வணக்கம் நண்பர்களே,
இணையத்தை பயன்படுத்தும் பெரும்பான்மையோர் அறிவியல் பாடம் பள்ளியில் படித்து இருப்போம். ஏதோ சில விதிகள், வாயில் நுழையா பெயர்கள்,சூத்திரங்கள்,வரையறுப்புகள் என பலருக்கு எரிச்சல் ஊட்டிய பாடம் ஆகவே இருந்து இருக்கும். அறிவியல் என்பது என்ன? என்ற கேள்விக்கு சரியாக விடை சொல்வது கடினமே!!. பல பொருந்தும் வரையறுப்புகள் உண்டு,எங்கு குறிப்பிடுகிறோமோ அதற்கு தக்கபடி அதனைப் பயன்படுத்த வேண்டும்.
அறிவியல் என்பது அறியும் இயல் என தமிழில் சொல்கிறோம்,இயற்கையை ,அதன் நிகழ்வுகளை அறியும் இயல் என விளங்கலாம். இயற்கை என்பது என்ன என் அடுத்த கேள்வி வரும்.
இப்படி தொடர் கேள்விகளுக்கு விடை அளிப்பதும் அறிவியலே.இயற்கை என்றால் நாம் அறிந்த,உணர்ந்த விடயம் என்றாலும் இதன் மேலும் கேள்விகள் வரும்.
1.அறியாத/உணராத விடயம் அறிவியல் இல்லையா?
2. அறிய இயலா /உணர இயலா விடயம் அறிவியல இல்லையா?
முதல் கேள்வி சரியானது, புதிதாக் அறியும்,உணரும் விடயங்கள் அறிவியல் என்றாலும் சான்றுகள் வரும் வரை ஏற்கப் படாது.
இரண்டாம் கேள்வி குயுக்தியான தந்திரம் கொண்டது. முந்தைய கேள்விக்கு ஆம் எனில் இதுவும் உண்மையாக இருக்கலாமே என வாதிட முடியும்.
முதல் கேள்வி சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் உண்மை ஆகும். இரண்டாம் கேள்வி என்றுமே சான்றுகள் அடிப்படையில் உண்மை ஆகாது.இதில் ஒரு சிக்கல் என்ன்வெனில் பொய் என்றும் சான்றுகள் காட்ட இயலாது.இந்தவகை விளக்கங்கள் போலி அறிவியலை கொண்டு வந்து விடும்.
ஆகவே அறிவியல் என்பது கிடைத்த அளவீட்டு சான்றுகளின் விளக்கம்.அந்த விளக்கத்தின் மீதான கணிப்புகள் எதிர்கால சான்றுகளையும் மெய்ப்பிக்க வேண்டும்.இப்படியே அறிவியல் ஒரு தொடர்கதை....
இது ஒரு அளவுக்கு பிரச்சினை இல்லாத விளக்கம் என்றாலும் சான்று என எதை ஏற்பது? என்பது இன்னும் அதிக சிக்கலான விடயம்.
ஆகவே அறிவியல் என வரையறுப்பதில் உள்ள சிக்கல்களை உணரவேண்டும்.
*
இப்பதிவில் அறிவியலின் இரு முகங்களை பார்க்கப் போகிறோம்.திருவிளையாடல் படத்தில் புலவர் தருமி[நடிகர் நாகேஷ் நம்ம அய்யா அல்ல] , புலவர் இறையனாரிடம்[ சிவனின் அவதாரம்]பல கேள்விகளை கேட்பார், அதில் ஒன்றுக்கொன்று முரணான விடயங்கள் பற்றியே அதிக கேள்விகள் வரும்.
இதில் கவனிக்க வேண்டியது கேள்விகள் ஒன்ன்றுக்கொன்று முரண்படுவது போல்,பதில்கள் முரண்படாது,அதிக பட்சம் தொடர்பு அற்று இருக்கும்.
பிரிக்க முடியாதது என்னவோ? - தமிழும் சுவையும்;
பிரியக் கூடாதது? - எதுகையும் மோனையும்;
சேர்ந்தே இருப்பது? - வறுமையும் புலமையும்;
சேராதிருப்பது? - அறிவும் பணமும்
சொல்லக் கூடாதது? - பெண்ணிடம் ரகசியம்;
சொல்லக் கூடியது? - உண்மையின் தத்துவம்
பார்க்கக் கூடாதது? - பசியும் பஞ்சமும்;
பார்த்து ரசிப்பது? - கலையும் அழகும்
இதை ஏன் சொல்கிறோம் என்றால் கேள்விகள் என்பது தேடல், முரண்படும் கேள்விகளின் விடைகள் முரண்பட அவசியம் இல்லை என்பதுதான். ஆத்திகம்,நாத்திகம் கூட விடையற்ற கேள்விகளுக்கு விடை தேடும் முறைகள் மட்டுமே!!!
**
அறிவியலில் அறிந்த விடயம்,அறியா விடயம் என இரு விதம் உண்டு என அறிவியலின் வரையறுப்பில் அறிகிறோம்.
அறிந்த என்றால் ஒரு அறிவியல் விதி என எடுத்துக் கொள்வோம்.
ஒரு அல்லது சில அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு இயற்கை நிகழ்வை, அதன் காரணிகளாக பகுத்து, அவ்ற்றுக்கு இடையே உள்ள தொடர்பை ஒரு விதி ஆக்குகிறார்கள். நமது பள்ளி ஆய்வகங்களில் அதனை பரிசோதித்து ,ஆய்வு முடிவுகளை ஆவணப் படுத்துகிறோம்.
ஒரு வகுப்பில் ஒரே பரிசோதனையை பலர் செய்யும் போது , முடிவுகள் கொஞ்சம் மாறுபடும். இந்த வித்தியாசங்கள் ஒரு அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.அப்போதுதான் அந்த விதியை சரியாக பரிசோதித்து இருக்கிறோம்.அல்லது அந்த விதி மாற்றப்பட வேண்டும்!!!
அறிவியலின் படி இரு அளவுகள் சமம் எனில் அதன் வித்தியாசம் மிக குறைவாக இருப்பதே.
சரி ஏன் வித்தியாசம் வருகிறது?
பலர் ஒரு பரிசோதனையை ஒரே இடத்தில் செய்தாலும்,பயன்படும் பொருள்களின் நிலை சார்ந்து வரலாம்,அதாவது சூழல் சார்ந்து வரலாம். பொருள்களின் தன்மைகளும் சூழல்,காலம் பொருத்து மாறும்.அளவீட்டுக் கருவிகளின் தரம் மாறலாம்.
எப்படி இருந்தாலும் ஒரு பரிசோதனையை பலர் செய்யும் போது வித்தியாசம் வருவது இயல்பு. அந்த வித்தியாசம் அதிகரிக்கும் சூழல் வரும் போது,புதிய காரணிகள் விதிகளில் சேர்க்கப்படும்,விதி மாறும்.
ஆகவே ஒரு விதியில் சரியாக அளவிடும் மாறா தன்மை[Deterministic],மாறும் தன்மை[chance] இரண்டும் உண்டு.இந்த மாறும் அளவுகள் குறைவாக இருக்கும் வரை விதி ஏற்கப்படும்.
இதையே இருமுகத் தன்மை என்கிறோம்.
http://dualityscience.com
Duality also refers to phenomena having a twofold nature and characterized by states that are mutually exclusive.
Rule= Deterministic +Chance
விதியின் மாறா பகுதியின் காரணிகள் நன்கு வரையறுக்கப்பட்டவை, நன்கு பரிசோதிக்க முடியும்,மாறும் பகுதி புதிய அல்லது சில விளக்க இயலா காரணிகளால் இருக்கலாம்.
http://plato.stanford.edu/entries/determinism-causal/
http://plato.stanford.edu/entries/determinism-causal/
இந்த நூற்றாண்டின் மிக முக்கிய மூன்று அறிவியல் கொள்கைகள் சார்பியல்,குவாண்டம் இயக்கவியல்,பரிணாமம் ஆகியவை ஆகும்.
இந்த இருமுகத் தன்மை இந்த மூன்றுக்கும் பொருந்துவது மட்டும் அல்ல,இந்த கொள்கைகள் கொண்டும் அறிவியலின் இருமுகத் தனமையை விளக்கலாம்.
சார்பியல்=மாறா விடயம் ஐன்ஸ்டினின் விதிகள், மாறும் விடயம் கருப்பு பொருள் இருப்பு சார்ந்து இதன் அளவீட்டு நிரூபணத் தன்மை இப்போது கேள்விக்கு உள்ளாகிறது.
குவாண்டம் இயக்கவியல்= நிகழ்த்கவு சார்ந்து அறியும் விடயம், ஒரு செயலின் வேகம்,இடம் ஆகியவற்றை நிகழ்த்கவு சார்ந்தே அளவிட முடியும் என்பது மிக சரியாக அறிவியலின் இருமுகத் தன்மையை விளக்குகிறது.
பரிணாமம்= மாறா விடயம்[deterministic] =சூழல் சார் மாற்றம் இயற்கைத் தேர்வு
மாறும் விடயம்[chance]=சூழல் சாரா மாற்றம், சீரற்ற மரபு விலகல்[Random Genetic Drift].
பரிணாம அறிவியல் ஆய்வாளர்களில் ஒரு செயல் இயற்கைத் தேர்வினால் நடந்ததா இல்லை,சீரற்ற மரபு விலகலா என் குடுமிப் பிடி சண்டை அடிக்கடி நடக்கும்.
மாறா விடயத்தை சரியாக கணிக்க முடியும் அளவுக்கு, மாறா விடயங்களை கணிப்பது விளக்குவதில் சிக்கல் உண்டு.
ஆகவே அறிவியல் விதிகளும் சூழல் பொறுத்து மாறும்.ஒவ்வொரு விதியும் சரியாக இருக்க நிகழ்தகவு உண்டு.
சூழல் என்னும் போது சார்பியல்,மாறும் என்பது பரிணாமம்,அதன் நிகழ்த்கவு என்பது குவாண்டம் ஆகும்.
அறிவியலில் ஒரு புதிய விளக்கம் அளிக்கும் போது அறிவியல் ஆய்வாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் மட்டுமே செயல்படுவார்.
ஏன் எனில் அவர்கள் இந்த இருமுகத் தன்மையை உணர்ந்து இருப்பதால்.
பாருங்கள் சென்ற வருடம் ஹிக்ஸ் போசான் ஆய்வில் ,கண்டுபிடிக்கப்பட்ட
போசானைப் தொடர்ந்து பரிசோதித்து வந்த ஆய்வாளர்கள் நேற்று அது போசானாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என உறுதியாக் சொல்வதாக தெரிவிக்கின்றனர். ஹி ஹி.
Scientists at the Large Hadron Collider say the particle outlined in July 2012 looks increasingly to be a Higgs boson.
The Higgs, long theorised as the means by which particles get their mass, had been the subject of a decades-long hunt at the world's particle accelerators.
ஹிக்ஸ் போசான் ஒரு பொருளுக்கு நிறை எப்படி வருகிறது என்பதை விளக்குகிறது.இதன் மீது இன்னும் பல ஆய்வுகள் நடக்கும் போது அதிக விவரம் தெரியலாம்.
எடை கொடுக்கும் என்றால் மந்திரம் போல் எடை வருமா? என பரிசோதிப்பது அல்ல,அப்படி எளிய முறையில் விளக்க முடியுமா என இப்போது தெரியாது.
அணு உடைப்பான் அமைப்பில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளுக்கு பொருந்தும் விளக்கமாக போசான் துகள் இருப்பு சாத்தியம் அதிகம் என உறுதி செய்யப் படுகிறது.
அதன் மேல் விவாதம்,ஆய்வுக் கட்டுரை,பலரின் பல பரிசோதனைகள் என சில வருடங்கள் செல்லும். பிறகு உறுதியானால் பிரபஞ்ச புதிரின் அடுத்த கட்டம் செல்வார்கள்.
அடுத்த பதிவில் போசான் துகள் என ஒருமித்து கருத்து உறுதியானால் என்ன ஆய்வுகள் தொடரும் என விவாதிப்போம்.
அப்புறம் இதையும் சொல்லி விடுவோம்!!!
"அவனே எடையை அளிக்கிறான்" அல்லது "அனைத்தையும் அளிக்கிறான்"என்பது போன்ற மத புத்தக வசனம் கொண்டு ஹிக்ஸ் போசான் மத அறிவியல் வித்தை காட்டும் மத வாதிகள் கொஞ்சம் பொறுத்து செயல்பட அறிவுறுத்துகிறோம்.
அறிவியல் விதி வரும் முன்னே, மத அறிவியல் வசனம் வரும் பின்னே!!!
ஹி ஹி நாமே ஆலோசனை கொடுத்து விட்டோமா!!
நன்றி!!
சார்வாகன் அவர்களே
ReplyDeleteஉங்களின் பெருமுயற்சிக்கு எனது பாராட்டுக்கள்
உங்களுடைய பதிவுகள் எனக்கு எவ்வாறு இருக்கிறது என்றால் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் தண்ணீர் கிடைத்தாற்போல் இருக்கிறது
இந்த தகவல் தொழிநுட்ப காலநிலைகளிலாவது பல மாற்று கருத்துக்கள் பரவ வேண்டும் அப்பொழுது தான் பல உண்மைகள் வெளிவரதொடங்கும்
இன்றைய சூழ்நிலையில் மிகபெருன்பன்மையான ஊடகங்கள் மதவாதிகளின் பிடியில் இருப்பதால் மக்களின் சிந்தனைகள் முடக்கப்பட்டு அறிவியல் மிகமெதுவாக வளர்ந்து வருகிறது
எனக்கும் உங்களுடைய சில பதிவுகள் புரிவதில்லை (பரிணாமம், சார்பியல்) இருந்தாலும் அவற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்
உங்களுடைய பணி தொடர்ந்து நடக்கட்டும்
நண்பர் சூரி வாங்க,
Deleteநலமா? என்னை நண்பர் அல்லது சகோ என அழைத்தால் போதும்.
பெரியார் கால நாத்திகம்,அப்போதைய ஆத்திகம்,மூட நம்பிக்கைகளை வீழ்த்தியது உண்மைதான். ஆனால் ஆத்திகத்தின் இப்போதைய பரிமாணம் போலி அறிவியல் ஆகும்.
ஆன்மீகம் என்பதும் ஒப்பில்லா அறிவியல், சரி/த்வறு என் நிரூபிக்க முடியா விடயம் என பிரச்சாரம் செய்கிறார்.
பாருங்கள்
"அறிவியலால் கடவுள் இல்லை என் நிரூபிக்க முடியாமையால், கடவுள் உண்டு"
அறிவியல் என்பது தொடர் பரிசோதனைகள் மூலம் ஏற்கப்படும் விளக்கம் என்றால் மட்டுமே இந்த போலி அறிவியலை மறுக்க முடியும்.
உண்மையான அறிவியல்+எளிமையான விளக்கம் மட்டுமே இதனை வீழ்த்த முடியும். இந்த போலி அறிவியலின் குழப்பங்களில் பெரிய விஞ்ஞானிகளே விழுந்து போவார்.
**
ஒரு உணவகத்தில் கிடைக்கும் உணவு போன்றது,பள்ளி கல்லூரிகளில் கிடைக்கும் அறிவியல் பாடம். சில உணவுப் பண்டம் செய்யக் கற்றாலும் அதற்கான செய்முறையை வேதம் போல் ஏற்கவே ,மனனம் செய்யவே கற்பிக்கப் படுகிறது.
மாற்று சிந்தனைகள் இம்முறையில் வராது, நியுட்டன் விதியில் ஏற்படும் பிழைதான் ஐன்ஸ்டின் விதி பரிணமிக்க காரணம் ஆனது. ஆகவே பிழை என்பது ஏன் ,எப்படி வருகிறது என்பதுதான் புதிய அறிவியல் உருவாகும் வழி.
ஒரு பரிசோதனையில் வரும் பிழை,வித்தியாசம் ஏன் என மாணவர்கள் சிந்திக்காமல், விடைகளை மாற்றியாவது ,ஆசிரியரிடம் மதிப்பெண் பெற நினைக்கின்றனர்.
ஆசிரியருக்கும் இப்படி விளக்கம் சொல்ல பிடிப்பது இலை.பிழை வந்தால், அது ஏன் என் விளக்கம் தர வேண்டும் இதைப் போய் எவன் செய்து ம்ம்ம்ம்ம்ம்ம்.
நம் கல்வியில் இது சரி/தவறு என்னும் மாயையை உருவாக்கி விடுவதால் சிந்திக்கும் முறை,எதையும் சான்றுகள் மீது பரிசோதித்து ஏற்கும் முறை மறந்து போகிறது.
**
அறிவியலின் விதிகளே சூழல் சார்ந்து,நிகழ்த்கவு சார்ந்தே உண்மை என்னும் போது, மதபுத்தகத்தில் அறிவியல் என்பது மோசடி என எளிதில் புரியும்.
நிறைய கேள்வி கேளுங்கள் சகோ!! .அவசியம் எனில் விளக்கப் பதிவு இட தயாராகவே இருக்கிறேன்.
நன்றி!!
\\இந்த நூற்றாண்டின் மிக முக்கிய மூன்று அறிவியல் கொள்கைகள் சார்பியல்,குவாண்டம் இயக்கவியல்,பரிணாமம் ஆகியவை ஆகும்.\\
ReplyDeleteஇதில் ஒரு சிறிய திருத்தம் இரண்டு அறிவியல் கொள்கைகள்
சார்பியல்,குவாண்டம் இயக்கவியல்
ஒன்று அறிவியல் ஒரு சதவிகிதமும் கலவாத கற்பனை.
பரிணாமம்-இளிச்சவாயன் நெத்தியில் போட்ட பட்டை நாமம்.
மாமு, நீங்க நெசமாலும் தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்தீர்களா? இந்த மாதிரி யாரும் எழுதுவதில்லை. நீங்க எழுதுவதை புரிந்துகொள்வது கமல்ஹாசன் பேசுவதை விட கடினமாக இருக்கிறது.
இதில,
\\உங்களுடைய பதிவுகள் எனக்கு எவ்வாறு இருக்கிறது என்றால் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் தண்ணீர் கிடைத்தாற்போல் இருக்கிறது\\ இப்படி உசுபேத்தி உடறதுக்குன்னே நாலு பேரு. செத்தாண்டா சேகரு..............
வாங்க மாப்ளே தாசு,
Deleteஇப்பதிவில் அறிவியலில் ஒரு புது விதியாக ,கொள்கையாக ஏற்க முந்தைய கொள்கைகளில் ஏற்படும் பிழை காரணம் என விளக்கி இருக்கிறோம்.கொள்கைகளில் இருக்கும் மாறும் விடயம் குறித்த ஆய்வில்தான் புது கொள்கைகள் பரிணமிக்கின்றன.
இயற்கையின் நிகழ்வுகளை,சான்றாக்கி பொருந்தும் விளக்கம் அறிவியல். ஆகவே சார்பியல்,குவாண்டம் ஆகியவற்றுக்கு பொருந்தும் பரிசோதனைகள் போல் பரிணாமத்திற்கும் பொருந்துவதாக அறிவியல் உலகம் ஏற்கிறது.
இதை சிந்திப்போம்
பாருங்க ஹிக்ஸ் போசான் உறுதி செய்யப்பட்ட என இப்போதைய செய்தி,எப்படி உறுதி செய்யப் பட்டது என் நமக்கு புரியுமா?
ஏதோ சில சமன்பாடுகள்,அதன் மீது பரிசோதனை,அந்த விளக்கம் மூலம் இந்த முடிவு.
இதனை வைத்து ஹிக்ஸ் போசான் எடை அளிக்கிறது என் எப்படி கூற முடியும்?
1.எடையில்லாமல் இருக்கும் பொருள் ஹிக்ஸ் போசானால் எடை பெற்றால் மட்டுமே ஏற்க முடியும்[ ஹி ஹி ஒரு உயிரி ஆய்வகத்தில் இன்னொரு உயிரியாக மாறினால் மட்டுமே பரிணாமம் ஏற்போம்]
2. ஒரு அணுவில் இருந்து ஹிக்ஸ் போசானை நீக்கி எடை இல்லை என காட்ட முடியுமா?[ ஹி ஹி உடல் இல்லாமல் உயிர்,ஆத்மா உண்டு]
இவைகளை செய்யாமல் ஹிக்ஸ் போசான் கண்டுபிடிப்பில் உறுதிப் படுத்தலை
ஏற்பீர்கள் சரியா?
நேரடியாக பரிசோதனை செய்ய இயலாமல், சில கணிப்புகளை உறுதிப்படுத்துகிறார்கள். பரிணாமத்திலும் அப்படியே!! படிம உரு ஒப்பீடு, ஜீனோம் மாற்றம் பரிணாமத்தை வழி மொழிகின்றன.
ஏன் பரிணாமத்திற்கு மட்டும் ஓர வஞ்சனை!!!
சிந்திக்க மாட்டீர்களா
**
/மாமு, நீங்க நெசமாலும் தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்தீர்களா? இந்த மாதிரி யாரும் எழுதுவதில்லை. நீங்க எழுதுவதை புரிந்துகொள்வது கமல்ஹாசன் பேசுவதை விட கடினமாக இருக்கிறது./
என்னாது நான் என்ன கமல் மாதி குரலை மாத்தி மாத்தி மாடுலேசனிலா பதிவு எழுதுகிறேன்.
அபிராமி,அபிராமி எனவா புலம்புகிறேன்!!!!!!!!!
திட்டுவது என்றால் நேரடியாக திட்டும். அப்புறம் அண்ணன் பீ.சே என்னையும் ஆபாசமாக திட்டுவார் ஹி ஹி.உள் குத்து வேண்டாம்
நன்றி!!
முஸ்லிம்கள் பற்றி செய்தி உண்மையாக இருந்தாலும் சரி ,புரளியாக இருந்தாலும் சரி ,அண்டார்டிகா வரை சென்று தொடுப்பு [உபயம் தமிழச்சி] கொடுக்கும் சார்வாகன் ,நம்மூர் இதுமாதிரியான தொடுப்பை கண்டும் காணாமல் இருப்பது எதனின் இருமுகத் தன்மை?
ReplyDeletehttp://www.vinavu.com/2013/03/15/maharashtra-saffron-state-terror/#comment-80668
Deleteசகோ இப்பூ வாங்க,
ஸலாம்,வினவு பதிவு படித்தேன் ,குஜராத் கலவரம் பற்றி ஊடகங்கள் மூலம் அறிய முடிவது இதுதான்.
1. கோத்ராவில் பிப்ரவரி 27,2002 ல் கரசேவகர்கள் அடங்கிய இரயில் எரிக்கப்பட்டது.இதில் 58 பேர் பலி
2. இது முஸ்லிம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என சிலர் கைது செய்யப்பட்டு 31 முஸ்லீம்கள் தண்டனையும் பெற்றார்.
http://en.wikipedia.org/wiki/Godhra_train_burning
The Godhra Train Burning was a pre-planned attack by a Muslim mob on the morning of the 27th of February, 2002, in which 58 Hindus including 25 women and 15 children were burnt to death in a fire inside the Sabarmati Express train near the Godhra railway station in the Indian state of Gujarat.[2] Many of the people killed were Hindu pilgrims and activists who were returning from the holy city of Ayodhya.[3][4] Investigations and court rulings on the case later established that the fire was caused by arson by radical Islamist mobs and 31 people were convicted for the crime.[5][6]
3. ரயில் எரிப்பு சம்பவம் பின் நடந்த இனக் கலவரத்தில் 790 முஸ்லிம்கள்,254 இந்துக்கள்[ பெரும்பான்மை தலித்,ஆதிவாசிகள்]கொல்லப்பட்டனர்.முஸ்லிம்கள் சொத்துகளுக்கு பெரும் சேதம் விளைந்தது.
இரு தரப்பிலும் பலர் கைது செய்யப் பட்டனர்.
http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence
his in turn prompted retaliatory attacks against Muslims and general communal riots on a large scale across the state, in which 790 Muslims and 254 Hindus were ultimately killed and 223 more people were reported missing.[1][6] 536 places of worship were damaged: 273 dargahs, 241mosques, 19 temples, and 3 churches. [7]Muslim-owned businesses suffered the bulk of the damage. 61,000 Muslims and 10,000 Hindus fled their homes. Preventive arrests of 17,947 Hindus and 3,616 Muslims were made. In total 27,901 Hindus and 7,651 Muslims were arrested.[8][9][10]
4.இந்த கலவரத்தை அ(இ)ப்போதைய முதல்வர் திரு மோடி சரியாக அடக்கவில்லை என எதிர்க் அட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட இந்து,மூஸ்லிம்கள் சிலர் தண்டனையும் பெற்று இருக்கின்றனர்.சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான மத வன்முறை இது.
**
இவை ஊடக,நீதிமன்ற தரப்பு செய்திகள்.வினவு பதிவில் குறிப்பிட்டது போல் நடந்து இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஒரு இனக் கலவரம் நடக்கும் போது மனிதனின் விலங்கு உணர்வு வெளிவரும் என்பது இதில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில்,வரலாற்றின் பல கால கட்டங்களில் சுட்ட முடியும்.
இப்போதும் ஈழத்தில் இராஜபக்சேவுடன் சேர்ந்து இலங்கை மூமின்கள் தமிழர்களை கொடுமைப் படுத்துவதும் உண்மையே!!!.அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது என் அண்ணன் பீ.சே சொல்வது கூட இராஜபக்சே ஆதரவு நிலையே!!!!
குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப் பட்டனர் என்பது உண்மை.நீதிம்னறம் சரியாக இந்த வழக்கில் செயல்படவில்லை என்வும் சொல்வேன்.இதை காஃபிர்கள் ஒத்துக் கொள்வோம்.ஆனால் காஃபிர்கள் மேல் மூமின் பெரும்பான்மை நாடுகளில் நடந்த ,நடக்கும் வன்முறைகள் மூமின்கள் நியாயப் படுத்துவர் என்பதே வித்தியாசம்!!!
நன்றி!!!
இப்பூ,
Delete2002க்கு பிறகு இன்றுவரை குஜராத்தில் அமைதி நிலவுகிறது. குஜராத் முஸ்லிம்கள் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லை என்றாலும்,ஆளும் மோடி அரசுடன் சுமுகப் போக்கை கடைப்பிடிக்க விரும்புவதும் அறிய முடிகிறது.பாஜக வில் மூமின்களும் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டது இதனைக் காட்டுகிறது.
எதற்கும் பழிக்குப் பழி என்பது தீர்வு ஆகாது.
கடந்த கால பிரச்சினைகளுக்கு மருந்தாக சுமுக தீர்வு குஜராத்தில் ஏற்பட்டது நன்மை என்வே கருதுகிறோம்.
ஈழத் தமிழர்களுடன் வெற்றியின் பின் இராஜபக்சே ஒரு சுமுகத் தீர்வு முயற்சித்து இருந்தால் ,இலங்கைப் பிரச்சினை இல்லாமல் போய் இருக்கும்.
தமிழர்களின் நிலத்தை திருடுவதில் சிங்களர்,இலங்கை மூமின்கள் கூட்டணி அமைத்து செயல்படுகிறார்.
நன்றி!!!
//2002க்கு பிறகு இன்றுவரை குஜராத்தில் அமைதி நிலவுகிறது// ஆனால் இஸ்லாமிய நாடுகலில் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் தாக்குவதும் கொல்வதும் இன்றும் தொடர்கிறது.
Delete//ஆளும் மோடி அரசுடன் சுமுகப் போக்கை கடைப்பிடிக்க விரும்புவதும் அறிய முடிகிறது.பாஜக வில் மூமின்களும் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டது இதனைக் காட்டுகிறது.//
ReplyDeleteஈழத்து தமிழர்கள் தலைவர்களும் தங்களது உண்மையான தொப்புள் கொடி உறவான சிங்கலவன்களுடன் பிரச்சனைகளை பேசி தீர்த்து ஒற்றுமையா வாழ்வது தான் நடை முறை சாத்தியம்.சுமுகப் போக்கை கடைப்பிடிக்கும்.குஜராத் இஸ்லாமிய சகாதரங்க நல்லெண்ண போக்கு யாவரும் வரவேற்கபட வேண்டியது. ஊக்கபடுத்த வேண்டியவர்கள்.ஆனா ஈழத்து தமிழர்கள் தலைவர் என்பவங்க எப்போதுமே எதிர்ப்பு அரசியல் மட்டுமே செய்து வாராங்க. காரணம் அவர்களுக்கு இது வாக்குகளை அள்ளி வழங்கி வெற்றி பெற செய்து வருகிறது. இலங்கை இராணுவ தளபதியை இலங்கை தேர்தலில் ஆதரிக்கும்படி வேண்டுகோள் விட்டாங்க.கனடாவில் உள்ள புலி ஆதரவு ஈழத்து தமிழர்களும் அப்படியான வேண்டுகோள் விடுத்தாங்க.யாரை ஆதரிப்பது என்பது அவர்கள் உரிமை. ஆனா எப்பொழுதுமே எதிர்பு அரசியல் செய்கிறார்கள். ரணில் விக்கரமாசிங்கா என்றவர் இலங்கை பிரதமாராக இருந்தபோ வந்த தேர்தலில் ராசபக்சோயை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்று புலிகள் இலங்கை தமிழர்களை கட்டாயப்படுத்தினார்கள்.ஈழத்து தமிழர்கள் தலைவர் என்பவங்க குடும்பம் முழுக்க வெளிநாட்டில், அல்லது இந்தியாவில். அவங்க மட்டுமே அங்கே பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அரசாங்கத்தின் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள். அதனாலே அவங்களுக்கு தேர்தலில் வெற்றி பெறும் வாக்குகளை அள்ளி தரும் தந்திரங்களே தேவையாக உள்ளது. இந்தியாவும் பல தடவை அவர்களுக்கு சொல்லிவிட்டது உங்க பிரச்சனைகளை பேசி தீர்த்து முடித்து கொள்ளுங்க என்று. நாளை அமெரிக்கா விரும்பும் ஒருவர் இலங்கை அதிபரான பின்பு அமெரிக்கா உத்தரவிடும் பேசி தீர்த்து முடித்து கொள்.