Saturday, April 20, 2013

இந்நூற்றாண்டின் சிறந்த விண்கல் காட்சி


வணக்கம் நண்பர்களே,

பூமியின் மீது அடிக்கடி விழும் விண்கற்கள் பற்றி அறிந்து இருப்போம். சமீபத்தில் கூட இரஷ்யாவில் பாதிப்பு ஏற்படுத்தியது.

விக்கிபீடியாவில் இருந்து

விண்வீழ்கல் (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்குவெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல்என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல்அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வருட இறுதியில் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய விண்கற்க்ள் காட்சியை பூமிக்கு அருகே பார்ப்போம் என விள்வெளி ஆய்வகம் நாசா கூறுகிறது. 

சூரியன் அருகே சென்று , ஒருவேளை தப்பித்தால் வளைந்து ஹேய்ர் பின் போல் வளைந்து ,பூமியின் அருகே வரும் என கணிக்கிறார்கள். நவம்பர் அல்லது டிசம்பரில் இது நிக்ழுமாம்!!.

டைனோசார்களின் மறைவிற்கு 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பூமியை தாக்கிய விண்கற்களே காரணம் என்பது அறிவியலின் கருத்து.

படங்களை பாருங்கள்!!!



Infographic: Facts about Comet ISON, which could provide a spectacular display in late 2013.




2 comments:

  1. சகோ சர்வாகன்,

    பூமியை நோக்கி அநேகமான விண்கற்கள் அருகிலுள்ள பெரிய கோளான வியாழன் கோளால் ஈர்க்கப்பட்டு விடுகிறது. அப்படியும் தப்பிவரும் விண்கற்கள் சிறியதாயின் வளிமண்டலத்தில் தீப்பற்றி கொள்ளும் அவை பூமியை அடைய முன்னரே எரிந்து சாம்பலாகிவிடும். பெரிய கற்கள் எரிந்தவாறே பூமியை தாக்கி பெரும் பள்ளங்களை ஏற்படுத்தி விடுகிறது..

    வியாழனும், பூமியின் வளிமண்டலமும் இல்லாவிடின், பூமி அடிக்கடி விண்கற்களால் தாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். பூமியில் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கவும் முடியாது.

    விண்கற்களைப் பற்றி மேலும் பல தகவல்களை அறிய ஆவலாயுள்ளேன்.

    ReplyDelete
  2. பேசாம எங்க குழந்தைங்க படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக வந்து விடுங்களேன்.

    ReplyDelete