வணக்கம் நண்பர்களே,
பரிணாம அறிவியல் என்பது ஒரு கடல் என்பதும்,இப்போது அதிவேகமாக வளர்ந்து வரும், அதிக ஆய்வுகள் வாய்ப்புகள் உள்ள துறை என்பதால் அது குறித்து தமிழர்களிடம் ஈடுபாடு ஏற்படுத்தவே நாம் முயல்கிறோம்.
பரிணாமத்தின் அடிப்படைகள் பகுதி 1 ல் பரிணாமம் என்றால் என்ன என்பதை அறிந்தோம்.இப்பதிவில் காலரீதியாக பரிணாம கொள்கை எப்படி மாற்றங்களின் ரீதியாக உருவானது என்பதை அறிவோம்.
பரிணாமம் என்பது உயிரின குழுக்களின் தலைமுறை ரீதியான [சூழல் சார்?] மாற்றம் என்பதை நினைவில் இருத்துவோம்.பரிணாமம் என்பது அறிவியலில் உயிரின தோற்ற,பரவலை விளக்கும் கொள்கையாக ஒருமித்து ஏற்கப் பட்டாலும், அது நுட்பமாக எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்க பல கருத்தாக்கங்கள் இடையே போட்டி உண்டு.
அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை, சான்றுகள் அடிப்படையில் விளக்கம் அளித்தல் என்பதால் , உயிரினங்கள் எப்படி தோன்றின, எப்படி பூமியில் ஒவ்வொரு இடத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உயிரினங்கள் உள்ளன என்பது பல ஆயிரம் வருடங்களாக பல அறிஞர்கள் விடை அளிக்க முயன்ற கேள்வி.
18 ஆம் நூற்றாண்டு வரை உலகம் என்பது சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு படைக்கப்பட்டது என்னும் மத புத்தகத்தின் ஒரு சார்பு விளக்கமே பல அறிவியலாளர்களினாலும் ஏற்கப் பட்டு வந்தது.
கிடைத்த பல படிமங்கள் எல்லாம் , நோவா கால வெள்ளப் பெருக்கில் மடிந்தவை என்னும் கருத்திலும், அவை வித்தியாசமான இருப்பதை ட்ராகன்,இராட்சசன் போன்ற விந்தையான மந்திர தந்திரக் கதைகளின் விளக்கமாக கருதப் பட்டன.
ஆத்திகர்களுக்கு "எல்லாம் அவன் செயல்" என்னும் ஒரு விளக்கம் போதுமானது என்றாலும் அறிவியலுக்கு போதாது,சான்றுகளின் அடிப்படையில் இயற்கைக்கு உடபட்ட விளக்கமாக உயிரின தோற்ற பரவலை விளக்க முயன்றனர்.
படிமங்களை சேகரிக்கும் வழக்கம் வரத் தொடங்கியது.
பண்டைக் காலத்தில் கூட படிமங்கள் ஏற்கெனவே வாழ்ந்து மறைந்த உயிரினங்களுடையது என சில அறிஞர்கள் அறிந்து இருந்தனர்.
ஒரு உயிரினம் என்பது குறிப்பிட்ட உடல் அமைப்பு,பண்புகள் கொண்ட மாறா அமைப்பு என்னும் கருத்தே நிலவியது.
அந்தக் கொள்கையின் நேர் எதிர் கொள்கைதான் பரிணாமம்.
ஒரு உயிரினம் என்பது மாறும் அமைப்பு,பண்புகள் கொண்டது என்பதே பரிணாம கொள்கையின் அடிப்படை.அந்த தொடர் மாற்றங்கள் ஒரு உயிரினக் குழுவை நீண்ட காலத்தில்,பல தலைமுறைகளில் சில உயிரினக் குழுக்களாக பிரிக்கிறது என்பதே சரியான பரிணாம புரிதல்.
தொல் உயிரியல்[paleontology] என்னும் துறை மறைந்த உயிரினங்களின் படிம ஒப்பீட்டு அறிவியலாக உருவெடுத்தது. ஜார்ஜ் குவியே(August 23, 1769 – May 14, 1832) ன்னும் அறிஞரின் விலங்கின தொகுதிகள்[The animal kingdom] புத்தகம் வெளிவந்ததை தொடக்கமாக சொல்லலாம். உயிரினங்கள் மறைதல்[extinction] என்பதை முதலில் சான்றாக்கியவர் இவர்தான்.
Jean Léopold Nicolas Frédéric Cuvier (August 23, 1769 – May 14, 1832), known as Georges Cuvier, was a French naturalist and zoologist.
பரிணாமத்தில் எப்படி ஒரு ஒரு உயிரியில் இருந்து புதிய உயிரினங்கள் பிரிந்து தோன்றுகிறதோ அது போல் உயிரினங்கள் மறைவதும் ஒரு இயல்பான நிகழ்வுதான். உலகில் தோன்றிய 99% உயிரினங்கள் மறைந்து விட்டன. அவற்றில் சிலவற்றின் படிமங்கள் மட்டுமே நமக்கு கிட்டின.
பெரும்பாலும் உயிரின மறைவு குறித்து மதவாத பரிணாம எதிர்ப்பாளர்கள் கருத்து சொல்லவே மாட்டார்கள், என்பதால் ஜார்ஜ் குவியேவின் கருத்துக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை.ஜார்ஜ் குவியே பரிணாம கொள்கை ஏற்கவில்லை என்றாலும், படிம வரலாற்றில் புதிய உயிரினங்கள் திடீரென தோன்றுவதை ஆவணப் படுத்தினார்.[இதன் விளக்கம் நிறுத்திய நிலைத்தனமை[punctuated equilibrium]ன 1972ல் திரு ஸ்டீஃபன் ஜே கோல்ட் விளக்கினார்].ஒருவேளை படிமங்களின் வயது, படிம ஒப்பீட்டு அறிவியல் சாதனங்கள் அப்போது இருந்திருந்தால், இன்றைய பரிணாமக் கொள்கையை அப்போது சரியாக திரு குவியே வரையறுத்து இருப்பார்.
In his Essay on the Theory of the Earth, he did say that "no human bones have yet been found among fossil remains"
அப்போது மனிதனின் மூதாதையர் படிமங்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.
ஆகவே ஜார்ஜ் குவியே ,படிம வரலாற்றின் படி திடீரெனெ புதிய உயிரினங்கள் தோன்றுவதையும், திடீரெனெ மறைவதையும் ஆவணப் படுத்தினார். அவருக்கு கிடைத்த படிமங்களின் படி முன்னோர் என எதையும் வகைப் படுத்தவில்லை. என்றாலும் அறிவியல் உலகில் மாறும் உயிரின கொள்கை,மாறா உயிரினக் கொள்கை என்னும் விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஜார்ஜ் குவியே தனது ஆய்வுகள் மாறா உயிரிகள் பற்றி விளக்குவதாக நினைத்தாலும், அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இடைப்பட்ட உயிரின படிமங்கள்[Transitional fossils] மாறும் உயிரினங்கள் பற்றிய சான்றானது. திரு குவியே காலத்தில் பரிணாம கொள்கை விளக்கமாக திரு லாமார்க் அவர்களின் கொள்கை முன் வைக்கப் பட்டது. எர்னஸ்ட் ருதர்ஃபோர்ட் பொ.ஆ.1905 ல் கதிரியக்கம் மூலம் கால அளவீடு செய்யும் முறையை கண்டறிந்தார். அதன் மூலமதான் படிமங்களின் வயது, பூமியின் வயது கண்டறிய முடிந்தது.
லாமார்க் (Jean-Baptiste Lamarck,1 August 1744 – 18 December 1829) ஒரு உயிரினம் தன் வாழ்நாளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ,தலைமுறைரீதியாக கடத்தப்பட்டு மாற்றம் நிகழ்கிறது[Transmutation of species] என்னும் பரிணாம கருத்தாக்கம் வெளியிட்டார்.ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டமைதான் ,இக்கொள்கை சார்ந்து இவரது முக்கியமான் எ.கா ஆகும்.
இப்படி மாற்றம் நிகழும் கால அளவு பற்றி சொல்வில்லை ஏன் எனில் படிமங்களின் காலம் கணிக்கும் தொழில் நுட்பம் அப்போது இல்லை. பரிணாமம் என்பது அப்போது சில ஆய்வாளர்களால் ஏற்கப் பட்டாலும்,பரிணாமம் நிகழும் விதமாக லாமார்க் கூறியது பற்றி பலருக்கு ஐயம் இருந்தது. வெய்ஸ்மான்(August Weismann 17 January 1834 – 5 November 1914) என்னும் ஆய்வாளர், சில பரிசோத்னைகள் மூலம் ஒரு உயிரியின் வாழ்நாளில் ஏற்படும் மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கு செல்ல ஒரு தடுப்பை தாண்ட வேண்டும் என் நிரூபித்தார். அதன் பெயரே வெய்ஸ்மான் தடுப்பு [weismaan barrier] என பெயர் இடப்பட்டது.
ஆனால் இப்போது கதிர் இயக்கங்கள் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள், தலைமுறைரீதியாக கடத்தப் படுவதும்,சில வைரஸ்கள்[retro virus] ஜீனோமில் இணைவதும் கூட ஆவணப் படுத்தப் பட்டு உள்ளதால்,லாமார்க்கியமும் பரிணாம நிகழ்வில் பங்காற்றுகிறது என்பதே சரி.
ஒரு கருதுகோளைப் பரிசோதிக்க தேவைப்படும் தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்தே அறிவியலில் முன்னேற்றம் ஏற்படும். பலரால் தொடர்ந்து பரிசோதிக்கப்படும் என்பதால் ஒரு தவறான விளக்கம் நீடிப்பதன் வாய்ப்பு குறைவு. பரிணாம நிகழ்வு பற்றிய ஒரு கொள்கையை முதலில் வரையறுத்தவர் லாமார்க் என்பதும், ஒரு உயிரி,அதன் முன்னோர் என வகைப்படுத்தலும் இவரின் குறிப்பிடத் தக்க ஆய்வுகள் ஆகும்.
லாமார்க் சிக்கலான அமைப்பு உடைய உயிரிகள், எளிய அமைப்பு கொண்ட உயிரிகளில் இருந்து தோன்றி இருக்கலாம் என்னும் கருத்தை முதலில் கூறியவர்.
இப்போது பரிணாம கொள்கையின் சூழல் என்ன?
1. ஜார்ஜ் குவியேவின் உயிரின மறைவு[extinction] என்பது சான்றாகி விட்டது.
2. பரிணாமம் என்பது லாமார்க்கியம், மாறா குறிப்பிட்ட பண்புடைய உயிரிக் கொள்கையுடன் ஒப்பிடப் பட்டு பல விவாதங்கள்,ஆய்வுகள் நடக்கின்றன.
பெரும்பாலும் சூழல் நாயகர்களை உருவாக்குகிறதே தவிர, நாயகர்கள் சூழலை உருவாக்குதல் விதிவிலக்குகள் மட்டுமே!!!.
இந்த சூழலில் பரிணாம கொள்கைக்கு ஆதரவாக சான்று தேடிப்[27 December 1831 to 2 October 1836, ] புறப்பட்டார் சார்லஸ் டார்வின்.சார்லஸ் டார்வினின் தாத்தா[Erasmus Darwin (12 December 1731 – 18 April 1802) ] எரெஸ்மஸ் டார்வின் பரிணாம கொகையை வரையறுக்க முயன்றவர்களுள் ஒருவர் என்பதால், இதில் வியப்பு இல்லை.
திரு குவியே,திரு லாமார்க்,எரேஸ்மஸ் அல்லாமல் பல ஆய்வாளர்கள் பங்காற்றி இருந்தாலும், இபோதைய பரிணாம அறிவியலில் பங்காற்றும் கொள்கைகளின் வரலாறு மட்டும் சொல்வதே இப்பதிவின் நோக்கம்.
அடுத்த பதிவில் யார் இந்த சார்லஸ் டார்வின் ? பரிணாம கொள்கையில் அவர் பங்களிப்பு என்ன? அவை எப்படி பரிசோதிக்கப்பட்டன? அவர் புத்தகம் ஆர்ஜின் ஆஃப் ஸ்ஃபீசிஸ் என்ன சொல்கிறது?இன்றும் ஏன் பரிணாம எதிர்ப்பு மதவா[வியா]திகள் இவரை கண்டபடி விமர்சிக்கிறார்கள்?? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்!!!
இபோது திரு டார்வினுடன் சான்றுகளைத் தேடி பயணத்தை தொடங்குவோம்!!!
நன்றி!!!
பல புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது..
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்...
வாங்க சகோ இரசிகன்,
Deleteபரிணாமம் என்பது உயிரினத் தோற்ற பரவலின் 380 கோடி வரலாறு. இது சான்றுகளின் மேல் கட்டமைக்கப் பட்ட அறிவியல் கொள்கை. ஒரு நீண்ட கால நிகழ்வுக்கு இருக்க வேண்டிய அத்த்னை சான்றுகளும் உண்டு.
இப்பதிவில் இருந்து திரு லாமார்க் சூழல் சார் மாற்றம் என்னும் டார்வினின் கருத்தாக்கம் போல் ஏற்கெனவே வரையறுத்து இருப்பதை அறிய முடியும்.அவர் கால சூழலில் இடைப் பட்ட படிமங்களோ, மரபியலோ, காலக் கணக்கீடு அறிவியலோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் பிறகு கண்டுபிடிக்கப் பட்டவை.
ஒரு இடைப்பட்ட படிமம் இந்த கால அளவில்,இப்படி அமைப்பில் இருக்க வேண்டும் என்னும் கணிப்பிற்கு த்க்கப்படி கிடைத்த பல இலட்சம் படிமங்கள் மட்டுமே போதுமான நிரூபணம்.
நுட்பமாக ஒவ்வொரு பரிணாம நிகழ்வையும் ,உயிரி,உறுப்பு,ஜீனோம் சார்ந்து பல ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
பரிணாமம் என்பது பல துறைகள் சார்ந்த ஒரு கடல் என்றாலும்,தமிழில் மிக எளிமையாக ஒரு புரிதல் ஏற்படுத்தும் ஒரு முயற்சி.
அடிக்கடி வாங்க!!கேள்வி கேளுங்கள்!!
நன்றி!!
பரிணாமவியலின் அலசல் அருமை சகோ. முற்றிலும் அறிந்திடாத விடயம்,மேலும் அறிந்து கொள்ளும் ஆவல் தொடர்கிறது எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteவாங்க சகோ இனியவன்,
Deleteபரிணாம அறிவியல் ஒரு பெருங்கடல். நாம் கற்ற விடயங்களை இயன்றவரை பகிர்வோம்.இதில் எதை சொல்வது,எப்படி எளிதாக சொல்வது என்பதே குழப்பும் செயல் !!
ஆனால் பரிணாம எதிர்ப்பு பதிவுகளுக்கு மட்டும் உடனே எதிர் பதிவு போட்டு விடுவோம்!! ஹி ஹி!!
பரிணாம எதிர்ப்பு பதிவுகளில் உள்ள ஏமாற்றுத்தனம்,கருத்து திரிபு எளிதில் பிடிபடும்.
நன்றி!!
பரிணாம தொடர்கள் அருமை சார்வாகன்.
ReplyDeleteஒரு சந்தேகம்.
பரிணாமம் பிரபஞ்சத்திற்கும் பொருந்துமா?
அதாவது, இந்த பூமி, பல லட்சம் ஆண்டுகள் கழித்து, பரிணமித்து சூரியனாக மாற வாய்ப்பு உள்ளாதா?
வாங்க சகோ ஏலியன்,
Delete/பரிணாமம் பிரபஞ்சத்திற்கும் பொருந்துமா?/
ஆமாம் பிரபஞ்ச் தோற்றம் என்பதும்,பரிணாம வளர்ச்சியே!!
http://science.nasa.gov/astrophysics/big-questions/how-did-universe-originate-and-evolve-produce-galaxies-stars-and-planets-we-see-today/
**
//அதாவது, இந்த பூமி, பல லட்சம் ஆண்டுகள் கழித்து, பரிணமித்து சூரியனாக மாற வாய்ப்பு உள்ளாதா?//
அப்படி அல்ல!! சூரியன் இன்னும் 4 பில்லியன் ஆண்டுகளில் ஒளியிழந்து விடும்.அப்போது பூமியும் அழிந்து விடும்.
பரிணாமத்தில் உருவாத்லை விட அழிவே அதிகம் சாத்தியம்.
எண்ணற்ற பிரபஞ்சங்களில் ஒன்றான நம்முடையதில் உள்ள எண்ணற்ற காலக்சிகளில் ஒன்றான நம்து பால்வீதியில் உள்ள பல நட்சத்திரங்களில் ,சூரியனும் ஒன்று.
நட்சத்திரங்கள் தோன்றுவதும், மறைவதும் பிரபஞ்சத்தில் இயல்பான ஒன்று!!!4800 stars/second are born!!!!!
http://en.wikipedia.org/wiki/Stellar_evolution
All stars are born from collapsing clouds of gas and dust, often called nebulae or molecular clouds. Over the course of millions of years, these protostars settle down into a state of equilibrium, becoming what is known as a main sequence star.
..
http://www.ism.ucalgary.ca/Star_Formation/How_Often.html
Furthermore, we estimate that there are about 50 billion galaxies in the entire observable Universe. Now all galaxies are different - our own is a typical spiral galaxy, but there are large and small spirals, giant and dwarf ellipticals, irregulars, etc. However, if we once again assume that our own Milky Way Galaxy represents an average type of galaxy, we can calculate that ""there are roughly 150 billion stars born per year in the entire Universe"". This corresponds to about 400 million stars born per day or 4800 stars per second! If we turn this around, this mean that throughout the entire Universe, a star is born every 0.0002 seconds (i.e. every 2, 10,000th's of a second)!
நன்றி!!
What a wonder it is!...4800 stars per second...wow..interesting to know all these.
ReplyDeleteThanks Saarvaagan.
சகோ ஏலியன்,
Deleteபூமியை விட்டு வெளியில் இருந்து பார்க்கும் போது பூமி சூரியனை சுற்றுவதை உறுதியாக் அறியலாம். நட்சத்திரம் தோன்றுவதும் இன்னும் பல் பரிசோத்னைகள் மூலம் அறியப் பட வேண்டும்.சான்றுகள் அளவீடுகள் ஆகும் போது விள்க்கமாக் அறிவியல் கொள்கைகள் வரும்.
அது கொடுக்கும் கணிப்பு சரிபார்க்க என தொடர்பயணம்...
இதே போல் இப்போதும் பல பிரபஞ்சங்களும் தோன்றலாம், மறையலாம் என்பதும் அதனையும் அளவிட முடியும் என்றால் பெருவிரிவாக்கமும் ஒரு சாதாரண இயற்கை நிகழ்வே என்றாகிவிடும்.
ஒவ்வொரு கருந்துளையும் பேரண்ட விதை என்லாம்!!
http://www.insidescience.org/content/every-black-hole-contains-new-universe/566
Every Black Hole Contains a New Universe
பரிசோதிக்கும் தொழில் நுட்பம் சார்ந்தே ஒரு கொள்கை வளர்ச்சியுறும்!!
நன்றி!!!
மெக்டூகல் பற்றி தெரிவிக்க முடியுமா?
ReplyDelete