இணையத்தில் மத விளம்ப்ர பிரச்சாரம் நடைபெறுவது நாம் அறிந்ததே.விவாதத்தில் சகலத்தையும் விளக்குவோம் என்பதே கொள்கையாக கொண்டவர்கள்.இவர்களை கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது என்றாலும் என்ன சொல்கிறார்கள் அதற்கு நாமும் பதில் சொல்லி பார்ப்போமே என்ற சிறு முயற்சிதான் இது.
மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம்.ஒருவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு. உண்மையான அன்மீகம்,இறைமறுப்பு என்பது முடிவற்ற தேடல் என்பதை பல பதிவுகளில் அலசி இருக்கிறோம்.ஆனால் நாங்கள் அனைத்தும் அறிந்து புரிந்து விளக்குவோம் எனில் விளக்கத்தையும் பார்த்து விடுவோம்.இது ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு அவ்வளவுதான்.!!!!!!!!!!!
சிவப்பு நண்பரின் கேள்விகள்.கருப்பு நம் பதில்கள்
____________
நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..
இதுதான் இப்பதிவு எழுத காரணமான் வரிகள்.
இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???
பிரபஞ்சத் தோற்றத்தை விளக்க இறைவன் தேவையில்லை.இயற்பியல் போதும்.இத்னை ஸ்டீஃபன் ஹாக்கிங் விள்க்குகிறார்.தவறு என்றால் ஒரு மின்னஞ்சல் அல்லது இதே மாதிரி படைப்புக் கொள்கையில் இந்த சான்றுகளை எல்லாம் விளக்கி ஒரு புத்தகம் எழுதலாம்.அறிவியல் கொள்கை என்பது சான்றுகளுக்கு விளக்கம் அளிக்கிறது.மதக் கொள்கை புத்தக்த்தின் கூற்றுகளுக்கு சான்று ஏற்படுத்த பார்க்கிரது.
இப்போதைய அறிவியல் கருத்தியலின் படி பல பிரபஞ்சங்க்ள்.நமது பிரபஞ்சம் மிகப் பெரியது அதாவது 46 மில்லியன் ஒளி வருடங்கள்.இது 13.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.அதில் கண்டுபிடிக்கப்ப்ட்ட வரை உள்ள் 200 பில்லியன் கேலக்ஸிகளில் நமது காலக்ஸியும் ஒன்று,இதன் பெயர் பால் வீதி மண்டலம்.(milky way) இதனை ஒரு வட்டமாக வரையறுக்கிறார்கள்.விட்டம் 10,000 ஒளி வருடங்கள்.இதன் கன அளவு 7.85 ட்ரில்லியன் ஒளி வருடம் .
.இதில் உள்ள 200_400 பில்லியன் நட்சத்திரங்களுல் ஒன்றுதான் நம் சூரியக் குடும்பம்.சூரியக் குடும்பத்தின் மொத்த எடையில் 99.86% சூரியன் ஆகும்.பிற கோள்கள் எல்லாம் மிச்சம் மீதி மட்டுமே.இதில் நம் பூமி ஒரு தூசு. நமது நம்து பூமி 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியடு.இதன் விட்டம் சுமார் 12,000 கி.மீ.இந்த உருவாதலுக்கு இயற்கை விதிகள் மீது விளக்கம் அளிக்கப் படுகின்றன்.
இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாகவே பிரபஞ்சங்க்ள் உருவாதல் நடந்திருக்கிறது.இன்னும் பல விஷயங்கள் உள்ளது படைப்பு இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது.புதிய நட்சத்திரங்கள் தோன்றுவதும்,பழையவை அழிவதும் நடந்து கொண்டே இருக்கின்றன.
இது அனைத்தையும் இறைவன் இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாஆஆஆஆஆஆஆஅகாஆஆஆஆஅ படைத்துக் கொண்டே இருக்கிறாஆஆஆஆஆஆர் என்றால் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் உரிமை.கடவுளும் இயற்கை விதிகளுக்கு கட்டுப் பட்டவர் என்றால் அவர் ஒரு ஓரமாக இருந்து விட்டு போகட்டும்.இயற்கை விதிகளை மீறும் கடவுள்(கள்) தேவையில்லை.
ஆனால் பாருங்கள் பிரபஞ்ச படைப்பு என்பது மத புத்தகங்களின் படி முடிந்து போன விஷயம்.
**********
ஆம்! பகுத்தறிவு...அல்லவா? எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும், எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும், பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே
இதற்கு பெயர் முதல் காரணி கொள்கை.(first cause argument) கடவுளுக்கு மட்டும் பொருந்தாது.ஒரெ கடவுள் எப்போதும் எதுவும் இலாமல் இருப்பார் என்பதை விட இயற்கை எப்போதும் இருக்கிறது என்பதே அறிவார்ந்த சிந்த்னையாக தெரிகிறது.கடவுள் வடிவமைப்பு(design) என்பது இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டதால் கடவுளும் இயற்கையின்(உண்மையில் மனிதனின் படைப்பு) படைபாகவே இருக்க முடியும்.
இறை மறுப்பாளர்களாகிய நாங்கள் தேடியவரை இயற்கை விதிகளுக்கு மேலான சக்தி எதையும் கண்டறிய முடியவில்லை என்று ஆய்வு பூர்வமாக் கூறுகிறோம்.எல்லையற்ற தேடல் மட்டும் தொடர்கிறது.
உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா?? ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?
உங்கள் வீடு என்றாலே உங்களால் உருவாக்கப் பட்டது.தானே.மனிதர்கள் வாழ்வது கடந்த 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே.பிரபஞ்சம் தோன்றி 99.9999% காலம் கடந்து ஒரு வீட்டை உருவாக்க கூடிய மனித்ன உருவானான்.பல விலங்குகள் இல்லாமல் போய் விட்டன.அது போல் மனிதன் இல்லாமல் போகும் காலமும் வரும் அப்போதும் பூமி இருந்தால் பிற உயிர்கள் வாழும்.
பூமி மனிதனுக்காக படைக்கப் பட்டது என்பதை இக்கூற்றுகளின் மேல் நம்ப முடியுமா?
இயற்கையாகவேதான், இந்த பூமி 100% பெர்ஃபெக்ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்ஷன்...நீங்கள் விரும்பிய, அல்லது, குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.
இந்த வாதத்தின் பெயர் ஃபைன் ட்யூனிங் வாதம்(fine tuning argument) உல்கம் தோன்றிய போதே இப்படி வாழவதற்கு ஏற்றதாக இருந்தது என்றால் மட்டுமே இக்கூற்று சரி.ஆனால் அப்ப்டி இல்லை.
நண்பர்களே மதவாதிகள் இம்மாதிரி விதண்டாவாதம் செய்து மூளை சல்வை செய்வதில் இருந்து விலகுங்கள்.மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்றலாம்.சர்சசைகுறிய நடைமுறைகளை நியாயப் படுத்தாதீர்கள்.இது நமது வேண்டுகோள்.
athu sari ... matha purakkanippe irai nambikkaiyin aarambam enkiraarkale athu parri enna solkireerkal?
ReplyDeleteவாங்க நண்பரே,
ReplyDeleteஇறை நம்பிக்கை என்பது ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும்.அது போல் இறை மறுப்பும் வித்தியாசப் படும்.
இறைவன் என்பதை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக் வரையறுக்கின்றன.அந்த இறையை எளிதாக மறுக்க முடியும்.
பிரபஞ்ச தோற்றத்திற்கு கடவுள் அவசியமில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
___________
/matha purakkanippe irai nambikkaiyin aarambam enkiraarkale athu parri enna solkireerkal?/
____________________
மத புறக்கணிப்பும் தேவையற்றது.மதம் என்பது வாழ்வியல் நடைமுறை.இத்னை முழுதும் தவிர்க்க இயலாது மதம் என்பதில் உள்ள சர்ச்சைக்குறிய விஷயங்களை அனைவருமே எதிர்த்தாக வேண்டும்..
பெரும்பாலானவர்கள் மதத்தில் சரியென்று படுவதை மட்டுமே பின்பற்றுகிறோம்.பல் செயல்கள் அப்போது சரியாக் ஏற்றுக் கொள்ளப் பட்டவை இப்பொது தவறு ஆகிவிட்டது.இப்போதைய மத நம்பிக்கை அப்போது மத எதிர்ப்பாக இருந்து இருக்கும்.அதாவது மதங்கள் சூழ்நிலக்குத் தக்கவாறு தங்களை மாற்றுவதாலேயே வளர்கின்றன.
.மதம் தாண்டிய இறை நம்பிக்கை என்பது இந்து மதத்தில் ஆன்மீகமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. இதுவும் ஒரு தேடலே..பிற மதங்களில் அதுவே நாத்திகமாகிறது.
பிற விஷயங்கள் பிடித்தால் பின்பற்றலாம்,இல்லாவிட்டால் ஒதுங்கி செல்லாம்.இதுதான் சரி,இதில் உள்ள எல்லாமே சரி மற்றதெல்லாம் தவறு என்பவர்களை கண்டு நகைக்கலாம்.!!!!!!!!!!!!!!.
நவீன இறை மறுப்பு
ReplyDelete1.மதம் ,மத புத்தகங்கள் சொல்லும் கட்வுள்,கதைகள்,பிரச்சாரங்க்கள் பொய்,ஏமாற்று வேலைகளை நிரூபிக்க தயாராக் இருக்கிறோம்.
2.மதமற்ற கடவுள் பற்றி எனக்கு ஒன்றும் இக்கணம் வரைக்கும் ஒன்றும் தெரியாது .அப்ப்டி ஒன்றைப் பற்றி உணர முடியவில்லை. மதமற்ற கடவுள்கள் நம்பிக்கையாளரிடம் இருந்து அவர்கள் கண்டறிந்த உண்மைகளை அறிய சித்தமாக் இருக்கிறோம்.பிறகு சாத்தியமா என்று ஆராய்வோம். அவ்வளவுதான்.
நண்பர்,
ReplyDeleteஉங்களுக்கு இறைவனிடமிருந்து அமைதி நிலவட்டுமாக..
சில கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு (அதுவும் சரியா என்று பாப்போம்) அனைத்தையும் முடித்து விட்டீர்களே.
//இது அனைத்தையும் இறைவன் இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாஆஆஆஆஆஆஆஅகாஆஆஆஆஅ படைத்துக் கொண்டே இருக்கிறாஆஆஆஆஆஆர் என்றால் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் உரிமை//
உங்களுடைய பார்வைதான் ஆஆஆஆஆஆ எல்லாம். காலம் என்பதே கிடையாது என்கிறபோது மில்லியன் வருடம் எல்லாம் கணக்கே இல்லை, புரிந்திருக்கும் என நினைகிறேன்.
//இறை மறுப்பாளர்களாகிய நாங்கள் தேடியவரை இயற்கை விதிகளுக்கு மேலான சக்தி எதையும் கண்டறிய முடியவில்லை என்று ஆய்வு பூர்வமாக் கூறுகிறோம்.//
உங்களால் (மனிதனால்) infrared கதிரையே பார்க்க முடியவில்லையே அப்புறம் எப்படி மற்றதை இல்லை என்று தெளிவாக சொல்ல முடிந்தது.
//பிரபஞ்சம் தோன்றி 99.9999% காலம் கடந்து ஒரு வீட்டை உருவாக்க கூடிய மனித்ன உருவானான்//
மனிதன் தானாக உருவாக எந்த அறிவியலிலும் சாத்தியமில்லை. அதற்கான சான்றுகள் நிறைய கொடுத்துள்ளேன் பார்க்கலாமே.
// இந்த வாதத்தின் பெயர் ஃபைன் ட்யூனிங் வாதம்(fine tuning argument) உல்கம் தோன்றிய போதே இப்படி வாழவதற்கு ஏற்றதாக இருந்தது என்றால் மட்டுமே இக்கூற்று சரி.ஆனால் அப்ப்டி இல்லை.//
http://carbonfriend.blogspot.com/2010/08/blog-post_12.html
//நண்பர்களே மதவாதிகள் இம்மாதிரி விதண்டாவாதம் செய்து மூளை சல்வை செய்வதில் இருந்து விலகுங்கள்//
மூளை சலவை செய்வதாக இருந்தால் விவாதத்திற்கு அழைக்க தேவை இல்லையே.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோதரர் சார்வாகன்,
///பிரபஞ்ச தோற்றத்திற்கு கடவுள் அவசியமில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.///
எப்போது??
எந்த அறிவியல் ஆய்விதழில் இதுக்குறித்த செய்தி இயற்பியல் விதிகளோடு நிரூபிக்கப்பட்டு வெளிவந்தது?
அறிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருக்கின்றேன் சகோதரர்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
/காலம் என்பதே கிடையாது என்கிறபோது மில்லியன் வருடம் எல்லாம் கணக்கே இல்லை, புரிந்திருக்கும் என நினைகிறேன்./
ReplyDeleteவணக்கம் கூட்டாளி
காலம் ,இடம் பெருவெடிப்பிற்கு பிறகே ஆரம்பித்தது.பெரு வெடிப்பிற்கு முந்தைய செயல்கள் இபோது விவாதத்தில் உள்ள்ன.பெரு வெடிப்பில் இருந்து எல்லாவற்றையும் இயற்பியல் விதிகளால் விளக்கம் முடியும்.நீங்கள் காலம் கிடயாது என்றால் யாருக்கு எப்போது? மில்லியன் அல்ல பில்லியன் கொஞ்சம் விளக்கவும்.
/
உங்களால் (மனிதனால்) infrared கதிரையே பார்க்க முடியவில்லையே அப்புறம் எப்படி மற்றதை இல்லை என்று தெளிவாக சொல்ல முடிந்தது./
இன்ஃப்ரா ரெட் என்று ஒன்று இருப்பதை பிறகு எப்படி கண்டு பிடித்தார்கள்?அதனை பிற உபகரணங்கள் மூலம் உனர முடியும் பயன் படுத்த முடியும்.
ஒரு கிராமத்தில் உள்ளவர் இன்ஃப்ரா ரெட்டை நம்ப மறுத்தால் அவருக்கு ஒரு நஷ்டமும் இல்லை.பயன் படுத்தாதவருக்கு ஒரு பொருள் அவசியம் இல்லை.மனிதனுக்கு மேற்பட்ட சக்தி தேடியவரை இல்லை என்றாவது கூறும் மனது உண்டா?
வேற்று கிரகத்தில் ஆட்கள் இருக்கலாம்.இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.ஒருவேளை இருந்து நம்மீது பாதிப்பு ஏற்படுத்தும் போது அது குறித்து ஏதாவது செய்தாக வேண்டும். உங்கள் கடவுள் ஒரு வேற்றுக் கிரகவாசி போல் கருதுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.ஆனால் கிரகவாசிகள் படைத்து ,கண்காணித்து வருகின்ரார்.ஒவோருவருக்கும் மார்க் போட்டு சுவனம் ,நரகம் என்று நம்ப முடியவில்லை.நீங்கள் நம்புவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
/மனிதன் தானாக உருவாக எந்த அறிவியலிலும் சாத்தியமில்லை. அதற்கான சான்றுகள் நிறைய கொடுத்துள்ளேன் பார்க்கலாமே./
சாத்தியம் என்றே அறிவியல் கூறுகிறது.இது இன்னும் ஆதார பூர்வமாக மறுக்கப் படவில்லை.பூமி தோன்றியது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.உயிர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றின.மனித இந்த பூமியில் வாழ ஆரம்பித்தது 2இலட்சம் ஆண்டுகளே.மனிதன் போன்ற நியாண்டர்தால் போன்ற்வை அழிந்து விட்டன.டைனோசாரும் மனிதனும் ஒரே காலத்தில் வாழ்ந்தது இல்லை.இவை மறுக்க முடியா சான்றுகள்.இச்சான்றுகள் பொருந்தும் வண்ணம் இப்போது உள்ள கொள்கை பரிணாமம்.பரிணாம்த்திற்கு இந்த காலக் கண்க்கீடுகள் ஒத்துவரும்படி மாற்று அறிவியல் கருத்து சொல்லி நோபெல் பரிசு பெற முயற்சிப்பவர்களுக்கு வாழ்த்துகள்.
வணக்கம் நண்பரே
ReplyDeleteஇபோது பிரபஞ்ச தோர்றத்தை விவரிக்கும் கொள்கை இன்ஃப்லேஷனரி (inflationary) கொள்கை,பெரு வெடிப்பின் முன் நடந்தவ்ற்றுக்கும் விளக்கம் அளிக்கிரது.
இது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் தெ க்ராண்ட் டிசைன் என்ற புத்தக்த்தின் மையக் கருத்து.அறிவியலில் கடவுள் படைகவில்லை என்று பதிவிட முடியாது.
இதுவரை அந்த சிங்குலாரிட் எனப்படு அதிம் பொருண்மை,வெப்பம் கொண்ட புள்ளி மீது சில விமர்சனக்களும் அதன் சாத்தியம் பற்றிய ஆலன் குத் அவர்களின் இன்ஃப்லேசனரி தியரி பதில் அளித்து விட்டது.ஃஃபை டுயுனிங் காணொளி பார்க்கவில்லை என நினைகிறேன்.அதில் பல கட்டுரைகலை காட்டுகின்றனர்.
இன்ஃப்லஷனரி தியரி சரி என்றால் குரான் 21.30 தவறாகிவிடுமா.அது பிரச்சினை இலை வழக்கம் போல் வார்த்தை விளையாட்டு விளாயாடி விடலாம்.யு டூபில் குரான் அறிவியல் புதிதாக வராமல் போனதின் இரகசியம் இதுதான்.
பிரபஞ்ச உருவாக்கமும் அதன் தொடர் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் இயற்பியல் விதிகளின் மூலம் விளக்க முடியும்.பெரு வெடிப்பிற்கு பிறகு ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையே போதுமானது.
http://saarvaakan.blogspot.com/2011/08/blog-post_14.html
பல் ஆய்வுக் கட்டுரைகளை விக்கிபீடியாவில பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Inflation_(cosmology)
படைப்பு என்று வைத்துக் கொண்டாலும் தினமும் நட்சத்திரம்(குரானின் படி சாத்தானை விரட்டும் எரிகற்கள்) தோன்றுவதும் சில அழிவதும் மிக இயல்பே.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் இவ்வளவு ஆர்வமாக விவாதிக்கும் நீங்கள் இதில் 0.001% குரான் மீது ஆய்வு செய்ய மாட்டேன் என்கிறீர்கள்.
விவாதத்தின் போக்கை மாற்றவில்லை.இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நண்பர் கூட்டாளி
ReplyDeletehttp://carbonfriend.blogspot.com/2010/08/blog-post_12.html
உங்கள் பதிவு க்ரைக்&ஆடம் தீனின் கருத்துத்தான் இதற்கு காணொளி பதில் சொல்லியாகி விட்டது.
உருவாகிய பல பிரபஞ்சங்களில் அவற்றில் உள்ள ட்ரில்லியன் கோள்களில் ஏதாவது சிலவ்ர்றில் உயி உருவாகும்,வாழும் வாய்ப்பு இருக்கிறது. ஒவோரு பிரபஞ்சத்திற்கும் வெவ்வேறு இயற்பியல் விதிகள் .
இந்த உதவக்கரை கடவுள் பூமியை சுற்றி சூரியன் சந்திரன் வட்ட வரைகளில் நீந்தும் படி எளிதாக் படைத்து இருந்தால் நாங்கள் கைகட்டி அன்றே கூறினார் அல்லாஹ் என்று கேட்டிருப்போம்.
21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
ப்ராக்கெட் போட்டு அர்த்தம் மாற்றி போங்கப்பாஆஆஅ.போரடிக்கிறீங்க
நீங்கள் இரைவன் உங்களுக்காக் பல் பிரபஞ்சங்களையும் ட்ரில்லியன் கோள்கைலையும் படைத்து,அதில் ஒரு தூசு பூமியில் 99.999% காலம் கடந்து மனித்னை படைத்தார் என்ரால் பேஷா நம்புங்கோ!!!!!!!!.நோ அப்ஜெக்ஷன்
சகோதரர் சார்வாகன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் பின்னூட்டம் வருத்தமளிக்கின்றது. நான் கேட்டது அதில் இல்லை,
என்னுடைய கேள்வி உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கின்றேன். நீங்கள் ஒரு புத்தகத்தை வைத்து (அதுவும் காசு பார்க்க வேண்டுமென்பதற்காக எழுதப்பட்ட புத்தகத்தை (நான் சொல்லவில்லை, ஆய்வாளர்கள் தான் சொல்கின்றார்கள்) எல்லாம் உங்களுக்கு ஆதாரமாக வைத்து) விளக்குவீர்கள் என்றால் i am so sorry...உங்களுக்காக வருத்தப்படுவதை தவிர வேறு வழி இல்லை.
fine tuning-கும் நான் கேட்டதில் வரவில்லை...கோட்பாடுகள் வரும் போகும்...
என்னுடைய கேள்வி மிக எளிமையானது..
உங்களுக்காக மறுபடியும்,
///பிரபஞ்ச தோற்றத்திற்கு கடவுள் அவசியமில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.///
எப்போது??
எந்த அறிவியல் ஆய்விதழில் இதுக்குறித்த செய்தி இயற்பியல் விதிகளோடு (நீங்க சொல்லிருக்க கூடிய தியரியையும் இதில் சேர்த்து கொள்ளலாம்) நிரூபிக்கப்பட்டு வெளிவந்தது?
பெரிது பெரிதாக இந்த சின்ன விசயத்திற்கு டைப் செய்து என்னுடைய மற்றும் உங்களுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம்...
அந்த ஆய்விதலின் பதிவின் லிங்க் கொடுங்கள் போதும்.
காத்திருக்கின்றேன்...ஒருவேளை அடுத்த கமெண்டும் நான் எதிர்பார்ப்பது இல்லையென்றால், திரும்ப நான் பின்னூட்டமிட போவதில்லை. இதனை future reference-க்கு (அடுத்தவர்களுக்கு காட்ட) வைத்துக்கொண்டு சென்று விடுவேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
நண்பர் சார்வாகன் என்கிற, ஆற்றல் அரசு என்கிற, சந்தானம் என்கிற,சங்கர் என்கிற,வானம் என்கிற,இப்னு என்கிற,இப்னு ஜாஹிர் என்கிற, நண்பருக்கு நலமா?
ReplyDeleteஏன் இத்தனை வேடம் நேர்மை என்பதே கிடையாதா?
என்றைக்கு மூகமுடி அனிந்துக் கொண்டு அட்டைக் கத்தி சுழற்றுவதை நிறுத்த போகிறீர்கள்.
மேலே சொன்ன என்கிற என்கிற என்று சும்மா சொல்லவில்லை அனைத்துக்கும் ஆதரம் இருக்கிறது.
@ ஆஸிக் அகமது.
ReplyDeleteஇப்போதைய பிர்ச்பஞ்ச தோர்றக் கொள்கையான் இன்ஃப்லேஷன்,எம் தியரிகள் சிங்குலாரிட்டி என்ற நிலை தேவையில்லை என்ரே கூறுகின்றன.திரு ஆலன் குத் அவர்களின் விக்கிபிடியாவில இது குறித்த வரின் பதிவுகள் இருக்கும்.இதில் பெரு வெடிப்புக்கு முன் இன்ஃப்லேஷனரி தியரியும் அதன் பிறகு ஐன்ஸ்டின் சார்பிய தத்துவமும் பிரபஞ்ச விரிவாக்கம் முதல் பூமி உருவாக்கம் வரை விளக்குகின்றன
அது எனக்கு சரியாக் படுகிரது.உங்களுக்கு த்வறாக படலாம்.அது உங்கள் கொள்கை அவ்வளவுதான்.அந்த விக்கிபிடியாவில் பல ஆய்வுக் கட்டுரைகள் இருக்கின்ரன.நான் எழுதுவதௌ யாரும் காப்பி பேஸ்ட் செய்வதை நான் தடுபது இல்லை.செய்யுங்கள்.நன்றி.
http://en.wikipedia.org/wiki/Inflation_(cosmology)
பிரபஞ்ச தோற்றம் குறித்த கால்க் கண்க்கீட்டில் இந்து மதம் மட்டுமே கொஞ்சம் அருகில் வருகிரது நான் சொல்லவில்லை திரு கார்ல் சேகன் கூறுகிறார்
http://www.rediff.com/news/jan/29sagan.htm
நன்றி
//ஏன் இத்தனை வேடம் நேர்மை என்பதே கிடையாதா?/
ReplyDeleteஇதில் நேர்மை எங்கு வந்தது பதிவுலகத்தில் அனைவருமே புனை பெயர்களிலேயே எழுதுகின்றனர்.பல மத் பிரச்சாரகர்களும் அதே.நிறைய பெயர் சொல்கிறீர்கள்.இதில் சில மடுடுமே என்னுடையது இரு பக்கப் பெயர்கள் மட்டுமே.பிற யார் என்றே தெரியாது.நம்ப வேண்டிய அவசியம் இல்லை.ஆதாரம்தான் நிறைய காட்டுவீர்களே.
/என்றைக்கு மூகமுடி அனிந்துக் கொண்டு அட்டைக் கத்தி சுழற்றுவதை நிறுத்த போகிறீர்கள்./
நண்பரே இஸ்லாமும் பிற மதங்கள் போல்தான்,முஸ்லிம்களும் பிற மனிதர்கள் போல்தான் ,இந்த எண்னம் மாறும் வண்னம் பெருமித பிரச்சாரம் செய்யும் மதவாதிகலை எதிர்க்கிறேன்.எந்த மத்த்திலும் இருக்கும் சிக்கல்கள் இஸ்லமிலும் இருப்பதில் வியப்பில்லை.இது 100% சோதிக்கப் பட்டது அனைவரும் வந்து விவாதித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் முந்தைய வேத கிறித்தவர்களின் பாணியில் செய்வதால் நானும் எதிர் வினை யாற்றுகிறேன்.அவர்களின் அட்டைக் கத்தியை கீழே போட்டால் நானும் போடுகிறேன்.
நீங்களும் பதிவு எழுதுகிறீர்கள் கூடுமானவரை சரியான வரலார்று தகவல்களை கொடுக்கிறீர்கள்(புஹாரி பற்றிய பதிவு).மதத்தில் இறையியல் பேசுப்பவர்களோடு
எனக்கு வேலையீலை மதத்தில் இயற்பியல் வரும் என்றால் வருகிறதா என்று பார்க வேண்டியதுதான்.
நன்றி
@ ashik ahamad
ReplyDeletehttp://superstringtheory.com/cosmo/cosmo41.html
http://superstringtheory.com/links/index.html
___________
இஸ்லாம் பற்றிய சிட்டிஜன் முஹம்மத் ஆஷிக்கை ஒட்டி அவரது கருத்துக்களை விவரித்து விளக்கி காபிர்களுக்கு இஸ்லாமிய விளக்கப் பாடம் எடுத்து தாவா செய்துள்ளேன்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை பதியவும்
மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு
சகோதரர் சார்வாகன் என்ற இப்னு ஷகீர்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
///அது எனக்கு சரியாக் படுகிரது.உங்களுக்கு த்வறாக படலாம்.///
ஹி ஹி ஹி...இதிலிருந்தே தெரிகின்றதே உங்க அறியாமை. அறிவியல் நிரூபிச்சிடுச்சுன்னா "உங்களுக்கு சரி, எனக்கு தவறு" என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக விடும். உதாரணத்துக்கு, உலகம் உருண்டைனு அறிவியலால் நிரூபிக்கப்பட்ட கூற்றை இல்லை என்று நான் சொல்லிவிட்டு "அது எனக்கு சரியாக் படுகிரது.உங்களுக்கு த்வறாக படலாம்" என்று சொன்னால் சிரிக்கமாட்டீங்க??
இப்பொழுது அந்த நிலையில்தான் உங்களை நீங்கள் கொண்டு வந்துவிட்டீர்கள்.
நீங்க தான் சகோதரர் "அறிவியல்" நிரூபித்துவிட்டது என்று சொன்னீர்கள். அறிவியல் நிரூபித்துவிட்டது என்றால் என்ன தெரியுமா???...
நீங்கள் கொடுத்த லிங்க்குகளை வைத்தே புரிந்து கொண்டேன். உங்களுக்கு அது குறித்த புரிதல் இல்லையென்று...
தங்களை மறுபடியும் எக்ஸ்போஸ் செய்து கொண்டதற்கு நன்றிகள் பல...
வந்த வேலை முடிந்தது...பார்ப்போம்
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.
சகோதரர் சார்வாகன் என்ற இப்னு ஷகீர்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
///அது எனக்கு சரியாக் படுகிரது.உங்களுக்கு த்வறாக படலாம்.///
ஹி ஹி ஹி...இதிலிருந்தே தெரிகின்றதே உங்க அறியாமை. அறிவியல் நிரூபிச்சிடுச்சுன்னா "உங்களுக்கு சரி, எனக்கு தவறு" என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக விடும். உதாரணத்துக்கு, உலகம் உருண்டைனு அறிவியலால் நிரூபிக்கப்பட்ட கூற்றை இல்லை என்று நான் சொல்லிவிட்டு "அது எனக்கு சரியாக் படுகிரது.உங்களுக்கு த்வறாக படலாம்" என்று சொன்னால் சிரிக்கமாட்டீங்க??
இப்பொழுது அந்த நிலையில்தான் உங்களை நீங்கள் கொண்டு வந்துவிட்டீர்கள்.
நீங்க தான் சகோதரர் "அறிவியல்" நிரூபித்துவிட்டது என்று சொன்னீர்கள். அறிவியல் நிரூபித்துவிட்டது என்றால் என்ன தெரியுமா???...
நீங்கள் கொடுத்த லிங்க்குகளை வைத்தே புரிந்து கொண்டேன். உங்களுக்கு அது குறித்த புரிதல் இல்லையென்று...
தங்களை மறுபடியும் எக்ஸ்போஸ் செய்து கொண்டதற்கு நன்றிகள் பல...
வந்த வேலை முடிந்தது...பார்ப்போம்
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.
நான் அவர் இல்லை.
ReplyDeleteநம்பாவிட்டாலும் கவலை இல்லை!!!!!!!!!!.
/ஹி ஹி ஹி...இதிலிருந்தே தெரிகின்றதே உங்க அறியாமை. அறிவியல் நிரூபிச்சிடுச்சுன்னா "உங்களுக்கு சரி, எனக்கு தவறு" என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக விடும். உதாரணத்துக்கு, உலகம் உருண்டைனு அறிவியலால் நிரூபிக்கப்பட்ட கூற்றை இல்லை என்று நான் சொல்லிவிட்டு "அது எனக்கு சரியாக் படுகிரது.உங்களுக்கு த்வறாக படலாம்" என்று சொன்னால் சிரிக்கமாட்டீங்க?? /
குரான் உலகம் தட்டை என்று சொல்கிரதே!!!!!!!!!.
Few centuries ago, Great Muslim Scholars like Ibn Khatir, Jalal Uddin Suyuti used to think Allah made earth Flat ! We know its totally BS, but they were Honest and we have to give them credit to stand upon Quran. They were true believers and believed what Allah in their wisdom revealed to Muhammad.
Today we know its totally wrong that earth is Flat, everybody knows about it, there are some people who still belief earth is Flat, however, most people who can use a little of their mind can understand this simple reality.
What about Quran ? It can not be changed according to Muslims, Abrogating these verses is too late now, so what to do ? Change the meaning completely. We will see some verses from Quran and then the opinion of Islamic Scholars on these verses and see the level of Allah's scientific knowledge in 7th CE.
"79:30 And after that He spread the earth"
Now Tafsir al-Jalalayn explained this verse as under;
"and after that He spread out the earth: He made it flat, for it had been created before the heaven, but without having been spread out;"
"88:20 And at the earth, how it is spread out?"
Tafsir al-Jalalayn once again give us the following explaination; However, because of its damaging nature, the publishers and translators of this website thought to add their own interpretation to make it confusing for readers to understand, yet failed totally;
"And the earth, how it was laid out flat?, and thus infer from this the power of God, exalted be He, and His Oneness? The commencing with the [mention of] camels is because they are closer in contact with it [the earth] than any other [animal]. As for His words sutihat, ‘laid out flat’, this on a literal reading suggests that the earth is flat, which is the opinion of most of the scholars of the [revealed] Law, and not a sphere as astronomers (ahl al-hay’a) have it, even if this [latter] does not contradict any of the pillars of the Law."
Amazing right ? Its the hight of ignorance and blind following, knowing fully that Earth is not Flat, but they remarckbally conculded that "it does not contradict any of pillars of the Law" !! Yea right.
According to Quran, earth is static and its not moving at all.
ReplyDelete"27:61 Is not He (better than your gods) Who has made the earth as a fixed abode, and has placed rivers in its midst, and has placed firm mountains therein, and has set a barrier between the two seas (of salt and sweet water).Is there any ilah (god) with Allah? Nay, but most of them know not."
Ibn Khatir wrote in His commentary that Allah made Earth stationary;
"(Is not He Who has made the earth as a fixed abode,) meaning, stable and stationary, so that it does not move or convulse, because if it were to do so, it would not be a good place for people to live on. But by His grace and mercy, He has made it smooth and calm, and it is not shaken or moved. This is like the Ayah"
http://tafsir.com/default.asp?sid=27&tid=38432
Ibn Abbas commented as follows;
"(Lo! Allah graspeth) holds (the heavens and the earth that they deviate not) so that they do not move from their actual place because of the enormity of the claim of the Jews and Christians when they maintained that Ezra and Jesus were the sons of Allah, (and if they were to deviate) and if they were to move from their actual place (there is not one that could grasp them after Him. Lo! He is ever Clement) despite the claim of the Jews and Christians, (Forgiving) He forgives whoever repents of them"
There are many other verses in which Allah made earth like a Carpet, made it flat, yet like I mentioned above, it does not contradicts any thing in their religion, because its the revealed divine words of Allah and the superem God who knows "everything".
No wonder Muslim Scholars are saying earth is Flat and who ever say its wrong is not Muslim, watch this and have fun with Quranic Science.
http://www.youtube.com/watch?v=wppjYDj9JUc
________
இன்ஃப்ளேஷன் தியரி,எம் தியரி,ஸ்டிரிங் தியரி வேண்டுமானால் தவறு என்று ஒரு பதிவு இட்டு விடலாமே!!!!!!!!!.எனக்கு ஆட்சேபனை இல்லை.
@ashik ahamad
ReplyDeleteஎல்லா நிரூபனங்களும் எனக்கு புரியாது.புரிய முயற்சிக்கிறென்.அவ்வளவுதான்.
உங்கள் அளவுக்கு இன்ஃப்ளேஷன் தியரி த்வறு என்று நிரூபிக்கும் அளவிற்கு அறிவு கிடையாது.
உங்கள் அறிவுக்கு ஒரு சின்ன சோதனை.வாரிங்(1770) என்ற கணித மேதை கூறுகிரார்.
எந்த "ஒரு முழு எண்ணையும் அதிக பட்சமாக 4 வர்க்கங்களின் கூடிதலாக்வோ,9 க்யூப்களின் கூடுதலாகவோ,19 நான்கு அடுக்குகளாகவோ ,37 ஐந்தடுக்குகளாக்வோ,73 ஆற்டுக்குகளின் கூடுதலாகவோ காண்பிக்க முடியும். என்று கூறிவிட்டார்.
http://en.wikipedia.org/wiki/Waring's_problem
That g(3) = 9 was established from 1909 to 1912 by Wieferich[3] and A. J. Kempner,[4] g(4) = 19 in 1986 by R. Balasubramanian, F. Dress, and J.-M. Deshouillers,[5][6] g(5) = 37 in 1964 by Chen Jingrun, and g(6) = 73 in 1940 by Pillai.[7]
3,4 அடுக்க்களுக்கு மட்டும் 1986ல் நம்ம த்ம்ழ் பேராசிரியர் பாலசுப்ரமன்யம் உட்ப்பட் சிலர் நிரூபித்த்னர்.நீங்கள் எல்லாத்தை உடனே நிரூபிக்கும் ஆற்றல் உடையவாராக் இருப்பதால் 5 முதல் இன்ஃபினிட்டி வரை முயற்சி செய்யலாமே .அல்லது முடியாது என்று நிரூபியுங்கள்!!!!!!!!.
உங்களால் முடியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Ramachandran Balasubramanian
ReplyDeleteFrom Wikipedia, the free encyclopedia
Ramachandran Balasubramanian is an Indian mathematician and is currently the Director of the Institute of Mathematical Sciences in Chennai, India.[1] He is known for his work in number theory, which includes settling the final g(4) case of Waring's problem in 1986.[2][3] His Erdős number is 2.[4][5] Also his works on moments of Riemann zeta function is highly appreciated and he became first plenary speaker from India at ICM in 2010.
__________
hats off to you professor
எல்லோர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
ReplyDeleteஇந்த 200 ஆண்டுகளில் மேற்கத்திய இலக்கியங்கள் எழுதப்பட்ட அனைத்து ஐரோப்பிய மொழி நூல்களிலும் இஸ்லாம் பற்றிய அவதூறுகளையும் நஞ்சையும் பொய்யையும் மட்டுமே குறிக்கப்பட்டன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிக மிகக் கேவலமான முறையில் சித்தரித்தனர் கடைசியில் கிடைத்தது என்ன அவர்களுக்கு தோல்விதானே?
இவர்கள் எழுதிய புக்கை படித்த அனைவருமே இஸ்லாத்திற்கு வந்துவிட்டனர் கை வலிக்க கால் கடுக்க கண் பழுக்க கஷ்ட்டப் பட்டு எழுதிய தீய வரிகள் அனைத்தும் படிக்கும் மக்கள்களுக்கு ஒரு அற நெறிகளாக தெரிந்தது.
அது போல நீறும்...ஒரு நாள்....உணர்வீர்.
ஒரு பத்து வரி நல்லதாக எழுவதற்கு எனக்கும் சரி என்னைப் போல மற்றவருக்கும் சரி எரிச்சலாக இருக்கின்றது அது எப்படி பிறர் மனம் நோகும்படி பத்தாயிரம் வரிகள் எழுதுகிறிர்கள் என்று ஆச்சர்யமாக இருக்கின்றது !
எத்தனை புனைப் பெயர்கள் எத்தனை வலைப் பூக்கள் இவைகளால் மனித சமுதாயத்திற்கு என்ன நன்மை?
நன்மை செய்யா விடிலும் தீமை செய்யாமல் இருங்கள் அதுதான் மனித நியதி.
இல்லை நான் அப்படித்தான் எழுதுவேன் என்னை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது என்று நீங்கள் வாதிட்டால் மனித இனத்திற்கும் மனித அல்லாத மற்ற இனத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.
இப்னு சாகிர் மற்றும் ஏனைய பெயர்களில் உலா வருகிறிகள்.
நான் தேடி கொண்டிருக்கும் தமிழனும் நீங்களாக இருக்குலாம் என்று சந்தேகமாக இருக்கின்றது தமிழன் என்றால் உண்மையான தமிழன் இல்லை வலை பூவின் பெயர் தமிழன் அதில் அசிங்கம் அசிங்கமாக பிறர் மதங்களை இழிவு படுத்தி எழுதும் அந்த அயோக்கியனை கண்டு பிடித்து அழிப்பதுதான் என்னுடைய வேலை.
திறுந்துங்கள் இல்லையெனில் திறுத்தப்படுவீர்கள்.
நண்பருக்கு வணக்கம்
ReplyDeleteநான் பெரும்பாலும் நீங்கள் மதிக்கும் முகமது பற்றி விமர்சிப்பது இல்லை.மத அறிவியல் என்ற ஏமாற்று பிரச்சார உத்தி பற்றியே எழுதி வருகிறேன்.
நீங்கள் குறிப்பிடும் நபர்களும் நானும் வேறு என்பதை என் எழுத்தை படித்தாலே புரிந்து விடும்.எனக்கு நீங்கள் சொன பல் கருத்துகளில் உடன்படுகின்றேன்.நானும் கூடுமான்வரை இம்ம்மாதிரி மத விவாதங்களில் இருந்து ஒதுங்கவே முயற்சிக்கிறேன்.ஆனால் இந்த போலி பிரச்சார உத்திகளை கண்டு கொள்ளமல் விட்டால் மத பெருமிதம் என்பது பரவி மத சார்பின்மைக்கு குழி தோண்டி விடும்.
நான் திருப்பி திருப்பி சொல்கிறேன்.மதம் என்பது மந்திற்கு இத்மான ஊன்றுகோல்,இந்த வாழ்வியல் நெறிகள் எனக்கு பிடித்திருக்கிறது என்பவர்கள் உண்மை பேசுகிறார்கள்.
மதத்தில் உள்ள சில சர்ச்சைக் குறிய விஷயங்கள் பல் அனைவருக்கும் ப்யன்படாது.ஒவொரு மதத்ஹ்டிலும் இம்மாதிரி விஷயங்கள் உண்டு.அத்னை நியாய் படுத்துதல் பல் தவறுகளுக்கு வித்திடும்.நான் பாதிக்கப் படவில்லை அதனால் நியாயப் படுத்துவேன் என்பதுதான் பல்ரின் வாதம்.சர்ச்சைக் குறிய விஷயங்களை ஒதுக்கி விட்டே முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.
அனைத்தும் சரி,100% சோதிக்கப்பட்டது,விவாதித்து நிரூபிப்பேன்,என் மத புத்தக விளக்கத்திற்கு எதிரான அறிவியல் கூடது என்பதெல்லாம் இருண்ட கால் கிறித்தவ நடைமுறைகள்.இத்னை இங்கு இப்போது இஸ்லாமிய மத பிரச்சாரகர்கள் செய்கிறார்கள் என்பதை வர்லாறு படித்தால் தெரியும்.
இஸ்லாமும் பிற மதங்கள் போல்தான் ,முஸ்லிம்களும் பிற மனிதர்கள் போல்தான்.நல்லவர் கெட்டவர் அனைத்து பிரிவினரிலும் உண்டு.உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி இம்மாதிரி மத பிரச்சாரகர்கள்,மதகுருக்கள் ஆட்சி அதிகாரத்தை கட்டுப்படுத்துவதால்தான் பல மத ஆட்சி நாடுகளில் சிக்கல்கள்.
இந்த தீவிர இஸ்லமிய சர்வ ரோஹ நிவாரண் பிரச்சாரம் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலுக்கு துணை புரிகிறது என்பதயாவது உணர முடிகிறதா?
பேசுவதென்றால் இன்னும் பேசுவோம்.நிங்கள் இம்மாதிரி மத பிரச்சாரகர்கள் இல்லையெனில் என் போன்ற மத்திர தர குடும்பஸ்தன் எனில் உங்கள் மனதை வருத்தப் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.அடுத்த மாதத்தில் இருந்து பணி மாற்றம் என்பதால் எழுதுவது குறையலாம்.
அடிக்கடி வாருங்கள் சகோ!!!!!!!!
நண்பர் அந்நியன்
ReplyDeleteநீங்கள் ஏதோ கோபத்தில் சொல்கிற வார்த்தைகள் நான் பொருட்படுத்த வில்லை.கொஞ்சம் யோசித்து பாருங்கள் இன்னும் பேசுவோம்.
அந்நியன் ஸ்டைலில் வந்திருக்கும் சகோ அந்நியன் 2 அவர்களே,
ReplyDeleteசார்வாகன் போன்றோர் இஸ்லாமை பற்றிய பதிவுகளில் பின்னூட்டம் கூட போடக்கூடாது என்பதற்காக விடும் எச்சரிக்கை தான் இது.
நான் இந்த காபிர் சார்வாகனை பார்த்தது கூட இல்லை. அந்த காபிர் தமிழனும் யார் என்று தெரியாது. இரண்டு பேரும் வெவ்வேறு ஆட்கள் என்பது அவர்களது எழுத்திலேயே தெரிகிறது.
இவர் முகத்தை மறைத்து எழுதவேண்டுமென்றால் ஏன் தமிழனுக்கும் மற்றவர்களின் பதிவிலும் போய் கமெண்ட் போடுகிரார் என்று சிந்தியுங்கள்.
எனக்கும் வேறொரு வர்ட்பிரஸ் பிளாக் இருக்கிறது. அதில் ibnushakir பற்றியோ இஸ்லாம் பற்றியோ ஒரு எழுத்து கூட இருக்காது. சம்பந்தமே இருக்காது. அதுவும் பிரபலமான பதிவுதான். இது சாதாரண பகுத்தறிவு. மூமீன்களின் பகுத்தறிவு பற்றிய சாதாரண அறிவு.
சிந்தியுங்கள்.
வாங்க இபின் ஷகிர்,
ReplyDeleteஇப்படிப்பட்ட கருத்து மோதல்களை எதிர்கொள்ளும் பக்கும் இல்லாத மனிதர்களை உருவாக்குவதே இந்த மத பெருமித பிரச்சாரத்தின் நோக்கமாகும்.நான் என மன் சாட்சிக்கு விரோதமில்லாமல் சுய கட்டுபடோடுதான் எழுதுகிறேன். நான் எதிர்வினை மட்டுமே ஆற்றுகிரேன்.
இபோதைய அற்வியல் பெரு வெடிப்புக்கு முந்தைய சூழலை இன்ஃப்ளேஷன் தியரி,ஸ்டிரிங் தியரி போன்ற்வற்றால் விளக்குகிறது.சிங்குலாரிட்டி என்பதை இன்ஃபினிட்டியை வரையறைகளில் கொண்டு இருப்பதால் அதன் சிக்கல்களில் இருந்து விடுபட இக்கொள்கைகள் உதவுகின்றன.
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அது அவர்களின் உரிமை.இப்போது மத புத்தக்த்தின் விள்க்கமாக் புனையப்படும் அறிவியல் கருத்துக்கு விரோத்மான் அறிவியலை எதிர்ப்போம் என்பது கிறித்தவ இருண்ட கால்த்தையே நினைவு படுத்துகிறது.
நண்பர் அந்நியன் மத்தியக் கிழக்கில் பிறக்க வேண்டியவர்.சும்மா தமாஷ்
நன்றி
எந்த நேரத்தில் உலகம் தட்டை என்று அல்லாஹ் இறுதி இறைதூதரிடம் இறக்கிய அல்குரான் சொல்கிறது என்று சொன்னீர்களோ தெரியவில்லை. அல்லாஹ் அதனை நிரூபிக்க தன் அடியார்களை அனுப்பி வைத்திருக்கிறான்.
ReplyDeleteநைஜீரியாவில் உள்ள ஐநா கட்டிடத்தை ஈமானிகள் குண்டு வைத்து தகர்த்து உலகம் தட்டை என்று நிரூபித்துள்ளனர்.
http://www.bbc.co.uk/news/world-africa-14677957
இஸ்லாமை தவறாக புரிந்துகொண்ட இன்னொரு ஈமானிகள் என்று பார்த்தால், இந்த ஈமானிகள் சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நைஜீரிய ஈமானிகளது இயக்கத்தின் பெயர் பொகோ ஹராம். அதாவது மேற்கத்திய அறிவியல் ஹராம் என்பதாகும்.
அல்குரானில் சொல்வது போல பூமி தட்டை, பூமியை சுற்றி சூர்யன் வருகிறது. சூர்யனை சுற்றி பூமி வரவில்லை. பூமி நிலையாக இருக்கிறது என்றபடி சொல்லித்தர வேண்டும் என்று போராடுகிறது.
http://www.bbc.co.uk/news/world-africa-13809501
இப்போது பிஜே, கார்பன் கூட்டாளி, ஆஷிக் போன்ற ஈமானிகள் அல்குரானில் டார்க் மேட்டர், பிக் பேங் எல்லாவற்றையும் கண்டுபிடிக்கலாம். ஆனால் பின்னால் வரப்போவது ஒரிஜினல் அல்லாஹ் இறக்கிய ஒரிஜினல் அல்குரான் போதனைதான் என்று எண்ணும்போது என்னுடைய ஈமானிய நெஞ்சம் விம்மி விம்மி பெருமை அடைகிறது.
யா அல்லாஹ்
அல்ஹம்துல்லில்லாஹ்
வாங்க சகோ இபின் ஷாகிர்,
ReplyDeleteமதம் என்பது இறையியல் பெசட்டும்,பிரச்சாரம் செய்யட்டும்.எல்லாரையும் சவால் விட்டு வம்புக்கு இழுக்கும் பெருமித பிரச்சாரம் தேவையா?இத்தளத்தில் அறிவியல்& பிற வாழ்வுக்கு பயன் படும் தேடல்கள் குறித்து மட்டுமே எழுத நினைத்திருந்தேன்.
இந்த நைஜீரிய போஹோ ஹராம்(கல்வி என்பது தீமை(பாவம்) போன்ற குழுக்கள் தமிழக்த்திலும் உருவாகி விடக் கூடாது என்ற கருத்தில் சில மறுப்புகளை தெரிவிக்கிறோம்.எத்னையும் சில மதவாதிகளின் கருத்தின் மீதே எற்போம் என்பது எந்த சமுதாயத்திற்கும் நல்லது அல்ல.பிரிவினை வளர்ப்பது எளிது.ஒன்று சேர்ப்பது கடினம்.இன்னும் வரும் காலங்களில் இயற்கை வளங்களின் மீதான போட்டி மதச்சாயம் பூசிய போராக மாறக் கூடாது என்பத்ற்காக்வே விமர்சிக்கிறோம்.இனி மதத்தில் அறிவியல்,மதவாதிகளின் அறிவியல் விமர்சனம் என்பதின் மீது மட்டும் மறுப்புக் கட்டுரை வெளியிடுவோம். அவ்வளவுதாஆன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!!!!!!!!!
வருகைக்கும் நன்றி
வார்த்தை ஜால மன்னர்களிடம், மோதிகிறீர்கள்!!!!!. கடவுள் உலகத்தை ஏழு (ஆறா எட்டா????) படைத்தார் என்பதை is equal to 13.7 பில்லியன் வருஷங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். 13.7 வருடத்தை ஏழால் வகுத்தால் ஒரு நாள்….ஹா..ஹா…..ஒரு நாள் என்பது ஒரு யுகமாம். அதை முதலில் சொல்ல வேண்டியதுதானே எல்லாவற்றையும்……..கண்டுப்பிடித்தவுடன் சொல்ல -கொடைகள், அருள் அவ்வளவு weak.
ReplyDeleteஉலகத்தையும் சொர்க்கத்தையும் ஒன்றாக வைத்து பிரித்தோம் என்கிறது…..அதனால் big bang theory எங்கள் புத்தகம் தான் முதலில் சொல்லிற்று என்பார்கள்.
எல்லா பொருளுக்கும் படைப்பாளி இருக்கவேண்டும் என்றால் கடவுளுக்கும் ஒரு படைப்பாளி வேண்டும் என்றால்…..சாத்தானின் கேள்வி கடவுளிடம் தஞ்சம் அடைவோம் என்பார்கள். சரி அவர்கள் வாததிற்கு வருவோம்…..உலகதிற்கு படைப்பாளி வேண்டும் என்றால், உலகை படைத்தவன் 420 pagadu.blogspot.com தான் என்றால் அதை அவர்களால் பொய் என்று நிருபிக்க முடியுமா?????
பிரபஞ்சத்தின் கால அளவை பார்த்தால், இப்போதும் பூமி மனிதன் வாழ்வதற்கு நேர்த்தியாக இல்லை, பூமியும் கால அளவில் நேர்த்தியாக இல்லை….மாறிகொண்டேதான் இருக்கின்றது. பூமியும் எல்லாவற்றுடன் சேர்ந்து ஒரு நாள் அழியத்தான் போகிறது….என்ன கோடிக்கனக்கான வருஷங்கள் காத்திருக்க வேண்டும். உலகில் எந்த பொருளில் நேர்த்தி இல்லை. அதனால் நேர்த்தியால் கடவுள் படைப்பு என்பது பொய்.
பிரச்சாகர்கள் தரப்பில் alan guth மாதிரி ஒருவர் வந்து விளக்கி இருந்தால் பரவாயில்லை. அவர் விளக்கிய அறிவியலை வெள்ளைக்கார அண்ணன் பி.ஜேக்கள் உபயோகப்படுத்துவது சிரிப்புத்தான வருகின்றது.
மத நம்பிக்கை என்பது மனிதனின் உளவியல் தேவை என்பதை விடுத்து மற்ற தளங்களுக்குச் சென்றால்……இந்த மாதிரி காமடிகளை எதிர்ப்பார்க்க வேண்டியதுதான்.
அருமையான பதிவு.
//ஹி ஹி ஹி...இதிலிருந்தே தெரிகின்றதே உங்க அறியாமை. அறிவியல் நிரூபிச்சிடுச்சுன்னா "உங்களுக்கு சரி, எனக்கு தவறு" என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக விடும். உதாரணத்துக்கு, உலகம் உருண்டைனு அறிவியலால் நிரூபிக்கப்பட்ட கூற்றை இல்லை என்று நான் சொல்லிவிட்டு "அது எனக்கு சரியாக் படுகிரது.உங்களுக்கு த்வறாக படலாம்" என்று சொன்னால் சிரிக்கமாட்டீங்க??//
ReplyDeleteகோட்பாடு என்பது வேறு அறிவியல் நிரூபணம் என்பது வேறு. கோட்பாடுகள் எல்லாம் தெரிந்த facts, data's etc மூலம் ஒருவர் சொல்கிறார். அதை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க முயல்கிறார். இருக்கின்ற சங்கதிகளை வைத்து ஒரு கோட்பாட்டை சொல்கிறார்கள். அதை நீருபணம் ஆகும் வரை, இருக்கின்ற சங்கதிகளை வைத்து வேறு ஒரு கோட்பாட்டை சொல்ல வேண்டும்.
அதனால் நிரூபணம் ஆகும் வரை ஒரு கோட்பாட்டை எடுத்துக் கொள்வதும் விடுவதும் அவரவர் விருப்பம். ஆனால் இருக்கின்ற சங்கதிகளை வைத்து வேறு கோட்பாட்டை சொல்லவேண்டும். கண்டுபிடிக்க முடியாது என்று ஒன்றுமில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதுதான் கடவுளுக்கு அத்தாட்சியில்லை.
படைப்புக்கு கடவுள் தேவையில்லை என்பதை நிரூபிக்க மதவாதிகளின் மதபுத்தகமே போதும். அறிவியல் நீருபண படி மதவாதிகளின் புத்தகத்தில் சொல்லப்பட்ட படைப்பு கொள்கைகள் ஒரு கற்பனை கதையே. அதனால் படைப்புக்கு கடவுள் தேவையில்லை.
உலகம் தட்டை என்று அறிவியல் கோட்பாடை முன்மொழிந்து விட்டு அது பொய் உருண்டை என்று அறிவியல் நிரூபணமானவுடன் அது எங்கள் புத்தகத்தில் தான் சொல்லியிருக்கிறது என்பவர்களை பார்த்துதான்...ஹி..ஹி..ஹி...ஹி
வாங்க நரேன்
ReplyDeleteஎல்லாம் தெரிந்த கதைகள்தானே!!!!!.
மதத்தில் இறையியல் என்றால் கற்றுக் கொள்ளவும் தயார்.அப்போது கூட சரியென்று படுவதை மட்டுமே ஏற்போம்.
மதத்தில் இயற்பியல் உள்ளிட்ட அனைத்து இயல் என்பதை கூறினால் விமர்சனம் தவிர்க்க இயலாது.
அவ்வளவுதான்.மதத்தில் அறிவியல் மற்றும்அறிவியல் மீது மத வாதிகளின் விம்ர்சனத்திற்கு இங்கு நல்ல பதிவுகள் எழுதப் படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.அனைவரும் ஆதரவு தருக!!!!!!!!!!!!!!!.