Wednesday, March 13, 2013

தந்தை பெரியாரை விமர்சிக்கும் கூற்று சுட்டுதல்[Quote Mining] என்னும் குருட்டுவாதம்




வணக்கம் நண்பர்களே ,

சென்ற பதிவில் திருப்பி திருப்பி சொல்லும் சுற்று வாதம்[circular argument] பற்றி ஒரு எ.கா வுடன் அறிந்தோம். இப்பதிவில் இன்னும் ஒரு வாதம் பற்றி அறிவோம்.

மனிதர்களில் பலர் பலவிதமான் கருத்துக்களை கொண்டு இருத்தல் இயல்பே,இது அவர் பிறந்த ,வளர்ந்த சூழல், கல்வி சார்ந்தது என்பதல் பல முரண்பாடான கருத்துகள் உலகில் இருப்பதில் வியப்பு இல்லை.

ஆத்திகம் ,நாத்திகம்
முதலாளித்துவம்,பொது உடமை
ஜனநாயகம், மன்னராட்சி
மத சார் ஆட்சி,மத சார்பின்மை ஆட்சி

என பல ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் சார் விவாதம் நாம் வாழ்வில் கண்டு,அறிந்து இருக்கிறோம்.

இதில் மதவாதிகள் ஆத்திகர் என்னும் வேடம் பூண்டு,நாத்திகர்களுடன் நடத்தும் விவாதங்கள் அதிகம் நடைபெறுகிறது.

ஆத்திகம்,ஆன்மீகம் என்பதற்கு சான்று இல்லாமையால்,நாத்திகர்களின் தவறுகள் எதையாவது தோண்டி அதன் மூலம் வெற்றி பெற மதவாதிகள் முயல்வது அந்த விவாதங்களில் காண முடியும்.

சென்ற பதிவில் மதவாதிகள் தங்களின் நம்பிக்கையை நிறுவ சுற்றுவாதம் பயனப்டுத்துவர் எனக் காட்டினோம்.

கேள்வி:கடவுள் உண்டு என் எப்படி சொல்கிறாய்?

பதில்: மத புத்தகம் சொல்கிறது

கேள்வி: மத புத்தகம் சொலவது எப்படி சரியாகும்?

பதில்: இதில் அறிவியல் இருக்கிறது. இன்று ஒரு கண்டுபிடிப்பு வந்தால்,அந்த பொருள் வரும் வசனம் மறுநாள் காட்டுவோம்.

கேள்வி: ஏன் முன்னரே சொல்லக் கூடாது?.

பதில் :முடியும் என்றாலும், பிறகு சொன்னால்தானே உங்களுக்கு புரியும். ஹி ஹி. கண்டுபிடிப்பு வரவரத்தான் எங்களுக்கே வசனம் சரியாக புரிகிறது.

கேள்வி: மத புத்தகம் வழங்கப்பட்டவர் பொய் சொல்லி இருக்கலாமே!!

பதில்: மத புத்தகம் அப்படி சொல்லவில்லை.இதில் உள்ளது போல் சில அத்தியாயம், நாங்கள் ஏற்கும் வண்ணம் தர  முடியுமா?
*
இந்த வாதங்களில் இருக்கும் வெற்றுத் தன்மை எளிதில் புரியும், இதுதான் அதுதான் இது என் சுற்றி சுற்றி வருவது எதையும் முடிவுக்கு வரவிடாது.

ஒருவேளை எதிர்காலத்தில் வேறு வழியின்றி  பரிணாமம் ஏற்க வேண்டும் என்றாலும் ,அது ஏற்கெனெவே சொல்லி இருக்கிறது என்ற தொனியில் மட்டுமே சொல்லி ஏற்பார்.இப்போதைய பரிணாம எதிர்ப்பில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வை பார்க்க முடியும்.  

மத்வாதிகளுக்கு தங்கள் தரப்பின் சான்றின்மை நன்கு தெரியும் என்பதால் ஆம்/இல்லை கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பர். தங்கள் தரப்பு நிலைப்பாட்டை சொல்ல மறுப்பர். .இப்பதிவில் கூற்று சுட்டுதல்[quote mining] என்னும் வாதம் பற்றி அறிவோம்.
**

மதவாதிகள் பயன்படுத்தும் ஒரு கோமாளித்தனமான வாதம் கூற்று சுட்டுதல்[Quote mining] என்பதாகும்.

நாத்திகர் தரப்பு அறிஞர் ஒருவர் ஏதோ ஒரு காலகட்டத்தில், குறிப்பிட்ட சூழலில் சொன்னது இப்போதைய சூழலுக்கு தவறாகத் தெரிவதால், அவர் சொன்னது அனைத்தும், நாத்திகர் சொல்வது அனைத்தும் தவறே என்பதுதான் இந்த கூற்று சுட்டுதல் வாதம்.


Quote mining is the deceitful tactic of taking quotes out of context in order to make them seemingly agree with the quote miner's viewpoint or to make the comments of an opponent seem more extreme or hold positions they don't in order to make their positions easier to refute or demonize.[1] It's a way of lying. 

ஒருவர் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு சொன்னதை,அனைத்து விடயங்களுக்கு சொன்னதாக் திரித்து தங்கள் வாதத்திற்கு ஆதரவு சேர்க்கும் முயற்சி.

மனிதர்கள் சூழல் சார் கைதிகள். ஒருவர் வாழும் சூழல் சார்ந்து மட்டுமே முடிவு எடுக்க,வாழ‌ முடியும். எனினும் சில கருத்து,அறிவுரை கூறும் போது அச்சூழலை மேம்படுத்தும் விதமாக சொல்வது உண்டு.இவை எதிர் காலத்தில் சூழல் சார்ந்து ஏற்க(நிராகரிக்க)ப்படும்.

ஒருவர் ஒரு பிரச்சினையில் கொண்ட நிலைப்பாடு என்ன என்பதை அவரின் வாழ்வு,செயல் சார்ந்து மட்டுமே அவதானிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட கூற்றினை மட்டும் சொல்லி அவரின் அனைத்து கருத்துகளையும் தவறாக காட்டுவது ஏமாற்றுவேலை ஆகும். 

ஒருவர் பல கருத்துகளை,பல சூழல்களில் சொல்லி இருக்கிறார்,சில நிலைப்பாடுகள் எடுத்து இருக்கிறார்.ஒரு அறிஞ‌ரின் ஒரு பிரச்சினை சார் கருத்துகளில் ஒரு கூற்றினை மட்டும் எடுப்பது சரியல்ல. அது எந்த சூழலில் சொல்லப்பட்டது,அதற்கு முந்தைய பிந்தைய நிலைப்பாடுகள் அனைத்தையும் சார்ந்து விமர்சிக்க வேண்டும்.

நம்ம மாப்ளே தாசின் பதிவில் பெண் திருமணம் செய்ய வேண்டாம், கருப்பையை எடுக்க வேண்டும்.ஆண் எனவே பெண் அழைக்கப்பட வேண்டும் என பெரியார் கூறினார் என் விமர்சித்து பதிவு இட்டார்.

அவரின் பதிவில் இருந்து
**
1. இந்த விவாதத்தில் முதலில் எடுத்துக் கொண்ட பாயிண்ட் பெரியார் போதித்த பெண் சுதந்திரம் அவர் கருத்துப் படி:

பெண்களுக்கு திருமணமே கூடாது.பெண்களும் ஆண்கள் மாதிரியே கிராப் வெட்டி பேன்ட் சட்டை  போட்டுக் கொள்ள வேண்டும்.பெண்கள் நகை ஸ்டேன்ட் ஆகிவிட்டார்கள் எனவே அவர்கள் இனி நகையணியக் கூடாது.
கர்ப்பப் பை இருப்பதால் தானே ஆண் அவளை கர்ப்பமாக்கி அடிமைப் படுத்து கிறான்?  எனவே அவள் கர்ப்பப் பையை வெட்டிப் போட வேண்டும்.பெண்ணை இனிமேல் பெண் என்றே அழைக்க கூடாது, ஆண் என்று தான் அழைக்க வேண்டும்!! 

ஆத்தீகர்களின் குற்றச் சாட்டு:  இதை பெரியார் கட்சிக் காரர்களே யாரும் பின்பற்றவில்லை நடைமுறைக்கு ஒவ்வாதது.  மனோதத்துவ டாக்டர் ஷாலினியின் வாக்குப் படியும் திருமணமில்லாத வாழ்க்கை பெண்ணிற்கு உகந்ததல்ல. பெரியாரே பல திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார், அவரே இரண்டாவதாகவும் திருமணம் செய்திருக்கிறார்.  பெண் சுதந்திரம் என்ற அவர் திருமணம் புரிந்து ஒரு பெண்ணை தனக்கு பணிவிடை செய்யும் அடிமையாக்கி இருக்கிறார். இது முரண். எப்பேர்பட்ட கொலைகாரனாக, கொள்ளைக் காரனாக  இருந்தாலும் அவனுக்கும் என்று ஒரு வக்கீல் வந்து ஆஜராவான், அதுமாதிரி கூட இந்த கொள்கைக்கு பெரியார் உட்பட ஒருத்தரும் ஆதரவாக இல்லை.
**

பெரியாரின் காலத்தில் பால்ய விவாகம்,தேவதாசி முறை,பலதாரமணம்,சொத்துரிமை இன்மை, விதவைக் கோலம் போன்றவை இந்து சமூகத்தில் மிக இயல்பாக இருந்தது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

பெண் ஏன் அடிமை ஆனாள் என்னும் நூலில் தனது பெண் விடுதலைக் கருத்துகள் அனைத்தையும் தொகுத்து கூறுகிறார்.

அந்நூலில் பெண்களின் அக்கால நிலை குறித்து அவர் அடையும் கவலை,அடையும் கோபம் போன்றவை நன்கு அப்புத்த்கத்தில் வெளிப்படுகின்றன்.

புத்தகம் இங்கே தரவிறக்கி அனைவரும் படியுங்கள். ஒரு மனிதன் சுமார் 90 வருடங்களுக்கு முன் இந்த கொள்கைகள் கொண்டு இருப்பது வியப்புதான்.


முகப் புத்தக கண்க்கு கொண்டு தரவிறக்கலாம்.

பால்ய விதவைகளின் எண்ணிக்கை 1921ல் மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் சில இலட்சங்களில் இருந்ததையும் அப்புத்த்கத்தில் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் 10 வயதில் விதவைக் கோலத்தில் வாழ்நாள் முழுதும் கழிப்பதை பார்க்கும் ஒருவருக்கு வரும் கோபம்தான் பெரியாரின் அக்கருத்து. இப்படி திருமணம் செய்யாவிட்டால் என்ன,குழந்தை பெறாவிட்டால்தான் என்ன்? என்பது எனக்கு எந்த விதத்திலும் தவறாக தெரியவில்லை.பெண் ஆணுக்காக பணியாற்ற படைக்கப் பட்டவள் அல்ல.ஆணைக் கவரும் வண்ணம் உடை உடுத்தாமல் ஆண் போல் முடி வெட்டி, ஆடை அணிவதில் தவறு என்ன?

அதே காலத்தில் வாழ்ந்த காந்தி,  இவ்விடயத்தை ஒரு பிரச்சினை கருதி பலமுறை எழுதி இருக்கிறார்.


807. Widow-remarriage is no sin—if it be, it is as much a sin as the marriage of a widower is .All widowhood is not holy. It is an adornment to her who can observe it. If this sister has the courage, then let her speak out her mind to her uncle and brothers and seek their help. It they cannot assist in the marriage, then the sister will have to quit their house and take refuge in some widow-remarriage institution.
–(Translated from the Hindi Navajivan of 9-5-29.)

808. Some Brahman students told me that they cannot follow this principle, that they cannot get Brahman girls sixteen years old, very few Brahmans keep their daughters unmarried till that age, the Brahman girls are married mostly before 10, 12 and 13 years. Then I say to the Brahman youth, ‘Cease to be Brahman if you cannot possibly control yourself. Choose a grown up girl of 16 who became a widow when she was a child. If you cannot get a Brahman widow who has reached that age, then go and take any girl you like. And I tell you that the God of the Hindus will pardon that boy who has preferred to marry out of his caste rather than ravish a girl of twelve.’ –YI, 15-9-27, 314..

பாவம் திரு காந்தி பழமைக்கும்,நியாயம் இரண்டுக்கும் இடையில் தள்ளாடியாவது உண்மை சொல்கிறார்.

ஒருவரின் கருத்து இன்றும் சிலரை பாதிக்கும் போது அது விமர்சித்தால் சரி. ஏதோ ஒரு சூழலில் சொல்லும் கூற்றை திரித்து அது எப்போதும் பொருந்துவது போல் காட்டுவது தவறு.

தந்தை பெரியாரின் மீதான அவதூறுகள் அன்றில் இருந்து இன்றுவரை தொடர்வதே அவர் தமிழ் சமூகத்தின் மீது எழுப்பிய தாக்கமே.

ஒரு மனிதன் வாழும் கால நடைமுறைகளை விமர்சிப்பதும்,மாற்ற முயல்வதும் சமூக புரட்சிக்கு வித்திடுகிறது.

ஒரு மனிதர் வாழும் கால சூழல் சார்ந்து கருத்து சொல்வதும் இயல்பே.

பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டுமென்று சொல்லும்போது 'மனித இனவிருத்தி அற்றுப்போகுமே?' என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்கப்பட்டபோது பெரியாரின் பதில்.

" மனிதஜீவராசிகள் அற்றுப்போனால், புல்பூண்டு, விலங்கு விருத்தியடையட்டுமே. இதுவரை விருத்தியடைந்த மனிதச் சமூகம் பெண்ணுக்கு என்ன செய்து கிழித்தது? எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'.

நாமும் அதைத்தான் மனிதர்களை மதம் ,இனம்,மொழி சார்பற்று சமமாக நடத்தாத மதம், அரசு அமைப்புகள் தேவையில்லை எனவே கூறுகிறோம்.

பெண்களின் மக்கள் தொகை குறைவதால், மாநிலம் விட்டு மாநிலம் சென்றும்,சில சமயம் நாடு விட்டு நாடு சென்றும் பெண் தேடும் வழக்கம் இன்று வந்த சூழலை நண்பர் நம்பள்கி பதிவிட்டார்.

பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக மாறுவதில் இருந்து விடுதலை வேண்டும் என்பதன் பொருள் இதுதான்.பெண்ணை மதிக்காத மதம்,சமூகம் அழியும் என்பதையே பெரியார் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஆகவெ கூற்று சுட்டும் முறையில்  பெரியாரை விமர்சிக்கும் முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன. அப்போதுதான் அவரின் எழுத்துகளை தேடிப்பிடித்து பதிவிட வசதியாக இருக்கும்.

பெரியாருக்கு சிலை வைத்து மாலை போடுவதால் மூட நம்பிக்கை என்கிறார்கள்.இன்றும்  சாமி சிலைக்கு அனைவரும் கருவரை சென்று மாலை போட முடியாத சூழலில் வாழ்கிறோம். இன்னும் சில உயர் சாதி சாமியார்கள் சாதி சார்ந்தே ஆசிர்வாத முறையும் இருக்கும். அதற்கு பெரியார் சிலைக்கு யாரும் மாலை போடலாம் என்பது பரவாயில்லை.

சிலைக்கு மரியாதையை விட அவரின் எழுத்துகளைப் படிக்கலாமே 
என்பதே நம் யோசனை.

பெரியார் மீது விமர்சனம் வைக்க அவர் காலத்தில் வாழ்ந்த  உத்தமர்களின் கருத்துகளை சொல்லி விமர்சிப்பது உத்தமம்.

நம் தாசு மதிக்கும் இஸ்கான் குரு பிரபுபாத பெண் 16 வயதுக்குள் திருமணம் செய்தாக வேண்டும் என் வலியுறுத்துகிறார்.

http://www.prabhupadavani.org/main/Walks/MW045.html

Pusta-krsna: In the Bhagavatam, you said that by the age of sixteen, a girl should be married, or twenty-four for a man. We were just reading that...

Prabhupada: That is the maximum.

Pusta-krsna: We were just reading that.

Prabhupada: The point is that supposing this twenty to thirty-six years is nice age... For women. But before twenty years, she is sacked, and her health is broken. What she'll produce, children? Because this is... The girls, from twelve years, thirteen years, nowadays, they begin sex.[Geneva, June 7, 1974]



இக்கால பெண்கள் 12 வயதிலேயே கெட்டுப் போவதால் சீக்கிரம், அதிகபட்சம் 16 வயதுக்குள் திருமணம் முடிக்க பிரபுபாத வலியுறுத்துகிறார்.

1974 ல் பிரபுபாத சொல்வது சரியா? 1930 ல் பெரியார் சொல்வது சரியா??

இது கூற்று சுற்றுதல் ஆக இருக்கும் வாய்ப்பினை நாம் மறுக்கவில்லை. எனவே தாஸ் திரு பிரபுபாத இக்கருத்திற்கு மாற்று சொல்லி இருக்கிறார் என மறுப்பு பதிவு இடுவார் என எதிர் நோக்குகிறோம்.



நன்றி!!!

89 comments:

  1. http://www.prabhupada.org.uk/sp_expose/evolution.htm

    சில இடங்களில்
    Devotee: For example, out of millions of frogs, one may happen to be better adapted to living in the water.
    Srila Prabhupada: But that is not by chance! That is by plan!

    --
    Devotee: Darwin tried to make the appearance and disappearance of living forms seem so natural and involuntary that God is removed from the picture. Evolutionary theory makes it appear as if combinations of material ingredients created life, and then various species evolved one from another naturally.
    Srila Prabhupada: That is foolishness. Combination means God. God is combining. Combination does not take place automatically

    --
    Devotee: Humans and monkeys are related. They come from the same--
    Srila Prabhupada: Related? Everything is related; that is another thing.
    இத்தோடு விட்டிருக்கலாம்.
    ஆனால்
    But if the monkey body is developing into a human body, then why, after the human body is developed, doesn't the monkey species cease to exist?

    நிறைய விதண்டாவாத பேச்சுக்கள்.

    இவரை கண்ணைமூடிகொண்டு பின்பற்றும் தாஸுகளுக்கும் வஹாபிகளுக்கும் வித்தியாசம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. சகோ நில‌வன்,

      இஸ்க்கான்,இஸ்லாம் பாய் பாய் என் அறிவதால்தானே,உடனே மறுப்பு இடுகிறோம். ஒரு கல் இரு மாங்காய்.

      நன்றி!!!

      Delete
  2. சார்வாகன்...
    உங்கள் உழைப்பு வீணாகிறது...இப்படி இவ்வளோ பெரிய பதிவு போட்டா...எப்படி?

    "சுக்லாம் ப்ரதம்; பகவான் உங்களை பேஷா பாத்துப்பர்; தட்டுலே தட்சணை போடுங்கோ!" அப்படின்னு சொன்னா, உடனே 50 ரூபாய் தட்சணையை அரக்கப் பரக்கப் அள்ளிப் போடற ஆன்மீகவாதிகள் கிட்டே இவ்வளோ பெரிய பதிவு போட்டா...எப்படி?

    சிறிய பதிவா போடுங்க அய்யா சார்வாகர் (மரியாதை; இனி "ன்" கிடையாது..!)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நம்பள்கி,

      மத(ட) வாதிகளின் வாதம் பற்றிய அடிப்படை கூற்று சுட்டுதல். டார்வின் அய்யாவுக்கும் இதேதான் செய்கிறார் மதவாதிகள்.

      பெரியார் இந்த அளவு மதவாதிகளை எதிர்க்கவில்லை என்றால்,இன்னும் ஆதிக்கம் தொடர்ந்து இருக்கும்.

      அக்கால நிலைமையை இணையத்தில் சரியாக ஆவணப் படுத்தவில்லை. நல்ல வேளை காந்திதான் கை கொடுத்தார்.

      இந்து சமூக சட்டம் அமலுக்கு[1955] முன்பு மனுதர்மம்தான் சட்டமாம்!!

      http://en.wikipedia.org/wiki/Hindu_code_bills

      Hindu law's content and structure has ultimately survived as a result of its administration by British judges who gave a lot of attention to Hindu religious-legal texts- while simultaneously invoking English procedure, jurisprudence, and English law to fill any gaps.
      ..

      In 1948 Dr. Ambedkar edited a draft of the Hindu Code bill, however most of its progressive provisions could not be adopted by the parliament due to orthodox thoughts to its opposition. As first law minister of India Dr. Ambedkar gave his resignation from the parliament as he could not implement this Hindu code bill in parliament.[15] However, they did not complete codification before granting India its independence in 1947, and this process was adopted and later completed by the postcolonial government under Jawaharlal Nehru.[16]

      நம் வருத்தம் எல்லாம், அந்த உயர்சாதிக்காரன் விட்ட இடத்தில் நேற்றைய இடைப்பட்ட சாதி ஆள் வந்து அவன் போலவே செய்வதுதான்.

      நேற்றைய‌ ஒடுக்கப்பட்டவன், இன்றைய ஒடுக்குபவன் ஆவதை ஜீரணிக்க கஷ்டமாக உள்ளது.

      மத பிரச்சாரம், ஆண்ட பரம்ப்பரை என்னும் சாதித் திமிர் இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டியதுதான்.

      நன்றி!!

      Delete
  3. மாமு,

    இடம், காலம் சூழ்நிலை, வாழும் மக்கள் இவர்களைப் பொறுத்து கொடுக்கும் போதனைகள் மாறுபடலாம், வாஸ்தவம் தான். ஆனாலும்,

    பெண் திருமணமே செய்யக் கூடாது என்றது

    சிலை வெறும் கல் என்று பகுத்தறிவை ஊட்டுவதாகச் சொல்லி விட்டு தன்னுடைய சிலைகளை தானே திறந்து வைத்தது, அதற்க்கு தன்னுடைய வழிவருபவர்களை மாலை போட்டு மரியாதை செய்ய வைத்தது

    கடவுளே இல்லை என்ற பின்னர், எல்லோரும் அர்ச்சராகனும் தமிழில் அர்ச்சனை செய்யனும் என்றது

    சூரியனைக் கும்பிடுங்கள் என்றது

    பூணூல், நாமம், திருநீறு போன்ற அடையாளம் கூடாது என்று சொல்லிவிட்டு கூட்டமாக கருப்பு சட்டை போட்டுக் கொண்டு நின்று தங்களை அடையாள படுத்திக் கொண்டது ,

    இவையெல்லாம் எந்த சூழ்நிலையிலும் ஏற்கத் தக்கவை அல்ல. அதெப்படி ஒரு பெண் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ முடியும்? கடவுள் சிலை கல் என்றால், பெரியார் சிலையில் மட்டும் பெரியார் இருப்பாரா? கடவுளே இல்லை, கடவுளை வணகுபவன் முட்டாள், காட்டுமிராண்டி என்று உங்கள் கொள்கைப் படி ஆனா பின்னர் அதென்னது தமிழில் அர்ச்சனை, எல்லோரும் அர்ச்சகர்? அதாவது எல்லோரும் காட்டுமிராண்டி ஆகுங்கள் என்கிறீரா?

    அவர் செய்தது சரியா தவறா என்பதை இங்கே கேள்வி கேட்கவில்லை, எதை முட்டாள்தனம் காட்டுமிராண்டித் தனம் என்று பிரச்சாரம் செய்தாரோ அதை அவரே செய்தார், இதைத்தான் கேள்வி கேட்கிறார்கள்.

    சிலை வணங்குதல் தவறு என்று சொல்பவர்கள் சிலை வைப்பது அயோக்யத் தனம். செக்ஸ் வேண்டாம்னு சொன்ன சாமியார் நடிகையோட படுத்திருந்ததற்க்கும் இதற்க்கும் வேறுபாடே கிடையாது, ரெண்டும் ஒண்ணுதான்.

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      //பெண் திருமணமே செய்யக் கூடாது என்றது//

      இடம் காலம் சுட்டி,பொருள் விள்க்க வேண்டும் என்பது தமிழில் பால பாடம்.

      பெரியார் சொன்னது 1930ல் , 1 வ்யதில் கூட திருமணம் செய்தார்கள், அப்போதும் விதவை ஆகி,மொட்டை அடித்து,விதவைக் கோலத்தில் வாழ்நாள் முழுதும் இருந்தார்.

      எந்த அவதாரமும் இதனைத் தட்டிக் கேட்கவில்லை. இபடிப் பிழைப்புக்கு திருமணம் செய்யாமல் இருக்கலாம் என் நானும் சொல்வேன்.உமக்கு வரலாறு தெரியாது என்பது அறிந்த விடயம்தானே. அதே கால கட்ட வைஷ்னவ பரமாத்மா யாரும் பெண்களின் மீதான கொடுமை எதிர்த்து எதுவும் சொல்லவில்லையே. இறந்த காஞ்சி சங்கராச்சாரி வித்வை மறுமணத்தை இறுதிவரை எதிர்த்தார் என்பதும் அறிந்த விடயம்தானே.

      இந்து சமூக சட்டத்தினை அமல்படுத்த அம்பேத்கார் அரும்பாடு பட்டார்,முடியாமல் பதவியை துறந்தார் என்பது வரலாறு.ஆகவே சட்டரீதியாக பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாமல் பால்ய வயது திருமணம் [அப்போது பெயர் கன்னிகாதானம்]வேண்டாம் என்பது சரியே!!

      இப்போதும் விஷ்னு அவதாரம் பிரபுபாத 16 வயதுக்குள் திருமணம் செய்யாவிட்டால் பெண் கெட்டுப் போய்விடுவாள் என்கிறார்.16 வயதில் திருமணம் செய்து ,துன்புறுவதை விட அவள் விருப்பம் சார்ந்து வாழ்வதையே நானும் சொல்வேன்.
      **
      //சிலை வெறும் கல் என்று பகுத்தறிவை ஊட்டுவதாகச் சொல்லி விட்டு தன்னுடைய சிலைகளை தானே திறந்து வைத்தது, அதற்க்கு தன்னுடைய வழிவருபவர்களை மாலை போட்டு மரியாதை செய்ய வைத்தது.//

      அவர் பெரிய பதவியில் இல்லை.அவருக்கு மரியாதை செய்தால் இம்மையில் பதவி,சொத்தோ, மறுமையில் கிளுகிளு சொர்க்கமோ,உயர் சாதிப் பிறப்போ கிட்டாது.

      அப்படி இருந்தும் சில தொண்டர்கள் சிலை வைத்து மரியாதை செய்தனர். இது பெரிய விடயம் இல்லை.பிடிக்காதவன் செய்யாதே.

      ஒருவரை விமர்சிக்க மீண்டும் அவர் என்ன சொன்னார் என் இடம்,பொருள் சுட்டி சொல்ல வேண்டும்.
      **
      //கடவுளே இல்லை என்ற பின்னர், எல்லோரும் அர்ச்சராகனும் தமிழில் அர்ச்சனை செய்யனும் என்றது

      சூரியனைக் கும்பிடுங்கள் என்றது

      பூணூல், நாமம், திருநீறு போன்ற அடையாளம் கூடாது என்று சொல்லிவிட்டு கூட்டமாக கருப்பு சட்டை போட்டுக் கொண்டு நின்று தங்களை அடையாள படுத்திக் கொண்டது ,

      இவையெல்லாம் எந்த சூழ்நிலையிலும் ஏற்கத் தக்கவை அல்ல//

      சமஸ்கிருதம் தேவ பாசை,அம்மொழியில் வேத புராணங்களில் சொல்லி இருப்பதால் ஏமாற்றுக் காரர்களை ஒழிக்க.

      கருப்பு சட்டை எல்லோரும் போடலாம், பூணூல் எல்லாரும் போட முடியுமா? போட்டு கருவறையில் நுழைந்து பூசை செய்ய முடியுமா?
      தலித்துக்கு பூணூல் போட்டு விட்ட பாரதியார்,ப்ட்டினியில் செத்தார்.

      மதம் அப்போது மிக மோசம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.

      இந்து சமூக சட்டம் முன் மனுதர்மம் தான் சட்டம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிராமணனுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது என்பதால் திவான் ராம்சாமி அய்யர் ,மரண தண்டனையையே ஒழித்தார் ஹி ஹி.
      **
      //அவர் செய்தது சரியா தவறா என்பதை இங்கே கேள்வி கேட்கவில்லை, எதை முட்டாள்தனம் காட்டுமிராண்டித் தனம் என்று பிரச்சாரம் செய்தாரோ அதை அவரே செய்தார், இதைத்தான் கேள்வி கேட்கிறார்கள். //

      கேள்வி கேட்பவன் பெரியாரால் பிழைப்பு இழந்த மதவாதிகள். அவர் பெண்ணுக்கு திருமணம் வேண்டாம் என் சொன்னதை ,தொண்டர்கள் சரியாகவே புரிந்த்னட்.
      கன்னிகாதானம் போய் வாழ்க்கை துணை ஒப்பந்தம் வந்தது.

      அப்போது அவை காட்டுமிராண்டித்த்னம்தான்.

      நன்றி!!!

      Delete
    2. பாகவதரே ,

      //சிலை வணங்குதல் தவறு என்று சொல்பவர்கள் சிலை வைப்பது அயோக்யத் தனம். //

      சரி அப்போ சிலை வணங்கக்கூடாதுனு இஸ்லாமியர்கல் சொல்கிறார்கள், நீர் அவர்களை நாத்திகர்கள் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்,ஆனால் ஆத்திகர்கள் என சொல்லி வாங்கோ பாய்னு சொல்வதேன் :-))

      உமக்கு தேவை எனில் சிலை வணங்கக்கூடாது என சொல்வதையும் ஏற்றுக்கொள்வீர் தானே ,அப்படி எனில் பிரம்மசார்யம் என சொல்லி செக்ஸ் வைத்த சாமியாருக்கும் உமக்கும் என்ன வித்தியாசம் :-))

      முரண்பாடுகளின் மூட்டையா இருக்கீரே :-))

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. வவ்ஸ்,

      நீர் சொல்வது எப்படி இருக்குன்னா ஒருத்தன் செருப்பால் உம்மை அடித்தான். அதற்கு நீர், அவன் என்னை வலதுகால் செருப்பால் அடித்தான், இடதுகால் செருப்பு இன்னமும் கேவலம், சானி தேய்த்த செருப்பால் தான் அடித்தான், மனித மலம் அதில் இல்லை, அதுவே அவன் எனக்கு குடுத்த மரியாதை தான். அது மட்டுமா பிஞ்சு போன செருப்பால் அடிக்கவில்லை, 3000 ரூபாய் விலை உயர்ந்த Reebok Shoe-ல் தான் அடித்தான், அதுவே பெரிய கௌரவம்........ இப்படியெல்லாம் சொல்லிகிட்டே போகலாம். நீர் என்னதான் சொன்னாலும் செருப்பால் அடிவாங்கியது தான் பிரச்சினையே தவிர மற்ற +ve பாயிண்டுகளாக நீர் சொல்வது எதுவும் எடுபடாது.


      சிலையில் உயிர் இல்லை, அது ஜடம், அதற்க்கு மரியாதை செய்தால் அதை அந்தச் சிலை விளங்கிக் கொள்ளுமா? அந்தச் செயலை செய்பவன் பகுத்தறிவில்லாதவன். இதுதான் அவர்கள் வாதம்? அப்படிச் சொல்லிவிட்டு தனது சிலையை ஊர் ஊருக்கு திறந்து வைத்து அதற்க்கு மரியாதை செய்யச் சொன்னால், நீர் எதை மூட நம்பிக்கை என்றாயோ, அதையே வேறு வடிவில் செய்யச் சொல்கிறாய் அவ்வளவுதான் இதற்க்கு மேல் என்னால் விளக்க முடியாது. இதுவும் புரியவில்லை என்றால் நீர் முட்டாளாகப் பிறந்துவிட்டீர் என்று அர்த்தம். அதற்க்கு சத்தியமா நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.

      Delete
    5. இங்கு ஒரு விஷயத்தை நீர் சுத்தமாக விளங்கிக் கொள்ளவே இல்லை. சிலை வணகுவது சரியா தவறா என்பது கேள்வியே இல்லை. எடுத்துக் கொண்ட கொள்கைப் படி இவர்கள் நடந்துகொண்டார்களா இல்லையா என்பதுதான் கேள்வி. சிலைவணங்கக்கூடாதுனு ஊரைச் சுத்தி சொல்லிட்டு சிலை வைத்தது ஏன் என்பது தான் கேள்வி. கொள்கை வேறு செயல் வேறு. இது செக்ஸ் வேணாம்னு சொன்ன சாமியார் நடிகை கூட படுத்ததர்க்குச் சமம்.

      Delete
    6. பாகவதரே ,

      நீர் அடிக்கடி செருப்படி,மனித சாணினே பேசுறத பார்த்தால் உம்மை எங்கேயோ மூத்திர சந்தில் வைத்து ,பின்னி எடுத்திருக்காங்கனு நினைக்கிறேன்,அந்த அனுபவத்தில தான் நீர் இப்படி பேசிட்டு இருக்கீர் :-))

      # பெரியார் தொண்டர்கள் செய்வது சிலை வழிபாடு இல்லை, மரியாதை.

      மேலும் பெரியார் சிலையை எதிர்க்கவில்லை,அதன் வழிபாட்டை தான் எதிர்த்தார்.

      மாமல்லப்புரத்துல் ஏகப்பட்ட சிலை இருக்கு அது வேண்டாம்னு சொல்லவில்லை.

      இன்னும் உமக்கு புரியவில்லை என்றால் உமக்கு மூளை வளர்ச்சி குறைபாடேனு நினைக்க தோறுகிறது.

      வழிபாட்டிற்கும், மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாத மக்கட்டையா நீர் :-))

      Delete
    7. //# பெரியார் தொண்டர்கள் செய்வது சிலை வழிபாடு இல்லை, மரியாதை.//
      கல்லுக்கு மரியாதை செய்வது பகுத்தறிவா வவ்வால்? :)

      Delete
    8. தாசுவின் மற்றுமொரு தவறான புரிதல்
      பெரியார் சிலையும் எலி மேல் அமர்ந்திருக்கும் யானைவயிற்றுகாரனும் ஒன்றா
      ஒன்று உண்மை மற்றொண்டு கற்பனை
      பெரியார் செய்த தொண்டிற்கான மரியாதையே மாலையிடல்
      மாலை ஒன்றும் கடவுள் குறியீடு இல்லையே ( திருமணங்களில் மணமக்கள் மாலையிடுகின்றனரே அப்படியானால் அவர்கள் கடவுளா )
      ஆனால் தாசோ கற்பனை பாத்திரங்களுக்கு மாலையிட்டு விரயமாக்குகிறார்கள்
      மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பார்கள் ஆனால் பசியில் வாடும் மக்களுக்கு பாலோ பழமோ கொடுக்கமாட்டார்கள்
      கற்சிலைகளுக்கு அவற்றை படைப்பார்கள்
      மன்னிக்கவும் தாசு பாகவதத்தை பின்பற்றுவர் அதனால் அவருக்கு இது பொருந்தாது

      Delete
    9. @ Sury

      \\ஒன்று உண்மை மற்றொண்டு கற்பனை \\ அதாவது கற்பனையான வடிவத்தை குறிக்கும் சிலை மலர் மாலையை முகர்ந்து பார்க்காது, வாழ்ந்து செத்தவனின் சிலை முகர்ந்து பார்த்து ஆஹா...... அருமையான வாசனை என்று சொல்லும். சூப்பர்.

      \\பெரியார் செய்த தொண்டிற்கான மரியாதையே மாலையிடல்.\\ இதை சிலைக்கு உயிர் இல்லை அதுக்கு மரியாதை செய்வது முட்டாள் தனம், காட்டு மிராண்டித் தனம் என்று பிரச்சாரம் செய்பவன் செய்யக் கூடாது. மரியாதை மனிதனுக்குத்தான் செய்ய முடியுமே தவிர கல்லுக்கு அல்ல. அதை செய்தால், உங்கள் கூற்றுப் படியே நீங்களும் ஒரு மூட நம்பிக்கையாலர்தான். நீ எதை மூட நம்பிக்கை என்று பிரச்சாரம் செய்கிறாயோ அதை நீயே செய்கிறாய்- இது தான் இன்றைய பெரியார் வழி நாத்தீகர்களின் நிலை.

      \\மாலை ஒன்றும் கடவுள் குறியீடு இல்லையே ( திருமணங்களில் மணமக்கள் மாலையிடுகின்றனரே அப்படியானால் அவர்கள் கடவுளா ) \\ ஆமாம், குறியீடு இல்லைதான். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டார்களே திருச்சியின், நடந்தேன்ன என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?

      \\ஆனால் தாசோ கற்பனை பாத்திரங்களுக்கு மாலையிட்டு விரயமாக்குகிறார்கள் .\\ நாங்கதான் மூட நம்பிக்கையில் செய்கிறோம், நீங்கள் பகுத்தறிவுவாதி, விஞ்ஞானப் பூர்வமாக சிந்திப்பவர் நீர் அதை மூட நம்பிக்கை என்று கண்டிப்பவர், சாமி சிலை கல்லு, பெரியார் சிலை மாலையை முகர்ந்து பார்க்கும், அதுக்கு மாலை போட்டால் பெரியாருக்கு மாலை போட்டதாகிவிடும் - இது மஹா மூடநம்பிக்கை.

      \\மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பார்கள் ஆனால் பசியில் வாடும் மக்களுக்கு பாலோ பழமோ கொடுக்கமாட்டார்கள்
      கற்சிலைகளுக்கு அவற்றை படைப்பார்கள் .\\ அன்பரே, காமராஜர் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார், அதற்க்கப்புறம் மாத்திரி மாத்தி பெரியாரின் வழிதோன்றல்கள் தானே தமிழகத்தை ஆட்சி செய்து வந்தாங்க? அவங்க நாட்டை வளப் படுத்தியிருக்கலாம் அல்லவா? பணத்தை கொள்ளையடிச்சு தனக்கும் பெண்டாட்டி பிள்ளைகளுக்கும் சொத்து சேர்த்துவிட்டு, [இருபது வயசு பேரன் எல்லாம் 200 கோடி சினிமா கம்பனி ஒனராம், எங்கேயிருந்து வரும் பணம்?] நாட்டை அந்நிய கம்பனிகளுக்கு விற்ற பின்னர் மக்களுக்கு பாலும் பழமுமா கிடைக்கும்? இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு தான் கிடைக்கும். பொய் திருடியவன் சட்டையைப் பிடிச்சு உலுக்குங்க சார். தில்லு முள்ளு கட்சிங்கள விட்டா மிச்சம் இருக்கும் இலங்கைத் தமிழனுக்கும் தமிழ் மீனவனுக்கும் பாலுதான் ஊத்துவாங்க............

      Delete
    10. திரு தாசு
      தில்லு முள்ளு கழகங்களை நான் ஆதரிக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது
      நானும் அந்த ஊழல் பேர்வழிகளை வன்மையாக கண்டிக்கிறேன்
      அதே நேரத்தில் உங்களுடைய பக்தி இயக்கத்தின் எல்லா கொள்கைகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவேண்டாம் என்பதே எனது அவா

      Delete
    11. \\தில்லு முள்ளு கழகங்களை நான் ஆதரிக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது
      நானும் அந்த ஊழல் பேர்வழிகளை வன்மையாக கண்டிக்கிறேன்
      அதே நேரத்தில் உங்களுடைய பக்தி இயக்கத்தின் எல்லா கொள்கைகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவேண்டாம் என்பதே எனது அவா\\ நீங்க ஆதரிக்கரீங்கன்னு சொல்லவில்லை. மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்றால் அதற்க்கு மூல காரணம் என்ன என்பதை சுட்டிக் காட்டினேன். நான் எதையும் கண்ணனை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வதில்லை, மனதிற்கு சரி எனப் பட்டதை மட்டுமே ஏற்கிறேன், சில நாத்திக கோஷ்டிகள் செய்யும் பொய்ப் பிரச்சாரத்தால் உண்மை மறைக்கப் படுகிறது அவ்வளவே.

      Delete
  4. மாமு உங்க தலைப்பில் குருட்டு வாதம்னு போட்டிருக்கீங்க, அதே சமயம் இறைநம்பிக்கையாளர்கள் தங்களது மறைநூல்களை திரித்து விளக்கம் கூறுவதாகவும் சொல்கிறீர்கள். இறைநம்பிக்கையாளர்கள் தவறு செய்ததாகவே இருக்கட்டும், அது பெரியார் செய்த மூடநம்பிக்கையான செயல்களை நியாயப் படுத்துமா? நீங்கள் பெரியாரை நியாயப் படுத்த மதவாதிகள் செய்யும் தவறை இங்கே முன்னிறுத்துவது நேர்மையான வாதமா, இல்லை குருட்டு வாதமா?


    ஒருத்தன் திருடினான் என்றால் அவன் திருடினானா இல்லையா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, அவனை திருடன் என சுட்டிக் காட்டியவன் மட்டும் யோக்கியமா என்பது வாதத்தை திசை திருப்பி, தவறை மறைக்கப் பார்க்கும் நேர்மையற்ற செயல்.

    இந்த மாதிரி குள்ளநரி வேலைகளை நிறுத்தவே மாட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      பெரியார் சொன்னது 1930,இந்து சமூக சட்டம் முன்பு மனுதர்மம் அமலில் இருக்கையில்.ஒரு நியாயமான மனிதன் இப்படித்தான் சொல்வார்.

      பெரியார் பெண் விடுத்லை,மத புத்தக விமர்சனங்கள் கருத்துகள் மிகசரியே.

      சிலை மரியாதைக்கு பதில் அவர் புத்தகம் படியுங்கள் என பதிவிலேயே சொல்லி இருக்கிறோம்.
      **
      அக்கால சாதிக் கொடுமைகள் சொல்ல இயலாதவை.

      மாடு தின்னும் புலையா
      உனக்கு மார்கழித் திருநாளா

      என்னும் நந்தனார் வரலாறு பாடல் கேட்டது இல்லையா??நந்தனாரை என்ன செய்தார்கள் வைஷ்னவ சிரோமணிகள் என்பது தெரிந்ததுதானே!!
      **
      பிரபுபாத கடவுள் அவதாரம் என்றால் 16 வ்யதுக்குள் திருமணம் செய்யாவிட்டால் பெண் கெட்டுப் போய் விடுவாள் என் பெண்களையே கேவலப் படுத்துவதுதான் விஷ்னு அவதாரமா?


      இந்தக் காலத்திலேயே இப்படி சொல்பவர்கள்

      நன்றி!!!

      Delete
  5. தப்பே செய்யாதவன் யாருமே இல்லை, வாஸ்தவம்தான், அப்போ யாரும் யாரையும் எதுவுமே சொல்லக் கூடாது. அதுதானே நியாயம், நீங்க சும்மாவா இருக்கீங்க? பதிவுக்குப் பதிவு, மூமீன் அதைச் செய்தான், கா ஃ பீர் இதைச் செய்தான், வஹாபி தொப்பி போட்டான் என்று திட்டுவதையே ஒரு பொழப்பா இல்லை வச்சிருக்கீங்க? தப்பே செய்யாதவன் யாருமே இல்லை, எனவே இவங்க ஏதோ தப்பு செஞ்சுட்டாங்க பெரிசு படுத்த வேண்டியதில்லைன்னு சும்மா இருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      வஹாபிகள் இந்நாட்டு அரசியல் சட்டம் சரியில்லை, ஷரியா கொண்டு மாற்றுவோம் என்கிறார்கள். இது ஒரு காலனி ஆதிக்கம். இது உமக்கு த்வறாக தெரியவில்லை எனில் ஏன் 10% முஸ்லீம்களின் கீழ் சுமார் 1000 வருடம் இந்தியா இருந்தது எனப் புரியும்.உலகளாவிய கிலாஃபா அமைக்க எதுவும் செய்வோம் என்பது இந்நாடு மக்களை நேசித்தால் மட்டுமே புரியும்.


      பிறப்பால் உயர்ந்த்வன் என்பது மனுதர்மம்

      எனில்

      மதத்தால் உயர்ந்த‌வன் என்பது ஷரியா

      பெரியாரின் காலத்தில் மதப் புரட்டு செய்த பார்ப்பனர்களை விமர்சித்தார். இப்போதைய பார்ப்பனர்கள் ,பல ஆதிக்க சாதியினர்,வஹாபிகளை நான் விமர்சிக்கிறேன்.

      சுயநலம் மிக்க மனிதர்கள் தவறு செய்வார்.

      இதில் நாத்திகர்,ஆத்திகர் வித்தியாசம் இல்லை.

      பெரியார் போன்ற மனித்ர்களால் பல் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன.
      அதன் தாக்கம் மீது வரலாறு சார்ந்து விமர்சனம் வைக்கலாம்.

      ஆனால் சாதி ஏற்ற தாழ்வே மதத்தில் இல்லை, சாதி இழிவே இஸ்லாமியர் ஆட்சியில் வந்தது என்பது இந்துத்வ புரட்டே!!

      ஜனநாயகம்,மத சார்பின்மை என்பது கொள்கை அளவில் ஆவது அனைவராலும் இன்று ஏற்கப் படுகிறது.

      அரசியலில் ஊழல் தவிர்க்க , கண்காணிப்பு, வெளிப்படையாக தகவல் அறிதல், சட்ட சீர்திருத்தங்கள் போன்ற நடவ்டிக்கைகள் தேவை. ஆனால் சாதி,மதம் மூலம் எதார்த்தவாதிகள் பதவிக்கு வர முடிவது இல்லை.

      ஆகவே முன்னேற்றம் நோக்கி பயணிக்க விரும்புகிறோம்.

      நன்றி!!

      Delete
    2. மாப்ளே தாசு,
      சம்ஸ்கிருதம் தேவ பாஷை, இப்பிறவியில் துன்பம் கர்ம பலன் என்பதெல்லாம் மனித விரோதம் இல்லை. மதக் கோட்பாடு கண்டு கொள்ளவே கூடாதா??

      சரி திமுக வினரின் ஊழல்,குடும்ப அரசியல் சார்ந்து பல் விமர்சனம் எனக்கும் உண்டு. ஆனால் மாற்றுக் கட்சி அதிமுக விற்கும் திமுக விற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை.

      ஒரு தலைவன் சில சமூக பிரச்சினைகளுக்கு தன் சூழல் சார்ந்து தீர்வு சொன்னால்,அது ஒரு தொடக்கம் மட்டுமே, அதுவே சர்வரோஹ நிவாரணி என்பதை நான் ஏற்க மாட்டேன்.

      பெரியார் சொன்னது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை போல் கடைப்பிடிக்க வேண்டும் என் நானோ,பெரும்பான்மையினரோ நினைக்கவில்லை.

      ஏன் தமிழகத்தின் ஆத்திகர்கள் அவரை அப்போது தூக்கி எறியாமல் ஏற்றனர் என்பதில் அக்கால பிரச்சினகளுக்கு ஒரே தீர்வாக இவரின் கருத்துகள் இருந்தன எனப் புரியும்.

      இதை சொல்ல உமக்கு என்ன் யோக்கியதை இருக்கிறது என்னும் கேள்விக்கு யோக்கியதை உள்ளவர்கள் யாரும் செய்யவில்லை என்பதால்தான் நான் செய்கிறேன் என்கிறார் பெரியார்.

      இனி சாதி மேன்மை பாராட்ட முடியாது என்பதால் உயர் சாதியினரும் சாதி பேதம் மதத்தில் இல்லை என வேறுவழியின்றி வேடம் போடுகிறார்.இல்லை எனில் மதம் அழிந்து விடும்.

      மதம்,அரசியல்,நாயக வழிபாட்டை அனைத்து தளங்களிலும் தவிர்த்து ,தீர்வுகளை நோக்கியே முயற்சிக்க வேண்டும்.

      அதற்கு முதலில் சமூக சிக்கல்களை ஒத்துக் கொள்ள வேண்டும்.

      நன்றி!!

      Delete
  6. இஸ்கு இஸ்குன்னுதான் வவ்வால் சொல்லிகிட்டிருந்தார்.இப்ப நீங்க பிரபுதேவான்னு யாரையோ ஒருத்தரை அடையாளம் காட்டுறீங்க:)

    நேற்று ஜெயதேவ் வரிசையா யூடிப் சுட்டிகளாய் கொடுத்திருந்தார்.சும்மாதானே பிலிம் காட்டுறார்ன்னு பார்த்தா பிசே கோஷ்டி தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதாக மைக்கிட்டிருந்தார்கள்.ஒரு காட்சியிலே நான் தூங்கி விட்டேன்:)

    பெரியாரின் தாக்கம் தமிழகத்தின் நிரந்தர வரலாறு.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராசநட,

      பெரியாரின் வைத்தியம் முரட்டு வைத்தியம்தான்.ஆனால் அப்போது அதுமட்டுமே எடுபட்டு இருக்க முடியும்.

      சுதந்திரத்திற்கு முந்தைய வரலாறு மறக்க,மறைக்கப் படுகிறது.

      நாடு பிரிவினையின் போது இங்குதான் அமைதி நிலவியது.முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனால் பெரியாரின் மீது வஹாபிகள் விமர்சனம்..
      இது 1400 வருட வழக்கமே!!

      தமிழகத்தில் பிற்பட்ட சாதி என் சொல்வதை பெருமையாக இன்று பலர் நினைக்கிறார்.ஏன் எனில் ஆளும் வர்க்கம் இவர்களே!![புதிய பார்ப்பனர்களும் இவர்களே என்பதும் சோகமான செய்தி]

      ஆனால் இதர மாநிலங்களில் பிற்பட்டவர் என் சொல்லவே கூச்சப் படுவார்.சாதி பெயரில் இருப்பதால் எளிதில் ஒதுக்கி விடுவார்கள் ஆளும் உயர் சாதியினர்.

      உ.பி ,பீஹார் ல் கடந்த சிலவருடங்களாக மட்டுமே தலித் மக்கள் வாக்களிக்க
      முடிகிறது.

      நம் மக்கள் அடைந்த பலன்களை உணர முதலில் இந்தியா முழுதும் சுற்றிவர வேண்டும்.

      நன்றி!!

      Delete
  7. பாகவரே,

    பச்சை சந்தர்ப்பவாதிய்யா நீர் :-))

    //பதிவுக்குப் பதிவு, மூமீன் அதைச் செய்தான், கா ஃ பீர் இதைச் செய்தான், வஹாபி தொப்பி போட்டான் என்று திட்டுவதையே ஒரு பொழப்பா இல்லை வச்சிருக்கீங்க? தப்பே செய்யாதவன் யாருமே இல்லை, எனவே இவங்க ஏதோ தப்பு செஞ்சுட்டாங்க பெரிசு படுத்த வேண்டியதில்லைன்னு சும்மா இருக்கலாமே?//

    இங்கே இப்படி சொல்லிட்டு , உம்ம பதிவில் உம்மை பார்த்து இதை போல நான் சொன்னதுக்கு என்ன சொன்னீர்னு நினைச்சு பாரும் :-))

    சொந்தமா யோசித்து கருத்து சொல்லும், அங்கே நான் உம்மைக்கேட்ட கேள்வியை கொஞ்சம் மாத்தி இங்கே சார்வாகனை கேட்கிறீரே :-))

    "யார் என்ன எழுதனும்னு மற்றவர்கள் சொல்லக்கூடாது ,அவங்க அவங்களுக்கு தெரிஞ்சதை எழுதலாம்"

    மனசிலாயி!!!

    எல்லாம் நீர் சொன்னதே ,முற்பகல் சொல்லின் பிற்பகல் திருப்பி சொல்லப்படும் :-))

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால் வாங்க,
      நம் மக்கள் பலருக்கு வரலாறும் தெரியாது,அறிவியலும் புரியாது.

      என்னமோ கொஞ்சப் பேரு இட ஒதுக்கீடு, உலக்மயமாக்க்ல் என் மேலே வந்துட்டு ,எல்லாமே அப்போது இருந்தே சரியாக இருந்தது. எல்லாம்ல் திராவிட இயக்கம் மட்டுமே காரணம் என மீண்டும் வர்னாஸ்ரமம் சரி போல் கட்டமைக்கிறார்கள்.

      சொல்லு விதங்கள்
      வர்ணாஸ்ரமம்= அக்கால இட ஒதுக்கீடு,சரியான பொது உடமைக் கோட்பாடு என் பல் கதை விடுகிறார்கள்.

      நல்ல வேளை காந்தி உண்மை பேசுவதால் அவரின் சுட்டி படித்தால் நிலைமை இவ்வளவு மோசமாகவா இருந்தது எனப் புரியும்.

      http://hinduism.iskcon.org/concepts/108a.htm

      According to Hindu texts, Varnashrama-dharma is not a man-made system but refers to natural classifications that appear to various degrees in all human societies. Individuals have different innate tendencies for work and exhibit a variety of personal qualities. There are also natural phases in life, when it is easier and more rewarding to perform certain activities. Hinduism teaches that individuals best realise their potential by taking into account such natural arrangements, and that society should be structured and organised accordingly.

      Each varna and ashram has its own specified dharma. What may be desirable for one section of society may be degrading for another. For example, absolute non-violence, which includes refraining from animal sacrifice, is essential for the priestly class but considered wholly unworthy of a kshatriya (warrior). Generating wealth and producing children are essential for householders, but intimate contact with money and women is spiritually suicidal for the renunciate. Underlying all these apparent differences is the common goal of advancing in spiritual life based on sanatana-dharma. Without the spiritual equality and sense of service inherent in sanatana­dharma, varnashrama-dharma tends to degrade into the rigid and exploitative caste system.
      Thank you

      Delete
    2. \\
      இங்கே இப்படி சொல்லிட்டு , உம்ம பதிவில் உம்மை பார்த்து இதை போல நான் சொன்னதுக்கு என்ன சொன்னீர்னு நினைச்சு பாரும் :-))

      சொந்தமா யோசித்து கருத்து சொல்லும், அங்கே நான் உம்மைக்கேட்ட கேள்வியை கொஞ்சம் மாத்தி இங்கே சார்வாகனை கேட்கிறீரே :-)) \\ அதாவது அவர் சொன்ன கருத்துப் படிதான் மற்றொரு கருத்தும் சரி என்று சொல்கிறேன் அவர் சொன்ன கருத்தை தெரிவிக்கவே கூடாது என்று சொல்லவில்லை. தவறு செய்யாதவன் ஒருத்தருமே இல்லை என்கிறார் அப்படியானால் யாரையும் திட்ட வேண்டிய அவசியமோ குறை சொல்லவேண்டிய அவசியமோ ஏன் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறேன். ஆனால், நீர் செய்தது அப்படி அல்ல. எதை எப்படி எழுத வேண்டும், எந்தத் தலைப்பை தெர்ர்ந்தேடுக்க வேண்டுமென்றெல்லாம் சட்டம் போட ஆரம்பித்துவிட்டீர் நீர் செய்திருப்பது கருத்து திணிப்பு, நான் இங்கே சொல்லியிருப்பது அவரது கருத்தின் படி வேறென்ன வெல்லாம் நடக்கும் என்பதை கோடிட்டு காட்டுதல், இரண்டும் ஒன்றல்ல.

      Delete
    3. பாகவதரே,

      //பெரிசு படுத்த வேண்டியதில்லைன்னு சும்மா இருக்கலாமே?//
      //

      இந்த சும்மா இருக்கலாமேனு நீர் சொன்னதுக்கு என்ன அர்த்தம்?

      என் தமிழ் அறிவுக்கு எழுதக்கூடாதுனு சொல்வதாகப்படுகிறது.

      இதான் கோடுப்போட்டுக்காட்டும் லட்சணமா?

      நானாவது உருப்படியா எழுதலாமேனு கேட்டேன்,நீர் எழுதவே கூடாதுனு சொல்லுறீர்.

      நான் சொன்னது ஆக்கப்பூர்வம்,நீர் சொல்வது அழிவுப்புர்வம்.

      எதையாவது உளரிட்டு சப்பைக்கட்டுவதே உமது வேலையாப்போச்சு.
      -------------

      சகோ.சார்வாகன்,

      அஃதே அஃதே.

      பாசிச வர்ணாசிரம பிற்ப்போக்குவாதிகளின் கொட்டத்தை பெரியார் அடக்கியதால் வந்த காழ்ப்புணர்ச்சி இது.

      பக்தி,மோட்சம்,இறைநிலை என்னும் பித்தலாட்டக்காரர்கள் சக மனிதனை மனிதனாகவே மதிக்க தெரியாத மிருகமாக இருப்பதை உணர்வதில்லை.

      இந்த வெள்ளப்பூண்டுகள் இங்கே இருக்கும் போது அடுத்தவனை சமம் இல்லைனு சொல்லும், ஆனால் அமெரிக்கா போய் அங்கே வெள்ளைக்காரன் எதாவது சொல்லிட்டா, இந்தியன்னு நிறவெறி சம உரிமை கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு புலம்புவாங்க :-))

      காந்திக்கே வெள்ளைக்காரன் டிரெயினில் இருந்து தூக்கிப்போட்டதும் தான் இந்தியன்னு நியாபகமே வந்தது, உடனே சம உரிமை வேண்டும் எனப்போராடினார் ,ஆனால் இந்தியாவுக்கு வந்த பிறகு அம்பேத்கார் அதே சம உரிமை வேண்டும்னு சொன்னதும், அதெல்லாம் பொறுமையா பாத்துக்கலாம்னு தட்டிக்கழித்தார், இப்ப இன்னும் அதே நிலை தான் நீடிக்குது.

      இந்த பாகவதரை என்னிக்காச்சும் வெள்ளைக்காரன் சூத்துல உதைச்சு டிரெயினில் இருந்து தூக்கிப்போட்டால் தான் ,பெரியார், அம்பேத்கர் எல்லாம் எதுக்கு போராடினாங்க என்ற உண்மை புரியும் :-))

      Delete
  8. மாமு உங்க பதில் காமன்டுகள் அத்தனையும் படித்தேன், நீங்க சொல்லியிருப்பதற்கு பதில் இதுதான்.

    பெண்கள் திருமணத்தில் குளறுபடி இருந்தது என்கிறீர்கள். அதைத்தான் சரியாக்க பார்த்திருக்க வேண்டுமே தவிர திருமணமே வேண்டாம் என்பது முட்டாள்தனம். வீட்டில் மூட்டைப் இருந்தால் மூட்டைப் பூச்சிகளைத்தன் மருந்தடித்து ஒழிக்க வேண்டும், வேட்டை கொளுத்திவிடலாம், அல்லது மூட்டைப் பூச்சி மருந்து வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் குடித்து விடலாம் அதற்க்கு மேல் மூட்டைப் பூச்சி தொல்லை இருக்காது என்பதெல்லாம் தீர்வே அல்ல.

    அடுத்து, இந்து, இஸ்லாமிய மதத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லியுள்ளீர்கள், அப்படியிருந்தாலும், அந்த குறைகள் இவர் செய்த மூடநம்பிக்கைகளுக்கு நிவாரணமாகவோ, பதிலாகவோ ஆகாது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      பெரியார் நடத்தி வைத்தது வாழ்க்கைத் துணை ஒப்பந்த சுயமரியாதை திருமண்ம்.

      ஏதோ ஒரு கட்டுரையில் அவர் சொன்னது எதற்கு என அனைவரும் அப்போது புரிந்தார்கள்,இப்போதும் புரிகிறார்கள்.

      சரி நம் முதல்வர்,உ.பி மாயாவதி, வங்க மம்தா பானர்ஜி ஆகியோர் திருமணம் செய்யவில்லை என்ன குறைந்து போய்விட்டார்கள்?

      பெரியார் சொல்வது இவர்களுக்கு பொருந்துகிறது.எல்லா சாதிக்காரனும்,மதவாதியும் அடிபணிகிறார் இவர்களை.தைரியம் இருந்தல் விமர்சிப்பீரா?
      **
      பிரபுபாத பத்தியே பேச மறுக்கிறீம் அவர் கிருஷ்ன அவதாரம் என் நம்புகிறீர், சொன்னது எல்லாம் வேத வாக்கு என்கிறீர் அல்லவா??

      இஸ்கானில்தான் கல்யாணம் பண்னாமல் பல் ஆண்,பெண்கள் கோயிலில் வசிக்கிறார்.

      திருமணம் செய்தாலும் மாதம் ஒருமுறை மட்டுமே உடல் உறவு,அதுவும் கிருஷ்னன் பேரை சொல்லிக் கிட்டே செய்யனுமாம் ஹி ஹி
      http://en.wikipedia.org/wiki/Hare_Krishna_movement_and_sexual_orientation
      The Hare Krishna movement, as a distinct Hindu sect, and especially ISKCON, generally view all sex and sexuality (even heterosexual sex within the context of marriage) as being "illicit" unless it is done with the intention of bringing Krishna Conscious children into the world.[1] The focus of one's life is supposed to be geared towards spirituality and not sexuality.
      ..
      http://www.iskcondesiretree.net/group/krishnaconsciousness/forum/topics/sex-life-part-11

      Kāma-kaśmala-cetasaḥ also indicates that unrestricted sense enjoyment is not allowed in the human form of life by the laws of nature. If one enjoys his senses unrestrictedly, he leads a sinful life. The animals do not violate the laws of nature. For example, the sex impulse in animals is very strong during certain months of the year. The lion is very powerful. He is a flesh-eater and is very strong, but he enjoys sex only once in a year. Similarly, according to religious injunctions a man is restricted to enjoy sex only once in a month, after the menstrual period of the wife, and if the wife is pregnant, he is not allowed sex life at all. That is the law for human beings. A man is allowed to keep more than one wife because he cannot enjoy sex when the wife is pregnant. If he wants to enjoy sex at such a time, he may go to another wife who is not pregnant. These are laws mentioned in the Manu-saṁhitā and other scriptures.

      இப்போதும் நடைமுறையில் உள்ள இது தப்பாக தெரியாத உமக்கு 1930 ல் , சூழல் சார்ந்து பெரியார் கோபத்தில் சொன்ன செய்தி மட்டும் அறச்சீற்றம் கொடுப்பதை ஏற்க முடியவில்லையே!!!

      பெரியாரால் பாதிக்கப்பட்ட மதவாதிகளின் எதிர்வினையாகவே இதனைப் பார்க்கிறேன்.

      நன்றி!!

      Delete
    2. \\சரி நம் முதல்வர்,உ.பி மாயாவதி, வங்க மம்தா பானர்ஜி ஆகியோர் திருமணம் செய்யவில்லை என்ன குறைந்து போய்விட்டார்கள்?\\ மாமு, உங்களுக்கு என்ன ஆச்சு? இவங்க எத்தனை பேரு? நாட்டில் இவங்க சதவிகிதம் என்ன? அஞ்சு பேருக்கு பொருந்துவதை ஐம்பது கோடிக்கு பொறுத்த முடியுமா..........?? சிந்திக்க மாட்டீர்களா?

      Delete
    3. மாப்ளே ,
      பெண் தன்னை மதிக்கத்வனை திருமணம் செய்ய மாட்டேன் என் பெண்கள் சொன்னால் சாதி ,மதம் ஒழிந்துவிடும்.

      அதுக்குத்தானே பெண்ணை தெய்வம் என் கதை விடுவது!!.

      ஒரு பெண்ணின் கல்வி,திருமணம்,குழந்தை பெறுதல்,உடை போன்றவை அவள் விருப்பம் மட்டுமே. இப்போது இதை எளிதாக சொல்கிறோம்.

      இப்போதும் மறுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

      1930ல் என்ன நிலை??? 10 வயதில் திருமணம் ஆகி, 11 வயதில் தாய் ஆனால் விள்ங்குமா? அதையே இப்ப செய்ய சொல்ராரு பிரபுபாதா, ஒரு பெண் சமூகத்தை அவல நிலைக்கு தள்ளும் முயற்சி செய்பவரை குரு என்பது சரியா??

      ஒரு பெண் த்னது இலட்சியத்திற்காக் திருமணம் செய்யாமல் உழைப்பது சரியா?
      அவள் விருப்பம் மட்டுமே.

      பிரபுபாத சொல்வது போல் 16 வயதுக்கு முன் திருமணம் செய்வது சரியா?? தன் குழந்தையை நேசிக்கும் எவனும் செய்ய மாட்டான்.

      வஹாபி கூட பெண் வயதுக்கு வந்தால் திருமணம் செய்யலாம் எனவே கூறுகிறார். இதில் கொஞ்சம் குழப்பம் உண்டு. வயது வந்தால் மட்டும் உடல் உறவு,அதற்கு முன்னும் திருமணம் செய்யலாம் என நபி(சல்) வழியும் சிலர் காட்டுவார்.

      ஆகவே இஸ்லாம்=இஸ்க்கான்

      நன்றி!!!

      Delete
    4. பாக்குவெட்டர்,

      //அஞ்சு பேருக்கு பொருந்துவதை ஐம்பது கோடிக்கு பொறுத்த முடியுமா..........?? சிந்திக்க மாட்டீர்களா?//

      அர்சுனன் ஒருத்தனுக்கு சொன்னது உலகத்துக்கே பொருந்தும் போது அஞ்சுபேருக்கு பொருந்துவது ஐம்பது கோடிக்கு பொருத்த முடியாதா :-))

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. மாமு,

    நீங்கள் இங்கே விட்டுள்ள பித்தலாட்டத்தில் ஒன்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லியுள்ளீர்கள், அது முற்றிலும் தவறு, கண்டிக்கத் தக்கது. தவறான விஷமத் தனமான தகவல், இது உங்களிடம் நேர்மையில்லை என்ற சந்தேகத்திற்கு வழு சேர்ப்பதாக இருக்கிறது. குறைந்தபட்ச நேர்மையையாவது கடைபிடியுங்கள்.

    மனு தர்மம் மனிதனில் ஏற்றத் தாழ்வு இருப்பதாகச் சொல்கிறது என்று நீங்கள் சொல்வது பித்தலாட்டம், மனிதரில் பிரிவுகள் உண்டு, அது சமுதாயம் சீராக இயங்க மட்டுமே, ஏற்றத் தாழ்வு ஆகாது.

    ReplyDelete
    Replies
    1. http://www.indiadivine.org/showthread.php/411223-The-Prabhupada-Incarnation
      However, I see Srila Prabhupada as an empowered shaktyavesha avatar who follows Mahaprabhu's incarnation each time and fulfills Mahaprabhu's prediction that love of Krishna would flood the whole world.

      Srila Prabhupada is a confidential associate of Mahaprabhu and is a nitya-siddha who came from Goloka to spread love of Krishna all over the world.

      He is not a typical sannyasi or Gaudiya Math sadhaka who calculates seniority on the basis of whom came to the Math a few months or a few years before the other.

      Srila Prabhupada has been preaching the message of Mahaprabhu eternally.

      He is not just another struggling sadhaka trying to get out of the modes of material nature.
      ..
      Mahaprabhu predicts the incarnation of Srila Prabhupada

      yadi papi chadi dharma dure dese yaya

      mora senapati-bhakta yaibe tathaya

      “If some sinful people escape and giving up religious principles go to far off countries, then my Senapati Bhakta will come at that time to give them Krsna consciousness.” (senapati - a military field commander, bhakta - a devotee. Lord Caitanya will empower His own devotee to spread Krsna Consciousness around the world.)
      **
      Bhaktidevi predicts the Prabhupada incarnation

      idam sthanam parityajya videsam gamyate maya

      “I will leave this place [Vrndavana] and travel to foreign lands...”

      Bhakti Devi speaking to Narada, in Srimad Bhagavata Mahatmyam (Padmapurana, Uttarakhanda)
      **
      பிரபுபாத பிறப்பு பற்றி பாகவதத்தில் கூட சொல்லி இருக்கிறது என்கிறார்கள். சிலர் கடவுள் என்கிறார்கள்.

      சைதன்ய மஹாபிரபு என்பவர் விஷ்னு அவதாரம் என விக்கிபிடியாவும் சொல்கிறது.

      மனு தர்மம் நல்ல புத்த்கம் என தீவிர இந்துத்வ வியாதிக்காரன் கூட சொல்வதில்லை. அது மாற்றப்பட்டு விட்டது எனெவெ சொல்கிறார்.

      ஆகவே முதலில் படியும்.
      Thank you

      Delete
    2. \\Srila Prabhupada as an empowered shaktyavesha avatar \\ மாமு,

      இறைவன் நேரிடையாக வருவது அவதாரம், அவர் ஒருவரை நியமித்து ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க அனுப்புவதற்கு பெயர் சக்தியாவேஷ அவதாரம். அவர் கடவுள் இல்லை, அவராம் empower செய்யப் பட்டவர். குழப்பிக்காதீங்க.

      Delete
    3. //சக்தியாவேஷ அவதாரம்//
      ஓ அப்ப நம்ம முகமது நபியும் இப்படித்தானா?
      அப்ப நீங்க இசுலாமில் சேரனும்.....இல்ல பிரபுபாதா இறுதி சக்தியாவேஷ அவதாரம் என்று கூறி முஸ்லிம்களை உங்கள் இஸ்கானுக்கு மாத்தணும். ஒன்னும் செய்யாமா இருந்தா எப்பூடி சார்?

      Delete
  11. //கடவுளே இல்லை என்ற பின்னர், எல்லோரும் அர்ச்சராகனும் தமிழில் அர்ச்சனை செய்யனும் என்றது//

    பெரியார் மீது வைக்கும் முட்டாள் தன்மான வாதம்....

    ஒரு அரசாங்கம் என்பது...அறிவுள்ளவர்களுக்கு மட்டும் அல்ல; முட்டாள்களுக்கும் சேர்த்தே தான்; அரசாங்கம் என்பது எல்லோருக்கும் பொது! காட்டமுடியாது!

    ஒரு நீதிபதி..அறிவுள்ளவர்களுக்கு மட்டும் அல்ல; முட்டாள்களுக்கும் சேர்த்தே தான்; எல்லோருக்கும் ஒன்று தான்!

    சட்டத்தை கடைபிடிக்க வேண்டிய அதிகாரிகள், அறிவுள்ளவர்களுக்கு மட்டும் அல்ல; முட்டாள்களுக்கும் சேர்த்தே தான்; எல்லோருக்கும் தான்.

    மேல் ஜாதியை சேர்ந்த ஒரு முதல் அமைச்சர் கீழ் ஜாதி, தாழ்த்தப்படட் ஜாதிகளை பிடிக்கவில்லை என்பதால், அவர்களை ஒதுக்க முடியாது..அவர்கள் நலனை பாது காக்க வேண்டியதும் அவரே!

    அதே மாதிரி, சமூகப் போராளிகள் போராடுவது அறிவுள்ளவர்களுக்கு மட்டும் அல்ல; முட்டாள்களுக்கும் சேர்த்தே தான்; ஒட்டு மொத்த சமூகத்தையும் அதன் நலனும் தான் முக்கியம். இங்கு பெரியார் நம்பிக்கை முக்கியம் அல்ல! மேலே சொன்ன பல உதாரணங்கள் மாதிரி சமூக போராளி எல்லோருக்கும் பொது...!

    மேலும், கடவுள் கிட்ட என்ன புளுகு பாட்டு பாடி பஜனை செய்கிறான் என்று தெரியவேண்டும் என்ற காரணத்தினால். சும்மா 108 முறை ஸ்வாகா சொல்லி பணத்தை ஸ்வாக செய்யும் அர்ச்சனை கூடாது எனப்தர்க்காகவும் தான்..

    கல்யாணத்தில் கருமாதி மந்திரம் சொன்ன புரோகிதர்கள் உண்டு; அதை தடுத்த சமூகப் போராளிகளும் உண்டு. அது நாவலர் சோமசுந்தர பாரதியார். இவர் பிராமணர் அல்ல; ஆனால் சம்ச்க்ரிதம் தெரியும். மக்கள் ஏமாற்றக் கூடாது எனபதும் தமிழில் அர்ச்சனை செய்ய சொல்வது ஒரு காரணம்.

    இந்தியா ஒரு தமாஷான நாடு: ஒரு குடிமகன் தன் மீது என்ன கேஸு இருக்கு என்றும் தனது வக்கீல் என்ன வாதம் செய்கிறார் என்று புரிந்து கொள்ளா ஏதுவாக தமிழ் ஆவனங்கள் கிடையாது! மண்ணாங்கட்டி மாதிரி அவன் கோர்ட்டில் உக்காந்து கொண்டு இருக்கணும்; வேடிக்கை கூட பார்க்கமுடியாது; கொஞ்சமாவது புரிந்தா தானே வேடிக்கையாவது பார்க்கமுடியும்?

    அவன் தமிழில் சாட்சியம் அளித்தால் அதைக் கேட்க தமிழ் தெரியாத ஒரு நீதிபதி; இந்த அழகில் வக்கீல் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லி, அதை அந்த ஹிந்தி நீதிபதி வாலா புரிந்து கொண்டு....எல்லாமே தாமஷ் தான்!

    இது மாதிரி கோர்ட்டுகளை வைத்து நீதி வழங்கும் நம் நாட்டில்....சம்சக்ரிததில் அர்ச்சனை செய்வது தான் சரி என்று சொல்வதில் ஒரு வியப்பும் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி,

      நீங்க சொல்லும் உதாரணங்கள் இங்கே பொருந்தும் என நான் நினைக்கவில்லை. ஒருத்தன் விபச்சாரிகிட்ட போகிறான் அது தவறு என திருத்த வேண்டும். அதை விடுத்து, சிலர் விபச்சாரிகளிடம் போகத்தான் செய்வார்கள், அவர்களுக்காக நான் விபச்சார விடுதியை திறந்து நடத்துவேன் என்றால் அது சரியாகாது.

      சமஸ்க்ரிதத்தில் அர்ச்சனை செய் என சொல்லவில்லை, அது தேவையே இல்லை என்ற கொள்கையை எடுத்துக் கொண்டவர்கள் வேண்டாம் என்று தானே நிற்க வேண்டும்? அதென்னது தமிழில் அர்ச்சனை?

      Delete
    2. மாப்ளே தாசு,

      விபசாரம் என்பது சமூக ,பொருளாதரம் சார் பிரச்சினை. ஒழுக்கமின்மை என விவாதிப்பது சரியில்லை.

      இந்திய சட்டப்படி இரு வயது வந்த ஆண் பெண் உறவு கொள்வது சட்டப்படி தவறு இல்லை. மும்பை கல்கத்தாவில் விபச்சார விடுதிகள் இன்றும் உண்டு.
      இஸ்கான் இதனை தவிர்க்க என்ன செய்தது?

      இஸ்கானின் நடந்த காம களியாட்டம் ,கொலைகள் பற்றி எழுத 1000 பக்கம் வேண்டும். சுலோச்சன் தாஸ் கொலை ஏன் நடந்தது. கீர்த்தனந்த ஸ்வாமியின் லீலைகள் ஏன்?

      ஏன் உம்ம பகவான் இவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்கவில்லை!!
      இஸ்க்கானின் பெருந்த்லைகளே யோக்கியமாக் இருக்க முடியாத போது, விபச்சாரம் பத்தி பேச வந்து விட்டீர்.

      படியும் கீர்த்தானந்த பற்றிய சுட்டி
      http://en.wikipedia.org/wiki/Kirtanananda_Swami

      Upon Prabhupada's death on November 14, 1977, Kirtanananda and ten other high-ranking ISKCON leaders assumed the position of initiating gurus to succeed him. In March 1979, he accepted the honorific title "Bhaktipada."
      ..
      In 1990 the US federal government indicted Kirtanananda on five counts of racketeering, six counts of mail fraud, and conspiracy to murder two of his opponents in the Hare Krishna movement (Chakradhari and Sulochan).[17] The government claimed that he had illegally amassed a profit of more than $10.5 million over four years. It also charged that he ordered the killings because the victims had threatened to reveal his sexual abuse of minors.[17]
      On March 29, 1991, Kirtanananda was convicted on nine of the 11 charges (the jury failed to reach a verdict on the murder charges), but the Court of Appeals, convinced by the expert arguments of defense attorney Alan Morton Dershowitz (a criminal law professor at Harvard University who represented such celebrated and wealthy clients as Claus von Bülow, Mike Tyson and O. J. Simpson), threw out the convictions, saying that child molestation evidence had unfairly prejudiced the jury against Kirtanananda, who was not charged with those crimes.[17] On August 16, 1993, he was released from house arrest in a rented apartment in the Warwood neighborhood of Wheeling, where he had lived for nearly two years, and returned triumphantly to New Vrindaban.[17]
      Kirtanananda lost his iron grip on the community after the September 1993 "Winnebago Incident" during which he was accidentally discovered in a """compromising position with a young male Malaysian disciple in the back of a Winnebago van""",[17] and the community split into two camps: those who still supported Kirtanananda and those who challenged his leadership. During this time he retired to his rural retreat at "Silent Mountain" near Littleton, West Virginia.[17]

      நன்றி!!

      Delete
    3. மாமு,

      நீங்கள் பெரியார் செய்ததை நியாயம் என்று வாதிடவில்லை, மற்றவன் செய்ததை தவறு என்று காட்ட முயல்கிறீர்கள். இது குள்ளநரித்தனம் வேலைக்காகாது. சரியில்லை. மாத்துங்க.

      Delete
    4. மாப்ளே தாசு,

      பிரபுபாத ஃப்ரீ செக்ஸ் உள்ள அமரிக்கா போய்த்தான் பெரிய ஆள் ஆனார். இங்கேயே இருந்து இருந்தால் சோத்துக்கே சிங்கி அடித்து இருப்பார்.1965 ல் அமெரிக்க போனார் ,1977 சாகும் போது இஸ்க்கானுக்கு பில்லியன் கண்க்கில் சொத்து!! எப்பூடி??

      அதென்னவோ பணம் அதிகாரம் இருக்கும் வெள்ளைக்காரனை மதம் மாத்த இஸ்கான் ,இஸ்லாம் படும் பாடு சிரிப்புதான் வருகிறது.

      ஏன் பிரபுபாத சவுதி,ஆஃப்கானிஸ்தான் போகவில்லை? உதைப்பான் என பயம்தானே!!

      நன்றி!!

      Delete
    5. அது மட்டுமல்ல ஆப்ரிக்காவிலும் அவர்கள் சொல்லும்படியாக இல்லை
      சமிபத்தில் ரசியாவில் இஷ்கானின் பகவத்கீதை விளக்கம் சர்ச்சைக்கு உள்ளானது நினைவிருக்கலாம்
      இஸ்கான் மற்றும் இன்ன பிற மதம் சார்ந்த மிசனரிகள் ( சின்மயா, ராமகிருஷ்ணா) போன்றவர்களும் மதவிற்பனை நிலையங்களே
      இவர்களுடைய நோக்கம் எப்பொழுதும் பணபலத்தை பெருக்கிகொள்வதே ஆகும்
      இல்லைஎன்றால் இவர்கள் எப்பொழுதோ காணமல் போயிருப்பார்கள்

      அவ்வபோது அவற்றில் துளியளவு பணத்தை நற்செயலுக்கு செலவளிப்பது போல காட்டுவது இவர்களது செயல்தந்திரம்

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. சூரி, நீங்க ஆப்ரிக்க, ரஷ்யா என உலகமெல்லாம் சுத்தி வந்திட்டீங்க எங்க மாமூல் மாமு இஸ்கான் கேசுகள் என்னென்னா அது எங்கே எப்போ நடந்ததுன்னு பாதாளம் வரைக்கும் போயிட்டு வந்திட்டாரு. உங்க ரெண்டு பெத்தோட குருட்டு கண்களுக்கும், பெங்களூர் இஸ்கான் "அக்ஷ்யபாத்ரா" என்ற லாபமற்ற அமைப்பின் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 13.50 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி வருவது தெரியவே இல்லை.

      http://www.akshayapatra.org/

      இதற்க்கு இன் ஃ போசிஸ் நிறுவனர் திரி. நாராயணமூர்த்தியின் முழு ஆதரவும் உண்டு, அவர் என்ன கேனையா? இத்தனை வாய் கிழிய பேசும் நீங்க ஒரு குழந்தைக்கு வருஷத்துக்கு ஆயிரத்து சொச்சம் தான் வரும் ஸ்பான்சர் பண்ணுவீங்களா? அதுக்கு திராணி இருக்கா?

      https://www.akshayapatra.org/onlinedonations

      முடிஞ்சா ஸ்பான்சர் பண்ணிட்டு சொல்லுங்க. திருந்துங்கய்யா.......... திருந்துங்க..........

      Delete
    8. அய்யய்யோ ஆயிரம் கூட இல்லை, வெறும் 675 ரூபாய் போதும், ஒரு கல்வி ஆண்டுக்கு ஒரு குழந்தை மதிய உணவு சாப்பிடும், வாய் கிழிந்தவர்களே உங்களால் பேச மட்டும்தான் முடியுமா? செயலால் செய்துவிட்டு மறுபடி பேசுங்கள்.[ நான் ஏற்கனவே அதை புடுங்கறேன், இதை கிழிக்கறேன் என்பது பித்தலாட்டம், தேவையில்லை. ]

      Delete
  12. அதே பதில்...அரசாங்கம் எல்லோருக்கும் பொது. ஜனநாய நாட்டில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்க முடியாது; மேலும், இந்திய constitutional guaranty இருக்கும் to practice any religion...!

    சமூக போராளிகள் எல்லோருக்கும் பொது!

    குடி தவறு; குடித்தால் ஜெயில் முன்பு; அரசாங்கம் கொள்கையை மாதிர் விட்டது; எவன் கண்டான் விபசாரம் நாளைக்கு சட்ட பூர்வமாக ஆக்கப் படலாம்.

    லஞ்சம் வாங்குறது தப்ப? விபசாரம் செய்வது தப்பா?

    ReplyDelete
  13. //தாஸ் said..மனு தர்மம் மனிதனில் ஏற்றத் தாழ்வு இருப்பதாகச் சொல்கிறது என்று நீங்கள் சொல்வது பித்தலாட்டம், மனிதரில் பிரிவுகள் உண்டு, அது சமுதாயம் சீராக இயங்க மட்டுமே, ஏற்றத் தாழ்வு ஆகாது.//

    தாஸ் கூற்றுப்படி...சமுதாயம் சீராக இயங்க ஒரு ஜாதி மலக் குழியில் இரக்கப்படுவது ஏற்றத் தாழ்வு ஆகாது.

    தாஸ் தவறு செய்கிரீர்கள்; தெரிந்தே உண்மையை மறைக்காதீர்கள். எப்படி கொஞ்சம் கூட மனதாபிமானம் இல்லாமல் இப்படி சொல்ல முடிகிறது? ஆன்மீகவாதிகளே இப்படித்தானோ? மனிதன் எப்படிப் போனா என்ன? அதானே!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி,

      //தாஸ் தவறு செய்கிரீர்கள்; தெரிந்தே உண்மையை மறைக்காதீர்கள். எப்படி கொஞ்சம் கூட மனதாபிமானம் இல்லாமல் இப்படி சொல்ல முடிகிறது? ஆன்மீகவாதிகளே இப்படித்தானோ? மனிதன் எப்படிப் போனா என்ன? அதானே!//

      உங்களுக்கு பாகவதரை பற்றி சரியாத்தெரியலை,ஆரம்பத்தில் இருந்தே வர்ணாசிரமம் சரினு தான் வாதிட்டுக்கிட்டு இருக்கார், அப்படி பலப்பிரிவுகள் இருந்தா தான் சமூகம் இயங்குமாம் :-))

      நீங்க சொன்னதை எல்லாம் கடந்தாண்டே பாகவதருக்கு சொல்லிட்டேன் ,இன்னும் அப்படியே தான் இருக்கார், இப்போ நீங்க நாலு போடு போடுங்க அப்பவாவது வர்ணாசிரம வெறி குறையுதானு பார்ப்போம்.

      கோயில் எல்லாருக்கும் பொது தானே அது மக்கள் பணத்தில் கட்டியது எல்லாருக்கும் சொந்தம்னு கூட புரியாமல் ஒரு சிறு கூட்டம் ஆக்ரமிச்சு இருக்கு அதை தட்டிக்கேட்க துப்பில்லாமல், ஆன்மீகம் பேசுறார்.

      உண்மையில் ஆன்மீகவாதிகள் சமத்துவமா இருந்தா ஏன் நாத்திகன் வந்து அதை எல்லாம் கேட்கப்போறான்.

      Delete
    2. சகோ வவ்வால்,நம்பள்கி

      பெரியார் மீது விமர்சனம் வைப்பர்கள் அவரை விர சமூக பிரச்சினகளில் ஈடுபாடு கட்டி,தீர்க்க முயல்பவர்கள் ஆக இருப்பின் நம்க்கு ஆட்சேபனை இல்லை.

      பெரியாரை விமர்சிக்கும்
      1. இந்துத்வ ஆட்கள்&இஸ்கான் தாசு வர்ணாஸ்ரமத்தை மீண்டும் நியாயப்படுத்தும் ஆசாமிகள்.மனுதர்மம் கொண்டுவர முயற்சி செய்கிறார்.

      2.வஹாபிகள்: சவுதி போன்ற 6 ஆம் நூற்றாண்டு அரசு அமைக்க முயல்பவர்கள்.ஷரியாவை உலக முழுதும் கொண்டுவர முயற்சி செய்கிறார்.

      ஷரியா=== மனுதர்மம்

      இந்த இருவரும் இணைந்து பெரியாரை விமர்சிப்பதன் ரகசியம் இதுதான்!!!

      அனைவரும் அர்சகர்,தமிழில் அர்ச்சனை, அனைத்து வேதபுராணங்களும் தமிழில் மொழியாக்கம், சம்ஸ்கிருத மூலத்துடன், பல ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன்

      கொண்டு வந்தால் இவர்கள் கொட்டம் அடங்கும்.

      நன்றி!!

      Delete
    3. \\தாஸ் கூற்றுப்படி...சமுதாயம் சீராக இயங்க ஒரு ஜாதி மலக் குழியில் இரக்கப்படுவது ஏற்றத் தாழ்வு ஆகாது.

      தாஸ் தவறு செய்கிரீர்கள்; தெரிந்தே உண்மையை மறைக்காதீர்கள். எப்படி கொஞ்சம் கூட மனதாபிமானம் இல்லாமல் இப்படி சொல்ல முடிகிறது? ஆன்மீகவாதிகளே இப்படித்தானோ? மனிதன் எப்படிப் போனா என்ன? அதானே! \\

      மனு இருந்த காலத்தில் மலக்குலிகளே கிடையாது, வயல்வெளிகளில் தான் எல்லோரும் போவார்கள். எனவே அந்தப் பிரிவு இந்தப் பிரிவு ஆகாது.

      ஆசிரியர், விஞ்ஞானிகள்
      படை வீரர்கள், நாட்டை ஆள்பவர்கள்
      வியாபாரம் செய்பவர்கள்.
      மேற்கண்ட மூவருக்கும் உதவுபவர்கள்.

      இவ்வளவுதான் பிரிவு.

      இன்றைக்கும் வங்கி மேனேஜர், பியூன் பாகுபாடு இல்லாமல் செய்ய முடியுமா? இருவருக்கும் ஒரே சம்பளம் முடியுமா? உலகில் ஒரு நாடு சொல்லுங்கள் எல்லோருக்கும் ஒரே சம்பளம் தருகிறார்கள் என்று.

      Delete
    4. மாப்ளே தாசு,

      இது வழக்கமான இந்துத்வ புரட்டு, அதாவது கக்கூஸ் வந்த பிறகு மட்டுமே மலக்குழி பிரச்சினை.[ ஹி ஹி கக்கூஸ் கொண்டு வந்த மூமின் காரணம் என சேர்த்து சொல்லனும்,அதுவே சரியான இந்துத்வ வாதம் இப்போ இஸ்லாம் கூட்டணி என்பதால் முழுங்குகிறீர்]

      அதற்கு முன் சாதிரீதியாக அனைவரும் சரி சமமா??

      தாழ்த்டப்ப்டா சாதி உருவானது போரில் தோற்று சிறைப் பிடிக்கப்பட்ட பௌத்த மதத்தினரே!!!.பகவான் உருவாக்கவில்லை. அதில் இருந்து மனுதர்மத்தின் மூலம் அவர்களை அடிமைப் படுத்தினார் உயர் சாதியினர்.

      அசோகர் ஆட்சியின் வீழ்ச்சியில் இருந்துகபொ.மு 300 முதல் 1900 பொ.ஆ ஆண்டுகளுக்கு முன்புவரை சில சாதிமக்கள் விலங்கினும் கீழாய் நடத்தப்பட்ட போது ஏன் எந்த ஆத்திகவாதியும் எதுவும் செய்யவில்லை?

      ஒரு நாத்திகர் பெரியார் தன் வாழ்வில் பல் ஆயிரம் ஆண்டு களங்கத்தை துடைப்பது உமக்கு எரிச்சல் வருகிறது ஹி ஹி

      உம்ம மத புராணமே சரியில்லையே

      இராமன் சம்புகனை கொன்றது,
      ஏகலைவன் விரலை தூரோணர் கேட்டது போன்றவை சின்ன சேம்பிள் அக்கால் கொடுமைகளுக்கு........


      இப்ப வஹாபி மாதிரி இது ____ இட்டுக் கட்டியது என பொய் சொல்லனும் ஹி ஹி

      நன்றி!!
      நன்றி!!

      Delete
    5. பாகவதரே,

      //இன்றைக்கும் வங்கி மேனேஜர், பியூன் பாகுபாடு இல்லாமல் செய்ய முடியுமா? இருவருக்கும் ஒரே சம்பளம் முடியுமா? உலகில் ஒரு நாடு சொல்லுங்கள் எல்லோருக்கும் ஒரே சம்பளம் தருகிறார்கள் என்று.//

      உமக்கு மனச்சாட்சினு ஒன்னு இருக்கா?

      வங்கியில் பியூனாக இருப்பவரின் மகன் படித்து வங்கி மேனேஜராக வர முடியும்,அதற்கு தடையில்லை. எனவே இச்சமூக வேறுபாடு பணி,சம்பளம் சார்ந்தே,பிறப்பால் தீர்மானிக்கப்படவில்லை.

      ஆனால் வர்ணாசிரம பாகுபாடு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதே எப்படி சரினு சொல்ல முடியும்.

      கர்ணனை தேரோட்டியின் மகன் என சொல்லி இழிவுப்படுத்தியதும், ஏகலைவன் விரல் வெட்டியதும் எப்படி?

      ஒரு கோயிலில் மணியாட்ட என்னப்பெரிய தகுதி வேண்டும், ஏன் அதுக்கு கூட இன்னொரு மனிதனுக்கு அனுமதியில்லை?

      கோயிலில் இருக்கும் சிலையை கூட செதுக்க தெரியாத ஒரு கூட்டம் ,யாரோ சிலை செதுக்கி,யாரோ கட்டிய கோயில் போய் உட்கார்ந்துக்கொண்டு ,மற்றவர்களை கோயிலுக்கு வரக்கூடாதுனு சொல்லும் கூத்து ஏன்?

      ஒரு பார்ப்பனரை சிலை செதுக்க சொல்லு பார்ப்போம்,இல்லை கட்ட சொல்லுங்க பார்ப்போம்,ஒன்னும் செய்ய தெரியாது :-))

      ஒரு மாடு கழிவு ,குளிப்பாட்டி பால் கறக்க தெரியுமா ஆனால் பால் மட்டும் குடிப்பாங்க.

      விவசாயம் செய்ய தெரியுமா,ஆனால் பச்சரிசி வேண்டும்.

      இதை எல்லாம் செய்றவன் கீழானவனு வேற கூசாம சொல்ல வேண்டியது.


      உழைக்கும் பொது சனம் இது போல குடுமிகளுக்கு எந்த பொருளும் விற்க மாட்டோம்னு சொன்னால் பட்டினி கிடந்து சாகணும்.

      மாமிசம் திண்ண மாட்டோம்னு சொல்லும் பார்ப்பனர்கள் தோல் செருப்பு, பர்ஸ்னு பயன்ப்படுத்துறாங்க,அதெல்லாம் செய்யக்கூடாது சொல்லித்தான் பாரும் :-))

      Delete
  14. மாமு,

    \\ஏன் பிரபுபாத சவுதி,ஆஃப்கானிஸ்தான் போகவில்லை? உதைப்பான் என பயம்தானே!!\\ வெளியில் பேர் ஊரைச் சொன்னா போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்று தினமும் பயந்துகொண்டே பதிவு போடும் நீங்க இதை சொல்லலாமா? காமடியில கலக்குறீங்க மாமு. அப்படியே பார்த்தால் கூட அமரிக்காவில் 1965 ஆம் ஆண்டு இந்தியாவைப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியாது, தொலைக்காட்சிகள் கூட அவ்வளவு பிரபலமில்லை. அந்த காலகட்டத்தில் அத்தகைய மாற்றத்தை உருவாக்கியதற்கு இறையருள் இல்லாமல் முடிந்திருக்காது.

    தயவு செய்து நல்லவர்களைத் தூற்றி உங்களுக்கு நீங்களே ............ வேண்டாம் சொல்ல விரும்பவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      ஆமாம் வஹாபிகள் மதம் விமர்சித்தால் கொலை செய்வார்கள். சவுதியில் எண்ணெய் தீர்ந்தால் காணாமல் போவார்கள்.

      பிரபுபாத நல்லவர் என்றால் வர்ணாஸ்ரம‌ தர்மம் ஒழிய வேண்டும் என் சொல்லவில்லையே. தாங்கி அல்லவா பிடிக்கிறார்.

      ஜி.பி.சி இஸ்க்கன் குழுவுக்கும், இந்திய Bangalore குழுவுக்கும் சொத்து சார்ந்து வழக்கு நடக்கிறதே. ஏன் பகவான் சமரசம் செய்யக் கூடாது??
      http://www.iskcontruth.com/2012/12/iskcon-bangalore-vs-iskcon-mumbai-gbc.html
      As we all know about the ongoing case against ISKCON Bangalore vs Mumbai on Hare Krishna hill property. There are few things which are not visible to general public and even people within ISKCON. Let me tell you briefly about some major twist and turns in this case.
      As you all know the dispute began with the team of devotees in Bangalore deciding to embrace the rtvik ideology in late 1990s which later distilled into a property dispute with some of the followers of Jayapataka Swami, trying to take over the temple in Bangalore and the Bangalore devotees seeking court intervention and applying. IB filed a suit seeking an injunction of noninterference in its affairs by ISKCON Mumbai. The court battle lasted over a decade and had various twists and turns with the civil court finally ruling in favour of ISKCON Bangalore. ISKCON Mumbai went on appeal and High Court of Karnataka ruled in favour of ISKCON Mumbai. ISKCON Bangalore filed its appeal before the Supreme Court. The Supreme Court expressed its hope that both parties settle their differences and make serious attempts to reconcile and protect the august institution of ISKCON. Based on this a peace proposal is being discussed by both warring parties, lesser known to even people who are closely associated with ISKCON. We got reports from some of our genuine sources about this Peace Proposal with exclusive detail on the contents of the Proposal and Some details on the backend talks between ISKCON Bangalore and ISKCON Mumbai.
      Let me give you a brief about the contents of the Peace Proposal as given by the close sources of ISKCON Bangalore and the GBC.

      1. All ISKCON Bangalore group of temples & trusts will be integrated with ISKCON Mumbai and there will be one umbrella under which the entire preaching activities will expand in India.
      2. The system of initiation for ISKCON Bangalore group of temples will be the rtvik system of initiation.
      3. No gurus will be worshiped in ISKCON Bangalore temples other than Srila Prabhupada
      4. Both parties will bury all the animosities and work co-operatively.
      5. Some of the senior devotees of ISKCON Bangalore will also be made part of the ISKCON Mumbai.

      ஆன்மீகம் பணம் சம்பாதிக்கும் வழி!!

      அதில் கேடு கெட்ட வர்ணாஸ்ரமம் வழி மொழியும் எந்த இயக்கமும் எதிர்க்கப்பட வேண்டியதே!!!

      சாதி பிறப்பின் அடிப்படையில் இல்லை என் சொல்ல வேண்டியது, ஏன் பிற சாதியினர் அர்ச்சகர் ஆக கூடாது என்றால் ஏன் நாத்திகன் கேட்கிறாய் என்பது சுற்றுவாதம் ஹி ஹி

      இந்துமதத்தின் வஹாபியம் இஸ்கான்!!!

      நன்றி!!!

      Delete
  15. //ஒருவர் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு சொன்னதை,அனைத்து விடயங்களுக்கு சொன்னதாக் திரித்து தங்கள் வாதத்திற்கு ஆதரவு சேர்க்கும் முயற்சி.//
    மதவாதிகள் அறியாமையில் செய்வது இதைத்தான் சகோ. அருமையாக பிடித்துள்ளீர்கள்

    ReplyDelete
  16. கேள்வி கேட்பவன் பெரியாரால் பிழைப்பு இழந்த மதவாதிகள். அவர் பெண்ணுக்கு திருமணம் வேண்டாம் என் சொன்னதை ,தொண்டர்கள் சரியாகவே புரிந்த்னட்.
    கன்னிகாதானம் போய் வாழ்க்கை துணை ஒப்பந்தம் வந்தது.

    அப்போது அவை காட்டுமிராண்டித்த்னம்தான்.
    காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மக்களை மாற்ற பெரியாருக்கு வாழ்க்கை ஒப்பந்தம் அடிப்படையில் திருமணம் செய்ய இஸ்லாமே அவருக்கு முன்மாதிரியாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      வாங்க, நல்லா ஜோக் அடிக்கிறீங்க!!

      இஸ்லாமின்,முகமது(சல்) ஆகியோரின் திருமண விடயங்கள்தானே முதல் விமர்சனம் ஆகிறது.

      திருமண விடயத்தில் ஷரியாவின் வழிமுறை மனித விரோதம்.

      ஒரு மனிதன் 4 மனைவி+ எண்ணற்ற பாலியல் அடிமை வைக்க குரான் அனுமதிக்கிறது என்பதை ஒருவர் ஒரு சமயத்தில் வாழ்க்கைத் துணையோடு வாழும் மத சடங்குகள் அற்ற சுயமரியாதைத் திருமணத்துடன் ஒப்பிடுகிறீர்களே!!!

      4 மனைவி கட்டாயம் அல்ல என்பீர்கள் என்றால் அனுமதிக்கிறது என்பதால் துஷ்பிரயோகம் செய்யப்படும் சாத்தியம் அதிகம். ஷரியாவில் ஒரு சம்யத்தில் ஒரு மனைவி மட்டுமே, விதிவிலக்காக‌ ஏதோ உடல் நலம் சார் காரணத்தினால் இன்னொரு மனைவி எனில் முதல் மனைவி அனுமதி தேவை, அவருக்கும் பொருளாதார பாதுகாப்பு என் மாற்றிவிடுங்கள்.பிரச்சினை தீர்ந்து விடும்.

      உடனே மஞ்சள் துண்டு உள்ளிட்ட நாத்திக தலைகளை சுட்டுவீர் என்றாலும், அவர்கள் விதியை மீறுகிறார்.இஸ்லாமில் திருமண விதியே தவறு!!!

      நாத்திகர்களும் தவறு செய்வார்கள். அது தவறு என் நாங்கள் ஒத்துக் கொள்வோம். நீங்கள் நபி(சல்) 11 மனைவி வைத்து இருந்தது ஏன் ?? என் விளக்குவீர்கள்.

      ஏன் எதற்கும் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபி(சல்) ஐ இழுக்கிறீர்கள்??, ஒரு 50 வருடம் முன்பே கூட பால்ய விவாகம், பல்தார மணம் இந்தியாவிலும் இருந்ததே என்னும் சகோ இப்பூ!!!

      முகமது(சல்) இறைத்தூதர் அல்ல,உலக முடிவு வரை மனித வாழ்வுக்கு அவ்ரே சிறந்த முன்மாதிரி அல்ல , அவர் அக்கால சூழலை பிரதிபலித்தார். நாங்கள் வாழும் சூழல்,பொது சமூக சட்டம் சார்ந்து மட்டும் வாழ்வேன் என மூமின்கள் சொனால் ஏன் முக்மது(சல்) ஐ இழுக்கிறோம்!!!


      இஸ்கான் பிரபுபாத இஸ்லாம் போலவே திருமண கருத்துகள் சில கொண்டு இருக்கிறார். பாத்தீங்களா!!!

      நன்றி!!!

      Delete
  17. சாறு ////ஜி.பி.சி இஸ்க்கன் குழுவுக்கும், இந்திய Bangalore குழுவுக்கும் சொத்து சார்ந்து வழக்கு நடக்கிறதே. ஏன் பகவான் சமரசம் செய்யக் கூடாது??////
    பெரியாரை பிபற்றுபவர்களும் குழுக்களாக பிரிந்து சண்டை வழக்கு நடைபெறவே செய்கிறது அதை நீங்கள் தலையிட்டு சமரசம் செய்து வைக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      இரு மனிதர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வருதல் இயல்பே. ஆனால் இஸ்கான் குருக்கள் போன பிறவி, வரும் பிறவிகள் உணர்ந்த ஞானிகள் என தங்களைக் கூறிக் கொள்கிறார்கள்.

      திராவிட‌ குழுக்கள் இடையே வந்த பிரச்சினைகளும் தனிமனித கருத்து,சொத்து பிரச்சினைகளே!!

      இஸ்க்கானில் கிர்த்தானந்தா என்பவர், பிரபுபாதவின் வலது கைபோல் இருந்து,தலைமைப் பொறுப்புக்கு வர இருந்து ஓரினப் புணர்வு, குழந்தைக் காமம், போதை மருத்து கடத்தல்,கொலைகள் என பல வழக்குகளில் சிக்கி,காணாமல் போனார்.

      இவர் ஒரு மோசமான் மனிதர் என் ஏன் அவதார புருஷன் பிரபுபாதவினால் உணர முடியவில்லை??

      இதில் ஆத்மா,பரமாத்மா பத்தி விளக்கம் எப்படி அறிந்து இருப்பார்??

      சாதரண மனிதர்கள் போல் சகலமும் அறிந்த ஞானிகள் சொத்து பிரச்சினைக்கு நீதிமன்றம் செல்வது முரணாக இல்லை!!!.

      நாதிகர்,ஆத்திகர் எதார்த்த வாழ்வு நடைமுறைகளில் வித்தியாசம் இல்லை என்பதை எளிதில் உண்ர முடியும்.

      இதை நாத்திகர் ஒத்துக் கொள்கிறோம். ஆத்திக குருக்கள் ஒத்துக் கொள்வது இல்லை!!

      நன்றி!!!

      Delete
  18. சாறு வஹ்ஹாபியம் அப்படின்னா என்னாது?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      சவுதி அரச மதம் வஹாபியம். 18 ஆம் நூற்றாண்டு அப்துல் வஹாப், 10 ஆம் நூற்றாண்டு ஹன்பாலி ஆகியோரின் குரான்,ஹதித்,சுன்னா,ஷரியா விளக்கம் மேல் கட்டப்ப்ட்டதே வஹாபியம்.

      இதுவே தூய இஸ்லாம் என விளம்பரப்படுத்தப் படுகிறது.

      அண்ணன் பீ.சே தான் வஹாபி,நீங்களும்தான், நீங்கள் சொல்வதுதான் வஹாபியம்.

      அறியாப் புள்ளையாய் இருக்கீகளே!!

      http://en.wikipedia.org/wiki/Wahhabi

      Wahhabism (Arabic: وهابية‎, Wahhābiyyah) is an ultra-conservative[1] branch of Sunni Islam.[2][3] It is a religious movement among fundamentalist Islamic believers, with an aspiration to return to the earliest fundamental Islamic sources of the Quran and Hadith, with inspiration from the teachings of Medieval theologian Ibn Taymiyyah and early jurist Ahmad ibn Hanbal.[4] Wahhabism was a popular revivalist movement instigated by an eighteenth century theologian, Muhammad ibn Abd al-Wahhab (1703–1792) from Najd, Saudi Arabia.
      ...
      The Saudi government began to spend tens of billions of dollars throughout the Islamic World to promote Wahhabism, which was sometimes referred to as "petro-Islam".[56] According to the documentary called The Qur'an aired in the UK, presenter Antony Thomas suggested the figure may be "upward of $100 billion".[57]
      ..

      சிந்திக்க மாட்டீர்களா!!

      Delete
  19. ///இப்ப வஹாபி மாதிரி இது ____ இட்டுக் கட்டியது என பொய் சொல்லனும் ஹி ஹி///

    இப்படியெல்லாம் பொய்யை சொல்லி இஸ்லாத்தை மட்டந்தட்டனும் .

    எந்த ஹதித் பொய் என்று சொல்லுகிறார்களோ அதை இப்போது சொல்லவே இல்லை .
    அதுவும் 1200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல்களில்ருந்து தான் எடுத்து வைக்கிறார்கள் இப்போதைய கருத்துக்கள் கிடையாது

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      ஏற்கப்பட்ட 6 ஹதித் தொகுப்புகள்[ புகாரி,முஸ்லிம், அபு தாவுத்,திர்மிதி,அல் நசாய்,இபின் மஜா]ல் எந்த ஹதிதைக் காட்டினாலும்,இட்டுக் கட்டியது என சொல்வது சரியா?

      குறைந்த பட்சம் வாஹாபிகள் அனைவரும் சேர்ந்து சஹீஹ் ஹதிதுகளை இபோது தொகுத்து சில புத்த்கங்கள் ஆக்கி விட்டால். விமர்சிக்க வசதியாக இருக்கும் ஹி ஹி!!

      சில எ.கா

      1. முதலில் வஹி வந்த பின் நபி(சல்) தற்கொலைக்கு முயன்றார்.

      2. அவருக்கு சூன்யம் வைக்கபட்டது.

      3. அவருக்கு பல ஆண்களின் மொத்த பாலியல் பலம்.

      4. அவர் செய்த கொலைகள் என புகாரி,முஸ்லிம் என முதல் தர புத்தக ஹதித்களுக்கே யூதன் இட்டுக் கட்டியது என்கிறீர்களே நியாயமா??

      டிஸ்கி: இப்போ குரானுக்கு விரோத ஹதித் நிராகரிக்கப்படும் என சொல்ல வேண்டும். சரி இபோதைய குரான் மொழி பெயர்ப்பு,பழைய மொழியாக்கத்தில் இருந்து மாறி இருக்கிறது என்றால்,இதுதான் சரி,அது தவறு என சொல்ல வேண்டும்.

      குரானில் பொருளை மாற்றி ஹதிதை தூக்கி, நபி(சல்) ஐ காப்பாற்ற முயல்வதைக் கூட அறிய முடியாதா?? ஹி ஹி

      நன்றி!!

      Delete
  20. \\இவர் ஒரு மோசமான் மனிதர் என் ஏன் அவதார புருஷன் பிரபுபாதவினால் உணர முடியவில்லை??\\ மாமு திரும்பத் திரும்ப விஷமமான கருத்துக்களை பரப்ப வேண்டாம் அவர் இறைவனால் நியமிக்கப் பட்டு ஒரு பனி நிமித்தம் அனுப்பப் பட்டவர் அவ்வளவே. ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனுடன் தொடர்புடையவர்களே. அந்த தொடர்பை மறந்துபோன ஆன்மாக்களுக்கு நினைவூட்ட இறைவன் தனது பணியாளர்களை அனுப்பி வைக்கிறார், அவர்களில் ஒருவர் சுவாமி பிரபுபாதா. இதை பலமுறை சொன்ன பின்னரும் அவர் அவதார புருஷன் என்பது மாதிரியான விஷத்தை பரப்புவது ஏனோ?

    உலகம் முழுவதுமே ஒரு ஜெயில்தான் பிறவி எடுத்ததே பாவத்தின் காரணத்தால் thaan. When you teach criminals sometime they become all right, sometimes they fall back to their older habits, that doesn't mean God/His servants should stop preaching and reclaiming the conditioned souls.

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      ஏன் பிரபுபாத செய்யவில்லை என்றால் அவரால் மட்டும் அல்ல, எவராலும் இன்னொரு மனித்னை சரியாக கணிக்க முடியாது.

      அயோக்கியர்கள் நாத்திகர்களிலும் உண்டு. ஆனால் அயோக்கிய நாத்திகன அரசியல் இயக்கமாக பலம் பெறாவிட்டால் பெரிய பிரச்சினை வராது.

      கம்யுனிசம்,திராவிடம் சார்ந்தும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன என்பதை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

      நான் ஒரு அயோக்கிய நாத்திக தனி மனித‌ன் என வையும்[ உம்ம மகிழ்ச்சிக்குதான் ஹி ஹி],பொது வாழ்வில் என்ன பதிவு போடுவேன் அவ்வளவுதான் முடியும்.தனிப்பட்ட வாழ்வில் ஆன்மீகத்திற்கு பைசா கொடுக்க மாட்டேன்.

      தொகுதியில் நிற்பது யார் என்பதைப் பொறுத்து திமுக,அதிமுக என பலமுறை மாற்றி மாற்றியே ஓட்டு போட்டு இருக்கிறேன்.

      சுற்றியுள்ள மனித்ர்களுடன் சுமுகமாக வாழவே முயல்கிறேன்.அனுபவங்களில் இருந்து கற்கிறேன்.

      தனி மனித ஆத்திகன் ஆன்மீக குருக்களிடம் மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்கிறேன்.

      ஆனால் ஆத்திக குரு என்றவுடன் அவன் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பும் கூட்டம், அவனுக்கு பின் வரும் தலைகளின் இயல்பு சார்ந்து ஆத்திக தனிமனித்னை அதிகம் பாதிக்கும்.

      நாத்திக தலைகள் ஊழல் செய்யலாம்,கூட இருப்பவனின் முன்னேற்றத்தை தடுக்கலாம்.


      இங்கு ஆத்திக தலைகளினால் பாதிக்கபடும் தனிமனிதர்கள் அதிகம், நாத்திக தனிமனிதனை விட ஆத்திக தனிமனிதன் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்வே சொல்கிறோம்.

      உலக்மே ஒரு சிறைச்சாலை,நாடக மேடை என்பதை நாத்திகர் ஏற்பது இல்லை.

      பெரும்பான்மை மக்கள், உணவு,உடை,உறைவிடம் பெறும் வகையில் அரசு அமைப்பு,சட்ட திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதியே நாடுகிறோம்.

      நாம் தனிமனிதர்கள் ஆத்திகனோ,நாத்திகனோ பாதிக்கப்படக் கூடாது எனவே விரும்புகிறோம்.

      நீர் ஒன்று பற்றி ஆய்வு செய்து எழுதும். இது வேண்டுகோள் மடுமே.

      1. ஆத்திக தலைகள், நாத்திக தலைகள் ஒப்பீடு.[பல மனிதர்கள் தொடர் வரலாறு சார்ந்து]

      2. ஆத்திக தனி மனிதன், நாத்திக தனிமனிதன் ஒப்பீடு.[பல மனிதர்கள் தொடர் வரலாறு சார்ந்து]

      யோசித்து பார்த்து யார் பாதிக்கப்படுகிறார் என் சிந்தியும்!! பதிவு எழுதும் விவாதிப்போம்.

      நன்றி!!

      Delete
    2. மாப்ளே தாசு,
      ஆத்திக நாத்தீக பிரச்சினை ஒரு சார்பியல் பார்வைப் பிரச்சினை.

      நாத்திகனின் பார்வையில் ஆத்திகர்

      மனிதர்கள் அனைவரும் சமமே,பிறப்பு,மதம் சார்ந்து பிரிவினைகள் கூடாது என்பதற்கு மாறாக சில பழைய(?) புத்த்கங்களை வைத்து , அதன் மூலம் விடைதெரியா கேள்விகளைக் வைத்து குழப்பி ,கொள்கை ஏற்பவரை பிறரை விட மேன் மக்கள் போல் காட்டி,அவர்களை சுரண்டி கல்லா கட்டுகிறார்கள் என்பதே எங்கள் பார்வை.
      **
      ஆத்திகனின் பார்வையில் நாத்திகர்

      இறைவன் அனுப்பிய புத்த்கங்களில் மறைபொருளாக அனைத்துக்கும் தீர்வு உண்டு. இவ்வாழ்வு நிலையற்றது, மறுமை வாழ்வே முக்கியம்.சரியா குருவைப் பின்பற்றினால் மோட்சம்.இத்னை உணரா மூடர் நாத்திகர். நாத்திகம் பேசி காசு சம்பாதிக்க பார்க்கிறான்.

      சரியா ??? நீர் விரும்பினால் இன்னும் கொஞ்சம் கருத்து சேரும்!!!

      நன்றி!!

      Delete
  21. மாமு,
    நான் என்னவோ எல்லோருக்கும் இடைஞ்சல் பண்றா மாதிரியும், நீங்க மட்டும் யாருக்கும் தொந்தரவே செய்யாத மாதிரியும் சொல்றீங்க? சொல்லப் போன உங்க அளவுக்கு கூட நான் பிற உயிர்களை இம்சை செய்வதில்லை. நான் மனிதனை மட்டுமல்ல மிருங்கன்களைக் கூட இம்சிப்பதில்லை. ஆனால், நீங்கள் எல்லாத்தையும் கொன்று உண்ணலாம் என்கிறீர்கள். மனிதன் வெட்டு பட்டால் துன்பம், மற்ற ஜீவன்களுக்கு அது இன்பமா?

    அடுத்து இறைத் தூதர்களுக்கு இங்கேயுள்ள மனிதர்களின் குணநலன்கள் நன்றாகவே தெரியும், அவனுங்க ராஸ்கல் பசங்களாத்தான் இருப்பாங்க, ஒன்னு ரெண்டு திருந்தினாலே பெரிய விஷயம்.

    மாமு, நான் பல முறை ஜோதிட நிபுணர்கள் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் அதை பொய் என்றாலும், அதெப்படி ஜாதகத்தைப் பார்த்தே நம் வாழ்வில் நம் கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்கிறார்கள்? 80% அவர்கள் சொல்வது சரியாகவே அமைகிறது, சில சமயம் இது மேலும் accurate ஆக உள்ளது. வேலன் 2 MB மென்பொருள்தான் குடுத்தார், அனால் அதில் சொல்வது அப்படியே நடப்பதைப் பார்த்து பயந்து இப்போது பார்பதியே விட்டு விட்டேன். இதை எதைக் கொண்டு விளக்குவீர்?

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      உங்க கிட்ட பிடித்த ஒரு விடயம். தொடர்ந்து விவாதம் சார்ந்து கருத்து இடுதல்.தொடர்ந்து எதையும்,ஆழமாக,இருவரும் ஏற்கும் சான்றுகள் விவாதிக்கும் போது சுமுக தீர்வு பெரும்பாலும் வந்துவிடும்.

      ஆனால் ஒரு மக்கள் பிரச்சினையில், இருபக்க பிரதிநிதிகளும் அயோக்கியன்களாக் சுயநலவாதிகளாக இருக்கும் போது பிரச்சினை மோசம் மட்டுமே ஆகும்.இத்னை பல் பிரச்சினைகளில் உணர்கிறோம்.
      **
      //நான் என்னவோ எல்லோருக்கும் இடைஞ்சல் பண்றா மாதிரியும், நீங்க மட்டும் யாருக்கும் தொந்தரவே செய்யாத மாதிரியும் சொல்றீங்க? சொல்லப் போன உங்க அளவுக்கு கூட நான் பிற உயிர்களை இம்சை செய்வதில்லை. நான் மனிதனை மட்டுமல்ல மிருங்கன்களைக் கூட இம்சிப்பதில்லை. ஆனால், நீங்கள் எல்லாத்தையும் கொன்று உண்ணலாம் என்கிறீர்கள். மனிதன் வெட்டு பட்டால் துன்பம், மற்ற ஜீவன்களுக்கு அது இன்பமா?//

      நீங்கள் நலலவர் என்வும் ஒத்துக் கொள்கிறேன். கொஞ்சம் பிடிவாதம் அவ்வளவுதான்.இத்னை என் வீட்டில் கூட நான் ஆத்திக/நாத்திக பிரச்சினைகளில் உணர்வதால் நம்க்கு இது பழகிய விடயம்.

      உங்களின் மாமிசம் உண்ணுவதைத் தவிர்த்தல் நல்ல விடயம் என ஒத்துக் கொள்கிறென்.பின்பற்ற வரும் காலத்தில் முயற்சி செய்ய எண்ணம் உண்டு. இப்போது நான் வாழும் இடத்தில் மாமிசம் தவித்தல் மிக கடினம்.

      எல்லோரும் மாமிசம் உண்ணுதல் தவிர்த்தல் என்பதற்கு பல விவசாயம்,பொருளாதரம் ,விநியோகம் சார்ந்து அமைப்புகள் தேவை.அப்படி அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினால் மட்டுமே,மாமிச உணவு உட்கொள்ளுதல் குறையும் வாய்ப்பு ஏற்படும்.
      *
      ஒரு தனி மனிதன்,சூழல் இரண்டும் சேர்ந்ததே வாழ்வு. மதங்கள் தனி மனிதன் தன்மை மாற்றி ,சூழலை மாற்ற முடியும் என்கின்றன.

      நாத்திகர்: சூழல் சார்ந்து வாழ வேண்டும் என்கிறோம்.

      This will turn into debate on fre will exists!!!

      எதார்த்த வாழ்வில் இரண்டும் எந்த அளவு கலப்பு இருக்க வேண்டும் என்பதே சிக்கல்.
      **
      //நான் பல முறை ஜோதிட நிபுணர்கள் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் அதை பொய் என்றாலும், அதெப்படி ஜாதகத்தைப் பார்த்தே நம் வாழ்வில் நம் கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்கிறார்கள்? 80% அவர்கள் சொல்வது சரியாகவே அமைகிறது, சில சமயம் இது மேலும் accurate ஆக உள்ளது.//

      இதுவரை அறிந்த இயற்கை விதிகளுக்கு முரண் ஆன விடயங்களை ஏற்க மறுப்பது நாத்திகம்.

      அந்த வகையில் ஜாத்கம் போன்ற கணிப்புகளை நிராகரிக்கிறோம். இது பற்றி மட்டுமே ஆழமாக இன்னும் ஒருமுறை விவாதிப்போம்.இப்போது பொதுவாக‌
      ஆத்திகம்,நாத்திகம் இவற்றின் தாக்கம், தனி மனிதன், இயக்கங்கள் செய்தது,செய்வது சரியா, என்ன பாதிப்பு என்பதையே அலசுவோம்.
      **
      Thank you

      Delete
  22. \\இவ்வாழ்வு நிலையற்றது\\ அதை நிலையா உங்களால செய்ய முடியதே மாமு. எங்கிருந்து வரோம், எங்கே போகிறோம் என்ற தேடலுக்கு கதவு போட்டு நீங்க சாத்துறீங்க மாமு. உடலில் உள்ள கெமிகல்ஸ் தவிர வேறு ஒண்ணுமே இல்லை, மனிதன் தன் சுகத்துக்காக மற்ற எல்லாத்தையும் துன்புறுத்தலாம், சில சமயம் சக மனிதர்களையே துன்புறுத்தலாம், இது தான் நாத்தீகம் இறுதியாக கொண்டு செல்லும் இடம். காரணம் கடவுள் என்று யாரும் இல்லை, என்ன செய்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை, அதனால மாட்டாத வரை எல்லா அயோக்கியத் தனங்களையும் பண்ணு, இது தான் நாத்தீகம்.

    ஆத்திகம்னா கள்ளச் சாமியார்கள் உள்ளார்கள், முட்டாள்களாய் இருந்தால் அங்கே போய் விழ வேண்டி இருக்கும், ஏமாந்தவன் எங்கு வேண்டுமானாலும் ஏய்க்கப் படலாம். ஆன்மிகம் விதி விளக்கலா. ஆனாலும், யாருக்கும் தெரியாமல் தவறு செய்தாலும் தண்டிக்கப் படுவோம், பிற உயிர்களைத் துன்புறுத்தினால் நாமும் அதே வகையில் துன்புறுத்தப் படுவோம், இதனால் நான் மற்ற ஜீவன்களையும் இம்சிப்பதில்லை. உணவுக்காக கத்திரிக்கா செடியை இம்சித்தாய் என்று குற்றம் சுமத்தி குள்ளநரி வேலையைச் செய்வீர்கள்தானே!!

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே,

      இந்த‌ வாழ்வு நிலையற்றது என்பதை ஒத்துக் கொள்கிறோம்.ஆனால் வாழும் காலத்தில் ஒரு மனிதன் சுகமாக வாழ குறைந்த பட்ச வாழ்வாதர‌ம் கொடுக்கும் எளிய வாழ்வுமுறை வேண்டும் என்கிறோம்.

      மறுமை வாழ்வு பற்றி அக்கரை இல்லை. அறிவியல் முன்னேற்றத்தில் இன்று சராசரி ஆயுள் 70 அருகே உள்ளது.

      கடந்த 50+ ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணம் வாழும் ஆயுள் அதிகரித்ததே!!!

      இன்னும் வரும் காலத்தில் செயற்கை ஜீனோம் கரு உருவாக்கம் மூலம் பணம் படைத்தவன் 100 வருடம் மேல் வாழும் சூழல் வரலாம். ஒருவன் நெடு நாள் வாழும் போது தேவைகள்,மக்கள் தொகை அதிகரிப்பு, பிரச்சினைகளை அதிக சிக்கல் ஆக்கும்.ஏழை உயிருக்கு மதிப்பு இல்லாமல் போகும்.

      ஆகவே இருக்கும் பிரச்சினைகளையே தீர்க்காமல்,அதிகப் பிரச்சினைகளை அறிவியல் உருவாக்குவது விரும்பத் தக்கது அல்ல!!

      ஆகவே வாழும் காலம் குறைவாக இருந்தாலும், அனைவருக்கும் உணவு,உடை,உறைவிடம்,கல்வி,சுகாதாரம் கிடைக்க வேண்டும் என்கிறோம்.

      நன்றி!!

      Delete
    2. மாமு,

      அறிவியல் வளர்ந்து இத்தனை மில்லியன் வருடங்களாக சேமித்து வைக்கப் பட்டிருந்த Fossil Fuel [பெற்றொலியம், எரிவாயு, நிலக்கரி இத்யாதி....] எல்லாத்தையும் காலி பண்ணியது மட்டுமல்லா, இன்னும் மில்லியன் வருடங்களுக்கு உயிர்கள் பயன்படுத்தவிருந்த இயற்கையையும் எல்லா விதத்திலும் பாழ் படுத்திவிட்டது. நீங்க இன்னைக்கு ஒரு பத்து வருஷம் சேர்த்து வாழ்ந்திட்டு போறது பெரிய விஷயமல்ல, அடுத்து தண்ணீர், உணவு இதுவே கிடைக்குமா என்ற கேள்விக் குறியாக்கிட்டாங்க, இன்றைக்கு நல்ல அரிசி 55 ரூபாய், சுத்தீகரிக்கப் பட்ட தண்ணீர் ஒரு குடம் முப்பது ரூபாய். இது எதில் போயி முடியுமோ தெரியலை. மனிதனை சமமாக்குவதாகச் சொல்லி எல்லோரையும் பாலுங் கிணற்றில் தள்ளி விட்டார்கள். இதற்க்கு காரணம் உமது விஞ்ஞான வளர்ச்சிதான்.

      \\இன்னும் வரும் காலத்தில் செயற்கை ஜீனோம் கரு உருவாக்கம் மூலம் பணம் படைத்தவன் 100 வருடம் மேல் வாழும் சூழல் வரலாம்.\\ whether earth can support life, that itself is becoming a big question mark, where is the question increasing life span.........

      Delete
    3. மாப்ளே தாசு,
      இயற்கைச் சூழல் மனித்னால் கெடுகிறது என்பதை ஒருவழியாக் ஏற்கும் நிலை வந்து விட்டது.

      இலாப் நோக்கு பொருளாதாரம் சார்ந்த மையப் படுத்தப்பட்ட உற்பத்தி,வினியோகம் என்பது மிகவும் தவறான முறை. ஒரு இடத்தில் என்ன கிடைக்கிறதொ அது சார்ந்து வாழ்வு இருப்பதே நியாயம். பஞ்சாப்பில் விளையும் உருளைக் கிழங்கு வெள்ளைக்காரன் நிறுவத்தில் சிப்ஸ் ஆகி உலகம் முழுதும் செல்லும். நல்ல தரம் கொண்டவை ஏற்றுமதி ஆகும். இங்கே குறைவான தர உணவு மட்டுமே கிடைக்கும்.

      சுதேசி என்பவன் பைத்தியக்காரன்.

      அறிவியல் என்பது கடந்த 50 ஆண்டுகளில் அதிகம் அழிவை நோக்கியே செலுத்தியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

      ஆன்டிபயாட்டிக் துஷ்பிரயோகத்தால் , வைரஸ்களின் புதிய பரிணாம அவதாரத்தை அடக்க முடியாமல் போய் விட்டது. இன்னும் சில வருடங்களில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன் இல்லாமல் போகலாம்.வரும் தலைமுறைக்கு அதிக சிக்கல் மட்டுமே விட்டு செல்வோம்.

      http://www.bbc.co.uk/news/health-21702647
      Some bacteria are becoming resistant to our best drugs
      A terrible future could be on the horizon, a future which rips one of the greatest tools of medicine out of the hands of doctors.
      அறிவியல் இப்படி எனில், மத பிரச்சாரம் மூலம் மத மாற்றம்,மத வெறி, பிரிவினை என போர் ஏற்படுத்தும் தந்திரங்கள் கையாளப்படுகின்றன.

      மதம்,அறிவியல் இரண்டுமே ஆதிக்க சக்திகளால் துஷ்பிரயோகம் செய்யப் படுகின்றன.

      நன்றி!!!

      Delete
  23. எனக்கு பெரியாரின் கருத்துக்கள் பலவற்றில் உடன்பாடு இல்லை. குறிப்பாக அவர் அநேகமாக காந்தி விவேகானந்தர் என எல்லோரின் மீதும் வெறுப்பினை உமிழ்ந்தவர்.சில சமயங்களில் வெறுப்பும் அழிவுமே அவரது லட்சியமா என சந்தேகமே வந்தது உண்டு. எனக்கு பிடித்த சாதி ஒழிப்பு போராளி அம்பேத்கரே.

    ஆனாலும் பெரியாரின் தேவையை உணர்த்தும் சில விடயங்கள் நடந்து கொண்டுதான் இருப்பதை இட்லிவடையில் வெளியான குங்குமம் கட்டுரையும் அதில் சிலர் போட்டுள்ள பின்னூட்டங்கள் காட்டுகின்றன. பிராமணர் உடம்பு முழுக்க (அந்தரங்க அவயங்கள் உட்பட) சரைத்தல் என்பதை ஒருவர் பரம்பரையாக செய்ய வேண்டியிருந்ததை நினைக்கும் போது கோபமே எழுகிறது. இதை புண்ணியம் என வேறு கூறி அவர்களை நம்பவைத்துள்ளார்கள் சில சண்டாளர் என்பது இன்னொரு அதிர்ச்சி! பெரியாரின் தாக்கத்தால் பிற இடங்களில் உள்ளது போல் பிராமணன் என்றால் தரப்படும் ஸ்பெஷல் மரியாதை அவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்காத போதே இந்த நிலைமை.

    ReplyDelete
    Replies
    1. சகோ வாங்க,
      சகோ நந்தவனம்,

      மனிதன் இயல்பு சுயநலம்.

      ஒருவர் தனது மேன்மையை விட்டுக் கொடுப்பது கடினம்.

      இதில் பிராமணர் மட்டும அல்ல, எந்த சாதியினரும் செய்வார். நாங்கள் ஆண்ட பரம்பரை என சொல்பவர்கள் பார்ப்பனர்களே

      பெரியார் கால சூழல் மிக மோசம்.நமது தாத்தா ஒன்று ஒடுக்குபவன் இல்லை ஒடுக்கப்படுபவன் இரண்டில் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.

      ஏதோ சுதந்திரம், கல்வி பெற்று நாம் கொஞ்சம் நன்றாக இருக்கிறோம் என்பதற்காக எப்போதும் இப்படித்தான் இருந்தது என சொல்லக் கூடாது.

      அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த சாதியம்,பெண் அடிமைப் பிரச்சினைகளை பெரியார் அளவுக்கு யாரும் எதிர்க்கவில்லை. அம்பேத்கார் இந்தியா முழுதும் தாக்கம் ஏற்படுத்தினாலும் அவர் அளவுக்கு பெரியார் படித்தவர் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

      இப்பிரச்சினைகளுக்கு காரணம் இந்து மதம் மட்டுமே, மதம் மாறினால் தீரும் என்னும் அவரின் கூற்று முழுதும் சரியல்ல.

      பெரியாரை விட வேறு எவரும் ,தமிழ்நாட்டில் சாதீயம்,பெண்ணுரிமை வேண்டி போராடி இருந்தால் நன்றாகவே இருந்து இருக்கும்.

      காந்தி,பாரதி போன்றோர் முயன்றாலும், மதத்தை சீர்திருத்தவே முயன்றனர்,அவர்களுக்கும் எதிர்ப்பு இருந்தது.

      **

      எனினும் அம்பேத்கார்,பெரியார்,காந்தி மூன்று பேருக்கும் ஹலால் அல்வா கிண்டி கொடுத்தவர் முகமது அலி ஜின்னா என்னும் வரலாற்றை மறக்க கூடாது!!!

      ஒரு மனிதனின் ஆசை, இந்திய துணக் கண்டத்தில் இன்று வரை நீடிக்கும் சிக்கல்களுக்கு காரணம் ஆகி விட்டது.

      நன்றி!!

      Delete
    2. நந்தவனம்,

      பெரியாரை எளிதாக குற்றம் சொல்லும் நீங்கள், இதே போல சங்க்ராச்சாரியார், மேல்மருத்துவர் அம்மா, மதுரை ஆதீனம் பற்றி எல்லாம் கொஞ்சம் கவலைப்படுவது?

      எனக்கு தெரியும் உங்களுக்கு அவர்களின் மீது பற்றுலாம் இல்லைனு, ஆனால் பெரியாரை விமர்சிக்க மட்டும் பேராவல் அதிகம் இருப்பதேன்னு தெரியவில்லை, உங்களை என்பது உங்களை மட்டுமல்ல, உங்களைப்போன்ற பொதுவான கருத்துள்ள ஜீவன்களை சொல்கிறேன்.

      பெரியாரின் கருத்துக்கள் முழுவதும் சரினு எல்லாம் சொல்லமாட்டேன்,அவரும் தவறான போதனை செய்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு சமூகத்தின் விடுதலைக்காக,மாற்றத்திற்காக அவ்வாறு செய்துள்ளார் என்பதால் அவரின் பலவீனங்களை பெரிதுப்படுத்தக்கூடாது என நினைப்பவன்.

      இலங்கைப்பிரச்சினைக்கு அடிப்படைக்காரணமே காந்தி போன்றவர்கள் என்ற வரலாற்று உண்மைகளை பலரும் அறியவதில்லை(இதென்ன புதுக்கதைனு சொல்லாதீர்கள், சரியான வரலாற்றை புரிந்து படித்தால் ,சொல்லப்படாத விடயங்கள் பல இருக்கு என தெளிவாகும்) புதுச்சேரி,கோவா போன்றவற்றின் விடுதலைக்கு பற்றிக்கூட காந்தி பெரிதாக கவலையே படவில்லை,பின்னர் அம்மக்களே போராடி விடுதலைப்பெற்றனர், ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு அவர் தான் உத்தமர்,இன்றளவும் நிலவும் ஜாதிய பிரச்சினைகளுக்கு காந்தி தான் அடிப்படை காரணம், அதுவும் கண்டுக்க மாட்டோம்,ஏன் எனில் அவர் விடுதலைக்காக போராடினார் என சொல்லிவிடுவோம்.

      காந்தியை கேவலப்படுத்த சொல்லவில்லை, ஆனால் இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் பொதுவாக உத்தமர், தேசத்தந்தை என நமது பொதுப்புத்தியில் ஏற்றிவைக்க தயாராக இருக்கிறோம்,

      அதே போல பெரியாரையும் பார்க்கலாமே என்பது தான் எனது கருத்து.

      ஆனால் அப்படிலாம் செய்ய மாட்டோம்,பெரியாரை பற்றிப்பேசும் போது மட்டும் நியாயத்தராசு தூக்கிடுவோம் :-))

      என்னைப்பொறுத்தவரையில் பெரியாரும் விமர்சனத்துக்குரியவரே, ஆனால் காந்தியை ஒப்பிடுகையில் பெரியாரே உயர்ந்தவர்னு சொல்லிடுவேன் :-))

      ஏன்னு புரிய நீங்க இப்பக்கூட கிராமப்பகுதிகளுக்கு சென்று பார்த்தால் உணரலாம்,பெரியார் சரியா வேலையை முடிக்காம்ம போயிட்டாரேனு சொல்வீங்க.

      பல கிராம டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ், எவர்சில்வர் கிளாஸ்னு வச்சிருப்பாங்க, எவ்வளவு தான் வயசானவராக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை, டீக்கடைக்காரன், த்தா...இந்தா டீனு சொல்லிக்கொடுப்பார்(ன்), அவ்வளவு லேசில் உட்கார்ந்து டீக்குடிக்க முடியாது, அப்படியே உட்கார்ந்து இருந்தாலும் மேல்சாதிக்காரர்(ன்) வந்தால் எழுந்துவிட வேண்டும், அப்படி செய்யலைனா -------பயலுக்கு திமிர பார்த்தியானு வசவு வாங்கனும்.

      பெரியார் வாழ்ந்த பூமியிலேயே இதான் நிலை எனில் வட இந்திய கிராமங்களை நினைத்து பாருங்கள், பூலான் தேவியெல்லாம் கொள்ளைக்காரியானாள் என பொதுவாக படித்து வைத்திருப்போம்,ஏன் அப்படியானால் என அவரது சுயசர்தம் படித்தால் ஒரு வலியான காரணம் இருப்பதை அறியலாம்.

      ஒரு ஊரில் இருக்கும் வயசான கிழம் முதல் அத்தனை ஆண்களும் பூலான் தேவியை கட்டி வைத்து வன்புணர்வு செய்துள்ளார்கள், அப்புறம் துப்பாக்கி தூக்காமல், என்ன செய்வாராம்?

      ஹி...ஹி அது என்ன மாயமோ,மர்மமோ தெரியலை நந்தவனம் பேரை பார்த்தாலே நமக்கு சரமாறியா கருத்து மழை பொங்குது :-))

      இன்னும் நிறைய சொல்ல இருக்கு,நந்தவனம் வகுப்பெடுக்கிறேனு பொங்கிடுவார் ,அதனால் இத்தோட முடிச்சுக்கிறேன்.

      Delete
    3. @வவ்வால்

      //பெரியாரை எளிதாக குற்றம் சொல்லும் நீங்கள், இதே போல சங்க்ராச்சாரியார், மேல்மருத்துவர் அம்மா, மதுரை ஆதீனம பற்றி எல்லாம் கொஞ்சம் கவலைப்படுவது?//

      இவர்களை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என எதை வைத்து சொல்லுகிறீர்கள்? நீங்கள் வேண்டுமானால் இவர்களை ஆதரித்து ஒரு பதிவு போடுங்கள் அங்கு வந்து இவர்களை கும்ம தயாராக காத்திருக்கிறேன் :)

      மேலும் காந்தி செய்த தவறுகளை அறிவேன். நாம் சட்டத்தை மதிக்காமல் என்னமோ இன்னமும் நம்மாளுக பிரட்டீஷ்காரன் ஆளுவது போல இந்திய ஏகாதிபத்தியம் என பினாத்தி நாம் தேர்தெடுத்த அரசையே எதிர்ப்பதற்கு அவருடைய போராட்ட முறைகளே காரணம். இது போல பல பிரச்சனைகள் இருப்பினும் காந்தி மதிக்கப்படவேண்டிய ஆளுமை என்பது எனது கருத்து. மேலும் இந்தியாவின் மிகப்பெரும் மனிதராக உலகெங்கும் மதிக்கப்படுகிறார். இ அம்பேத்காரும் காந்தியை எதிர்த்தார். ஆனால் பெரியாருடைய நிராகரிப்பு என்ப்பது அவமரியாதையாகத்தான் முடிகிறது. இதைக்கூட பொறுக்கலாம், ஆனால் இன்றும் பாரதி உட்பட அனைவரையும் அவமதிக்கும் வேலையே பெரியாரிஸ்டகள் செய்வதுதான் கடுப்பாகுகிறது.

      //ஏன்னு புரிய நீங்க இப்பக்கூட கிராமப்பகுதிகளுக்கு சென்று பார்த்தால் உணரலாம்,பெரியார் சரியா வேலையை முடிக்காம்ம போயிட்டாரேனு சொல்வீங்க.//

      இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி ஏரியாவில் பெரியார் வேலை செய்யவே இல்லை, ஆரம்பித்தால்தானே முடிப்பதற்கு. எதற்கெடுத்தாலும் பார்பனர்களை குற்றம் சாட்டிவிட்டு போய்விட்டார். இதனாலேயே இவர்களின் ஆதிக்கம் இன்னமும் தொடர்கிறது. மேலும் இந்த காரணத்தால்தான் பார்பனரையும் மேலாதிக்க சாதிகளையும் பிரித்து பார்பனரை மட்டும் எதிர்க்க மறுத்துவிட்டார் அம்பேத்கர்.

      மேலும் பெரியார் ஜாதி ஒழிப்பில் சாதித்துவிட்டார் என காட்ட உபி பிகார் சாதிவெறி ஏரியாக்களையே ஒப்பிட்டு பேசகூடாது. பெரியாரின் தாக்கம் இல்லாத பிற தென்மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அப்படியென்ன சாதிவெறி குறைந்துவிட்டது என்பதே சரியான ஒப்பீடாக இருக்கும். மேலும் பெரியாரை அறியாத வங்கத்தில் சாதிபார்க்காத திருமணங்களை அரேஞ்சுடு கல்யாணமாக நடைபெறுகிறதே?

      பெரியாரை குறைகூடாதுதான். அவரது தாக்கம் ஒருவிதத்தில் நல்லதுதான், பிறகு எதற்காக அவரை குறை சொல்லுகிறோம்? பெரியாரிஸ்டுகள் திராவிட இயக்கத்தில் இல்லாத எல்லா தலைவர்களையும் (அம்பேத்கர் தவிர) திட்டுவார்கள். ஆனால் பெரியாரை குறை சொன்னால், முமின்கள் நபியை குறை சொன்னால் blasphemy என கூக்குரலிட்டு கொலைசெய்வது போல, கொலைவெறியுடன் பாய்கிற ஒரே காரணத்தால்தான். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதினை ஒப்புக்கொள்கிறேன், இதற்கு பெரியாரும் விலக்கில்லேயே?

      Delete
    4. 1. Periyar basically fought against caste system and feemal bias... From his point of view Gandhi need to be criticized becos Gandhi supported a SOCIETY WITH CASTE BUT WITHOUT UNTOUCHABILITY.. He never supported removal of Caste system... So from Periyars view he is a suppoter of CASTE SYSTEM which periyar opposed.

      2. Wat u said is totaly wrong about "Periyar only opposed Brahmins Not other oppressing catses"..Periyar is one brought the awareness that every caste such as Vanniyar, Nadar, Thevar are none but sudhras... but the point to be noted is the other oppressing caste members are pawns of the Caste system but BRAHMINS are the creators of the caste system so that makes them the beneificiaries of the caste system(To some extent oppressing castes also) so more treatment is needed for tyhem so only Periyar opposed Brahmins much more than others.. Also the time of periyar Brahmins where controlling the entire system so opposing them makes sense...

      Delete
  24. \\பிராமணர் உடம்பு முழுக்க (அந்தரங்க அவயங்கள் உட்பட) சரைத்தல் என்பதை ஒருவர் பரம்பரையாக செய்ய வேண்டியிருந்ததை நினைக்கும் போது கோபமே எழுகிறது.\\

    நந்தவனத்தான்,

    நீங்க இது பிராமணன் மட்டும் தான் பண்ணிக்கிட்டு இருந்தான் அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? எங்க ஊரில் உள்ள ஆளுங்க ஷேவிங் பண்ணிக்க போவாங்க, அது முடிஞ்சதும் அங்கேயே பின்னால ஒரு கீற்றுத் தடுப்பு இருக்கும், அங்கே போய் Under shaving பண்ணிக்குவாங்க. இது எல்லா சாதிக்காரங்களும் செய்து கொள்வது. ஹா............ஹா............ஹா............

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      உங்களின் இந்த ஒரு பின்னூட்டம் உங்களின் பல் நிலைப்பாடுகளின் சாரம்.

      நாங்கள் சவரம் செய்யும் தொழிலாளி பரம்பரையாக செய்யும் படி நிலை ஏன் வந்தது என கேட்கிறோம்? அவனின் நிலை குறித்தே அக்கரைப் பட்கிறோம்.

      நீங்கள் சவரம் செய்யப்படுபவன் பிராமணான் மட்டும் அல்ல வேறு சாதிக்காரனும் இருக்கிறான் என சொல்கிறீர்!!!

      எவன் செய்தாலும் தவறே!!

      எல்லா சாதிக்காரனும் சவரம் செய்தால்,செய்வதற்கு பியுட்டி பார்லர் அளவு கூலி கிடைதால் நாங்கள் ஏன் விமர்சிக்கப் போகிறோம்?.

      மேல் சாதி எனச் சொல்லும் ஒருவன் பரம்பரையாக சர்வாங்க சவரம் செய்ய முன் வந்து, இப்போதைய கூலி பெற்று அனைத்து சாதிகாரனுக்கும் சர்வாங்க சவரம் செய்ய ஆதரிக்கிறோம்.

      இது அன்னை முத்து லட்சுமி ரெட்டி, சத்தியமூர்த்தி அய்யருக்கு தேவதாசி முறை தொடர ஆதரிக்கும் நீங்கள்,உங்கள் வீட்டு பெண்களை பொட்டுக் கட்டுங்கள் என்க் கூறியது போல் சொல்கிறென்.
      http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=20080606251101400.htm&date=fl2511/&prd=fline&

      At the top of these achievements, she is known for her political activism in respect of social issues. First she rose in revolt against child marriage and the devadasi system. (Under this system, parents “married” off a daughter to a deity or a temple before she attained puberty. These girls became dancers and musicians and performed at temple festivals.)

      In 1930, Muthulakshmi Reddy introduced in the Madras Legislative Council a Bill on the “prevention of the dedication of women to Hindu temples in the Presidency of Madras”. The Bill, which later became the Devadasi Abolition Act, declared the “pottukattu ceremony” in the precincts of Hindu temples or any other place of worship unlawful, gave legal sanction to devadasis to contract marriage, and prescribed a minimum punishment of five years’ imprisonment for those found guilty of aiding and abetting the devadasi system. The Bill had to wait for over 15 years to become an Act.

      While progressive persons supported the abolition of the system, many conservative nationalists opposed it. While the then Tamil Nadu Congress Committee president C. Rajagopalachari, in the words of Muthulakshmi Reddy, “was not very much in favour of abolition of the pernicious practice”, another Congress veteran, S. Satyamurthy, argued that the devadasi system needed to be protected because it was essentially a part of the indigenous Hindu/national culture.

      The Bill, introduced by a nationalist, was blocked by nationalists themselves for one reason or another until E.V. Ramasamy ‘Periyar’, leader of the Self-Respect Movement and later the Dravida Kazhagam and one of the progressive nationalists when the Bill was introduced, and Moovalur Ramamirtham Ammaiyar, another veteran of the Self-Respect Movement, campaigned actively among the people for the passage of the Bill.

      Muthulakshmi Reddy could not get the support of a section of nationalist leaders in spite of the fact that she got an endorsement from Mahatma Gandhi “for liberating the women”. Her perseverance, unmindful of the resentment of some of the influential leaders of the time, earned her laurels from progressive intellectuals.
      நன்றி!!!

      Delete
  25. @தாஸ்

    உண்மையிலேயே இதுபற்றி எனக்கு தெரியவில்லை. எங்களுரில் இது நடைபெறாத காரணத்தால் கேள்விப்பட்டு மறந்திருக்கலாம். ஆனால் பிறர் செய்வதற்கும் பார்பனர் செய்வதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது. மற்ற சாதிக்காரர்கள் அதிகாரம் பணம் இவற்றை காட்டி இதனை செய்ய தூண்டியிருப்பர். ஆனால் பார்பனர் மதரீதியாக புண்ணியம் என செய்ய வைத்துள்ளனர். பார்பனரும் இது புண்ணியம் என நம்பியிருக்கலாம். ஆனாலும் கல்வி பெற்றவர்கள் என்பதால் பிராமணர்களுக்கு பொறுப்புணர்வும் அதிகமாக இருக்கவேண்டும். ஆனால் அவர்களும் இப்படி சுரண்டுவது அயோக்கியத்தனம்.

    இங்கு அமெரிக்காவில் சில வெள்ளையினத்தவரிடம் ஒரு உதவி எனக்கேட்டால், சில சமயங்களில் கேட்கும் முன்னரே அவர்கள் செய்வார்கள். காரணம் அவர்களில் ஆழ்மனதில் உள்ள உயர்வு மனப்பான்மையே. நமது பிராமணர் பிறரை விட உயர்ந்தவர் என எண்ணுவதோடு சரி. பலரிடம் பெரிய மனது இல்லை. இன ஒழிப்பில் வெள்ளையர் பெரும்பங்கு ஆற்றுவது போல் சாதி ஒழிப்பில் பிரமாணர் பங்காற்றி இருக்க வேண்டும். ஆனால் ஞானி என சில நாத்திகர் தவிர யாரையும் பார்க்கவே முடிவதில்லை. பாரதி அல்லது வைத்தியநாத ஐயர் போன்ற ஆத்திக பிரமாணர் சாதி ஒழிப்பில் முக்கியப் பங்கு ஆற்றினால் அது நாத்திக பிராமணர் முயற்சியை விட பெரிதும் பலன் அளிக்கும். ஆனால் யாரையும் இப்போது பார்க்க முடிவதில்லை. இதற்கு பெரியாரும் ஒரு காரணம்!

    ReplyDelete
  26. @ நந்தவனத்தான்

    நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே!! போயும் ........போயும் ........ஞானிய நம்பிட்டீங்க.......?! அவரு கமலை உசத்தி பேசுவாரு, ரஜினியை தாக்குவாறு, கருணாநிதியை பயங்கரமா தாக்குவாறு, பாத்தீங்கன்னா இப்போ ஜே ஆட்சி ஆஹா ஓஹோன்னு ஒன்னும் இல்லை, சொல்ல போனா போன ஆட்சியை விடவும் கேவலமா இருக்கு. இருந்தும் ஜெயலலிதாவை ஒண்ணுமே சொல்ல மாட்டாரு. காரணம்......... புரிஞ்சுக்கோங்க!!

    ReplyDelete
  27. சிலை வைத்தலும் மாலை சூட்டுவதும் எனக்கும் உடன்பாடில்லைதான்.தலைவர்களுக்கு சிலை வைப்பவர்கள் சிலைக்குப் பதிலாக ஒரு மரத்தை நட்டு அந்த தலைவரின் கொள்கைகளை கல்வெட்டாகவோ,அல்லது கண்ணாடி ஃபிரேமிலோ பதித்து வைக்கலாம்,பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாத்திக நண்பர்கள் சிந்தித்து செயல் பட்டால் சிறப்பாக இருக்கும். எந்த சிலையும் வணக்கத்தையும் மரியாதையையும் ஏற்றுக் கொள்வதில்லை.

    ReplyDelete
  28. நன்பரே,
    நமக்கு மதப் பற்று, மொழிப் பற்று, நாட்டுப் பற்று எதுவும் கிடையாது. மனித நேயம், இயற்கை சூழ‌ல் பேணுதல் மட்டுமே நம்து கொள்கை.

    சாதி உயர்வு தாழ்வினை வலியுறுத்தும் எதுவும் இல்லாமல் போவது ந‌லமே. அது மதமானாலும், மொழியானாலும் சரி.

    தலித் தமிழனை ஒடுக்குவது பிற்ற்பட்ட சாதி தமிழன்தானே .

    ஆகவே சாதி ஒன்று ஒழிய தமிழ்,தமிழன் அடையாளம் அழிந்தாலும் சரிதான்.
    அப்புறம் மாட்டுக் கறி விருந்து பதிவில் ஏன் பின்னூட்டம் இடவில்லை?
    மாட்டுக் கறி பிடிக்காத மரக்கறி உண்ணும் சைவமா நீர்??

    நன்றி!!!

    ReplyDelete
  29. அப்புறம் தமிழ் தேசிய நன்பா,
    த்ந்தை பெரியாரின் தாய்மொழி கன்னடம், தெலுங்கு அல்ல!!!
    விமர்சிக்கும் முன் கொஞ்சம் விவரம் வேண்டும்.சாதி வெறி மட்டும் போதாது!!!

    ந‌ல்ல காமெடி பீசைய்யா நீர்.
    வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  30. மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை வளர்த்தெடுக்கிறார்களோ இல்லையோ, ௨ங்களைப் போன்ற நாத்திகவாதிகள் வேதங்களைப் படித்து, குறைகளை சுட்டிக் காட்டி, சாதி மதங்களை வேகமாக காலூண்ற ௨தவி செய்வதற்கு அனைவரின் வாழ்த்துக்கள் நிச்சயம்... (அணையும் நெருப்பை தூண்டினால் கொழுந்து விட்டு எறியும் என்பது பகுத்தறிவுவாதிகளுக்கு தெரியாதோ?)

    ReplyDelete
  31. பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! -
    கேட்டவர் ‪#‎தேவர்‬!
    ( ‪#‎பசும்பொன்‬ தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)
    நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
    சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
    இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
    எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
    உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
    சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
    அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
    என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
    ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
    என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
    ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
    நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !
    கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.
    இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
    இது என்ன பூ எனக்கேட்டால்
    அதன் பெயரை சொல்லலாம்..!
    நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
    இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
    அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
    ‪#‎கடவுள்‬ எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!
    ( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

    ReplyDelete
  32. இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?
    கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?
    ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் ‘‘தாசிகள்’‘ என்று சொல்லத் தயாரா?

    ReplyDelete
  33. ‘‘ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே? என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னைத் தெலுங்கர்-நாயுடு என்றே நினைக்கிறாங்க. ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆரம்பிச்சது சுயமரியாதைக் கொள்கைக்குத்தானே? அதை ஆரம்பிச்சது யார்? சர்.பி.டி.செட்டியார்- தெலுங்கர். டி.எம்.நாயர் & மலையாளி. நான் - கன்னடத்துக்காரன். தமிழன் யார் இதைச் செய்தான்?’’
    (தந்தை பெரியார் 1972-ல் கலைமகளுக்கு அளித்த பேட்டியில்.
    நன்றி: வே.: ஆனைமுத்து வெளியிட்ட பெரியார் ஈவெரா சிந்தனைகள்.)
    தன்னை கன்னடத்துகாரன் என பெருமையுடன் கூறிக் கொண்டவரின் அடிவருடிகளே! "தமிழர் விரோத களவாணிகளே" ௨ங்களுக்கு தமிழினம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்....

    ReplyDelete