வணக்கம் நண்பர்களே,
பெரும்பான்மை மதங்களுக்கு கடவுள் கருத்துகள் அடங்கிய மத புத்தகம் உண்டு.இவை அக்கால மதத்தலைவர்களின் மூலம் மக்களுக்கு வழங்கப் பட்டது என்பார்.
இதில் மத்திய கிழக்கு மதங்கள் தங்களின் மத புத்தகம் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்ட திட்டம் கொண்டது என விளம்பரம் செய்கிறார்.பிரச்சாரங்களில் அதில் உள்ள சில வசனங்களை வெட்டி ஒட்டி , தங்களின் விளக்கம் இணைத்து அருமையான மதம் பாரீர், வந்து ஜோதியில் ஐக்கியமாகி இம்மையிலும்,மறுமையிலும் இனபம் பெற உத்த்ரவாதம் தரும் ஒரே மார்க்கம் என பல பதிவுகள் தமிழ் மணத்திலும் வருகிறது. இது நேற்றைய பதிவு.
தயவு செய்து அப்பதிவைப் படியுங்கள்.என்ன சகோ அருமையான கருத்துகள் ,அனைவருக்கும்,எக்காலமும் பொருந்தும் வகையில்தானே இருக்கிறது!!. இதையும் விமர்சித்தால் உங்களுக்கு நாத்திக வெறி முத்தி விட்டது என பொருள் என்னும் மதச்சார்பிமையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழ் சகோக்களே!! அப்பதிவைப் படித்து விடுங்கள்!!
படித்து விட்டீர்களா!!
நாம் என்ன சொல்கிறோம்!!
மத புத்தகங்கள் ஒரு இனக்குழுவை மேன்மைப் படுத்த,அவர்கள் செய்யும் விடயங்களை கடவுள் சொல்லி செய்தோம் என் நியாயப் படுத்தி விளக்க்வே உருவாக்கப் பட்டவை. இனக் குழு தலைவர்கள் தனிமையில் இருக்கும் போது கடவுளிடம் இருந்து வந்த செய்திகளே மத புத்தகம் ஆனது என அவர்களும் சொல்கிறார்கள்.
ஆகவே
மத புத்தகம் இனவாதம், இன மேட்டிமை[racist supremacy] பேசுகிறது.
இதனை நிரூபிக்க முடியுமா என்றால் முடியும், மத புத்தக மதங்களின் முதல் எதிரி அவர்களின் மத புத்த்கமே. அதில் அவர்கள் சுட்டும் வசனம் மேல் கீழ் கொஞ்சம் படித்தால் இப்படி ஒரு இனக்குழுவை,அதன் செயல்களை மட்டும் புகழ்பாடுவது புரியும்.
அவர்கள் சொன்ன யாத்திராகமம்,23 ஆம் அதிகாரம் முழுதும் படிப்போம். அவர்கள் சொல்லாமல் விட்ட வசனங்களை சிவப்பில் தருகிறேன்.அத்தியாயம் 23 முழுதும் படியுங்கள்.
இந்த சூழல் என்னவெனில் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூத மக்களை, அவர்களின் தலைவர் மோசஸ்[மூசா] த்ன்னிடம் கடவுள் பேசுவதாக சொல்லி, அவர்களுக்கு பாலும் தேனும் பாயும் நாடு கொடுப்பதாக சொன்னதாக கூறி அங்கிருந்து புறப்பட வைக்கிறார்.
இந்த சூழல் என்னவெனில் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூத மக்களை, அவர்களின் தலைவர் மோசஸ்[மூசா] த்ன்னிடம் கடவுள் பேசுவதாக சொல்லி, அவர்களுக்கு பாலும் தேனும் பாயும் நாடு கொடுப்பதாக சொன்னதாக கூறி அங்கிருந்து புறப்பட வைக்கிறார்.
40 வருடம் பயணித்து, இபோதைய இஸ்ரேல்,ஜோர்டான் பகுதிக்கு வந்து ,ஏற்கெனவே இருந்தவர்களை கொன்று,வென்று,ஆக்கிரமித்து நாடு அமைக்கிறார்.[இப்போதைய இஸ்ரேலின் கதையும் இதுதான்]. இது என்ன அயோக்கியத்தனம் எங்கிருந்தோ வந்து , பூர்வ குடிகளை விரட்டி ஆக்கிரமிக்கலாமா? என்றால் எங்கள் கடவுள் அனைத்தையும் படைத்தவர் அவரைக் கேள்வி கேட்காதே என மத புத்தகம் கூறும். அதனை விமர்சித்தால் மத நிந்தனை ஆகும்.
இதுதான் மத புத்தகம் கூறும் இனவாதம்!!
**
12. ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.
[அடிமைப் பெண் எனபது போரில் தோற்கடிக்கப்பட்ட பூர்வ குடிகள்]
***
13. நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
[தோற்கடிக்கப் படவனின் கடவுளை விட வென்றவன் கடவுள் பெரிது]
****
22. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.
23. என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.
24. நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.
[மத புத்தகம்[அதாவது மத குரு] சொல்வதைக் கேட்டால் தவறுகளுக்கு மன்னிப்பு, அடுத்தவன்[பூர்வ குடி] சொத்தை எடுக்கலாம்.பூர்வ குடிகளின் கடவுள் சிலைகளை உடை, தேவதூதர்கள் போரில் உதவுவார்கள்]
***
27. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.
28. உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.
29. தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,
30. நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.
31. சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.
32. அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.
33. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.
***
இந்த வசனங்களுக்கு விளக்கம் தேவையில்லை!!
இப்படி மதபுத்தகம் இருப்பதற்கு இப்போதைய பிரச்சாரகர்கள் எப்படி பொறுப்பு ஆவார் என்றால், இப்படி மதபுத்தக் உண்மைகளை மறைப்பதுதான் பொறுப்பாளி ஆக்குகிறது.
மத புத்தக கதைகளுக்கு வரலாற்று சான்றுகள் இல்லை என்றாலும், அதனை அப்படியே எழுத்துக்கு எழுத்துக்கு நம்புவோரும் இருக்கிறார்.
இஸ்ரேல் என்பது யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப் பட்டது என் இன்னும் ஜியோனிச யூதர் கூறுகிறார். அவர்களுக்கு உலகில் பல கிறித்துவ அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன.மத புத்தக கருத்துகள்,சட்டங்கள் இன்னும் பிரச்சினை வன்முறைகளுக்கு வித்திடுகின்றன!!!
மத புத்தக கடவுள் என்பவர் பாரபட்சம் இல்லாமல், ஜனநாயகவாதியாக,மத சார்பற்றவராக இல்லையே என்பதுதான் நம் கவலை !!!!!!!!
ஆகவே மத புத்தக பிரச்சாரம் கண்டால்,அந்த அத்தியாயம் முழுதும் படியுங்கள். பிரச்சாரகர் பொய் சொல்வது தெரிந்துவிடும்.
இதுவே மத புத்தக பிரச்சாரம் மறுக்கும் வழியாகும்!!!!
மனிதனுக்கு மதம் தேவையில்லை குறிப்பாக மத புத்தக மதங்கள்!!!
To know who is killing who see this!!!
http://blog.ninapaley.com/2012/10/01/this-land-is-mine/
நன்றி!!
சார்வாகன்,
ReplyDeleteமொழிநடை மட்டுமே வேறு, மேட்டர் ஒன்னு தான். "கடவுளாகிய நான் உங்கள் எதிரிகளை அழிப்பேன், கொல்லுவேன்". குரான், ரிக் வேதத்தில் கூட இவை உண்டு.
வாங்க சகோ குட்டி பிசாசு,
Deleteநீங்கள் சொல்வது உண்மைதான். இந்திரா விருத்திரனை அழித்து எங்களை காத்தவனே, தஸ்யுக்களை வதம் செய்தவனே என் ரிக் வேதத்தில் வரும்.
**
குரானில் இதே மூசா கதை வரும்.பூர்வ குடிகளை துரத்தி அந்த இடத்தையூதர்களுக்கு கொடுத்ததாக கூறும்!!
இப்போது மூசாவுக்கு எதிராக பேசினால் குரானுக்கு விரோதம் ஆகிவிடும் என்பதாலும் குழப்பம்!!!
உலக முழுதும் உள்ள இனச் சிக்கல்களில் மத புத்த்கங்களின் பங்குதான் அதிகம்.
நன்றி!!!
பாட்டு சூப்பர்
ReplyDeleteவாங்க சகோ குட்டி பிசாசு,
Deleteஇது உண்மையான பாடலை நக்கல் செய்த எசப்பாட்டு. உண்மையான பாடல் இங்கே!!! பாருங்கள் இன மேட்டிமையை!!
https://www.youtube.com/watch?v=MtoyTYc16_w
நன்றி!!!
SUUUPER SARVAKAN..... Pinnureenga ponga
ReplyDeleteசகோ ஜெனில் இந்த காணொளி பாட்டைக் கண்டால் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சினை புரிந்துவிடும்!!!
Deleteஒவ்வொரு நாட்டு பிரிவினையின் பின்னும் இப்படி வரலாற்று கதைகள் உண்டு!!
நன்றி!!!
Nice narration Saarvaagan.
ReplyDeleteNot only racism, but also.....
Old testament is full of fucking stories only. Daughters having intercourse with father, Father-in-law with daughter-in-law, raping sister and etc..etc..
Song of solomon (உன்னதப்பாட்டு) is the book full of romance and love story.
If anybody wants link, I can give. I have read the whole Bible.
I have a doubt Saarvaagan, இந்த மோசே கதையெல்லாம் உண்மையா அல்லது கற்பனை கதையா?
சகோ ஏலியன்,
Deleteநாம் மதபுத்த்க கதைகள் ஆபாசம் என்பதை பெரிதாக எடுப்பது இல்லை.அவை அக்காலத்தில் இயல்பான வாழ்வு. உன்னதப் பாட்டு கடவுளைக் காதலனாக உருவகம் செய்து பாடப்பட்டது.
கடவுள் ஆண், எருசலேம்[திருச்சபை] =பெண்
மணவாளன் வரும் போது[ இயேசுவின் இரண்டாம் வருகை] மனையாட்டி[ திருச்சபை] தயாராக இருக்க வேண்டும் என்பது போல் வரும்!!!
அவை இப்போது அதிகப் பாதிப்பு ஏற்படுவது இல்ல்லை. ஆனால் இந்த இனவாதம் மனித உயிர்களை பலி வாங்குகிறது .
பாருங்களேன். மேப்பில் குறிப்பிட்ட இடம் அள்வு வரும் வரை யூதர்கள் ஓய மாட்டார்கள். எகிப்து சினாய்,இஸ்ரேல்+மேற்கு கரை+ஜோர்டான்+சிரியா= கடவுளால் வழங்கப்பட்ட இடம்.
சிங்களரை உயர்வாக காட்டும் மகாவம்சம் வந்த பிறகுதான் தமிழ்,சிங்களர் பிரச்சினை வந்தது.
வேதங்களில் தேவர்கள்[ஆரியர்?], அசுரர்களை[தஸ்யுக்கள்?!] ஒடுக்குகிறார்.
மோசஸ் கதைக்கு ஆதாரம் இல்லை.
இது குறித்து தெளிவாக இன்னொரு பதிவு இடுகிறேன்.
நன்றி!!
சகோ.சார்வாகன்,
ReplyDeleteநமக்கு மதம் , சாமிலாம் கிடையாது எல்லாமே ஒன்னு தான், என்ன ஒன்னு நான் அடிக்கிற சரக்க அவங்க புடுங்கி அடிக்க கூடாது,அவங்க சரக்க நான் புடுங்க மாட்டேன்,என் சோத்துல அவன் கைய வைக்க கூடாது ,அவன் சோத்துல நான் கைய வைக்க மாட்டேன் , அதை உட்டுப்புட்டு நீ ஏன் அந்த கறி துண்ணுற, நீ ஏன் சரக்கடிக்கிறனு சொல்லிக்கிட்டு எவனாவது வந்தா அப்பாலிக்கா என் சரக்குக்கு சைட் டிஷ்ஷே அவனுங்க தான் :-))
-----------
மோசஸ் கதைனு இல்லை எதுக்குமே ஆதாரம் இல்லை,ஆனால் மனிதர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்விடத்தை அமைத்து கொண்டதை குறியீடாக சொல்கிறது.
ஏற்கனவே அந்த இடத்தில் யாராவது இருந்தா அவங்களை போட்டு தள்ளிட்டு புனிதப்போர் கடவுள் சொன்னார்னு சொல்லிடுவாங்க :-))
மிக நல்லா தெரிஞ்ச மனித பரவல் ஆக்ரமிப்பு என்றால்,வட அமெரிக்க,தென் அமெரிக்க ஆக்ரமிப்புகள் தான், இன்னிக்கு அங்க இருந்த பூர்வ குடிகள் எல்லாம் மைனாரிட்டியா எங்கோ மூளையில் கிடக்கிறாங்க. ஆஸ்திரேலியா,நியுசிலாந்தும் அந்த வகை தான்.
வாங்க சகோ வவ்வால்,
Delete/நமக்கு மதம் , சாமிலாம் கிடையாது ./
நமக்கு மத,சாமி மட்டும் அல்ல, இனம் ,மொழி,நாடு பற்று கூட விட்டுப் போச்சு. அனைத்து மனிதர்களும்[ ஹோமோ சேஃபியன்] சமமாக உரிமைகள் வாழ்வாதாரம் பெற்று வாழும் வழி நோக்கி சிந்திப்பதே சிக்கல்கள் அதிகமாவதை தடுக்கும்.
[ ஒரு வேளை இதர மனித இனங்கள்[ ஹோமொ எரக்டசு,நியாண்டர்தால்] இருந்தால் ஹோமோ சேஃபிய்ன் பற்றும் அற்றுப் போய் அவர்களுக்கும் சம உரிமை கேட்போம். நம்ம மாப்ளே தாசு கிடைக்கும் எந்த உயிரையும் வெட்டி கொன்று தின்னும் மாமுவுக்கு பேச்சைப் பாரு. லொள்ளைப் பாரு என நகைப்பதும் நமக்கு கேட்கிறது.தாவர உணவுக்கு மாறும் சூழல் பற்றி சிந்திக்கிறேன் ]
மனிதன் மட்டும் அல்ல விலங்குகளும் சூழல் சார்ந்து இடம் பெயரும், ஏற்கெனவே வாழும் விலங்குகளுடன் சண்டை நடக்கும். வென்றது வாழும். மனிதனும் இதே போல் மக்கள் தொகை அதிகரித்தால் இடம் பெயர்தல், வாழும் போட்டியில் நிகழும் போர்கள் என்பதே வரலாறு.
மதம் சார் ஆக்கிரமிப்பை நியாயப் படுத்த முடியும், அதனையே மத பிரச்சாரகர்கள் செய்கிறார்கள்.
மக்களை அழிப்பது மட்டும் தவறு அல்ல, அவர்களின் கலாச்சாரம், வாழ்வியலை அழித்து, மறைப்பதும் ஆக்கிரமிப்பே!!!.
மதம் ,புத்தகம் இல்லாமலும் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது,நிகழ்கிறது,நிகழும்,. [அமெரிக்க,ஆஸ்திரேலியா] .ஆனால் மதம் சாரா ஆக்கிரமிப்பை நியாயப் படுத்த முடியாது!!!.மனிதர்கள் இயற்கை சார்ந்து ஒற்றுமையாக வாழ்தல் பற்றி சிந்திக்க நடைமுறைப் படுத்துவது காலத்தின் கட்டாயம். இறுதியில்[ மூன்றாம் உலகப் போரின் பிறகு மிஞ்சும் கொஞ்ச ஹோமோ சேஃபியன்களுக்கு] இதுதான் தீர்வு!!!
நன்றி!!!
உண்மையைவிட கட்டுக் கதைகளுக்குத்தான் மவுசு அதிகம் என்பார்கள் உண்மைதான்....
ReplyDeleteசகோ ,
Deleteமனிதர்களுக்கு எளிய தீர்வு என் சொல்லும் விடயங்கள் மிகவும் பிடிக்கும். அப்படி தீர்வு கிடைக்காமல் போனாலும் கவலைப் படமாட்டார்கள் ஹி ஹி முடியாது!!
எப்படி வாக்குறுதி கொடுத்தால் ஓட்டு கிடைப்பது போ, மத புத்தகம் முழுதும் வாக்குறுதிதான்,இறப்புக்கு பின் எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நினைத்தபடி கிடைக்கும் என்பதை நம்பி விளக்கில் விழும் விட்டில்கள் போல் தாவுகிறார்.
நன்றி!!!
//ஆகவே மத புத்தக பிரச்சாரம் கண்டால்,அந்த அத்தியாயம் முழுதும் படியுங்கள். பிரச்சாரகர் பொய் சொல்வது தெரிந்துவிடும்.// 100% எதார்த்தமான உண்மை!
ReplyDeleteவாங்க சகோ தஜ்ஜால்,
Deleteநீங்க வந்துட்டீகளா, அப்ப நாள் நெருங்குது!!!
நாத்திகம் அறிய சிறந்த புத்தகம் வேதங்களே!!!
நன்றி!!!
//குரானில் இதே மூசா கதை வரும்.பூர்வ குடிகளை துரத்தி அந்த இடத்தையூதர்களுக்கு கொடுத்ததாக கூறும்!!//
ReplyDeleteஇதை இஸ்லாமியர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல். கொஞ்சம் சொல்லுங்களேன்.
வாங்க தருமி அய்யா,
Deleteநீங்க பாட்டுக்கு பொசுக்குனு கேள்வி கேட்டு புடுரீக , நமக்கு பதில் சொல்ல தாவு தீருது. சரி உங்களின் கேள்வியை மூன்று பகுதிகளாக பிரிப்போம்.
1. குரான் யூதர்கள் எகிப்தில் இருந்து வந்து இஸ்ரேல் பெற்றதை எப்படி சொல்கிறது?
**
5:21. (தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
**
7:137. எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
**
அல்லாஹ் இஸ்ரேலில் கடைசி நாள் வரை இருக்க சொல்கிறார்.
*
17:103. ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
17:104. இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
*
மூசாவின் கதை, குரானில் மீண்டும் மீண்டும் வரும். கிழக்கு[ இப்போதைய இஸ்ரேல்] மேற்குப் பகுதி[ மேற்கு கரை, சிரியா, ஜோர்டான் ] என டைக்ரிஸ் நதிவரை அதாவது பைபிளில் சொன்ன பரப்புதான் அல்லாஹ் யூதர்களுக்கு கொடுக்கிரார். அங்கே ஏற்கெனவே இருந்த மக்கள் வேறு கடவுள்களைக் கும்பிட்டதால் ,அடித்து துரத்த உதவியும் செய்கிறார்.
ஆகவே எகிப்தில் இருந்து யூதர்களை வர வைத்து இஸ்ரேலை யூதர்களுக்கு அடித்து பிடிங்கி கொடுத்தது அல்லாஹ்.[ஆனால் நன்றி கெட்ட யூதர்கள் அல்லாவை,யாவே என் ஹீப்ரூ மொழியில் அழைக்கிறார்!!]
***
Deletehttp://www.templemount.org/quranland.html
2. யூதர்களை முகமது&பின் வந்த மூமின் தலைகள் எப்படி நடத்தினார்?
யூதர்கள் இஸ்லாமை ஏற்கவில்லை என்றதும், அரேபியாவில் இருந்து விரட்டப் படுகிறார்கள்.
2338. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)" என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.
Volume :2 Book :41
Delete3. குரானுக்கு விரோதம் இல்லாமல் ,இஸ்ரேல் பிரச்சினையில் மூமின்களின் நிலைப்பாடு ?!!!
இப்ப முக்கியமான பகுதி, குரானின்படி அல்லாஹ் இஸ்ரேலை யூதர்களுக்கு அடித்து பிடுங்கி கொடுத்தார், கடைசி நாள் வரை வசிக்கவும் கூறி விட்டார்.
ஹதிதின் படி அங்கு வசித்த யூதர்களின் நிலங்கள் [சிங்களன் த்மிழன் நிலத்தை பிடுங்குவது போல்] மூமின்கள் பிடுங்கி துரத்தி விடுகிறார்.
ஆனால் சூழல் மாறி யூதர்கள் இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை அமைத்து விட்டார்.இப்போது அநாட்டை எப்படி மறுப்பது என நியாயமாக் சிந்திக்காமல் மறுப்பதற்கு மூமின் பிரச்சாரகர்கள் இப்படி சொகிறார்.
1. அல்லாஹ் யூத்ர்களுக்கு இஸ்ரேல் கொடுத்தான். ஆனால்
அப்படி துரத்தப்பட்டவர்கள் அனைவரும் விரும்பி மூமின் ஆகி விட்டார்.
ஆகவே இஸ்ரேல் யூதர்களின் உண்மையான வாரிசுகளான மூமின் பாலஸ்தீனர்களுக்கே!!
2.இப்போது திரும்பி வந்தவர்கள், துரத்தப் பட்டவர்களின் வாரிசுகள் அல்ல. உண்மையான யூதர்களே அல்ல!!ஐரோப்பிய கிறித்த்வர்கள் யூதன் வேடம் போடுகிறான்.
குரான் வந்த பிறகு யூதம்,கிறித்த்வம் இரண்டும் செல்லாது!!!
அந்த இடம் மூமின்களுக்கே சொந்தம்!!
இதுதான் நடந்தது!!!!!!!!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் கேள்வி கேட்பீங்களா!!!
நன்றி!!!
வணக்கம் சார்வாகன்,
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் :)
நலம் என்று நம்புகிறேன்.....
மத புத்தகங்களை அன்று வாழ்ந்த மக்களின் புரிதலாக, சட்ட திட்டமாக பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் அறியாமையில் வெறி பிடித்தவர்கள் அது எக்காலத்திற்கும் பொருந்தும் என்று மூளை மழுங்கிய எண்ணத்தோடு இருப்பதோடு மட்டுமாலாமல் அதை பிற மக்கள் மீதும் திணிப்பதே....அபாயமானது.
சகோ மணி ,
Deleteஇதைத்தானே நாம் ஆதி முதல் இன்றுவரை சொல்கிறோம். அக்காலத்தில் ஒருவனை அடித்து பிடுங்குவது கூட வ்ழக்கம்தான், கடவுள் சொன்னார், ஏற்கெனவே என்னிடம் இருப்பதை பிடுங்கினான்,நான் திருப்பி எடுத்தேன் என்ற மாதிரி விளக்கம் அனைத்தும் ஏமாற்றுவேலையே!!!
மதபுத்தகத்தில் உலகின் இரண்டாம் தலைமுறையிலேயே ஒரு கொலை,ஆதமின் ஒரு மகன் காயீன் தன் சகோதரன் ஆபேலை பொறாமையினால் கொன்று விடுகிறான்!!
கடவுள் பழிக்கு பழி தண்டிக்கவில்லை!!
ஆனால் இன்று பழிக்கு பழி,உயிருக்கு உயிர் என சட்டம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மத புத்தக கடவுளுக்கு நிலையான சிந்தனை இல்லை!!!
அடிமை முறை 1950 வரைக்கூட சட்டப்படி அனுமதி உலகின் பல இடங்களில் இருந்தது!!!
நாம் என்ன தெளிவாக விள்க்கினாலும் நம்ம சகோக்கள் "என்ன கையைப் பிடித்து இழுத்தியா[ அனைத்தும் சரியான எக்கலமும் பொருந்தும் சர்வரோஹ நிவாரணி]" என்பார்கள்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!
நன்றி!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ!!
Deleteஅக்காலத்தில் தலைவன் தன் கீழுள்ள மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவும், தனக்கு எதிராக கிளர்ந்து எழாமல் வைத்திருக்கவுமே மதப்பற்றும் இனப்பற்றும் உருவாக்கப் பட்டன...
ReplyDeleteஏன் இன்றும் எம் அரசியல்வாதிகளைப் பாருங்கள், மக்களின் இனப்பற்றை வைத்து எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள்.
சற்று சிந்திக்கத் தெரிந்த மதப்பற்றாளர்கள் என்னிடம் சொன்னார்கள், ”உண்மையில் கடவுள் இல்லாவிட்டால் கூட மக்களை நல்வழிப்படுத்தவே மதங்கள் உருவாக்கப்பட்டன”
அவர்களுக்கு என் பதில் “மனிதனால் தன் அறிவைப் பயன்படுத்தி நல்லது கெட்டதை உணரமுடியும், மற்றவர்களுக்கு உதவி செய்யும், வேறு பல நற்குணங்களைப் புரிந்து கொள்ள முடியும். இதற்கு மதமோ மதப்புத்தகங்களோ தேவையில்லை. அதனாலேயை நான் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை”
அதே சகோ அருமை நன்றி!!!
Delete