Saturday, December 29, 2012

அண்டவெளி ஊடுருறுவல் துளை [worm hole] என்றால் என்ன?






வணக்கம் நண்பர்களே,
சகோ ஜெனில் வார்ம் ஹோல்[worm hole] பற்றி ஒரு பதிவு எழுத முடியுமா என ஒருமுறை பின்னூட்டத்தில் கேட்டு இருந்தார். சரி உருப்படியாக எழுதுவோம் என கொஞ்சம் விவரங்கள் தேடி பதிவிடுகிறேன்.

முதலில் இதற்கு சரியான தமிழ்பதம் என்ன என யோசித்து அண்டவெளி ஊடுறுவும் துளை எனப் பெயரிட்டேன். விக்கிடியாவில் உள்ள பெயர் நம்க்குப் பிடிக்கவில்லை. சரி பின்னூட்டங்களில் இதனை விவாதிப்போம்.

வார்ம் ஹோல் என்றால் என்ன? விக்கிபிடியாவில் இருந்து வரையறை செய்வோம்.
In physics, an Einstein-Rosen Bridge (or wormhole) is a hypothetical topological feature of spacetime that would be, fundamentally, a "shortcut" through spacetime.

இது ஐன்ஸ்டின்[Albert Einstein ] ,ரோசன்[Nathan Rosen ]  ஆகியோரின் வெளிநேரம்[spaceime] பற்றிய‌ 1935 ஆம் வருட‌ கருதுகோள் ஆகும். வெளிநேரம் ஊடே செல்லும் குறுக்கு வழி ஆகும். இதன் மூலம் ஒளியை விட வேகமாக பயணிக்க இயலும். இது கருதுகோள் மட்டுமே என்பதால் பரிசோதிக்கக் கூடிய சான்றுகள் இதுவரை இல்லை.

ஒரு எளிய எ.கா எனில் பூமியின் மேற்பரப்பு வளைந்து இருப்பதால் ,இரு தொலை தூர ஊர்களுக்கு சுரங்கம்  வெட்டி,அதன் மூலம் நேர் கோட்டில் பயணம் செய்தால் சீக்கிரம் சென்று விட முடியும் அல்லவா அது போல்தான். ஒளியும் [ஈர்ப்பு விசையால்]வளைந்து பயணம் செல்லும் என்பதும் நாம் அறிந்ததே.


Wormhole illustration

A beam of light traversing a path between two points in curved space-time can take longer to complete the journey than a hypothetical spaceship taking advantage of a wormhole’s shortcut connection between the two distinct regions of space-time.

கொஞ்சம் கற்பனைக் குதிரையை தட்டி எழுப்புங்கள். அதாவது இந்த பிரபஞ்சமே ஒரு ஏதோ ஒரு வடிவத்தில் பல பரிமாணங்களில் உள்ளது. அதில் எல்லைப் புள்ளிகள் ஒன்றுக் கொன்று இடையே ,இந்த வார்ம் ஹோல்களால் இணைக்கப் பட்டு உள்ளன. ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு ஒளியைவிட வேகமாக பயணிக்க முடியும்!!.

அது எப்படி? நிரூபிக்க முடியுமா? என கேட்காதீர்கள்!!. நான் சொன்ன‌ விவரங்கள் இப்போதைய அறிவியலின் கருதுகோள்கள்.

கருதுகோள் அடிப்படை சான்றுகள் இல்லாமல் வைக்க முடியுமா? வார்ம் ஹோல் இருக்கா இல்லையா,அதை சொல் நண்பா என்கிறீர்களா!!!.

அதாகப் பட்டது ஆல்பட்ர் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கொள்கையானது ஈர்ப்பு விசை,காலம்,நேரம் போன்றவற்றை தொடர்பு படுத்தி சில வகைக் கெழு சமன்பாடுகள்[differential equations] ஆக்கியது.


அச்சமன்பாடுகளின் தீர்வுகள் பல. அதில் ஒன்றே பெருவிரிவாக்க கொள்கை,பிரபஞ்சம் விரிவடையும் போதும் அதன் எல்லைப் புள்ளிகளுக்குள் பயணிக்கும் குறுக்கு வழி இருக்கும் என்பதும் இந்த தீர்வின் நீட்சியே!!.


அப்போ வார்ம் ஹோல்  என்பது ஐன்ஸ்டினின் பொது சார்பியல் சமன்பாடுகளின் ஒரு தீர்வு அல்லது விளக்கம் அப்படினு மட்டுமே சொல்கிறேன் சகோ!!
See this!!



இந்த பொது சார்பியல் சமன்பாடுகளைக் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்!! ஹி ஹி


இந்த சமன்பாடுகள் தவறென்று ஒதுக்கப் படாதவரை வார்ம் ஹோல்ஸ் உண்டு என அறிவியல் தேடுகிறது.அவ்வளவுதான்!!

கருந்துளை,வார்ம் ஹோல் இரண்டுமே ஐன்ஸ்டினின் சமன்பாடுகளின் நீட்சி விளக்கமே. கருந்துளை என்பது இப்போது உண்டு என சான்றளிக்கிறார்கள். 

கருந்துளை பற்றிய நமது முந்தைய பதிவு.

http://aatralarasau.blogspot.com/2011/10/black-hole-18.html

ஆகவே வார்ம் ஹோல் என்பதும் உண்மை ஆகுமா? என்பதை காலம் பதில் சொல்லும்.

நன்றி!!

20 comments:

  1. //வெளிநேரம் ஊடே செல்லும் குறுக்கு வழி ஆகும். //
    சரி

    //இதன் மூலம் ஒளியை விட வேகமாக பயணிக்க இயலும்.//

    குறுக்கு வழி மட்டுமே. வேக அதிகரிப்பான் அல்ல. தயவு செய்து சரி பார்க்கவும். மற்றபடி விவரமான கட்டுரைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே,

    சுவாரஸ்யமான பதிவு.
    வார்ம் ஹோல் ஒரு ஷார்ட்-கட் வழி போன்றது, மற்றபடி அனைத்து இயற்பியல் விதிகள் அதற்கும் பொருந்தும்.[நந்தவனத்தான் சொன்னது போல்].

    ReplyDelete
    Replies
    1. நண்பரே இது இப்போது ஐன்ஸ்டின் விதியின் ஒரு நீட்சி கருதுகோள் மட்டுமே!!.
      நன்றி!

      Delete
  3. இந்த பிரபஞ்சத்தில் எந்த பொருளும் தொடர்சியாக இருப்பதில்லை, உதாரணத்திற்கு, உங்கள் ஆடையை நுண்ணோக்கி வழியே பார்த்தால் அதில் சிறிய இழைகள் தொடர்சியாக இல்லாமல் இடைவெளி விட்டு அமைந்திருக்கும். அது போலவே காலமும். அந்த சிறிய இடைவெளி தான் வார்ம் ஹோல்.
    இதன் மூலம் காலப்பயணமும் செய்ய முடியும், இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும்.

    http://www.youtube.com/watch?v=toT6OHJbHKE

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எதிர்பார்ப்புகள் உண்மையாக வாழ்த்துக்கள்!

      Delete
  4. அந்த வீடியோ அருமை.ஒரு சில விபரங்கள் தெரிந்திருந்தாலும் விடியோ பலவற்றை விபரமாக சொல்லியுள்ளது.

    ReplyDelete
  5. @ram:
    Space - Time continuum ங்க.. சிறிய இடைவெளி மட்டுமில்ல.. எந்த இடைவெளியும் கிடையாது.. see point of singularity.. fracture in time frame இது வர எந்த முக்கியமான இயற்பியலாலரும் ஏத்துக்காத விஷயம்..

    @author: நந்தவனத்தான் சொன்னது போல wormholeல ஒளி வேகத்த தாண்டிய பயணம் சாத்தியமல்ல.. GR சமன்பாடு பாத்தீங்கன்னா 'c - velocity of light' numerator ஆகவும் 'v - velocity of mass ((1-v^2/c^2))' denominator ஆகவும் வரும்.. நீங்க சொல்ற கூற்றுப்படி mass காணாம போயிடர கணக்குலாம் வருது !!

    ReplyDelete
  6. அருமை சார்வாகன்.

    ReplyDelete
  7. வணக்கம் சகோ. வழக்கம் போல் கலக்கல் பதிவு அசத்துங்க!!!!!

    புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்......

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்......
      சகோ நன்றி!

      Delete
  8. சாறு ,இந்த பதிவில் புகுந்ததற்கு மன்னிக்கவும் .உங்களின் தேடலுக்கு பதில் தந்துவிட்டார்கள் .
    http://www.pichaikaaran.com/2012/12/blog-post_25.html#c7367573537895239717

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      எதுக்கு மன்னிப்பு? நாம் மூமின்களுக்கு தொண்டு செய்வதையே முதல் இணைய பணியாக வைத்து இருப்பதால் உங்களுக்கே முதல் இடம். பிச்சைக்காரன் நம்ம சகோதான்.ஏதோ அவரும் தாவாவில் இறங்குவதை வரவேற்கிறோம்.
      சகோ இப்பூ எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதை அந்த பிச்சை ஒரு தர்காவாதி.நம்ம வஹாபிகள் அரபு நாடுகளில்தர்காவை இடிப்பதை தவறுன்னு பதிவு அவரு எப்பவோ போட்டு இருக்காரு!!.கோயில் ,தர்கா,சர்ச் இடிக்காமல் எப்படி மதம் வளரும் என்ற அடிப்படை விடயம் கூட தெரியாதவரை பார்த்தால் பாவமாக இருக்கு!!

      ஆனால் இப்படி எழுதி என்ன தாவா செய்ய முடியும்?

      1.மத அறிவியல் 2. பரிணாம எதிர்ப்பு 3. சவுதி(அரபி) புகழ் என தாரை தப்பட்டைகள் கிழிய அடித்து நொறுக்க வேண்டாமா!!

      அவரு சா.நி[சாரு நிவேததித] சிஷ்யன். சா.நி யார் என்றால் நித்தி சிஷ்யன்.

      ஆகவே பிச்சையிடம் சாக்கிரதை!!!

      மூமின்களின் பணியில்

      சார்வாகன்

      Delete
  9. வணக்கம் நண்பர்கள்,[ நந்தவனம்& வெள்ளைக்காரன்]
    இப்பதிவில் தெளிவாக கூறி இருக்கிறேன். வார்ம்ஹோல் என்பது ஒரு சான்றுகள் அற்ற கருதுகோள், ஐன்ஸ்டினின் பொது சார்பியல் சமன்பாடுகளின் ஒரு நீட்சி தீர்வு ஏன்பதே பதிவின் சாரம் ஆகும். ஐன்ஸ்டினின் வகைக் கெழு சமன்பாடுகள் ஒளியை விட வேகமாக செல்லும் என கணிக்குமா என ஆய்வுக்கட்டுரைகள் உண்டு. அதற்காக அது பரிசோதிக்கும் வரை உண்மை ஆகிவிட முடியாது..

    ஆக்வே ஐன்ஸ்டினின் சமன்பாடுகளுக்கு உள்ள பல தீர்வுகளில் ஒன்று ஒளியை விட வேகமாக செல்லும் வாய்ப்பை அளிக்கிறது.
    http://www.huffingtonpost.com/2012/10/10/einsteins-math-faster-than-light-travel_n_1951272.html
    Although Einstein's theories suggest nothing can move faster than the speed of light, two scientists have extended his equations to show what would happen if faster-than-light travel were possible.
    Despite an apparent prohibition on such travel by Einstein’s theory of special relativity, the scientists said the theory actually lends itself easily to a description of velocities that exceed the speed of light.
    "We started thinking about it, and we think this is a very natural extension of Einstein's equations," said applied mathematician James Hill, who co-authored the new paper with his University of Adelaide, Australia, colleague Barry Cox. The paper was published Oct. 3 in the journal Proceedings of the Royal Society A: Mathematical and Physical Sciences.

    ReplyDelete
  10. http://phys.org/news/2012-10-physicists-special-relativity.html
    Now two physicists – James Hill and Barry Cox from the University of Adelaide in Australia – have shown that Einstein's theory of special relativity can be logically extended to allow for faster-than-light motion. They're quick to point out that their finding in no way contradicts the original theory, but simply provides a new aspect of it. "As far as I'm aware, this is the first natural, logical extension of Einstein's own theories," Hill said. "We certainly haven't superseded Einstein. The two theories are entirely consistent." There have been other suggestions of objects exceeding c – tachyons, for example – but these superluminal motions require complicated mathematics such as imaginary masses and complicated physics to ensure real, meaningful outcomes. In contrast, Hill and Cox's proposal arises from the same mathematical framework as Einstein's theory. As the physicists explain in their paper, the Lorentz transformation is traditionally used in special relativity to reconcile different observations made by different observers in different inertial reference frames, and it applies to relative velocities less than the speed of light. Here the scientists have proposed two new transformations that complement the Lorentz transformation to explain different observations, and both new transformations apply to relative velocities greater than the speed of light. The physicists aren't sure which of the two new transformations is the correct one, and they don't ignore the possibility that both transformations may be equally plausible if for some reason Einstein's theory bifurcates at c into two variations.

    Read more at: http://phys.org/news/2012-10-physicists-special-relativity.html#jCp
    எப்படி ஐன்ஸ்டினின் விதிகள் நிலையான பிரபஞ்சம்,விரிவடையும் பிரபஞ்சம் இரண்டையும் வரையறுக்கிறதோ அதுபோல் மட்டுமே!!

    ஆகவே ஐன்ஸ்டினின் விதி ஒளியைவிட வேகமாக செல்வதைக் கணிக்கும் படியும் ஒரு(பல) தீர்வு(கள்) உண்டு. எனினும் பரிசோதனை இன்றி எதுவும் முழு உண்மை&சான்று ஆகாது.
    நன்றி!!

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    ந‌ன்றி!

    ReplyDelete