Thursday, August 25, 2011

ரிச்சர்ட் டாக்கின்ஸின் மத சார்பற்ற ஐரோப்பாவிற்கான போராட்டம்

Secular Europe Campaign

ரிச்சர்ட் டாக்கின்ஸ் பற்றி அனைவரும் அறிவோம்.இப்போதைய குறிபிடத்தக்க பரிணாம் உயிரியலாளர்,இறை மறுப்பாளர்.

வரலாறு படித்தவர்களுக்கு ஐரோப்பாவின் இருண்ட காலம்(ca. 500 to 1000 AD) பற்றி தெரியும்.ஏற்கெனவே நம்து பதிவு ஒன்றில் மத வனமுறைகள்,ஸ்பானிஸ் இன்குசிசன் பற்றி எழுதி இருந்தோம்.அக்காலங்களில் மத தலைமை வைத்ததே சட்டம்.ஆட்சி மாற்றம் மத குருக்களால் முடிவு செய்யப் பட்டது.மத விரோத விமர்சன‌ங்கள் வன்முறை கொண்டு அடக்கப் பட்டன.மத ரீதியான் போர்களினால் பல கோடிப் பேர் உயிர் இழந்த்னர்.

பிறகு தொழில் புரட்சியும்,தொழிலாளர் நலன் சார்ந்த சிந்த்னை வளர்ந்தது,இடது சாரி ,மதமற்ற‌ கோட்பாடுகள் உருவாகின. மதங்கள் பல பிரிவாக பிரிந்ததும் கருத்தியல் வேறுபடுகளினால்தான். மக்களுக்கு மத்த்தின் ஆட்சியை விட ஜனநாயக ஆட்சியே சிறந்தது என்று மத ஆட்சி அரசுகளை மாற்றினார்கள்.

கொஞ்சம் கொஞ்ச்மாக மத தலைமை என்பது பெயரளவில் மட்டும் இருப்பது போல் தோன்றினாலும் இழந்த அதிகாரத்தை மீட்கும் முயற்சி நெடுங்காலமாக்
நடந்து கொண்டே இருக்கிறது.அது இப்போது ஐரோப்பாவில் வேகமாக்வும் ,உறுதியாக்வும் முன்னெடுக்கப் படுகிறது.மத போர்வையில் ஐரோப்பிய மேன்மை பிரச்சாரமே (white supremacy) செய்யப் படுகிறது.

இபோதைய பொருளாதர மந்த நிலைக்கு பிற மதத்தவர்களே காரணம் என்ற பிரச்சாரம் செய்யும் குழுக்கள் பெருகி வருகின்றன்.மதச் சார்பின்மை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள் கடுமையாக் விமர்சிக்கப் படுகின்றன்.இந்த நார்வே படுகொலை ஏன் நடந்தது ,யார் மீது நட்த்தப் பட்டது என்பதை யோசித்தால் புரிந்து விடும்.மத சார்பற்ற தொழிற்கட்சியில் ஒரு செயலாக்க பயிற்சி முகாமின் மீது நட்த்தப் பட்டது.  

இன்னும் ஐரோப்பாவில் இனி பிற இனத்தவ்ருக்கு எதிரான நடைமுறைகளாக இங்கிலாந்து கலவரத்தையும் கூறலாம்.பிற‌ இன‌த்தவரின் வணிக இடங்கள் கொள்ளையடிக்கப் பட்டன.இச்சூழ்நிலை மத வாத சக்திகளுக்கு தீவிர வலது சாரி அரசியலை முன்னெடுக்க உதவுகிறது.சிறுபான்மையினருக்கு விரோதமான் குடியுரிமை&நடைமுறை சட்டங்கள் அமலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெறுகின்ரன.பலரை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றும் முயற்சிகளும் வரலாம்.

இத்னை சிலர் வரவேற்கலாம்.என் மத ஆட்சி சிறந்தது என்பது அனைத்து மதவாதிகளின் கருத்தாகும்.சிறுபன்மை மத மேன்மை பிரச்சாரம், பெரும்பான்மை மத ஆட்சியை நியாய்படுத்தும் என்பதை மத்வாதிகள் அறிந்து இருந்தாலும் சுயநல்த்திற்காக் மறைக்கின்றைனர்.இயங்கியல் தத்துவத்தின்படி இரண்டும் ஒன்றையொன்று முரண்பட்டு வள‌ர்க்கின்ற‌ன.நான் பாதிக்கப்டாவிட்டால் எதையும் கண்டு கொள்ள மாட்டேன் என்பது பெரும்பாலான‌ மக்களின் கருத்து,வாழ்வியல் நடைமுறை.

இசூழலை ஆராய,தவிர்க்க ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒரு கருத்தரங்கை [Saturday 10th September 2011] நட்த்துகிறார். 
கருத்தரங்கு நடக்கும் போது அது பற்றிய செயல்கலையும் பகிர்வோம்.உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வாழும் அனைவருக்கும் ஜன‌நாயக ,சமூக உரிமைகள் சமமாக கிடைக வேண்டும் என்பதே நம் விருப்பம்.ஆனால் மதவாதிகள் அனைவருமே நான் பெரும்பான்மையாக இருந்தால் மத ஆட்சி,சிறுபான்மையினராக இருந்தால் வேறு வழியில்லாமல் மத சார்பின்மை என்று இரட்டை வேடம் போடுகின்ரனர்.

அவர்கள் கேட்கும் உரிமையை,பிறருக்கு கொடுக்க மறுப்பது ஒரு பாரிய முரண்பாடு.ஜன்நாய்க ,மத்ச்சார்பின்மை ஆதரவாள்ர்கள் ரிச்சர்ட் டாக்கின்ஸின் மத சார்ப்ற்ற ஐரோப்பா போராடத்திற்கு ஆதரவு தரவும்.இது குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டுகிறேன்.ந்மது ஆசிய கண்டத்தை சேர்ந்த எவ்வள‌வோ பேர் பல் நூற்றாண்டுகளாக் வசித்து,அந்நாடுகளின் முன்னேற்றத்திற்க்காக் உழைத்து வருகின்ற்னர்.மத ஆட்சி வரும் பட்சத்தில் இவர்கள் நலன்கள்,உரிமைகள் பாதிக்கலாம்.இதில் நான் பாதிக்கப் படமாட்டேன்,இது குறிப்பிட்ட இன மக்களுக்கு மட்டுமே எதிரான போராடம் என்று யாரும் நினைக்கலாகாது.

இது மத போர்வையில் வரும் ஐரோப்பிய மேன்மை கருத்தியல் என்பதை வரலாறு படிப்ப்பவர்கள் அறிய முடியும்.இந்த மத சார்பற்ற ஐரோப்பிய கருத்தரங்கில் பல் சிந்த்னையாளர்கள் உரையாற்றுகின்றனர்.பல் விஷயங்கள் ஆய்வு செய்யப் படும் என் தெரிகிறது.இக்காணொளியில் மதம் உண்மையில்லை ஆக்வே மத ஆட்சி தேவையில்லை என்று தெளிவாக் கூறும் ரிச்சர்ட் டாக்கின்ஸ்க்கு பாராட்டுகள்.

இந்த கருத்தரங்கு குறித்த செய்திகளை பகிர்வொம்.இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.எந்த மத .இன,மொழி பெருமித்வாதமும் தவறே.மனிதர்கள் அனைவருமே சமமே. நன்றி.


என் அண்டை வீட்டு யூதனை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் யூதன் இல்லை,
என் எதிர் வீட்டு கம்யுநிஸ்டை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் கம்யுனிஸ்ட் இல்லை,
அடுத்த நாள்
என்னையும் இழுத்து சென்றார்கள்
ஏன் என்று கேட்க நாதி இல்லை.

மார்ட்டின் நிமோலியர்1892–1984) 
http://secular-europe-campaign.org/

2 comments:

  1. சிறுபன்மை மத மேன்மை பிரச்சாரம், பெரும்பான்மை மத ஆட்சியை நியாய்படுத்தும் என்பதை மத்வாதிகள் அறிந்து இருந்தாலும் சுயநல்த்திற்காக் மறைக்கின்றைனர்/
    ஆக்வேதான் சில பிரச்சார பீரங்கிகள் பாதுகாப்பாக நாதிகர்களை,இவர்களை விட சிறுபான்மையினரை விவாதத்திற்கு அழைக்கின்றனர்.'அஆஇஈ' மத வாதம் ,ஆட்சி,சட்டங்கள அனைவருக்கும் அமல்படுத்துவது சரி என்றால் ''க்காகிகீ' மதமும் அதையே அனைவருக்கும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் நம்து பிரச்சார பீரங்கி அதி புத்திசாலிகள் இவ்வாறு செய்கின்றனர்.

    இந்த விவாதங்களின் கதை இதுதான் நடந்தது!!!!!!!!!.

    ReplyDelete
  2. இங்கிலாந்து கல்வரம் பற்றிய நண்பர் கலையரசனின் பதிவு
    __________
    இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லை

    http://kalaiy.blogspot.com/2011/08/blog-post_13.html

    ReplyDelete