And there was evening, and there was morning—the first day.
Then god said Ooops, I forgot to make the sun fisrt.!!!//
நண்பர் நரேன்,
ReplyDeleteஹா ஹா நல்ல பின்னூட்டங்கள்.
இக்காணொளிகளை படைத்தவர் என்பதால் இக்காணொளிகளுக்கு அட்டன்பரோவே கடவுள்.நான் பார்த்த காணொல்களிலேயெ மிக மிக அருமையான் காணொளிகள் நன்பரே!.கடும் உழைப்பும்,அர்ப்பணிப்பும் மிக்க அட்டன்பரோவின் பணி பாராட்டுவதற்கு உரியது.இக்காணொளிகளை சீகிரம் தமிழ் படுத்தி வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்!
நன்றி
@நரேன்
ReplyDeleteவிவாதத்தில் ஒரு நண்பர் படிமங்களை ஆதாரமாக ஏற்க முடியாது என்று ஒரே போடாக போட்டு என்னை தோற்கடித்து விட்டார்!!!!!!!!!.
படிமங்கள் இல்லாமல் பரிணாம கொள்கை நிரூபிக்க முடியுமா? சரி டி.என் ஏ என்றால் சரி நெருங்கிய தொடர்பு இருக்கும் உயிர்கள் என்பதாலேயே இவை முன்னோர்கள் ஆக முடியாது என்றும் போட்டுத் தாக்குவார் என்ற பயத்தினால் அதை கூறவில்லை!!!!!!!!!!.
ஒரு விலங்கு இன்னொரு விலங்காக கண் முன்னே விட்டலாச்சார்யா படம் போல் அல்லது நம் முந்தைய பதிவு படம் போல் மாறினால் மட்டுமே நம்புவேன் என்ற Doubting Thomas களை பாராட்டுகிறேன்!!!!!!!!!!!!!
சில கேள்விகள் சில பதில்கள்.
ReplyDelete1. பூமி மாறாத ஒன்றா?
பிராஞ்சத்தில் அனைத்துமே மற்றத்திற்கு உட்பட்டவை. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.மாறாத ஒன்றுக்கு வரலாறே இருக்க முடியாது.பூமியின் வெவேறு காலகட்டங்களில் உயிர்களே அற்ற,ஒரு செல்,பல் செல்,கடல் வாழ் உயிரினங்கள்,நீர் வாழ் உயிரினங்கள்,பாலூட்டிகள்... என்று பூமியின் தன்மைக்கேற்ற தகவமைக்கும் உயிரினங்களே பரிணமித்தன, தகவமைக்க&பரிணமிக்க முடியாதவை அழிந்தன. பூமியின் வரலாறை இச்சுட்டியில் கண்டு முடிவு செய்க!!!!!!!
http://www.scotese.com/earth.htm
*******************
2. உலகின் மக்கள் தொகையில் ஆண் பெண் விகிதம் எப்படி ஏறத்தாழ சரிசமாக இருப்பதை விள்க்கும் கருத்தாக்கம் உண்டா?
பல விந்தையான் இயற்கை நிகழ்வுகளுக்கும் அறிவியல் அவதானித்து அதன் காரணிகளை வரையறுத்துள்ளது.இந்த நிகழ்வுக்கும் கருத்தாக்கம் உண்டு..ஃபிஷர் கருத்தாக்கம் எனப்படும் அதனை இச்சுட்டியில் படியுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Fisher's_principle
பரிணாமத்தின் படி இது இயற்கைத்தேர்வின் செயல்.இதனை மறுப்பவர்கள் ஆண் பெண் சம் விகிதத்திற்கு யாரை வேண்டுமானாலும் காரண்மாக கூறலாம்.ஆட்சேபனை இல்லை.இந்த பதில்கள் இயற்கை நிகழ்வுகளுக்கு அறிவியல் விள்க்கம் தேடுபவர்களுக்கு மட்டுமே!!!!!!!
http://www.genetics.org/content/148/2/719.full
தங்களுக்கு நேரமிருக்கும்போது கீழ்க்காணும் என்னுடையப் பதிவினைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கிறேன். நன்றி.
ReplyDeletehttp://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post_08.html
வணக்கம் சகோ கீதமஞ்சரி
ReplyDeleteஉங்கள் பதிவு பார்த்தேன்.பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி எனினும் நாம் செய்வது தேனீ போன்று கருத்துத்தேனை சேகரித்து தமிழ் பதிவெனும் தேன் கூட்டில் வைப்பதுதான்.
உண்மையான புகழுக்கு உரியவர்கள் இக்கருத்துகளை உருவாக்கி மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் செல்ல வைத்த மாம்னிதர்களுக்கே
உங்கள் ஊக்கத்திற்கு மன்மார்ந்த நன்றி
சில கேள்விகள் சில பதில்கள்
ReplyDeleteமனித உடலில் பரிணாம கொள்கையின் சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா?
முனைவர் ஆலிஸ் ராபர்ட் தயாரித்த மனிதனின் தோற்றம் பற்றிய ஆவணப்படத்தில் நம் உடல் எப்படி பரிணாம வளர்ச்சியின் சான்றாக விள்ங்குகிறது என்பதை அருமையாக் விள்க்குகிறார்.இதனை பதிவிடலாம் என நினைத்தாலும் நேரமின்மையால் தவிர்த்து விட்டோம். 18 வயது நிரம்பிய விருப்பம் உள்ள நண்பர்கள் பார்க்கலாம்.
http://topdocumentaryfilms.com/origins-of-us/
நண்பரே.
ReplyDeleteஅந்த காணொளியில் அத்தாட்சிகள் நிறைய இருக்கின்றது,ஆனால் ”அவாக்கள்” சிந்திக்கதான் மாட்டேன் என்கிறார்கள். வடிவமைப்பாளர்தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
காணொளிக்கு நன்றி.
ந்ண்பர் நரேன்
ReplyDeleteஅவர்களுக்கு அது போதும்.வேறு பதில் இருக்கிறதா என உண்மையை தேடுபவர்களுக்கு மட்டுமே நாம் அளிக்கும் அத்தாட்சிகள்.ஓவொரு கேள்விக்கும் முடிந்தவரை உண்மையான் பதில் அளிப்பது என முடிவு செய்து உள்ளேன்.கிடைக்கும் பரிணாம் எதிர்ப்பு விமர்சன கேள்விகளை அனைவருமே அளிக்க வேண்டுகிறேன்."இதுக்கு முன்னாலே" என்ற எ.சி.வ கேள்விதான் காமெடி என்பதை நிரூபித்தாகி விட்டது.ஆகவே பிற கேள்விகளையும் கவனித்தாக வேண்டும்.'ஏன்' என்று கேட்பவர்களுக்கு "எப்படி" என்ற விளக்கம் தேவைப்படாது!!!!!!!!!!!!.
ஹி ஹி
நன்றி