ஒரு வழியாக தமிழகத்தில் சமச்சீர் கல்வி பிரச்சினை தீர்ந்து மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.தமிழகத்தின் பல கல்விமுறைகளை ஒன்றாக்கி பொதுவான கல்வி முறையாக்கியது சமச்சீர் கல்வி என்றழைக்கப் படுகிறது.இது மிகவும் சிறப்பானதா இல்லையா என்பதும் சிலரால் விவாதிக்கப்பட்டும் வருகிறது.எந்த ஒரு செயலுமே எடுத்தவுடன் மிக சிறப்பாக அனைத்து நடைமுறை சிக்கல்களையும் தீர்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது.ஏற்கெனெவே இருந்த கல்வி முறையை விட சிறப்பாக இருக்கும் என்றே பெரும்பாலோனவர்களின் கருத்தாக உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மெட்ரிக்,ஆங்லோ இந்திய கல்வி முறைத் திட்டத்திற்கு ஆதரவானவர்கள் மட்டுமே என்பதும் தெரிந்த விஷயம்.இம்முறை பாடத்திட்டம் படித்தால் மட்டுமே எதிர்காலம் சிறப்பாக இருக்க்கும் என்ற கருத்து மாயை பல நடுத்தர ,மேல் தட்டும் மக்களிடம் நன்றாக் ஊன்றி விட்டது.எப்படியாவது தன் மகன்/மகள் 12வது வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கி ,பொறியியல் அல்லது இணையான் படிப்பு படித்து,ஒரு மேலைநாட்டில் மேற்படிப்பு+ நல்ல சம்பளத்தோடு வேலை+குடியுரிமை என்று வாழ ஆசைப்ப்டும் மேட்டுக்குடி பெற்றோர்களின் வேலைதான் இந்த சம்ச்சீர் கல்வி எதிர்ப்பு.
ஒரு நாட்டில் கல்வி பயிலும் அனைவருக்கும் சிறப்பான கல்வி இலவசமாக் வழங்கப் படவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.ஆகவே பொதுவான கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட்டால் மட்டுமே கல்வியில் முன்னேற்றம் அனைவருக்கும் வரும். .ஒரு கிராமத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவனும் சென்னையில் புகழ்பெற்ற "அஆஇஈ' பள்ளியில் படிக்கும் மாணவனும் ஒரே பாடத்திட்டம் படிக்கும் போது என்ன நடக்கும்?.மதிப்பெண் அடிப்படையிலேயெ போட்டி என்பதால் நன்றாக படிக்கும் எவரும் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.இதுவரை நடந்த 10,12 வகுப்பு தேர்வுகளில் கிராமப் புற மாணவர்களும் அதிக சாதனை நிகழ்த்தியதும் அறிந்ததே.
அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்பதற்கு முதல்படி இந்த சமச்சீர் என்றால் மிகையாகாது. கல்வியை வியாபாரமாக்குவதை நிறுத்த இதுவே சரி.இன்னும் கூட மத்திய அரசு பாடத் திட்டம் என்று மாறும் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பு ,தேவையான எண்ணிக்கையில் ,தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறதா என்ற அடிப்படையீல் மட்டுமே வழங்க வேண்டும்.சமச்சீரை இந்த அரசு மேம்படுத்த விரும்பினால் செய்யட்டும்.ஒவ்வோரு இரு அல்லது 3 ஆண்டுகளுகொருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யலாம்.
இந்த பிரச்சினை ஒருவழியாக தீர்ந்து விட்டாலும் கடந்த இருமாதங்களாக அரசுக்கும் மக்களுக்கும் ஒரு யுத்தமே சம்ச்சீரினால் நடந்தது. உயர் நீதிமன்றம் சொல்லியும் கெட்காமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று திர்ர்ப்பு எதிரான பிற்கே வேறு வழியில்லை என்ற ஒரே ஒரு காரணத்தினால் மட்டுமே இந்த அரசு இக்கல்வி முறையை இந்த ஆண்டு அமல் படுத்துகிறது.என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.
இதில் மாணவர்களின் 2 மாதம் படிப்பு கெட்டதும்,அரசின் பல செயல்பாடுகள், பொருள் இதற்காக வீணடிக்கப் பட்டது.இவைகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதே இப்பதிவு.ஒரு அறுதிப் பெரும்பான்மை கொண்ட தேர்ந்தெடுக்கப்ப்ட்ட அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாமா என்பதே நம் கேள்வி.இதனை தவிர்க்க நீதிமன்றம் செல்வது மட்டும்தான் தீர்வா? .அரசின் தான் தோன்றித்தனமான முடிவுகளை தவிர்க்க முடியாதா?
இதற்கு பதில் இப்போதைய நமது ஜனநாயக முறையில் தீர்வு இல்லை. இப்போதைய அரசுக்கு மூன்றி இருபங்கு உறுப்பினர்கள் இருப்பதும்,எதிர்க் கட்சி அதன் கூட்டணியாக் இருப்பதால் சட்ட மன்றம் என்பது ஆளும் தரப்பின் கொள்கையையே எதிர் ஒலிக்கும்.எந்த எதிர்ப்பும் பயன் தராது.
ஊடகங்கள் கூட இப்போது அரசியல் நிலை சார்ந்தே செய்தி வெளியிடுகின்றன.பல் நாடுகளின் முக்கிய விஷயங்களின் அரசின் முடிவுக்கு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியே முடிவெடுக்கிறார்கள்.இம்மாதிரி ஒன்று இருந்திருந்தால் செய்யப்போகும் முன் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும்.நம் நாட்டின் மக்கள் தொகை அதிகம் என்பதால் (வாக்காளர் சுமார் 4.6 கோடி).4.6 கோடி மக்கள் தொகையை 234 சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே தீர்மானிப்பது.சரியா?.விகிதாச்சார பிரதிநிதித்துவம் நமது நாட்டில் இல்லை.ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெறுகிறார். ஆளும் கட்சியினர்& கூட்டணி கட்சியினர் அரசின் செயலை விமர்சிக்க மாட்டார்கள் என்பதால் அரசை தட்டிக் கேட்க ஆள் இல்லை.
இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு
1.நாட்டின் முக்கிய பிரச்சினைகள் துறை ரீதியாக ஒவ்வோவ்ன்றும் தெளிவாக வரையறுக்க படவேண்டும்.சுமார் 100 பிரச்சினைகள் என்று வைத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் 5 ஆண்டுகளில் இப்பிரச்சினைகள் குறித்து நிலைப்பாடு, தீர்க்கும் விதம் பற்றி ஒரு ஐந்தாண்டு கால் அளவு நிகழ்ச்சி நிரல் திட்டம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் படும் அரசு அவர்கள் கொடுத்த திட்டத்தில் இருந்து கூடுமான்வரை விலக கூடாது.
2.அப்படி ஒரு அவசர சூழ்நிலைக்காக் வேறு நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனில் எளிதில் கருத்து கணிப்பு நட்த்த ஒரு முறை.ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்றத் தேர்த்லிலும் குறைந்த பட்சம் 10% ஓட்டு வாங்கிய வேட்பாளருக்கும் ஜனநாயக் ரீதியாக சில உரிமைகள் வழங்கலாம்.ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த படசம் 2 ல் இருந்து 9 வேட்பாளர் வரை தேர்வாகலாம்.அதிக வாக்குகள் பெற்றவ்ரே மட்டுமே அரசமைக்கும்(இப்போது உள்ளது போல்) முழு உரிமை பெற்றவர் என்றாலும் மற்றவர்கள் இம்மதிரி கருத்துக் கணிப்பின் போது சம் உரிமை கொண்ட உறுப்பினர்கள் ஆகின்றனர். இப்போது எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் அதிக அளவு உறுப்பினர் இருக்க வாய்ப்பே இல்லை.தமிழகத்தில் ஒவொரு தொகுதிக்கும் சுமார் 5 உறுப்பினர்கள் என்று வைத்தால் சுமார் 1070 உறுப்பினர்கள் வருகிறார்கள்.இதில் ஆளும் கட்சிக்கு 300 இருபதே பெரிய விஷயம்.எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவது எளிதே இம்முறையில் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களை கொண்டு வருவது கட்சிகளுக்கு மிக கடினம்.
கட்சிகள் தங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத செயல்களை மட்டும் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்..ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரித்தோ,எதிர்த்தோ வாக்களிக்கலம்,அது வெளிப்படையாக் மக்களுக்கு தெரிவிக்கப் படவேன்டும்.அதற்கான காரணத்தை உறுப்பினர்கள் தொகுதி மக்களுக்கு அறிவிக்க வேன்டும்.ஒரு இணைய தளம் இருந்தாலே போதும்,இதனை நடைமுறை படுத்தி விடலாம்.. சட்டமன்றத்தில் அனைத்து உறிப்பினர்களுக்கும் விவாதிக்கும் வாய்பு அளிக்கலாம்.இவர்களுக்கு எவ்வளவு ஆட்சி அதிகாரம் பங்கு அளிப்பது என்பது யோசித்து செயல்பட வேண்டிய விஷயம்.இம்முறையில் ப்ல சிறுபானமையினரின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட வழி வகுக்கும்.கூட்டணிகளை பல் கட்சிகள் விரும்ப மாட்டார்கள்.அர்சு தன் நிகழ்ச்சி நிரலில் இருந்து மக்களுக்கு தொல்லை தரும் இம்மாதிரி பிரச்சினைகளை நெருங்காது.நிகழ்ச்சி நிரலின் படி சொன்னவற்றை நிறைவேற்றுவதே அரசுக்கு பெரிதாக் இருக்கும்.
இக்காணொளியில் கூட ஜனநாயக்த்தின் பல அம்சங்கள்,பிரச்சினைகள்,தீர்வுகள் என்று ஆய்வு செய்கின்றனர்.பாருங்கள்.
Our constitutional system was chosen, on the premise that the constitutional and political functionaries and other constituents do their job in the spirit of Indian Constitution.
ReplyDeleteOur founding fathers thought that the persons succeeding them will be better than them in public and individual probity and respect for idealism.
A political system cannot function in vacuum, it needs people to churn its wheel. India as years passed failed to get people who turned the wheel for goodness and build institutions of integrity. People really forgot the hardships underwent to get their constitutional rights.
so we cannot expect another political system to work for better when the people never used the present system properly to full extent. it is like passing laws after laws without enforcing them.
The real solution lies in grass root levels. each citizen should realise that all the constitutional guarantees and rights guaranteed under the constitution does not come easily and not without struggle. it needs constant watching and guarding. history is replete with such struggles due to which now we are enjoying the fruits. so till it is shown that people will not tolerate all the illwils plaguing our system, the system will not change for good nor do any other system.