வணக்கம் நண்பர்களே,
மனிதர்கள் இயற்கை வளங்களை நுகர்வதற்கு,
ஏற்பட்ட அமைப்பே பொருளாதாரம்.இதில்
சிலர் செல்வம் உள்ளோர் ஆகவும்,
பலர் அன்றாட வாழ்வுக்கே தடுமாறுவதும்
இப்போதைய சூழல் மட்டும் அல்ல,
மனித நாகரிகம் தோன்றிய நாள் முதலே
இப்படித்தான்.
இயற்கை அனைவருக்கும் (கொள்கை
அளவில்) பொது என்றாலும், நுகர்வில்,
உழைப்பிற்கு விலையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு.
இது பொருளாதார பிரமிட் போல் கீழ்
இருப்பவனின் உழைப்பை மேலே இருப்பவன்
சுரண்டுவதை தார்மீக நீயாயம் ஆக்குகிறது.
அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதாரம்,
பாதுகாப்பு வழங்கும் வாழ்வியல் முறை, பொருளாதார அமைப்பு
இதுவரை கண்டறியப்பட்டவில்லை( பொது உடமை கொள்கை
ஆதரவாளர்கள் மன்னிக்கவும்!!!) என்பதுதான் உண்மை.
இயற்கை வழங்கும் மூலப்
பொருள்களை , முதலீடு+ உழைப்பு மூலம் ,தேவைக்
கேற்ற பொருள் தயாரித்து, சந்தையில்
விற்று இலாபம் அடைதல் என்பதே
சந்தை பொருளாதாரம். இதுவே இந்தியா
உள்ளிட்ட பெரும்பான்மை நாடுகளின் இப்போதைய பொருளாதாரக் கொள்கை.
போதுமான முதலீடு இல்லாதோர்,
வங்கி மூலமோ, அல்லது பங்குகள்
மூலம் முதலீடு பெறுவது கடந்த
20 வருடங்களில் இந்தியாவில் வழக்கம் ஆகி வருகிறது.
இந்திய பங்கு வணிகம் 1870 ல் மும்பையில்( அப்போது பம்பாய்) தொடங்கியது. 1992 க்கு பிற்கு உலகமயமாக்குதலில் அசுர வளர்ச்சி கண்டது. இந்த சுட்டி இந்திய பங்கு வணிகம் பற்றிய சில வரலாற்று குறிப்புகளைத் தருகிறது.
.முதலில் பங்கு வணிகம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் எளிமைப் படுத்தி புரிந்து கொள்வோம்.பங்கு வணிகம் என்பது பலர் முதலீடு செய்து நடத்தும் வணிகம் எனலாம். நீங்கள் ஒரு தொழில் தொடங்க முனைகிறீர்கள், உங்களிடம் போதுமான நிதி இல்லை. அதற்கு பலரிடம் கடன் வாங்குகிறீர்கள், அவர்களையும் உங்கள் தொழிலில் பங்குதாரர் ஆக்கி, இலாபத்தில் பங்கு கொடுக்கிறீர்கள் என்பதுதான் பங்கு வணிகம்.
உங்களுக்கு கடன் கொடுப்பவர்,உங்களின் தொழில் இலாபகரமானதா, நீங்கள் தொழிலில் திறமை உடையவரா, நாணயம் உள்ளவரா என்பதைப் பொறுத்தே உங்களுக்கு கடன் வழங்க, தொழிலில் பங்குதாரர் ஆக முன்வருவார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இக்காணொளி பங்கு வணிகம் பற்றிய எளிய விளக்கம் தருகிறது.
அதிக இலாபம் கொடுக்கும்
பங்குகளின் மதிப்பு சந்தையில் அதிகரிக்கும்
என்பதால், பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி,
அதிக விலைக்கு விற்க அதில் ஈடுபட்டு
உள்ளோர் முயல்கின்றனர்.இச்சூழலில் ஒரு பங்கின் செயற்கையாக விலையை
அதிகரிக்க பல தந்திரங்களும்
நடைமுறைக்கு வருகின்றது.
பங்கு வணிகம் என்பதே
ஒரு சூதாட்டம் போன்றது என்ற கருத்து
உடையவர் உண்டு.பங்கு வணிகத்திலும்
பிற துறை போன்று ஏமாற்றுவோர்
இருப்பதும் உண்மைதான். இலாபம் சம்பாதிக்காமலேயே பங்குகளுக்கு
தேவையை ,ஊடகம், அரசியல் துணையுடன்
அதிகரித்து, பலரை ஏமாற்றி பங்குகளை
வாங்க வைத்து, பிறகு பங்கு
உரிமையாளர்கள் விற்க முடியாமல் போகும்
போது, பங்குகளின் விலை முழுவதும் சரியும்.
அப்போது மொத்த பணமும் இழக்கும்
சூழல் ஏற்படும்.சத்யம் தொழில் நுட்ப
நிறுவன வீழ்ச்சி, ஹர்சத் மேத்தா மோசடி
போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இச்சூழல் தவிர்க்க, ஒரு நிறுவன பங்கு
கடந்த 10 ஆண்டுகளில், என்ன மாற்றங்களைக் கண்டு
வந்தது என அனுமானித்து முதலீடு
செய்வது நலம். ஒரு எ.கா ஆக இன்ஃபோசிஸ்
நிறுவன பங்குகள் பற்றி அறிய முயற்சி
செய்வோம்.
சில நிறுவனங்கள் , பங்கின்
மதிப்பை இரட்டிப்பு அல்லது அதற்கு மேலும் போனஸ் ஆக அதிகரிக்கின்றன. 1993 ஒருவர்
100 பங்கு தலா 95 ரூபாய் என 9,500 முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று என்ன
தெரியுமா???.
சுமார் 1.5 கோடி என சொல்லப் படுகிறது.
ஆனால் அது தகவல் தொழில் நுட்ப புரட்சியின்
ஆரம்பம் என்பதால் மட்டுமே அப்படி அசுர இலாபம் கிடைத்தது. இன்று இன்ஃபோசிஸ் பங்குகளை
வாங்கினால் சாதாரண இலாபம் மட்டுமே கிட்டும்.ஆனால் இப்படிப்பட்ட நிறுவன பங்குகள் மிகவும்
குறைவான,(ஆனால் நம்பகமான)
இலாபங்களைக் கொடுக்கும்.
இன்ஃபோசிஸின் இந்த வார நிலவரம் விலை 52.38$(டாலர் அதாவது
3179.90 ரூபாய்)
Date
|
Open
Price |
High
Price |
Low
Price |
Close
Price |
Total
Volume(Nos) |
52 High
|
52 Low
|
26-apr-14
|
52.38
|
52.75
|
52.22
|
52.50
|
1,293,508
|
63.20
|
0.00
|
25-apr-14
|
52.50
|
52.61
|
52.15
|
52.55
|
1,383,032
|
63.20
|
0.00
|
24-apr-14
|
52.25
|
52.31
|
51.80
|
52.30
|
1,635,072
|
63.20
|
0.00
|
23-apr-14
|
51.99
|
52.69
|
51.51
|
52.45
|
1,749,217
|
63.20
|
0.00
|
22-apr-14
|
52.44
|
52.78
|
52.33
|
52.50
|
796,584
|
63.20
|
0.00
|
அதாவது நல்ல நம்பகமான
நிறுவனம் என்றால், குறுகிய காலத்தில் இலாபம்
அதிகரிப்பு குறைவாகவே இருக்கும் என்றாலும், நீண்ட கால முதலீடு
என்றால்,இலாபம் தரும்.
Thanks to
இன்ஃபோஸிசில் முதலீடு செய்யுங்கள் என
தயவு செய்து எடுத்துக் கொள்ள
வேண்டாம். பங்கு வணிகத்தின் சாதகம்,பாதகம் இரண்டையும் விளக்க ஒரு எ.கா அவ்வளவுதான்.
ஒரு நிறுவனத்தின் பங்கு
ஏறுமா?இறங்குமா என்பதைக் கணிக்கும் மென்பொருள்களும் உண்டு.
பங்கு வணிகத்தில் முதலீடு
செய்து குறைந்த காலத்தில் அதிக
இலாபம் என்பது ,அனைவருக்கும் கிட்டாது
என்பதை அதில் ஈடுபடும் அனைவருக்கும்
தெரியும். கணிப்பு என்றாலே தவறாகும்
வாய்ப்பும் உண்டு என்பதை மனதில்
கொள்வது நல்லது.
ஆகவே விரும்பும் சகோக்கள்
அதன் நெளிவு சுழிவு அறிந்து,
உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யவும்.
அரசு வங்கியில் முதலீடு செய்வது பாதுகாப்பு
என்றே சொல்கிறோம். அதிக வட்டி அல்லது
இலாபம் என்பதுதான் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்கிறது
என்பதே நம் கருத்து.
இப்பதிவு எழுதக் காரனமே தமிழ்
மணத்தில் கண்ட ஒரு பதிவுதான்.
சரி பங்கு வணிகம் பற்றி
நண்பர் ஏதேனும் தகவல் கொடுப்பார்
என முதன் முதலில் அவர்
தளத்திற்கு சென்று பார்த்தால் அதிர்ச்சி!!!
ஜாதகம் பார்த்து பலனும் பரிகாரமும் பெற வேண்டுமா?
நீங்கள் ஏற்கனவே நஷ்டமடைந்திருந்தாலும், இனி எப்போதும் சரியாக டிரேடிங் செய்து ஷேர்மார்க்கெட்டில் லாபமடைய உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலனும் எளிய பரிகாரமும் சொல்ல வேண்டுமானால் இதற்கான எளிய கட்டணமாக ரூ 1555/-ஐ நமது வங்கிக் கணக்கு ஏதாவது ஒன்றில் செலுத்தி விட்டு உங்களது ஜாதக நகலை மின்னஞ்சலில்(bullsstreet.com@gmail.com) அனுப்பி விடுகங்கள்.நேரில் வருவதென்றாலும் முன்னதாக பணம் செலுத்தி ஜாதக நகலை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு அப்பாயின்ட்மென்ட் பெற்றுக்கொண்டு வாருங்கள்.
ஜோதிட ரீதியிலான ஷேர் டிரேடிங் பயிற்சி
****
நண்பர் (பதிவர்), பங்கு வணிக முதலீடுகளுக்கு
, சோதிட அடிப்படையில் ,முடிவு எடுக்க கற்பிப்பதாக
விளம்பரம் செய்கிறார்.அப்படி கற்பிப்பதற்கு சில
ஆயிரம் ரூபாய்கள் வரை தொகையாகவும் நிர்ணயம்
செய்கிறார் என்பது நமக்கு வியப்பை
ஏற்படுத்தியது
சோதிடம் என்பது சில கோள்கள்,நட்சத்திரம்
போன்றவை, ஒருவரின் வாழ்வின் மீது தாக்கம் செலுத்துகின்றன
என்பதும் பிறந்த நேரம் சார்ந்து
அவை கணிக்கப்படுகின்றன. டாலமியின் புவிமையக் கோட்பாட்டின் கணித அடிப்படையில் கோள்களின்
இயக்கம் கணிக்கப்படுகிறது. கோள்களின் இருப்பிடம்
சார்ந்து பலன்கள் என கணிக்கிறார்கள்.சோதிட அடிப்படையில்
திருமணம், புதுமனை வாங்குதல்,விற்றல், தொழில் தொடங்குதல்
என பல விடயங்கள் நடக்கின்றன.
சோதிடம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விடயம்.ஒருவரின் மனதுக்கு ஆறுதல் கொடுப்பது என்ற அளவில் மட்டுமே ஏற்கலாம். மற்றபடி எதிர்கால விடயங்களை சரியாக கணித்து அதன் மூலம் பங்கு வணிகத்தில் இலாபம் அடையலாம் என்பது நிச்சயம் அறிவார்ந்த செயல் ஆகாது.
ஏன் சோதிடம் என்பது மோசடி என்பதை இக்காணொளி விளக்குகிறது
ஆகவே பங்கு
வணிகத்தில் சாதகம்,பாதகம் இரண்டும்
உண்டு. அதனை அனுமானித்து மட்டுமே
முதலீடு செய்யவும். சோதிடம் சார் பங்கு
வணிக கணிப்பு என்பதை தவிர்த்தல்
உங்களின் பணத்தை பாதுகாத்து சேமிக்கும்.
http://articles.orlandosentinel.com/2013-08-13/business/os-broker-pleads-guilty-prison-20130813_1_ex-broker-ponzi-scheme-fraud
நன்றி!!!!
http://articles.orlandosentinel.com/2013-08-13/business/os-broker-pleads-guilty-prison-20130813_1_ex-broker-ponzi-scheme-fraud
Ex-broker who ran astrology-based investment scheme pleads guilty to fraud, sentenced to prison
நன்றி!!!!