Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts
Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts

Friday, March 8, 2013

ஐ.க்யு தேர்வு,ஐன்ஸ்டின், விளம்பர கோமாளிகள்.




வணக்கம் நண்பர்களே,

இன்றைய உலகில் போட்டி என்பது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. குறைந்த வாய்ப்புகள், அனைவருக்கும் தேவைகள் என்னும் போது ,போட்டி போடுவது விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவர் மீதும் திணிக்கப்படுகிறது.

கல்விதான் போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும், பெரும்பானமையோரை ஈடுபடுத்தும் விடயமாக இருக்கிறது. மதிப்பெண் சார்ந்த தரப்படுத்தும் முறை உண்மையான கற்றலை விட தேர்வில் மதிப்பெண் பெற மனனம் செய்யும் முறையை மட்டுமே ஊக்குவிக்கிறது.  

இங்கு கற்றல் என்றால் ஒரு விடயத்தை பன்முகப் பார்வையில் அலசி,பரிசோதித்து சரிபார்த்து,விமர்சித்து ஏற்கும் தன்மையை குறிப்பிடுகிறோம்.எந்த ஒரு அறிவியல் விதியும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளின் மிதான சான்றுகளின் விளக்கம்,ஆகவே சான்றுகளைப் பொறுத்து விதிகளும் மாறும் என்ற புரிதல் இல்லா அறிவியல் கல்வி வீண். [ ஹி ஹி இப்படி பார்த்தால் பாடத் திட்டம் முடிக்கவோ,எதுவும் செய்யவோ முடியாதே என்னும் குரல் கேட்கிறது. குறைந்து கற்றாலும் ஆழமான புரிதல் ஏற்படுத்தா கல்வி தேவையில்லை]

ஒரு மத்தியதர குடும்பத்தில் இருந்து பெரும் பணக்காரர் வரை தங்கள் குழந்தைகளை மிக புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் சேர்த்து ,பலதரப்பட்ட பயிற்சிகள் பெற்று, உலகின் முதன்மைத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்,தரம் பெற விரும்புகிறார்.சமச்சீர் கல்வி அனைவருக்கும் என்றால் பல மத்திய வர்க்க பெற்றோருக்கு கூடப் பிடிப்பது இல்லை.என் குழந்தைக்கும், ஏழைக் குழந்தைக்கும் ஒரே கல்வியா என்னும் மேன்மை பாராட்டல் இங்கு இயல்பான விடயம் ஆகும். 

மேலை நாடுகள், இந்தியாவில் சில பள்ளி கல்லூரிகளில் உள்ள ஒரு தேர்வு முறைதான் அறிவிற்கு மதிப்பெண் கண்டுபிடிக்கும் ஐ.க்யூ என்ப்படும் அறிவு(?)திறன் சார் தேர்வுகளும் ஒன்று. அறிவு என்பதை எப்படி நாம் பார்க்கிறோம் என்றால் வாழும் சூழலுக்கு தகுந்த படி  வாழ்வதுதான்.

ஆனால் இந்த ஐ.க்யு என்ப்படும் பரிசோத்னைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா என்பதையே ஊக்குவிப்பதால் அறிவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றே நாம் சொல்கிறோம்.

சரி இப்பதிவின் நோக்கம் நேற்று செய்தியில் படித்த ஒரு விடயமே காரணம். இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவழி பெண் ஒருவர் மென்சா என்ப்படும் நிறுவனம் நடத்தும் ஐ.க்யு தேர்வில் 162 மதிப்பெண் பெற்றார் என செய்தி வந்தது. சரி இதோடு விட்டார்களா! ஐன்ஸ்டினை விட அதிக அறிவு(ஐ.க்யு??) என செய்தி வெளியிட்டதும் சரி இதுபற்றி ஒரு பதிவு இட்டே ஆக வேண்டும் என முடிவு செய்தேன்.


12-Year-Old Indian Girl Neha Ramu Has Higher IQ Than Einstein, Hawking


ஐன்ஸ்டின் 160 மதிப்பெண் என்றதும் ,அவருமா இந்த தேர்வு எழுதினார் என்றால் இல்லையாம், அவருக்கும், ஸ்டீஃபன் ஹாக்கிங்,பில் கேட்ஸ் ஆகியோருக்கு 160 என் மென்சா குழுவினரே முடிவு செய்தனராம். சிரிக்காதீர்கள். இப்படித்தான் செய்தி.

முதலில் இந்த மென்சா நிறுவனம் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.


From wikipidia

Mensa is the largest and oldest high IQ society in the world.[2][3][4] It is a non-profit organization open to people who score at the 98th percentile or higher on a standardized, supervised IQ or other approved intelligence test.

மென்சா என்பது உலகின் பழமையான,சிறந்த, பெரிய அறிவு மதிப்பெண்[I.Q] சான்று அளிக்கும் நிறுவனம் ஆகும்.இதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறிவு ம‌திப்பெண் தேர்வில் 98% மேல் பெறுவோர் மட்டும் உறுப்பினர் ஆகலாம்.


சரி எந்த மாதிரி தேர்வு வைக்கிறார்கள்,எப்படி மதிபெண் கண்க்கிடுகிறார்கள் என இச்சுட்டியில் இருந்து அறிகிறோம்.


ஒரு முதலாளி சொல்வதை கேள்வி கேட்காமல் செய்யத் தேவைப்படும் திறமைகள்தான் இவை என புரிய முடியும். இவையும் ஒரு அளவுக்கு பயன் உள்ள செயல்கள் என் விட்டுவிடுவோம்.

இந்த  மதிப்பெண் வழங்கும் விதத்தில்தான் நாம் விமர்சனம் வைக்கிறோம்.ஒரு தேர்வில் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஆசிரியர் கற்பிக்கிறார். அவர் கற்பித்த விடயங்களை கொஞ்சம் மாறுதலுடன் வகுப்பில் உள்ள அனைவருக்கும் தேர்வு வைக்கிறார்.

அதில் கற்றவற்றை தேர்வில் எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறுகிறார்.இந்த முறையிலும் சில சிக்கல்கள் உண்டு என்றாலும் ஆசிரியர் நன்கு கற்பிப்பவராக இருந்து தேர்வு வினாக்களும் சரியாக விளங்கும் வண்ணம் இருப்பின், அறிந்தவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவது எளிது.

ஆனால் பெரும்பாலும் பல ஆசிரியர்கள் தேர்வுக்காக குழப்பும் வகையில் கேள்விகள் வைத்து இருப்பார்.அதற்கும் சில புத்தகங்கள் கிடைக்கிறது. கேள்வி என்ன சொல்கிறது என்பது அதிக நேரம் எடுக்கும். இப்படிக் கேள்விகள் ஒரு 10% அதிக பட்சம் இருக்கலாம் என்பதே நம் கருத்து. மாணவனின் ,கற்றலை அளவிட முயற்சிப்பதை விட அவனின் கேள்வியைப் புரிதல் தன்மையை பிரச்சினை ஆக்குவது தெளிவான சிந்தனையை வளர்க்காது.கற்றலின் மீது வெறுப்பை ஏற்படுத்தும்.

ஒரு தேர்வு நாடு,மாநில அளவில் பல இலட்சம் பேர் எழுதும் போது, எழுதும் அனைவரும் சம அளவில் கற்பிக்கபட்டு இருப்பார்கள் என்பதோ, வினாதாளின் மாதிரிகள் போல் பயிற்சி எடுத்து இருப்பார்கள் என்பதோ நடக்காத விடயம்.

இந்த மென்சா போன்ற அறிவுத் திறன் அளவிடல், போன்ற பயிற்சிகள் எடுக்காத  மாணவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த மாதிரி அதிக செலவு எடுக்கும் பயிற்சிகளை விளம்பரப் படுத்தவே இப்படி தேர்வுகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன்.

இந்த சராசரி விலக்கல் மதிப்பெண்முறை என்பது, சராசரி ம‌திப்பெண்ணில் இருந்து எவ்வளவு அதிகமாக மதிப்பெண் எடுக்கிறீர்கள் என கணக்கிடுவது ஆகும்.இது துறை சார் அறிவினை நோக்கி கொண்டு செல்லும் என ஏற்க முடியாது.

ஒரு துறை சார்ந்த அறிவு பெற ஈடுபாடு,முறையான தொடர் கற்றல்,பகிர்தல்,விவாதித்தல், என பன்முகம் சார்ந்தது. ஒரு துறையில் வல்லுனராய் இருப்பவர், பிற துறைகளில் வல்லுனராய் இருப்பது இல்லை. 

இந்த சூழலில் ஏதோ ஒரு நிறுவனம் நடத்தும் ,ஏதோ ஒரு பயிற்சிமுறை சார்ந்த தேர்வின் மதிப்பெண் மூலம் ஐன்ஸ்டினை விட சிறந்தவர் என விளமபரம் செய்வது கண்டிக்கத் தக்க விடயம்.

சில மாதங்களுக்கு முன் இதே போல் நியுட்டனை மிஞ்சிய இந்திய மாணவர் என செய்தி வந்தது. அது என்ன்வென்று பார்த்தால் ஒரு இயக்கவியல் புதிருக்கு நியுட்டன் தீர்வாக வகைக்கெழு சமன்பாடு கண்டார். அதனை எண்ணியல் முறைப்படி தீர்வு கண்டு வந்தனர். அம்மாணவர் சூத்திரம் தீர்வு கண்டார் என விவரம் தெரிந்தது.

நாமும் ஒரு பதிவு இட்டோம்.



சர் ஐசக் நியூட்டனின் 350 வருட புதிர் தீர்க்கப்பட்டதா?

சரி இது ஒரு பாராட்டத் தக்க செயல் , அந்த சூத்திரம் அறியவும் ஆவல் கொண்டோம். ஆனால் அதன் பிறகு அத்னை ஆய்வு சஞ்சிகையில் இடுவதால் இப்போது விவரம் கிடைக்காது என்றார்கள்.அதன் பிறகு நான் அறிந்த
உண்மையான் செய்தியில் மாணவரின் செயல் சாதனை அல்ல‌. வேண்டும் என்றே தமிழாக்கம் செய்யவில்லை.

http://www.huffingtonpost.com/2012/06/21/16-year-old-genius-shoury_n_1616085.html



 Voigt and his colleague at TU Dresden, Professor Ralph Chill, published a four-page report June 4 in which they attempted to contextualize Ray’s work and compare it with results presented in preexisting literature.

Voigt emphasized to HuffPost that Ray was deserving of the research award he received, and that the student's work should be appreciated from the perspective that he is a 16-year-old high school student using a kind of mathematics far beyond high-school level.


That said, Ray’s alleged solutions were “not endorsed by experts in the field who should have been involved in the evaluation of the work,” Voigt and Chill wrote in their published comments on the young man’s work. Furthermore, his steps were largely already known to experts.

Voigt said he did not know how the public was made to believe that a long-standing problem had been solved.

“The point is not that something is missing in Ray’s analysis, but rather that there was no ‘problem posed by Newton,’ and that the methods used by Ray are exceptional and remarkable for a high-school student, but standard for professional mathematicians,” Voigt said.


செயலை விட அதன் பலனுக்கே அனைவரும் ஆசைப் படுகிறார்கள். 

கணிதமேதை இரமானுஜம் பள்ளித் தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஐன்ஸ்டினுக்கு குவாண்டம் இயக்கவியல் வினோதமாக தெரிந்தது.
http://en.wikipedia.org/wiki/Bohr%E2%80%93Einstein_debates


The shocks for Einstein began in 1925 when Werner Heisenberg introduced matrix equations that removed the Newtonian elements of space and time from any underlying reality. The next shock came in 1926 when Max Bornproposed that the mechanics was to be understood as a probability without any causal explanation.
Einstein rejected this interpretation. In a 1926 letter to Max Born, Einstein wrote: "I, at any rate, am convinced that He [God] does not throw dice."[5]


ஐசக் நியுட்டன் இரசவாதம்[alchemy] செய்ய முடியும் என முயன்றார்.

ஒவ்வொருவருக்கும் சில விடயங்களில் ஆழ்ந்த புலமை இருக்கலாம், அதை ஏற்படுத்துவதே கல்வி. நம் கற்றல் புரிதலின் எல்லைகளை உணர்வதுமே கல்வி.

அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.அதிலும் எதற்கும் விளம்பரம் செய்தும் விஞ்ஞானி உருவாக்க முடியாது. 

ஐன்ஸ்டின்,நியுட்டன் போல் துறை சார்ந்து எவர் சாதித்தாலும் நிச்சயம் சீர் தூக்கி பார்த்து  பாராட்டுவோம்,ஆனால் கண்ட தேர்வின் முடிவையும் வைத்து விளமபரம் தேடுவதை கண்டனம் செய்கிறோம்.

உண்மையான சமச்சீர் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாளே உண்மையில் சுதந்திரம் கிடைப்பது எனலாம்.

துறை சார்ந்த புலமை பெறுதல் நலம்.ஆனால் சகலகலா வல்லவ அறிவுத் திறன் என்பது மோசடியே!!!

http://www.lfpress.com/2012/12/19/iq-tests-too-incomplete-to-measure-intelligence-western-researchers-find

நன்றி!!

Thursday, August 11, 2011

சமச்சீர் கல்வியும் ஜனநாயக சிக்கல்களும்



ஒரு வழியாக தமிழகத்தில் சமச்சீர் கல்வி பிரச்சினை தீர்ந்து மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.தமிழகத்தின் பல கல்விமுறைகளை ஒன்றாக்கி பொதுவான கல்வி முறையாக்கியது சமச்சீர் கல்வி என்றழைக்கப் படுகிறது.இது மிகவும் சிறப்பானதா இல்லையா என்பதும் சிலரால் விவாதிக்கப்பட்டும் வருகிறது.எந்த ஒரு செயலுமே எடுத்தவுடன் மிக சிற‌ப்பாக அனைத்து நடைமுறை சிக்கல்களையும் தீர்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது.ஏற்கெனெவே இருந்த கல்வி முறையை விட சிறப்பாக இருக்கும் என்றே பெரும்பாலோனவர்களின் கருத்தாக உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மெட்ரிக்,ஆங்லோ இந்திய கல்வி முறைத் திட்டத்திற்கு ஆதரவானவர்கள் மட்டுமே என்பதும் தெரிந்த விஷயம்.இம்முறை பாடத்திட்டம் படித்தால் மட்டுமே எதிர்காலம் சிறப்பாக இருக்க்கும் என்ற கருத்து மாயை பல நடுத்தர ,மேல் தட்டும் மக்களிடம் நன்றாக் ஊன்றி விட்டது.எப்படியாவது தன் மகன்/மகள் 12வது வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கி ,பொறியியல் அல்லது இணையான் படிப்பு படித்து,ஒரு மேலைநாட்டில் மேற்படிப்பு+ நல்ல சம்பளத்தோடு வேலை+குடியுரிமை என்று வாழ ஆசைப்ப்டும் மேட்டுக்குடி பெற்றோர்களின் வேலைதான் இந்த சம்ச்சீர் கல்வி எதிர்ப்பு. 

ஒரு நாட்டில் கல்வி பயிலும் அனைவருக்கும் சிறப்பான கல்வி இலவசமாக் வழங்கப் படவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.ஆகவே பொதுவான கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட்டால் மட்டுமே கல்வியில் முன்னேற்றம் அனைவருக்கும் வரும். .ஒரு கிராமத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவனும் சென்னையில் புகழ்பெற்ற "அஆஇஈ' பள்ளியில் படிக்கும் மாணவனும் ஒரே பாடத்திட்டம் படிக்கும் போது என்ன நடக்கும்?.மதிப்பெண் அடிப்படையிலேயெ போட்டி என்பதால் நன்றாக படிக்கும் எவரும் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.இதுவரை நடந்த 10,12 வகுப்பு தேர்வுகளில் கிராமப் புற‌ மாணவர்களும் அதிக சாதனை நிகழ்த்தியதும் அறிந்ததே.  

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்பதற்கு முதல்படி இந்த சமச்சீர் என்றால் மிகையாகாது. கல்வியை வியாபாரமாக்குவதை நிறுத்த இதுவே சரி.இன்னும் கூட மத்திய அரசு பாடத் திட்டம் என்று மாறும் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பு ,தேவையான எண்ணிக்கையில் ,தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறதா என்ற அடிப்படையீல் மட்டுமே வழங்க வேண்டும்.சமச்சீரை இந்த அரசு மேம்படுத்த விரும்பினால் செய்யட்டும்.ஒவ்வோரு இரு அல்லது 3 ஆண்டுகளுகொருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யலாம்.

இந்த பிரச்சினை ஒருவழியாக தீர்ந்து விட்டாலும் கடந்த இருமாதங்களாக அரசுக்கும் மக்களுக்கும் ஒரு யுத்தமே சம்ச்சீரினால் நடந்தது. உயர் நீதிமன்றம் சொல்லியும் கெட்காமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று திர்ர்ப்பு எதிரான பிற்கே வேறு வழியில்லை என்ற ஒரே ஒரு காரணத்தினால் மட்டுமே இந்த அரசு இக்கல்வி முறையை இந்த ஆண்டு அமல் படுத்துகிறது.என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

இதில் மாணவர்களின் 2 மாதம் படிப்பு கெட்டதும்,அரசின் பல செயல்பாடுகள், பொருள் இதற்காக வீணடிக்கப் பட்டது.இவைகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதே இப்பதிவு.ஒரு அறுதிப் பெரும்பான்மை கொண்ட தேர்ந்தெடுக்கப்ப்ட்ட அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாமா என்பதே நம் கேள்வி.இதனை தவிர்க்க நீதிமன்றம் செல்வது மட்டும்தான் தீர்வா? .அரசின் தான் தோன்றித்தனமான முடிவுகளை தவிர்க்க முடியாதா?

இதற்கு பதில் இப்போதைய நமது ஜனநாயக முறையில் தீர்வு இல்லை. இப்போதைய அரசுக்கு மூன்றி இருபங்கு உறுப்பினர்கள் இருப்பதும்,எதிர்க் கட்சி அதன் கூட்டணியாக் இருப்பதால் சட்ட மன்றம் என்பது ஆளும் தரப்பின் கொள்கையையே எதிர் ஒலிக்கும்.எந்த எதிர்ப்பும் பயன் தராது.

                  ஊடகங்கள் கூட இப்போது அரசியல் நிலை சார்ந்தே செய்தி வெளியிடுகின்றன.பல் நாடுகளின் முக்கிய விஷயங்களின் அரசின் முடிவுக்கு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியே முடிவெடுக்கிறார்கள்.இம்மாதிரி ஒன்று இருந்திருந்தால் செய்யப்போகும் முன் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும்.நம் நாட்டின் மக்கள் தொகை அதிகம் என்பதால் (வாக்காளர் சுமார் 4.6 கோடி).4.6 கோடி மக்கள் தொகையை 234 சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே தீர்மானிப்பது.சரியா?.விகிதாச்சார பிரதிநிதித்துவம் நமது நாட்டில் இல்லை.ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெறுகிறார். ஆளும் கட்சியினர்& கூட்டணி கட்சியினர் அரசின் செயலை விமர்சிக்க மாட்டார்கள் என்பதால்   அரசை தட்டிக் கேட்க ஆள் இல்லை.
இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு

1.நாட்டின் முக்கிய பிரச்சினைகள் துறை ரீதியாக ஒவ்வோவ்ன்றும் தெளிவாக வரையறுக்க படவேண்டும்.சுமார் 100 பிரச்சினைகள் என்று வைத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் 5 ஆண்டுகளில் இப்பிரச்சினைகள் குறித்து நிலைப்பாடு, தீர்க்கும் விதம் பற்றி ஒரு ஐந்தாண்டு  கால் அளவு நிகழ்ச்சி நிரல் திட்டம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் படும் அரசு அவர்கள் கொடுத்த திட்டத்தில் இருந்து கூடுமான்வரை விலக கூடாது.

2.அப்படி ஒரு அவசர சூழ்நிலைக்காக் வேறு நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனில் எளிதில் கருத்து கணிப்பு நட்த்த ஒரு முறை.ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்றத் தேர்த்லிலும் குறைந்த பட்சம் 10% ஓட்டு வாங்கிய வேட்பாளருக்கும் ஜனநாயக் ரீதியாக சில உரிமைகள் வழங்கலாம்.ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த படசம் 2 ல் இருந்து 9 வேட்பாள‌ர் வரை தேர்வாகலாம்.அதிக வாக்குகள் பெற்றவ்ரே மட்டுமே அரசமைக்கும்(இப்போது உள்ளது போல்) முழு உரிமை பெற்றவர் என்றாலும் மற்றவர்கள் இம்மதிரி கருத்துக் கணிப்பின் போது சம் உரிமை கொண்ட உறுப்பினர்கள் ஆகின்றனர். இப்போது எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் அதிக அளவு உறுப்பினர் இருக்க வாய்ப்பே இல்லை.தமிழகத்தில் ஒவொரு தொகுதிக்கும் சுமார் 5 உறுப்பினர்கள் என்று வைத்தால் சுமார் 1070 உறுப்பினர்கள் வருகிறார்கள்.இதில் ஆளும் கட்சிக்கு 300 இருபதே பெரிய விஷயம்.எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவது எளிதே இம்முறையில் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களை கொண்டு வருவது கட்சிகளுக்கு மிக கடினம்.

கட்சிகள் தங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத செயல்களை மட்டும் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்..ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரித்தோ,எதிர்த்தோ வாக்களிக்கலம்,அது வெளிப்படையாக் மக்களுக்கு தெரிவிக்கப் படவேன்டும்.அதற்கான காரணத்தை உறுப்பினர்கள் தொகுதி மக்களுக்கு அறிவிக்க வேன்டும்.ஒரு இணைய தளம் இருந்தாலே போதும்,இதனை நடைமுறை படுத்தி விடலாம்.. சட்டமன்றத்தில் அனைத்து உறிப்பினர்களுக்கும் விவாதிக்கும் வாய்பு அளிக்கலாம்.இவர்களுக்கு எவ்வளவு ஆட்சி அதிகாரம் பங்கு அளிப்பது என்பது யோசித்து செயல்பட வேண்டிய விஷயம்.இம்முறையில் ப்ல சிறுபானமையினரின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட வழி வகுக்கும்.கூட்டணிகளை பல் கட்சிகள் விரும்ப மாட்டார்கள்.அர்சு தன் நிகழ்ச்சி நிரலில் இருந்து மக்களுக்கு தொல்லை தரும் இம்மாதிரி பிரச்சினைகளை நெருங்காது.நிகழ்ச்சி நிரலின் படி சொன்னவற்றை நிறைவேற்றுவதே அரசுக்கு பெரிதாக் இருக்கும்.

இக்காணொளியில் கூட ஜனநாயக்த்தின் பல அம்சங்கள்,பிரச்சினைகள்,தீர்வுகள் என்று ஆய்வு செய்கின்றனர்.பாருங்கள்.