உலகம் தோன்றி பல(4.6 பில்லியன்) ஆண்டுகளுக்கு பிறகே மனித இனம் தோன்றியது(2இலட்சம்) என்பது அனைவருக்கும் தெரியும்.கடந்த 200 ஆண்டுகளில் இயற்கையின் மீது பல அழுத்தங்களை அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் மனிதன் செய்து வருகிறான்.இந்த காணொளியில் ஒரு வேளை மொத்த மனித இனமும் உலகில் இருந்து ஒரே சம்யத்தில் மறைந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை இந்த ஆவணப் படம் அலசுகிறது.
முதல் 30 ஆண்டுகள் அணு உலைகள்,மின் தயாரிப்பு நிலையங்கள் போன்றவற்றின் விளைவுகளினால் பாரிய அழிவுகள் ஏற்படுகின்றன.பிறகு இயறகை கொஞ்சம் கொஞ்சமாக் நிலைமையை சரி செய்கிறது..புதிய உணவு சங்கிலிகள் உருவாகின்றன.இயற்கைத் தேர்வு[natural selection] ஆட்சிக்கு வருகிறது.நாட்டு,காட்டு விலங்குகள் பல் மாற்றங்களுக்கு ஆளாகின்றன.இப்படியே துணக்கோள்கள் கூட செயல் இழந்து பூமியில் விழுகின்றன.அணைகள் ,அமெரிக்க சுதந்திர தேவி சிலை,ஈஃபில் டவர் போன்ற வரலாற்று சின்னங்கள் கூட மண்ணோடு மண்ணாகிறது. ஒரு 1000 வருடங்களுக்கு பிறகு சில துருப்பிடிக்காத இரும்பு சாமான்கள்,ப்ளாஸ்டிக் தவிர மனிதன் வாழ்ந்த சுவடே இல்லை.
சந்திரனின் இயற்கை சூழலை மனிதன் பாழ் படுத்தவில்லையாதலால்.அங்கு மனிதன் விட்டு சென்ற சில நினைவு சின்னங்கள் மட்டும் அப்ப்டியே இருக்கின்றன என்பதை இறுதியில் சொல்கிறது இப்படம்.
இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக் மனிதனின் அழிவு செயல்களுக்கு தீர்வு கொண்டு வருவது மிக அருமை.மனிதன் இல்லாமல் உண்மையிலேயே உலகம் மிக அற்புதமாக் இருப்பதாக எனக்கு படுகிறது. நாம் இயற்கையை எந்த அள்விற்கு மாசு படுத்துகிறோம் என்பதை மிக அற்புதமாக் சொல்கிறது இப்படம்.கண்டு களியுங்கள்.!!!!!!!!!
No comments:
Post a Comment