வணக்கம் நண்பர்களே,
பரிணாமம் குறித்த கடந்த (எதிர்)பதிவில் மனித பரிணாமம் குறித்த பல தவறான புரிதல்களை விளக்க முயன்றோம். எதிர் பதிவுகளில் எதிர்வினையாற்றுவதே முக்கிய கடமையாகிவிடுவதால் பலருக்கு சில எளிய அடிப்படைகளை விளக்க முடிவது இல்லை.
காணொளி மூலம் பார்க்கும் போது பல விடயங்கள் எளிதாக புரியும்.அவ்வகையில் மனித பரிணாமம் குறித்த ஒரு விளக்க காணொளி சமீபத்தில் பார்த்ததை கொஞ்சம் விளக்கங்களுடன் பகிர்கிறோம்.பல அடிப்படை விடயங்கள் முதல் பல படிமங்கள் பற்றிய விபரங்கள், சமீபத்திய ஆய்வுகள் என பல அம்சங்களையும் அழகாக எடுத்து சொல்கிறது. மொத்தம் பத்து ப்குதிகளைக் கொண்டது.ஒவ்வொரு பகுதிக்கும் சில குறிப்புகளை தருகிறோம். ஆங்கிலம் அறியாதோர் கூட பார்த்து புரிய ஏதுவாக இருக்கும் என நம்புகிறோம்.
பகுதி1
1.1. நாம் யார் என்னும் கேள்வியின் விடையின் முதல் பகுதி 1859ஆம் சார்லசு டார்வின் எழுதிய origin of species என்னும் புத்தகத்தின் மூலம் கிடைத்தது .உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து பரிணாம வளர்ச்சியால் கிளைத்து தழைத்தன என்பதும், இது நடக்க காரணம் இயற்கைத் தேர்வே[natural selection] என்பதையும் பல சான்றுகள்,வாதங்களுடன் விளக்கினார் டார்வின்.
*****
1.2.விடையின் இரண்டாம் பகுதி தொல் மனிதவியல் [paleoanthropology] துறையிடம் இருந்துவந்தது. கிடைத்த படிம்ங்களை, ஒப்பீட்டு அளவுகள்,கால பரிசோதனை மூலம்மனித பரிணாம மரம்[hominid evolution tree அமைக்கப்பட்டது.
A).ஹோமோ சேபியன் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன தோற்றம் _ இன்று வரை
B). ஹோமோ நியாண்டர்தால் 3 இலட்சம் ஆண்டுகள் முதல் 30,000 ஆண்டுகள் முன்புவரை
C). ஹோமோ ஹைடெல்பெர்ஜெனெசிஸ் 8 இலட்சம் ஆண்டுகள் முதல் 3 இலட்சம் ஆண்டுகள் முன்பு வரை.
*****
மனித இனம் முதலில் வேட்டையாடியே பிழைப்பு நடத்தினர்,விவசாயம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
A).ஹோமோ சேபியன் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன தோற்றம் _ இன்று வரை
B). ஹோமோ நியாண்டர்தால் 3 இலட்சம் ஆண்டுகள் முதல் 30,000 ஆண்டுகள் முன்புவரை
C). ஹோமோ ஹைடெல்பெர்ஜெனெசிஸ் 8 இலட்சம் ஆண்டுகள் முதல் 3 இலட்சம் ஆண்டுகள் முன்பு வரை.
D). ஹோமோ எரக்டஸ் 19 இலட்சம் ஆண்டுகள் முதல் 70,000 ஆண்டுகள் முன்புவரை.முதன்முதலில் நெருப்பின் பயன்பாடு, சமூக அமைப்புடன் வாழ்ந்த மனித இனம்.இந்தியா,சீனா உள்ளிட்ட பல இடங்களில் இதன் படிமங்கள் கிடைத்தன.
E). ஹோமோ ஹீபிலஸ் 25 இலட்சம் ஆண்டுகள் முதல்14 இலட்சம் ஆண்டுகள் முன்புவரை.முதல் கல் கருவி பயன்படுத்தியவர் .
F) ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரிகனாஸ் 30 இலட்சம் ஆண்டுகள் முதல்20 இலட்சம் ஆண்டுகள் முன்புவரை.
G)ஆஸ்ரலோபிதெகஸ் ஆஃப்ரான்சிஸ் 38 இலட்சம் ஆண்டுகள் முதல் 29 இலட்சம் ஆண்டுகள் முன்புவரை. இதில் லூசி எனப்படும் படிமம் மனித பரிணாம வரலாற்றையே மாற்றி அமைத்தது.
.....
*****
1.3.விடையின் மூன்றாம் பகுதி மரபியல் ஆய்வில் இருந்து வந்தது. மனித ஜீனோம் குறியீடுகள்[சுமார் 320 கோடி நுயுக்ளியோடைடுகள்) ஆவணப்படுத்தப் பட்டது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.அது பல பரிணாம செயலாக்கங்களுக்கு விளக்கம் அளித்தது. தலைமுறைரீதியான ஜீனோம் மாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.
1.4 இறுதிப்பகுதி மானுடவியல்[anthropology] எனப்படும்நடைமுறை வாழ்வில் மனித உடல்,மனம் ,அறிவு குறித்த ஆய்வுகள்.இதன் மூலமே மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்தே உலக முழுதும் பரவினான் என்பது கண்டறியப்பட்டது. உலகின் பழமையான வாழும் மனித இனம் புஷ்மேன்[bushmen] எனப்படும் ஆப்பிரிக்க நாட்டவர்.இவர்கள் பேசும் மொழியே[khoslan] தொன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் ,இது பல ஒலிவகைகளைக் கொண்டது.
மனித இனம் முதலில் வேட்டையாடியே பிழைப்பு நடத்தினர்,விவசாயம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
....
பகுதி2
இரண்டாம் பகுதியில் பூமியில் உயிரின வரலாற்றில் கால ரீதியான பிரிவுகளை விளக்கி, மனிதப் படிம்ங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளைக் காட்டுகின்றனர்.
.....
பகுதி 3.பரிணாம செயலாக்கம் என்பதை ஜீனோமின் அடைப்படையில் விள்க்குகின்றார்கள். ஒவொரு உயிரினமும் இனவிருத்தி செய்யும் போது ஆண்,பெண் ஜீனோம்(குரோமோசோம்கள்) இணைந்து புதிய உயிர் தோன்றுகிறது. ஜீனோம்கள் இணைவின் போது நிகழும் தவறுகள்(சிறு மாற்றங்கள் mutations) கொஞ்சம் விதியாசமான் வாரிசை உருவாக்குகிறது. நீண்ட கால்த்தில் இது பலவகையான் உயிர் இனங்களை[species] உருவாக்குகின்றன. இதில் சூழலுக்கு பொருந்துபவை மட்டுமே வாழ்கின்றன.மற்றவை அழிகின்றன[natural selection].
...
பகுதி2
இரண்டாம் பகுதியில் பூமியில் உயிரின வரலாற்றில் கால ரீதியான பிரிவுகளை விளக்கி, மனிதப் படிம்ங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளைக் காட்டுகின்றனர்.
.....
பகுதி 3.பரிணாம செயலாக்கம் என்பதை ஜீனோமின் அடைப்படையில் விள்க்குகின்றார்கள். ஒவொரு உயிரினமும் இனவிருத்தி செய்யும் போது ஆண்,பெண் ஜீனோம்(குரோமோசோம்கள்) இணைந்து புதிய உயிர் தோன்றுகிறது. ஜீனோம்கள் இணைவின் போது நிகழும் தவறுகள்(சிறு மாற்றங்கள் mutations) கொஞ்சம் விதியாசமான் வாரிசை உருவாக்குகிறது. நீண்ட கால்த்தில் இது பலவகையான் உயிர் இனங்களை[species] உருவாக்குகின்றன. இதில் சூழலுக்கு பொருந்துபவை மட்டுமே வாழ்கின்றன.மற்றவை அழிகின்றன[natural selection].
...
பகுதி 4.&6 மீண்டும் மனித முன்னோர்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு பற்றி விளக்குகிறார்.
பகுதி 5.புவியியல் காலக் கணக்கீட்டு அடிப்படைகளையும்,அப்போதைய புவி சூழல்களையும் விளக்குகிறார்
...
இதர பகுதிகளிலும் மனித பரிணாமம் குறித்த பெரும்பானமை அறிவியல் விடயங்கள் விளக்குகிறார். இக்காணொளி போல் மனித பரிணாமத்தை தெளிவாக விளக்கிய காணொளி இதுவரை கண்டது இல்லை.இக்காணொளியை தயாரித்த ப்ளாக் ரைடர்[Black Ryder] ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகள் பல.
அனைவரும் கண்டு மகிழ்க.
நன்றி
வணக்கம் சகோ,
ReplyDeleteநல்லதொரு பதிவுக்கு நன்றி இனி மத நிறுவனர்கள் அடக்கி வாசிப்பார்கள் என்று எதிர் பார்க்கலாம்.குறிப்புகள் சற்று விளக்கம் கூடுதலாக இருந்தால் எம்போன்றோகள் தெளிவடைய ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் இருப்பினும் மீண்டும் நன்றிகள்.
இனியவன்...
அருமையான இணைப்பு காணொளிகள்.
ReplyDeleteபரிணாமத்திற்கான உறுதியான படிமங்கள் மேலும் மேலும் தெளிவாக கிடைப்பது மேலும் வலு சேர்க்கும்.
மதங்கள் வெளியேற மனிதம் வளர வேண்டும்.
மனிதன்! நியாண்டர்தால் மனிதன் இருந்தது உண்மை.
ReplyDeleteபரிணாமம் பொய் என்று சொல்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் இங்கே...
அந்த நியாண்டர்தால் மனிதன் இப்போது எங்கே?
நன்றி நண்பர்கள்
ReplyDeleteஇனியவன், தேவப்பிரியா மற்றும் நம்பள்கி
அருமையான பகிர்வு சகோ. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் !
ReplyDeleteவாங்க சகோ இ.செ
ReplyDeleteஇந்த காணொளி மனித பரிணாமம் குறித்த அனைத்து தகவல்களையும் பகிர்கிறது. நான் பார்த்த ஆவணப் படங்களிலேயே சிறந்த ஒன்றாக குறிப்பிடுவேன்.
நன்றி
சகோ. சார்வாகன்,
ReplyDeleteஅருமையான காணொளி. நல்ல முறையில் தொகுத்து அளிக்கப்பட்டது. இந்த காணொளியின் பேச்சுகளை (script) கண்டிப்பாக தமிழில் மொழ்ப்பெயர்த்து வெளியிட வேண்டும். அனேகமாக அடுத்த வாரத்தில் செய்து வெளியிடுகிறேன். ஹா..ஹா... பரிணாமம் பற்றி, ஆங்கில கட்டுரைகளை மொழிப்பெயர்த்தும், தமிழ் பதிவுகளை வரிசைபடுத்தியும், பரிணாம எதிரான கருத்துக்களை தொகுத்து அதற்கான விடைகளை வெளியிடலாம் என்று ஆறுமாத காலகெடு வைத்தும், பணி நிமத்தமாக பத்து நாள் வேலைகூட நடைப்பெறவில்லை. எல்லாம் பரிணாமச் செயல்!!!.
நன்றி.
வாங்க சகோ நரேன்,
Deleteநலமா?. நீங்கள் சொல்வது உண்மைதான்.மனித பரிணாமம் பற்றிய அனைத்து விடயங்களையும் இக்காணொளி அருமையாக் ஆவணப்படுத்தி விளக்குகிறது.
உங்களின் தமிழாக்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
எதையும் மெதுவாக அனுபவித்து செய்வோம். நம் பதிவுகளுக்காவது நாமே முதலாளி&தொழிலாளி ஆகவே நாடும் போது செய்வோம்.
நாடாவிட்டால் செய்ய மாட்டோம்.
ஹி ஹி இப்போது நேரம் இன்மையால் வாரம் ஒரு பதிவு எழுதவே தடவ வேண்டியுள்ளது .அதுதான் சப்பைக்கட்டு!!!
ஹா ஹா ஹ நன்றி!!!
இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா?
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/10/malala-yousafzai-islam.html
வாங்க நண்பர் அருள்
ReplyDeleteஇதில் என்ன சந்தேகம்.
அதாகப்பட்டது அரசன் அசோகர் சாலை ஓரங்களில் நட்ட மரங்களை திரு இராமதாசு ஆணையின் பேரில் பாமகவினர் வெட்டியது உண்மையோ, வாரிசுகள் பதவி வகிக்க மாட்டோம் என திரு இராமதாசு பொய் உறுதிமொழி கொடுத்தது உண்மையோ, கோமூத்ராவை மருந்தாக் வந்தபோது இராமதாசு அன்புமணை சுகாதார அமைச்சராக் இருந்த போது கண்டு கொள்ளவில்லை என்பது உண்மையோ அதுபோல் தலிபான்களின் இஸ்லாமே பெண் பதிவர் சுடப்பட காரணம்.
*****
இதோ Dr. அன்புமணி ராமதாசுக்கு எனது கேள்விகள்! http://www.nambalki.com/2012/07/dr.html
நன்றி