Wednesday, January 18, 2012

இஸ்லாமிய பேராசிரியர் சல்மான் ஹமீத் பரிணாம கொள்கைக்கு ஆதரவு


நண்பர்களே
நாம் பரிணாம கொள்கை  குறித்த தேடல் புரிபவர்கள் என்பதும் அதனை முறையாக கற்றும் வருகிறோம்.பொதுவாக ஆபிரஹாமிய மதங்கள்(யூதம்,கிறித்தவம் ,இஸ்லாம்) சார்ந்த பிரச்சாரகர்கள் பரிணாமத்தை எதிர்த்து வருகிறார்கள் என்பதை அறிவோம்.பரிணாம கொள்கை இஸ்லாமிய உலகில் மிக அதிகமாக் எதிர்ப்பை சந்திக்கும் அறிவியல் கொள்கை என்றால் மிகையாகாது.இஸ்லாமிய நாடுகளில் பரிணாமம் கற்பிக்கப்படுகிறதா என்ற விவரம் அறிய ஆவல் உண்டு என்றாலும் அவ்விவரங்கள் சரியாக கிடைப்பது இல்லை.

நமக்கு பிடித்த பதிவுலக சகோதரர்  ஒருவரின் பதிவில் இஸ்லாமிய நாடுகள்   அறிவியல் முன்னேற்றத்திற்கு அதிக பொருட்செலவில் சில திட்டங்களை முன்னெடுக்கின்றன என்ற செய்தியை அறிய முடிந்தது.

அவர் குறிப்பிட்ட கட்டுரை படித்த போது திரு சல்மான் ஹமீத் என்னும் பேராசிரியர் பற்றியும் இஸ்லாமிய உலகில் அறிவியல் கல்வி பரப்ப அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் தெரிந்தது.இவரை தமிழர்களுக்கு அறிமுகப் படுத்துவது நம் கடமை என்று எண்ணியதுதான் இப்பதிவு.

இவர் நம் சகோதர நாடு பாகிஸ்தானை சேர்ந்தவர்.இப்போது இங்கிலாந்தின் ஹாம்ப்சயர் கல்லூரியில் பேராசியராக பணியாற்றுகிறார்.


இது அவருடைய தளம்.அறிவியலும் மதமும் முரண் என்பது தவறு என்கிறார்.பரிணாம் கொள்கைக்கு கூட ஆதரவு அளித்து மத புத்தகத்தில் அறிவியல் தேடுவது அவ்சியம் இல்லை அதில் ஆன்மீகம் மட்டுமே தேடவேண்டும் என்று கூறும் இவரை பாராட்டாமல் இருக்க இயலவில்லை.

அறிவியல் வளரும் போது இவர் போன்றவர்கள் உருவாவது காலத்தின் கட்டாயம்.இவர் போன்றவர்களை முன் உதாரண்மாக கொண்டால் உண்மையாகவே இஸ்லாமிய நாடுகள் அறிவியலில் முன்னேறும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

கேளுங்கள் பேராசிரியர் சல்மான் ஹமீத்தின் காணொளி உரையை!!!!!!!!!!!! 


12 comments:

  1. http://www.evolutionandislam.com/faq
    Does the theory of evolution compliment or contradict the Qu'ranic creation account of life or species?

    The Qu'ran has few passages that openly appear to consider the origin of species or the particulars of biology, and the theory of evolution is not a theory about the origin of life on Earth. As such, there are not many places where the text of the Qu'ran or the contents of the theory of evolution overlap. However, in discussion of the theory of evolution in an Islamic context several Qu'ranic verses are sometimes considered relevant. For example, Qur’anic verse 24:45 is cited to support guided or theistic evolution: ‘And Allah has created from water every living creature: so of them is that which walks upon its belly, and of them is that which walks upon two feet, and of them is that which walks upon four; Allah creates what He pleases; surely Allah has power over all things’. In this example, evolution is a process that is manifested by Allah, as are the other processes of the natural world. At the present time, there continues to be discussion amongst Muslim scholars regarding the Muslim perspective on evolution. What is clear is that there is no conflict in carefully considering the theory of evolution and being Muslim.

    ReplyDelete
  2. Too many assumptions.

    Why these "so called scientists" consider Quran as the word of god? Any proof?

    ReplyDelete
  3. /Why these "so called scientists" consider Quran as the word of god? Any proof?
    /
    அன்புள்ள சகோ இபின் ஷாகிர்
    மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது.அறிவியல் என்பது சான்றுகளை விளக்கும் [பொருந்தும்] கொள்கை அளிப்பதையே பணியாக கொண்டது.இரண்டையும் தொடர்பு படுத்தாமல் இருப்பது இரண்டுக்குமே நலம்.

    மோதல் போக்கை தவிர்க்க சமாதான முயற்சி அந்த அறிவியலாளர்கள் செய்கிறார்கள் என கூறலாம்.

    ReplyDelete
  4. 2009 Conference Webcasts
    Welcome to the 2009 Conference Webcast Section.

    Please view the webcasts by clicking on the video, or the title of the webcast.

    http://www.evolutionandislam.com/2009-conference-webcasts

    ReplyDelete
  5. அருமையான ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்திருக்கிறீர்கள் நண்பரே. இவர்களை போன்றவர்களின் பெருக்கம் தான் அவர்களை கற்காலத்திலிருந்து படிப்படியாக நகர்த்தி வர முடியும்

    ReplyDelete
  6. //Ibnu Shakir said...
    Too many assumptions.

    Why these "so called scientists" consider Quran as the word of god? Any proof? //

    இப்னு ஷாகிர் நண்பரே,
    இவர் இஸ்லாமியராக இருந்து கொண்டு அறிவியலை சிந்திப்பதே இந்த பதிவின் உட்பொருள் என கருதுகிறேன்
    இதில் இவர் குரானை கடவுள் மொழியாக ஏற்க விரும்பாமல் ஆகியிருக்கும் பட்சத்தில் நாத்திகராகவே கருதபடுவார் பின் இந்த பதிவுக்கே வேலையில்லை
    ஆன்மீகம் ஆபத்தில்லை மதவெறியே அபாயகரமானது
    இது எனது கருத்து

    ReplyDelete
  7. வாங்க நண்பர் கரிகாலன்
    நாம் பரிணாமக் கொள்கையை இப்போதை உயிரின‌ங்களின் தோற்றத்தை விள்க்கும் அறிவியல் கொள்கை என்ற கோணத்தில் மட்டுமே கற்கிறோம்.இதற்கு எதிரான அறிவார்ந்த வடிவமைப்பு என்னும் கொள்கை பற்றி ஒரு தொடர்பதிவும் சார்பற்றே எழுதுகிறேன்.அறிவார்ந்த‌ வ‌டிவ‌மைப்பு கூட‌ ப‌ரிணாம‌ கொள்கையின் சில‌ அம்ச‌ங்களை,விள்க்கங்களை ம‌ட்டுமே எதிர்க்கிற‌து.

    ப‌ரிணாம் கொள்கை கல்வியை த‌விர்த்த‌ல் என்ப‌து தேவைய‌ற்ற‌து.இத‌னை த‌விர்க்கும் நாடுக‌ள் உயிரிய‌ல் அறிவில் பின் த‌ங்கும் அபாய‌ம் உள்ள‌து.ச‌ல்மான் ஹமீத் போன்றோர் இத‌னை அவ‌தானித்தே இம்முய‌ற்சிக‌ளை மேற்கொள்கின்ற‌ன‌ர்.ப‌ரிணாம விம‌ர்ச‌ன‌ம் கூட‌ அதனை முறையாக க‌ற்காம‌ல் செய்ய‌ முடியாது!!!!!!!!!!!!
    வ‌ருகைக்கும் க‌ருத்து ப‌திவிற்கும் ந‌ன்றி

    ReplyDelete
  8. சகோ கரிகாலன்
    நண்பர் இபின் ஷாகிர் வழி தனி வழி!!!!!!!!!!!!!!!!

    //ஆன்மீகம் ஆபத்தில்லை //
    ஆபத்தில்லாத ஆன்மீகம்,இறை மறுப்பு கற்றுக் கொள்ள அனைவருமே தயார்.ஆனால் அரசியல் ஆவதுதான் சிக்கல்!!!!!!!!

    ReplyDelete
  9. கடவுள் இல்லை அல்லா தான் இருக்கிறான் அல்லா என்றால் அறிவியல் தான். அறிவியலை நம்பியவன் ஒரு போதும் கடவுளை நம்பி மோசம் போகமாட்டன் அரபில் -அல்லா தமிழில்-அறிவியல் ஆங்கிலத்தில்-சயின்ஸ்

    ReplyDelete
  10. கடவுள் இல்லை அல்லா தான் இருக்கிறான் அல்லா என்றால் அறிவியல் தான். அறிவியலை நம்பியவன் ஒரு போதும் கடவுளை நம்பி மோசம் போகமாட்டன் அரபில் -அல்லா தமிழில்-அறிவியல் ஆங்கிலத்தில்-சயின்ஸ்

    ReplyDelete